Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிரிக்காமல் விடமாட்டோம்!
சிரிக்காமல் விடமாட்டோம்!
சிரிக்காமல் விடமாட்டோம்!
Ebook124 pages1 hour

சிரிக்காமல் விடமாட்டோம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிறைய நிபந்தனைகள் இருக்கு!"
 "என்னல்லாம் நிபந்தனைகள்? சொல்லு!"
 "பெரிய படிப்பு படிச்சிருக்கணும். முடிஞ்சா அயல்நாடு போய் வந்திருந்தா ரொம்ப நல்லது!"
 "சரி!"
 "நிறைய பணம் இருக்கணும். சொந்தமா ஒரு கம்பெனி அல்லது பேக்டரி இருக்கணும்!"
 "அப்புறம்?"
 "பார்க்க ரொம்ப அழகா இருக்கணும். ஆனா என் பொண்ணை விட அழகு குறைச்சலாத்தான் இருக்கணும்!"
 "ம்! வேற ஏதாவது?"
 "பெத்தவங்க, கூடப் பிறந்தவங்கனு சொல்லும்படியா யாரும் இருக்கக் கூடாது! இருந்தாலும் அவங்ககிட்ட இந்தப் பையனுக்கு பாசம் இருக்கக் கூடாது!"
 "சரி!"
 "கல்யாணம் முடிஞ்சதும் எங்க வீட்டோட மாப்பிள்ளையா வந்திரணும்! நாங்க சொல்றதைக் கேட்டு நடக்கணும்!"
 "முடிஞ்சுதா"
 "இப்போதைக்கு முடிஞ்சு போச்சு! இன்னும் ஏதாவது இருந்தா அப்புறமா யோசிச்சு சொல்றோம்!"
 மாமா எழுந்தார்.
 "இதப்பாரக்கா! இத்தனைக்கும் பொருந்தி, உனக்கொரு மாப்பிள்ளை கிடைப்பான்னு எனக்குத் தோணலை"கிடைக்கலைனா, என் பொண்ணுக்குக் கல்யாணம் வேண்டாம். அவளை நான் பிரிஞ்சு இருக்க முடியாது. யமுனா செல்லமா வளர்ந்த குழந்தை!"
 "பொண்ணாப் பொறந்துட்டா, ஒரு நாள் புருஷன் வீட்டுக்குப் போய்த்தானே ஆகணும் வடிவு?"
 குறுக்கிட்ட அப்பாவை விஷப் பூச்சியைப் பார்ப்பதைப் போல பார்த்தாள் அம்மா.
 "உங்களை நான் கேட்டேனா?"
 "நான் அவளுக்கு அப்பாவாச்சே! சொல்ற உரிமை எனக்கு இல்லையா?"
 "அதை நான் முடிவு பண்ணணும். கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்க! தம்பி! நான் சொல்றதை மனசுல வச்சுகிட்டு நீ மாப்பிள்ளை பாரு! அவசரமில்லை யமுனாவுக்கு வயசு இருபத்தி நாலுதான் ஆச்சு! ரெண்டு வருஷங்கூட ஆனாலும் தப்பில்லை!"
 "சரிக்கா! நான் வர்றேன்!"
 மாமா போய் விட்டார். அம்மா உள்ளே வந்தாள்.
 "இதப் பாருங்க! கல்யாண விஷயம் பேசும் போது, நீங்க குறுக்கே வந்தா, எனக்குக் கெட்ட கோவம் வரும்!"
 "என்னை மாதிரி இன்னொரு அடிமை இந்த வீட்டுக்கு வேணுமா வடிவு?"
 "என்னது?"
 "ஒ... ஒண்ணுமில்லை!"
 தொலைபேசி அழைத்தது. வடிவு போய் எடுத்தாள்.
 "ஆமாம்! நான்தான் பேசறேன். இன்னிக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு லேடீஸ் க்ளப் மீட்டிங் வச்சிருக்கேன். சர்க்குலர் அனுப்பியாச்சு. வந்திருங்க"
 யமுனா எழுந்து வந்தாள், சோம்பல் முறித்தபடி.
 நேரம் காலை பத்தரை"மம்மி! விடிஞ்சாச்சா?"
 "வேணும்னா இன்னும் கொஞ்சம் தூங்கேன்! காபி தரச் சொல்றேன். ஒரு டோஸ் குடிச்சிட்டு, தூக்கம் போடு!"
 அம்மாவின் தோளில் தொங்கியபடி யமுனா உள்ளே போனாள்.
 அப்பா வெறுப்புடன் பார்த்துக் கொண்டு நின்றார்.
 வடிவு அவருக்கு சொந்த மாமா மகள். மாமா நிறைய சம்பாதித்து வைத்திருந்தார். நன்றிக் கடனுக்காக மாமா மகளை கட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்.
 அவள் கழுத்தில் தாலி கட்டிய அன்று, அடிமை சாசனத்தில் போட்ட கையெழுத்துதான்... இன்னும் மீள முடியவில்லை. ஆரம்ப காலத்தில் மாமாவின் மேல் வைத்த மரியாதைகளுக்காக சகித்துக் கொண்டது! போகப்போக ஒரு மாதிரி அடிமை ரத்தம் உடம்பில் ஊறி, நாக்கே எழும்பாமல் ஆகிவிட்டது. கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே யமுனா பிறந்து விட்டாள். யமுனாவின் மூன்றாவது வயதில் மாமா இறந்து போனார். அதன் பிறகு வடிவின் அல்லி தர்பார்தான்.
 அப்பா சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் ரெண்டு தலைமுறைக்கு இருந்ததால், அகங்காரம் தலை விரித்து ஆடியது.
 "நீங்க வேலைக்குப் போக வேண்டாம்!"
 "ஏன் வடிவு?"
 "நீங்க கொண்டு வர்ற சம்பளம் என்னோட ஒரு நாள் செலவுக்குப் போதாது! உங்க பணத்தை நம்பி அப்பா என்னைக் கட்டி வைக்கலை! புரியுதா?"
 வேலையை விட்டு விட்டு வீட்டில் நிரந்தர அடிமை சுகம்.
 தான் ஆண்பிள்ளை என்பதே தனக்கொரு மகள் இருக்கிறாள் என்பதைப் பார்க்கும் போதுதான் ஞாபகம் வரும்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223964360
சிரிக்காமல் விடமாட்டோம்!

