Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Melliya Thendral
Melliya Thendral
Melliya Thendral
Ebook330 pages2 hours

Melliya Thendral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகு தேவதையான அமோதிதா என்பவள் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். தனது அக்கா மனோவின் வாழ்க்கையில் நடந்ததை எண்ணி ஏன் ஆண்களையே வெறுக்கிறாள்? மனோவின் வாழ்க்கையில் நடந்தது என்ன? இதற்கிடையில் I.P.S. உயர் அதிகாரியான கோகுல் என்பவன் தனது நண்பனின் திருமணத்தில் அமோதிதாவை பார்த்து காதலிக்கிறான். அமோதிதா கோகுல் இருவருக்கும் திருமணம் நடைபெறுமா? வாருங்கள் வாசித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580147807472
Melliya Thendral

Read more from A. Rajeshwari

Related to Melliya Thendral

Related ebooks

Reviews for Melliya Thendral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Melliya Thendral - A. Rajeshwari

    https://www.pustaka.co.in

    மெல்லிய தென்றல்

    Melliya Thendral

    Author:

    அ. ராஜேஸ்வரி

    A. Rajeshwari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-rajeshwari

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    அதிகாலைப் பொழுது பறவைகளின் சங்கீதத்திலும் காலைத் தென்றலிலும், மலர்களின் மலர்தலிலும், ஆதவனின் மலர்தலிலும் பூமித்தாயின் ஆசியுடன் அழகான ஓவியமாய் மலர்ந்து கொண்டிருந்தது.

    அம்மா கிச்சனில் பிசியாக இருந்தாள். எம்.எஸ்.சின் சுப்ரபாதம் மெல்லிய இளந்தென்றலில் கரைந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

    எப்போதுமே அம்மா எழுந்து குளித்து முடித்துவிட்டு சுப்ரபாதத்தை ரேடியோவில் ஆன் செய்துவிட்டு தானும் சேர்ந்து பாடிக் கொண்டே வேலையைக் கவனிக்க ஆரம்பித்து விடுவது வழக்கம்.

    அதே போல அன்றும் எம்.எஸ்.சின் சுப்ரபாதம் மெல்லிய இசையில் கரைந்து கொண்டிருந்தது.

    ஈ.சி.ஆர் ரோட்டில் பிளாட்டில் வாசம் செய்ததால் கடல் அலைகளின் தாலாட்டில் அமோதிதா மெய் மறந்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். சற்று நேரத்தில் காலைக் கதிரவன் மேலெழும்பி தன்னை அறிமுகம் செய்து கொண்டது போல் வெப்பக் கீற்றுகள் சன்னல் வழியே எட்டிப் பார்த்து ‘அமோதிதா’வை எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனாலும் எழ மனமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாள்.

    போர்வையை இழுத்து முகத்தை மூடியபடி மீண்டும் தூங்க முயற்சிக்கும் அமோதிதாவை பார்த்ததும் தனக்குள் சிரித்துக் கொண்டாள், அம்மா.

    அமோ! எந்திரிடா...

    ம்ம்... ஸ்ஸ்... தூக்கம் வருதும்மா... மீண்டும் போர்வைக்குள் மறைந்து போனாள் அமோ.

    காலைத் தூக்கம் உடம்புக்கு நல்லது கிடையாது அமோ. படுக்கப் படுக்கத் தூக்கம் வரத்தான் செய்யும். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துல எழுந்து வாசல் பெருக்கிக் கோலம் போடணும். அந்தக் காத்து உடம்புக்கு நல்லது. உடம்பு சுறுசுறுப்பா இருக்கும். நாலு நாளைக்கு எந்திரிக்கும் போது கஷ்டமா இருக்கும். அப்புறமா பழகிடும்."

    அம்மா... இந்த எக்ஸ்பரிமன்ட் எல்லாம் எங்கிட்ட ஒர்க் அவுட் ஆகாது. தூக்கம் எவ்வளவு நேரம் வருதோ அவ்வளவு நேரம் தூங்கணும். தேட்ஸ் மை பாலிசி.

    ப்ளீஸ் ம்மா... கெஞ்சலாய்க் கொஞ்சினாள் அமோதிதா.

    காலேஜ் லீவா டா.

    நோ... ம்மா.

