Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sahana Oru Sangeetham
Sahana Oru Sangeetham
Sahana Oru Sangeetham
Ebook307 pages2 hours

Sahana Oru Sangeetham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பார்பவர்கள் கண்ணுக்கெல்லாம் "இவள் பெண்ணா,தேவதையா" என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அழகினை உடையவள் சஹானா. அழகுக்கு இணையான குணத்தையும் கொண்டவள். அத்தகைய அழகிற்கும், குணத்திற்கும் இணையாக தன் வாழ்க்கையில் தனக்கென்று யாருமில்லை என்ற சோகத்தை சுமப்பவள். அப்படிப்பட்ட அவளது வாழ்க்கையில் திடீரென்று அன்பை மட்டுமே செலுத்தக்கூடிய சொந்தங்கள் கிடைக்கப்பெற்று மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். அவள் ஒரு அனாதை என்று தெரிந்தும் அவளை ஒருவன் ஏற்றுக்கொள்கிறான். அவளது வாழ்வில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன. குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்டு, தொட்டில் குழந்தையாய் வளர்ந்த சஹானா முழுமையான சங்கீதமாய் எப்படி எழுகிறாள், காண்போம் இக்கதையில்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580147807471
Sahana Oru Sangeetham

Read more from A. Rajeshwari

Related to Sahana Oru Sangeetham

Related ebooks

Reviews for Sahana Oru Sangeetham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sahana Oru Sangeetham - A. Rajeshwari

    https://www.pustaka.co.in

    சஹானா ஒரு சங்கீதம்

    Sahana Oru Sangeetham

    Author:

    அ. ராஜேஸ்வரி

    A. Rajeshwari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-rajeshwari

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    காலேஜ் ஹாஸ்டலில் மதிய உணவை உண்டுவிட்டு கூட்டங் கூட்டமாக அமர்ந்து பொங்கல் லீவில் ஊருக்குப் போவது பற்றிச் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    "பசுமை நிறைந்த நினைவுகளே

    பாடித்திரிந்த பறவைகளே" என்று பாடிக் கொண்டு வந்தாள் ஷாலினி.

    ஹேய் வாட் ஆர் யூ டூயிங் என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள் மீனா.

    பார்த்தாத் தெரியல. ஒண்ணு சிங்கிங் அடுத்த கூட்டம் சிட்டிங்டி என்றாள் பிரியா.

    ஏய் எல்லாரும் வாங்கைய்யா நைட் டின்னருக்கு வெளியே போய் நல்ல டின்னரா சாப்பிடலாம். இந்த ஆஸ்டல்ல திலகா மாமி சமையலைச் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்திருச்சுய்யா. டென் டேஸ் லீவுடா - அப்புறமாதானய்யா எல்லாரும் மீட் பண்ணப் போறோம். நாளைக்குக் காலையில மார்னிங் ஷோ சூரியா படம் போயிட்டு வந்து ஊருக்குப் போலாம்ய்யா சரியா? என்றாள் மீனா.

    ஹலோ அம்மா, பேக்கிங் எல்லாம் முடிச்சிட்டு அப்புறமா உங்களுக்குப் போன் பண்ணிச் சொல்லலாம்னு நெனைச்சேன். அதுக்குள்ள நீங்களே போன் பண்ணிட்டீங்க.

    அம்மா எங்களுக்கு நாளையிலிருந்து பொங்கல் லீவு ஸ்டார்ட் ஆவுதும்மா. நான் காலையில வர்ற பஸ்ல கௌம்பிடுவேன்மா. ஆனா அம்மா நம்ம....

    என்னம்மா... ஆனா ஆவன்னான்னுட்டு சஹானா எங்கப்பா? அவ எங்கிட்ட பேசவே இல்லடி. பேசி எத்தனை நாளாச்சு ஒன்னோட ரூம்லதான இருக்கா. இல்ல வேற ரூம்க்கு மாறிட்டாளா?

