Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Minnalgal
Kanavu Minnalgal
Kanavu Minnalgal
Ebook157 pages1 hour

Kanavu Minnalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704110
Kanavu Minnalgal

Read more from Lakshmi Rajarathnam

Related to Kanavu Minnalgal

Related ebooks

Reviews for Kanavu Minnalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Minnalgal - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    கனவு மின்னல்கள்

    Kanavu Minnalgal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    பளபளவென்று இன்னும் பொழுது விடியவில்லை. சாம்பல் நிறத்தைக் கழுவியது போல கரைந்து மெல்ல வெளுப்பு வந்து கொண்டிருந்தது. இளங்காற்றில் செடிகள் தலையசைக்க மலர்கள் நுனியில் ஊஞ்சல் ஆடின. காற்றின் இசைக்குத்தக்கப்படி தாலாட்டின மரக்கிளைகள்.

    வைகறை சுகத்தை அனுபவித்தபடி கையில் சிறு பெட்டியை ஆட் டியபடி, தோளில் பைதொங்க துள்ளல் நடை போட்டு வந்தாள் சந்தியா, அந்தத் தடத்தில் அதிகாலை நேரப்போக்குவரத்து அதிகமில்லை. ஒன்றிரண்டு வண்டிகள் வயல்காட்டை நோக்கி போய்க்கொண்டிருத்தன.

    கிராமத்து மாடுகளின் ஜதி தவறாத ஓட்டம் காலை சங்கீதம் தான். அவள் வருவது தெரிந்தால் பெரிய திட்டத்திற்கு வீட்டு வண்டி வந்திருக்கும். ஒரு வாரம் திடீரென விடுமுறை. நடுவில் சனி, ஞாயிறு வந்தது வசதியாகப் போயிற்று. அப்பாவும், பாட்டியும் நிச்சயம் திட்டுவார்கள். இப்படி விடியற்காலையில் கோவையிலிருந்து ஒன்றரை மணிப்பயணம் தான் என்றாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

    பெண் பெண்தான் என்பது பாட்டியின் மாற்ற முடியாத வாதம். அவள் கிராமத்தை விட்டு என்ஜினீயரிங் கல்லூரியில் போய் சேருவது அவளுக்குப் பிடித்தமான செயல் தான் அப்பாவின் சப்போர்ட் இல்லாவிட்டால் கோவை போயிருக்க முடியாது. இன்று வீட்டில் நுழைந்தாலும் மண்டகப்படி இருக்கத்தான் செய்யும்.

    அவள் முன்தினம் மாலையிலேயே கிளம்பி இருப்பாள். தோழிகள் புது சினிமாவிற்கு இவளைக்கேட்காமலேயே புக் பண்ணி விட்டார்கள். மாலை பேருந்தை விட்டால் இரவு ஒன்பதரைபேருந்து. அதில் பயணப்பட்டு தனியாக பெரிய தடத்தில் இருந்து ஒத்தையட்டி தடத்தில் நடந்து வர முடியாது. பாம்பு நடமாட்டம் வயல்காட்டு பகுதியில் அதிகம். மரத்தின் அடியில் இந்நாட்டுக் குடிமகன்கள் தாறுமாறாக பேசிக் கொண்டு கிடப்பார்கள். அந்தக் கூட்டத்தை தனியாக ஒரு பெண் கடப்பது சாதாரண விஷயம் இல்லை. அவர்கள் வேறு உலகத்தில் கிடப்பவர்கள். நல்லது கெட்டது தெரியாது.

    வீட்டை அடைந்து விட்டாள் சந்தியா. வீட்டிற்கு முன் பெரிய திறந்தவெளி, வீட்டின் முன்பு வாசலை அருக்காணி பெருக்கி சாணம் தெளித்து விட்டுப் போயிருந்தாள். வெங்கலமாக ஒளிர்ந்ததுதரை. பாட்டி அருக்காணியைக் கோலம் போட விடமாட்டாள். வீட்டுப் பெண்கள் கோலம் போட்டால் தான் லட்சுமி தேவி வருவாளாம். இது பாட்டியின் நம்பிக்கை. நாளையிலிருந்து இவளைக் கோலம் போட வைத்து விடுவாள் பாட்டி. பிளக்கும் இடுப்புவலியைப் பொருட்படுத்தாமல் இரண்டு இழை இழுத்துக் கொண்டிருக்க, அவள் முன்பு போய் நின்றாள்.

    பாட்டி.....

