Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மேடைக்கு வாங்க!
மேடைக்கு வாங்க!
மேடைக்கு வாங்க!
Ebook245 pages1 hour

மேடைக்கு வாங்க!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சம்பளத்தை அப்பாவின் கையில் கொடுத்தாள் சௌம்யா.
 "நீதானேம்மா குடும்பம் நடத்தறே! என்கிட்ட ஏன் தர்ற?"
 "அது பழகிப் போச்சுப்பா"
 திரும்ப அந்தக்கவர் அவள் கைக்கு வந்தது!
 "நான் போய் காபி கொண்டு வர்றேன்பா!"
 "அம்மாடி! எனக்கு இன்னும் ஆறு மாசத்துக்கு எக்ஸ்டன்ஷன் கிடைச்சிருக்கு!"
 "அப்படியா?"
 "நியாயமா அடுத்த மாசம் ரிடையர் ஆக வேண்டியவன் நான். ஆறு மாசம் தள்ளிப் போகுது!"
 "நல்லதுதான்!"
 "ஆறு மாசச்சம்பளம் கூடுதலாக் கிடைக்கும்! உனக்கு இன்னொரு எட்டு சவரன் வாங்கலாம்!"
 சௌம்யாதான் அந்த வீட்டில் சகலமும்!
 அவள் பட்டப்படிப்பை முடித்த சமயத்தில் அம்மா மஞ்சள் காமாலை வந்து மரித்துப் போனாள். அது முதல் எல்லாமே சௌம்யாதான். ஒரே மகள். அம்மா நோயாளி என்பதால் சிறு வயதிலேயே சகலமும் கற்றுக் கொண்டு விட்டாள். அப்பாதான் பாதி நாள் சமையல். அவருக்கு உதவும் விதமாக எல்லாம் தெரிந்து கொண்டாள்.
 அம்மா இறந்த நாலாவது மாசம் சௌம்யாவுக்கு ஒரு வங்கியில் வேலை கிடைத்து விட்டது. இப்போது வயது இருபத்தி ஆறு! அப்பாவும் சர்வீசில்.
 நேரான பெண், சௌம்யாபொய் சொல்வது பிடிக்காது! தப்பான மனிதர்களை ஜீரணிக்க மாட்டாள். முதுகுக்கு பின்னால் பேசுவது... கோள் சொல்வது இதெல்லாம் அலர்ஜி! மொத்தத்தில் அத்தனை சுலபத்தில் யாரிடமும் ஒட்டாதவள்.
 வங்கியில் அவளுக்குப் பெயர் மிலிடிரி!
 யாரும் கிட்டே நெருங்க முடியாது.
 காதல் என்பதெல்லாம் அவளைப் பொறுத்தவரை கெட்ட வார்த்தை! காபி எடுத்து வந்தாள்.
 "இப்படி ஒக்காரம்மா"
 "சொல்லுங்கப்பா! ராத்திரிக்கு சப்பாத்தி போடணும்! மளிகைகடைக்கு லிஸ்ட் எழுதணும்!"
 "எல்லாம் செய்யலாம். வா இப்படி!"
 அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள்.
 "உனக்கு வயசு இருபத்தி ஆறு! எத்தனை நாளைக்கு உன்னை நான் வீட்ல வச்சுக்கறது?"
 "கல்யாணப் பேச்சா?"
 "ஆமாண்டா! எழுந்து போயிராதே ப்ளீஸ்!"
 "அப்பா! எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு நான் சொல்றேன் இல்லையா?"
 "எப்படீம்மா முடியும்? வாழ்நாள் முழுக்கத் தனியா இருப்பியா? நடக்குமா?"
 "ஏன்பா நடக்காது? கைநிறைய சம்பாதிக்கறேன். வசதியா இருக்கிறோம். வேற என்ன வேணும் வாழ்க்கைல? நான் திடமா இருக்கேன். அதனால பாதுகாப்பு பயம் எனக்கில்லை! நீங்க இருக்கற வரைக்கும் தனிமையும் இல்லை!"
 "எனக்கப்புறம்?"
 "ரொம்பத் தாண்டி யோசிக்கறதில்லைப்பா நான்!"
 "ஏதாவது காதல் கீதல்...?""இப்ப பல காதல் கல்யாணங்கள் தோல்விலதான்பா முடியுது!"
 "எல்லாத்துக்கும் எதிர்மறையாப் பேசினா எப்படீம்மா! பாஸிட்டிவ் அப்ரோச் இல்லைனா, வாழ்க்கைல நிம்மதி இருக்காதம்மா!"
 "சரி! மணி ஒன்பதாகப் போகுது! படுங்க! மாத்திரை கொண்டு வந்து தர்றேன்!"
 அப்பா சற்று நேரத்தில் படுத்து விட்டார்.
 அவள் சமையல்கட்டை சுத்தம் செய்து, ஜன்னல்களை சாத்தி, வாசல் கதவை உள்ளே பூட்டி விட்டு, படுக்கைக்கு வந்தாள். விளக்கை அணைத்தாள்.
 அப்பாவின் மெல்லிய குறட்டை சப்தம் கேட்டது.
 கண்களை மூடிக் கொண்டாள்.
 உறக்கம் வருவதாகத் தெரியவில்லை!
 அவளையும் இந்த ஏழெட்டு வருடத்தில் காதலிக்க முயற்சி செய்த ஒரு ஆண் கும்பல் உண்டு.
 எதையும் இவள் ஆதரிக்காத காரணமாக, அந்தக் கூட்டம் படிப்படியாகக் குறைந்து இன்று ஆண்களின் நடமாட்டமே அவளிடம் இல்லை!
 "நீ மோசம் சௌம்யா! இப்படியா மிலிடிரித்தனமா இருப்பே? வாழ்க்கைல ஒரு விறுவிறுப்பு வேணும்! கல்யாணம் ஆன பின்னால கூட இப்பல்லாம் காதலிக்கிறாங்க பெண்கள்!"
 "புருஷனையா?"
 "தன் புருஷனை இல்லை! அடுத்தவ புருஷனை!"
 சொல்லிவிட்டு ரம்பா சிரிக்க, அருவருப்பாக இருக்கும். ஆனால் அவளைச் சுற்றி எப்போதும் ஆண்கள் கூட்டம் இருக்கும். இருக்கும்படி செய்வாள்

