Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devathai Neril Vandhal
Devathai Neril Vandhal
Devathai Neril Vandhal
Ebook161 pages1 hour

Devathai Neril Vandhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெளிநாட்டில் வேலை பார்க்கும் சக்திவேலுக்கு அவளைப் போலவே படித்து சென்னையில் வேலையில் இருக்கும் சவீதாவை திருமணம் பேசுகின்றனர் பெற்றோர்...

வெளிநாட்டில் வேலையை விட்டுவிட்டு இந்தியாவில் வேலை பார்க்கப் போவதாக சவீதாவிடம் சொல்கிறான்.. வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று கனவோடு இருக்கும் சவீதா அதை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள்.. அவர்கள் கல்யாணம் நடந்ததா...? கதையை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

Languageதமிழ்
Release dateNov 12, 2022
ISBN6580153909213
Devathai Neril Vandhal

Read more from Ajudhya Kanthan

Related to Devathai Neril Vandhal

Related ebooks

Reviews for Devathai Neril Vandhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devathai Neril Vandhal - Ajudhya Kanthan

    http://www.pustaka.co.in

    தேவதை நேரில் வந்தாள்

    Devathai Neril Vandhal

    Author :

    அஜூத்யா காந்தன்

    Ajudhya Kanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ajudhya-kanthan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 1

    தெற்கு புளோரிடாவில் முக்கியமான நகரமான மியாமி இன்டர்நேஷனல் ஏர்போர்ட். அங்குள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் சக்திவேல், மிகச் அவசரமாக ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தான். அடுத்த அரை மணியில் அவனுக்கு இந்தியா செல்லும் விமானம். அரக்கப்பரக்க உள்ளே நுழைந்தவன், சுங்கச் சோதனைகளை முடித்து விட்டு, விமானத்திற்குள் ஏறி அமர்ந்தான். உஷ், அப்பாடா… என்று பெருமூச்சு அவனுள் இருந்து எழுந்தது.

    பேச்சிலும் நாகரிகத்திலும் எவ்வளவு தான் அயல்நாட்டுக்காரராக மாற முயற்சித்தாலும், சில சமயங்களில் நம்மை மீறி நமது வேர் எது என்பது வெளிப்பட்டு விடுகிறது. அவனது உடைக்கும், அவனது பேச்சிற்கும் சம்பந்தமில்லாததை கவனித்த, அவனை அடுத்து அமர்ந்திருந்த அமெரிக்கர், அவனை ஒரு தடவை திரும்பிப் பார்த்து விட்டு, தனது கையிலுள்ள லேப்டாப்பை பார்க்க ஆரம்பித்தார்.

    நேற்று இரவில் இருந்து எத்தனை டென்ஷன், திடீரென்று "அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. ஐசியூவில் சேர்த்திருக்கிறோம், உடனே கிளம்பி வா.. என்று அப்பா போனில் கூறிய போது, ஒரு நிமிடம் அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை..

    என்ன விஷயம்..? என்று கேட்டதற்கு,

    நீ நேரில் வா. பேசிக் கொள்ளலாம்... என்று போனை வைத்து விட்டார். மிகவும் முக்கியமான விஷயமாக இல்லாவிடில் அவ்வாறு கூறுபவர் இல்லையென்பதால், அவனும் அடித்துப்பிடித்து ஏற்பாடு செய்து, இதோ கிளம்பி இருக்கிறான்..

    ‘ஒரு மாதத்திற்கு முன்னால் தான், அவனது நிச்சயத்திற்கு சென்னை சென்று விட்டு திரும்பி இருந்தான். அதற்குள் இன்னொரு தடவை செல்ல வேண்டுமே..? பணம் அதிக அளவில் செலவாகுமே,’ என்று யோசித்தாலும், அம்மாவின் உடல்நிலை என்ற சொல், எல்லாவற்றையும் பின் தள்ளி வைத்துவிட்டு, அவனைக் கிளம்ப வைத்தது.

    சக்திவேல், அம்மா, அப்பா, ஒரே தங்கை சாந்தினி. நடுத்தர குடும்பம்.. அம்மா அப்பா இருவருமே அரசு ஊழியர்கள். வேலையும் படிப்பு மட்டுமே சொத்து, என்று நம்பும் பெற்றோருக்குப் பிறந்த பையன். அப்படி சொல்லிச் சொல்லியே வளர்க்கப் பட்டதால், படித்து வெளிநாட்டில் உத்தியோகம். தங்கை இப்பொழுதுதான் கல்லூரி மூன்றாம் ஆண்டு.

    மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். அவனுக்கு ஏற்ற பெண்ணாகப் பார்க்க வேண்டுமென்று தரகரிடம் சொல்லி, எல்லா பொருத்தங்களும் பார்த்து தேடிய பெண் சவீதா. சக்திவேலை பொறுத்தளவில் நடுத்தர குடும்பத்திற்கு உரிய, பெற்றோர் சொல் படியே கேட்டு வளர்ந்ததால் என்னவோ, பெண்ணைப் பற்றிய எந்த விதமான தனித்த அபிப்பிராயமும் இல்லை.

