Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nandhanar Theru
Nandhanar Theru
Nandhanar Theru
Ebook129 pages51 minutes

Nandhanar Theru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எண்பதுகளில் நாங்கள் 'நெம்புகோல்' மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கம் தொடங்கி இன்றளவும் நடத்திக் கொண்டு வருகிறோம். எங்கள் அன்பிற்குரிய பேராசிரியர் பா. கல்யாணி எனக்கு மட்டுமல்ல, எங்களுக்கெல்லாம் தோழரானார். மார்க்சியத்தை அறிமுகப்படுத்தினார். எண்பத்தொன்றின் ஆரம்பத்திலிருந்து 'மனஓசை' பத்திரிகையோடு தொடர்பு. தோழர் சூரியதீபனின் எழுத்து வெகுவாய் கவர்ந்தது. ஆசிரியர் பொறுப்பிலிருந்து “மாணவர் சிறப்பிதழ்” என்று ஒரு மனஓசையைக் கொண்டு வந்தேன். அந்தக் கட்டத்தில் தான் வாசகனாய் இருந்த எனக்கு தைர்யமாய் பேனாப் பிடிக்க முடிந்தது.

கணேசலிங்கனின் "செவ்வானம்" புத்தகத்தை முதன் முதலில் சூரியதீபன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் கொழுந்து விட்டெறியும் என் நெஞ்சிற்கு முன், என் சனங்களின் கதை என்னில் நிழலாடியது. "சாது மிரண்டால் காடுகொள்ளாது” என்பார்கள். சூரியதீபனின் 'காடு' படித்தபிறகு எனக்கு இன்னும் வேகம் அதிகமானது. கதையைப் படித்து கலங்கியிருக்கிறேன். ஒரு சமயம் வாய்விட்டே அழுதிருக்கிறேன்.

இந்த நேரத்தில் என் உணர்வுகளுக்கு கொம்பு சீவிவிட்டு அவ்வப்போது எழுத்துப் பயிற்சி கொடுத்து இன்றளவும் சகதோழராய் இருந்துவரும் பேராசிரியர் பழமலயையும் ஊக்கம் கொடுத்து பாராட்டி வரும் பேராசிரியர் கா. ரா. உலோகியாவையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைக்கிறேன்.

உழைத்து உழைத்துச் சலித்துப்போன அம்மாவும் கண் பார்வையின்றி உழைக்க முடியாமல் இறந்துபோன அப்பாவும் என் தெருவிலுள்ள சனங்களைப் போலவே மிக மிக சாதாரண மனுசர்கள். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றும் மக்கி மண்ணாகிப் போனதே. எங்களை வயிற்றில் அடித்து எங்கள் உழைப்பைச் சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம், ஒரு தலைமை, ஒரு அதிகார வர்க்கம் உங்கள் ஊரைப்போல் இங்கும் உண்டு. இதுதான் என் எழுத்துக் களம். இங்கிருந்து என் எழுத்து ஆரம்பமாகி சமூகத்தில் நடக்கும் அத்துணை அக்கிரமங்களுக்கெதிராக என்னை எழுதவைக்கிறது.

என்னை நான் சமூக மரியாதைக்கேற்ப மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. நான் பழைய தடயங்களை நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் வாழ்வை திருடியவர் யார் யார் என்ற கேள்வி தினம் எழுகிறது. எனக்குத் தேவை சமூக விடுதலை. இந்த அடைபட்ட வாழ்வு விடுபடும் நாள் புதிய சமூக அமைப்பு என்பதை சமுகம் எனக்கு உணர்த்துகிறது. என் வாழ்வின் இலட்சியம் இதை நோக்கித் தொடர்கிறது.

இத்தருணத்தில் கலை, இலக்கிய, அரசியல் பயணத்தில் என்னுடன் உறுதியாய் இவர்களும் தொடர்கிறார்கள்: தோழர்கள் மு. ஞானசூரியன், த.பாலு, ம. சொக்கலிங்கம், ஆ. இரவி, கார்த்திகேயன், பனையபுரம் நடராசன், ஜ, ப. அன்புசிவம், அனந்தபுரம் கோ. கிருஷ்ணமூர்த்தி, ச. சந்திரசேகரன், கோ. செங்குட்டுவன்.

ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளுக்கிடையே கருத்துக்கள் எழுதித்தந்து உதவிய தோழர் சூரியதீபன். நண்பர் பாவண்ணன் ஆகியோருக்கும் புத்தகத் தயாரிப்பில் உதவும் தோழர் ப. தி. அரசுவுக்கும் அச்சகத்தார்க்கும் மற்றும் பெயர் விடுபட்டுப்போன தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

தோழமையுடன்,
விழி. பா. இதயவேந்தன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127404453
Nandhanar Theru

Read more from Vizhi Pa. Idhayaventhan

Related to Nandhanar Theru

Related ebooks

Reviews for Nandhanar Theru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nandhanar Theru - Vizhi Pa. Idhayaventhan

    http://www.pustaka.co.in

    நந்தனார் தெரு

    Nandhanar Theru

    Author:

    விழி. பா. இதயவேந்தன்

    Vizhi Pa. Idhayaventhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vizhi-pa-idhayaventhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சாதனைகளை நோக்கி...

