Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பத்தி எரியுது!
பத்தி எரியுது!
பத்தி எரியுது!
Ebook132 pages1 hour

பத்தி எரியுது!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடுத்த நாளே மது வந்துவிட்டான். வரும்போதே பசி என்று பறந்து கொண்டு வந்து மாப்பிள்ளைக்குப் பிடிக்கும் என கோமதி சுட்டுக் கொடுத்த குழி பணியாரத்தில் இருபதை உள்ளே இறக்கி ஏசியை போட்டு பெட்ரூமில் மல்லாந்தான்.

குழந்தை அவன் மேல் ஏறி குதிக்க, 

"அகிலா! எனக்கு ரெஸ்ட் எடுக்கணும்! இவளைக் கொண்டு போய் உங்கப்பாகிட்ட விடு!" 

"என்னங்க! குழந்தையை பார்க்க நீங்க வர்றதே வாரத்துல ஒரு தடவை!" 

"எனக்கு முடியலை! கொண்டு போ!" 

அகிலா எடுத்துப் போய் அம்மாவிடம் விட்டு "அவருக்கு தலைவலி தாங்கலை! இவ தொந்தரவு பண்றா! பிடிம்மா!" 

அவள் உள்ளே போய்விட, 

வசீகரன் வீட்டுக்குள் வந்தான்! 

"ஓவரா தின்னா ஒடம்பு முழுக்க வலிக்கத்தான் செய்யும்!"

"வசி! குழிப்பணியாரம்-தரவா!" 

"இருக்கா!" 

"ஏண்டா இப்படி கேக்கற?"

"உன் மாப்ளை உயிரு கிழிய திண்ணிருப்பாரே!" 

"வேண்டாம் வசி! அவர் காதுல விழப்போகுது! மறுபடியும், பிரச்சினை ஆகும்!" 

"மன்னிப்பு கேக்க நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே!" 

"என்னடா பேசற?" அப்பா குரல் உயர, 

"அப்பா! எங்கிட்ட மட்டும்தான் உங்களால கோவப்பட முடியும், மாப்ளை மகனுக்கு சமம்! நானும் ஒப்புக்கறேன்! அதை நீங்களும் புரிஞ்சுக்கணும்! வந்த வரும் உணரணும்! நாம மாப்ளைக்கு நிறைய மரியாதை தரணும்! ஆனா நம்ம தோள்ள ஏறி அவங்க சவாரி செய்ய நினைச்சா, அனுமதிக்கக் கூடாது! ஒவ்வொரு மாப்ளைக்கும் பாசமும் இருக்கணும்! நாம ஆட்டம் போட்டா, இந்த வீட்ல செல்லாதுனு பயமும் இருக்கணும்! அப்பத்தான் உறவுல கசப்பு ஒரு நாளும் வராது!" 

அகிலா வெளிப்பட்டாள் 

"வசி! அவர் உன்னைக் கூப்பிடறார்!" 

"எதுக்கு?" 

"கூப்பிட்டா போயேண்டா!" 

"அம்மா எனக்கு லேப்டாப்ல வேலை இருக்கு! நான் அவரைக் கூப்பிடல அவர்தான் கூப்பிடறார் அவருக்கு தேவைனா, அவர் வரணும்!" 

"ஏண்டா! இப்படி பேசற?" 

அகிலா கெஞ்ச, 

"சரி! வர்றேன்!" 

வசீகரன் உள்ளே வந்தான். 

"எதுக்கு கூப்பிட்டீங்க!" 

"அவசரமா! உடனே சொல்லணுமா! நீ பெரிய அப்பாடக்கரா!"

"இதப்பாருங்க! எனக்கு நிறைய வேலை இருக்கு! சீக்கிரம் சொல்லுங்க!" 

"எங்கிட்ட மோத வந்திருக்கியா!" 

"எனக்கு அந்த மாதிரி ஐடியா எதுவும் இல்லை!" 

"உக்காருடா! உன் கம்பெனியை மூடப் போறாங்களாம்! தகவல் தெரியுமா!" 

"மூடும்போது பார்த்துக்கலாம்!" 

"உனக்கு இந்த வேலை கிடைச்சதே யோகம்! இதை மூடிட்டா வெளில கிடைக்குமா!" 

"தெரியலை!" 

"ஏதாவது சிபாரிசு செய்யணுமா!" 

"அகிலா உடனே ஓடி வந்தாள்." 

"மாமா வேலை வாங்கித் தருவார்டா! அவர்கிட்ட என்ன வேணும்னு கேட்டுக்கோ!" 

"இதை மூடறது உறுதியாகட்டும் அப்புறமா பேசிக்கலாம்!"

"திமிரைப் பாருடி! உன் தம்பிக்கு கொழுப்பு அடங்கலை!" சரக்கென எழுந்தான்! 

