Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arugil Vaa...!
Arugil Vaa...!
Arugil Vaa...!
Ebook192 pages1 hour

Arugil Vaa...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நேர்மறை எதிர்மறை போல் அனைத்திலும் இரு துருவங்கள் உண்டு. அப்படி... ஆன்மீகம் போல் அமானுஷ்யமும் உண்டு.

ஆன்மீகத்தால் இந்தக் கதையின் நாயகி அமானுஷ்யத்தை எப்படி எதிர்கொள்கிறாள். தொடர்ந்து வரும் பல இன்னல்களை எப்படி கடந்து வருகிறாள் என்பதுதான் கதை! இனி கதைக்குள் போய் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580144710604
Arugil Vaa...!

Read more from Ilamathi Padma

Related to Arugil Vaa...!

Related ebooks

Reviews for Arugil Vaa...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arugil Vaa...! - Ilamathi Padma

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அருகில் வா...!

    Arugil Vaa...!

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 1

    ஸ்ரீராம ராம ராமேதி

    ரமே ராமே மனோரமே

    சகஸ்ரநாம தத்துல்யம்

    ஸ்ரீராம நாம வரான்னே…

    முணுமுணுத்தபடி சமையல் செய்து கொண்டிருந்தாள் மாதங்கி. பதினோரு முறை உச்சரித்து முடியும் வரை யாருடணும் பேச மாட்டாள்.

    கணவனே கண்ட தெய்வம் கண் எதிரே நான் நிற்கிறேன். கண்டு கொள்ளாமல் ராமனை ஏன்டி கூப்பிடுறே…? என்று பகடி செய்யும் கணவரை முறைப்பாள். மா… என் சாக்ஸைக் காணோம் எங்க வச்சிருக்கே… என்று கேட்கும் பிள்ளையின் குரலை காதில் வாங்க மாட்டாள். ரசத்திற்கு நெய்யில் தாளித்துக் கொட்டியதும் வீடே கும்மென்று நெய் மணம் வீச, பருப்பு எடுத்து வச்சிருக்கியா… சாம்பாரில் என்ன காய் போட்டிருக்கே… சமையல் அச்சா….? என்ற மாமியாரின் குரல் கேட்க,

    ஆச்சு மா. சாம்பாரில் அவரைக்காய் போட்டிருக்கேன். சேப்பங்கிழங்கு வறுவல் பண்ணியிருக்கேன். இட்லி ஊத்தியிருக்கேன் சட்னி பண்ணலை என்று அன்றைக்கான காலை டிபனையும் சேர்த்து சொன்னாள்.

    என்னமோ போ… தள்ளாமை வந்தாச்சு! உனக்கு உதவ முடியலை என்ற மாமியார், உன் பெண்ணையும் எழுப்ப மாட்டாய். வயசு 10 ஆச்சு. எட்டு மணிக்கு முன்பு எழுந்துக்க மாட்டேனு பிடிவாதம்! என்று புலம்ப, அவள் குழந்தை மா. என்ற மாதங்கியை கண்களை உயர்த்தி பார்த்த காமாட்சி,

    இப்பவே வேலை செய்ய பழக்கணும்! இல்லேனா… கல்யாணமாகிப் போனா திண்டாடுவாள். ஒன்னுமே தெரியலையே இவளுக்குனு பேச்சு வரும்ல…

    அதற்கு இன்னும் பத்து வருத்துக்கு மேல இருக்குமா… அவளுக்கே ஆர்வம் வரும் போது தானாக செய்வாள். நீ ஏன்மா கவலைப்படுறே…? என்றான் கைலாசம்.

    மாதங்கி சிரமப்படுறாளேனு சொன்னேன். என்ற போது மாதங்கி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். நாத்தனார் திருமணமாகி போகும் வரை ஒரு டம்ளரைக் கூட நகர்த்தியதில்லை. வேலைக்குப் போகிறேன் என்று காலை எட்டரைக்கெல்லாம் ஓடிவிடுவாள். பக்கத்தில் இருக்கும் Play School -க்கு அத்தனை ஆர்ப்பாட்டம் செய்வாள். அண்ணி இன்னிக்கு உங்கள் புடவையை உடுத்திக்கிறேன் என்பாளே தவிர, அனுமதியெல்லாம் கேட்பதில்லை. குறிப்பாக மழை நாட்களில்தான் மாதங்கியின் புடவையைத்தான் தேர்ந்தெடுப்பாள். தழையத் தழையக் கட்டி ஓரமெல்லாம் அழுக்காகி அலட்சியமாய் மிஷினில் போட்டு விட்டுப் போவாள். அதை உலர்த்தும் போது மாதங்கிக்கு எரிச்சல் வரும். தெரு அழுக்கெல்லாம் அதில்தான் இருக்கும்! ஆனால்… எதுவும் பேச முடியாது.