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223653400
மேடைக்கு வாங்க!

Read more from Devibala

Related to மேடைக்கு வாங்க!

Related ebooks

Reviews for மேடைக்கு வாங்க!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மேடைக்கு வாங்க! - Devibala

    1

    சம்பளத்தை அப்பாவின் கையில் கொடுத்தாள் சௌம்யா.

    நீதானேம்மா குடும்பம் நடத்தறே! என்கிட்ட ஏன் தர்ற?

    அது பழகிப் போச்சுப்பா

    திரும்ப அந்தக்கவர் அவள் கைக்கு வந்தது!

    நான் போய் காபி கொண்டு வர்றேன்பா!

    அம்மாடி! எனக்கு இன்னும் ஆறு மாசத்துக்கு எக்ஸ்டன்ஷன் கிடைச்சிருக்கு!

    அப்படியா?

    நியாயமா அடுத்த மாசம் ரிடையர் ஆக வேண்டியவன் நான். ஆறு மாசம் தள்ளிப் போகுது!

    நல்லதுதான்!

    ஆறு மாசச்சம்பளம் கூடுதலாக் கிடைக்கும்! உனக்கு இன்னொரு எட்டு சவரன் வாங்கலாம்!

    சௌம்யாதான் அந்த வீட்டில் சகலமும்!

    அவள் பட்டப்படிப்பை முடித்த சமயத்தில் அம்மா மஞ்சள் காமாலை வந்து மரித்துப் போனாள். அது முதல் எல்லாமே சௌம்யாதான். ஒரே மகள். அம்மா நோயாளி என்பதால் சிறு வயதிலேயே சகலமும் கற்றுக் கொண்டு விட்டாள். அப்பாதான் பாதி நாள் சமையல். அவருக்கு உதவும் விதமாக எல்லாம் தெரிந்து கொண்டாள்.