"டேய்! உங்கப்பாவுக்கு பாரமா ஆயிடாதேடா! உனக்கு வேலை இல்லைன்னா, அவர்தான் சோறு போடணும்!" 

"உங்களுக்கு நல்லவேலை இருக்கு! அவர்தானே உங்களுக்கு சோறு போடறார்!" 

"என்னடா பேசற?" 

"இதப்பாருங்க கூப்பிட்டு வச்சுக் குத்தறது நீங்கதான்! நான் தப்பா எதுவும் பேசலை!" 

"என்னை நீ அவமானப்படுத்தறியா! அப்பறமா இந்த பக்கம் எட்டிப் பார்க்கமாட்டேன்." 

"வேண்டாம்! நான் உங்ககிட்ட மன்னிப்பும் கேக்கலை! உங்களை இங்கே வரவும் சொல்லலை!" 

அகிலா வெளியே ஓடினாள். 

"அம்மா! மறுபடியும் மோதல் ஆரம்பமாயிடுச்சு! வசி தாறுமாறா பேசறான்!"  

"அவனை இவர்தாண்டி கூப்பிட்டார்! வம்புக்கு இழுத்தா அவன் சும்மா இருப்பானா, என் பிள்ளை யாரையும் தப்பா பேச மாட்டான். எத்தனை நாளைக்கு வசி பொறுத்துப்பான் அகிலா! அம்மா எகிற," 

"இரு கோமதி! நீ பேசாதே! இதை நான் பாத்துக்கறேன்!" அப்பா உள்ளே நுழைய, 

"இந்த வீட்ல உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு மாப்பிள்ளைனு உங்கப்பா சொல்லிருக்கார் இது அவர் வீடு!" 

"சரி! அதுக்காக என்னை தப்பா பேசற உரிமை உங்களுக்கு இல்லை! இந்த வீடு மாதிரி கல், மண் இல்லை நான், எனக்கு உணர்ச்சிகள் உண்டு மனுஷன்!"

அப்பா பாய்ந்து வந்தார். 

Languageதமிழ்
Release dateFeb 26, 2024
ISBN9798224715602
பத்தி எரியுது!

Read more from Devibala

Related to பத்தி எரியுது!

Related ebooks

Reviews for பத்தி எரியுது!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பத்தி எரியுது! - Devibala

    1

    வசீகரன். இந்தக் கதையின் நாயகன்! பெயரில்தான் வசீகரம்! ஆள் சுமார்தான். கொஞ்சம் கட்டை, குட்டையான உருவம். பளிச்சென்ற நிறமெல்லாம் இல்லை! கொஞ்சம் கறுப்பில் சேர்த்திதான். ஓஹோவென்ற பர்சனாலிட்டி இல்லை! இன்ஜினீயரிங் படித்து முடித்ததும் உடனே வேலை கிடைக்கவில்லை ஒரு வருடம் அலைபாய வைத்துவிட்டு, பிறகு ஒரு நல்ல கம்பெனியில் கிடைத்து விட்டது!

    புத்திசாலி, நல்லகுணம், அறிவு எல்லாம் நிறைய உண்டு. காரோட்டத் தெரியும். நல்ல குரல் வளம். அழகாக பாடத் தெரியும்! மற்றவர்களிடம் இனிமையாகப் பழகி, சுலபத்தில் அவர்களை வசீகரிக்கத் தெரியும்!

    மது சூதனன் என்ற மது இந்தக் கதையில வில்லன்! வசியின் அக்கா புருஷன்! நல்ல உத்யோகம். கைநிறைய சம்பளம். சொந்த வீடு எல்லாம் உண்டு! ஆளும் பார்க்க, உயரமாக, நல்ல நிறத்துடன் இருப்பான்! தாராள தயாளத்தின் இன்னொரு பெயர்தான் இந்த மது. தன் தாய் தகப்பனை நன்றாக பராமரிக்கத் தெரிந்தவன்! அதாவது அவர்கள் மேல் பக்தி, பாசம் என்றெல்லாம் தப்பாக நினைக்க வேண்டாம். அவர்கள் பேரில் ஒரு வீடும், பேங்க் பேலன்ஸ் 50 லட்சம் இருப்பதால், ஒரே மகனான தனக்கது சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை தாங்கும் பார்ட்டி!

    அகிலா. வசியின் அக்கா. ஜாதகம் பொருந்திவிட்டது. அவளும் பள்ளிக் கூட டீச்சர்தான்!

    ஆனாலும் திருமணம் பொருந்தியதும் மதுவும் அவன் அம்மாவும் முடிந்த வரை அகிலாவின் அப்பாவிடம் கறந்தார்கள்.