    சேச்சே. இல்லம்மா, என்னோடவேதான் இருக்கா. அவளப் பத்தி சொல்றதுக்குத்தான் வாயெடுத்தேன். எங்க என்னப் பேச விட்டீங்க?

    படபடன்னு பட்டாசாப் பொறியிறீங்களே. நாந்தான் அவள உங்ககூடப் பேச வேண்டாம்ன்னு சொன்ன மாதிரி நினைச்சுட்டு இல்ல பேசிட்டே போறீங்களேம்மா.

    சரி சொல்லுடி விஷயத்த அந்தப் புள்ள ஏம் பேசலையாம்? நீங்களும் அவளும் ரொம்ப நாள் பழக்கமானவங்ககூட இல்லையே. இப்ப ரீசண்ட்டா தானே நான் உங்களுக்கு அவள இன்டர்டியூஸ் பண்ணினேன். நீங்களும் சஹானாவும் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்ததுகூட இல்லையேம்மா. அவ்வளவு பிரியமா?

    அவ, அம்மாவப் பறிகுடுத்தவ. என்னம்மா மனசு வேதனைப்படும் தெரியுமா?

    அப்பா, அம்மாதான் போயிட்டாலும் அவளச் சுத்தி சொந்த பந்தங்கள்னு மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பான்னு யாருமே கிடையாதாமே. இந்த மாதிரி நேரத்துலதாண்டி சாயத் தோள் தேடும். நமக்கும் யாராவது ஒருத்தர் இருக்க மாட்டாங்களா. மனசுல உள்ளதைக் கொட்டிக்கன்னு அந்த மனசு ஆளாப் பறக்கும் தெரியுமா?

    நான் படிக்கிறப்போ என் அப்பா அம்மாவைப் பறிகுடுத்திட்டு என்னமாய்ப் பரிதவிச்சேன் தெரியுமா? அந்த நெனப்புதாண்டி அந்தப் புள்ள மேல அவ்வளவு பாசத்தக் கொட்டச் சொல்லுது.

    நல்லாப் பரீட்சை எழுதினாளா? இல்ல பழைசையே நெனைச்சிட்டு இருந்தாளா?

    "நோ நோ. அவ ரொம்ப பிர்லியண்ட்ம்மா.

    சஹானா எப்பவுமே எல்லாத்துலேயும் பஸ்ட்தாம்மா. யாருமே அவள முந்த முடியாதும்மா. ஒரு தடவை படிச்சான்னா அத அப்படியே மனசுல தக்க வச்சிக்குவாம்மா.

    அவளுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையவே இருக்குடி. மறக்காம சஹானாவையும் கூட்டிட்டு வாடி.

    சஹானா உம் பக்கத்துல இருந்தா போனைக்குடு.

    இதோ வந்துட்டாம்மா சஹானா.

    சஹா இந்தாடி போன், அம்மா உங்கிட்ட பேசணுமாம்.

    லேசாக குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. வாகை மரமும், வேம்பும், போகன் வில்லாவும் பூக்களைச் சொறிந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. சில்லென்று வீசிய தென்றலில் மயங்கிச் சிலர் புல்தரையில் படுத்து வானம் பார்த்து மேகக் கூட்டங்களை ரசித்துக் கொண்டிருந்தனர். சிலர் எதிர்காலத்துக்கான கோட்டைச் சுவர்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

    தோட்டக்கார சாமுவேல் தாத்தா, மனதுக்குள் இருக்கும் துக்கங்களை எல்லாம் தோட்டத்தில் உள்ள கிளைகளை வெட்டி எறிவது போல எறிந்துவிட்டு கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் தாத்தாவாக வலம் வந்தார்.

