Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vennilavu Velicham
Vennilavu Velicham
Vennilavu Velicham
Ebook366 pages3 hours

Vennilavu Velicham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் கிரிதர் - அலமேலு தம்பதியருக்கு மூன்று ஆண் பிள்ளைகள். கடைக்குட்டி ஆதித்யா. சிவில் எஞ்சினியர். மிடில் கிளாஸ் ஃபேமிலி. ஆச்சாரமான குடும்பம். அண்ணன்கள் இருவரும் திருமணமானதும் வீட்டோட மாப்பிள்ளையாக ஐக்கியமாகிப் போனார்கள். ஆதித்யா ஒரு பெரிய காம்ப்ளக்ஸ் பிராஜெடிற்காக பெற்றோருடன் சென்னை வருகிறான். அங்கு அறிமுகமானவள்தான் பாகிரதி. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இதில் ஆர்த்தி என்பவள் யார்? ஆதிகேசவன் ஆதியாக மாறக் காரணம் என்ன? ஆதி மற்றும் ரதியின் திருமணம் நடக்குமா? இந்நிலையில் ரதியின் அக்ரிமென்ட்டை ஆதித்யா ஏற்றுக்கொள்வானா? ரதி தன் வாழ்க்கையில் இப்படியொரு அக்ரிமென்ட்டை ஏற்படுத்திக்கொள்ள காரணம் யார்? இவர்கள் இருவரின் உள்ளங்களிலும் வெண்ணிலவின் வெளிச்சம் தோன்றுமா! நாமும் வெண்ணிலவின் வெளிச்சத்தில்...

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580147807473
Vennilavu Velicham

Read more from A. Rajeshwari

Related to Vennilavu Velicham

Related ebooks

Reviews for Vennilavu Velicham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vennilavu Velicham - A. Rajeshwari

    https://www.pustaka.co.in

    வெண்ணிலவு வெளிச்சம்

    Vennilavu Velicham

    Author:

    அ. ராஜேஸ்வரி

    A. Rajeshwari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-rejeshwari

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    1

    அதிகாலைச் சூரியன் அதிகாலை நிலவிற்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தது. அதிகாலை வெண்பனி, அங்கங்கே பஞ்சுப் பொதிகளாய் செடிகளையும் கொடிகளையும் மறைத்து ஓவியம் போலக் காட்டியது. டிசம்பர் மாதக் குளிரும் பனியும், சற்று அழுத்தமாகவே இருந்தது. வீதிகள் சற்று வெறிச்சோடிக் கிடந்தது. அங்கங்கே, பெண்கள் வாசல் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். சிலர் அதற்கு வர்ணம் பூசி அழகு பார்த்து ரசித்தனர்.

    ‘ஆதித்யா’ பில்டிங் பிரமோட்டர். அடையாறிலுள்ள கன்னிமாரா ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி இருந்தான். அம்மா, அப்பா இருவரும் ஸ்ரீரங்கத்தில் இருந்தனர். இரண்டு அண்ணன்கள். பெரிய அண்ணன் மாதவன், சின்ன அண்ணன் கிரி, இருவரும் கல்யாணமானதும் வீட்டோடு மாப்பிளையாகிப் போயினர். ரொம்பவும் வசதியான இடம், மாமனார் வீடு, ஆதலால் சொர்க்கத்தைக் கண்டது போல, மாமனார் வீட்டோடு ஐக்கியமாகிப் போனார்கள். ஆதித்யா கடைக்குட்டி. மிடில் கிளாஸ் ஃபேமிலி. ஆச்சாரமான குடும்பம். அப்பா ஃபுட் கார்ப்பரேஷன்ல நல்ல பதவியிலிருந்து ரிட்டயர் ஆனவர். ஆதித்யா, சிவில் எஞ்ஜினியர். ஆதித்யா, ஸ்காலர்ஷிப்லயே, வெளிநாடு சென்று படித்துவிட்டு, திரும்பியிருந்தான்.

    தானே, சொந்தமாக, தொழில் செய்ய விரும்பினான். வெளிநாட்டில் சிறிது நாள், வேலை பார்த்ததில் வந்த பணத்தை மூலதனமாக்கிக் கொண்டான்.

    சன்னலின் திரைச் சீலையை விலக்கியவாறு சென்னையின் அதிகாலை இயற்கையை ரசித்தான் ஆதித்யா. ஆதித்யா ஒரு பெரிய காம்ப்ளக்ஸ் பிராஜெக்டை ஆரம்பித்திருந்தான். ஹோட்டலில் தங்குவதை விரும்பாதவன் ஆதித்யா.

