Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - August 2019
Kanaiyazhi - August 2019
Kanaiyazhi - August 2019
Ebook197 pages1 hour

Kanaiyazhi - August 2019

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

August 2019 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580109504536
Kanaiyazhi - August 2019

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - August 2019

Related ebooks

Reviews for Kanaiyazhi - August 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - August 2019 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, ஆகஸ்ட் 2019

    மலர்: 54 இதழ்: 05 ஆகஸ்ட் 2019

    Kanaiyazhi August 2019

    Malar: 54 Idhazh: 05 August 2019

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி ஆகஸ்ட் 2019

    தலையங்கம் - ம.ரா.

    தடம் பதிக்கப் போவது சிவன் கற்ற தமிழும்தான்!

    இது

    தேசியக்கொடியை

    கோட்டையில் ஏற்ற

    எடப்பாடிகளுக்கும்

    உரிமை பெற்றுத் தந்த

    கலைஞரின் நினைவு மாதம்!

    காஞ்சிபுரத்தில்

    நீருக்குள் இருந்து

    மேலே வந்திருக்கிறார் அத்தி வரதர்!

    ஸ்ரீஹரிகோட்டாவில்

    நிலாவைப் பார்க்க

    மேலே போயிருக்கிறார் சிவன்!

    பேராசிரியர் நிர்மலா தேவியும்

    சமூகப் போராளி முகிலனும்

    மனநிலை பிறழ

    வெளிப்பட்டு நிற்கிறார்கள்!

    அஞ்சல்துறை இரயில்வே என்று

    தமிழுக்கு இடம் மறுத்த

    மத்திய அரசுக்குப் போட்டியாகப்

    பன்னிரண்டாம் வகுப்புப் பாட நூலில்

    தமிழின் தொன்மையை சமஸ்கிருதத்துக்குப்

    பணிய வைத்திருக்கிறது

    தமிழ்நாடு அரசு!

    ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பான

    சமஸ்கிருத உலகில்

    21ஆம் நூற்றாண்டு

    இந்தியாவைப் புனரமைக்க

    இதோ வந்து கொண்டிருக்கிறது

    கஸ்தூரிரங்கனின்

    புதிய தேசியக் கல்விக் கொள்கை!

    மூன்று வயதில்

    முன்பள்ளிக் கல்வித் தொடக்கமாம்!

    குழந்தைமையைப் பறிக்கிறது

    கஸ்தூரிரங்கன் குழு!

    இராமாயணத்தில் இராமன்

    வானத்து நிலாவைக் கேட்ட வயது அது!

    ஞானக்கூத்தன் சொல்லும்

    அம்மாவின் பொய்களுக்கு

    அடம்பிடிக்கும் வயது அது!

    பெற்றோரைப் பிரித்துப்

    பள்ளிக்கு வரச் சொல்கிறது

    கல்விக் கொள்கை!

    உலகெங்கும் தொடக்க நிலையில்

    தாய்மொழி போதும் என்றிருக்க

    இந்திய மூளை மட்டும்

    மூன்று வயதில் மும்மொழி கற்குமாம்!

    சந்திராயன் 1

    நிலவில் கால்படாமல்

    சுற்றிச் சுற்றி வந்தபோது

    கொண்டாடப்பட்டார்

    மயில்சாமி அண்ணாதுரை!

    இதோ

    நிலவில் இறங்கி ஊர்ந்துவரப்

    போயிருக்கிறது சந்திராயன் 2

    கொண்டாடப்படுகிறார்

    சிவன்!

    மயில்சாமி அண்ணாதுரையும்

    சிவனும்

    உலகம் வியக்கும் விஞ்ஞானிகள்!

    தமிழ்வழியில் பயின்றவர்கள்.

    சிவன்

    நாகர்கோயில் சரக்கம் விளையில்

    அரசுப் பள்ளியில் படித்தவர்!

    உலகப் பார்வையை

    இந்தியாவின் பக்கம்

    திருப்பி இருக்கிறார்!

    முன்பு சிவன் தலையில் நிலா

    இப்போது

    நிலா தலையில் சிவன் ராக்கெட்!

    அறிவு என்பது எல்லாவற்றையும் அறிந்திருத்தலில் இல்லை!

    அடுத்தவர்க்குத் தெரியாதவற்றை

    அறிந்திருப்பதிலும் இல்லை!

    அவசியமானதை அறிந்திருப்பதிலும் கூட இல்லை

    அறிவு தெளிவில் இருக்கிறது!

    குவியும் தகவல் குப்பைகளில் இருந்து

    தெளிவைக் கண்டடைவதில்

    வாழ்ந்து கொண்டிருக்கிறது அறிவு!

    ஆதனால்தான் வள்ளுவரும்

    கற்க கசடற என்றார் போலும்!

    முன்பு அறிவு ஆயுதம்

    இப்போது தெளிவே ஆற்றல்!