    இன்னையிலிருந்து... காலேஜ் டே வருது. அதுக்கு நிறைய புரோகிராம்ஸ் பண்ணனும். அதுக்காகப் பிராக்ட்டிஸ் பண்றோம். சோ கிளாஸ் கட். மேடம் எங்களை போய் பிராக்ட்டிஸ் பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க. சோ டென் ஒ கிளாக்குக்குக் கிளம்பினா போதும்மா.

    சரி... உனக்கு ஹாட்பேக்குல டிபன் இட்லியும் கேசரியும் வைக்கிறேன், சாப்பிட்டுட்டு பிளாஸ்க்குல பால் வச்சிருக்கேன், எடுத்துக் குடிச்சிட்டு பத்திரமா வீட்டைப் பூட்டி சாவிய என்னோட கிளாஸ் ரூம்ல நான் இருப்பேன். குடுத்துட்டுப் போ அமோதி.

    சரியா... டென் ஃபிப்ட்டீனுக்கு உங்க கிளாஸ் ரூம்முக்கு வந்து கீயைக் குடுத்துட்டு கிளம்பிடுவேன். எனக்கு மத்தியானம் லஞ்ச் வேண்டாம். கேண்ட்டீன்ல சாப்பிட்டுக்கிறேன்.

    பணம் வச்சிருக்கியா அமோ.

    இருக்கு. போதும்மா.

    வேகமாய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக் கொண்டு கிளம்பிய சாரதா... அமோவின் ஹேண்ட் பேக்கைத் திறந்து பர்சைப் பார்த்தாள். பதினைஞ்சு ரூபாய் மட்டும் இருந்தது.

    அமோ... உன் பர்ஸ்ல அம்பது ரூபாய் வச்சிருக்கேன் சாப்பிட்டுக்கோடா...

    எனக்கு போதும்மா... நீங்க செலவுக்கு வச்சிக்கோங்கம்மா.

    பதினஞ்சு ரூபாயில என்னத்த சாப்பிடுவே?

    ஒரு தயிர் சாதம் பத்து ரூபாதாம்மா. போக வர சீசன் டிக்கெட் இருக்கு. வேற என்ன வேணும். நீங்க கைல எடுத்துக்கிட்டு போங்கம்மா. உங்களுக்கு தேவைப்படும்.

    இல்லடா அம்மாகிட்ட இருக்கு. நாளைக்கு அனேகமா சம்பளம் கிடைச்சிடும். ஈவினிங் நீ சீக்கிரமா வீட்டுக்கு வந்திரணும்... சரியா.

    ஆறு மணிக்கெல்லாம் டான்னு வீட்ல இருப்பேம்மா. யு டோன்ட் ஒர்ரிம்மா.

    பை டி... செல்லம்... வேகமாய் கிளம்பியவள் லஞ்ச் பாக்சை மறந்து விட... தன் செல்போனில் அமோதிதாவுக்கு...

    அமோ, கோச்சுக்காதடி செல்லம். லஞ்ச் பாக்சை எடுத்துட்டு வர மறந்துட்டேன். நீ வரும் போது மறக்காம என்னோட லஞ்ச் பாக்ஸ் கிச்சன் மேடை மேலயே இருக்கு. எடுத்துட்டு வந்து குடுத்துட்டுப் போறியா அமோ.

    சரிம்மா. நான் வரும் போது எடுத்துட்டு வந்து குடுத்துட்டுப் போறேம்மா... என்றாள்.

    அம்மாவிடம் லஞ்ச் பாக்சைக் கொடுத்துவிட்டு... அம்மாவின் கன்னங்களில் முத்தமிட்டு பைம்மா... வேகமாய் பஸ் ஸ்டாப்புக்கு ஓடினாள்.

    ஹாய்! அமோ! இன்னைக்கு என்ன பிளான் பண்ணியிருக்கே கேட்டபடியே கீர்த்தனா வந்தாள்.

    இன்னைக்கு கண்டிப்பா டான்ஸ் பிராக்ட்டிஸ் தான் ஃபுல்டேயும். ஷீலாவும், ஷர்மிளாவும் சொதப்புறாங்கடி. அவங்களுக்கு அந்த ஸ்டெப்ஸ் வரவே மாட்டேங்குது. டான்ஸ் பிராக்ட்டிஸ் பண்ணியே ஆகணும். நீ வீட்ல போய் பிராக்ட்டிஸ் பண்ணிப் பாத்தையா கீர்த்தனா? என்றாள் அமோ.