    தன்னைப் போலவே படித்து வெளிநாட்டில் வேலை பார்க்கும் தகுதி ஒன்று இருந்தால் போதும் என்பது மட்டும் அவனது கண்டிஷனாக இருந்தது. மற்றவையெல்லாம் பெற்றோர் விருப்பப்படி விட்டு விட்டான்.

    சவீதா.. வீட்டிற்கு ஒற்றை பெண். அம்மா ஹவுஸ் வைஃப். அப்பா அரசாங்க அதிகாரி. நன்கு படித்து சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேண்டும் என்ற மகளின் பிடிவாதம், அதற்கு ஏற்ப அமைந்ததுதான் இந்த சம்பந்தம். அவர்களுக்கும் அது விருப்பமே. மகள் வெளிநாட்டில் இருந்தால், தாங்களும் வெளிநாடு சென்று வரலாம். தற்போது உள்ள பெரும்பாலான பெற்றோர்களின் கனவு அவர்களுக்கும் இருந்தது.

    ஆகவே, நிச்சயத்தின் போது சக்திவேல், சவீதாவின் பேச்சு பெரும்பாலும் வெளிநாட்டில், அவன் பார்க்கும் வேலை இருப்பிடம், அவளது வேலைக்கான வாய்ப்பு இப்படியே சென்றது. மற்றபடி ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான ஈர்ப்பு இல்லை. அதன் பிறகு நிறைய தடவை போனில் பேசினாலும், லைப் ஸ்டைல், ப்யூசர் பிளானிங், என்பது மட்டுமே பேச்சு என்று ஆயிற்று. (over intelligence will planned only money future.. not life future…)

    நேற்றுக்கு அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்றதும் உடனே அவளுக்கு அழைத்து தகவலை தெரிவித்து இருந்தான். ஓகே சக்தி.. ஐ வில் கோ.. என்ற பதிலும் அவளிடமிருந்து கிடைத்திருந்தது.

    24 மணி நேர பயணம். எப்போதும் அலுப்பும், மகிழ்ச்சியும், ஊரில் உள்ளவர்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வமுமாய் கழியும் பிரயாணம். இந்த தடவை, முள் படுக்கையில் இருப்பது போல் இருந்தது. அம்மாவின் உடல் நிலை என்னவாச்சோ..? என்ன பிரச்சினையாக இருக்கும்..? பலவித கவலைகள், அதைத் தொடர்ந்த சிந்தனைகள் வரிசையாக ஓட, நிம்மதியாக தூங்கவும் முடியாமல், சாப்பிடவும் பிடிக்காமல், ஒரு வழியாக பிரயாணத்தை முடித்து, இந்தியா வந்து சேர்ந்தான்.

    அடுத்து நான்கு நாட்கள். மிகவும் நரகமாக கழிந்த நாட்கள். ஏகப்பட்ட டெஸ்ட், ஏகப்பட்ட டாக்டர்ஸ், கன்சல்டேஷன், மருந்துகள். கடைசியாக தீர்ப்பு சொல்லும் நாளை எதிர்நோக்கும் கைதி போல, இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரி வராண்டாவில்... மிஸ்டர் சடகோபன் உங்களை டாக்டர் கூப்பிடுகிறார்..! இந்த நாலு நாட்களில் மிகவும் தளர்ச்சியடைந்து வயதானவர் போல் தோற்றம் தந்த அப்பாவை பார்த்ததும், சக்திக்கு வருத்தமாக இருந்தது.

    இருங்கப்பா, நானும் வரேன். தானும் அப்பாவின் கூடச் சென்றான்.

    உட்காருங்க.. எதிரில் கைகாட்டி, இருவரையும் உட்காரச் சொன்ன டாக்டர், தனது மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டுக் கொண்டு, ரிப்போர்ட்சை கையில் எடுத்து, மீண்டும் ஒருமுறை திருப்பிப் பார்த்துவிட்டு, ஒண்ணுமில்ல.. ஜஸ்ட் ஒரு சின்ன சர்ஜரி பண்ணனும்.. அப்புறம் கொஞ்சம் ஹீமோதெரபி கொடுக்கணும். ஒரு ஆறு மாச ட்ரீட்மென்ட். கம்ப்ளீட்டா சரி ஆயிடுவாங்க…? என்று கேசுவலாகச் சொல்ல, இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

    சற்றே நிலைமையை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட சக்தி, ஓ.கே.. டாக்டர்... என..

    அதுக்கப்புறம் பயம் இல்லைல...! என்று நடுங்கும் குரலுடன் கேட்ட சடகோபனை, டாக்டர் சற்று பரிதாபத்துடன் பார்த்தார்.