    அவர் மத்திய அரசாங்க உத்யோகம்.

    ஒரே மகள் என்பதால் கடனை உடனை வாங்கி நிறையச் செய்தார்கள். தவிர, ஒரு வருட காலத்துக்கு பண்டிகை, சீர்செனத்தி, பிறந்த நாள் என சகலத்துக்கும் மாப்பிள்ளை மரியாதை!

    மதுவின் அம்மா துரும்பைக் கூடக் கிள்ளி போடமாட்டாள். அகிலா வீட்டு வேலைகள் சகலமும் செய்து விட்டு, பள்ளிக் கூடத்துக்கும் போக வேண்டும்!

    கல்யாணமாகி ஆறு மாதமாக குழந்தை இல்லாததால் அகிலாவைக் கழுவி ஊற்றினார்கள்.

    அடுத்த ஒரு வருடத்தில் பிறந்து விட்டது!

    மது மாதத்தில் பாதி நாள் ஏதாவதொரு சாக்கைச் சொல்லி மனைவி அகிலாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவான். அவனும் வந்து நன்றாக சாப்பிடுவான்.

    சல்லிக்காசு செலவழிக்க மாட்டான்! எங்கம்மாவால் முடியாது என மனைவி, குழந்தையை இவர்கள் தலையில் கட்டி விடுவான். அகிலாவுக்கு தர்ம சங்கடம்.

    கோவிலுக்கும் போக வேண்டும்! புகுந்த வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ள மாட்டார்கள்.

    அப்பா-அம்மா மகளை விட முடியாது.

    அவளது சங்கடம் தெரிந்து இவர்கள் பார்க்க வேண்டிய கட்டாயம். ஆனால் ஊரில் அகிலா பெயர் கெட்டுவிட்டது.

    எந்த நேரமும் பிறந்த வீட்டில்தான் என வருவோர்-போவோர் விமர்சிக்க அவளால் விளக்கம் சொல்ல முடியவில்லை.

    காரணம் மது

    எந்த ஒரு பொண்ணுக்கும் இங்கே புகுந்த வீட்டாரை குறை காணவே முடியாது.

    கணவன் சரியாக இருந்தால், எந்த ஒரு பொண்ணும் தலை நிமிர்ந்து நிற்கலாம்!

    புருஷன் பொறுப்புகளை உதறி விட்டு சுயநலத்தின் உச்சத்தில் நின்றால், இங்கே பெண்ணுக்கு நேர்வது அவமானம் தான்.

    அதுதான் அகிலாவுக்கும் நேர்ந்தது.

    இந்த லட்சணத்தில் தன் பொறுப்புகளை உதறும் மதுவுக்கு மாப்பிள்ளை பந்தா மட்டும் போதாது!

    மாமனார், மாமியாரிடம், தர்பார் கொடி பறக்கும்.

    இதில் அதிகம் மாட்டிக் கொண்டவன் அகிலாவின் தம்பி வசீகரன்! அவனை நாய் மாதிரி, அடிமை மாதிரி நடத்துவான் மது.

    அகிலாவுக்கு கல்யாணம் ஆன புதிதில வசீகரனுக்கு வேலை கிடைக்கவில்லை!

    உனக்கு புத்தி பத்தாது வசீ! அதனாலதான் வேலை கிடைச்சா அதிக சம்பளத்தை எதிர் பார்க்காதே! கிடைச்சதை பிடிச்சுக்கோ!

    எத்தனை காலத்துக்கு அப்பா முதுகுல சவாரி செய்வே?

    வசீகரன் அக்கா புருஷனாச்சே என்று பொறுத்துக் கொண்டான்.

    அவனை பெற்றவர்களுக்கு இது பிடிக்கவில்லை.

    மாப்பிள்ளை எதிர்க்க முடியாது என்று மௌனமாக இருந்தார்கள்.

    மது-வசியை சீண்டுவது தொடர

    அகிலா! இது சரியில்ல! நீ சொல்லிவை! வசியை எதுக்கு அவர் இந்த மாதிரி பேசுறார். எங்களுக்கு பிடிக்கல.

    இல்லம்மா! உரிமையில பேசுறார்!

    நீ எதுக்குடி உன் புருஷனை ஆதரிக்கறே! எங்க பிள்ளையை பேசும்போது, எங்களால தாங்கிக்க முடியல!

    விடும்மா! அவர் கோவக்காரர். இவன் மேல உள்ள உரிமைல பேசுறார். பெரிசா எடுக்காதே!

    அவளுக்கே புருஷனின் போக்கு பிடிக்கவில்லை!