    நேத்து பூராவும் அதான் வேலை. இப்போ சூப்பரா பண்ணிடுவேன் அமோ.

    உனக்கு விஷயம் தெரியுமா அமோ. ரெண்டு பேருமே பரத நாட்டியம் கிளாசே ஜாயின் பண்ணிட்டாங்க. சோ யு டோன்ட் ஒர்ரி. இன்னும் ரெண்டு மூணு நாளைல கரெக்ட்டா பண்ணிடுவாங்க பாரேன்.

    ஏய், பஸ் வந்திடுச்சிடி... வா... வா... செல்லில் பேசிக் கொண்டிருந்தவள் ஓடி வந்து கீர்த்தனாவின் பின்னாலேயே ஏறினாள்.

    என்னடி இன்னைக்கு இவ்ளோ கிரவுட்... அவங்க காலேஜ்ல புரபசருக்கும் ஸ்டூடண்ட்சுக்கும் சம் பிராப்ளமாம். சோ... ஸ்ட்ரைக் பண்றாங்களாம். இன்னைக்கு எங்க அண்ணன் கூட காலேஜுக்குப் போகலை. இதோ நிக்கிறாங்களே எல்லாருமே அந்த காலேஜ் தான்.

    ஏய் அமோ இறங்கிடலாமா?

    எதுக்கு கீர்த்து இங்கே எறங்கணும்?

    ஷீலா வீட்டுக்குப் போய் அவளையும் பிக்கப் பண்ணிடலாமேன்னு தான்.

    அவ கார்ல வந்திடுவா கீத்து.

    நாமளும் அவ கூட வந்திரலாமே அமோ.

    ம்ஹூம்... நீ போ. நான் வரல.

    சரி... அப்போ நானும் போகல. நேரா காலேஜுக்கே போயிரலாம் என்றாள் கீர்த்தனா.

    சற்றுநேரத்தில் ஷீலாவும், ஷர்மிளாவும் காரில் வந்து இறங்கினர்.

    மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே ஷீலாவை ஆரத்தழுவி கை குலுக்கினாள் அமோதிதா.

    ஏய்! சொல்லவே இல்ல கீர்த்தனா கேட்க...

    அமோவுக்கு மட்டும் நான் சொன்னேனாடி. எப்படி ஞாபகமா என்னை வாழ்த்தறா பாரேன்?

    சரியான... மறதி மன்னாரு. போன வாரம் நாம எல்லாரும் கேண்ட்டீன்ல காபி சாப்பிடும் போது சொன்னேன்ல... என்றாள் ஷீலா... கீர்த்தனாவிடம்.

    ஓ...! ஸ்ஸ்... சாரி... சாரிடி ஷீலு... மறந்தே போயிட்டேன்.

    இட்ஸ் ஓகே... ஓகே...

    இன்னைக்கு எல்லாருக்கும் என்னோட பர்த்டே ட்ரீட் உண்டு. எங்க போலாம் சொல்லுங்க. அமோ...

    இப்போதைக்கு நம்மளோட கேண்ட்டீன் தான் ஷீலு. வெளிலெல்லாம் போனா டைம் வேஸ்ட்டாயிடும். இன்னும் நாலுநாள் தான் இருக்கு காலேஜ் டேக்கு. நல்லா பர்ஃபாம் பண்ணனும். சோ... பிராக்ட்டிஸ் தான். காலேஜ் டே முடிஞ்சப்புறமா ஒரு நாள் ஃபிரியா போயிக்கலாம் ஷீலு... என்றாள் அமோதிதா.

    அதுவும் சரிதான் என்றாள் ஷீலா.

    சரி இப்போ பிராக்ட்டிஸ் பண்ணலாம் வாங்க. மத்தியானம் கேண்ட்டீனுக்குப் போகலாம் என்றாள் அமோதிதா.

    சாக்லேட் கூட கிடையாதாடி... ஷீலு! கீர்த்தனா கேட்க...

    ஒரு சாக்லேட் பாக்சை எடுத்து நீட்டினாள்.

    ஒண்ணு கேட்டா ஒரு பாக்சையே குடுக்குறையே ஷீலு.

    எல்லாருக்கும் தான் கீத்து.

    அனைவரும் சாக்லேட்டை மென்று கொண்டே டான்ஸ் பிராக்ட்டிஸ் செய்தனர்.

