Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poovey Malarnthu Vidu
Poovey Malarnthu Vidu
Poovey Malarnthu Vidu
Ebook119 pages1 hour

Poovey Malarnthu Vidu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபாவதி கணவனை இழந்து தன் பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாக வளர்க்கிறாள்.

இந்நிலையில் அகிலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது காதல் வயப்பட்டு, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறாள். பல வருடங்களுக்கு பிறகு பிரபாவதியின் உறவுக்காரன் என்று தேவராஜ் வருகிறார். யார் இந்த தேவராஜ்? அகிலாவை ஏற்றுக்கொண்டாளா பிரபாவதி? அவள் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன? பூவே மலர்ந்து விடு கதையில் பிரபாவதியின் வாழ்க்கை மலர்ந்ததா? வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140606474
Poovey Malarnthu Vidu

Read more from R. Manimala

Related to Poovey Malarnthu Vidu

Related ebooks

Reviews for Poovey Malarnthu Vidu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poovey Malarnthu Vidu - R. Manimala

    https://www.pustaka.co.in

    பூவே மலர்ந்துவிடு

    Poovey Malarnthu Vidu

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    கிழக்கு வானில் உறங்கிக்கொண்டிருந்த கதிரவன், இருள் போர்வையை விலக்க மனமின்றி இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டுமே என்று சோம்பலுடன் கண்மூடி இருந்தான்.

    மரத்தில் இருந்த பறவைகள், சிறகு படபடக்க கிழக்கு வானையே பார்த்துக்கொண்டிருந்தன.

    மாநகரப் பேருந்துகள், அதிகாலைக் காற்றை மாசுபடுத்தும் ஆயத்தப் பணிகளைச் செய்யப் புறப்பட்டிருந்தன.

    இங்கும் அங்குமாய் ஓடியாடி அரக்கப் பரக்க இயங்கிக் கொண்டிருந்த பிரபாவதி, முன்னறையில் இருந்த கடிகாரம் அடித்து ஓய்ந்ததும் மேலும் பரபரப்பானாள்.

    அகிலா... அகிலா... இன்னும் என்ன பண்ணிக்கிட்டிருக்கே?. குரல் கொடுத்தாள்.

    நான் தயாராயிட்டேம்மா பதில் கூறியபடி அறையிலிருந்து வெளியே வந்தாள், அகிலா.

    நிகுதிகுவென்று வளர்ந்த தென்னங்குருத்தாய்... பளீரென்ற பச்சரிசிப் பற்கள் மின்ன... வசீகர முகத்துடன் வந்து நின்ற அகிலாவுக்கு இருபத்தொரு வயது. அரக்கு நிறப் பட்டுச்சேலையின் சரிகைக்குப் பொருத்தமாக குங்கும நிறத்தில் இரவிக்கை அணிந்திருந்தாள். லேசான ஒப்பனை, காதில் சிறிய ஜிமிக்கி, தலை நிறைய கனகாம்பரம், மெல்லிய சிவப்புக்கல் அட்டிகை, கற்கள் பதிக்கப்பட்ட இரண்டு வளையல்கள், கைக்கடிகாரம்!

    அவ்வளவே... அவ்வளவுதான்!

    ஆனால், அதற்கே... ஊரிலுள்ள அழகுமொத்தமும் அவளிடம் குடிபெயர்ந்துவிட்டது போல், வானத்திலிருந்து தேவதை வந்திறங்கியது போல் பளீரென்றிருந்தாள்.

    சற்று நேரம் தன்னை மறந்து தன் மகளை வாய்பிளக்கப் பார்த்துக்கொண்டிருந்த பிரபாவதிக்கு அடிவயிற்றில் ஒருவித பயம் உற்பத்தியானது.

    மற்றவர்கள் கண்களை உறுத்துகிற அழகு, வாய்பிளக்க வைக்கிற நேர்த்தி, கடவுளே... இவளை ஒருவன் கையில் பிடித்துக்கொடுக்கிறவரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே! நெஞ்சில் சுமை அதிகமாக... அவளின் கண்கள், மகளைக் கவனமாக ஆராய்ந்தன.

    மறுகணம் அவள் கண்கள் கோபத்தில் விரிந்தன.

    அகிலா... இப்படி வா!

    என்னம்மா?

    என்ன இது? ரவிக்கையோட கை ரொம்ப சின்னதா இருக்கு?

    கையில்லாத ரவிக்கை அணிந்திருந்ததில் கையின் சதைகள் பால்கோவாவாய் மின்னின.

    இ... இதாம்மா... இப்ப பேஷன்! மென்று விழுங்கினாள், அகிலா.

    என்ன பேஷனோ... கண்றாவியோ? யாரைக் கேட்டு இப்படி தைச்சே? என்கிட்டே சொல்லவே இல்லையே! இதோ பார்... இதுதான் முதலும் கடைசியும்... இனி, இந்த ரவிக்கையை நீ போடக்கூடாது. புரியுதா?

    ச... சரிம்மா!

