Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Snehithan
Snehithan
Snehithan
Ebook215 pages1 hour

Snehithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எண்ணமும் எழுத்தும்

இலக்கிய உலகில் பல எழுத்துக்கள் வணிக மயமாக்கப்பட்டு சீரழிந்து கிடக்கையில் நமது எழுத்துக்களும் கவனம் பெறுமா என்ற ஏக்கம் ஒருபுறம். மறுபுறம் ஆயிரம் பணிச் சுமை, குடும்பச் சுமை என்று பல இருந்தாலும் எழுதியே ஆகவேண்டும் என்கிற எண்ணம் மேலும் மேலும் வலுப்பெறுகிறது. ஏனெனில் எழுதுவது ஒரு சமூகப் பொறுப்பு.

மூன்று தொகுப்புகளுக்குப் பிறகு இது நான்காவது தொகுப்பு சிநேகிதன். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! எப்போது எழுதினோம், எப்படி எழுதினோம் என்ற பிரமிப்பும் கூடவே ஏற்படுகிறது.

அடித்தட்டு மக்களின் வாழ்வியல் கூறுகளையும் சமூகத்தில் புரையோடிக் கிடக்கிற அவலங்களுமே ஆங்காங்கே என் கதைகளில் பிரதிபலித்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வாசகத்தளமும், நிறைந்த விமர்சனங்களையும் கொண்டு என் கதைகள் இன்றளவும் தொடர்கின்றன.

எத்தனை எத்தனை விதமான மனிதர்கள் கதைகளில் வந்து போனாலும் ‘எங்க சனங்களின் கதை’ இருளிலிருந்து ஒளிக்கு ஏங்குவது; அடிமைத்தனத்திலிருந்து விலங்கொடித்து விடுதலை பெறத் துடிப்பதாகும்.

அடிபட்டு வீழ்ந்து நொந்துபோன எங்க சனங்கள் இந்த சமூக அமைப்பை எதிர்த்து எனது எல்லா கதைகளிலும் தொடர்ந்து வருவார்கள், பேசுவார்கள், திமிறி எழுவார்கள்!

சாகித்திய அகாடமி (சென்னை) யில் கதை வாசிக்கப்பட்டும், தொகுப்பில் சேர்க்கப்பட்டும், மத்திய சாகித்ய அகாடமி (புதுடெல்லியில் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும், ‘இன்தாம்’ இன்டர்நெட்வரை கதை வெளிவந்திருப்பதும் சிறு சந்தோசம் தருகிற செய்தி.

எனது கதைகளை வெளியிட்ட தாமரை, செம்மலர், இந்தியா டுடே, தினமணி கதிர்... உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்கும் விமர்சனங்களினால் ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இனி உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

- விழி. பா. இதயவேந்தன்

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127404371
Snehithan

Read more from Vizhi Pa. Idhayaventhan

Related to Snehithan

Related ebooks

Reviews for Snehithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Snehithan - Vizhi Pa. Idhayaventhan

    http://www.pustaka.co.in

    சிநேகிதன்

    (சிறுகதைகள்)

    Snehithan

    (Sirukathaigal)

    Author:

    விழி. பா. இதயவேந்தன்

    Vizhi Pa. Idhayaventhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vizhi-pa-idhayaventhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தினந்தோறும் தீ மிதி

    சிகரத்தில் ஏற்றும் சிறுகதைகள்

    பாக்கியம் பெற்றவன்

    எண்ணமும் எழுத்தும்

    1. சிநேகிதன்

    1. ஏமாற்றம்

    2. குப்பை

    3. பட்டி

    4. பொக்கைகள்

    5. கருப்பு நிறத்தில் சில புள்ளிகள்

    6. விடுதி

    7. காத்திருப்பு

    8. ஊராக்குட்டை

    9. இறந்த மானுடம்

    10. ஆசை

    11. புதுச்சட்டை

    12. கயிறு

    தினந்தோறும் தீ மிதி

    வரப்போகிற திருவிழாவிற்காக விரதமிருந்து தீ மிதி மேற்கொள்பவரல்ல விழி. பா. இதயவேந்தன். அவர் அன்றாடம் தீயை மிதித்துக் கொண்டிருப்பவர்.

    எழுத்து என்பது அவருக்கு வரமல்ல. சாபம். சலிப்பூட்டும் அளவுக்கு சள்ளைப்படுத்தும் வாழ்க்கையும், அதன் அனுபவங்களும் எழுதாமல் இருக்க முடியாது என்கிற ஒரு நிர்பந்தத்தை அவருக்கு ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிர்பந்தத்தின் ஒரு விளைவுதான் இச்சிறுகதைகள்.

