Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பனித்திரை
பனித்திரை
பனித்திரை
Ebook118 pages40 minutes

பனித்திரை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்திரா சீக்கிரமே எழுந்து குளித்து தயாராகிவிட்டாள்.
“சீக்கிரம் போகணுமாடி?”
“ஆமாம்மா! நிறைய வேலை இருக்கு. போற வழியில கோவில்ல சாமி கும்பிட்டுட்டு, அப்படியே ‘ஆபீசு’க்குப் போயிடுவேன்.”
சந்திராவுக்கு பக்தி அதிகம்.
அந்தக் குடும்பத்தில் எல்லாருக்குமே இறை நம்பிக்கை உண்டு. காண்டீபன், சாவித்திரி இரண்டு பேருக்கும் வழிபாட்டு ஆர்வம் அதிகம். அதனால்தான் பெண்களுக்கும்...
ரத்தத்தில் ஊறிய சங்கதி.
“சாப்பிட்டு போடி.”
“இல்லேம்மா... நேரமில்ல. ‘ஆபீஸ் கேன்டீன்’ல பார்த்துக்கிறேன்.”
சந்திரா ‘டூ வீலரில்’ தான் போவாள்.
“சந்திரா! நானும் புறப்பட்டாச்சு. ‘கம்பெனி கார்’ வரும். உன்னை ‘டிராப் பண்ணிடட்டா?” - அப்பா கேட்க,
“இல்லப்பா! உங்க கம்பெனி வண்டியெல்லாம் எனக்கு சரிப்படாது. நான் என்னை மட்டுமே நம்புறவ. புரியதா...?”
“ஆம்பளை மாதிரி பேசுவா.”
“அம்மா! உனக்கு பையன் இல்லாத குறையைத் தீர்க்க வந்தவ நான்தான்.”
“சந்திரா... எங்க ‘கம்பெனி’யில ஒரு நல்ல வேலை வருது. நீ ‘அப்ளை’ பண்ணுறியா? நல்ல சம்பளம்.“இல்லேப்பா.”
“ஏன்ம்மா! முதலாளியை வந்து பாரேன்.”
“உங்க முதலாளியை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. ஒரே இடத்துல அப்பா- மகள் வேலை பார்த்தா, பல பிரச்சினைகள் வரும்ப்பா. வேணாம்.”
“என்னடீ பிரச்சினை... உனக்கு பாதுகாப்புதானே?”
“ஏன்... இப்ப எனக்கு பாதுகாப்பு இல்லையா என்ன? அது வேண்டாம்மா.”
பானு குறுக்கிட்டாள்.
“அப்பா! இந்த ஏப்ரல்ல என் ‘டிகிரி படிப்பு முடிஞ்சிடும். எனக்கு உங்க கம்பெனியில வேலை வாங்கிக் குடுங்க.”
அதற்குள் சந்திரா புறப்பட்டாள்.
இருபது நிமிடங்களில் கோவிலை அடைந்துவிட்டாள்.
பழக்கப்பட்ட கோவில்தான்.
அர்ச்சனைக் கூடையைக் கொண்டு வந்து சந்திரா தர,
பேர், நட்சத்திரம் கேட்டு குருக்கள் ஆரம்பிக்க,
வாசலில் கார் வந்து நிற்க,
ஒரு பெரிய மனிதன் தன் பரிவாரங்களுடன் இறங்க,
குருக்கள் இவளை விட்டுவிட்டு அங்கே ஓடினார்.
கூழைக் கும்பிடு போட்டு, அவர்கள் கொண்டு வந்த அர்ச்சனைப் பொருட்கள்- மாலைகளை வாங்கிக்கொண்டு, மந்திரம் சொன்னபடி உள்ளே போக... அந்தப் பெரிய மனிதரும் ‘ஸ்டைலாக நடந்து வர,
அவருடன் ஓர் இளைஞன் வர“குருக்களே... நிறுத்துங்க.” சந்திரா கூச்சலிட,
‘படக்’கென அனைவரும் திரும்ப,
“முதல்ல வந்தவ நான். என் அர்ச்சனையைத் தொடங்கிட்டு, அதைப் பாதியில் நிறுத்திட்டு ஓடினா என்ன அர்த்தம்?”
குருக்கள் அருகில் வந்தார்.
“மெதுவா பேசும்மா! அவர் பெரிய மனிதர். ‘பிசி’யா இருப்பார். அவரை முதல்ல அனுப்பிட்டு உங்கிட்ட வர்றேன்.”
“இது தப்பு! ஆண்டவன் சந்நதியில் பெரியவங்க- சின்னவங்கன்னு பாகுபாடெல்லாம் கிடையாது. இங்கே எல்லாருமே ‘பிசி’தான். நான் மட்டும் சும்மாவா இருக்கேன்?”
கூட்டம் கூடிவிட்டது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
பனித்திரை

Read more from தேவிபாலா

Related to பனித்திரை

Related ebooks

Reviews for பனித்திரை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பனித்திரை - தேவிபாலா

    1

    கதைக்குள் போவதற்கு முன்னால் முக்கிய கதாபாத்திரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    காரணம், கதையை எழுதப் போவதே இந்தக் கதாப் பாத்திரங்கள் தான்!