    அம்மா இறந்த நாலாவது மாசம் சௌம்யாவுக்கு ஒரு வங்கியில் வேலை கிடைத்து விட்டது. இப்போது வயது இருபத்தி ஆறு! அப்பாவும் சர்வீசில்.

    நேரான பெண், சௌம்யா.

    பொய் சொல்வது பிடிக்காது! தப்பான மனிதர்களை ஜீரணிக்க மாட்டாள். முதுகுக்கு பின்னால் பேசுவது... கோள் சொல்வது இதெல்லாம் அலர்ஜி! மொத்தத்தில் அத்தனை சுலபத்தில் யாரிடமும் ஒட்டாதவள்.

    வங்கியில் அவளுக்குப் பெயர் மிலிடிரி!

    யாரும் கிட்டே நெருங்க முடியாது.

    காதல் என்பதெல்லாம் அவளைப் பொறுத்தவரை கெட்ட வார்த்தை! காபி எடுத்து வந்தாள்.

    இப்படி ஒக்காரம்மா

    சொல்லுங்கப்பா! ராத்திரிக்கு சப்பாத்தி போடணும்! மளிகைகடைக்கு லிஸ்ட் எழுதணும்!

    எல்லாம் செய்யலாம். வா இப்படி!

    அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள்.

    உனக்கு வயசு இருபத்தி ஆறு! எத்தனை நாளைக்கு உன்னை நான் வீட்ல வச்சுக்கறது?

    கல்யாணப் பேச்சா?

    ஆமாண்டா! எழுந்து போயிராதே ப்ளீஸ்!

    அப்பா! எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு நான் சொல்றேன் இல்லையா?

    எப்படீம்மா முடியும்? வாழ்நாள் முழுக்கத் தனியா இருப்பியா? நடக்குமா?

    ஏன்பா நடக்காது? கைநிறைய சம்பாதிக்கறேன். வசதியா இருக்கிறோம். வேற என்ன வேணும் வாழ்க்கைல? நான் திடமா இருக்கேன். அதனால பாதுகாப்பு பயம் எனக்கில்லை! நீங்க இருக்கற வரைக்கும் தனிமையும் இல்லை!

    எனக்கப்புறம்?

    ரொம்பத் தாண்டி யோசிக்கறதில்லைப்பா நான்!

    ஏதாவது காதல் கீதல்...?

    இப்ப பல காதல் கல்யாணங்கள் தோல்விலதான்பா முடியுது!

    எல்லாத்துக்கும் எதிர்மறையாப் பேசினா எப்படீம்மா! பாஸிட்டிவ் அப்ரோச் இல்லைனா, வாழ்க்கைல நிம்மதி இருக்காதம்மா!

    சரி! மணி ஒன்பதாகப் போகுது! படுங்க! மாத்திரை கொண்டு வந்து தர்றேன்!

    அப்பா சற்று நேரத்தில் படுத்து விட்டார்.

    அவள் சமையல்கட்டை சுத்தம் செய்து, ஜன்னல்களை சாத்தி, வாசல் கதவை உள்ளே பூட்டி விட்டு, படுக்கைக்கு வந்தாள். விளக்கை அணைத்தாள்.

    அப்பாவின் மெல்லிய குறட்டை சப்தம் கேட்டது.

    கண்களை மூடிக் கொண்டாள்.

    உறக்கம் வருவதாகத் தெரியவில்லை!

    அவளையும் இந்த ஏழெட்டு வருடத்தில் காதலிக்க முயற்சி செய்த ஒரு ஆண் கும்பல் உண்டு.

    எதையும் இவள் ஆதரிக்காத காரணமாக, அந்தக் கூட்டம் படிப்படியாகக் குறைந்து இன்று ஆண்களின் நடமாட்டமே அவளிடம் இல்லை!