    இதய வேந்தன் கதைகளும் சீர்கெட்ட வாழ்க்கையும் பாவண்ணன்

    உங்களோடு நான்...

    நிறங்கள்

    நந்தனார் தெரு

    இழிவு

    ஒரு விதவைப் பிரசவம்

    சங்கடம்

    நிகழ்காலம்

    அன்னக்கிளியின் செருப்பு

    கழுகு

    கஷ்ட ஜீவிகள்

    மனுசங்கடா

    சாதனைகளை நோக்கி...

    கதைகளுக்கு முன்னுரை என்பது தேவையில்லை என்று கருதுகிறேன். முன்னுரை என்பது, படைப்பை நுகர்பவர்கள் சொந்தமாக ஒரு கருத்தோட்டத்துக்கு வரவிடாமல் ஒரு முன் கருத்தை உருவாக்கிவிடுகிறது. என்ன சொல்லப்பட்டதோ அதன் வழியே படைப்புக்களை பார்க்கிற வாசகத்தடை முதலில் உருவாக்கப்படுகிறது. எதிர்பார்ப்புகள் பல நேரங்களில் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். தாஜ்மகால் பற்றியும், யமுனைக் கரை பற்றியும் தரப்பட்ட ஏகமான சித்திரங்கள், நேரில் தரிசிக்கையில் தகர்ந்து விடுகின்றன.

    சிறந்த படைப்புக்களை வாசகன் அளவில் சுயமாகத் தரிசிக்கையில், அப்போது அவர்கள் கிளர்ந்தெழுவார்கள். தானும் ஒரு கலைஞனாய்த் துள்ளிக் குதிப்பார்கள். ராப்பாடி போல், எந்தவித நலனும் இல்லாமல் பாடி முழுகிப் போவார்கள். அந்தப் படைப்புக்குக் கூடுதல் விளக்கம், கூடுதல் புரிதல், விமர்சனம் தேவைப்பட்டால், பின்னுரையில் வைப்பது சரியாக இருக்கும். இது படைப்பிலக்கியம் பற்றி மட்டுமல்ல, அதை விமர்சித்த முன்னுரையாளன் பற்றிய மதிப்பீட்டுக்கும் வாசகன் வரத்துணை செய்யும். முன்னுரையாளனே சரியாகத் தடம் பிரித்துப் போகிறானா என்று பார்ப்பதற்கும் வழி அமைத்து விடும், இது நுகர்வாளனின் புலன் அறிவை இன்னும் கூர்மைப்படுத்துகிறது. ஆனாலும் முன்னுரை என்ற சடங்கு இன்றளவிலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

    இப்போதும், இதற்கு முன்னும், நாம் பல முறையும் சொல்லி வருவது இதுதான்: கலையிலும், இலக்கியத்திலும், சமூக விஞ்ஞானத்தை உள்வாங்கிய கலைஞர்கள் சரியான கையளிப்புகளைச் செய்திருக்கிறோமா? நாக்குக்கு ருசியாகச் செய்துவிட்டால், இன்னும் இன்னும் என்று கேட்டுச் சாப்பிடுகிற கலைமாதிரிகளைச் சமூகப் பிரக்ஞை உள்ளவர்கள் தமிழில் வரவு செய்து, கொண்டோமா?

    இந்தத் தொகுப்புக் கதைகளைப் படிக்கும்போது, இந்தக் காலகட்டத்தில் நாம் எல்லோருக்கும் சேர்த்து, ஒரு ஆழமான பரிசீலனை தேவையாயிருக்கிறது. இதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. சமூக விஞ்ஞானச் சிந்தனையில் இயங்குபவர்களின் படைப்புக்கள் குறித்து, அந்தந்த நேரத்தில், தீர்க்கமான பார்வை வைக்கப்படுவதில்லை. நோய் நொம்பலம் இல்லாமல் அந்தப் படைப்புப்பயிர் மகசூல் தருகிறதற்கான விமர்சனங்கள் இல்லை.

    தன்னவன் என்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவது, இல்லையென்றால் கண் மண் தெரியாமல் தாக்குவது என்ற குழு மனப்பான்மை இன்றளவும் தமிழில் இயங்கிக் கொண்டு தானிருக்கிறது.

    இந்த வகையில் கலை இலக்கியவாதிகளில் முற்போக்குச் சிந்தனையாளரின் படைப்புகளுக்கும் பத்திரிகைகளுக்கும் கலாச்சாரத் தடை விதித்துள்ளார்கள். இத்தகைய போக்குகளைக் கலை இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கூட அங்கீகரிப்பதில்லை.