    மறுபடியும் அதை நனைத்து புடவையின் ஓரங்கில் ஷாம்பூ போட்டு பிரஸால் அழுக்குப் போகத் தேய்த்து அலசி உலர்த்துவாள்.

    மாதங்கி…. மாதங்கி டவல் கொண்டு வா… எத்தனை முறை அழைப்பது…? கணவன் கைலாசத்தின் குரல் உரக்க ஒலிக்க டவலுடன் ஓடினாள். ஒவ்வொன்னுக்கும் மாதங்கி… மாதங்கினு கத்தணுமா… உங்க வேலையை நீங்க செய்துக்க வேண்டாமா…?

    மறந்துட்டேன்டி… ரொம்ப அலுத்துக்காதே! அரக்க பறக்க வேலை செய்வது பத்துமணி வரைதானே… பிறகு நாளெல்லாம் சும்மாதானே இருக்கே…

    ஆமாஞ்சாமி! சும்மாதான் உட்கார்ந்திருக்கேன் என்றாள். குரலில் கோபம்.

    நல்லா இருக்குடி! ஆபீஸ் போற நேரத்தில் அவனோட வாயடணுமா…?

    என்ற மாமியாரன் குரல் கேட்க, அமைதியானாள். நாத்தனாரின் திருமணநாள் நெருக்கத்தில் மூன்று படுக்கையறை கொண்ட வீட்டிற்குக் குடிவந்த பிறகு மாதங்கியின் வேலை கூடிப்போனதில் ஓய்வு தேவைப்பட்டது. ஆனால் ஓய்வெடுக்க முடியாதபடி ஏதோ ஒரு வேலை வந்தவாறே இருந்தது. இந்த பிளாட் சிஸ்ட்டத்திற்கு எப்போது மாறினோமோ… அப்போதே மனித மனங்கள் சுருங்கிப் போயிற்று. பக்கத்து வீடு, எதிர்வீடு என்று யாரையும் அடையாளம் தெரியவில்லை. திருமணத்திற்கு அழைத்த போது வந்தார்களே தவிர, அதிகப் பரிச்சயமில்லை! அவரவர் கதவை சாத்திக் கொண்டு உள்ளே இருந்தார்கள். கதவைத் திறந்து வைத்தால் பிரைவசி போய் விடுமாம். இரண்டாவது மாடியில் இருந்த ஒரு பஞ்சாபி தனக்குத் தெரிந்த அரை குறை தமிழில்… வீடு செளகரியமா இருக்கா… வாஸ்த்து பார்த்துக் கட்டிய வீடுகள்தான்! ஆனால் நீங்க வருவதற்கு முன்பு இந்த வீட்டில் ஒரு இளம்பெண் இறந்து போனதாகச் சொன்னார்கள். கொலையா… தற்கொலையானு தெரியலை என்று சொல்லி விட்டுப் போன பிறகு, இரவு தூக்கம் தொலைந்து போனது. பகலில் அரைமணி நேரம் கண்ணயர்வதோடு சரி.

    இந்த விசயத்தை ஒரு நாள் கணவனின் காதில் போட்ட போது, அதற்கு என்ன இப்போ… எப்பவோ நடந்த ஒன்றை இப்ப ஏன்டி கிளர்றே... அப்படியே இருந்தாலும் நமக்கென்ன…?

    அதுக்கில்லைங்க. நம்ம குழந்தைங்க இரண்டும் விவரம் தெரியாதவங்க. எதையாவது பார்த்து பயந்துட்டாங்கன்னா…

    போடி லூசு! பேய், பிசாசெல்லாம் கிடையாது! பயமுறுத்துவதற்கு சொல்ற வார்த்தைகள்!

    இல்லைங்க! சின்ன வயசில் நான் பார்த்திருக்கேன்.

