Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மூச்சுவிட நேரமில்லை!
மூச்சுவிட நேரமில்லை!
மூச்சுவிட நேரமில்லை!
Ebook247 pages2 hours

மூச்சுவிட நேரமில்லை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"என்னங்க, இவ இப்படி சொல்றா? கொஞ்சம் நீங்க வந்து கேளுங்க!" அம்மா பதட்டத்துடன், அப்பாவிடம் வந்தாள்.
 "நீ இப்படி மொட்டையாப் பேசாதேனு உங்கிட்ட வருஷக் கணக்கா நான் முட்டிக்கறேன்! யாரு என்ன சொன்னது?"
 "நம்ம சங்கீதா!"
 "என்ன சொல்றா?"
 "இன்னிக்கு மத்யானம் நம்ம வீட்ல என்னா?"
 "கேசரி, போண்டாவா?"
 "அடச்சீ! நான் அதையா கேட்டேன்? இன்னிக்கு மத்யானம் நம்ம வீட்டுக்கு யார் வர்றாங்க?"
 "அதைத்தாண்டி நானும் சொல்றேன். சங்கீதாவைப் பெண் பார்க்க வரறாங்க! அதான் கேசரி, போண்டானு சொன்னேன்!"
 "இது தீர்மானிக்கப்பட்டு எத்தனை நாளாச்சு?"
 "அஞ்சு நாள்!"
 "இப்ப உங்க பொண்ணு என்ன சொல்றானு கேளுங்க!"
 "ஏன்? என்ன சொல்றா?"
 சங்கீதா உள் அறையை விட்டு பரபரப்பாக வெளியே வந்தாள்.
 "அம்மா இங்க வா!""என்னப்பா?"
 "உங்கம்மா புரியாம ஏதோ பேசிக்கிட்டு இருக்கா! என்ன விஷயம்?"
 "அப்பா எனக்கு நேரமாச்சு. அதைப் பற்றியெல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்!"
 "நேரமாச்சா? நீ எங்கியாவது போறியா?"
 "ஆமாம்!"
 "இப்ப மணி பதிணொண்ணு! போயிட்டு எப்பத் திரும்புவே?"
 "ராத்திரி பத்தாகும்!"
 "என்னம்மா நீ? உன்னைப் பெண் பார்க்க மத்யானம் மூணு மணிக்கு நம்ம வீட்டுக்கு வர்றாங்க!"
 "அவங்க இன்னொரு நாள் வரட்டும்பா! ஐ கான்ட் ஸ்டே டுடே!"
 "கேட்டீங்களா? இது நல்லா இருக்கா? இப்பப் புரியுதா என் பதட்டம்?"
 "நீ இருடி! இங்க வாம்மா சங்கீதா!"
 "அப்பா ப்ளீஸ், என் நேரத்தை வீணாக்காதீங்க!"
 "நீ என்னம்மா சொல்ற? இது தீர்மானிக்கப்பட்ட ப்ரோக்ராம். வரப்போறவன் பெரிய இடத்துப் பையன். அவங்க வந்துட்டு நீ இல்லைனா அசிங்கமா போயிடும்மா! அவங்களுக்குத் தகவல் தரக்கூட அவகாசம் இல்லை! வெளியூர்லேர்ந்து இதுக்காக வர்றாங்க. ஃபார்மலா உன்னைப் பார்த்துட்டா, அடுத்தபடியா நிச்சயதார்த்தம்தான். உனக்கு ஏம்மா இதெல்லாம் புரியலை?"