    நோ நோ, அதுதான் பிரஸ்ட் எடுத்திடறோம் இல்ல... அதுக்கப்புறம் தான் ஹீமோதெரபி. இப்ப இந்த கேன்சர் எல்லாம் கியூரிபை.. கவலைப்பட வேண்டாம்.. டாக்டர் எளிதாகச் சொல்லிவிட, சக்திவேல் உடைந்து போனான். ஆனால், ஏற்கனவே உடைந்து போயிருக்கும் அப்பாவை, தங்கையை நினைத்து மனதை திடப்படுத்திக் கொண்டு, டாக்டரிடம் மேலும் விபரங்களை கேட்டுக் கொண்டு வெளியே வந்தான்.

    அம்மா இன்னும் ஐசியூவில்.. வெளியிலிருந்து பார்த்தவனுக்கு கண்களில் கண்ணீர் துளிர்த்தது. இவன் வந்திருப்பது தெரிந்ததும், சவீதா அவளுடைய அம்மா, அப்பா மூவரும் வந்தனர். அவளது அம்மா, அப்பா சடகோபன் இடம் பேசிக்கொண்டிருக்க, சவீதா மட்டும் சக்தியிடம் பேசினாள்.

    டோன்ட் வொரி சக்தி.. இப்ப இதெல்லாம் சாதாரணம்.. ஆன்ட்டிக்கு க்யூர் ஆயிடும்.. அவளது வார்த்தைகள் சற்றே தெம்பை கொடுத்தாலும், கண் முன்னால் இருந்த பிரச்சனைகள் அவனை தலை சுற்ற வைத்தது.

    அடுத்த பதினைந்து நாட்கள் அம்மா இல்லாமல் அவர்கள் மூவருமே, திணறிப் போயினர். அம்மா என்ற அச்சாணி, குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அந்த நொடி அந்த குடும்பத்தில் இருந்த மூவருமே உணர்ந்தனர். கல்லூரியில் படிப்பதால், சமையல் கற்றுக் கொள்ளாமல் இருந்த சாந்தினி, இப்போது மூன்று நேரமும் சமைத்து வீட்டை கவனித்துக் கொள்வதற்குள் அரும்பாடு பட்டாள்.

    எல்லாமே கையில் வாங்கிச் சாப்பிட்டு, உடுத்தி, தூங்கி எழுந்த சடகோபனுக்கு, தனது டிரஸ்ஸில் இருந்து பர்சனல் பைல் வரை எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை.

    ஆபரேஷன் முடிந்து கண் விழித்ததும், சரஸ்வதி கேட்ட முதல் கேள்வி, டேய்! சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க..?

    அது பத்தி இப்ப என்ன...? சிலநேரம் ஹோட்டலில் வாங்குறோம்.. சிலநேரம் சாந்தினி ஏதோ பண்றா..! சமாளிக்கிறோம். விடு. முதல்ல நீ குணமானாப் போதும்.. அம்மாவை சமாதானம் செய்தான்.

    அதுக்கு இல்லைடா. ஏற்கனவே இந்த வியாதிக்கு நிறைய செலவாகும். இப்ப ஹோட்டல்ல சாப்பிட்டா, செலவு ஒரு பக்கம், உடம்புக்குச் சேரணும்..

    பரவால்லைம்மா, சம்பாதிக்கிறது எதுக்கு...? செலவழிக்கத் தானே..!

    அதுக்காக, ஆஸ்பத்திரிக்காடா செலவழிக்கணும். வேற நல்ல விதமா செலவழிச்சா, சந்தோஷமா இருக்கும்!

    ஆஸ்பத்திரிக்கு கொடுக்கனாலும் நம்மகிட்ட சம்பாத்தியம் இருக்குன்னு சந்தோஷப் படுங்கம்மா. எத்தனை பேர் கிட்ட அதுக்கு கூட வழியில்லாம இருக்கு.. என்று சொல்லவும், சரஸ்வதி அமைதியானார்.

    அடுத்து ஒரு வாரம் கழித்து முதல் சிட்டிங், ஹீமோதெரபி, கொடுத்தனர். சூட்டில் இருக்கக் கூடாது. நேரத்துக்கு நல்ல சத்தான ஆகாரம் சாப்பிடனும். ஜூஸ் நிறைய குடிக்கணும். ஏன்னா ஹீமோ கொடுக்கும் போது கெட்ட செல்கள் அழியும் போது, நல்ல செல்களும் சேர்ந்து அழிந்துவிடும். அதனால அது உடம்பை உருக்கும்.. அதுக்கு ஏத்த மாதிரி, மருந்து மாத்திரை கொடுப்பாங்க. நல்ல ரெஸ்ட் தேவை.. இப்படி ஏகப்பட்ட இத்தியாதிகள்.. டாக்டர் சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்.

    வீட்டுக்கு அம்மாவை

    Enjoying the preview?
    Page 1 of 1