    இன்றைய தமிழின் தலித் எழுத்தாளர்களில் முக்கியமானவரான விழி. பா. இதயவேந்தனின் எழுத்துலப் பிரவேசம் என்பது, வெங்கட் சாமிநாதன், மெளனி பற்றிக் குறிப்பிடுவது போல ஏதோ திடீரென்று வெடித்து வெளிப்பட்ட நிகழ்வு அல்ல. அவரது எழுத்துக்களால் இலக்கிய சரித்திராசிரியர்களின் மண்டை காய வைக்கிற அதிசயம் ஏதும் இங்கே நிகழ்ந்து விடவில்லை.

    ஒரு ‘தலித்’ தாகப் பிறந்த ஒருவன், தனது அனுபவ உலகத்தைச் சுய நேர்மையுடன் பதிவு செய்கிற ஒரு முயற்சி; அவ்வளவுதான்.

    என்னது? பசி என்பது பழைய விஷயமா?

    சரி, பசியினால் மயங்கி விழுந்துவிட்ட இரண்டு பேரில், ஒருவனைத் தொட்டு மூக்கில் கை வைத்து, முகத்தில் தண்ணீர் தெளிப்பவர்கள். இன்னொருவனை ஏதோ ஒரு காரணத்துக்காகத் தீண்டக்கூட மாட்டேன் என்கிறார்களே. இது ஏன்?

    இச்சிறுகதைகளின் உலகம் இத்தகைய வினாக்களால் நிரம்பியுள்ளது. வாசிப்புத் தளத்தில் கதையோட்டத்தில் மிதந்து மேலெழுந்து வரும் இத்தகைய வினாக்களைத் தூய இலக்கிய வாதிகள் பிரச்சாரம் என்று புறந்தள்ளக்கூடும். என்ன செய்வது? பிரச்சாரம் செய்யத் தேவையற்றவர்கள், பிரச்சாரம் செய்யாமல் இருந்து விட்டுப் போகட்டும். விழி. பா. இதயவேந்த னுக் கு வாழ்க்கை வேறுவிதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

    இச்சிறுகதைகள் வெளிச்சம் பாய்ச்சப்பட்ட நாடகமேடை களில் நிகழ்வதில்லை. மாறாக, நாடக மேடையின் பின்னால் இருக்கும் ஒப்பனை அறைகளில் நடைபெறுகின்றன. இதன் கதாபாத்திரங்கள் வேஷம் கலைத்த நிலையில், நம்முடன் பேசுகிறார்கள்.

    1985-ல் விழுப்புரத்திற்கு நான் மாற்றலாகி வந்தபோது, விழி. பா. இதயவேந்தன் எனக்கு அறிமுகமானார். கவிஞர் பழமலய்யின் மாணவராகவும், எனது அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் நூலின் வாசகராகவும், ‘நெம்புகோல்’ அமைப்பின் மூலமாக தீவிரமாக இயங்குகிற இளைஞராகவும் எனக்குத் தெரியவந்த இதயவேந்தனின் வாழ்க்கைப் பின்புலங்கள் மெல்ல மெல்ல எனக்குப் புலப்படத் தொடங்கின. வாழ்க்கைத் துயரங்களின், நெருக்கடிகளின், முகத்துக்கு நேராக அவர் போராடியே தீருவது என்கிற ஆரோக்கியமான முடிவுகளை மிக இளைஞராக இருந்தபோதே எடுத்தார். இத்தகைய முடிவுகளில் ஒன்றுதான், தனது சொந்த அனுபவங்களை, அவற்றிற்கே உரிய மரியாதையுடன், எந்தவித வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ இன்றி சிறுகதை களாகப் பதிவு செய்வது என்பது. இவ்வாறு தலித் மக்களின் சொந்த அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது மனித குல விடுதலை நோக்கிய பரந்த செயல்பாட்டிற்கான ஒரு பங்களிப்பு என்பதைப் புரிந்து கொண்டவர் அவர்.

    இதனால்தான் குப்பை பொறுக்கப் போகிற சிறுமிக்கு திருட்டுப் பட்டம் கட்டுவது குறித்தும், ஊருக்கு வெளியே பன்றி வளர்த்து வாழும் கூனன் எனும் குறவனைச் சாராயம் காய்ச்சுகிறவன் என்று கைது செய்வது குறித்தும், தீபாவளிப் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாத ஏழைச் சிறுவனின் சந்தேகம் குறித்தும் அவர் எழுதுகிறபோது எழுத்துக் கலை குறித்த சிறப்பு முயற்சிகள் எதையும் எடுத்துக் கொள்ளாமலேயே வாசகனை அவர் உள் வாங்கி விடுகிறார்.