 "டாடி! என் நிலைமையை நீங்க புரிஞ்சுகுங்க! என் ப்ரோக்ராம் நேத்து ராத்திரிதான் கன்ஃபார்ம் ஆச்சு. சாரதாதேவி டில்லிலேருந்து வர்றாங்க. ஒரு சில முக்கியப் பத்திரிகைகளுக்கு மட்டும்தான் அப்பாயின்மெண்ட் தந்திருக்காங்க. அதுல நாங்களும் இருக்கோம். அவங்க சென்னைல இருக்கப் போறதே ரெண்டு நாள், அதுல ஒரு நாள்தான் பிரஸ் மீட்! தட் ஈஸ் டுடே! நான் அவங்களை சந்திச்சு இன்டர்வ்யூ எடுக்க மாசக்கணக்கா காத்துக்கிட்டிருக்கேன். டேட் வாங்க என்ன பாடுபட்டிருக்கேன் தெரியுமா?சரிம்மா! நான் இல்லைனு சொல்லலை! பட், இது உன் வாழ்க்கைப் பிரச்சனை!"
 "அவங்ககிட்ட நீங்களே என் நிலைமையை விளக்குங்க! புரிஞ்சுகிட்டா நல்லது. இல்லைனா, வேற மாப்பிள்ளை பாத்துக்கலாம்!"
 "நல்லா இருக்குடி! இத்தனை திமிர் உனக்கிருந்தா, இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது! அப்புறம் நீ சொல்றியே, அந்த சாரதாதேவி மாதிரி ஊர், ஊரா அலைய வேண்டியதுதான்!"
 "ஸ்டாப் இட்! சாரதாதேவி பற்றிப் பேச யாருக்கும் தகுதி இல்லை."
 "தெரியும்டி! நீ பொறக்கறதுக்கு முன்னாலயே நீ சொல்ற சாரதாதேவியைப் பற்றி எனக்குத் தெரியும்டி! உன்னை மாதிரி திமிரும், அகம்பாவமும், நினைச்சதை நடத்தற பிடிவாதமும் இருந்த காரணமாத்தான் இந்த சாரதாதேவி ஒரு காலத்துல சிரிப்பா சிரிச்சா!"
 "அம்மா!"
 "ஏண்டீ கூச்சல் போடற? நீ அவளைப் போய் பேட்டி எடு! அது பத்திரிகைல வரட்டும். இப்ப பெரிய சமுகசேவகி அவ. இன்னொரு தெரசானு சொல்றாங்க. பாண்டிச்சேரி அம்மாவோட மறு அவதாரம் இந்த சாரதாதேவினு பல பேர் பேசுவாங்க. கொஞ்சம் வெறி பிடிச்சவங்க அவளை தெய்வப் பிறவினே சொல்லட்டும். அவளோட முழுக்கதையும் எனக்கும் தெரியும்டி!"
 சங்கீதா பேசவில்லை!
 "புகழுக்காக, பேருக்காக நீ இப்ப அவளை பேட்டி எடுக்க ஓடறே!"
 "இல்லைம்மா! அது மட்டும் காரணமில்லை! அவங்களை இன்டர்வ்யூ எடுக்கற ஒரு நிருபரா மட்டுமே நான் போகலை! நிறைய புத்தகங்கள் எழுதியிருக்காங்க அவங்க! அந்தத் தத்துவங்களைப் படிச்சு பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டவ நான். ஷீ ஈஸ் எ க்ரேட் ஃபிலாஸஃபர்!"
 "ஆமாண்டி! தத்துவம் ஏன் வராது? கண்ணதாசன் எழுதாததையா இந்தம்மா எழுதிட்டா. பட்டினிக்குத் தீனி! கெட்ட பின்பு ஞானின்னு அவர் எழுதிட்டுத்தானே போனார்!"ரி விடு! உங்கிட்ட விவாதம் பண்ண எனக்கு நேரமில்லை! டாடி, ஸாரி டு ஸே! இப்ப நான் புறப்பட்டாச்சு. வர்றவங்களை எப்படியாவது சமாளிங்க! ப்ளீஸ்!"
 சங்கீதா உள்ளே ஓடினாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223533108
மூச்சுவிட நேரமில்லை!