    பைத்தியம் மாதிரி பேசாதே… இந்தப் பேச்சை இதோடு விட்டுடு என்ற பிறகு அதுபற்றி பேசுவதில்லை. சொந்த பந்தங்கள் வந்து போனதில் வீடு கலகலப்பாய் இருந்த வரை எதுவும் தெரியவில்லை! மாமியார் இருக்கும் அறையில் இரவில் ஏதேனும் சத்தம் வருகிறதா…? என்று கவனிப்பாள். உறவினர்க்கான அறையில் ஒரு நாள் பகல் முழுதும் உட்கார்ந்து கவனித்தாள். வித்தியாசமாய் எதையும் உணரவில்லை! அதன் பிறகு அது பற்றி மறந்து விட்டாள் மாதங்கி.

    ***

    ஒரு நாள் மதியம் சாப்பிட்டு முடித்த கையோடு பாத்திரங்களை அலம்பிக் கொண்டிருந்த போது, சிறிதும் இடைவெளியின்றி நீளமாய் இரண்டு முறை அழைப்பு மணி அழைக்கக் கதவைத் திறக்க விரைந்த மாதங்கி, கையில் டிராவல் பேக்குடன் நின்றிருந்த நாத்தனார் சுமதியைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.

    என்னாச்சு…? கண்ணெல்லாம் கலங்கியிருக்கு! தனியா வந்திருக்கே…

    "நான் அவனோடு வாழமாட்டேன்! அம்மா கோண்டு பயலுக்கு எதுக்குக் கல்யாணம்…? 24 மணிநேரமும் வேலை செய்ய நான் என்ன ரோபோட்டா…?

    அதுசரி! குடும்ப நிர்வாகத்தை நீதானே கவனிக்கணும்!

    எதுக்கு கவனிக்கணும்…? உட்கார்ந்து நாட்டாமை பண்றவள் கவனிக்கட்டுமே. என்றவள், " அம்மா… இனி நான் இங்கதான் இருக்கப் போறேன். அம்மாதான் முக்கியமாம்! மனைவியை ரீபிளேஸ் பண்ணலாமாம். அம்மாவை பண்ண முடியாதாம்! சொந்தக்காரப் பயல்களைக் கட்டவே கூடாது! விடியும் போதே காச் மூச்னு கத்துறது! நானும் மனுசிதானே… மிஷினா…?

    "சுமதி… ஒன்னுமில்லாத விசயத்தைப் பெரிய படுத்தாதே…. என்ற மாதங்கி தன் ஒன்று விட்ட தம்பியும், மாப்பிள்ளையுமான நரசிம்மனுக்குப் போன் செய்தாள்.

    மாப்பிள்ளையானதும் கொம்பு முளைச்சிருச்சா… எங்க வீட்டுப் பெண்ணை அழவச்சு அனுப்பியிருக்க… அடிச்சியா…?

    அம்மாவோட சரியா மல்லுக்கு நிற்கிறாக்கா. என்ன பண்ண சொல்றே… ஒரு அடிதான் அடிச்சேன். பையைத் தூக்கிட்டு கிளம்பிட்டா. புத்திமதி சொல்லி அனுப்பி வை!

    உனக்குத்தான்டா புத்தியில்லை! அவள் குணம் தெரிஞ்சுதானே கட்டிக்கிட்டே… நீதான் அணுசரித்துப் போகணும்! அவளுக்கு வேலை செய்து பழக்கமா…சமையலுக்கு ஆள் போடு.

    "அக்கா ப்ளீஸ்… அது பிரச்சனை இல்லைக்கா. அம்மாதான் சமைக்கிறாங்க. பெருக்கித் துடைக்கக் ஆளிருக்கே... தனிக்குடித்தனம் வாடாங்குறா… அது நடக்காத கதை! ஒரு வாரம் டயம் தரேன். அவள் வரலேனா… அங்கேயே வச்சுக்க.

    சந்தோசம் டா. நல்லா பேசுறே. என்ற சுமதி போனை கட் செய்தாள்.

    "மாதங்கி… உன் சித்திக்கு அறிவில்லையா…? பெண்ணைப் பெத்திருந்தால்தானே அருமை தெரியும்! என்ற மாமியாரிடம், அறிவிருந்தால் இங்கு வந்து பெண்ணெடுப்பாளா… என்று முணுமுணுத்தபடி சமையலறைக்குச் சென்றாள். ஒரு டம்டளர் அரிசியைக் கழுவி குக்கரில் வைத்தாள்.

