Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சொந்தக்காரங்க!
சொந்தக்காரங்க!
சொந்தக்காரங்க!
Ebook111 pages42 minutes

சொந்தக்காரங்க!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வழக்கம் போல ஆபீசுக்கு வந்தான்! வேலைகள் நிறைய இருந்த காரணமாக, தீபாவுடன் பேச முடியவில்லை! தீபாவும் அவனை அழைக்கவில்லை!
மாலை நாலுமணிக்கு தீபா போன் செய்தாள்!
“சொல்லு தீபா!”
“ஸாரி மனோ! அப்பாவுக்கு பீப்பி எக்கச்சக்கமா ஏறி, மயக்கம் போட்டு, காலைல நான் புறப்படற நேரத்துல அமளி துமளியாகி, அப்பாவைக் கொண்டு வந்து ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்!”
“மை காட்! இதை ஏன் நீ காலைல சொல்லலை?”
“இருந்த டென்ஷன்ல எதுவும் தோணலை மனோ!”
“இப்ப அப்பா எப்படி இருக்கார்?”
“ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு! எல்லா டெஸ்ட்டும் எடுத்திருக்காங்க! இந்த அளவுக்கு ரத்த அழுத்தம் இருந்தா, அது பல பெரிய விவகாரங்கள்ள கொண்டு போய் விடும்னு டாக்டர் எச்சரிக்கறார்.”
“எந்த ஆஸ்பிட்டல் தீபா?”
“காவேரி ஆஸ்பிட்டல்ல மனோ!”
“நான் இப்பவே புறப்பட்டு வர்றேன் தீபா!”
மனோ அவசரமாக புறப்பட்டான். ஏ.டி.எம்.மில் கொஞ்சம் பணமும் ட்ராப் செய்து கொண்டான்!
அரை மணியில் வர, தீபாவின் அம்மா, தங்கை நிகிலா எல்லாரும் இருந்தார்கள். அப்பா ஐ.சி.யு.வில்!
“வாங்க மனோ!அம்மாவுக்கு தீபா மனோவை அறிமுகப்படுத்த,
வணங்கினான்!
“உங்களை முதல் முதல்ல சந்திக்கறது ஆஸ்பத்திரில வச்சா? கஷ்டமா இருக்கு தம்பி!”
“பரவால்லைம்மா! அப்பா இப்ப எப்படி இருக்கார் தீபா?”
“மயக்கம் தெளியலை! இன்ஜெக்ஷன் போட்டிருக்காங்க! பீப்பி இப்பக் குறைஞ்சிருக்கு.”
“ஏன் இந்த திடீர் ஏற்றம்?”
“காரணம் நான்தான்.”
“என்ன சொல்ற?”
“கல்யாணப் பேச்சுத்தான். கைல பணமில்லை! நான் சொல்ற நிபந்தனைகளுக்கு பிள்ளை வீட்டார் கட்டுப்படணுமேனு கவலை! அப்பா கைல பணமில்லாத ஏக்கம், ஒரு குற்ற உணர்வா மாறியிருக்கு மனோ!”
“எதுக்கு? மகள் சம்பாதிக்கறா! மனைவி மெஸ் நடத்தறாங்க! அவருக்கு என்ன குறைச்சல்?”
“அப்படியில்லை மனோ! ஒரு மகன் இல்லை! பொண்ணுகளை நம்பி வாழ வேண்டியிருக்கே! என்ன எடுத்துச் சொன்னாலும் அவரோட தாழ்வு மனப்பான்மை போகலை! அது நோயை அதிமாக்குது!”
“நான் பேசறேன் தீபா!”
டாக்டர் வெளியே வந்தார்.
“மயக்கம் தெளிஞ்சாச்சு! பயமில்லை! நீங்க போய்ப் பாக்கலாம்! கூட்டம் போட வேண்டாம். டென்ஷன் படுத்தாம பேசுங்க! நம்பிக்கை ஊட்டுங்க! அவருக்கு அதுதான் டானிக்! நாளைக்கு ஒரு நாள் இருந்துட்டு, மறுநாள் போகலாம்!சரி டாக்டர்!”
“நீங்க மூணுபேரும் முதல்ல போங்க தீபா!”“சரி மனோ!”
மூவரும் உள்ளே வந்தார்கள். பீறிட்ட அழுகையை அம்மா அடக்கிக் கொண்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
சொந்தக்காரங்க!

Read more from தேவிபாலா

Related to சொந்தக்காரங்க!

Related ebooks

Reviews for சொந்தக்காரங்க!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சொந்தக்காரங்க! - தேவிபாலா

    1

    தீபா நாளைக்கு வேலையில் சேர வேண்டும்!

    குழந்தை பிறந்து, பிரசவ லீவெல்லாம் முடிந்து, மேலும் ஓரிரு மாதங்கள் சேர்த்து வைத்திருந்த விடுப்பும் கரைய, நாளைக்குக் கட்டாயம் வேலையில் சேர்ந்தாக வேண்டும்!