Read more from Devibala

Related to சிரிக்காமல் விடமாட்டோம்!

Related ebooks

Reviews for சிரிக்காமல் விடமாட்டோம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிரிக்காமல் விடமாட்டோம்! - Devibala

    1

    "நிறைய நிபந்தனைகள் இருக்கு!"

    என்னல்லாம் நிபந்தனைகள்? சொல்லு!

    பெரிய படிப்பு படிச்சிருக்கணும். முடிஞ்சா அயல்நாடு போய் வந்திருந்தா ரொம்ப நல்லது!

    சரி!

    நிறைய பணம் இருக்கணும். சொந்தமா ஒரு கம்பெனி அல்லது பேக்டரி இருக்கணும்!

    அப்புறம்?

    பார்க்க ரொம்ப அழகா இருக்கணும். ஆனா என் பொண்ணை விட அழகு குறைச்சலாத்தான் இருக்கணும்!

    ம்! வேற ஏதாவது?

    பெத்தவங்க, கூடப் பிறந்தவங்கனு சொல்லும்படியா யாரும் இருக்கக் கூடாது! இருந்தாலும் அவங்ககிட்ட இந்தப் பையனுக்கு பாசம் இருக்கக் கூடாது!

    சரி!

    கல்யாணம் முடிஞ்சதும் எங்க வீட்டோட மாப்பிள்ளையா வந்திரணும்! நாங்க சொல்றதைக் கேட்டு நடக்கணும்!

    முடிஞ்சுதா

    இப்போதைக்கு முடிஞ்சு போச்சு! இன்னும் ஏதாவது இருந்தா அப்புறமா யோசிச்சு சொல்றோம்!

    மாமா எழுந்தார்.