    அதிகாலையில் வாசல் தெளித்துக் கோலமிட்டு, குளித்து, காலையில் ஈரத் துண்டுடன், மடிசார் புடவையில் சரக், சரக்கென்று வரும் போது, மெட்டியின் ஒலி கெட்டிமேளச் சத்தம் போல, அம்மாவின் கால் கொலுசின் சங்கீதமும். எம்.எஸ்.சின் சுப்ரபாதமும், பூஜை அறையில் அம்மாவின் சுலோகங்களும், ஆர்த்தி தட்டுடன் கணீர் என்ற வெங்கலமணியோசையும், கிச்சனில், காப்பிக் கொட்டை வறுக்கும் வாசமும், அதைச் சுடச் சுட கை எந்திரத்தில் அரைத்து ஃபில்ட்டரில் போட்டு வீடே மணக்கும், டிகிரி காப்பியும் மனதுக்குள் வந்து போனது.

    ச்சே, வீடு வீடுதான். குடும்பம் ஒரு கோவில்தான். அப்பா பால்கனி ஈசிச்சேரில் மோடாவில் கால் போட்டு அமர்ந்து, அம்மாவின் ஃபில்ட்டர் காப்பியை உறிஞ்சியபடி, நெற்றியைச் சுருக்கி உணர்ச்சிப்பூர்வமாய் ஹிண்டுவைப் படிக்கும் போது அப்பாவின் நெற்றியில் இட்டிருக்கும் திருமண், நெற்றியின் சுருக்கத்திற்கு இசைவாய் தானும் சுருங்கி விரிவடையும் அழகே தனிதான்.

    அம்மாவின் நீளக் கூந்தலின் நுனி முடிச்சில், முதல் நாள் மாலையிலேயே மொட்டாகப் பறித்த மல்லிகை மலர்ந்து அம்மாவின் நுனிக் கொண்டை முடிச்சில் அலங்கரித்துச் சிரிக்கும் அழகே தனிதான்.

    அம்மா, அலமேலு பம்பரமாய்ச் சுழன்று வீட்டைப் பராமரிக்கும் அழகே தனிதான். வீட்டின் நினைவு ஆதித்யாவைக் கசக்கிப் பிழிந்தது.

    அலமு.

    என்னண்ணா?

    மாதவன், கால் பண்ணானா?

    ம்ம், ம்ம் பண்ணான். பண்ணான். அப்பா தம்பில்லாம் எப்பிடிம்மா இருக்காங்கன்னு விசாரிச்சான். நீங்கதான் பத்து மணிக்கே தூங்கிட்டேளே.

    இல்லையே நான் பதினொண்ணரை மணி வரைக்கும் மேட்ச் பாத்துட்டு இருந்தேனேடி அலமு.

    போச்சு, போச்சு. அந்த ரூம்ல உக்காண்டு மேச் பார்த்தது யார் கண்டா...?

    ஓ நான்தான் டயத்த தப்பா சொல்லிட்டேண்ணா. நான் ரிசீவரக் கொண்டு வரும் போது, நீங்க நன்னா கொரட்டைவிட்டு, டீப் சிலீப்ல இருந்தேள்.

    மாது அப்பாட்ட குடும்மா பேசறேன்னான்.

    "அப்பா டீப் சிலீப்ல, இருக்கார்டா ‘மாது’ நாளைக்குப் பேசேன்னு சொல்லிட்டேன். அதனாலதான் உங்கள்ட்ட பேசலதானேயொழிய மத்தபடி ரொம்ப விஜாரிச்சான். அப்பாவ நேரத்துக்கு சாப்பிடச் சொல்லும்மா. B.P. மாத்ர எடுத்துக்கச் சொல்லும்மா. சுகர் மாத்திரை எடுத்துக்கச் சொல்லும்மா. அடுத்து ஜனவரில நான் வரேன். வந்து உனக்கும் அப்பாவுக்கும் ஃபுல் மெடிக்கல் செக்கப் பண்ணிடுறேம்மா. இப்ப கொஞ்சம் ஒர்க் டயிட், பிரமோஷன் டயம். சோ, அப்பாவ ஃபீல் பண்ண வேணாம்னு சொல்லும்மா.

    நீ எப்பவும் வேல வேலன்னு சரியாச் சாப்பிடாம அலையாதம்மா. நீயும் சுகர் B.P. மாத்ரலல்லாம் எடுத்துக்கணும். விரதம் அது, இதுன்னு ஸ்ட்ரெயின் பண்ணிக்காதம்மா. உடம்பப் பார்த்துக்கோம்மா.