Read more from Devibala

Related to மூச்சுவிட நேரமில்லை!

Related ebooks

Reviews for மூச்சுவிட நேரமில்லை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மூச்சுவிட நேரமில்லை! - Devibala

    1

    என்னங்க, இவ இப்படி சொல்றா? கொஞ்சம் நீங்க வந்து கேளுங்க! அம்மா பதட்டத்துடன், அப்பாவிடம் வந்தாள்.

    நீ இப்படி மொட்டையாப் பேசாதேனு உங்கிட்ட வருஷக் கணக்கா நான் முட்டிக்கறேன்! யாரு என்ன சொன்னது?

    நம்ம சங்கீதா!

    என்ன சொல்றா?

    இன்னிக்கு மத்யானம் நம்ம வீட்ல என்னா?

    கேசரி, போண்டாவா?

    அடச்சீ! நான் அதையா கேட்டேன்? இன்னிக்கு மத்யானம் நம்ம வீட்டுக்கு யார் வர்றாங்க?

    அதைத்தாண்டி நானும் சொல்றேன். சங்கீதாவைப் பெண் பார்க்க வரறாங்க! அதான் கேசரி, போண்டானு சொன்னேன்!

    இது தீர்மானிக்கப்பட்டு எத்தனை நாளாச்சு?

    அஞ்சு நாள்!

    இப்ப உங்க பொண்ணு என்ன சொல்றானு கேளுங்க!

    ஏன்? என்ன சொல்றா?

    சங்கீதா உள் அறையை விட்டு பரபரப்பாக வெளியே வந்தாள்.

    அம்மா இங்க வா!

    என்னப்பா?

    உங்கம்மா புரியாம ஏதோ பேசிக்கிட்டு இருக்கா! என்ன விஷயம்?

    அப்பா எனக்கு நேரமாச்சு. அதைப் பற்றியெல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்!

    நேரமாச்சா? நீ எங்கியாவது போறியா?

    ஆமாம்!

    இப்ப மணி பதிணொண்ணு! போயிட்டு எப்பத் திரும்புவே?

    ராத்திரி பத்தாகும்!

    என்னம்மா நீ? உன்னைப் பெண் பார்க்க மத்யானம் மூணு மணிக்கு நம்ம வீட்டுக்கு வர்றாங்க!

    அவங்க இன்னொரு நாள் வரட்டும்பா! ஐ கான்ட் ஸ்டே டுடே!

    கேட்டீங்களா? இது நல்லா இருக்கா? இப்பப் புரியுதா என் பதட்டம்?

    நீ இருடி! இங்க வாம்மா சங்கீதா!

    அப்பா ப்ளீஸ், என் நேரத்தை வீணாக்காதீங்க!

    நீ என்னம்மா சொல்ற? இது தீர்மானிக்கப்பட்ட ப்ரோக்ராம். வரப்போறவன் பெரிய இடத்துப் பையன். அவங்க வந்துட்டு நீ இல்லைனா அசிங்கமா போயிடும்மா! அவங்களுக்குத் தகவல் தரக்கூட அவகாசம் இல்லை! வெளியூர்லேர்ந்து இதுக்காக வர்றாங்க. ஃபார்மலா உன்னைப் பார்த்துட்டா, அடுத்தபடியா நிச்சயதார்த்தம்தான். உனக்கு ஏம்மா இதெல்லாம் புரியலை?

    டாடி! என் நிலைமையை நீங்க புரிஞ்சுகுங்க! என் ப்ரோக்ராம் நேத்து ராத்திரிதான் கன்ஃபார்ம் ஆச்சு. சாரதாதேவி டில்லிலேருந்து வர்றாங்க. ஒரு சில முக்கியப் பத்திரிகைகளுக்கு மட்டும்தான் அப்பாயின்மெண்ட் தந்திருக்காங்க. அதுல நாங்களும் இருக்கோம். அவங்க சென்னைல இருக்கப் போறதே ரெண்டு நாள், அதுல ஒரு நாள்தான் பிரஸ் மீட்! தட் ஈஸ் டுடே! நான் அவங்களை சந்திச்சு இன்டர்வ்யூ எடுக்க மாசக்கணக்கா காத்துக்கிட்டிருக்கேன். டேட் வாங்க என்ன பாடுபட்டிருக்கேன் தெரியுமா?

    சரிம்மா! நான் இல்லைனு சொல்லலை! பட், இது உன் வாழ்க்கைப் பிரச்சனை!

    அவங்ககிட்ட நீங்களே என் நிலைமையை விளக்குங்க! புரிஞ்சுகிட்டா நல்லது. இல்லைனா, வேற மாப்பிள்ளை பாத்துக்கலாம்!

