Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirottam
Uyirottam
Uyirottam
Ebook143 pages54 minutes

Uyirottam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னுடைய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளியிடும் யோசனை இருந்ததை என் தந்தை எழுத்தாளர் அமரர் ரஸவாதியின் நெருங்கிய நண்பரும் மூத்த எழுத்தாளர், பத்திரிகையாளருமான திரு. பால்யூ அவர்களிடம் தெரிவித்தேன். ஆர்வத்தோடு கதைகளை வாங்கிப் படித்த அவர் மிகுந்த அக்கறையோடு மூத்த எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்களிடம் என்னை அறிமுகம் செய்வித்து இந்தத் தொகுதிக்கு ஒரு முன்னுரை எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டார்.

சிறுகதைகளைப் படித்து சிலாகித்து, மிகுந்த அன்புடன் ஆர். சூடாமணி அவர்கள் எழுதிக் கொடுத்த முன்னுரை இந்தத் தொகுதிக்கும் பெருமை சேர்த்து என்னையும் கௌரவிக்கிறது.

- ரேவதி பாலு

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128704664
Uyirottam

Read more from Revathy Balu

Related to Uyirottam

Related ebooks

Reviews for Uyirottam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirottam - Revathy Balu

    http://www.pustaka.co.in

    உயிரோட்டம்

    சிறுகதைகள்

    Uyirottam

    Sirukathaigal

    Author:

    ரேவதி பாலு

    Revathy Balu

    For more books

    http://pustaka.co.in/home/author/revathy-balu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    1. தியானம்

    2. சாண் ஏறினால்....

    3. பிறவிப் பயன்

    4. உணவே பிரம்மம்

    5. நீயா?

    6. இல்லம்

    7. வாழ்வில் மறைந்திருக்கும்

    8. உயிரோட்டம்

    9. நிழலல்ல நிஜம்

    10. விடியாத விடியல்கள்

    11. அம்புப் படுக்கை

    12. மனம் நெருங்குதே உன்னை...

    13. பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு....

    14. ஒரே நாள்

    15. இதுவும் கடந்து போகும்

    முன்னுரை

    சிறுகதை இலக்கியத்துக்கு நாவல் இலக்கியமளவு வரவேற்பு இல்லாத காலம் ஒன்று இருந்தது.

    என் சிறுகதைத் தொகுப்பு வெளியிடுவீர்களா? என்று கதாசிரியர் கேட்டால், கட்டாயம் செய்கிறேன். கூடவே ஒருநாவலும் கொடுங்கள். இரண்டையும் ஒன்றாக வெளியிட்டால்தான் விலை போகும் என்று பதிப்பாளர் பதில் சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டு. நாவல் எழுத சிறுகதைகளை ஒரு பயிற்சியாகக் கருதிய காலம் அது.

    இன்று நிலைமை அடியோடு மாறியுள்ளது. கலைத் தகுதியில் நாவலுக்கு எள்ளளவும் குறையாத முழுமையான இலக்கிய வடிவம்தான் சிறுகதையும் என்ற விழிப் புணர்வு இன்று நம்மிடையே ஏற்பட்டிருப்பது மிக ஆரோக்கியமான வளர்ச்சி. இதன் விளைவாக எழுத்தாளர்களிடையே சிறுகதை எழுதுவதில் அதிக ஆர்வம் விளைந்து, சிறந்த சிறுகதைகள் உருவாக வழி செய்துள்ளது என்றே நினைக்கிறேன். இவ்வாறு 'நல்ல சிறு கதையாசிரியர்' என்று குறிப்பிடத் தக்க வரிசையில் திருமதி ரேவதி பாலுவும் ஒருவர்.

    திருமதி ரேவதி பாலுவின் இந்தத் தொகுப்பைப் படிக்கும் போது, அவர் எந்த 'ism' என்ற சித்தாந்தத்துக்கும் தம்மை உட்படுத்திக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. தனிமனித உணர்வுகளும் குடும்பப் பின்னணிப் புனைவுகளுமே நாம் பெருமளவு இக்கதைகளில் காண்கிறோம். பெரும்பாலான கதைகள் தரமாக உள்ளன. பிறர்க்கு உதவும் மனிதாபிமானம், வாழ்க்கையை அணுகுவதில் ஆக்கபூர்வமான கண்ணோட்டம் போன்ற நல்லியல்புகள், படிப்போருக்கு மனநிறைவு அளிக்கின்றன.