    குட். இன்னைக்கு நல்லா பண்றீங்கடி ஷீலு, ஷர்மி என்றாள் அமோதிதா.

    மாலைக் கதிரவன் மலை வாசலை எட்டிப் பிடிக்க சரியாக ஆறு மணிக்கு வீட்டிற்குள் நுழைந்தாள் அமோ.

    உள்ளே நுழைந்தவுடன் ஃபேஸ்வாஷ் செய்து ட்ரஸ் சேஞ்ச் பண்ணிவிட்டு... காபி கலந்து குடித்தாள்.

    இரவு டிபனுக்கு கோதுமை மாவைத் தேடி எடுத்துப் பிசைந்து மூடி வைத்துவிட்டு. இன்னைக்கு புதுசா ஒரு ரெசிபி செஞ்சி அம்மாவை அசத்தணும். லேப்டாப்பை ஓபன் செய்து ரெசிபி செக்ஷனை செலக்ட் செய்து அம்மாவுக்குப் பிடித்தமான வித்தியாசமான ரெசிபியாகத் தேடினாள்.

    மட்டர் பனீரை அதில் கொடுத்திருந்தபடியே செய்துமுடித்து... டேஸ்ட் செய்துவிட்டு...

    ம்ம்! அமேசிங்... தோளைக் குலுக்கியபடி... இன்னைக்கு அம்மா நல்லா சாப்பிடுவாங்க. அம்மாவுக்கு கிரீன் பீஸ்ன்னா ரொம்பவே பிடிக்கும். தனக்குள் புன்னகைத்தவாறு... டிவியை ஆன் செய்து... சற்றுநேரம் பழைய தமிழ் பாடல்கள் கேட்டாள். பின் தன் காலேஜ் புக்சில் ஐக்கியமாகிப் போனாள்.

    இரவு எட்டு மணி. காலிங்பெல் இசைத்தது.

    அம்மா வந்துட்டாங்க. ஆசையாய் ஓடிச்சென்று ‘அம்மா’ என்றபடி கதவைத் திறந்து அணைத்து முத்தமிட்டபடி,

    ஏம்மா இவ்ளோ லேட்டு...?

    ஓவர் டைம் குடுத்தாங்கடா. அதான் லேட்டாயிடுச்சி. இந்த மாசம் பத்து நாள் ஓவர் டைம் செஞ்சிருக்கேன். சம்பளம் கூடக் கிடைக்கும் அமோ.

    அம்மா... இன்னும் ரெண்டு வருஷம் தான் பொறுத்துக்கங்க. கஷ்டப்பட்டு படிச்சி கேம்பஸ்ல செலக்டாயிடுவேன். அப்புறமா கை நிறைய சம்பாதிச்சி உங்களை ராணி மாதிரி வச்சுக்குவேன்ம்மா.

    ஒண்ணும் அவசரமில்ல. அம்மாவுக்கு ஒண்ணும் அவ்வளவு வயசாயிடலயே... வேலை செய்யறதுல தப்பில்லடா...

    மத்தியானம் சாப்பிட்டியா அமோ.

    சாப்பிட்டேம்மா...

    அம்மா இன்னைக்கு நீங்க மார்க்கெட்ல இறங்கி காய்கறி வாங்க வேணாம். நான் வாங்கிட்டு வந்திடறேம்மா.

    அங்கெல்லாம் பயங்கரக் கிரவுடா இருக்கும் அமோ. நீ வாங்க வேணாம். நானே வாங்கிட்டு வரேன்.

    நீங்க லேட்டா வரீங்கம்மா. இன்னைக்கு நான் சீக்கிரமா வந்திருவேன். வாங்கிட்டு வந்திடறேம்மா.

    சரி. இந்தா... நூறு ரூபா. பர்சிலே வைக்கிறேன். ஃபிரஷா பாத்து வாங்கிட்டு வா அமோ.

    எங்கிட்ட நீங்க குடுத்த பணம் அப்பிடியே இருக்கும்மா.

    சாப்பிடலையா?

    என்னோட பிரண்ட்டுக்குப் பர்த்டே. சோ ட்ரீட் குடுத்தா. அதான் செலவாகலை.

    அம்பது ரூபாய்க்கெல்லாம் இப்போ விக்கிற விலைக்கு என்ன காய் வாங்கிட முடியும். இதையும் வச்சிக்கோ அமோ.