    காயத்திரி எப்பவும் சொல்லிண்டே இருப்பா. அம்மாவும், அப்பாவையும் நாம பக்கத்துல இருந்து கவனிச்சுக்க முடியலையேங்கன்னு ஃபீல் பண்ணுவாம்மான்னு, நம்மளப் பத்தியேதாண்ணா மாதவ் பேசிண்டு இருந்தான்" என்ற அம்மாவின் வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

    அலமு! கிரி டெல்லிக்கு ஆடிட்டிங் போறேன்னு போனானே வந்தானா, வரலையா? அது பத்தி மாதுட்ட கேட்டையா? என்றார் அப்பா.

    நானே கேட்டேண்ணா. டெல்லில இருந்து கல்கட்டா, பாம்பே, ஹைட்ராபாத்னு இன்னும் ஆடிட்டிங் போக வேண்டி இருக்காம். அதெல்லாம் முடிச்சுட்டு வர ஒரு மாசம் ஆகும்மானு சொன்னான் மாதவ்.

    அவன் ஓய்ஃப் ஹரிணி எப்பிடி இருக்காளாம்? அவதான் ஸ்டேட்ஸ்ல எம்.எஸ். படிக்கப் போறேன்னா போயிட்டாளேண்ணா. மறந்துட்டேளாண்ணா."

    அம்மா மாதவ் அண்ணாவையும், கிரி அண்ணாவையும் காட்டிக் கொடுக்காமல் அப்பாவிடம், அப்பாவியாய் அள்ளி அள்ளி அளந்துவிடும் அண்டப் புளுகை நினைத்து கிளுக்கென்று தன்னையறியாமல் சிரித்ததையும்,

    ஆதி! ச்சுப் அப்பா காதுக்குப் போகப்படாதுடா. அப்பா கோச்சுப்பார். பெத்த பாசம்டா. பத்து மாசம் சுமந்து பெத்த பாசம்டா ஆதி. அவாள அப்பா திட்டினா நேக்குப் பொருத்துக்க முடியாதுடா. சோ பொய் சொன்னேன்டா.

    பகவான் கிருஷ்ணன் கூட கீதைல சொல்லிருக்கார், ஒரு சில நேரங்கள்ல, காப்பாத்திக்கிறதுக்கு சில நல்ல விஷயங்களுக்காகப் பொய் சொல்லறதுல தப்பில்லன்னு சொல்லிருக்கார். என்று அம்மா தன்னை வருடிச் சமாதானப்படுத்திய நாட்களை நினைத்து மனம் தகித்தது.

    பத்து மாதம் சுமந்து பெத்த அம்மா, உயிர் கொடுத்த அப்பா எப்படி மறந்தார்கள். இது சாதாரண உறவா. தொப்புள் கொடி உறவல்லா. அண்ணன் மாதவனையும், அண்ணன் கிரியையும் நினைத்து மனம் வலித்தது.

    பெத்த பிள்ளைங்களுக்காக தாய் என்னல்லாம் செய்றா. பறவைகள் தங்கள் அலகுகளுக்குள் இரை தேடி கொண்டு வந்து ஊட்டுகிறது. பிறகு குஞ்சுப் பறவைகள் இறக்கை முளைத்துப் பறந்து விடுகிறதே. மனிதனும் அப்படித்தானா என்று யோசித்தான் ஆதி.

    ‘காலிங் பெல்’ அடித்தது.

    எஸ் கம் இன் என்றான் ஆதித்யா.

    டிகாஷன், பால், சர்க்கரை ஒரு கப் அண்ட் சாசருடன் டீபாயில் வைத்தான் ரூம்பாய்.

    சார், என்ன பேப்பர் வேணும். தமிழ் ஆர் இங்லீஷ்.

    இங்லீஷ்.

    ஹிண்டு ஆர் எக்ஸ்பிரஸ்.

    ஹிண்டு பேப்பர் வேணும் என்றான் ஆதித்யா.

    ரூமுக்கு வெளியே தள்ளிக் கொண்டு வந்த ட்ராலியில் அடுக்கி இருந்த பேப்பர்களில் இங்லீஷ் ஹிண்டுவை லாவகமாக உருவி எடுத்துக் கொண்டு போய் டேபிளில் வைத்துவிட்டு கதவை சாத்திவிட்டு அடுத்த ரூம்மிற்குள் சென்று விட்டான் ரூம்பாய்.