    நல்லா இருக்குடி! இத்தனை திமிர் உனக்கிருந்தா, இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது! அப்புறம் நீ சொல்றியே, அந்த சாரதாதேவி மாதிரி ஊர், ஊரா அலைய வேண்டியதுதான்!

    ஸ்டாப் இட்! சாரதாதேவி பற்றிப் பேச யாருக்கும் தகுதி இல்லை.

    தெரியும்டி! நீ பொறக்கறதுக்கு முன்னாலயே நீ சொல்ற சாரதாதேவியைப் பற்றி எனக்குத் தெரியும்டி! உன்னை மாதிரி திமிரும், அகம்பாவமும், நினைச்சதை நடத்தற பிடிவாதமும் இருந்த காரணமாத்தான் இந்த சாரதாதேவி ஒரு காலத்துல சிரிப்பா சிரிச்சா!

    அம்மா!

    ஏண்டீ கூச்சல் போடற? நீ அவளைப் போய் பேட்டி எடு! அது பத்திரிகைல வரட்டும். இப்ப பெரிய சமுகசேவகி அவ. இன்னொரு தெரசானு சொல்றாங்க. பாண்டிச்சேரி அம்மாவோட மறு அவதாரம் இந்த சாரதாதேவினு பல பேர் பேசுவாங்க. கொஞ்சம் வெறி பிடிச்சவங்க அவளை தெய்வப் பிறவினே சொல்லட்டும். அவளோட முழுக்கதையும் எனக்கும் தெரியும்டி!

    சங்கீதா பேசவில்லை!

    புகழுக்காக, பேருக்காக நீ இப்ப அவளை பேட்டி எடுக்க ஓடறே!

    இல்லைம்மா! அது மட்டும் காரணமில்லை! அவங்களை இன்டர்வ்யூ எடுக்கற ஒரு நிருபரா மட்டுமே நான் போகலை! நிறைய புத்தகங்கள் எழுதியிருக்காங்க அவங்க! அந்தத் தத்துவங்களைப் படிச்சு பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டவ நான். ஷீ ஈஸ் எ க்ரேட் ஃபிலாஸஃபர்!

    ஆமாண்டி! தத்துவம் ஏன் வராது? கண்ணதாசன் எழுதாததையா இந்தம்மா எழுதிட்டா. பட்டினிக்குத் தீனி! கெட்ட பின்பு ஞானின்னு அவர் எழுதிட்டுத்தானே போனார்!

    சரி விடு! உங்கிட்ட விவாதம் பண்ண எனக்கு நேரமில்லை! டாடி, ஸாரி டு ஸே! இப்ப நான் புறப்பட்டாச்சு. வர்றவங்களை எப்படியாவது சமாளிங்க! ப்ளீஸ்!

    சங்கீதா உள்ளே ஓடினாள்.

    ஐந்தாவது நிமிடம் தன் கைப்பை, வண்டிச்சாவி சகிதம் வாசலில் இறங்கி விட்டாள்.

    மொபெட் புறப்பட்டது.

    புழுதி வாரிக் கிளம்பிக் கொண்டு, காணாமல் போனது.

    அப்பாவின் முகமே சிவந்து கிடந்தது..

    வர்றவங்களுக்கு இப்ப என்னங்க பதில் சொல்லப் போறம்?

    தெரியலை! ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைப்போம். என் ஸ்நேகிதர் மூலமா வரக்கூடிய வரன் இது. நாளைக்கு அவர் முகத்துல எப்படி நான் விழிப்பேன்?

    சரி, என்ன பொய் சொல்லலாம்னு இப்பவே ரெண்டு பேருமாச் சேர்ந்து -- தயார் பண்ணணும். நீங்க ஒண்ணு நான் ஒண்ணா சொல்லக்கூடாது!

    எதுக்குப் பொய்!

    பின்ன? பத்திரிகைக்கு சாரதாதேவியை பேட்டி எடுக்க இவ போயிருக்கானு சொல்ல முடியுமா?

    ஆமாம். அதைத்தான் நான் சொல்லப் போறேன்.

    அவங்க என்ன நினைப்பாங்க?

