Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravugal Thodarkathai
Uravugal Thodarkathai
Uravugal Thodarkathai
Ebook213 pages1 hour

Uravugal Thodarkathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704104
Uravugal Thodarkathai

Read more from Lakshmi Rajarathnam

Related to Uravugal Thodarkathai

Related ebooks

Reviews for Uravugal Thodarkathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravugal Thodarkathai - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    உறவுகள் தொடர்கதை

    Uravugal Thodarkathai

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    பதிப்பாசிரியரின் பரிந்துரை

    உறவுகள் தொடர்கதை நாவல் உழைத்து முன்னேறும் பெண்களுக்கு உற்சாகம் கொடுத்திடும் ஒரு டானிக். இக்கதையின் நாயகி சாலினி பஸ் கண்டக்டரை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டதால், தந்தையும், தாயும் இவளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஊரை விட்டு ஓடி விட்டாலும் கைப்பிடித்த காதலனுடன் வாழ்ந்து, தாயிடம் கற்றுக் கொண்ட உழைப்பின் அனுபவத்தை பயன்படுத்தி உயர்நிலையை அடைகிறாள். குறுகிய கால வாழ்க்கையில் கணவனை மரணம் தழுவினாலும் பெற்ற மகனை பேணிக்காத்து, கணவனை கண்ணால் காணும் ஜீவனாக மகனை வளர்த்து தன் திறமையினால் அவனை உயர்ந்த நிலைக்கு உயர்த்தி தன் சகோதரனின் மகளையே மருமகளாக்கி உறவுகள் தொடர்கதையாக கொண்டு செல்வதே கதையின் மூலக்கரு. இடையில் ஏற்படும் இன்பம், துன்பம், ஏற்றத்தாழ்வுகளை தொய்வின்றி சுவாரஸ்மாகக் கொண்டு செல்வதே இக்கதையாசிரியரின் கைவண்ணம்.

    1

    இரண்டு தினங்களாக வீட்டின் மாடி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சமும் - சுபஸ்ரீக்குப் பிடிக்கவில்லை. மாடியில் இருக்கும் ஒற்றை அறை அவளுடையதாக இருந்தது.

    இப்பொழுது அது இன்னொருவர்க்கு பறிபோகப் போவது என்றால் அவளுக்கு எப்படி கோபம் வராமல் இருக்கும்? பரீட்சை சமயங்களில் போனால் போகிறது என்று அண்ணன் ராகுலுக்கு படிக்க அனுமதி வழங்குவாள்.

    மாடியறைக்கு கீழ்தளத்தின் பெரிய ஹால் ஓரத்திலிருந்தே படிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால் சின்ன தாழ்வரையும் அமைந்து இடுப்பளவு தடை கம்பிகளும் போடப்பட்டு இருந்தன. மாடியறையிலிருந்து வெளியே வந்து தாழ்வாரத்தில் நின்றே கீழ் ஹாலைப் பார்க்கலாம்.

    மாடியறையின் அந்தப் பக்கம் பெரிய திறந்தவெளி வீட்டைச் சுற்றி இருந்த மண்வெளி விஸ்தாரமாக இருந்தது. சுபஸ்ரீயின் தந்தைக்கு இயற்கையை ரசிக்கும் மனப்பாங்கம் இருந்தது. வீட்டைச் சுற்றி இருந்த பரந்த வெளியில் தென்னை, மா, கொய்யா என்று வலது பக்கம் வைத்திருந்தார். இடதுபுறம் நெல்லி, கடாரங்காய், என்றும் பின்புறம் வாழை கிணற்றடியில் வைத்திருந்தார்.

    சுவரோரம் பூச்செடிகள் கண்ணுக்கு இனிய குரோட்டன்ஸ் செடிகள், ஓர் ஓரமாக மருதாணி செடியாக வைத்தது அடர்ந்து பூங்கொத்துகளாகி வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தது. மொத்தத்தில் அது ஒரு குட்டி பங்களா அதில் சுபஸ்ரீக்கு ஏகப்பட்ட பெருமை.

    காம்பௌண்ட் சுவரின் வாசலிலிருந்து வீட்டிற்கு படி ஏறியதும் சின்ன வராந்தா பெரிய கேட்டில் நுழைந்து காரை இடதுபுறம் நிறுத்தலாம். சுபஸ்ரீயின் அப்பா குணசேகரன் கார் ஒன்றை வைத்திருந்தார். கொஞ்சம் பழைய மாடல் கார்...