    நீ மோசம் சௌம்யா! இப்படியா மிலிடிரித்தனமா இருப்பே? வாழ்க்கைல ஒரு விறுவிறுப்பு வேணும்! கல்யாணம் ஆன பின்னால கூட இப்பல்லாம் காதலிக்கிறாங்க பெண்கள்!

    புருஷனையா?

    தன் புருஷனை இல்லை! அடுத்தவ புருஷனை!

    சொல்லிவிட்டு ரம்பா சிரிக்க, அருவருப்பாக இருக்கும். ஆனால் அவளைச் சுற்றி எப்போதும் ஆண்கள் கூட்டம் இருக்கும். இருக்கும்படி செய்வாள்.

    பத்து ஆண்கள் சேர்ந்தால், குஷி கிளம்பி பலான ஜோக்கெல்லாம் அடிப்பாள். விஷமக்கார ஆண்கள் அவளையே வர்ணிக்க, அதையும் ரசிப்பாள். இத்தனைக்கும் கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகளுக்கு அவள் தாய். தாளமுடியாமல் சௌம்யா ஒரு நாள் கேட்டே விட்டாள்.

    நீ ஒரு பெண்ணாப் பொறந்துட்டு, இப்படி லஜ்ஜையில்லாம் நடந்துக்கறியே? உனக்கு வெக்கமால்லை?

    எதுக்கு வெக்கம்? நீ என்ன கற்காலத்துல வாழறியா? இப்ப எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு! சினிமால எதைக் காட்டாம விட்டான்? குழந்தைகள் நமக்கு சொல்லித் தருது! எய்ட்ஸ் பத்தின விளம்பரம் வரும்போது, ஆணுறைனா என்னம்மானு கேக்கறான் என் மூணு வயசுப் பையன்!

    சௌம்யா காதுகளை மூடிக் கொண்டாள்.

    ஏன் நீ மூடிக்கறே? படிக்கவும், எழுதவும், பேசவும் நாம தயங்கறம். தப்புனு நினைக்கறம். ஆனா பகிரங்கமா டிவில காட்டறானே! அதை யார்தடுக்கறது? இதப் பாரு சௌம்யா! நானும், நீயும் நெனச்சா, எதையும் இங்கே மாத்திர முடியாது!

    அதுக்காக ஒரு மாரல் வேல்யூஸ் இல்லையா?

    எதை நீ வேல்யூஸ்னு சொல்றேனு எனக்குப் புரியலை! இதப்பாரு! உனக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை! உங்கப்பா தவிர, எந்த ஆண்பிள்ளை கூடவும் நீ பழகலை! அதனால ஆண் வர்க்கத்தைப் பற்றின மதிப்பீடு உங்கிட்ட இல்லை! பெண்ணாப் பிறந்துட்டா ஆண்வேணும் இந்த பூமில! அவன் காரணமா நிறையப் பிரச்னைகள் வரணும்! அதை சந்திக்கணும். சப்புனு இருந்தா வாழ்க்கை ருசிக்காது! காரசாரமா இருக்கணும்! இன்னிக்குக் காலைல எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும் பயங்கர சண்டை. ஆனா சாயந்தரம் வரும்போது மல்லிகைப் பூ வாங்கிட்டு வரும். அதுக்கும் மானமில்லை! எனக்கும் இல்லை! இதுதாண்டீ இங்கே தாம்பத்யம்!

    சௌம்யா கண்களைத் திறந்தாள்.

    எழுந்து தண்ணீர் குடித்து விட்டு வந்தாள்.

    படுத்தபோது, பெரிதாக ஒரு கேள்வி வந்து நின்றது.

    ‘நானும் கல்யாணம் செய்து கொள்ளலாமா?’

    2

    "ரமணி! உனக்கு போன்!"

    ரமணி போய் ரிசீவரை எடுத்தான்.

    ரமணி! நான் மேடப்பா பேசறேன்!

    சொல்லுங்க!

