Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vallamai Tharaayo...!
Vallamai Tharaayo...!
Vallamai Tharaayo...!
Ebook112 pages44 minutes

Vallamai Tharaayo...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இக்கதைகள் அனைத்தும் பெண்கள் பற்றியது. கால சூழலுக்கு ஏற்ப பெண்கள் தங்களை எப்படி பொருத்திக் கொள்கிறார்கள்... என்பதை சொல்கிறது. இனி படித்து அறிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580144710809
Vallamai Tharaayo...!

Read more from Ilamathi Padma

Related to Vallamai Tharaayo...!

Related ebooks

Reviews for Vallamai Tharaayo...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vallamai Tharaayo...! - Ilamathi Padma

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வல்லமை தாராயோ...!

    Vallamai Tharaayo...!

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    பொருளடக்கம்

    1. வல்லமை தாராயோ...

    2. முச்சந்தி வீடு

    3. பிறை நிலா!

    4. இரவல் குழந்தை!

    5. பிரிவு...!

    6. அந்தகாரம்!

    7. ஆசைநாயகி அபராஜிதாவின் மகள்!

    8. மனக்கிலேசம்!

    9. பரீட்சை!

    10. அக்காவின் கணவன்!

    1. வல்லமை தாராயோ...

    இரண்டு நாட்களாக கடும் காய்ச்சல்! மூச்சுக் காற்றின் உஷ்ணத்தை உணர்ந்தபடி கண்கள் மூடி படுத்திருந்தாள் செளமியா. இந்த மாதிரியான நேரங்களில்தான் தனிமை கசப்பானதாய் இருந்தது.இப்படியே காலத்தை கழிச்சுட முடியாது! நினைவிருக்கட்டும்! முப்பது வயசில் வாழ்க்கை முடிஞ்சுடாது! அம்மாவின் குரல் காதில் விழுவது போன்றொரு பிரமை!

    23 வயதில் திருமணம் 25 வயதில் விவாகரத்து என்பதை வீட்டில் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.என்ன பிரச்சனை... எதுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாய்...? அணுசரித்து போவதுதான் வாழ்க்கை! மாப்பிள்ளையிடம் நான் பேசட்டுமா...? விஸ்வம் நல்லவன்! உன்னால்தான் பிரச்சனை வந்திருக்கணும்! என்று அண்ணன் கோபமாய் பேசிய போது, ஆமாம்! என்னால்தான் பிரச்சனை! என்று வெகுண்டவள், பதவி உயர்வுக்காக மேலதிகாரியோடு படுக்க சொல்றான். உனக்கு சம்மதமா... சொல்லு! என்று ஆக்ரோசமாய் கத்திய போது வீடு ஸ்தம்பித்து விட்டது. அதற்குப் பின் யாரும் பேசவில்லை. அம்மா அழுதழுது தன் துக்கத்தைக் கரைத்துக் கொண்டாள். நல்லவேளை குழந்தை தங்கலை! கெட்டதில் ஒரு நல்லது! என்று முணுமுணுத்தாள். ஐந்தாண்டுகள் உருண்டோட மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்திய அம்மாவை வெற்றுப் பார்வை பார்த்தாள்.

    மீண்டும் ஒருமுறை கையை சுட்டுக்கொள்ளணுமா...? என்னை இப்படியே இருக்க விடும்மா. என்ற போது, காலத்துக்கும் இப்படியே இருக்க முடியுமா... யாரையாவது பிடிச்சிருந்தால் சொல்லு! தனிமரமாய் நின்னுடுவே..."

    பிடித்தம், பிடித்தமில்லை என்பதையெல்லாம் கடந்து வந்தாச்சு.என் படிப்பும், வேலையும் என்னைக் காப்பாத்தும் நீ கவலைப்படாதே. அப்படியே யாரையேணும் பிடித்தால் லிவ்விங் டூ கெதர்தான்! பலபேர் அப்படி வாழ்றாங்க.

    ச்சீய்... வாய் மேலேயே போடுவேன்

    கோபம் வருதுல்ல... என்னை வற்புறுத்தாதே... உடம்பு சுகத்துக்காகத்தான் கல்யாணம்னா... இரண்டு வருசம் அனுபவிச்சாச்சு. முடியலை என்றாலும் விட மாட்டான்! வலி, வேதனை, அழுகை எதுவுமே அவனை பாதிக்காது. வெறுத்துப் போச்சும்மா. போதாக் குறைக்கு வேறொருத்தனோடு படுக்க சொன்னான் பாரு... அப்பதான் அவனை செருப்பால் அடிச்சுட்டு வெளியே வந்தேன். இப்ப சொல்லு! மனசுக்குப் பிடிச்சவனோடு சேர்ந்து வாழ்வது தவறாம்மா...?

    ஐயோ... ஏதேதோ பேசுறியே... பயமா இருக்கே... அப்படி ஏதும் பண்ணிடாதே.

    அப்படியான எண்ணம் இப்போதைக்கு இல்லை! காலப்போக்கில் வரலாம். சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படலாம். தோழமையான புரிதலுள்ள ஒரு ஆண் அறிமுகமாகும் போது, அத்தகைய சூழலில் இயற்கை ஈர்ப்பு விசை எங்களை இணைக்கும் போது நீ என்னை கோபிக்கக் கூடாது! கோபிக்க மாட்டாய் என்று நம்புகிறேன் என்றதும் இரண்டு மாதங்களுக்கு முன் இவர் என் தோழியின் குடும்ப நண்பர் ரிச்சர்ட் மா. வேலைக்கு ஏற்பாடு பண்றதா சொல்லியிருக்கார் என்று வீடு தேடி வந்தவனை அறிமுகப்படுத்தியது நினைவிற்கு வந்த்து.