    இதப்பாரக்கா! இத்தனைக்கும் பொருந்தி, உனக்கொரு மாப்பிள்ளை கிடைப்பான்னு எனக்குத் தோணலை

    கிடைக்கலைனா, என் பொண்ணுக்குக் கல்யாணம் வேண்டாம். அவளை நான் பிரிஞ்சு இருக்க முடியாது. யமுனா செல்லமா வளர்ந்த குழந்தை!

    பொண்ணாப் பொறந்துட்டா, ஒரு நாள் புருஷன் வீட்டுக்குப் போய்த்தானே ஆகணும் வடிவு?

    குறுக்கிட்ட அப்பாவை விஷப் பூச்சியைப் பார்ப்பதைப் போல பார்த்தாள் அம்மா.

    உங்களை நான் கேட்டேனா?

    நான் அவளுக்கு அப்பாவாச்சே! சொல்ற உரிமை எனக்கு இல்லையா?

    அதை நான் முடிவு பண்ணணும். கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்க! தம்பி! நான் சொல்றதை மனசுல வச்சுகிட்டு நீ மாப்பிள்ளை பாரு! அவசரமில்லை யமுனாவுக்கு வயசு இருபத்தி நாலுதான் ஆச்சு! ரெண்டு வருஷங்கூட ஆனாலும் தப்பில்லை!

    சரிக்கா! நான் வர்றேன்!

    மாமா போய் விட்டார். அம்மா உள்ளே வந்தாள்.

    இதப் பாருங்க! கல்யாண விஷயம் பேசும் போது, நீங்க குறுக்கே வந்தா, எனக்குக் கெட்ட கோவம் வரும்!

    என்னை மாதிரி இன்னொரு அடிமை இந்த வீட்டுக்கு வேணுமா வடிவு?

    என்னது?

    ஒ... ஒண்ணுமில்லை!

    தொலைபேசி அழைத்தது. வடிவு போய் எடுத்தாள்.

    ஆமாம்! நான்தான் பேசறேன். இன்னிக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு லேடீஸ் க்ளப் மீட்டிங் வச்சிருக்கேன். சர்க்குலர் அனுப்பியாச்சு. வந்திருங்க

    யமுனா எழுந்து வந்தாள், சோம்பல் முறித்தபடி.

    நேரம் காலை பத்தரை!

    மம்மி! விடிஞ்சாச்சா?

    வேணும்னா இன்னும் கொஞ்சம் தூங்கேன்! காபி தரச் சொல்றேன். ஒரு டோஸ் குடிச்சிட்டு, தூக்கம் போடு!

    அம்மாவின் தோளில் தொங்கியபடி யமுனா உள்ளே போனாள்.

    அப்பா வெறுப்புடன் பார்த்துக் கொண்டு நின்றார்.

    வடிவு அவருக்கு சொந்த மாமா மகள். மாமா நிறைய சம்பாதித்து வைத்திருந்தார். நன்றிக் கடனுக்காக மாமா மகளை கட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

    அவள் கழுத்தில் தாலி கட்டிய அன்று, அடிமை சாசனத்தில் போட்ட கையெழுத்துதான்... இன்னும் மீள முடியவில்லை. ஆரம்ப காலத்தில் மாமாவின் மேல் வைத்த மரியாதைகளுக்காக சகித்துக் கொண்டது! போகப்போக ஒரு மாதிரி அடிமை ரத்தம் உடம்பில் ஊறி, நாக்கே எழும்பாமல் ஆகிவிட்டது. கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே யமுனா பிறந்து விட்டாள். யமுனாவின் மூன்றாவது வயதில் மாமா இறந்து போனார். அதன் பிறகு வடிவின் அல்லி தர்பார்தான்.

    அப்பா சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் ரெண்டு தலைமுறைக்கு இருந்ததால், அகங்காரம் தலை விரித்து ஆடியது.

    நீங்க வேலைக்குப் போக வேண்டாம்!

    ஏன் வடிவு?

    நீங்க கொண்டு வர்ற சம்பளம் என்னோட ஒரு நாள் செலவுக்குப் போதாது! உங்க பணத்தை நம்பி அப்பா என்னைக் கட்டி வைக்கலை! புரியுதா?

