Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முகம் பார்க்கும் நிலவு
முகம் பார்க்கும் நிலவு
முகம் பார்க்கும் நிலவு
Ebook69 pages22 minutes

முகம் பார்க்கும் நிலவு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“என்னய்யா இது?”
“அதானே சார்! கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் குதிரையைக் காணலை!”
“அந்த ட்ரெயினரைக் கூப்பிடுய்யா.”
குதிரையின் சொந்தக்காரன் வந்தான்.
“என்னய்யா இது?”
“சார்... அது முரட்டுக் குதிரை!”
“அதனால?”
“ஏடா கூடமா இவர் பிடரில தட்டினதை நான் பார்த்தேன். கன்னாபின்னான்னு வேகம் எடுத்திருக்கு!”
“அதை நிறுத்த முடியாதா?”
“முடியும். அதுக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்துல தட்டணும்.”
“அதை ஏன்யா நீ சொல்லித் தரலை?”
“குதிரை ரொம்ப தூரம் ஓட வேண்டாம்னு தானே நீங்க சொன்னீங்க?”
“டூப் போடலாம்னு சந்தோஷ்கிட்ட நான் அப்பவே சொன்னேன். கேக்கலை.”
ஈஸ்வர் டென்ஷன் ஆகிவிட்டான்.
“இருபது நிமிஷம் ஆகுது டைரக்டர். என் சிஸ்டர் இன்னும் வரலை!”
“அட இருங்க சார். உங்களைவிட எங்களுக்குக் கவலை அதிகம். அவங்களை வெச்சு நிறைய எடுக்க வேண்டியது இருக்கு!அவர்கள் போய் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஆகிவிட்டன.
இணை இயக்குநர் நெருங்கினான்.
“சார்!”
“சொல்லுய்யா!”
“நம்ம யூனிட் வண்டிய எடுத்துட்டு கொஞ்ச தூரம் போய்ப் பார்க்கலாமா?”
“சரி! செய்!”
யூனிட் வாகனத்தோடு இணை இயக்குநரும் இன்னும் இரு உதவியாளர்களும் புறப்பட்டார்கள்.
மாருதி ஓடத் தொடங்கியது.
அத்தனை பேரும் முள்மேல் இருந்தார்கள்.
நாலு கிலோ மீட்டர் தூரத்துக்கு வண்டி ஓடியது - கடற்கரையை ஒட்டியே.
“சார் அங்கே நிக்குது நம்ம குதிரை!”
“ஆமாய்யா... வெள்ளைக் குதிரை!”
வாகனம் அதனருகில் போய் நின்றது. குதிரை மெல்ல நடந்து கொண்டிருந்தது.
“குதிரை மட்டும்தான்யா இருக்கு. அவங்க ரெண்டு பேரும் எங்கே?”
ட்ரெய்னர் குதிரையைப் பெற்றுக் கொள்ள, அந்த இடத்தில் ஒரு உதவியாளனை விட்டுவிட்டு துணை இயக்குநர் பதறப் பதற ஸ்பாட்டுக்கு வந்தான்.
“என்னய்யா?”
“குதிரை இருக்கு சார். ஆர்ட்டிஸ்ட் ரெண்டு பேரையும் காணலை!”
“என்னது?” ஈஸ்வர் தீயை மிதித்ததைப் போல் கூச்சலிட்டான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
முகம் பார்க்கும் நிலவு

Read more from தேவிபாலா

Related to முகம் பார்க்கும் நிலவு

Related ebooks

Reviews for முகம் பார்க்கும் நிலவு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முகம் பார்க்கும் நிலவு - தேவிபாலா

    1

    சுனிதா கொஞ்சம் ஆத்திரத்துடன் நிமிர்ந்தாள்.

    என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நான் எந்திரமா? எனக்கும் மனித உணர்வுகள் இருக்காதா? நம்பர் ஒன் நடிகையாக இருந்ததில் பெருமைப்பட்டேன். இப்ப நொந்து போய்க் கிடக்கேன்.

    அண்ணன் ஈஸ்வர் அருகில் வந்தான்.

    கோபப்படாதே சுனி! உன் நடிப்பு தனி என்றாலும் உன் அழகுக்காக விளம்பரத்துல உன்னை உபயோகப் படுத்த நாலு பேர் வரத்தான் செய்வாங்க. எல்லாம் கண்ணியமான விளம்பரம். ஒத்துக்கறதுல என்ன தப்பு? வா! வெளியே வா!

    சுனி எரிச்சலுடன் எழுந்தாள்.