    தீபா ஒரு தனியார் நிறுவனத்தில் ஓரளவு நல்ல பதவியில் இருக்கும் பெண்! அவளைப் பற்றிய நீளமான ஒரு முன்கதை உங்களுக்குத் தெரிய வேண்டும்! அவளைப் போல கஷ்டப்படும் பெண்கள் இன்று தெருவுக்கு நாலு பேர் உண்டு!

    தீபா எம்.ஏ. பட்டதாரி. கம்ப்யூட்டர், ஆங்கிலப் புலமை கொண்ட அழகான - புத்திசாலிப் பெண்!

    பிறந்த வீட்டில் தீபா இரண்டாவது பெண்!

    அக்கா அதிகம் படிக்காமல், சுமாரான ஒரு இடத்தில் வாழ்க்கைப்பட்டு ஜீவனத்தை ஓட்டுகிறாள்!

    அப்பா பள்ளிக்கூட வாத்தியார். உடல் நலக் கோளாறில் கட்டாய ஓய்வு வாங்கி வீட்டில் இருப்பவர்.

    அம்மா சின்ன மெஸ் போல நடத்தி மாசம் பத்தாயிரம் வரை சம்பாதிக்கிறார். வாடகை வீடு.

    தீபாவின் தங்கை கல்லூரி மாணவி!

    தீபாவின் சம்பளத்தில்தான் இதுநாள் வரை குடும்பம் நடந்தது! கஷ்ட ஜீவனமில்லை! அப்பாவின் சேமிப்பு மொத்தமும் குழந்தைகளைப் படிக்க வைப்பதில், பெரியவளின் கல்யாணத்தில் கரைய, குடும்பத்தின் ஜீவநாடி தீபா என்றாகி விட்டது. ப்ளஸ் அம்மா நடத்தும் மெஸ்!

    தீபாவுக்கு இருபத்தைந்து வயது ஆக, கல்யாணப் பேச்சை எடுக்க, தீபா தீர்மானமாக மறுக்க, அவளது ஆபீசுக்கு வேலை நிமித்தமாக அடிக்கடி வருகைதரும் மனோவுக்கு அவளைப் பிடித்து விட்டது!

    அவளுக்கும் மனோகரைப் பிடிக்கும். ஒரு நல்ல உழைப்பாளி! வேகமான இளைஞன். முன்னேறத்துடிப்பவன்!

    மனோவுக்கு அப்பா இல்லை! விதவைத் தாய், மூன்று சகோதரிகள். இரண்டு பேருக்கு திருமணமாக, ஒருத்தி மட்டும் வீட்டில்!

    குடும்ப பாரத்தை சுமப்பதால் நிறைய சம்பாதித்தும் மனோவால் சமாளிக்க முடியவில்லை!

    உத்யோகம் பார்க்கும் பெண் மனைவியாக வந்தால் கணிசமாக பணம் கிடைக்குமே என்ற சுயநலமும் உண்டு!

    தீபா மேல் கண்விழ,

    மனோ அவளை விரும்புவதை அவளிடமே சொல்லி விட்டான்.

    மனதில் நினைப்பதை மறக்காமல் பளிச்சென போட்டு உடைக்கும் சுபாவக்காரன் மனோ!

    தீபா எதுவும் சொல்லவில்லை!

    ஒரு நாள் அவகாசம் விட்டு அவனிடம் பேசினாள்!

    கஷ்டம் மனோ! குடும்பம் என் வருமானத்தை நம்பி இருக்கு! கல்யாண வயசுல தங்கச்சி! விட்டுட்டு நான் வர முடியாது!

    சரி... என்னிக்கு முடியும்?

    தெரியலை!

    காலம் முழுக்க இப்பிடியே இருப்பீங்களா! அலை ஓஞ்சு குளிக்கணும்னா ஆகுமா சொல்லுங்க!

    சில பேர் விதி வேற மாதிரி இருக்கும் மனோ!

    தீபா! இப்ப உங்க கைக்கு என்ன வருது?

    நாப்பது வரும்!

    அதுல பாதியை உங்கம்மாகிட்ட குடுங்க! மீதி நம்ம குடும்பத்துக்கு ஆகட்டும்! உங்க தங்கச்சி வேலைக்குப் போனதும் வேற மாதிரி முடிவெடுக்கலாம்!

    தீபாவுக்கு அது தப்பாகப்படவில்லை!

    ‘தானும் வாழ வேண்டும்! அதே சமயம் மற்றவர் சங்கடங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் கொண்டவன் மனோ!

    இது தொடர்பாக வீட்டில் பேச,

    இதை விடக்கூடாதுடி! நிகிலா படிப்பு முடியப் போகுது! அவளுக்கு வேலை கிடைச்சிடும்! இப்ப வர்ற வருமானம் தாராளமா இருக்கு. நீ பாதி குடு! மெஸ்ஸை விரிவுபடுத்திட்டா, சுலபா சமாளிச்சிடலாம்! என்னங்க... பேசலாமா?