    உங்கம்மாவுக்கு தலை சுற்றல் அதிகமாகி கீழே விழுந்துட்டா, நான் வந்தப்ப மயக்கத்துல இருந்தா! ஆஸ்பத்திரில் சேர்த்திருக்கேன்!

    எந்த நர்ஸிங் ஹோம்?

    ரமணியின் குரலில் பதட்டம் இருந்தது.

    அந்த மேடப்பா சொல்ல, ரமணி உடனே லீவு எழுதி வைத்து விட்டுப் புறப்பட்டான்.

    பைக்கை எடுத்துக் கொண்டு நம்ஸிங் ஹோமை அடைந்து பரபரப்பாக உள்நோக்கி நடந்தான்.

    ரிசப்ஷனில் மேடப்பா!

    வா ரமணி! மூணாவது மாடில இருக்கா!

    அவன் அம்மா இருந்த அறையை அடைய, தலையில் கட்டோடு படுத்திருந்தாள் அம்மா.

    என்ன இது கட்டு? ரமணி பதறிப் போனான்.

    கீழே விழுந்ததுல சின்னதா அடி! பயப்பட எதுவும் இல்லை. சரியான நேரத்துல சேர்த்தாச்சு!

    அம்மா கண்விழித்தாள்.

    ரமணியைப் பார்த்ததும் அழுதாள்.

    அழாதேம்மா! உனக்கு ஒண்ணும் இல்லை நான்தான் வந்துட்டேனே! லீவு எழுதிக் குடுத்துட்டு வந்தாச்சு!

    நர்ஸ் வந்தாள்.

    இந்த மருந்துகளை வாங்கிட்டு வாங்க!

    ரமணி கைநீட்ட, குறுக்கிட்டு மேடப்பா வாங்கிக் கொண்டார்.

    நான் வாங்கிக்கறேன்!

    நீ அம்மா பக்கத்துல இரு! நான் போய் வாங்கிட்டு வர்றேன்! அவர் போனார்.

    அம்மா ரமணியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அவர் மட்டும் சரியான நேரத்துக்கு வரலைனா, நான் என்னாகியிருப்பேன்?

    காலைல நான் ஆபீசுக்குப் புறப்படும்போது, நீ எதுவும் எங்கிட்ட சொல்லலையேம்மா!

    அப்ப எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லைடா! அப்புறம் குளிக்கப் போனப்ப லேசா தலை சுத்தற மாதிரி இருந்தது!

    சரி விடு! நான்தான் லீவு போட்டுட்டேனே! இனிமே உனக்குப் பிரச்னை இல்லை!

    மேடப்பா மருந்துகளுடன் வந்தார். நர்ஸ் வந்தாள்.

    சார்! மூவாயிரம் ரூபா முன்பணம் கட்டணும்!

    நான் வந்ததும் க்ரெடிட்கார்ட் தந்துட்டேனே! சொல்லலையா ரிசப்ஷன்ல! நான் போய்ப் பேசிக்கறேன்!

    சற்று நேரத்தில் டாக்டர் வந்தார். பரிசோதித்தார்.

    ரமணி அவரிடம் வந்தான்.

    ஹைபர் டென்ஷன் அதிகமா இருக்கு! பெட் ரெஸ்ட்ல அவங்க இருக்கணும்! கிட்ட இருந்து பார்த்துக்கணும். மத்தபடி பயப்பட எதுவும் இல்லை! இங்கே நாலு நாள் இருக்கட்டும்!

    சரி டாக்டர்!

    ஒரு ஊசியைப் போட்டுவிட்டு டாக்டர் போனார்.

    நிறைய செலவாகுமே ரமணி!

    மேடப்பா அருகில் வந்தார்.

    ஜானகி! நீ புலம்பாதே! வேணும்னா செஞ்சுதான் ஆகணும்! அவன் சின்னப் பையன்! அவனுக்கு டென்ஷனை உண்டாக்காதே! கண்ணை மூடிட்டுப்படு!

    உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு?

    நாங்க பாத்துக்கறம்!

    அம்மா உறங்கிப் போனாள்.

    ரமணி! உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்!

