Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mugarasi
Mugarasi
Mugarasi
Ebook121 pages43 minutes

Mugarasi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'தாம்பூலம்' இச்சிறுகதையில், அனுதினமும் வாயில் குட்காவை குதப்பிக் கொண்டிருக்கும் விநாயக். அருந்ததி இந்த பழக்கத்தை விட்டு விடுமாறு கேட்கிறாள். இவனின் இப்பழக்கத்தால் நேர்ந்தது என்ன?என்பதையும், 'முகராசி' இச்சிறுகதையில் நாற்பத்தி எட்டு வயதை அடைந்த நித்யா, வசீகரமான இளமை அழகுடன் இருப்பவள். இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதால் ஊர் கொடுத்த பட்டம் ராசி இல்லாதவள்! இந்நிலையில் அவள் அனுபவித்த சங்கடங்கள் என்ன?அதிலிருந்து அவள் மீண்டெழுந்தாளா?இல்லையா? என்பதையும், இன்னும் சில சிறுகதைகளையும் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580140610229
Mugarasi

Read more from R. Manimala

Related to Mugarasi

Related ebooks

Reviews for Mugarasi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mugarasi - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முகராசி

    (சிறுகதை தொகுப்பு - 4)

    Mugarasi

    (Sirukadhai Thoguppu - 4)

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    பொருளடக்கம்

    ஊர் கூடி இழுத்தாலும்...!

    இன்று... எப்படியாவது...

    சொல்லாமலே...

    தாம்பூலம்!

    காதல் தட(ய)ம்

    முகராசி

    யோவ் அ...ப்...பா!

    நெஞ்சுக்குள்ளே...

    கேளடா... கண்ணா!

    மின்சார பூவே!

    பரிசம்

    அழகுமட்டும் போதாது பெண்ணே!

    இவர்களுக்கு மட்டும்...

    காதல் காயம்

    மாறுமோ நெஞ்சம்?

    கண்ணான கண்ணே...!

    ஊர் கூடி இழுத்தாலும்...!

    டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் படிந்திருந்த தூசியில் எதையாவது கிறுக்க நினைத்தது பத்திரிகையாளனின் மவுஸ் பிடித்த விரல்கள்.

    ‘ஒரு வாரமாய் துடைக்கப் படாமலேயே இருக்கிறது. ரெண்டு நிமிஷம் ஆகுமா துடைக்க?’ சலிப்புடன் டவலால் தலையைத் துவட்டியவன்... பால்கனி பக்கம் வந்தான்.

    அன்றைய நாள் பரபரப்புடன் இயங்கத் தொடங்கியிருக்க கதிரவன் கதிர்களில் சுருதி ஏற்றத் தொடங்கியிருந்தான்.

    ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பாத்திரப் பண்டங்களும்... பரண்களில் இருந்து இறக்கிய தட்டுமுட்டுச் சாமான்களும் அமர்ந்திருக்க... தூசுதட்டி, கழுவி காயவைத்துக் கொண்டிருந்தனர்.

    பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதை நினைத்தால் திக்கென்று இருந்தது. மிதுனுக்கு...! புலனாய்வு பத்திரிகையில் சீனியர் ரிப்போர்ட்டர். கல்லூரியில் படிக்கும்போதே தனியே பத்திரிகை நடத்த வேண்டும் என்ற கனவுகளோடு இருந்தவன். காலப்போக்கில் நிதர்சனம் புரிய, கனவைப் புதைத்து ‘புவ்வா’வுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் மிதுனுக்கு முப்பத்தியெட்டு வயது!

    சட்டை கையை மடித்துவிட்டபடி ஹாலுக்கு வந்தான். நல்லவேளை அப்படி இப்படி இறுக்கிப் பிடித்து, நிலம் விற்று, கடன் வாங்கி சொந்த வீட்டில் அமர்ந்தாயிற்று.

    அம்மா... கீரை ஆய்ந்துக்கொண்டிருந்தாள். அவனை ஏறிட்ட கண்களில் ஒருவித கவலை மிதந்தது. அப்பா அறைக்குள் படுத்து இருக்கிறார் என்பது அவரின் சன்னமான இருமல் சப்தம் மூலம் தெரிந்தது.