    எழுத்துக் கலையின் செய்நேர்த்தி அதற்குச் சமதையான அளவுக்கான கருப்பொருள் கொண்டதாக இல்லாது போவது என்பது ஒரு மோசடி என்று பேசுகிறார் காஸ்டன்டின் ஃபீடின். இங்கே சிறுகதைக் கலை என்பது அனுபவங்களின் ஆழ, அகலங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திகைத்து நிற்கிறது.

    விழி. பா. இதயவேந்தனின் கதை உலகம், வசதியாக சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு கதை படிப்பவர்களின் உள் உலகங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அவர்களின் மனசாட்சியைத் தொட்டு, ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக நியாயம் கேட்கிறது.

    தினந்தோறும் தீ மிதிப்பவர்களின் பாதங்களில் உள்ள ஆறாத வடுக்களைப் போன்ற காயங்களை மனிதகுல மனசாட்சியில் ஏற்படுத்துகின்றன இச்சிறுகதைகள்.

    - இந்திரன்.

    சிகரத்தில் ஏற்றும் சிறுகதைகள்

    விழி. பா. இதயவேந்தன் கதைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை பரிதாபங்கள் நிறைந்தது. அவர்களின் அன்றாட அவலங்கள் கற்பனை கலக்காமல் உள்ளது உள்ளபடி சித்தரிக்கப்படுவது என்பது அவரின் தனிநடை.

    தொடர்ச்சியாக இவரின் முந்தைய சிறுகதைகளைப் படித்ததில் ‘சோறு’ கதை கண்களில் நீர் வரவழைப்பது. வாழ்வின் மிகப் பின்தங்கிய நிலையிலும் தன் மகனின் படிப்புக்காக சமூகத்துடன் போராடும் தாய். எந்த வேலை என்றாலும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது, படிப்புக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை ‘இம்சை’யில் வரும் ஒரு கல்லூரி மாணவனின் மூலம் இன்றைய இளைய சமுதாயத்திற்கும், படித்துவிட்டோம் என்பதற்காகவே பெரும்பாலான வேலைகளைத் தாழ்ந்ததாகக் கருதி ஒதுக்கிவிட்டு, தாடியும் நுனிநாக்கு ஆங்கிலமாகவும் சுற்றும் இளைஞர்களுக்கு ஓர் சாட்டையடி.

    பெற்றவர்களையே சுமையாக நினைக்கும் இந்த நவீன காலத்தில் தாயின் அலுவலகப் பணத்தினால் வாங்கிய மனையை தாயைப் பார்ப்பது போல் பார்த்து வரும் இவரின் பார்வை வித்தியாசமானது.

    ‘ஓடுடா நாயே, உசிருக்குப் பயந்தவங்க நாங்க இல்லடா’ என்று அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் சமூகம் என்று இவர் கதைகளில் ஓர் போர்க்குணம் தெரியும். எனவே இவர் ஓர் போராளியாகவும் பரிணமிக்கிறார் எனலாம். மிகைப்படுத்தப்படாமலும் வர்ணனை ஜாலமில்லாத பாத்திரங்களைப் படைப்பதால் தொடர்ந்து இவரின் கதைகள் உண்மைகளின் மறு பதிப்பாக திகழ்கின்றது. கதைகளை மட்டும் நகர்த்தாமல் அதற்குள் உள்ளார்ந்த ஓர் தீர்வும் அவரே கூறுவது ஒரு தேர்ந்த கலைஞனின் பணியே.

    தற்போதய கணினி காலத்தில் உண்மையைக்கூட உவமையுடன் கூற வேண்டியுள்ளது. சோகத்தைக் கூட சுய தன்மையுடன் வெளிப்படுத்தப்படுவதில்லை. அழுகையைக் கூட அழகாகத்தான் அழுகிறார்கள். அந்த அளவுக்கு அகிலமே நாகரிகம் என்ற மாயைப் போர்வைக்குள் சுருண்டு கொண்டுள்ளது.

    ஆங்கிலத்தை ஆதரிக்கும் இவர்கள் தமிழைத் தள்ளிவிடுகிறார்கள். இலக்கியம் என்றால் கிலோ என்ன விலை என்கிறார்கள். கவிதை என்றவுடன் அவர்கள் மனதில் நிழலாடுவது விரசமாக எழுதப்படும் இரு வரி துணுக்குகள்தான். இந்த மாதிரியான சமூகத்தை விழி. பா. இதயவேந்தன் போன்ற படைப்பாளிகள்தான் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    நல்லதை நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். இலக்கியத்தின் மூலம் இனிவரும் சமுதாயத்திற்கு நிறைய உணர்த்தப்படவேண்டும். கற்பனை கலக்காத கதைகளை, உள்ளதை உள்ளபடி படைக்கும் இவரின் படைப்புக்கு ஓர் தனி நடையுண்டு. முந்தைய தொகுதிகளைப் போலவே இத்தொகுப்பிலுள்ள ‘சிநேகிதன்’ சிறுகதையில் இவரது நடைமாறினாலும் விழி. பா. இதயவேந்தன்தான் என்பதை தன் கதைக்கருவில் காட்டிவிடுகிறார்.