    பேத்தியின் குரல் கேட்டுதாறுமாறாக இடுப்பை நிமிர்த்த இவள் போய் தாங்கி நிற்க வைக்க வேண்டியதாயிற்று.

    என்னடி திடுமுனு இப்படி வந்து நிக்கிறே?

    சந்தியா குறும்புக்காரி தான். அதுவும் பாட்டியுடன் வாயாடுவதில் வஞ்சமில்லாமல் வாதாடுவாள்.

    ஏன்பாட்டி. இப்ப நாள் நல்லா இல்லையா? நான்வேணா போயிட்டு நாளைக்கு வரட்டுமா? சிரிக்காமல் கேட்டாள்.

    போடி வாயாடி

    பாட்டிக்கு வெங்கலக்குரல். சமையலறை நான்காம் கட்டில் இருந்தது. அங்கே பேசினால் இங்கே வாசல் வரை ஸ்பீக்கர்கட்டி பேசுவது போலக் கேட்கும். மெல்லப் பேசத் தெரியாது. ஆனால் இவள் அப்பாவுக்கு சீச்சு மூச்சுக் குரல். சளி பிடித்தாய் போலவும், சமயத்தில் எலி ஒன்று கதவடியில் மாட்டிக் கொண்டது போலவும் தொனிக்கும். அப்படியும் காலை ஐந்து மணிக்கே புருஷ, ஷூக்தமும், விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தையும் சொல்ல ஆரம்பித்து விடுவார்.

    சந்தியா இருக்கும் நாட்களில் போர்வையால் காதை இழுத்து மூடிக்கொண்டு விடுவாள். அப்பா பாவம்! அவருடைய வேலை அவருக்கு. அம்மா இல்லாத அவளை பாட்டியும், அப்பாவும் தான் அருமையாக வளர்த்து வருகின்றார்கள். அவர் மனத்தை நோக வைக்கலாமா!

    பாட்டியின் குரல் கேட்டு அப்பா வெளியே வந்து விட்டார்.

    சந்தியாவா, வா...வா… என்னடா காலேஜ் லீவா? எதுக்கு திடீர்னு லீவு? விவஸ்தையே கிடையாது. ம்முனா லீவு. அம்மா, குழந்தைக்கு காப்பி கொடும்மா எனக்கு கூட ஒரு டோஸ் கொடு என்றவர். துண்டையும், வேஷ்டியையும் உதறிக் கொடியில் போடுகிறார்.

    தன்னுடைய துணிகளைத் தானே துவைத்துக் கொள்ளும் பழக்கம். பாட்டி இடுப்பைப் பிடித்து கொண்டே சமையலறைக்குள் நுழைந்து விட்டாள்.

    வெண்டைக்காய், கத்திரிக்காய், கிரைன்னு கொல்லை பூரா காய்ச்சும் கிடக்கு. குழந்தை வரலையேன்னு நினைச்சேன். வந்துட்டா. காப்பியைக் கொடுத்தா குடிச்சுட்டு போய் பறிச்சாண்டு வந்துருவேன் என அப்பா நாராயணசுவாமி தாழ்வாரத்து பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்.

    பிள்ளை இல்லா வீட்ல கிழவன் துள்ளி விளையாடினானாம். அப் படி இருக்கு. இவன் பரபரப்பு. உழக்கு அரிசி கொதிக்கத்துக்குள்ள ஊரைக் கூட்டிடுவான். காப்பி கலந்து தானே ஆகனும்? என்ற பாட்டி யின் பழமொழி கலந்த பேச்சு முற்றத்து ஓரத்து ஜலதரையில் பல்துலக்கி, முகம் கழுவிக் கொண்டிருந்த சந்தியாவின் காதுகளில் விழுந்தது.

    பாட்டிக்கும் பழமொழிகளுக்கும் நிறைய தொடர்பு உண்டு. மரத்திலிருந்து உதிரும் பழமாக பழமொழிகளை உதிர்ப்பாள். சந்தியா சிரித்துக் கொண்டாள். அப்பா என்ன கேட்டு விட்டார்?

    ஒருவாய் காப்பி. அதற்கு இத்தனை புராணமா!

    பேசிக் கொண்டே பாட்டி காப்பியைக் கொண்டு வந்து விட்டாள். மகன் முன்னால், ‘ஞங்’கென்று டபரா டம்ளரை வைத்தாள்.

    எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்னு சொல்ற மாதிரி கொல்லையில் போய் காய் பறிக்க இத்தனை ஆர்ப்பாட்டம் என்றபடி பேத்தியிடம் நுரை ததும்பும் காப்பியை நீட்டினாள்.

    எதுக்கு நீட்டி முழக்குறே. அப்பா என்ன கேட்டுட்டார். ஒரு வாய் காப்பி அதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?

    சத்தியா காப்பியை ரசித்துக் குடித்தாள்.

    உனக்குத் தெரியாதுடி பெண்ணே, உன் அப்பன் இல்லாத ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணுவான். நீ இருந்தா அடங்கி ஒடுங்கி இருப்பான்.

    குபீரென்று சிரித்து விடுகிறாள் சந்தியா.

    இப்ப என்னடி சிரிப்பு?

    நீ சொன்னதுக்கு சிரிக்காம என்னத்த பண்றது? அப்பா என்னவோ குரங்கு மாதிரியும் தான் குரங்காட்டி மாதிரியும்னா நீ சொல்றே? தாண்ட்ரா ராஜா தாண்டு. எங்கே, மாமியார் வீட்டுக்குத் தண்ணி தூக்கு’னு அப்பாவை ஆட்டி வைக்கிறேனா? போ பாட்டி."

    பேத்தியின் பேச்சு பாட்டிக்கு சிரிப்பை உண்டாக்கியது. அப்பாவுக்கு மகளின் புத்திசாலித்தனமான பேச்சில் பெருமை உண்டு. காப்பியைத் துளித்துளியாக ரசித்துக் குடித்தவாறே பெண்ணின் நகைச்சுவையில் சிரித்துக் கொள்கிறார்.

    நீ இருந்தாத்தான்டா வீடுகலகலனு இருக்கு என்கிறார்.

    நான் குளிச்சுட்டு வரேன். வெந்நீர் கொதிச்சுகிட்டு கெடக்கு, எண்ணெய் தேய்ச்குளிக்கணும்.

    பாட்டிக்கு எண்ணெய் குளியல் முக்கியம். பாட்டியின் பராமரிப்பில் கருகருவென்று நீண்ட முடி. அவ எருக்கு. பாட்டி தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு கொல்லைப்புற குளியலறைக்குப் போனதும் அப்பா காய்கறி பறிக்க கூடையை எடுத்துக் கொண்டார்.

    பூ நிறைய இருக்கு. குளிச்சுட்டு தலைவாரிண்டு வச்சுக்கோ.

    பூக்குடையை எடுத்துக் கொண்டு செடிகளைப் பார்த்துக் பார்த்து கொண்டு நடந்தார். வீட்டிற்குள் வர ஒரு மணி நேரமாவது ஆகும். தானே பாத்தி கட்டி, உரம் போட்டு ஒவ்வொரு செடியாக நின்று பார்த்து பார்த்து வளர்த்து வருவது அவருடைய ஸ்பெஷாலிடி. அவர் கை ராசி! காய்காய்த்து தொங்கும். பூக்கள் பூத்துக் குலுங்கும்."

    தென்னனயும், மாவடுவும், கொய்யாவும் அவருக்கு செல்வலட்சுமியாக வருமானத்தை அள்ளிக் கொட்டின. குத்தகைக்கு விட்டாலும் பாடுபடுபவர் அவர் தானே? ஒவ்வொரு மரத்தையும் தொட்டுப் பார்த்து மகிழ்வார். வீட்டு உபயோகத்திற்கு என்று வீட்டின் பின்புறம் மரங்கள் காய்த்துக் குலுங்கும்.

    அப்பாவும், பாட்டியும் கூடத்தில் இல்லை. அவ்வளவுதான் இரண்டே எட்டில் மான் பாய்ச்சலாகப் பாய்ந்து தாவி வாசலைத்தாண்டி ஒற்றையடித் தடத்திற்கு வந்த சந்தியா நடக்கத் தொடங்கினாள். பாய்ந்து வந்ததில் மூச்சிரைத்தது. அந்தக் குளிரிலும் முத்து முத்தாக வியர்த்தது.

    கிராமத்து ஓரமாக இருந்த பகுதிக்கு அவள் நடந்தாள். தடத்தின் ஓர் ஓரமாக சிண்ணாண்டி ஆட்டுக்குத் தழை ஒடித்துக் கொண்டிருந்தான். இவளைப் பார்த்துவிட்டவன் ஈயென பல்லை இளித்துத் தலை முண்டாசுக்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1