    அமோ! இன்னைக்கு நான் வர லேட்டாகும். நான் வேலை செய்யற கம்பெனியோட பாசுக்கு அறுபதாம் கல்யாணம். நாங்க எல்லாரும் போயிட்டு வரணும். ராத்திரி ஒரு எட்டரை ஒம்பதுக்குள்ள வந்துடறேன். கல்யாணம் காஞ்சிபுரத்திலே. சோ... எல்லாரும் சீக்கிரமாவே போயிட்டு வந்திடுவோம். நீ பத்திரமா கதவைப் பூட்டிட்டு இரு...

    ஓகேம்மா... நீங்க போயிட்டு வாங்க. நல்ல சாரியா கட்டிட்டு போங்கம்மா.

    நீ மதர்ஸ்டேக்கு எடுத்தையே அதைத்தான் கட்டிட்டுப் போகப் போறேன் அமோ.

    நல்லாயிருக்கும்மா உங்களுக்கு...

    செலக்ஷன் உன்னோடதாச்சே. பின்ன நல்லாயில்லாமலா இருக்கும்?

    2

    மறுநாள் அம்மா ஆபீசுக்குக் கிளம்பியதும் வீட்டில் மீதமிருந்த வேலைகளை முடித்துவிட்டு கல்லூரிக்குக் கிளம்பினாள், அமோதிதா.

    அம்மா தையல் வேலை செய்தாள். ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் அம்மாவின் கைத் திறமையைப் பார்த்துவிட்டு பாசோட மனைவி தனியாக ஆரம்பித்து நடத்திய தையல் பள்ளியில் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். அதிலிருந்து அம்மாவுக்கு தையல் டீச்சராகப் பிரமோஷன் கிடைத்தது.

    அமோதிதா பி.இ. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

    இருவரும் தனியாக ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தனர். சிங்கிள் பெட்ரூம். சிறிய கிச்சன், பால் கனி... என அவுட்ஹவுசில் இருந்தனர். அலைகளின் தாலாட்டிலும் அம்மாவின் அன்பிலும் பாசத்திலும்... எந்தக் குறையும் இல்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

    அன்று காலேஜ் டே விமரிசையாக நடந்தது. விழாவில் நிறைய பரிசுகளுடன்... கொண்டாட்டங்களும் நடந்தது. சீனியர்ஸ் அனைவரும் வந்து பாராட்டினர். பரத நாட்டியத்தையும் ஃபோக் டான்சையும்.

    பட்டிமன்றத்தில் வரதட்சணை பற்றி பேச்சுப் போட்டி நடந்தது.

    தலைமை தாங்கியவர் ஒரு பிரபல பெண் நீதிபதி.

    அமோதிதாவின் மேடைப் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. உணர்ச்சி வசப்பட்டு பேசினாள் அமோதிதா.

    அவளுக்குள் ஒரு வெறி வந்தது போல.

    ரிலாக்ஸ் அமோ... ரிலாக்ஸ்... அருகில் அறிவிப்பாளராக நின்று கொண்டிருந்த புரபசர் லதா சாந்தப்படுத்தினார்.

    பட்டிமன்றப் பேச்சிலும் வெற்றி பெற்றாள். தலைமை தாங்கிய நீதிபதி... அமோதிதாவைப் பாராட்டினார். அவரும் பெண்களின் வரதட்சணை கொடுமை பற்றி காட்ட காட்டமாய்ப் பேசினார். விழா முடிந்ததும் அமோவைத் தனியாக அழைத்துப் பாராட்டிப் பேசினார்.

    அமோ சந்தோஷத்துக்குள்ளும் ஒரு துக்கத்தைச் சுமந்தவளாய் வீட்டிற்கு வந்து சுவாமி படங்களுக்கு முன்னால் தன் பரிசுகளை வைத்து கனத்த மனதுடன் வணங்கிவிட்டு... அமைதியாகப் பால்கனியில் இருந்த மூங்கில் ஊஞ்சலில் அசைந்து கொண்டிருந்தாள்.

    செல்போன் இசைக்க... ‘அம்மா’தான்.

    அமோ! கொஞ்சம் லேட்டாதான் வருவேன். பஸ் பிரேக்டவுன் ஆயிடுச்சி. கதவை தாழ்போட்டு சாப்பிட்டு தூங்குடா.

    சரிம்மா பாத்து வாங்க. என்னைப் பத்தி கவலைப் படாதீங்கம்மா.