    அண்ணி… குளிச்சுட்டு வரேன். எனக்கு சாதம் வேண்டாம் ஏதாவது டிபன் செய்ங்க.

    ம்ம்ம்… என்றவள் ஃபிரிஜில் இருந்த மாவை எடுத்து வெளியில் வைத்தாள். திருமணமாகி ஒரே மாதத்தில் பெயர் தூக்கிக் கொண்டு வந்து நிற்கும் சுமதிக்கு எப்படி புரிய வைப்பது…? வேலை விசயமாக அவ்வ போது சென்னை வந்து செல்லும் மூர்த்தியிடம் பேசி சிரித்து காதலைச் சொல்லி அவனைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதம் பிடித்து, ஒரே மாதத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து நிற்பவளிடம் எதைப் பேச... யோசித்தபடி கணவனுக்கு போன் செய்து விசயத்தைச் சொன்னாள்.

    நீ எதுவும் பேசாதே. இரண்டு மூன்று நாள் போகட்டும்! விசாரிப்போம்!

    இதையெல்லாம் நீடிக்க விடக் கூடாது! உங்க தங்கை மேல் தவறு! அவளை கண்டிங்க. அவளைக் கொண்டு விடலைனா… நான் கிளம்பிடுவேன்.

    கிளம்பி போ. உனக்கு எப்பவுமே அவளைக் கண்டா ஆகாது.கை நீட்டுவது என்ன பழக்கம்… உன் தம்பியை நீ கண்டிச்சியா…? உங்கள் குடும்பத்து மனுசங்களுக்குக் குசும்பு அதிகம்! வைடி போனை என்று தொடர்பைத் துண்டித்தான் கைலாசம்.

    அண்ணி… தோசை ரெடியா…?

    கையிருக்குல்ல… வார்த்துக்கோ… நான் என்ன மிஷினா…? சட்டென வெடித்தாள் மாதங்கி. கோபத்துடன் வெளியே சென்ற சுமதி, அம்மா… நீ இருக்கும் போதே இந்த வீட்டில் எனக்கு மரியாதையில்லை என்று சத்தமாய் அழத்துவங்கினாள்.

    அழுது ரகளை பண்ணாதே. தோசைதானே நான் வார்த்து தரேன். அவளும் மனுசிதானே. காலையிலிருந்து எவ்வளவு காரியம் பண்ணியிருக்கா…

    ஓ… உனக்கு மகளை விட, மருமகள் உசத்தியா போய்ட்டாளா…

    எனக்கு இரண்டு பேரும் ஒன்னுதான்! என்றபடி காமாட்சி அடுக்கலைக்குள் நுழைய, மாதங்கி பால்கனியில் போய் அமர்ந்து கொண்டாள். தனக்கு ஏன் இவ்வளவு கோபம்…? கோபம் கணவன் மீது… நாத்தனார் மீதா… தம்பி மீதா…? என்று யோசித்தபடி அங்கிருந்து ஹாலில் அமர்ந்திருந்த சுமதியைப் பார்த்தாள். மனது சங்கடப்பட, எழுந்து போய் அருகில் அமர்ந்தாள். ஐயாம் ஸாரி சுமதி… ஏதோ ஒரு டென்சன் கோபமா பேசிட்டேன். வா… சாப்பிடலாம்.

    ஆகா… போதும் போதும்! ரொம்பதான் அக்கறை! அம்மா கொண்டு வருவாங்க. எனக்காக நீங்க சிரம்ப்பட வேண்டாம்!

    அக்கறை இல்லாமலா என் தம்பியை கட்டி வச்சேன்… உனக்கு சாதகமாகத்தானே பேசினேன்.

    சாதகமாவா பேசினீங்க… நக்கலா பேசினீங்க.

    ஓ… அப்படியா…உன் திமிர்த்தனம் பிறந்த வீட்டில்தான் செல்லுபடியாகும்! புகுந்த வீட்டில் நடக்காது ஞாபகம் வச்சுக்கோ.

    "அதையும் பார்ப்போம்! நீ உன்

    Enjoying the preview?
    Page 1 of 1