    யூரின் வெளியேறுவதில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் சில நாட்களாகவே! ஹாஸ்பிடல் செல்லவேண்டும். சில பல பரிசோதனைகள் எடுத்தாக வேண்டும் அதன் பொருட்டு கவலைதான் அம்மாவுக்கு!

    டைனிங் டேபிள்மீது ஆப்பமும் கடலைக்கறியும் சாப்பிடக் காத்துக் கொண்டிருந்தது... கூடவே சுபாஷிணியும்!

    அவளைப் பார்க்கவும் மனசுத் தளர்ந்து போனது.

    சரியாக சாப்பிட அமரும் நேரத்தில்தான் மனைவியின் முகத்தில் அத்தனை ‘இல்லை’களும்... ‘எப்போ?’வும் தட்டில் கொட்டத் தயாராய் இருக்கும்.

    எதையோ நினைத்தபடி சாப்பிடத் துவங்க... மதியத்துக்கு மஷ்ரூம் புலாவும் தயிர்ப்பச்சடியும் வெச்சிருக்கேன் என்று ஆரம்பித்தாள் சுபாஷிணி.

    ஸாரி சுபா... சொல்ல மறந்துட்டேன். லஞ்ச் வேணாம்... காஞ்சிபுரம் வரை ஒரு மேட்டர் விஷயமாப் போறேன். ஈவினிங் வர லேட்டாகும்...!

    உங்களுக்குப் பிடிக்குமேன்னு அவசர அவசரமா...

    எடுத்து வை... நைட்டு சாப்பிட்டுக்கறேன்!

    ம்ம்...

    சுஷ்மிதா ஸ்கூலுக்குப் போயிட்டாளா?

    அஞ்சு நிமிஷம் ஆச்சு ஆட்டோ சவுண்ட்கூட கேக்கலையா உங்களுக்கு?!

    பதில் கூறாமல் கையைக் கழுவினான்.

    சரி... நான் கிளம்பறேன்! கீ போர்டில் இருந்து பைக் சாவியை எடுத்துக் கொண்டான்.

    இன்னைக்காவது கிடைக்குமா? பண்டிகை நெருங்குது... டிரெஸ் எடுக்கணும் சுஷ்மிதா டெய்லி நச்சரிக்கிறா... பத்து வயசு பொண்ணாச்சே ஆசைப்பட மாட்டாளா?

    நான் எடுக்க மாட்டேன்னு சொன்னேனா? இப்ப அப்பன்னு இழுத்தடிக்கிறாங்க ரெண்டு நாள்ல வந்துடும்னு நினைக்கிறேன்... கொஞ்சம் பொறுத்துக்க சுபா!

    ***

    ‘புவனேஸ்வரி காட்டன் மில் பிரைவேட் லிமிடெட்’ பெயர் பலகை சூரிய ஒளிப்பட்டு தகதகத்து கண்களை கூச வைத்தது.

    ஹெல்மட்டை கழற்றிய மிதுனின் தலை கொதித்த வெயிலால் ஈரமாய் இருந்தது. கேட் மூடப்பட்டிருக்க... வெளியே பந்தல் போடப்பட்டு, அதன்கீழ் அமர்ந்து போனஸ் மற்றும் நீதி கேட்டுப் போராடும் தொழிலாளர்கள். நான்கு நாட்களாக போராட்டம் தொடர்கிறது. முதலாளியின் மனசும் ‘கேட்’டும் திறந்த பாடில்லை. களைத்த முகங்களில் ஏக்கமும் எதிர்பார்ப்பும்!

    மிதுன் அவர்களிடம் பேசினான். அவரவர் தங்கள் மனக் குமுறலைக் கொட்டினர்.

    வருஷா வருஷம் கொடுத்துவந்த போனஸ்தாங்க... இப்ப என்னடான்னா... ‘இனி எப்பவுமே போனஸே கிடையாது’ங்கிறாங்க!

    போராட்டம் பண்ற எங்களை டிஸ்மிஸ் பண்ணப் போறாங்களாம்

    லாபம் கொட்டற மில்லுங்க இது!