    ஆனாலும் பிரச்சனைக்கு பயந்து விவகாரத்தை அமுக்கினாள். வசீகரனுக்கு வேலை கிடைத்த நேரம்தான், அகிலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    என் மகள் பிறந்த ராசி, உனக்கு வேலை வந்திருக்கு! தக்க வச்சுக்கோ! இது சுமார் கம்பெனிதான். பெரிசா முன்னேற முடியாது!

    அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் வசீகரன் பதவி உயர்வு பெற்று நல்ல இடத்திற்கு வந்துவிட்டான். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் எந்த அளவுக்கு வசியை அவமானப்படுத்த முடியுமோ, அதைச் செய்தான் மது! கோபமே வராத வசிக்கு படிப்படியாக பொறுமை கரையத் தொடங்கி விட்டது.

    குழந்தை பிறந்து, புண்யாஜனம், இந்த நிலையில் வசிக்கு கொண்டு போய் புகுந்த வீட்டில் விடும் வைபவம், அதன் முதல் பிறந்தநாள் என்று சக்திக்கு மீறி செய்தார்கள் அகிலாவின் பெற்றோர்!

    அத்தனைக்கும் மதுவின் அம்மா குறை!

    இத்தனை பராமரிப்பு முழுக்க இவர்கள்தான்!

    குழந்தைக்கும் இரண்டு வயதாகி விட்டது! இந்த நிலையில் வசிக்கு வரன் பார்க்க தொடங்கி விட்டார்கள்.

    உன் தம்பிக்கு கல்யாணமா அகிலா! இந்தக்கால பெண்கள் வசீகரமா, ஹீரோமாதிரி பசங்கள எதிர்பார்க்கறாங்க. உன் தம்பி பேர்ல மட்டும்தான் வசீகரன். இவனுக்கு கல்யாணம் நடக்கும்னு எனக்குத் தோணலை

    ஏன் மாப்பிள்ளை அப்படி பேசறீங்க? அவனுக்கு என்ன குறைச்சல்?

    அத்தே! உங்க பிள்ளையை நீங்கதான் மெச்சிக்கணும்!

    வேலைக்கு போற பெண் வேணும்னு கேக்கறீங்க! கிடைக்குமா?

    ஏன் மாப்பிள்ளை...? வசிக்கும் மாசம் 50 ஆயிரம் சம்பளம் வருது! கம்பெனில நல்ல பேரு!

    மாமா! அந்தக் கம்பெனி மேல் முப்பது கேஸ் இருக்கு! எப்ப வேணும்னாலும் இழுத்து மூடலாம். கல்யாணம் நடந்துட்டு இவனுக்கு வேலை போனா பொண்ணை கொடுத்தவன் நிக்க வச்சு கிழிப்பான்!

    ஏன் மாப்பிள்ளை இத்தனை மோசமா பேசுறீங்க? அவன் உங்களை என்ன செஞ்சான்!

    ஏன் அத்தே கோவப்படுறீங்க? யதார்த்தம் எதுவோ அதை நான் சொன்னேன். அகிலா! நான் புறப்படறேன்!

    என்னங்க! நீங்க சாப்பிடலை!

    அக்கா! உள்ளே நுழைந்ததும், பசி பசின்னு மாமா கூச்சல் போட்டு ஒன்பது தோசை சாப்பிட்டாச்சே! இனிமே எப்படி சோறு இறங்கும்?

    வசீகரன் கேட்க, மது ஆவேசமாக நிமிர்ந்தான்.

    என்னடா வாய் நீளுது? என்னை அவமானப் படுத்தறியா?

    அய்யோ இல்ல மாமா! இது சகஜம்!

    அகிலா! இனிமே நான் இந்த வீட்டு பக்கம் எட்டிக் கூடப்பார்க்க மாட்டேன்!

    வேகமாக வெளியேற, அகிலா அலறிக் கொண்டு வாசல் வரை ஓட களேபரமாகி விட்டது!

    அகிலா அழுதபடி திரும்பி வந்தாள்,

    ஏண்டா, இப்படி பேசி அவரை அவமானம் படுத்தினே?

    ஏண்டி! அவர் என்ன வேணும்னாலும் பேசலாம்! இவனுக்கு என்ன எருமைத் தோலா? எத்தனை நாளைக்கு பொறுப்பான்! அவனும் ஆம்பிளதான்டி!

    அவர் என் முகத்தில் முழிக்கலேன்னா, என் கதி என்ன?

    யாரு? அவரா? காலையில வந்து நிப்பார், போக்கா! அகிலா வேகமாக உள்ளே போய் பேக் செய்தாள்!

    எங்கடீ போற?

    என் வீட்டுக்கு

    அக்கா! முதல்ல அதைச் செய்! இதை நீ எப்பவோ செஞ்சிருக்கணும்!

    "என்னை கேவலப்

    Enjoying the preview?
    Page 1 of 1