    குப்பைகளில் இருந்தும்

    மின்சாரம் எடுக்கும் தெளிவு!

    பாரதி சொல்வது போல

    சந்திர மண்டலத்து இயல் கண்டு

    தெளிவோம்!

    வானத்து நிலாவைக் கேட்ட

    இராமர் கையில்

    முகம் பார்க்கும் கண்ணாடியில்

    நிலாவைப் பிடித்துக் கொடுத்து

    ஏமாற்றாமல்

    நிலா நிலா வா வா என்று

    கூப்பிட்டுச் சோறு ஊட்டிய தமிழ் -

    பாட்டி வடை சுடும் இடமாக

    நிலாவை நிறுத்திய தமிழ் -

    அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்

    அப்பாவோடு மகிழ்ந்த தமிழ்

    விஞ்ஞானி சிவனோடு

    புறப்பட்டிருக்கிறது!

    தரையிறங்கும் இடமும்

    நிலாவின் தென் துருவமாம்!

    புதிய கல்விக் கொள்கை

    தமிழுக்குப்

    போதிய இடம்தர மறுத்தாலும்

    நிலாவில் இடம் பிடிக்கிறது தமிழ்!

    ஆம்!

    சந்திராயன் மட்டுமில்லை

    தடம் பதிக்கப் போவது

    சிவன் கற்ற தமிழும்தான்!

    அன்புடன் ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    எனது சுதந்திரம் - பாக்கியம் சங்கர்

    நூலுரையாடல் - பாரதிராஜா

    கவிதை - விவேக் கணநாதன்

    சிறுகதை - அ. நாகராசன்

    கட்டுரை - வெளி ரங்கராஜன்

    எனது சுதந்திரம் - சீனி. விஸ்வநாதன்

    கட்டுரை - ராஜ் கண்ணன்

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

    சிறுகதை - பிரசன்னக் கிருஷ்ணன்

    எனது சுதந்திரம் - முனைவர் எஸ். சாந்தினிபீ

    சிறுகதை - அண்டனூர் சுரா

    கவிதை - கவிஞர் இலக்கியா நடராஜன்

    எனது சுதந்திரம் - முபீன் சாதிகா

    கட்டுரை - நாஞ்சில் நாடன்

    கவிதை - சேயோன் யாழ்வேந்தன்

    கடைசிப்பக்கம் - இந்திராபார்த்தசாரதி

    ***

    பாக்கியம் சங்கர் - எனது சுதந்திரம்

    விட்டு விடுதலையாகிப் பறந்துவிடத் துடிக்கிறது இந்த மனம். கொத்து புரோட்டாவில் சால்னாக்களை ஊற்றிப் பிசைந்து அடித்துக் கொண்டிருக்கிற பாதையோரக் குடியானவனுக்கு வெளியெங்கும் காத்துக் கிடக்கிறதொரு ஆனந்தம். கருத்த நாயோடு விளையாடிக் களிக்கும் பிள்ளையின் கண்களில் அத்தனை மலர்ச்சிகளைக் காண்பதுண்டு. எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிற பாடலுக்குக் குவாட்டரின் புண்ணியத்தால் வாழ்வின் வலிகளைப் பரிகாசம் செய்கிற அவனது நடனத்தில் ஒளிந்து கொண்டிருக்கிற சுதந்திர வாசனையை இறுக்கப் பூட்டிய எனது அறைகளில் தேடிக் கொண்டிருக்கிறேன் எப்போதும்.

    சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டுக் கைகளில் விலங்குகளை நீங்கள் மாட்டுவீர்களானால் கொஞ்சம் தள்ளுங்கள் மேதகு மார்களே. நான் நரகத்தின் வாசலில் பிசாசுகளின் நடனத்தை ஆடிக்களித்து நர்த்தனம் புரிந்து கொண்டிருப்பேன். ஜன்னலைத் திறக்கிறேன். காற்று வருகிறது. அல்லது, கருத்த காகம் ஒன்று வேப்பம் பழத்தைக் கொத்தித் தின்று கொண்டிருக்கிறது. வெளியே வருகிறேன். காகம் வேறொரு இலைக்குத் தாவுகிறது. மனிதர்கள் தவிர மற்றெல்லாவற்றிற்கும் தெரிந்திருக்கிறது காகத்துக்கான சுதந்திரம் பறத்தலொன்று.

    சக மனிதர்களின் நாசூக்கான விலகுதலில் அது கிடைத்து என்ன. அது கிடைக்காமல் போனால்தான் என்ன. ஆடைதான் இம்மனித வாழ்வின் முதல் அரசியல் எனில் மேலாடையைக் கழட்டிய மகாத்மாவின் சுவாசத்தில் கமழ்ந்த சுதந்திரம், அண்ணலுக்கு மேலாடையைப் போட்டுக் கொண்டு சுதந்திரத்தின் வாசலை அடையப் போராடியது.