    செளமியா... ரிச்சர்ட் உன்னைக் காதலிக்கிறானா...?

    "பயப்படாதே மா. அவன். நல்லவன் அத்துமீறி நடக்க மாட்டான்.

    நீ பேசுவது என் வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்ற போது கண்ணீர் வரும் வரை சிரித்தாள். ஃபிளைட் ஏறும் வரை அம்மாவின் பார்வை துரத்திக் கொண்டே வந்தது. அதன்பின் அம்மாவை பார்க்க முடியவில்லை. கோவிட்டில் இறந்து போனாள் என்ற செய்தி மட்டுமே வந்தது. அந்த மன அழுத்தத்தில் கூட காய்ச்சல் வந்திருக்கலாம். இப்படியே இறந்து போனால் யாருக்காவது தெரியுமா...? ரிச்சர்ட் வீக் எண்டில் அவனது அம்மாவைப் பார்க்கப் போவான். தவிர பலமுறை விலாசம் கேட்டும் தராமல் இருந்தது தவறோ... ஆண்கள் மீதுள்ள பயத்தால் அவனையும் தூரத்தில் நிறுத்தி வைத்தாள். அவளது சிந்தனயைக் கலைத்த அழைப்புமணியால் உந்தப்பட்டு மெதுவாக எழுந்தாள். கால்கள் பின்ன தள்ளாடியபடி கதவைத் திறந்த அடுத்த நொடி மயங்கி ரிச்சர்ட் மேல் சாய்ந்தாள்.

    பதட்டத்தோடு அவளை அணைத்துத் தூக்கியவன் படுக்கையில் படுக்க வைத்தான். ஐஸ்வாட்டரில் தனது கர்சீப்பை நனைத்து நெற்றியில் போட்டான்.செளமி... செளமி... உனக்கு ஒன்றுமில்லை! நானிருக்கேன்! என்றவன் விடியும் வரை தூங்காமல் விழித்திருந்தான். காய்ச்சலின் தாக்கம் குறைந்து கண்களைத் திறந்த போது, ரிச்சர்டைப் பார்த்து சோகமாய் புன்னகைத்தாள். ரிச்சர்ட் அனாதையாய் இறந்து போவேனோ என்று பயமாக இருந்தது. என்ற போது, "அதெப்படி... உன்னை அப்படி விட்டுவிடுவேனா...? என்ற ரிச்சர்ட் குனிந்து செளமியாவின் நெற்றியில் முத்தமிட்டான். கண்களை மூடி ரசித்த செளமியாவின் மனம் தத்தளித்தது. இந்த மிருதுவான முத்தம் அவளுக்குப் புதிது! விஸ்வம் அவளை மனுசியாக கையாண்டதில்லை. பெண்மையை மென்மையாக அணுகத் தெரியாதவன்! போற்றத் தகுந்தவள் பெண் என்பதை உணராதவன். மனைவி என்றால் தனது உடமைப் பொருள் என்று நினைப்பவன். ‘ச்சை’ எதற்காக முடிந்து போன ஒன்றை நினைக்கணும்...? அதட்டியபடி மனதை சமன்படுத்தினாள்.

    செளமி...

    ம்ம்ம்...

    Are you OK...? என்ற ரிச்சர்ட்டின் வெது வெதுப்பான கரங்களுக்குள் ஒரு பாதுகாப்பை உணர்ந்தவளாய், Yes..." என்றாள். கண்களைத் திறக்க சங்கோஜப்பட்டாள்.!

    Good என்றவன் இப்ப சொல்லு! என்ன வேணும் சாப்பிட...?"

    எதுவும் வேண்டாம்! ரிச்சர்ட்! என் கூடவே இரு ப்ளீஸ்

    "ரொம்ப பலவீனமா இருக்கே... ஏதாவது சாப்பிடு! இன்று முழுதும் ஓய்வெடு! நாளை என் வீட்டிற்குப் போகலாம்! அம்மா உன்னை அழைத்து வரச்சொன்னாள்.

    எதற்கு... என்றாள் தயக்கத்துடன்.

    "ஜஸ்ட் ஃபிரண்ட்லியாகத்தான்! உன் தோழியை அறிமுகப்படுத்தேன் என்றாள். அழைத்து வருவதாகச் சொல்லியிருக்கிறேன்.

    வேறெந்த நோக்கமும் இல்லையே...

    ஏன்... நண்பன் என்ற எல்லைக் கோட்டைத் தாண்டுவேன் என்கிற பயமா...?

    ச்சே... ச்சே... அப்படியில்லை

    அப்படியில்லாமலா விலாசம் கொடுக்கத் தயங்கினாய்... இரண்டு நாட்களாக நீ போன் எடுக்கவில்லை என்றவன், ஜென்னி போன் செய்ததோடு விலாசத்தையும் அனுப்பினாள். இல்லையென்றால் எனக்கெப்படி உன் நிலைமை தெரிய வரும் செளமியா...? இந்தியப் பெண்களிடம் ஒரு கட்டுப்பட்டித்தனம் இருக்கிறது! அதென்ன... கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்! நான்சென்ஸ்! அதுதான் விவாகரத்து ஆயாச்சே... லண்டன் வந்த பினபும் உன் அடிமைத்தனம் மாறவில்லை. கலாச்சாரம், மரப்புழுதி என்று அதிலேயே உழன்று கொண்டிருக்கிறாய்.

    "இல்லையில்லை! நான்

    Enjoying the preview?
    Page 1 of 1