    என்ன?

    வெளியே வா!

    மேடப்பா நடக்க, ரமணி பின் தொடர்ந்தான்.

    காரிடார் அமைதியாக இருந்தது அந்தக்காலை நேரத்தில்.

    உனக்கு வயசு இருபத்தி எட்டு ரமணி!

    ம்!

    ஜானகியால முடியலை! இனிமே உழைக்க அவ உடம்புல தெம்பில்லை! அதனால அவளுக்கு ஓய்வு தரணும்!

    நான் எல்லாம் செஞ்சு வச்சிட்டு ஆபீஸ் போறேன். அம்மாவை கிட்ட இருந்து கவனிச்சுக்க ஆளைப் போட்டுக்கலாம் பகல் நேரத்துல!

    எத்தனை காலம் கூலிக்காரங்க நிலைப்பாங்க?

    ஒரு ஆள் இல்லைனா, இன்னொண்ணு!

    நிரந்தரமா வர வழியிருக்கும்போது, என்ன பிரச்னை?

    நிரந்தரம்?

    ஆமாம்! உனக்குக் கல்யாணம் செஞ்சிட்டா, உன் மனைவி நிரந்தரம்தானே?

    ரமணி சிரித்தான்.

    ஏன் ரமணி சிரிக்கற?

    கல்யாணத்தைப் பற்றி நீங்க பேசாதீங்க! அதுவும் எங்கிட்ட!

    அவர் முகம் மாறியது.

    ரமணி அறை நோக்கி நடக்க,

    ரமணி நில்லு! நீ என்கிட்ட கோவப்பட இது நேரமில்லை

    எனக்கு யார் மேலயும் கோபமில்லை! கோபப்பட எனக்கு என்ன உரிமை உங்ககிட்ட?

    அப்படி சொல்லாதே ரமணி!

    இதப் பாருங்க சார்! கல்யாணப் பேச்சு இந்த வீட்ல வேண்டாம்! எனக்குப் பிடிக்கலை! ஆள் போட்டுக்கலாம். எங்கம்மாவை நான் பாத்துக்கறேன்!

    உள்ளே வந்து விட்டான்.

    அவன் முகம் சிவந்து கிடந்தது. படபடப்பாக இருந்தது

    ஒரு மணி நேரம் கழித்து மேடப்பா வந்தார். வரும்போது அவனுக்கான சாப்பாடு, பழங்கள், ரொட்டி, பிஸ்கட் என ஏராளமாக வாங்கி வந்திருந்தார்.

    அம்மா விழித்திருந்தாள்.

    நான் வர்றேன் ஜானகி! ரமணி ராத்திரி உன்கூடத்தான் இருப்பான். காலைல நான் வர்றேன். பயப்படாதே! உனக்கு ஒண்ணும் இல்லை!

    அவள் கூந்தலை மெல்லத் தடவிக் கொடுத்தார்.

    போய்விட்டார்.

    பாவம் அவர்! எத்தனை பாடுபடறார்? ரமணி பேசவில்லை!

    நீ சாப்பிடு கண்ணா!

    ரமணிக்கு பசித்தது. மேடப்பா வாங்கி வந்ததை சாப்பிடவும் பிடிக்கவில்லை! ஆனாலும் வேண்டாவெறுப்பாகச் சாப்பிட்டான்.

    நர்ஸ் வந்தாள். டெம்பரேச்சர் பார்த்தாள்.

    மருந்து கொடுத்தாள்.

    சாத்துக்குடி ஜூஸ் குடுக்கலாமா சிஸ்டர்?

    தாராளமா!

    ரமணி பிழியத் தொடங்கினான்.

    நீ எத்தனை நாள் லீவு ரமணி?

    ஒரு வாரம் எழுதிக்குடுத்திருக்கேன்மா! வேணும்னா நீட்டிக்கலாம். நீ கவலைப் படாதே! உனக்கு பூரணமா குணமாகாம நான் போக மாட்டேன்!

    நான் அதுக்குச் சொல்லலைப்பா!