    இன்னும் ரெண்டு கம்பெனி திறக்கப்போறாங்க. அதுக்குப் பணம் வேணும். நஷ்டக் கணக்குக் காட்டி எங்க வயித்துல அடிக்கிறாங்க. இத்தனை வருஷமா இந்த போனஸை நம்பித்தான் இத்தனை குடும்பமும் பண்டிகையைக் கொண்டாடினோம். எங்க பொண்டாட்டி புள்ளகுட்டிங்களை சந்தோஷப்படுத்துவதே இப்படி வருவஷத்துக்கு ஒரு முறைதானே? எங்க உழைப்புக்கேத்த கூலியைத்தானே கேக்கறோம்? வயித்துல அடிக்கிறாங்களே! விடப்போறதில்லை... சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போறோம். உங்கப் பத்திரிகையில் எங்க பக்கத்து நியாயங்களை எழுதுங்கய்யா... கவர்மெண்ட் கேள்வி கேட்கும். எங்களுக்கும் நீதி கிடைக்கும்! உண்டாகும் கோபத்தை விட, கண்டுக்காமல் இருக்கின்ற உதாசீனம்தான் அதிக வலியைத் தரும். அது அவர்கள் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

    மில் ஓனரைச் சந்திக்க முடியவில்லை. வேண்டுமென்றே தவிர்ப்பது புரிந்தது. பி.ஏ. தான் அலட்சியமாய் பேசினான்.

    இவங்களுக்குப் போராடறதுக்கு ஒரு காரணம் தேவை மில் நஷ்டத்தில் ஓடும்போது போனஸ் வேணும்னு கேக்கறது ஏழைகளுக்கே உள்ள பேராசை! வயிறு காஞ்சா தன்னால வழிக்கு வந்துடுவானுங்க! இந்த வெயில்ல நீங்க வேற வந்து கஷ்டப்படுறீங்க... ஜூஸ் சாப்பிடறீங்களா சார்?

    வேண்டாம்!

    மிதுனுக்கு குமுறிக்கொண்டு வந்தது.

    ‘உணவைத் தேடும் இவங்களோட உணர்வெல்லாம் பசியைத் தேடும் பணக்காரனுக்கு எங்கே தெரியப்போகுது?’

    ***

    அவனுடைய குமுறல்கள் எல்லாம். சேர்த்து... வெடிக்கும். வார்த்தைகளுடன். துடிப்புடன் எழுதி முடித்து பொறுப்பாசிரியரிடம் கொடுத்தான்.

    படித்தவர் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

    சூப்பர் மிதுன்! உங்க எழுத்தோட வீச்சு அபாரம், ரேப்பரில் தலைப்பு போட்றலாம். கவர்மெண்ட் கவனத்திற்குப் போகும். பாவம்ல... அவங்களுக்கு நல்லது நடக்கும்னு நம்புவோம்!

    அந்தப் பாராட்டு அவனை உற்சாகப்படுத்தியது. இதுபோன்ற தகுதியானவர்களின் பாராட்டு படைப்பாளிக்கு அவசியம்.

    அக்கவுண்ட் செக்ஷனுக்குள் நுழைந்தான் மிதுன்.

    என்ன சார் இன்னைக்காவது போனஸ் கிடைக்குமா? செலவு வரிசைக்கட்டி நிக்குது!

    ப்ச்... மேலிடத்துல பாசிட்டிவா எதுவும் சொல்லலை... ஹூம்! என்றார் கமலநாதன்.

    ஏமாற்றமாய் உணர்ந்தான் மிதுன்.

    ***

    ஒன்பதாவது முறையாகப் புரட்டிப் பார்த்தான்... இல்லவே இல்லை.

    புருவம் சுருக்கினான் மிதுன்.

    ‘கரண்ட் மேட்டராச்சே? அவர்கூட பாராட்டினாரே? ஏன் போடலை?’

    பொறுப்பாசிரியர் எதிரில் போய் நின்றான்.

    அடடே... வாப்பா மிதுன்! ஸ்வீட் நியூஸ் தெரியும்ல? இன்னைக்கு போனஸ் தர்றாங்க... போய் வாங்கிக்கோங்க!

    "அந்த மில் மேட்டர் வரவையே

    Enjoying the preview?
    Page 1 of 1