    எல்லோரையும் பேத்தி முறை கொண்டு கொண்டாடுவார். ஒரு நாள் பார்க்காவிட்டால்கூட பிரியா, சஹானா பேத்திகளைப் பாக்கலையே. ஊருக்குப் போயிட்டாங்களா? இல்ல உடம்பு கிடம்பு சரியில்லையா? என்று மற்ற பேத்திகளிடம் விசாரிக்கத் தவறமாட்டார்.

    தன் அன்புக்குரிய பேத்திகளின் நினைவாக விதவிதமான மரக் கன்றுகளையும் பூச்செடி, கொடிகளையும் நட்டு மரஞ்செடிகொடிகளின் பேரை மறந்து மனிதர்களின் பேரால் கொண்டாடும் தெய்வீக மனிதர். அவர் வந்த பிறகு கல்லூரி வளாகத்தில் பசுமைக்கும், பரவசத்துக்கும் பஞ்சமேயில்லாமல் இருந்தது.

    கல்லூரியின் கடைக் கோடியில் இருந்த அவுட் ஹவுசில் எமிலி பாட்டியும் சாமுவேல் தாத்தாவும் மற்றவர்களுக்கு முதுமையாகத் தெரிந்தாலும் பனியில் பூத்த ரோஜாவாய் மணம் வீசி அழகான அந்த மாளிகையில் இல்லறம் நடத்தி இன்பமாகவே வாழ்ந்தனர்.

    அனைத்தையும் கொடுத்த ஆண்டவன் அவர்களுக்குக் கொஞ்சி விளையாட ஒரு மழலையைக் கொடுக்க மறந்து போனான்.

    தனக்கென்று ஊரும், உறவும் இருந்த போதும் மலடி என்று தன் மனையாளை வஞ்சம் பேசிய மக்களுடன் இருக்க மனமில்லாமல் பிரிந்து வந்தவர் அவர்.

    தன் மனைவியின் துக்கத்தைத் துடைப்பதற்காகவே குழந்தைகள் உள்ள இந்த இடத்தில் வேலைக்கு அமர்ந்தார்.

    கல்லூரி நிர்வாகத்தில், சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் பெரியவரே? என்று கேட்டதற்கு "இந்த மழலைகளின் கூட்டத்தில் எனக்கும் ஒரு இடம் கொடுத்து அங்கீகரித்தீர்களே ஐயா அதைவிட எனக்கு என்ன பெரிய சம்பளம் வேணும்?

    எங்களுக்கு இதுவே மனசு நிறைஞ்சு போச்சுங்கைய்யா" என்றார் சாமுவேல் தாத்தா.

    நாம் ஒரு குழந்தைக்காக மாதாவிடம் மடியேந்தினோம். எத்தனை பேத்திகள்! எத்தனை பேத்திகள்! நமக்கும் ஒரு மகள் இருந்திருந்தால் இந்த வயதில் பேத்திகள் இருப்பார்கள். ஆனாலும் ஒருத்தியோ இருவரோதான் இருந்திருப்பார்கள்.

    இன்று இந்த வளாகத்திலுள்ள பிள்ளைகள் அனைத்துமே நம் பேத்திகள் என்று பூரித்துப் போவாள் எமிலிப் பாட்டி.

    நாளா வட்டத்தில் மலடி, மலடி என்று ஏசிய வார்த்தை மனதில் இருந்து மறைந்து, காணாமல் போனது. அப்படி ஒரு குறை இருந்ததை காலமும், சூழலும், மகிழ்ச்சியுமே மறைந்து போகக் காரணமாக இருந்தது.

    எமிலிப் பாட்டி - சாமுவேல் தாத்தா, எமிலிப் பாட்டி - சாமுவேல் தாத்தா என்ற உச்சரிப்பு, குழந்தைகள் மறந்து நடுநிசியில் உறங்கும்போதுகூட அவர்கள் காதில் வண்டுகள் தன் இசை மாறாமல் 'டுர்ரர்ர்' என்று ரீங்கரிப்பது போல ரீங்காரம் செய்வதுபோல் மகிழ்ந்து போவார்கள்.