    டிக்காஷன் ஊற்றி அம்மாவைப் போலவே ஒரே ஒரு ஸ்பூன் சக்கரை போட்டு ஜக்கிலிருந்த சூடான பாலை, ஊற்றி ஸ்பூனால் கலக்கி குடித்தான்.

    சுடச்சுட டிக்காஷனில் கறந்த பாலைக் காச்சி சுகருடன் டபரா டம்ளரில் நுரை பொங்க ஆத்தி மணக்க மணக்க அம்மா கொடுப்பாளே,

    வ்வாவ் அமேசிங், அமேசிங் அம்மாவின் கை வண்ணமே தனிதான். சீக்கிரமா வீடு பாக்கணும். அம்மாவையும் அப்பாவையும் அழச்சுட்டு வந்துரணும். நமக்கு இந்த அஞ்சாவது மாடி ஓட்டல் வாழ்க்கை எல்லாம் ஒர்க் அவுட் ஆகாதுடா கண்ணா என்று நினைத்தவாறு கப் அண்ட் சாசரில் தான் கலந்த காப்பியைப் பாதியைக் கஷ்டப்பட்டு உறிஞ்சிவிட்டு, மீதியை டேபிளில் வைத்தான்.

    சுவர்க் கடிகாரம் எட்டு முறை அடித்துக் காலை மணி எட்டு என்று அறிவித்தது.

    சார் டிபன் ரூம்பாய் வந்தான்.

    இல்ல வேண்டாம் என்று அவசரமாக ட்ரஸ் பண்ணிக் கொண்டு பார்க்கிலிருந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ஆதித்யா.

    இன்று ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை என்றாலே ஒரு தனி சுகம்தான். வாரத்தில் ஒரே ஒரு நாள் அந்த நாள்தான். வேலைக்குச் செல்லும் மக்களுக்கு விடுமுறை. சோ மனைவியிடம் கணவன்மார்கள் அறிக்கை விடுவது இயல்பு தானே.

    ‘ஹேய்! நாளைக்கு சன்டே எழுப்பிடாத டார்லிங், எழுப்பிடாதடி செல்லம். ஐம் சோ டயர்டுடி கண்ணம்மா. செல்லக் குரல்களில் மனைவிகளுக்கு ஐஸ்கட்டியைத் தூக்கி வைக்கிறது. வழக்கப்படி இப்போதெல்லாம் வீட்டு வீட்டுக்கு நடப்பது வாடிக்கையாகிப் போனதே.’

    அதே போல ஆதித்யாவுக்கும் சன்டே தானே இன்னுங் கொஞ்ச நேரம் தூங்கலாமா என்று அவன் கண்கள் கெஞ்சியது,

    ச்சீ அப்பா இந்த வயசுக்கும் காலைல காவிரில போய்க் குளிச்சு காலை சுப்ரபாதத்துல ரெங்கனைத் தரிசனம் பண்ணிட்டு வர்றார்.

    நாம இந்த வயசுலயே இன்னுங் கொஞ்ச நேரம் தூங்கலாமான்னு யோசிக்கிறப்பவே ஆதித்யாவுக்கு வெட்கமாக இருந்தது.

    இன்றுதானே ஜனத்திரள்களை சற்று வீடுகளில் காண முடியும் என்று நினைத்தவாறு ஹோட்டல் கார் பார்க்கிலிருந்து காரை வெளியே எடுத்தான் ஆதித்யா.

    காலை நேரக் கடல் காற்று ரம்மியமாக இருந்தது. காரில் கண்ணாடிகளை இறக்கி விட்டான் நரம்பு மண்டலமே நாதமிசைக்கும். ரம்மியமான காற்றில் அவன் இதயமே மயங்கிப் போனது.

    வ்வாவ், இதே மாதிரி நாள் பூராவும் சென்னை கூலா இருந்தா எப்பிடி இருக்கும். கேள்விக்கணையைத் தன் இதயத்தில் தொடுத்தான்.

    அடப் போடா மடையா. வெய்யிலின் உக்ரத்தை உணர்ந்ததால்தான் இந்தக் காலைத் தென்றலின் அருமையை இனிமையை உன்னால் உணர முடிகிறது என்று அவன் மனம் பதிலடி கொடுத்தது.

    2

    அடையாறில் கன்ஸ்ட்ரக்‌ஷன் ஒர்க் நடப்பதால் அடையாருக்குள்ளேயே வீடு தேடினான் ஆதித்யா.