    இனி நினைக்க என்ன இருக்கு? நம்ம பொண்ணை அளவுக்கு மீறி சலுகை குடுத்து வளர்த்துட்டம்!

    அதை அதிகம் செஞ்சது நீங்கதான்!

    இதுமாதிரி நினைச்சதை சாதிக்கற பிடிவாதம் நீடிச்சா, நாளைக்கு இவளும் ஒரு சாரதாதேவி ஆகப்போறா!

    எனக்குக் கவலையா இருக்குங்க! ஒரே பொண்ணு நமக்கு! அடிக்கடி இவளால ரெண்டு பேரும் அவமானப்படறம்!

    நான் இனிமே அவமானப்பட மாட்டேன்!

    என்ன சொல்றீங்க?

    இன்னிய நிகழ்ச்சிகள் நடந்து முடியட்டும். எல்லாத்துக்கும் ஒரு முடிவுகட்டறேன்!

    அப்பா செருப்பை மாட்டிக் கொண்டு சரக்கென இறங்கி வீதியில் நடந்தார். கடவுளே! இவருக்கும் கோபம் வருதே! இந்தப் பொண்ணும் இப்படி புரிஞ்சுகாம நடக்கறாளே! அப்பாவுக்கும், மகளுக்கும் மத்தில ரகள வந்துராம நீதான் காப்பாத்தணும்!’

    அம்மா கவலையுடன் உள்ளே போனாள்.

    அப்பா ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பினார்.

    என்னங்க! காலைல நீங்க சாப்பிடலை!

    எனக்கு வேண்டாம்!

    விடுங்க! அவளுக்குத்தான் பக்குவம் இல்லை! நீங்களும் பதட்டப்படலாமா?

    சங்கீதா சாப்பிட்டாளா?

    அரைகுறையா அள்ளிப் போட்டுட்டுப் போனா!

    ராத்திரி தலைவலினு அழப்போறா. நான் தைலம் தடவி விடணும்!

    அம்மா உள்ளுக்குள் சிரித்தாள்.

    ‘பொண்ணைப் பத்தின கவலைதான் எப்பவும். என்ன மனுஷனோ?’ பிற்பகல் இரண்டு மணிக்கு வாசலில் கார் வந்து நின்றது. வந்துவிட்டார்கள். ஏற்பாடு செய்த அந்த நண்பர்தான் முதலில் இறங்கினார். தொடர்ந்து வயதான ஒரு தம்பதியர், ஒரு இளைஞன்... ஒரு இளம்பெண்!

    அப்பா ஓடினார். எல்லாரையும் வரவேற்றார். அம்மா பாய் விரித்தாள். நாற்காலி போட்டாள்.

    எல்லாரும் உட்கார்ந்தார்கள்.

    தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பரஸ்பர அறிமுகம், கை குலுக்கல் எல்லாம் முடிந்தது.

    ராஜி! காபி குடும்மா!

    இருக்கட்டும். பொண்ணை வரச் சொல்லுங்க! அப்பா வியர்வையை ஒற்றிக் கொண்டார்.

    பசுபதி! கொஞ்சம் உள்ளே வா! எக்ஸ்யுஸ் மீ!

    அந்த நண்பர் பசுபதி, அப்பாவுடன் உள்ளே வந்தார்.

    என்ன கஜா

    ஸாரி டு ஸே! எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியலை!

    என்ன பிரச்னை? எதுவானாலும் சொல்லு!

    இல்லை... வந்து...!

    சங்கீதா இந்த வரன் வேண்டாம்னு சொல்றாளா? பரவால்லை பார்க்கட்டும். அப்புறமா தீர்மானம் பண்ணிக்கலாம்!

    அவ வீட்ல இல்லைப்பா!

    ஓ... பிரீயட்ஸா? இட்ஸ் ஓக்கே! இயற்கையோட சதி! அதை வந்தவங்ககிட்டே தெரிவிக்க வேண்டியதில்லை! அதனால் பாதகமும் இல்லை. பூஜையா பண்ணப் போறா?

    அய்யோ! என்னைக் கொஞ்சம் பேச விடறியா பசுபதி?

    சொல்லு!

    அப்பா சகலமும் சொன்னார்.