    சாமுவேல் தாத்தா புல் வெட்டும் மிஷினை தள்ளிக் கொண்டு வந்தார். பேத்திகளா என்ன லீவுக்கு ஊருக்குப் போவது பற்றி பேச்சு நடக்குது. சீக்கிரமா வந்துடுங்கடா. இந்தத் தாத்தாவும் பாட்டியும் இந்தச் சித்திரங்களைக் காணாமல் ஏங்கிப் போயிடுவோம். செல்லங்களா சீக்கிரமா வந்திருங்க என்றார்.

    'எதை அப்படி டீப்பா படிச்சிட்டு இருக்கே. பரீட்சைதான் முடிஞ்சு போச்சேடி சஹானா."

    சும்மா புக்கப் பாத்துட்டு இருந்தேன்.

    ஏய், என்ன ஒளர்றடி.

    இல்ல அனு.

    சோ. அப்ப பார்வை மட்டும்தான் புக்குல இருந்திருக்கு. பட் நெனைப்பெல்லாம் எங்கேயோ ரவுண்ட்டப் பண்ணிட்டு இருந்திருக்கு. ஆம் ஐ கரெக்ட்.

    நோய்யா.

    ஏய் என்ன ஏதாச்சும் கோட்டையைப் பிடிக்குறதுக்கு திட்டம் போட்டுட்டுட்டு இருந்தையா?

    சீசீ. நோ நோய்யா.

    அப்ப ஏதாவது லவ்ஸ்ல மாட்டிக்கிட்டுப் புள்ள தவிக்குதா?

    ஏய்... ப்ளீஸ் அப்படி எல்லாம் பேசாதே. நான் அப்படிப்பட்ட ஆளும் இல்லடி தெரியுமா?

    லவ்வும் வேண்டாம், ஒரு லொள்ளும் வேண்டாம் என்று எழுந்து வேகமாக ரூமை நோக்கி நடக்கத் தொடங்கினாள் சஹானா.

    ஏய் ஏய் சஹா... சஹா... சாரி, சாரி, வெரி வெரி சாரிய்யா. ப்ளீஸ் என்று எதிரில் நின்று இரு கை நீட்டி மறித்தாள்.

    ஏய் அலோ அனு என்னடி யாருமே பேச மாட்டேங்குறீங்க. சஹா என்னாச்சு உனக்கு? என்றாள் அனுவின் அம்மா கமலி.

    ஏய் சஹா பேசுடி. ஏற்கனவே அம்மா - சஹா ஏன் எங்கிட்ட பேசவே இல்லடின்னு கேட்கிறார்கள்.

    அவ்வளவா பழக்கமே இல்லையேடி.

    உங்க அம்மா இருந்தா அவங்ககிட்ட இருந்து போன் வந்தா எப்படிப் பேசுவ அத மாதிரி இந்த அம்மாவையும் உங்கம்மாவா நெனச்சுப் பேசு.

    சஹாவுக்கு கண்களில் நீர் பெருகிற்று.

    ஏய் கமான்ய்யா.

    ஒரு வழியாக ஸ்பீக்கரை மூடியிருந்த கையை அகற்றி, ஹலோ ஆன்ட்டி. நான் சஹானா பேசுறேன். எப்படி இருக்கீங்க?

    நல்லா இருக்கேண்டா கண்ணா. ஏம்மா போனே பண்ணலை.

    அது வந்து ஆன்ட்டி, ஏன்னா ரொம்ப வேலை ஆன்ட்டி.

    அதனால பேச முடியலன்னு சொல்ல வர்ற சரி. சரி இனிமேயாவது அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒரு தடவை அதாவது சன்டே ஹாலிடேதானே அப்பவாவது இந்த ஆன்ட்டியை மறக்காமல் போன் பண்ணுமா. தெரியுதா?

    சரி ஆன்ட்டி.