    இடது புறம் கார் நிற்பதனால் வலதுபுறம் ராகுவின் பைக் நிற்கும். மேல் தாழ்வாரத்தில் இரண்டு மூங்கில் கூடை ஊஞ்சல் குணசேகரன் இரவு சாப்பாடு முடிந்ததும் தன் மனைவி பத்மாவுடன் அங்கு தான் தாம்பூலம் தரிப்பார். ராகுலும், சுபஸ்ரீயும் படித்துக் கொண்டிருப்பதனால் இது தம்பதியரின் ஏகாந்த இடம்.

    மலர்களின் நறுமணத்தை சுவாசித்துக் கொண்டே மனைவியின் கையால் தாம்பூலம் தரிக்கும் பாக்கியம் எத்தனை பேர்களுக்குக் கிடைக்கும்? சில சமயம் பத்மா தட்டு நிறைய பழங்களை நறுக்கிக் கொண்டு வருவாள். குணசேகரன் தானாக எடுத்து உண்ண மாட்டார்.

    பத்மா... ஆ... ஆ... என்று வாயைத் திறப்பார்.

    ரொம்ப நன்னா இருக்கு? பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணினா பேரன் பேத்தி பிறந்திருக்கும் என்று பத்மா செல்லமாகத் தோளில் இடித்துக் கொள்வாள்.

    முகத்தை அசங்காது வைத்துக் கொண்டு அவளையே பார்ப்பார்.

    என்ன அப்படி பார்க்கிறீங்க

    பள்ளிக்கூட நாட்கள்ல தமிழ் பொயட்ரியில் குற்றாலக் குறவஞ்சியில ரெண்டு மூணு செய்யுள் போட்டிருப்பான்.

    இப்ப அதுக்கு என்னவாம்? என்று உதட்டைச் சுழிப்பாள் பத்மா

    அதுல ஒரு பாட்டு வானரங்கள் கனி கொடுத்து மந்தியொரு கொஞ்சும்னு ஒரு பாட்டை படிச்சிருக்கியா? படிச்சிருக்கேன்

    படிச்சுமா எனக்குப் பழத்தை ஊட்ட மாட்டேங்கறே?

    வானரங்கள் கனி கொடுத்துக் கொஞ்சறத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

    குணசேகரன் பகபகவென்று சிறப்பாக அந்தச் சிரிப்பு கூடம் தாண்டி மாடிக்குக் கேட்கும்.

    ராகுல் அப்பா அம்மாவைச் சீண்டி விட்டுச் சிரிக்கிறார் பாகு கேட்கிறதா?

    பொழுது போகல்ல சீண்டிக்கறா எனக்கு அஸைன்மெண்ட் இருக்கு நீ ப்ளஸ் டூ ஞாபகம் வச்சுக்கோ என்பான்.

    குணசேகரனும் பத்மாவும் இளைஞர்கள் அல்ல. முதியவர்களும் இல்லை. ஆசையும் அழமாகப் பரவிய அன்பும் பெரிய மழைக்குத் தெரியும். வேராக வெளிப்படும்.

    சரி... சொல்லுங்கோ.

    பத்தூ… இதுல காதல் மறைஞ்சிருக்கு அன்பு ஆசனமிட்டு உட்கார்ந்திருக்கு. பரிவும், பாசமும் வேரோடி இருக்கு. கனிவு கண்களில் ஊர்வலம் வருது.

    இதெல்லாம் பள்ளிக்கூடத்துல சொல்லித் தராங்களா?

    'புரிஞ்சுக்கணும் இலை மறைவு காய் மறைவுனு இருக்கு பார் வானரமே மந்திக்குக் கனி கொடுத்துக் கொஞ்சறது பார். தாம்பத்துல நீயும் இப்படி இருக்கணும்னு திரிகூட ராசப்ப கவிராயர் சொல்லி இருக்கார். செக்ஸ் கல்வியின் ஆரம்பப்பாடமே இங்கே இருக்கு பார்" என்பார் குணசேகரன்.

    அவர் கிரானைட் கற்கள் விற்கும் வியாபாரி தான் அவர் மனமென்னும் பாறையில் இலக்கியங்களைச் செதுக்கி வைத்திருந்தார்.

    சிறு குழிக்குள் தேங்கிய கொஞ்ச நீரை ஆண்மான் குடிக்கட்டும் என்று பெண் மானும், விட்டு வைத்த சங்க இலக்கிய பாடல் அவரை உருக வைத்திருந்தது.

    வாழ்க்கை என்பது அழகான மலர். அதன் நறுமணத்தை நுகரத் தெரிந்திருந்தால் தான் அழகாக வாழ முடியும். இதை அவர் தன் மனைவி பத்மாவிற்கும் சொல்லிக் கொடுத்திருக்கார். ஆனால் மகள் சுபஸ்ரீ கொஞ்சம் வேறுபட்டிருந்தாள்.