    மலக்குழியிலிருந்து வெளியேறுகிற மனிதனுக்கு ஒரு சொம்பு தண்ணீர் கூடத் தர முடியாதபடிக்கு ஏதோவொரு அசூயை என் வீட்டு முற்றத்தில் சுதந்திரம் எனும் பெயரில் நாறி கொண்டிருக்கிறது. நவீன சமூகம் என்ற தூய்மை இந்தியாவில் சாக்கடையில் நமது மலத்தோடு எழுந்திருக்கிற மனிதனைப் பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் நமக்கான சுதந்திர உரையை மேதகு பெரியவர் எவ்விதக் குற்ற உணர்வுமின்றி ஆற்றிக் கொண்டிருக்கிறார். பிணத்தை அறுத்துக் கூராய்வு செய்யும் திருப்பாளிடம் கேட்டதற்கு அவர் சொன்னார் மாசப்படி சோப்பு கூடச் சரியா வர்றதில்ல வாத்தியாரே... நாப்பது வயசுக்குள்ள இன்பெக்ஷன் எடுத்தே நம்மாளுங்க செத்துபூடுவானுங்கோ... ஒரு கணம் நின்று விட முடியாத ஒரு இடத்தில் பிணத்தின் நிணவாடையை தனது நிழலாகச் சுமந்து கொண்டிருக்கிற ஒருவனுக்கு உங்கள் சுதந்திரம் ஒரு சோப்பு கூட வாங்கித்தரவில்லை என்பதைப் பொதுவில் வைத்து விடுகிறேன்.

    தனிமனிதச் சுதந்திரம் என்ற ஒரு வார்த்தையை நெடுங்காலம் எனது செவிகள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. மனிதன் என்பவன் யார்...? தனி மனிதன் என்பவன் யார் என்பதிலிருந்தே எனது கேள்விகள் தொடர்கிறது. தகுதிகளைப் பொறுத்தே சுதந்திரங்களின் அனுகூலங்களைப் பெற முடிகிற சமூகத்தில் வாழப் பணிக்கப்பட்டிருக்கிறோம். எளிய மனிதர்களின் சுதந்திரத்தை யார் வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் கற்பழித்துக் கொன்று விடலாம். வலுத்த குரல்களுக்கே இங்கே சுதந்திரம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. பூனை கொட்டாவி விடுகிறது போல அதிகாரத்தின் முன் நமது தனிமனிதச் சுதந்திரம் பம்மிக் கிடந்தது சுருண்டு கொள்கிறது. எல்லாத் தலைகளுக்கு மேலேயும் ஒரு துப்பாக்கி அரூபமாகத் தொங்கியிருக்கிறது. சுதந்திரம் என்ற பெயரில் எதையாவது சமூக நலன் எனும் பெயரில் பேசித் தொலைத்தால் அரூபமான துப்பாக்கி நிஜமாகி உருப்பெற்று உங்கள் மண்டையை வெடித்துச் சிதற அடித்துவிடும். தெறித்து விழுகிற உங்கள் கண்கள் சுதந்திரத்தைத் தேடி அலுத்துப் போகும்.

    இதுவும் கடந்து போகும் என நடக்கிறேன். பூட்டிய கதவின் வெளியே அழுக்கு மூட்டையைத் தலைக்கு அண்டக்கொடுத்து ரத்தினக்கால் தோரணையில் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். ஆழ்ந்த உறக்கத்திலும் அவனது காலை ஆட்டிக் கொண்டான். எனக்கான சுதந்திரம் அனிச்சையாய் ஆட்டிக் கொண்டிருக்கிற அவனது காலுக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

    bakkiyam.films@gmail.com

    ***

    நூலுரையாடல் – பாரதிராஜா

    அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்

    Fear: Trump in the White House’ என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதில் முதல் ஒரு மில்லியன் முதல் வாரமே விற்றது. இப்போது அடுத்த தேர்தலுக்குச் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்த நூலைப் பற்றிய பேச்சு மீண்டும் கூடும். டிரம்ப் அரசு எப்படிப் பட்டது, டிரம்பும் டிரம்பின் ஆட்களும் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களுடனேயே பேசி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பா வூட்வர்ட் (Bob Woodward).

    பா வூட்வர்ட் யார்?

    இவர் ஓர் எழுபது வயதுக்கும் மேலான, அமெரிக்க அரசியலைப் பழம் தின்று கொட்டை போட்ட, இதுவரை ஒன்பது அதிபர்களின் தூக்கத்தைக் கெடுத்த, முதிய-முதிர்ந்த பத்திரிகையாளர். ஏற்கனவே அமெரிக்காவின் பல பெரும் பெரும்

    Enjoying the preview?
    Page 1 of 1