    குடும்பத் தலைவர் காண்டீபன். வயது ஐம்பத்தி நாலு. பெரிய தனியார் நிறுவனத்தின் அதிபர் ராஜதுரைக்கு வலது கை. அவர் இல்லாமல் இவர் மூச்சுகூட விடமாட்டார்.

    ராஜதுரையைப் பிறகு பார்க்கலாம்!

    இப்போது காண்டீபனின் குடும்பம்.

    மனைவி சாவித்திரி. இவள் புராண காலத்து பெண்மணியேதான்!

    சத்யவான் உயிரைப் பிடித்து நிறுத்திய சாவித்திரி மாதிரி புருஷன் மீது அப்படியொரு பக்தி. அவர் சொன்னால் அது வேதம். அதைவிட்டு அங்குலம்கூட பிசகமாட்டாள். அத்தனை பதிபக்தி.

    மூன்றும் பெண்கள்.

    ‘ஒரு மகன் வேண்டும்’ என்று ஆசைப்பட்டு, அது பலிக்கவே இல்லை!

    மறுபடியும் கர்ப்பமாகுமா... மகன் பிறப்பானா?’ என்ற சபலம்! ‘நாலாவதும் பெண்ணாகப் பிறந்துவிட்டால்?’ என்று கதிகலங்கி நிறுத்திவிட்டார்கள்.

    மூத்தவளுக்கு முப்பது வயது. பெயர் இந்திரா. இருபது வயதில் சாவித்திரி பெற்ற பெண். அழகானவள், புத்திசாலி. ஆனால், பிடிவாதக்காரி! கறாரான பேர்வழி. அவள் நினைத்தது நடக்க வேண்டும். கோடு போட்டு வாழ்பவள். ‘மிலிட்டரி’த்தனம்.

    எதிலும், எப்போதும் கண்டிப்பு. காரணம், பால பருவம் முதலே அவள் படித்த பள்ளிக்கூடம் அப்படி! தொடர்ந்து ஏற்பட்ட பழக்க வழக்கங்கள் அவளை கடுமையாக மாற்றிவிட்டது. சுத்தம், நேரப் பராமரிப்பு, உணவு- உடை என எல்லாச் சங்கதிகளிலும் கட்டுப்பாடு.

    அப்பா- அம்மா, இரண்டு தங்கைகளை ஆட்டி வைக்கும், பெண் வடிவ ஆண்! இவளைப் பார்த்தாலே குடும்பம் நடுநடுங்கும்.

    அப்பாவுக்கு இவளை ரொம்பவும் பிடிக்கும். மூத்த மகள் என்பதால் செல்லம் அதிகம்.

    அம்மாதான் எரிச்சல் அடைவாள். தங்கைகள் இருவரும் இவள் ஏமாந்தால் போதுமென்று விடுதலைக்காக காத்திருப்பவர்கள்.

    இந்திரா, முதுகலை பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் அதிகாரி.

    கணவன் சேதுவுக்கு ‘ஐ.டி. கம்பெனியில் முக்கியப் பதவி. நாலு வயதில் ஆண் குழந்தை வருண்.

    இந்திராவுக்கு வரன் பார்ப்பதற்குள் நொந்து நூலாகிவிட்டார்கள், பெற்றவர்கள்.

    அவளே ஆயிரம் நிபந்தனைகள் போட்டு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட்டாள்.

    சேதுவுக்கு அப்பா-அம்மா இல்லை. அக்கா, அத்தான்தான் முக்கிய உறவு. ஒரு தங்கை. அவள் வெளிநாட்டில். அக்கா குடும்பம் ஐதராபாத்தில். கல்யாணத்துக்கு முன்னால் சேது, நண்பர்களுடன் ‘பேச்சிலர் மேன்ஷனில்’ தங்கி இருந்தவன்.

    கல்யாணம் முடிவானதும் தனிக்குடித்தனம் என்று தெரிவித்துவிட்டார்கள். வீடு பார்க்க வேண்டும்.

    இந்திரா தனக்குத் தோதாக, தன் ‘ஆபீசு’க்குப் பக்கத்தில் இருக்கும்படி வீட்டைத் தேர்ந்தெடுத்தாள். இரண்டு ‘பெட்ரூம்’. முதல் மாடி, சகல வசதிகளுடன்...!

    வீட்டுக்கு என்னனென்ன தேவை என சேதுவுக்கு பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டாள்.

    வாடகை இருபதாயிரம். முன்பணம் 2 லட்சம். வீட்டுக்குத் தேவையான சகல பொருட்களும் சேர்த்து நாலு லட்சம் ஆனது. சேதுவின் சேமிப்பு கரையத் தொடங்கிவிட்டது.

    காண்டீபன் தடபுடலாக செலவழித்து ஊரே மெச்சும்படி கல்யாணத்தை நடத்தினார். ராஜதுரை முதலாளியாக இருந்து சகல வசதிகளையும் செய்து, 2 லட்சம் ரூபாயைப் பரிசாகவும் அளித்தார்.