    பேசலாம் பாக்யம்! ஆனா கல்யாணம் நடத்த பணம் வேணுமே! நம்மகிட்ட இருக்கா?

    எங்கிட்ட எட்டு சவரன் இருக்கு! அவகிட்ட ஆறு இருக்கு. பதினாலு போதாதா? எளிமையா கல்யாணத்தை நடத்திடலாம்!

    மாப்ளை வீட்டார் அதுக்கு சம்மதிக்கணுமே!

    இவ பேசிப்பாக்கட்டும்!

    அம்மா! இத்தனை கஷ்டப்பட்டு ஒரு கல்யாணம் வேணுமா?

    அப்படி சொல்லாதேடீ! நாளைக்கு சம்பளம் உயரும்! பணமும் தாராளமா வரும். ஆனா வயசு போயிட்டா, வாழ்க்கை போயிடும்டி. சொல்றதைக் கேளு! ரொம்பக் கீழே இருக்கறவங்க, எங்கியாவது தலைதூக்கி மேலே வந்துர்றாங்க! ஆனா நடக்க வேண்டிய காலம் கடந்துட்டா, திரும்ப வராது!

    தீபா போன் செய்தாள்.

    லீவு போடுங்க மனோ. தனியாப் பேசணும்!

    சரி தீபா!

    இருவரும் காலையில் ஒரு உணவகத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.

    எல்லாம் சரி. எனக்கும் சம்மதம். ஆனா கல்யாணத்தை பெரிசா நடத்த முடியாது! ஒரு கோயில்ல வச்சு எளிமையா நடத்தி, சின்னதா ஒரு விருந்தும் கொடுக்கலாம். நூறு பேர் மொத்தமா வந்து சாப்பாடு போட்டு, தாலி, கூறைப்புடவை, பட்டுவேட்டி எல்லாம் வாங்கி, கோயில் செலவோட பார்த்தா, குறைஞ்சபட்சம் மூணு லட்ச ரூபாய் ஆகுது!

    ஓ.... பட்ஜெட் போட்டாச்சா?

    இந்த மூணை ஆளுக்கு பாதியா பிரிச்சுக்க சம்மதமா? எனக்கும் தன்மானம் இருக்கு! உங்களையே முழுசா செலவழிக்கச் சொல்லத் தயாரா இல்லை!

    மனோ பேசவில்லை!

    உங்க வீட்ல பேசுங்க! எந்த ஒரு டிமாண்டும் இல்லாம, இந்த மாதிரி நடந்தா, எனக்கு சம்மதம்!

    சரி! நான் பேசறேன்!

    அவங்க முழு மனசோட சம்மதிச்சா, எங்கப்பா, அம்மா முறையோட வந்து பேசுவாங்க!

    சரி! பேசறேன்!

    உங்க மூத்த சகோதரிகள் ரெண்டு பேருக்கும் நடந்தாச்சு! நமக்கு ஆளுக்கொரு தங்கச்சி! நாம உழைச்சு அவங்க ரெண்டு பேருக்கும் செய்யலாம். பெத்தவங்களால பிரச்னை இல்லை!

    சரி தீபா! இதுவரைக்கும் நான் பேசலை. இன்னிக்கி பேசறேன்!

    அன்று இரவு வீடு திரும்பி, குளித்து சாப்பிட வந்தான் மனோ. அவன் தங்கை பூஜா ஒரு கார்மெண்ட் சென்டரில் வேலை பார்க்கிறாள்!

    தம்பி! பூஜாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு! கோயில்ல வச்சு நம்ம அம்மணியை பார்த்தேன். பையன் வெளிநாட்ல இருக்கானாம்! பெரிய குடும்பம்! வசதியா இருக்காங்களாம். பாக்கலாமா?

    பெரிய குடும்பம்னா, நமக்கு செலவும் பெரிசா இருக்குமே!

    கடனை வாங்கித் தான் செய்யணும்!

    அம்மா! ஏற்கெனவே ரெண்டுபேர் கல்யாணம், வளைகாப்பு, ஆளுக்கொரு பிரசவம்னு ஏகப்பட்ட லோனும் போட்டு, கடனும் வாங்கியாச்சு. இவ படிப்புக்கும் செலவழிச்சாச்சு! இனி கடன் வாங்க எனக்கு சக்தி இல்லை! யாரும் தரவும் மாட்டாங்க! பூஜா கொண்டு வர்ற வருமானம் அடிபடும்!

    அதுக்காக உன் தங்கச்சியை இப்பிடியே நிறுத்தி வைப்பியா? அப்பா இல்லைனா, சகோதரன்தானே செய்யணும்!

    "நான்தானேமா எல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1