    என்னடா கஜா இது? ஒரு பொண்ணு இப்படியா பொறுப்பில்லாம இருப்பா? எப்படீடா இதை அவங்ககிட்ட சொல்றது? இப்படி பண்ணிட்டியே கஜா!

    நானா பண்ணினேன்?

    பின்ன? உன் பொண்ணை கண்ட்ரோல் பண்ற சக்தி உனக்கே இல்லைனா எப்படீடா?

    அப்பா முகம் சிவந்தது.

    ஸாரி பசுபதி! என்னால உனக்கும் அவமானம்! ஆனா இப்ப நிலைமையை சமாளிக்கணுமே!

    நீ வெளியே வா! நான் பாக்கறேன்!

    அப்பா சிரித்தபடி வெளிப்பட்டார்.

    அந்தப் பசுபதி மாப்பிள்ளை பையனிடம் வந்தார்.

    ராஜா! கொஞ்சம் வெளில வா!

    ராஜா மட்டும் எழுந்து வந்தான்.

    அவனிடம் எதையும் ஒளிக்காமல் பசுபதி சொன்னார்.

    நல்ல பொண்ணுதான்! பத்திரிகை வேலை! உயிர் மூச்சு அவளுக்கு. புத்திசாலி! அவளோட அப்பா வேதனைப்படறார். என்னப்பா செய்யலாம் இப்ப?

    ராஜா சிரித்தான்.

    அப்பா, அம்மாவை இங்கே கூட்டிட்டு வந்து விவரத்தைச் சொல்லுங்க அங்கிள்!

    சொல்லலாமா?

    சொல்லுங்க!

    வயதானவர்கள் அழைக்கப்பட்டார்கள்.

    பசுபதி விவரம் சொன்னார்.

    பெரியவர் முகம் மாறியது.

    வெல் ராஜா! நாம புறப்படலாம். அந்தப் பெண்ணோட அப்பாகிட்டே நாலு கேள்வி கேக்கணும் நான்!

    என்னானு டாடீ?

    பொண்ணை இப்படி வளர்த்து வச்சிருக்கியேனு!

    ப்ளீஸ் டாடி வேண்டாம். அவ ஒண்ணும் தப்பா நடந்துகலை! சமூகப் பொறுப்புள்ள ஒரு பொண்ணுதான் அவ!

    என்னடா சொல்ற?

    கடைசி நேரத்து இந்த அப்பாயின்ட்மெண்ட் பதிவாகியிருக்கு. தகவல் சொல்ல நேரமில்லை!

    இது வாழ்க்கைப் பிரச்சனைடா!

    புரிஞ்சுகுங்க டாடி! நான் இல்லைனா, இன்னொரு மாப்பிள்ளை! பட், சாரதாதேவி எமினென்ட் பர்சனாலிட்டி! அவங்க இன்டர்வ்யூ சுலபமில்லை. கிடைச்சதை விட யாருக்கும் மனசு வராதுதான்! ஷீ ஈஸ் ரைட்!

    நிறுத்துடா! நாளைக்குத் தாலிகட்டற நேரத்துல கூட எழுந்து போவா இவ! அப்ப என்ன விளக்கம் சொல்லுவே?

    அம்மா கோவப்படாதே! பப்ளிக் லைஃப்ல இருக்கிறவங்களால, சொந்த வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியத்துவம் தர முடியாது!

    அதனால இந்தப் பொண்ணு நமக்கு வேண்டாம்!

    ஸாரி டு ஸே! இவதான் எனக்கு வேணும்!

    எங்களைவிட பாக்காத ஒருத்தி உனக்கு முக்கியமா ராஜா?

    ஷ்! இது அந்நியர் வீடு! குரலை உயர்த்தாதே! நான் அவளோட அப்பாகிட்டே பேசிக்கிறேன். நீங்கள்ளாம் கார்ல இருங்க! ப்ளீஸ்!

    அவர்கள் அத்தனை பேரும் விவாதிப்பதையும், ராஜா தவிர மற்றவர்கள் காரில் ஏறுவதையும் உள்ளேயிருந்து அப்பா, அம்மா பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ராஜா உள்ளே வந்தான்.