    கலையன்னையின் தாலாட்டில் அனைவருக்கும் அவள் பாலிக்கும் அஷ்ட லட்சுமி கோயில். பக்தர்கள் கூட்டங் கூட்டமாய் அன்னையைத் தரிசிக்கப் போகிறவர்களும் தரிசித்து முடித்தவர்களும் வந்து போய்க் கொண்டிருந்தனர். முதல்முதலா, சென்னை வந்ததுமே போகணும்னு நினைச்சேன். முடியலை. இப்ப தரிசனம் பண்ணிடணும் என்று காரைப் பார்க் பண்ணிவிட்டு, ஒரு அர்ச்சனைக் கூடையை வாங்கிக் கொண்டு தானும் கியூவில் நின்றான்.

    ‘கியூ’ எறும்பு போல ஊர்ந்து கொண்டிருந்தது. பொருமையாகக் காத்திருந்து, அஷ்டலஷ்மிகளையும் தரிசித்தான். தரிசனத்தின் போது கோவிலைச் சுற்றிலும் ஒவ்வொரு லட்சுமியும் அமர்ந்து தரிசனம் தந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

    காலை இளம் வெய்யிலில் கடற்கரை மணல்கள் பொன்னிறத்தில் மின்னியது. வானம் வளைந்து கடலன்னையை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. கிழக்கே அதிகாலை நிலவு அருணனுக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொண்டிருந்தான்.

    அந்த இயற்கையின் அழகை ரசித்தபடியே தன்னை மறந்து மணலில் அமர்ந்தான்.

    அலைகளின் சங்கீதம் காலைத் தென்றலை இன்னும் இளமையாக்கி இனிமையாக்கியது.

    இன்னும் கொஞ்சம் நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என்று ‘வாட்சி’டம் மறுமொழி கூறிக் கொண்டே முக்கால் மணி நேரத்தைக் கடத்திவிட்டான்.

    வெய்யில் உக்ரம் சற்று அதிகமானது. குளிர்ந்த தென்றலும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போனது. எழ மனமில்லாமல் தன் பேண்ட்டில் ஒட்டி இருந்த மணலைத் தட்டிவிட்டு அர்ச்சனைக் கூடையுடன் எழுந்து கிளம்பினான் ஆதித்யா.

    ஆதித்யாவின் செல்போன் இசைத்தது.

    ‘ஐய்யோ! போச்சு! அப்பாவுக்குப் போன் பண்ணி ரெண்டு நாளாச்சு. தொலைச்சிடுவார், தொலைச்சி’ என்று நடுக்கத்துடன் பார்த்தான்.

    அப்போதுதான் அவன் மனம் நிம்மதியானது. கல்லூரித் தோழன் ‘மனீஷ்’ பண்ணி இருந்தான்.

    ஹாய்! குட் மானிங். குட் மானிங்.

    ஹவ் ஆர் யூ மனிஷ்?

    ஃபைன்! ஃபைன்.

    நீ எப்படிடா இருக்கே ஆதி?

    ஃபைன்.

    சரி, எங்கடா இருக்கே மனிஷ்?

    உம் பின்னால. என்று ஹா, ஹா என்று சிரித்தான் மனிஷ்.

    ஹேய்! ஆர் யூ பிளேயிங்? ஃபூல், சொல்லுடா. டென்ஷன் படுத்தாதடா. காலங்காத்தாலே.

    ஹாய்! திரும்பித்தான் பாரேண்டா. ஃபூல் காரை ஓரமாக நிறுத்திவிட்டுத் திரும்பினான். மனீஷ் கார் பார்க்கிங்கிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

    ஆதி! காரிலிருந்து இறங்கி, வேகமாய்ப் போய் மனீசைக் கட்டியணைத்துக் கொண்டான்.

    எத்தனை நாளாச்சுடா பாத்து என்று மனீசின் தோளில் கை போட்டபடி நடந்தான் ஆதித்யா.

    சரி! என்ன பார்வையாம்? கார் கிளாச இறக்கி விட்டுட்டு, ரைட், அண்ட் லெஃப்ட். சைட் அடிக்கிறையாடா ஆதி?

    ச்சீ! நோ நோ! சைட்டுக்குப் போறேன்டா மடயா?

    இங்கேயா? என்னடா சொல்றே ஆதி. புரியலையே என்றான் மனிஷ்.

    சரி! நீ எங்கடா இந்தப் பக்கம்? என்றான் ஆதி.

    தங்கை கயல்விழி இங்கதானே இருக்கா.