    வேலையை விட்டு விட்டு வீட்டில் நிரந்தர அடிமை சுகம்.

    தான் ஆண்பிள்ளை என்பதே தனக்கொரு மகள் இருக்கிறாள் என்பதைப் பார்க்கும் போதுதான் ஞாபகம் வரும்!

    வடிவின் உச்சகட்ட அராஜகத்தையெல்லாம் தாங்கி ஒரு மாதிரி மரத்து விட்டது. மகளுக்குச் சுத்தமாக அப்பா மேலே மரியாதை கிடையாது!

    காரணம் அம்மா.

    ஒரு சமயம் வெறிவரும்!

    ஆத்தா, மகள் இரண்டு பேரையும் வெட்டிப் போட்டு விடலாமா என்று தோன்றும்.

    கையாலாகாதத்தனம் வந்து மோதும்.

    ‘யார்தான் அவளை அடக்குவது?’

    ‘இந்த வீட்டுக்கு வரும் ஒரு புதிய உறவு நிரந்தர உறவால்தான் ஏதாவது மாற்றம் வர வேண்டும்?’

    ‘யாரது?’

    ‘மாப்பிள்ளை! யமுனாவின் கணவன்தான் புதிய உறவு!’

    வடிவு புத்திசாலி!

    மற்றொரு அடிமைக்கு வலை வீசத் தொடங்கி விட்டாள் இப்போதே!

    தன்னைப் போலவே தன் மகளையும் தயாரித்து விட்டாள்.

    ‘ஆனால், படித்த, சொத்துள்ள, அழகான அனாதை மாப்பிள்ளையாக வர வேண்டும் என்ற நிபந்தனை!’

    ‘அதுவும் வீட்டோடு!’

    ‘நடக்குமா?’

    ‘நான் ஏமாந்தது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு!’

    ‘நன்றிக்கடன்!’

    ‘என்னிடம் எந்தத் திறமையும் இல்லை!’

    ‘அடிமையாகும் நிர்பந்தம்!’

    ‘ஆனால், எவனோ ஒருவனுக்கு - அதுவும் வெளிநபருக்கு என்ன அவளிடம் இங்கே வந்து அடிமையாக வாழ!’

    ‘ஒரு ஏழைக்கு பண நிர்பந்தம் வரலாம்!’

    ‘பணக்காரனுக்கு என்ன கட்டாயம்?’

    அப்பா யோசிக்கத் தொடங்கி விட்டார்.

    ‘ஆத்தா, மகள் இரண்டு பேரையும் அடக்க இதை விட்டால் சந்தர்ப்பமே இல்லை!’

    ‘எப்படி?’

    ‘நான் இதில் தலையிட்டாக வேண்டும்!’

    ‘வடிவு அனுமதிப்பாளா?’

    ‘வடிவுக்கு என் தலையீடு இருப்பது தெரியக் கூடாது! நான் திரைமறைவில் வேலை செய்ய வேண்டும்!’

    ‘நான் ஒருவனாக இயங்க முடியுமா?’

    ‘யாரை ஆலோசனை கேட்பது?’

    சட்டென சத்யாவின் ஞாபகம் வந்தது!

    இன்றைக்கு பிரதோஷம். சத்யா கோவிலுக்கு வருவாள் கட்டாயமாக. அவளைப் பார்த்துப் பேச வேண்டும்.

    2

    அப்பா (வீரராகவன்) கோயிலுக்குள் நுழைந்தார். பிரதோஷம் காரணமாக நல்ல கூட்டம் இருந்தது. தரிசனத்தை முடித்துவிட்டு தன் வழக்கமான ஈசான மூலை பிரகாரத்தில் போய் உட்கார்ந்தார் அப்பா.

    நேரம் மாலை ஏழு மணி! காற்றில் சன்னமான, மழையும் குளிரும் இருந்தது. சிலாஷ்டகம் ஒலிப் பெருக்கியில் கசிந்து கொண்டிருந்தது.

    ‘சத்யா வரவில்லையா இன்று?’

    சத்யா

    Enjoying the preview?
    Page 1 of 1