    காஞ்சனா இன்னும் என்ன பண்ணிட்டிருக்கா?

    நானும் தயார்தாம்மா! என்றபடி அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டாள், காஞ்சனா. அகிலாவுக்கு அடுத்தவள்.

    மயில் நிறப் பச்சை சுடிதாரில் மயில் போலவே இருந்தாள். முன்புறத் தோளில் வந்து விழுந்தது மல்லிகைச்சரம்.

    காஞ்சனாவும் அழகில் சளைத்தவளில்லை. பளிங்குக் கண்கள், எந்நேரமும் உதட்டோரம் தவழும் புன்னகை. சிரிக்கும்போது கன்னங்களில் விழும் பாதரசக் குழிகள். அகிலா சந்தனச் சிலை என்றால்... காஞ்சனா, பளிங்குச் சிலை.

    மகள்களைப் பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டிருந்த பிரபாவதி, குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

    மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான், அஸ்வின். மாப்பிள்ளை! இன்னும் சற்று நேரத்தில் ரேகா என்ற மங்கைக்குக் கணவனாகப் போகிறவன். பட்டு வேட்டி, சட்டையிலும் கம்பீரமான அழகனாகத் தெரிந்தான்.

    மகனைப் பார்த்து அன்புடன் முறுவலித்தாள்.

    வாங்க மாப்பிள்ளை!

    என்னம்மா... நீங்க போய் என்னை மாப்பிள்ளை கீப்பிள்ளைன்னு... அஸ்வின் அழகாய் வெட்கப்பட்டான்.

    மாப்பிள்ளைதானே நீ? என்றாள் பிரபாவதி.

    அது மத்தவங்களுக்கு! உங்களுக்கு நான் எப்பவும் மகன்தான்!

    சரி... பேசிக்கிட்டிருக்க நேரமில்லே. பெண் வீட்டுக்காரங்க மண்டபத்துக்கு வந்துட்டாங்களாம். நாம தாமதமாப் போனா நல்லா இருக்காது. கார் வந்தாச்சு. கிளம்புங்க.

    பிரபாவதி உத்தரவு பிறப்பிக்க... வரிசையாய் மூவரும் வெளியேறினர்.

    நின்றிருந்த காரில் மூவரும் அமர... வாழைமரங்கள் வாயிற்காப்போனாய் நின்றிருக்க... வண்ண விளக்குகள் கண்சிமிட்டிக்கொண்டிருந்த வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு பிரபாவதியும் காரில் ஏறிக்கொண்டாள்.

    ஓட்டுநரிடம், சீக்கிரம் போப்பா என்றாள்.

    கார் சீறிப் புறப்பட்டது.

    அதிகாலை குளிர்க்காற்று பனித்துகள்களாய் முகத்தில் மோதி சிலிர்ப்பு ஏற்படுத்தினாலும், வழக்கமாய் எல்லா பெற்றவர்களுக்கும் ஏற்படும் கல்யாணம் நல்லபடி நடக்கணுமே என்கிற படபடப்பில் பிரபாவதிக்கு வியர்த்தது.

    அம்மா... என்றழைத்தான், முன்புறம் அமர்ந்திருந்த அஸ்வின்.

    என்ன அஸ்வின்?

    கல்யாணத்தை எளிமையா பண்ணி இருக்கலாமே! எதுக்காக மண்டபம் அது இதுன்னு பணத்தைத் தண்ணியா செலவழிக்கணும்? போதாததுக்கு சாயங்காலம் வரவேற்பு வேற.

    அஸ்வினுக்கு இந்த ஆடம்பர மோகத்திலெல்லாம் விருப்பமில்லை. பத்து ரூபாய் செலவழித்தால், அது நான்கு பேருக்குப் பயன்படணுமே என்று எதிர்பார்க்கிற நல்ல இளைஞன்.

    பிரபாவதி சிரித்தாள்.

    என்னப்பா பண்றது? சில விசயங்களில் நமக்கு விருப்பம் இல்லேன்னாக்கூட மத்தவங்களுக்காக கட்டுப்பட்டுதான் ஆகவேண்டி இருக்கு. எனக்கும் இப்படி ஆடம்பரச் செலவு செய்யறதிலே உடன்பாடில்லை, அஸ்வின். கல்யாணத்தை எளிமையா கோவில்ல வச்சு முக்கியமான பத்து, இருபது பேரை அழைச்சு முடிச்சிடணும். மண்டபத்துக்கு, வரவேற்புக்குன்னு செலவழிக்கிற பணத்திலே நாலில் ஒரு பங்கை எடுத்து ஏதாவதொரு அநாதை இல்லத்துக்கு சாப்பாடு போட கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன்.

    பிறகு ஏன்ம்மா...?

    "இது நம்மைத் தேடிவந்த பெரிய சம்பந்தம். என் பிள்ளை அஸ்வின், நல்லவன்; எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன்; படிச்சவன்; கைநிறைய சம்பாதிப்பவன்.

    Enjoying the preview?
    Page 1 of 1