    தம் நோக்கத்தில் மரணம் வரை உறுதியோடு இயங்கும் இரு பெண்மணிகளை இரு கதைகளில் பார்க்கிறோம். (பிறவிப் பயன், அம்புப் படுக்கை), பிறவிப் பயன் கதையில் வரும் விசாலம், மகளோடு வாழும் வாய்ப்பைப் புறக்கணித்துவிட்டு, தனியாக இருந்து தன்னாலியன்ற வரை மற்றவர்களுக்கு உதவியாக இருந்து கொண்டு அதில் நிறைவு கண்டு வாழ்கிறாள். கடைசி மூச்சு விடும் போதும் பிறர்க்குத் தன் உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டே கண் மூடுகிறாள்.

    ‘அம்புப் படுக்கை’யில் வரும் பெண்மணி வாழ்நாளெல்லாம் சுறுசுறுப்பாய், சுதந்திரமாய் இயங்கியவள். முதுமைக் காலத்தில் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகி எல்லாவற்றுக்கும் பிறர் உதவியை நாட வேண்டிய நிலை வரும்போது, தான் மற்றவர்களுக்கு ஒரு சுமையாய் ஆகிவிடக்கூடாது என்று எண்ணி, படிப்படியாய் உணவைக் குறைத்து உடலை ஒடுக்கி தன் தேவைகளை எளிமையாக்கிக் கடவுள் துதிகளைச்செவியுற்றவாறு இறுதியில் உயிர் விடுகிறாள். (அம்மாவும் பீஷ்மரைப் போல் தன் உத்தராயணத்துக்காகக் காத்திருக்கிறாளோ என்று மகன் நினைப்பது நல்ல ஒப்பீடு.) இவ்விரு முதிய பெண்களின் மனோதிடம் வியப்புக்குரியது.

    உணவே பிரம்மம் என்ற கதையும் ஒரு முதியவளைப் பற்றியது. பிறருக்கு உதவுவதையே வாழ்க்கை நெறியாகக் கொண்டவள். உபநிஷதத்தில் வரும் 'உணவே பிரம்மம்' என்ற வாக்கியத்துக்கேற்ப, தன் தனிப்பட்ட துக்கங்களையும் மீறிப் பிறருக்கு உணவு ஆக்கிப் படைப்பதே அவளது பெரும் பணியாக இருக்கிறது. இந்தப் பணியை அவள் அமைதியாய், ஆரவாரமின்றி இறுதி வரை செய்கிறாள். முன் சொன்ன இரு கதைகளைப் போலவே இதிலும் முக்கியப் பாத்திரம் ஒரு பெண்மணி, இறுதியில் அவள் மரணம் என்ற கூறுகள் ஒன்றாயிருந்தாலும் சுவை இரண்டும் 'கதை' என்ற உணர்வைத் தரும் நிகழ்ச்சிப் புனைவுகள் கொண்டவை. இக்கதை சம்பவம் பின்னல்கள் இன்றி இயல்பாக, நேராகச் சென்று முடிகிறது. இது கதையல்ல, வாழ்க்கை என்ற உணர்வைத் தருகிறது. அவ்வகையில் முன் சொன்ன இரு கதைகளை விடச் சிறந்து நிற்கிறது.

    இறைவன், பக்தி சம்பந்தமாய்க் குறிப்பிடும் கதைகள் மூன்று உள்ளன.

    நாத்திகம் பேசுபவர்கள் ஆபத்துக் காலத்தில் அச்சம் காரணமாய்க் கடவுளை நாடுவதில் எந்தச் சிறப்பும் இல்லை. (மனம் நெருங்குதே உன்னை)

    பக்தி, அகம்பாவம், பணிவு ஆகியவை மற்ற இரண்டு கதைகளில் பேசப்படுகின்றன. (வாழ்வில் மறைந்திருக்கும் நியாயங்கள், பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு...). இதில் இரண்டாவது கதையில், மனிதன் தன்னை வெறும் 'பூஜ்ஜியம்' என்று உணரும் பணிவுடன் வாழ்ந்தால் இறைவன் 'ஒன்று' என அவனோடு சேர்ந்து மனிதனின் மதிப்பைப் பத்தாக்கி விடுவான் என்ற கருத்து மிக உயரியது.