    நீ என்னைய ஆன்ட்டி கீன்ட்டின்னு எல்லாம் கூப்பிட வேண்டாம். சாதாரணமா அம்மான்னே கூப்புடு. எல்லாத்துக்கும் அம்மாதான் - என்னம்மா பதிலையே காணோம், கேக்குதா?

    சரிம்மா இனிமே நான் உங்கள அம்மான்னே கூப்பிடுறேன்.

    சரி சரி அனுவோட பொங்கலுக்கு புறப்பட்டு வந்துடு.

    தேங்க்யூம்மா என்றாள் சஹா.

    சூரிய ஒளி படாத மொட்டு சற்று மலர்ந்தும் மலராமலும் மணம் வீசிக் கொண்டிருக்கும் மலர் போல சிரித்தும், சிரிக்காமலும், அழுதும், அழாமலும் ஒருவித ஆனந்தக் கண்ணீருடன் செல்போனை அனுவிடம் கொடுத்தாள் சஹானா.

    என்னடி சஹா வானவில்லைக்கூடக் காணுமே. அவ்வளவு பாச மழையா.

    ச்சி நாட்டி.

    அம்மான்னா அம்மாதாண்டி. எத்தனை நாட்களா, வாரங்களா, மாதங்களா, வருடங்களா எதைச் சொல்வேன்.

    "மேடம்ன்னுதான் கூப்பிட்டுப் பழகியிருக்கேன். அம்மா, அம்மான்னு வாய் நெறையக் கூப்பிட யாரு இருக்கா? இது வரைக்கும் இல்லை. என் பிறந்தநாளே தெரியாது அனு, குப்பைத் தொட்டி பெற்ற பிள்ளை நான். தெரியுமோ?

    "ஜனனி ஆசிரமத்தில் இருக்கும் பருவதம்மாள்தான், அந்த வழி போய்க் கொண்டிருந்தவர்கள், எங்கோ நெருக்கமான தூரத்தில் பிறந்த குழந்தையின் குரல் கேட்குதேன்னு சுற்றும் முற்றும் தேடியிருக்காங்க. பழைய துணியும் குப்பைகளுமாய்க் கிடந்த அந்த குப்பைத் தொட்டியில் இருந்து, குரல் கண்டு ஓடி அசிங்கம் பார்க்காமல் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு என்னைத் தன் இரு கையால் அள்ளித் தன் மார்போடு அணைச்சிக்கிட்டாங்களாம்.

    என் உடம்பில் இருந்த குப்பையைத் துடைத்து எடுத்தார்களாம்.

    அப்பத்தான் நேரா ஜனனி ஆசிரமத்துக்குக் கொண்டு போய் என்னைக் குளிப்பாட்டி, புதுச்சட்டை போட்டு ஆசிரமத்து தொட்டிலில் போட்டாங்களாம்.

    குந்தி, தான் பெற்ற மகனை உலகம் ஏசும் என்று பயந்து ஆற்றோடு விட்டுவிட்டாள்.

    "இந்தத் தாய்க்கு, ஊர் ஏசும் என்று குப்பைத் தொட்டியில் போட்டாளோ? இல்லை குழந்தை பொண்ணாப் போச்சே, பொட்டக் கழுதை நமக்கெதுக்குன்னு குப்பைத் தொட்டியில் போட்டாளோ தெரியலை அனு. எதற்காக என்னைத் தெருவில் போவோர் வருவோர் எல்லாம் காட்சிப் பொருளாகப் பார்க்கணும்?.

    இருக்கவே இருக்கு கள்ளிப்பால், காசா பணமா. கள்ளிச்செடி காடு மேடெல்லாம் மொளைச்சிக் கெடக்குது. அதைக் கொடுத்துக் கொன்று பொதைச்சிருக்கலாம்.

    பொண்ணாப் பொறக்குறதே பாவம்ன்னு சொல்றாங்க சிலர். வாழ்க்கையின் வலிதான் அப்படிப் பேச வைக்குது அவங்களை.