    ஓ! மேரேஜ் ஆயிட்டதாடா?

    ம்ம்! ஒரு கேள் பேபி இருக்கு.

    ஓ! அவ்வளவு பெரியவளாயிட்டாளா. இத்துநூண்டு, ஆஃப் ஸ்கட் ஷர்ட்ல, ரெட்ட ஜடைல சைக்கிள்ல, கால் கூட எட்டாம பெடல் போட்டுட்டுப் போவா கயல். காலச் சக்கரம் எப்படி வேகமாகச் சுழலுது பாத்தியாடா மனீஷ்.

    அது சரி, நமக்காக அது நின்னுட்டு இருக்காதுடா உன்னைப் பத்தி சொல்லு.

    நெத்தில காலங்காத்தாலயே நாமம். அர்ச்சனைக் கூடை. எங்கடா உன்னோட ஆத்துக்காரி? என்றான் மனீஷ்.

    ஏ! கொன்னுடுவேன்டா. ஆத்துக்காரியாவது கத்திரிக்காயாவது. உனக்கெல்லாம் சொல்லாமையாடா. என்றான்.

    பையன் அடக்க ஒழுக்கமா பக்திப் பரவசமா இருந்ததைப் பாத்ததும் கேட்டேன்டா. ஒரு பேச்சுலர் மாதிரி இல்லையேடா. என்றான்.

    பேச்சுலரானாலும், ஃபேமலிமேனானாலும் இதே மூஞ்சி தான்டா இருக்கும்.

    சரி. நீங்க எப்படியாம். சிங்கிள் ஆர் டபுள் என்றான் ஆதித்யா.

    நோ நோ! ஐம் சிங்கிள். இப்பத்தான். ‘எல்.என்.டில’ ஜாயின் பண்ணிருக்கேன். இன்னும் என்சாய் பண்ண வேண்டியது நிறைய இருக்கு மேன். அதுக்குள்ள கல்யாணம், கட்டில், தொட்டில் ஐ ஹேட் திஸ்.

    ம்ம்! ரொம்ப உஷார் பார்ட்டிதான்.

    இது சைந்தவிக்குத் தெரியுமாடா மனீஷ்.

    டேய்! ஆதி, சொல்லிடாதடா. ஓட்டவாயா சைந்தவியைப் பாக்காம இருந்தா கண்டிப்பா சொல்ல மாட்டேன். பார்த்தா கண்டிப்பா சொல்லுவேன். உண்மையை மறைக்கக் கூடாதே. பாவம்டா மனீஷ்.

    ஆமா! பெரிய அரிச்சந்திரன். கொன்னுடுவேன். வாய வச்சுக்கிட்டு சும்மா இரு. போட்டுக்குடுத்துடாதடா. என்றான் மனீஷ்.

    ஆதி! வழி எல்லாம் ரொம்ப ஷார்ப்பா பாத்துக்கிட்டு வந்தாயேடா, என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? என்றான் மனீஷ்.

    ரென்ட்டலுக்கு வீடு பாத்தேன்டா மனீஷ்.

    ஓ! அப்பிடியா. சென்னைல, அதுவும் அடையார் ஏரியாவுல ரென்ட் ஓவரா இருக்குமே. நீதானே கன்ஸ்ட்ரக்‌ஷன் பண்ற. அதுல ஒரு பிளாட்டைக் கட்டி எடுத்துக்க வேண்டியதுதானேடா ஆதித்யா.

    இப்பத்தானே ஆரம்பிச்சுருக்கேன். இப்போதைக்கு ஏதோ போயிட்டு இருக்கு. கொஞ்சம் பிளாட்ஸ்கள் கட்டியிருக்கேன். அதெல்லாம் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லடா. இப்பத்தான் ஒரு பெரிய புராஜெக்ட் கிடைச்சிருக்கு. இதான் ஃபஸ்ட் டயம். பெஸ்ட்டா பண்ணனும். நானே டேரக்ட்டா சைட்ல இருக்கேன். யாரையும் நம்பி விடல. என்றான்.

    ஏ, ரெண்டு அசிஸ்டென்ட் போட்டுக்கலாமேடா ஆதி.

    இது என்னோட ஃபஸ்ட் புராஜெக்ட். ரொம்ப சின்சியரா பண்றேன். மொகலிவாக்கத்துல அடுக்குமாடி இடிஞ்சு விழுந்ததே.

    ஆமா! ஆமா! எனக்கு அத நினைச்சாலே உடம்பெல்லாம் நடுங்கும்டா ஆதி.