    போனால் போகட்டும் என்று பத்தோடு பதினொன்றாகச் சேர்த்துக் கொள்கிற 'மேதமை' நிலைதான் கார்க்கிக்குக் கிட்டியது.

    ஆனால் ஏதோ ஒரு எல்லையில், ஏதோ ஒரு புள்ளியில் தங்களோடு கருத்து ரீதியில் சமரசம் செய்து கொள்கிறவராகத் தெரிந்தால், உற்சாகப் பெருக்கில் தழுவிக் கொள்வார்கள்.

    ஒரு பக்கம் சொந்த அணியினரின் விமர்சனங்கள், வழிகாட்டல்கள் ஆழமற்று இருக்கிற பலவீனமான நிலை, மற்றொரு பக்கம் கலை, இலக்கியவாதிகள் என்போரின் திட்டமிட்ட கலாச்சாரத் தடை.

    இந்தச் சூழலில் புதிய கலை மரபு உருவம், உள்ளடக்கம், அழகியல் பற்றி ஆழமான புரிதல்கள், நாம் சார்ந்த மக்கள் இலக்கியத்துக்குத் தேவையாயுள்ளன. நம் தோள்களை அந்தப் பொறுப்புக்குத் தயார் செய்வதினூடே தான் நமது இலக்கியப் பணி முன்னேற வேண்டியுள்ளது.

    இந்த இளவயதில் இவரிடம் திரண்டிருக்கும் அனுபவங்கள் நமது தலைமுறைக்குப் போதுமானவை என்று பழமலய் அறிமுக உரையில் கூறுகிறார். வாழ்வின் அனுபவங்களே கலைப்பயிரின் மூலம் என்பது உண்மை. ஆனால் அனுபவங்கள் மட்டுமே கலைத் திரட்சியாகி விடுவதில்லை.

    மனிதன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் செல்வாக்கில் அனுபவித்துள்ள உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் தனக்குள் மீண்டும் எழச்செய்து, அவற்றைத் திட்டவட்டமான உருவங்களில் வெளியிடும்போது, கலையாகிறது என்று பிளக்கனேவ் கலையின் பிறப்பு பற்றிச் சொல்வதைக் கவனிக்க வேண்டும். அனுபவங்களைக் கலையாக்கும் ரசாயனம் நிகழ்த்தப்படுகிறபோதே, உள்ளடக்கம், பொருத்தமான வடிவம் கொள்கிறது. அப்போதே அவன் படைப்பாளி ஆகிறான்.

    விழுப்புரத்தில் அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வருபவர். அவர்களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலியாகிப் போகாமல், தங்கள் இருப்பை மனச்சாட்சிக்குத் துரோகம் செய்யாமல் எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில்தான் இவர் நாட்டுப்புற பாடல்களைத் தொகுக்கிறார். வீதி நாடகங்களில் நடிக்கிறார். செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார். கதை, கவிதை, நாவல் என்று வரைகிறார் என்று பழமலய் குறிப்பிடுவது அவர் வாழ்க்கையே. கலைக்குப் போதுமான மூலாதாரங்கள் அவரிடம் குவிந்து கிடக்கின்றன என்பதற்கு இந்தச் சான்று போதுமானது.

    ஆனால் அனுபவம் மட்டுமே சிறப்பான படைப்பிலக்கியத்தைத் தந்துவிட முடியாது. அதைக் கலைப்படைப்பாக மாற்றுகிற பெரிய காரியம் அதனுடன் இருக்கிறது. கலையைப் படைப்பது நமது உள்ளார்ந்த விருப்பம் சார்ந்தது மட்டுமல்ல. கலையின் உள்ளார்ந்த விதிகளை கண்டறிதலும், கையாளுதலும் என்ற மீதிக் காரியத்தைச் சார்ந்ததுமாகும்.

    இக்கலைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பழக்கத்தின் மேலும் பயிற்சியின் மேலும் ஏற்படக்கூடியது என்று பாரதி கண்டறிகிறான். இக் கலைகள் ஆழ்ந்த மனக்கிளர்ச்சியுடையோருக்கு இனிது சாத்தியம் என்கிறான்.

    எனவே ஒரு கலைப்படைப்புக்குத் தேவையாக, பல்வேறு அடிப்படை அம்சங்கள், துணை அம்சங்கள் உள்ளன. அனுபவங்கள் எல்லாமே கலையாகிவிடுவதில்லை. எந்த அனுபவங்களைக் கலைஞன் தேர்வு செய்கின்றான் என்பது முக்கிய இடம் பெறுகிறது. மனித வாழ்வின் அனுபவங்கள் எல்லாம் செழுமைப்பட்ட வடிவில் கிடைப்பதில்லை. அவை கந்தலும் கதுக்கலுமாய்க் கிடைக்கின்றன. அவைகளை உள்வாங்கி கிரகிக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1