    இந்திராவின் ‘மிலிட்டரி தர்பார் தொடங்கிவிட்டது.

    சகலத்திலும் கட்டுப்பாடு.

    சேதுவுக்கு பூசின மாதிரி உடல்வாகு. தொப்பை வெளியே தெரியும்.

    அவனுக்குள் கடுமையான உணவுக் கட்டுப்பாடு விதித்து மூன்றே மாதங்களில் பத்து கிலோ எடையைக் குறைத்துவிட்டாள், இந்திரா.

    தொப்பை தொலைந்து போனது!

    இப்பத்தான் அழகா இருக்கீங்க!

    வாய்க்கு ருசியான காரசார உணவு- ‘சாட் அயிட்டங்கள்’ ‘ஐஸ்’ வகைகள் என்றால் சேதுவுக்கு உயிர்.

    அத்தனைக்கும் ஆப்பு.

    பிடிக்காத சங்கதி...

    ஓட்டமும், உடற்பயிற்சியும்!

    அதைச் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.

    இரவு 11 மணி வரை ‘டி.வி.’ பார்ப்பான். இப்போது பத்து மணிக்கெல்லாம் படுக்கைக்குப் போயாக வேண்டும்.

    காலை ஐந்து மணிக்கு மேல் உறங்க விடமாட்டாள்.

    வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல்.

    நேர்த்தியான முழுக்கை சட்டை என உடைகள்.

    எந்த நேரமும் கண்ணியமான தோற்றம்.

    இதெல்லாம் வெறும் மாதிரிதான்!

    இன்னும் இதுபோல ஏராளம் இருக்கிறது.

    சேதுவைக் கொடுமைப்படுத்தினாள். அவன் நொந்து நொறுங்கி, மாமனார்- மாமியாரிடம் புகார் செய்ய...

    மாப்பிளை... நாங்க இப்பத்தான் தப்பிச்சிருக்கோம். நீங்க மாட்டிக்கிட்டீங்க! அவளை அடக்க உங்களால முடியலையா? என பரிதாபமாக துக்கம் விசாரித்தார்கள்.

    அத்தான்... காலையில சீக்கிரம் ஆபீசுக்குப் போகணும்ன்னு நைசா இங்கே வந்துடுங்க. எங்க அம்மா பிரமாதமா அசைவம் சமைப்பாங்க. ஒரு பிடி பிடிக்கலாம்.

    அடுத்த தங்கை சந்திரா சொல்ல,

    அய்யோ... அசைவமா? இந்திரா கொலையே பண்ணிடுவா.

    நீங்க அடிமை ஆகியாச்சு. இது ஆயுள் தண்டனை.

    கல்யாணமான ஆறு மாதங்களில் இந்திரா, பிள்ளை உண்டானாள்.

    நல்ல ‘லேடி’ டாக்டரை தேடிப் பிடித்து போனாள்.

    பலவீனமும் உடலில் இருக்க...

    ‘ஓய்வு வேண்டும்’ என்று டாக்டர் கட்டாயப்படுத்த, நீண்ட விடுமுறை எடுத்தாள்.

    பிறந்த வீட்டுக்கு அவள் செல்லவில்லை.

    அம்மாவை தன் வீட்டுக்கு வரவழைத்தாள்.

    எனக்கு அங்கே குடும்பம் இருக்குடி!

    சந்திராவுக்கு வயசு 24, பானுவுக்கு 21. ரெண்டு பேரும் குடும்பத்தைப் பார்த்துக்கட்டும். பிரசவம் வரைக்கும் நீ என்கூட இரு. அப்புறமா போகலாம்.

    இருக்கும் இடத்தில் சாவித்திரிக்கு சுதந்திரம் இல்லை.

    அவளையும் இந்திரா படுத்தி எடுத்தாள். ஆண் குழந்தை பிறந்து எடுத்து வந்த பிறகு, அம்மாவுக்கு அவள் கொடுத்த உத்தரவுகளில் வெறுத்துப் போனாள்.

    நாலைந்து மாதங்கள் ஆகிவிட, நீ எப்படி வேலைக்குப் போவே?

    "நான் போகப் போறதில்ல. அவர் கை நிறைய சம்பாதிக்கிறார். ‘பட்ஜெட்’ போட்டுப் பாத்துட்டேன். சுலபமா சமாளிக்கலாம்.

    குழந்தையை வேற யார்கிட்டேயும் விட எனக்கு மனசில்லை."

    நல்ல வேலையாச்சே இந்திரா! விடணுமா...?- சேது கேட்க,

    வேற வேலையை அப்புறமா தேடிக்கலாம். படிப்பும், வயசும் இருக்கு. இப்ப குழந்தை முக்கியம். ஆரம்பக் கட்டத்துல அவனை நல்லவிதமா ‘ஷேப்’ பண்ணி விடணும். யார் கையிலும் தரமாட்டேன்.

    கணவன் மவுனமாகிவிட்டான்.

    ‘இவளை மாற்ற முடியாது.’

    ‘மற்றவர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1