    கொஞ்சம் பிடிவாதம். கோபம்... அவர் யோஜனைக்கு ஏனென்று தோன்றவில்லை. அவளுாள் கோபம் சில சமயங்களில் முரட்டுத் தனத்தை வேறொன்றைச் செய்து விட்டிருந்தது. மாடியை இரண்டு தினங்களாக அப்பா குணசேகரன் வெள்ளையடித்து அழகு படுத்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

    தன்னுடைய பொம்மையை யார் தொட்டாலும் பிடிக்காத மனோநிலையில் தான் அவள் இருந்தாள். வரப்போவது வேறு யாருமில்லை. சொந்த அத்தையும் அத்தை மகனும்தான். இதில் வெறுப்பு ஏற்பட என்ன காரணம் இருக்க முடியும்? என்றுதான் மற்றவர்களுக்குத் தோன்றும். காரணம் என்று சொல்ல முடியாத உள்ளுணர்வு எண்ணங்கள் சில சமயங்களில் வாழ்க்கைப் பாதையில் தடையாகி நின்று விடுகின்றனவே.

    அதை உடைத்து எறிய முடியாத சரிவுகளுக்கு நம்முடைய மனங்களே காரணங்களாக அமைந்து விடுகின்றன. சம்ப்தராயங்கள் மனித மனங்களை முள் நிரம்பிய காடுகளாக வளர்த்து விடும் பொழுது அந்நியத் தன்மை வந்து சூழ்ந்து வழி விடுவதில்லை. அப்படித்தான் குணசேகரின் குடும்பத்தில் முள்பாதை வந்து சூழ்ந்துக் கொண்டது.

    தனஞ்சயன் கமலம்மாவின் இருகண் மணிகளாய் வளர்ந்தவர்கள் விசாலம் குணசேகரன் இருவரும் தஞ்சைக்கு அருகில் ஒரு கிராமம். தனஞ்சயன் சில பேர்களின் நிலங்களக்கை குத்தகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தார். குத்தகை நில சொந்தக்காரர்களுக்கு உரிய முறையில் நெல்லையும் அளந்து, குத்தகை பணத்தையும் கொடுத்து விடுவார். நிலத்தில் இறங்கி பாடுபடுபவர்களின் வயிற்றில் அடிக்கவும் மாட்டார்.

    இது போக மீதி பணம் அவருக்கு தாராளமாகவே வந்தது.

    குத்தகைக்கு நிலம் எடுத்தவரின் ஒருவர் வீடு இவர் குடும்பம் தங்க வசதியாய் இருந்தது. கொல்லையில் கீரையும், புடலை, பாகல் என்று விளைந்தது. தென்னை மரங்கள் இவர்களின் தேவைக்கு உதவின. வஞ்சனை செய்யாத உழைப்பு இவர் வீட்டிற்கு தெய்வ கடாட்சத்தைக் கொடுத்தது.

    தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி நிறைய சிந்திப்பவர் தனஞ்சயன். வள்ளுவரின் வாசுகியாய் வாழ்ந்தாள் கமலம்மா. அருமைப் பெண் விசாலத்தை சாலா என்று தான் செல்லமாய் அழைப்பார்கள். பட்டுப் பட்டாய் பாவாடை, நகைகள் என்று வாங்கிப் போட்டு அழகு பார்த்தனர். அவள் கல்யாணத்துக்கு என்று நிறையவே நகைகள் வாங்கி சேர்த்தனர்.

    உள்ளுர் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரையில் தான் பள்ளிக்கூடம் இருந்தது. விசாலம் படிப்பில் கெட்டிக்காரி. பாட்டு பாடுவதில் குயில், கண் பார்த்தது கை செய்யும். பண்டிகை காலங்களில் தோழிகள் கூடச் சேர்ந்து வாசலை அடைத்துக் கோலம் போடுவாள். காவிரி ஆற்றில் கோடை காலத்தில் நீர் வற்றிப் போகும் திட்டுத் திட்டாய் மண் மேடுகளைச் சுற்றிக் கொண்டு ஆழமில்லாமல் நீர் ஓடும்.

    அனைத்து வீடுகளும் சித்ரான்னங்கள் தயாரித்துக் கொண்டு நிலாச் சாப்பாடு சாப்பிட ஆற்றங்கரை மண் மேட்டிற்குப் போவார்கள். அதில் இந்தப் பெண்களின் கொண்டாட்டம் அதிகம் இருக்கும். கும்மி கோலமாட்டம், டான்ஸ், டிராமா என்று கும்மாளம் போடுவார்கள். வீடு திரும்ப இரவு பன்னிரெண்டு மணியாகிவிடும். தொலைகாட்சி பரவாத காலம் அது.