    இவரின் கதை காலத்தால் அழியாத படைப்பாக விளங்கும். இலக்கியம் ஓர் காலக்கண்ணாடி என்பார்கள். ஏனெனில் நம் முன்னோர் வாழ்க்கை முறையை அறிய எப்படி நம் சங்க இலக்கிய நூல்கள் பயன்படுகிறதோ அதுபோல் இன்றைய நம் வாழ்வியல் முறையை அறிய இதயவேந்தன் போன்ற படைப்பாளிகளின் படைப்புக்கள்தான் உதவும் என்பது என் உறுதியான நம்பிக்கை.

    எல்லாக் கதைகளும் சமூகப் பொறுப்புணர்ச்சியோடு படைத்திருக்கும் இவரின் கதைகள் பரவலாக இலக்கிய உலகில் ஓர் தலித் எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்று.

    சிகரத்தை நோக்கி சிங்க நடை போடும் எழுத்தாளர் இதயவேந்தன் வரும் நூற்றாண்டில் நிச்சயம் சிறப்பாகப் பேசப்படுவார் என்ற நம்பிக்கையுடன்.

    இரா. விசயலட்சுமி, எம்.ஏ., பி.லிட்., (தமிழ்)

    பாக்கியம் பெற்றவன்

    1980ன் கோடைகால முடிவில், விழுப்புரம் அரசினர் கலைக் கல்லூரியில் நுழைந்தபோது பழைய பள்ளித் தொடர்புகளுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்! அது மாணவப் பருவம்! சில நாட்களிலேயே அகர வரிசைப்படி அமர வேண்டிய நிர்ப்பந்தத்தில் அறிமுகமானவர்கள் அண்ணாத்துரய்யும் இறந்தும் எங்களுடன் வாழும் எங்கள் இனிய ஆதவனும். அதே காலகட்டத்தில், விழுப்புரம் நகரின் இலக்கிய நிகழ்வுகளில் எங்களை இணைத்துக் கொண்டோம்.

    எழுதத் துவங்குவதற்கு முன்னால், ஒரு புனைபெயர் வேண்டாமோ! பு. பெ. இல்லாமல் எழுத்தாளனாக முடியுமோ! உடனடியாக யோசித்து நான் ‘விழி -அன்பன்’ ஆகவும், அண்ணாத்துரய் ‘இதயவேந்தன்’ ஆகவும் அரிதாரம் பூசிக் கொண்டோம்.) எங்கள் மதிப்பிற்குரிய பேராசிரியர்கள் தோழர் கல்யாணி, தோழர் பழமலய், தோழர் உலோகியா, தோழர் சின்னத்தம்பி, தோழர் நாராயணன், திருமிகு. கோ. சிவசுப்ரமணியன், திருமதி. மங்கையர்க்கரசி, தோழர் எஸ். திருநாவுக்கரசு போன்ற ஒளிமரங்கள் வழிகாட்ட, ‘விசிலடிச்சான் குஞ்சுகளாக’ ரசிகர் மன்றங்களில் கரைந்து காணாமற் போயிருக்க வேண்டிய நாங்கள், மக்கள் கலை இலக்கிய நிகழ்வுகளில் பங்குகொண்டோம், கற்றோம்; வளர்ந்தோம். பேச்சு, கட்டுரை, கவிதை என பெரும்பாலான வர்கள் பிரதான சாலையில் செல்ல.

    அண்ணாத்துரய் மட்டும் ‘சிறுகதை’ எனும் தனி உலகத்தில் தனி ஆவர்த்தனம்... பழமலய் பாதிப்பில் அண்ணாத்துரய் ஆகிப் பின் விழி. பா. இதயவேந்தன் ஆகி... இப்படியாகத் தானே. இந்த நான்காவது சிறுகதை தொகுப்பு உங்கள் முன். அந்த ஒற்றைக் குடிசையில், சிம்னி வெளிச்சத்தில், தொரையோட சிநேகிதக்காரங்க வந்துருக்காங்க

    தன் பார்வைக் குறைவிலும், மரியாதைக்குரிய பாவாடை மருத்துவரும் காலையிலேயிருந்தே உழைத்த களைப்பில் ஓய்வெடுக்கும் பாக்கியம் அம்மையாரும், ஒடி ஒடி, தேநீர், பரோட்டா என எங்களை (நான் +ஆதவன்) பரிவோடும்,

    Enjoying the preview?
    Page 1 of 1