    சார்! இப்படி வாங்க!

    அப்பா கவலையுடன் அவனை நெருங்கினார்.

    ராஜா சிரித்தான்.

    ஏன் டென்ஷனா இருக்கீங்க? ரிலாக்ஸ்!

    எப்படி முடியும்? தப்பு என் மேலதானே! அவளை நான் சரியா வளர்க்கலை. அதான் தலை குனிந்து நிக்கறேன்!

    நோ! நீங்களும் எங்கப்பா, அம்மா ரேஞ்சுலதான் இருக்கீங்க! எனக்கு உங்க டாட்டர் செஞ்சது தப்பாப்படலை!

    மிஸ்டர் ராஜா! என்ன சொல்றீங்க?

    அவ ஒரு ரிப்போர்ட்டர். சாரதாதேவி ஒரு பிக் பர்சனாலிட்டி. அவங்களை சங்கீதா இன்டர்வியூ எடுக்கறதே பெரிய விஷயம். எனக்கு உங்க பெண்ணோட பிரச்சனை புரியுது. இது மாதிரி விவரமுள்ள ஒரு பெண்தான் எனக்கு மனைவியா வரணும். பாக்காமலே சொல்றேன். நான் சங்கீதாவைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்!’

    அம்மா நிலைகுலைந்தாள்.

    அப்பாவும் இதை எதிர்பார்க்கவில்லை.

    தம்பீ! உங்கப்பா, அம்மா...

    நான் சரிக்கட்டிக்கறேன்.

    இல்லை... அவ நாளைக்கு வாழப் போறது அங்கேதானே...!

    லுக் ஆன்ட்டி! வாழ்க்கைனா என்னா? வெறும் அடுக்களையும், பெட்ரூமும் மட்டும்தானா? அதுவும்தான்! ஆனா அதையும் தாண்டி நிறைய இருக்கு. வயித்துக்கும், உடம்புக்கும் மட்டும் சாப்பாடு போடணும்னா, அதுக்கு இங்கே நிறைய பெண்கள் இருக்காங்க! எனக்கு அது மாதிரி ஒரு பெண் வேண்டாம். ஸம்திங் பியாண்ட் தட்! நான் அப்பா, அம்மாகூட நிச்சயதார்த்தம் பண்ணக் கூடிய சீக்கிரம் வருவேன். முடிஞ்சா சங்கீதா அன்னிக்காவது இருக்கட்டும். இருக்க முடியலைனாலும் வருத்தமில்லை! ஸீ யூஅங்கிள்! பை ஆன்ட்டி!

    அவன் படி இறங்கிப் போனான்.

    அப்பா பிரமித்துப் போனார்.

    கார் புறப்பட்டுப் போனது!

    என்னங்க இது?

    எ...எது ராஜி?

    நீங்க நின்னுகிட்டே தூங்கறீங்களா? இந்தக் கல்யாணம் நடக்குமா? பெரியவங்க ஒப்புக்குவாங்களா? பையன் மேல கோபம் வராது?

    அப்பா சிரித்தார்.

    ஏன் சிரிக்கறீங்க?

    அவங்க பையனைக் கோபப்படட்டும். நாம சங்கீதா மேல பாயலாம். ஆனா அவங்க ரெண்டு பேரும் எதைப் பத்தியாவது கவலைப்படறாங்களோ? தலைமுறைகள்! அவங்களைப் புரிஞ்சுக்க நம்மால முடியலை! யாருக்கும் விளக்கம் சொல்ல இந்த ஜெனரேஷன் விரும்பலை! தயாராவும் இல்லை! இந்தக் கல்யாணம் நடக்கும்!

    எனக்குக் கவலையா இருக்குங்க!

    நீ சாகற வரைக்கும் எதுக்காவது கவலைப்படு! எந்தக் கவலையும் இல்லைனா, கவலையே இல்லையேனு கவலைப்படற ரகம் நீ! உன்னைத் திருத்தவே முடியாது. எம் பொண்ணுதான் சரி! அவளைப் புரிஞ்சுக்க நானாவது முயற்சி பண்றேன்!

    2

    சாரதாதேவி வந்து விட்டார்.

    விமானத்திலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1