    அடுத்து சில நிமிடங்களில் இட்லியும் காரச்சட்னியும் தயார் செய்து... அம்மாவுக்கு ஹாட் பாக்கில் வைத்துவிட்டு தானும் இட்லியை தட்டில் எடுத்துக் கொண்டு டி.வி.யை ஆன் பண்ணினாள்.

    டிவியிலும் ரத்தமும் சதையும் ஒப்பாரியுமாக இருக்க... ஆஃப் செய்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள். துக்கம் தொண்டையை இறுக்கியது. அவள் கருவிழிகளில் நீர் புரண்டோடியது. சாப்பிடப் பிடிக்காமல் வைத்துவிட்டு... கல்கியின் நாவல்... சிவகாமியின் சபதத்தில் மூழ்கினாள்.

    தான் படித்து அடையாளப் படுத்தியிருந்த நூலைப் புரட்டியபடி...

    சிவகாமி தன் நாட்டுக்காக சவுக்கடி பட்டு நாட்டியமாடியதைப் படிக்கும் போது... இதயம் வலித்தது. தன் கனத்த இதயம் மீண்டும் தன் சோகத்தை நினைத்து விசும்பியது.

    சற்று நேரத்தில் காலிங்பெல் இசைக்க... அம்மா வந்துட்டாங்க...

    அம்மா... இறுகப் பற்றி முத்தமிட்டபடி...

    என்னடா ஒத்தைல இருக்க பயமா இருந்திச்சா?

    இல்லம்மா...

    அம்மாவைப் பார்த்ததும் தன் கனத்த இதயத்தின் சோகம் பாதி வடிந்தது போல இருந்தது.

    பாத்தாவே தெரியுது. தனியா இருந்து பழக்கமில்லையே. இனிமே அம்மா போக மாட்டேன். இது என்னோட பாஸ் ஆச்சே. போய் தானேடா ஆகணும். அதான்... வா சாப்பிடலாம்.

    நான் சாப்பிட்டேம்மா. உங்களுக்கும் ஹாட்பேக்குல இட்லி வச்சிருக்கேன். சாப்பிடுங்கம்மா.

    கை கால் முகம் அலம்பிக் கொண்டு வந்த அம்மா...

    நீ சரியா சாப்பிட்டு இருக்க மாட்டே. வா... அம்மாகூட வந்து கொஞ்சமாவது சாப்பிடு தட்டில் இட்லியை எடுத்துக் கொண்டு அவள் அருகில் சென்று...

    பசிக்கலம்மா...

    அம்மாவுக்காகன்னு நினைச்சி சாப்டு. இன்னைக்கு ஒரு வேளைகூட உன்னோட நான் சாப்பிடலையேடா அமோ.

    இட்லியை அவள் வாயில் ஊட்டியபடி. நிறைய பிரைசஸ் வாங்கினையாமே...

    யார்ம்மா சொன்னாங்க அதுக்குள்ள...

    நீ ஏன் அம்மாவுக்கு சொல்லலை அமோ.

    நீங்க வந்தப்புறமா சொல்லலாம்னு நினைச்சேன். யார் சொன்னாங்க காஞ்சிபுரத்துக்கு வந்து... வாயில் இட்லியைக் குதப்பியவாறு...

    வந்து தான் சொல்லணுமா. இப்போ இருக்குற விஞ்ஞான உலகத்துல...

    யாரும்மா சொல்லுங்கம்மா?

    சாப்பிட்டு முடி சொல்றேன். இப்போ தெரியுது நீ இன்னும் சாப்பிடவே இல்லைன்னு. நாலு இட்லி சாப்பிட்டிருக்கே பாரேன் அமோ.

    உன் பிரண்ட் ஷர்மிளாவும், ஷீலாவும் அப்படியே ஃபார்வேட் பண்ணியிருந்தாங்க. நீ கால் பண்ணியாவது சொல்லுவேன்னு நினைச்சேன். பட் சொல்லல. ரொம்ப ஃபீல் பண்ணேன் தெரியுமா அமோ.

    சாரிம்மா... அடுத்தடுத்த புரோகிராம்ஸ்ல பிசியா இருந்ததால சொல்ல முடியல.

    சரி... பரவால்ல டா. வா... உன்னோட பிரைசஸ் எல்லாத்தையும் பார்க்கலாம்.