    "இல்ல, எந்த மகராசன்கிட்ட என்னைப் பெத்தவ ஏமாந்துட்டாளோ. எப்படியோ என் பிறப்புக்கு அர்த்தமும் இல்லை காரணமும் இல்ல அனு.

    கர்ணனுக்காவது கடைசியில் அவன் தாய் குந்திதான் என்று தெரிந்து கொண்டான்.

    "தெரிந்தும் என்ன பயன். குந்தி கெட்டிக்காரியான தாய் என்றுதான் சொல்ல வேண்டும். பெற்ற பிள்ளையை விட மானம் மரியாதை கௌரவம் பெரிதாகிப் போனதால் பெற்ற பிள்ளையிடமே சத்தியம் வாங்கிக் கொண்டாள். அந்த சுயநலத்தாய். அம்மா என்று வாய் நிறைய அழைக்க அத்தனை காலம் அம்மாவைக் காணமாட்டோமா என்று ஏங்கித் தவித்த சபைக்கு நடுவில் ஊரறிய, என் அம்மா என்று கூற முடியாமல் போனது. தாயைப் பார்த்ததும் அவன் இருதயம் நின்று துடித்தது.

    வானம் இடிந்து போய் நிமிர்ந்தது. கடல்கள் வற்றிப் பின் நிறைந்தது.

    இருவருமே அறிந்த அந்த ரகசியம் மண் மூடிவிட்டது.

    இன்னும் இந்த உலகில் எத்தனை கர்ணன்களும், கருணிகளும் வதைபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்களோ.

    கர்ணனாவது தேரோட்டி எடுத்து வளர்த்து ஆளாக்கியதால் தேரோட்டியின் மகனானான்.

    அரசன், அரசசபையில் புறக்கணிக்கப்பட்டாலும் எதோ ஒரு மூலையில் அவனுக்கு அமர இடம் கிடைத்தது.

    துரியோதனன் துஷ்டனாக இருந்தாலும் அவையில் தேரோட்டி மகன் என்று அவமதித்ததில் வெகுண்டு சினம் கொண்டு எழுந்து அங்க நாட்டுக்கு அரசனாக்கி அவனுக்கு மன்னன் என்ற மகுடம் சூட்டி அழகு பார்த்து இப்போது போட்டிக்கு அங்க நாட்டு மன்னன் கர்ணன் வருகிறான் என்று சபை அதிர அறிவித்து, அவனுக்குக் கௌரவமளித்தான்.

    உயிர் கொடுப்பான் தோழன். ஆம் அங்கே நிரூபித்துவிட்டான் துரியோதனன்.

    பெற்றவள் அதே அவையில் மகாராணியாக பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தாள். என்ன பயன், பெற்றவள் கௌரவம் பார்த்தாள் பெற்ற மகன் சபையில் மூக்கறுபட்டு நிற்கிறான். விண் பார்க்க வேண்டிய மாவீரன் மண் பார்த்து நின்றான்.

    "துஷ்டனாக இருந்தாலும் துரியோதனன் தன் முன் நண்பன் மூக்கறுபடுவதைச் சகித்துக் கொள்ளவில்லை. அவனால் பொறுமை காக்க முடியவில்லை. சபை என்ன பெரிய சபை.

    அவன் மாவீரன். என் நண்பன். வாக்குத் தவறாதவன் என்னுயிர் கர்ணன் என்று முழங்கினான்."

    அங்க நாட்டுக்கு மன்னனாக்கி மகுடம் சூட்டி தன் இரு கரங்களால் அள்ளித் தன் மார்போடு அணைத்து முத்தமிட்டான். ஆனால் சபையோ அதை எதிர்பார்க்கவில்லை.

    பெற்றவளின் அணைப்பு கிடைக்காத கர்ணன், நண்பனின் அணைப்பில் தன்னையே மறந்தான். தன்னையே அவனுக்குக் கொடுத்தான்.