    எந்த வேலையையும் இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டுச் செய்யணும். லட்சியமும் இலக்கும் இருக்கணும். தொழில்ல போட்டி இருக்கணும். பொறாமை இருக்கக் கூடாது. பெரிய பில்டிங் பிரமோட்டராணுங்குறது இலக்கு. அதுலயும் நேர்மையான ஒரு பில்டரா இருக்கணுங்குறது லட்சியம். இலக்கு நமக்கானது. லட்சியம் நம் சமூகத்துக்கானதுன்னு நினைக்கணும்." என்றான் ஆதித்யா.

    சபாஷ்! வெல்டன்! வெல்டன் வெல்டன் மை பாய் அப்சலூட்லி என்று ஆதித்யாவுடன் கை குலுக்கினான் மனீஷ்.

    தேங்க்யூ! இன்ங்க்ளூடிங் மீ ஆல்சோ ஆதி."

    ரெண்டு நாளைக்கு முன்னால, சைட்டுக்கு வரும் போது இந்த வழியா வந்தேன். அப்ப ரெண்டு ‘டூ’ லெட் போடு பாத்தேன். வீடு நல்லா பெரிசா அழகா தெரிஞ்சது. இப்ப அந்த டூ லெட் போடு மாட்டிருந்த வீட்டத்தான் பாத்துக்கிட்டே வரேன் மனீஷ். என்றான் ஆதித்யா.

    டேய்! அறிவிருக்காடா, சென்னைல அதுவும் அடையாறுல டூ லெட்னா சும்மாவா உடனே அட்லீஸ்ட் டோக்கன் அட்வான்சாவது குடுத்து புக் பண்ணனும். இதெல்லாம் ‘ஐ.டி’ ஏரியா. கொத்திட்டு போயிடுவாங்க. கம்பெனிஸ் பக்கத்துலயே வீடுன்னா சும்மாவா. எவ்வளவு சேவிங்ஸ்ன்னு புரிஞ்சுக்கோ. ட்ராவலிங் டயம் மிச்சம். வெகிக்கிள் செலவு மிச்சம். அப்படியே பொடி நடையா ஆபீசுக்கு டென்ஷன் இல்லாம ஃபிரியா போயிட்டு வரலாமே. யோசிச்சுப் பார்றா ஆதி. தப்புப் பண்ணிட்டடா ஆதி. பாத்ததுமே புக் பண்ணிடணும். புரோக்கர் வச்சு வீடு பாத்தா கத கந்தலாயிடும் தெரிஞ்சுக்கோ ஆதி. என்றான் மனீஷ்.

    நானும் அதையேதான்டா மனீஷ் நினைச்சேன். அப்பா அம்மாவக் காம்ப்ரமைஸ் பண்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிட்டது. அவுங்களுக்கு ஸ்ரீரங்கத்தைவிட்டு வரவே மனசில்ல. கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க. என்றான்.

    சரி! நீ அவங்க விருப்பப்படியே விடவேண்டியது தானே ஆதி.

    இப்போதைக்கு எங்கப்பா அம்மாவுக்கு ஒரு சேஞ்ச் ஆஃப் பிளேஸ் வேணும். சோ கண்டிப்பா கூட்டிட்டு வந்தே ஆகணும் மனீஷ்."

    ஆதி! தப்பா எடுத்துக்க மாட்டையேடா.

    சொல்லு மனீஷ். நமக்குள்ள என்னடா?

    எனி ஃபேமலி பிராப்ளம்? என்றான் மனீஷ்.

    எப்பிடிடா இவ்வளவு ஷார்ப்பா கண்டுபிடிச்சே. ஒரு ஒரு வீட்லயும் நடக்குறது தானே. அதுவும் பிள்ளைங்க இந்த ஏஜ்ல இருக்கும் போது. என்றான் மனீஷ்.

    ரெண்டு அண்ணன்களும் மாமனார் வீட்டோட செட்டில்டு. அப்பப்ப கால் பண்ணி அப்பா அம்மாட்ட பேசிக்குவாங்க. அப்பாவுக்குக் கோபம் அதிகம். ஏன்னா, மூத்த பையன்கள் இப்பிடிப் பண்ணிட்டாங்களேன்னு. சோ அது மாதிரி நானும் இருந்துருவேனோன்னு பயம். அதுக்காகத்தான் என்னோட இருக்க யோசிக்கிறாங்க மனீஷ். நான் இப்ப அப்பா அம்மாவ ரொம்பவே காம்ப்ரமைஸ் பண்ணிருக்கேன்.