    பூஜை அறைக்கருகில் இருந்த பெரிய டேபிளில் அடுக்கி இருந்த ஒவ்வொன்றையும் பார்த்து விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

    நல்லாயிருக்குடா அமோ. அம்மாவுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. பட்டிமன்றத்தில் நல்லா பேசியிருக்கே. அப்படியே டைரக்ட்ரிலே பண்ணிட்டா ஷீலா.

    எதுவுமே எனக்குத் தெரியாதும்மா. அவங்க எங்கிட்ட எதுவுமே சொல்லலை.

    மகளை வாஞ்சையய் அணைத்து முத்தமழை பொழிந்து விழிகளில் நிறைந்த ஆனந்தக் கண்ணீர் அழுகையின் கண்ணீரானது. சற்று விசும்பியவாறு அழுகையை அடக்கி மென்று விழுங்கியபடி...

    மீண்டும் அவளை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு மார்போடு அணைத்தபடி... பழைய நினைவுகளில் மௌனமானாள்.

    சற்று நேரம் அங்கே மௌனமே பேசிக் கொண்டிருந்தது.

    அம்மா... காஞ்சிபுரம் எப்படி இருந்திச்சி. டெம்பிள் சிட்டின்னு சொல்லுவாங்களே.

    அழகான கோயில்கள் நிறைஞ்ச ஊர். உன்னோட வெக்கேஷனுக்கு அங்க போய் பார்த்துட்டு வரலாம்.

    இரு கனத்த இதயங்களும் தனித்தனியாக, பரிமாறிக் கொள்ளாமல் ‘சுனாமி’யாய்ச் சுழற்றி அடித்துவிட்டுச் சென்ற சோகத்தை மென்று விழுங்கியபடி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர்.

    அம்மா, தூக்கம் வரலையா?

    உன்னையும் அழைச்சிட்டு போகாம போயிட்டோமேனு நினைச்சிட்டு இருக்கேன் அமோ.

    அதான் வெக்கேஷன் லீவுக்குப் போலாமின்னு சொன்னீங்களேம்மா. அப்ப போகலாம். ரெண்டு மூணு நாள் தங்கி சின்னக் காஞ்சிபுரம் பெரிய காஞ்சிபுரம்ன்னு பாத்துட்டு வரலாம். இப்போ நீங்க என்னைக் கூப்பிட்டிருந்தாலும் வர முடியாதேம்மா.

    ஆமா... இல்லே...

    உன்னோட செமஸ்டர் முடிஞ்சதும் போயிட்டு காஞ்சிபுரம் சாரிஸ் ரெண்டு உனக்கு வாங்கணும் அமோ.

    போங்கம்மா... சாரியே கட்டத் தெரியாது. உங்களுக்கு வாங்கிக்கோங்கம்மா. உங்களுக்குத்தான் நல்ல சாரியே கிடையாது.

    மதர்ஸ்டேக்கு வாங்கிக் குடுத்திருக்கையே எவ்வளவு அழகான சாரி. எனக்கு பிடிச்ச வைலட் கலர். பிளாக்கிஸ் மெருன் பாடர். ஊடால... ஊடால சின்ன சின்ன டாட்ஸ். அமேசிங்டா. எனக்குகூட உன்னைய மாதிரி செலக்ட் பண்ணத் தெரியாது. அதான் உன்னையும் அழைச்சிட்டு போய் வாங்கலாம்ன்னு வாங்கலை. எங்க பாஸ்க்கும் அவரோட ஒய்ஃப்புக்கும் பட்டுல தான் வேஷ்டி பட்டுசேலைன்னு நாங்க ஸ்டாப்புங்க எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் காஸ்ட்லியாவே வாங்கி வச்சோம்.

    அப்பத்தான், உனக்கும் இந்தக் கடையில வந்து வாங்கணும்ன்னு நினைச்சேன். சூப்பர் கலெக்ஷன்ஸ். உனக்கும் பிடிக்கும் அமோ.

    மெல்ல வாங்கலாம்மா. நான் சாரி கட்ட ஆரம்பிக்கும் போது... என்றாள்.

    நீ தூங்கு அமோ. நான் பாத்திரத்தைக் கழுவி வச்சிட்டுப் படுத்துக்குறேன் என்றாள் அம்மா.

    "நீங்க காலைல போட்டுட்டுப் போன பாத்திரங்களை

    Enjoying the preview?
    Page 1 of 1