    எட்டாம் வகுப்பு முடிந்ததுமே விசாலம் வயதுக்கு வந்து விட்டாள். தனஞ்சயனுக்குத் தன் பெண்ணை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பட்டது. கமலம்மா கணவனின் வார்த்தைகளை மீறியவள் இல்லை.

    கமலா நீ என்ன சொல்றே?

    நீங்க சொல்றதுதான் சரினு படறது கணவரின் வார்த்தைகளையே கோடாகக் கருதித் தாண்டாதவள்

    சாலா

    என்னம்மா?

    நீ படிச்சது போதும்னு அப்பா சொல்றார். எனக்கும் அதுதான் சரினு தோண்றது

    அம்மாவையே பார்த்தாள்.

    அப்பா சொல்றதுதானே உனக்கு வேதவாக்கு?

    ஆமாம் டி குழந்தை

    தாயும், மகளும் பேசுவதை தனஞ்சயன் ஈஸிச்சேரில் சாய்ந்து படுத்தவாறு கேட்டுக் கொண்டிருந்தார். இருவரின் எண்ண ஓட்டங்களை இருந்து அளக்க இது போன்று சமயம் வாய்ப்பது அரிது.

    அம்மா, அப்பாவுக்கு வெளி வேலைகள் அதிகம். கார்த்தாலே போனா மதியம் ஒன்னரை மணிக்குச் சாப்பிட வரார். உனக்கு சமையல் வேலை முடிஞ்சா நீ என்ன பண்றே?

    பூக்கட்டுவேன். வீட்டு வேலைகள் செய்வேன். அக்கம் பக்கத்துப் பெண்களோட பேசிக் கொண்டிருப்பேன். கலகலவென்று சிரித்தாள் விசாலம்.

    2

    மதகடியில் அமைதியைக் கிழித்துக் கொண்டு சளசளவென்று சங்கீத ஓசையாகத் தாளம் தவறாமல் விழும் தண்ணீராக மகளின் சிரிப்பு பட்டது. கண்களை மூடிக் கொண்டே ரசித்தார். தனஞ்சயன்.

    ஏண்டி சாலி சிரிக்கிறே?

    சிரிக்காம என்ன பண்றது? என்னையும் பூத்தொடுத்துண்டே கோடி வீட்டுக் குஞ்சம் மாவுக்கு ஏன் இன்னும் குழந்தை பிறக்கல்ல? நாக தோஷமா? நல்ல ஜோஸ்யர்கிட்ட கேட்டு பரிகாரம் பண்ணக் கூடாதோ? அவ புருஷனுக்கு மாமியார்காரி ரெண்டாம் கல்யாணம் பண்ணிடப் போறாளாமே? அப்படின்னு நானும் பேசணும். இல்லையாம்மா? என்று கேட்ட மகளையே ஆச்சர்யமாய் பார்த்தாள் கமலம்மா.

    உனக்கு சரியான வாய்டி சாலி நீ பேசினதைத் தான் சொன்னேன் பாவம்டி சாலி கோவில்ல என்னைப் பார்த்துட்டு கொத்துக் கொத்தா கண்ணீர் விடறது

    அப்பா வீட்ல இருக்கார். வம்பு பேச யாரும் வரல. எங்கிட்டவே பேசறியா? என்று கேட்ட சாலியை தனஞ்சயன் கண்கள் விரியப் பார்த்தார்.

    வெற்றிலைப் பெட்டியைத் திறந்து துடை வேஷ்டியில் வெற்றிலையைத் துடைத்து சுண்ணாம்பு தடவினார். சீவலை அள்ளி வாயில் திணித்துக் கொண்டார். தான் இப்பொழுது பேச வேண்டாம் என்று தடை போடுவது போல இருந்தது அவரின் செயல்.

    வெற்றியை போடுவதில் தஞ்சாவூர்க்காரர்களை மிஞ்ச யாராலும் முடியாது. வெற்றிலை போடுவதையே கலையாகப் பயின்றவர்கள் போலப் போடுவார்கள். கையில் வெற்றிலைப் பெட்டி இல்லாமல் படி இறங்க மாட்டார்கள். பெண்கள் விரல்களில் மருதாணிச் சிவப்பு சதா ஏறிக் கிடப்பது போல் ஆண்கள் வாயில் வெற்றிலைச் சிவப்பேறி இருக்கும். காலைக் காப்பிக்கு அடுத்தது வெற்றிலையை போடுவது தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1