    கதையாகப் புனையாமல் நடைமுறை வாழ்க்கையின் அன்றாடப் போராட்டங்கள், கவலைகள், பிரச்சனைகளை அப்படியே எடுத்துக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் உத்தியைக் கொண்ட வாழ்க்கைச் சித்திரங்கள் இரண்டு இத்தொகுப்பில் உள்ளன. (சாண் ஏறினால்..., விடியாத விடியல்கள்). இவ்விரு கதைகளுக்குத் தொடக்கம், நடு, முடிவு என்ற அறுதியிட்ட அமைப்புக் கிடையாது. இவை வாழ்க்கையின் சில பக்கங்கள் மட்டுமே. அதுவே இவற்றின் சிறப்பு. இரண்டும் பிசிறில்லாத யதார்த்தப் பதிவுகள்.

    இன்றைய சமுதாயத்தின் விளைவாகச் சில வெளிப்பாடுகள் எழுந்துள்ளன. அவற்றில் சில முதியோர் இல்லம், கூட்டுக்குடும்ப முறை உடைதல், குழந்தை வேண்டாம் என்ற தீர்மானம், காதல் திருமணம், வேலைக்குப் போகும் பெண் போன்றவை. இவை இல்லம், உயிரோட்டம், நிழலல்ல, நிஜம், ஒரே நாள், ஆகிய கதைகளில் தொட்டுக் காட்டப்படுகின்றன. தலைமுறைகளின் நீடித்த தொடர்ச்சிதான் வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்குகிறது என்ற கருத்தை உயிரோட்டம் கதை அழுத்தமாக வலியுறுத்துகிறது.

    வேலை பார்க்கும் பெண் உடல் நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்தாலும் அவளுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. சிறு பணிகளும் தொல்லைகளும் வந்து சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் அவள் இத்தகைய விடுப்பை விட ஆபிஸ் போவதே மேல் என்று முடிவு செய்வதில் வியப்பென்ன? ஒரே நாள் காட்டும் நிதர்சனம் இது. (ஓர் ஆண் விடுப்பு எடுத்தால் இப்படி நேருமா என்ற கேள்வி நம்மையறியாமலே மனத்தில் எழுகிறது.)

    தியானம் என்ற கதை, மகிழ்வுறுத்தும் அழகிய சிறு சித்திரம். 'சும்மாயிருத்தல்' என்ற ஒரே சொற்றொடரை உன்னத நிலையிலும் கீழ் நிலையிலும் இரு வேறு பொருள்களில் பயன்படுத்துவதிலுள்ள முரண்பாட்டில் விளைந்த நகைச்சுவையை இக்கதையில் ரசிக்கிறோம்.

    வீடு என்றால் சத்தம், பேச்சு, கலகலப்பு - இவை அவசியம் இருக்க வேண்டும். இவையே அதன் உயிர்க் கலை. இந்தக் கருத்தை நீயா! என்ற, மனசை இதமாய் வருடிக் கொடுக்கிற, ஒரு மென்மையான கதையாக உருவாக்கித் தந்திருக்கிறார் திருமதி ரேவதி.

    இதுவும் கடந்து போகும் என்ற குறுநாவலின் நாயகன். அனந்து வாழ்க்கையின் யதார்த்தங்களை அப்படியே இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர். ஒரு ஞானியைப் போல் தன் நண்பரிடம் கூறுகிறார். வாழ்க்கை அது பாட்டுக்கு எல்லாத்தையும் அடிச்சுண்டு ஆற்றோட்டமா ஓடிண்டிருக்கு. நா கரையோரமா நின்று வேடிக்கை மட்டும் பார்த்துண்டிருக்கேன்.

    வாழ்வில் எந்த நிலையும் சாச்வதமில்லை, எல்லாம் ஒருநாள் கடந்து போகும் என்ற சித்தாந்தம் அவருடையது. இதனால் அவர் எப்போதும் அமைதியும் உற்சாகமுமாகவே இருக்கிறார்.

    வாழ்க்கையில் ஏமாற்றங்கள் ஏற்படும் போதும் அவர் சோகத்தில் ஆழ்ந்து விடவில்லை. மனத்தில் கசப்புக்கு இடம் தரவில்லை. எல்லாம் கடந்து போவது தான் என்பதால் சலனமின்றி நம்பிக்கையோடு இருக்கிறார். வாழ்க்கையோட்டத்தில் பிள்ளைகள் பெரியவர்களாகிறார்கள். பெரிய மகனும் மருமகளும் அவர்களைப் பிரிந்து செல்கிறார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1