    மறுநாள் காலை மேடப்பா டிபனுடன் வந்து விட்டார். காபி அடங்கிய ஃப்ளாஸ்க்!

    ரமணி! நீ குளிச்சிட்டியா?

    ஆச்சு!

    வீட்டுக்குப் போய் துணி தோச்சு, வேற ட்ரஸ் எடுத்துட்டு வரணுமா? டிபனை சாப்டுட்டுப்போ! நான் அம்மாவைப் பாத்துக்கறேன்!

    ரமணி அழுக்கு மூட்டைகளுடன் வெளியே வந்தான். மனசுக்குள் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருந்தது.

    இந்த சங்கடம் இன்று நேற்றல்ல!

    விவரம் தெரிந்த நாள் முதலே அடி வயிற்றில் நெளியும் சங்கடம்!

    புரியாத வயதில் குழப்பம்!

    புரிந்தபோது முதலில் ஆவேசம், அருவருப்பு, இயலாமை சகலமும்!

    இப்போதும் அது தொடர்கிறது.

    ஜீரணிக்க முடியவில்லை! ஆனால் வழியில்லை!

    வீட்டுக்கு வந்தான். துணிகளைத் தோய்த்துக் காயப்போட்டான்.

    வீட்டை சுத்தம் செய்தான்.

    உடைகளை மாற்றி, ஆஸ்பத்திரி- அவசியத்துக்காக அம்மாவுக்கும் வேறு உடைகளை எடுத்துக் கொண்டான்.

    புறப்பட்டான்.

    மேஜை மேல் சிரித்தபடி மேடப்பாவின் வண்ணப்படம்!

    அதை ஒருவித இறுக்கத்துடன் பார்த்தான். மேஜையில் ஓங்கிக் குத்தினான். கதவைப் பூட்டிக் கொண்டு புறப்பட்டான்.

    பைக்கை ஸ்டார்ட் செய்தபோது இடக்குப் பண்ணியது.

    நாலைந்து முறை முயன்று சோர்ந்தான்.

    அதைப் பூட்டி நிறுத்திவிட்டு, வெளியே வந்தான். ஆட்டோவைக் கைதட்டி அழைத்தான்.

    இடம் சொல்லிவிட்டு சாய்ந்து உட்கார்ந்தான்.

    ‘என் வாழ்க்கை இப்படித்தாண்டா ரமணி இருக்கும். அதை மாற்ற யாராலும் முடியாது!’

    அம்மாவின் குரல் திரும்பத் திரும்ப காதுக்குள். கண்களைத் திறந்தான்.

    ‘நீ ஒரு கல்யாணம் செஞ்சுகணும் ரமணி! அப்பத்தான் ஜானகிக்கு ரிலீஃப்’ ரமணிக்கு சிரிப்பு வந்தது.

    ‘என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?’

    ‘நிஜம் தெரிந்தால், எனக்குப் பெண் கொடுக்க யார் முன்வருவார்கள்?’

    ‘நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீயா சொல்கிறாய்?’

    ‘உன்னால்தானே எனக்கிந்த ஊனம்?’

    ஆட்டோ திடீர் பிரேக் போட, ரமணி ஏறத்தாழ டிரைவர் மேல் மோதி விட்டான்.

    என்னப்பா இது?

    ஆட்டோ நின்றது!

    என்னாச்சு டிரைவர்?

    ஏன் சார் கூச்சல் போடற? தூங்கிட்டா வந்தே? பாரு அங்கே!

    எதிரே மற்றொரு ஆட்டோ வந்து இதில் ஏறத்தாழ மோத, ட்ராஃபிக் நொடியில் ஜாம் ஆனது!

    இந்த டிரைவர் இறங்க, அந்த டிரைவர் இறங்க வார்த்தை தடித்தது.

    ரமணி கீழே இறங்கினான்.

    சரிப்பா! சண்டை வேண்டாம். வண்டியை எடு!

    "நான் எப்படி சார் எடுக்கறது?

    Enjoying the preview?
    Page 1 of 1