    அம்மாவை நினைச்சா பாவமா இருக்குடா மனீஷ்.

    ஏ! என்னாச்சு ஆதி என்றான்.

    அப்பாவுக்கும் நல்ல மனைவியா இருக்கணும். பிள்ளைங்களுக்கும் நல்ல அம்மாவா இருக்கணும். இருதலைக் கொள்ளியா கஷ்டப்படுறாடா மனீஷ்.

    புரியலைடா என்றான் மனீஷ்.

    அதான் சொன்னேனே. அப்பாவுக்கு கோபம் ஜாஸ்தின்னு.

    ஆமாம் வயசாயிட்டாலே அப்படித்தான்டா. அறுபதுக்கு மேல ‘கிரு கிருப்பு’ன்னு சொல்லுவாங்களே அது இந்த மாதிரி ஏஜ் டைம்லதான். அதெல்லாம் நாம பெரிசா எடுத்துக்கக் கூடாதுடா ஆதி.

    நான் அந்த மாதிரில்லாம் எடுத்துக்கல மனீஷ். அப்பா அண்ணன்களைத் திட்டும் போது அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க. சம்டைம்ஸ் அப்பா வீட்ல இல்லாத நேரத்துலயோ இல்ல தூங்கிட்டு இருந்தாலோ, அம்மா அண்ணங்க போன் அட்டன் பண்ணும்போது எவ்வளவு பேசறாங்க தெரியுமா. அதே டயம், அப்பா பையனுக போன் பண்ணுனாங்களான்னு கேட்பார். எங்கம்மா தாம் பெத்த புள்ளைங்களத் திட்டுவாரேன்னு அப்பாவுக்கு சாதகமா பையங்க பேசுனதாவே பேசி அப்பாவ காம்ரமைஸ் பண்ணிடுறாங்க. அம்மா எங்களுக்காக அப்பாட்ட எவ்வளவு பொய் சொல்லி சமாளிக்கிறாங்க தெரியுமாடா. நாங்க திட்டு வாங்கக்கூடாதுன்னுதான். என்றான்.

    எல்லா அம்மாக்களும் அப்பிடித்தான்டா. குடும்பத்துக்குள்ள அப்பா பிள்ளைங்களுக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆயிடக் கூடாதேன்னுதான். உன்னோட டெசிஷன் சரிதான்டா ஆதி. கண்டிப்பா நீ அம்மா அப்பாவக் கூட்டிட்டு வா. அவங்களுக்கும் ஒரு சேஞ்ச் ஆஃப் பிளேஸ் அவசியம்தான். அவங்களோட டயம் ஸ்பெண்ட் பண்ணுடா ஆதி. ரெண்டு பையன்கள்ட்ட அவங்க எதிர்பார்த்தபடி பாசம் கிடைக்கல. சோ கோபம். அவுங்களுக்கு நீ அதக் குடுக்கணும். அப்புறமா பாரேன். கொஞ்சங் கொஞ்சமா நார்மலுக்கு வந்து ரொம்ப ஹேப்பியா ஆயிடுவாங்க.

    டூ இட். வித் பிளஷர் ஆதி.

    ஏ என்னடா கிளம்பறே? நான் இப்ப ஒரு ரூம்ல தங்கி இருக்கேன் வந்துட்டுப் போடா மனீஷ்.

    அப்பா, அம்மா வரட்டும். வீட்டுக்கே வந்து விருந்து சாப்ட்டுட்டுப் போறேன். அண்ட் ஆல்சோ இன்னொரு ட்ரீட். சீக்கிரமா குடுக்கணும். புரியுதாடா ஆதி.

    டேய்! அதெல்லாம் இப்பக் கிடையாது. சீக்கிரமா நீயும் சைந்தவியும், எங்க வீட்டுக்கு டின்னர் சாப்ட வரணும். ட்ரைடா. சரி வா ஹோட்டல்ல டிபன் சாப்ட்டுட்டுப் போகலாம். என்று மனீஷுடன் கிளம்பினான். இருவரும் அடையார் பார்க் ஷெராட்டனில் நுழைந்தனர்.

    என்னடா ஆதி. இன்னும் இட்லிய விடலையா? ஆதி சிரித்தான். "அதெப்பிடி மறக்க முடியும். பொறந்ததுல இருந்து அம்மா கைப் பக்குவத்துல சாப்ட்டு வளர்ந்த உடம்பாச்சே. இன்னும் நாக்கு அதையேதான

    Enjoying the preview?
    Page 1 of 1