    சிரிச்சிட்டே வா. நீ நடிகையானதே இந்த முத்துப் பல் சிரிப்புலதான்!

    சுனிதா வெளிப்பட்டாள்.

    ஒரு பிரபல பட்டுப் புடவை நிறுவனம் வந்திருந்தது.

    அந்த வருடத்திய தீபாவளி பட்டுச் சேலை விளம்பரத்துக்கு சுனிதா நடித்துத் தர வேண்டும் என்றது.

    அவள் கேட்ட சம்பளத்தைத் தரத் தயாராக இருந்தது.

    சம்பளம் ஈஸ்வர்தான் பேசினான். அவர்களே பயப்படும் அளவுக்கு மிகப் பெரிய தொகை.

    அவர்கள் ‘செக்’ எழுதித் தந்துவிட்டு, ஷூட்டிங் தேதி வாங்கிக் கொண்டு சென்றார்கள்.

    அடுத்தது ஒரு ஷாம்புக் கம்பெனி.

    சுனிதா நம்பர் ஒன் நடிகை ஆகி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. அவளை பத்திரிகை, டீவி என்று சகல மீடியாக்களிலும் பிரமாதமாக விளம்பரப்படுத்தி விட்டான் ஈஸ்வர்.

    இப்போது அவளை வைத்துப் பணம் பண்ணிக் கொண்டிருக்கிறான்.

    முக்கியமான மூன்று நிறுவனங்களுக்குத் தேதி தந்துவிட்டு சுனிதா உள்ளே வந்தாள்.

    போதும் அண்ணா!

    அதை நான் சொல்லணும். எதுக்காக நான் இத்தனை கஷ்டப்படறேன்? நிறைய பணம் சேர்த்து உனக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டாமா?

    அவள் பேசவில்லை.

    தாய், தகப்பனை இழந்து வளர்ந்த அவளை இந்த அளவுக்கு ஆளாக்கியது ஈஸ்வர்தான். இன்னும் கல்யாணம் கூடச் செய்து கொள்ளவில்லை. பத்து வயது மூத்தவன் வேறு.

    அவனை எதிர்க்கவும் முடியவில்லை.

    நம்பர் ஒன் நடிகை ஆனமுதல் அவளை வைத்துப் பணம் பண்ணுவதில் குறியாக இருக்கிறான்.

    ‘யாருக்காக?’

    ‘என்னை வாழ வைக்கத்தானே?’

    சரி சுனி! நீ போய்ப்படு! நாளைக்கு அந்த ‘டீவி’ விளம்பரத்துல நீ நடிக்கறே! அதுக்கான ஷூட்டிங் காலைல ஏழு மணிக்கு. ப்ரொடக்ஷன் வேன் அஞ்சரைக்கு வந்துடும்.

    சரி அண்ணா!

    அவள் உறங்கப் போய்விட்டாள்.

    காலை நாலுக்கு அலாரம் அடித்தது. ஈஸ்வர் எழுந்து குளித்துவிட்டான். நாலரைக்கு அவளை எழுப்பினான்.

    நேரமாச்சு சுனிதா. எழுந்து குளிம்மா!

    மேக்கப் அங்கே போய்த்தானே?

    ஆமாம். காஸ்ட்யூம் அவங்க ரெடியா செஞ்சிருப்பாங்க!

    சுனிதா குளித்துவிட்டு வந்தாள். ஷாம்புவில் கழுவிய கூந்தலை ட்ரையர் கொண்டு உலர்த்தினாள்.

    மெலிதாக தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.

    ஐந்தரைக்கு அந்த மாருதி சுசுகி வந்து நின்றது வாசலில்.

    போலாமா சுனி?

    சரிண்ணா!

    இருவரும் ஏறிக் கொள்ள, கார் கோல்டன் பீச் நோக்கி ஓடத் தொடங்கியது.

    ஈஸ்வர் டிரைவரிடம் பேசித் தகவல் சேகரித்துக் கொண்டிருந்தான்.

    முக்கால் மணி நேரத்தில் கோல்டன் பீச்சுக்குள் வண்டி நுழைந்தது.

    விடியத் தொடங்கியிருந்த நேரம். அந்த இயற்கை சூழலை... கருங்கடலை - மெலிதான சிவப்புச் சூரியனை காமிரா அவசரமாக விழுங்கிக் கொண்டிருந்தது.

    சுனிதா வரவேற்கப்பட்டு அவளுக்காக ஒதுக்கப்பட்ட காட்டேஜிக்கு அழைத்து வரப்பட்டாள்.

    "இப்ப டைரக்டர்

    Enjoying the preview?
    Page 1 of 1