    கர்வமுள்ள துஷ்டன் துரியோதனன் நண்பனுக்காகத் தன் கௌரவத்தை தூக்கி வீசி எறிந்தான்.

    கர்ணனின் மானத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றி மனிதப் பிறவி எடுத்துக் கொண்டான்.

    என்ன செய்வது? விதி - கர்ணன் எங்கே நாங்கள் எங்கே.

    எங்களைப் போன்றவர்களுக்கு அனாதை இல்லம்தானே இல்லம் அனு.

    எங்களுக்குன்னு என்ன அடையாளம். அனாதை இல்லத்துக் குழந்தைகள் அவ்வளவுதான்.

    என்னதான் துரியோதனன் அவனுக்குக் கௌரவம் அளித்தாலும் தன் தாய் தன்னை ஊரறிய மகனே என்று அழைக்கவில்லையேன்ற வருத்தம் மனதில் முள்ளாய்த் தைத்துக் கொண்டுதானே இருந்திருக்கும். எத்தனை எத்தனை நெஞ்சம் புழுங்கி வேதனைப்பட்டிருப்பான். அதைப் போலத்தானே அனு எங்களைப் போன்ற ஆதரவற்ற அனாதை இல்லத்துக் குழந்தைகள். தாய் யாரோ தந்தை யாரோ. பார்ப்போமா? என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது எல்லார் உள்ளங்களும்.

    அனு அவள் முகத்தை வைத்த விழி வாங்காமல் பார்த்து சோகக் கடலில் மூழ்கிப் போனாள்.

    அடிப்பாவி மகளே உன்னைப் பெத்தவங்க இறந்துபோனதாவில்ல சொன்ன. நீ ஜனனி ஆசிரமத்தில் இருக்கிறாய் என்று இப்போதுதானே தெரிகிறது. தாய் தந்தையர் இறந்துவிட்டார்கள் என்ற போது எப்ப இறந்தாங்க? எப்படி இறந்தாங்கன்னெல்லாம் கேட்டு மறந்து போன பழைய நினைவுகளைக் கிளறி மறுபடியும் உன்னைக் கவலைக்குள்ளாக்குவானேன்னுதான் நான் உன்னைக் கேக்கவே இல்லை சஹா.

    நீ இவ்வளவு நேரம் இதைத்தான் யோசித்து மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாயா?

    இல்ல அனு இதப்போல இன்னும் நெறைய விஷயங்கள் என் மனசுல கெடந்து உறுத்திட்டே இருக்கு.

    இங்க பாரு சஹா மனசுலயே போட்டு அமுக்கி வைக்காத. மனம்விட்டுப் பேசு. உனக்கு யார்கிட்ட சொல்லலாம்னு தோணுதோ அவுங்ககிட்ட சொல்லி பாரத்த எறக்கி வையி. இப்படி மனசுல அடைச்சு வைக்காதே.

    அனுவை ஏறிட்டாள். கண்களில் நீர் பெருக.

    சஹா நீ பிரியப்பட்டா என்னிடம் சொல்லலாம். பிரியப்படலைன்னா சொல்ல வேண்டாம் விட்டுடு.

    ஏனோ இன்று அவளுக்கு யாரிடமாவது தன் சோகத்தை இறக்கி வைத்தால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் போல இருந்தது.

    கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அக்கம் பக்கம் அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் கும்பல் தன்னைக் கவனித்துவிட்டதா என்று நோட்டமிட்டாள். அவர்கள் விடுமுறை பற்றியும் அவரவர் ஊரைப் பற்றியும் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

    அப்பாடா என்று ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் சஹானா.

    அனு உனக்கு ஏதாவது ஒர்க் இருக்கா.

    "நோ. நோ. ஒர்க்காவது, பொடலங்காயாவது?

    Enjoying the preview?
    Page 1 of 1