Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - October 2019
Kanaiyazhi - October 2019
Kanaiyazhi - October 2019
Ebook206 pages1 hour

Kanaiyazhi - October 2019

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

October 2019 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580109504668
Kanaiyazhi - October 2019

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - October 2019

Related ebooks

Reviews for Kanaiyazhi - October 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - October 2019 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, அக்டோபர் 2019

    மலர்: 54 இதழ்: 05 அக்டோபர் 2019

    Kanaiyazhi October 2019

    Malar: 54 Idhazh: 05 October 2019

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி அக்டோபர் 2019

    தலையங்கம் - ம.ரா.

    தொடர்புகளைத் துண்டிக்க வேண்டாமே!

    சந்திரனில்

    தரைபடு விண்கலன் தொடர்பைத்

    தவற விட்டிருக்கிறோம்.

    காஷ்மீர் மக்களைப் போல

    தொலைபேசியில் அடிக்கடி

    தொடர்பு எல்லைகளுக்கு அப்பால்

    தொலைந்து கொண்டிருக்கிறோம்.

    தொடர்புகளைத் துண்டிக்காதீர்கள்!

    தொடர்புதான் கற்றுத் தருகிறது

    வாழ்வதற்குத் தேவையான

    அறிவு அனைத்தையும்

    வரலாற்றுக்கு முன்பிருந்தே

    இயற்கையின் தொடர்புதான்

    கற்றுத் தந்து வருகிறது.

    பிரபஞ்ச வெளியில்

    சூரியனின் தொடர்பில்தான்

    பூமியின் சுழற்சி.

    பூமியின் தொடர்பில்தான்

    உயிரின வளர்ச்சி.

    உயிரினத் தொடர்பில்தான்

    பரிணாம வளர்ச்சி

    மக்களின் தொடர்பில்தான்

    சமுதாய வளர்ச்சி.

    இப்படித் தொடர்புதான்

    தொடர்ந்து வளர்க்கிறது

    எனவே

    தொடர்புகளைத் துண்டிக்காதீர்கள்!

    சுற்றுச் சூழலை மாசுபடுத்தி

    இயற்கையைத்

    தொடர்பு எல்லைகளுக்கு அப்பால்

    துரத்திக் கொண்டிருக்கிறோம்.

    பாலைவனத்தில் கூட

    குளிர் வசதி!

    இமய மலையில் கூட

    வெதவெதப்பு அறைகள் என்று

    வசதிக்கும் விருப்பத்திற்குமாக

    வாழிடத்தின் பருவச் சூழலைத்

    தேவைக்காக

    மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

    வளர்ச்சி எனும் பெயரில்

    குறிஞ்சி மலையில்

    காபி தேயிலை வளர்ப்பு;

    காட்டில் மாளிகை கட்டி

    விலங்குகளை வழி மறித்தல்

    விவசாய மருத நிலத்தில்

    மீத்தேன் விளைச்சல்

    நெய்தல் கடலில்

    அணுமின் உயிர் பிடித்தல்

    இப்படி

    நிலமும் பொழுதும் தொழிலும்

    மாறுகிற போது

    வாழும் மக்களின் வாழ்க்கை முறையும்

    தொடர்பு கொள்ள முடியாத

    எல்லைகளுக்கு அப்பால்

    புலம் பெயர்கிறது.

    இருக்கிற அமைப்பை அப்படியே

    ஏற்பதும் மறுப்பதும்

    போற்றுவதும் தூற்றுவதும்

    மாற்றுவதும் கூட

    சமூகத் தொடர்பால்தான்

    சாத்தியம் ஆகிறது.

    விதைப்பது நாமாக இருந்தாலும்

    தொடர்பு கிடைக்கிறவரை

    விதைகளும் உறங்குகின்றன.

    இருக்கிற விதிகளோடு

    முரண்படுவோர்

    எதிர்கால விதிகளோடு

    கைகுலுக்குவார்கள்!

    வாழ்கிற நிலையில்

    அமைதி இழப்பவர்கள்

    வரப்போகும் நிலைக்கு

    வழி அமைப்பார்கள்!

    வாழும் காலம்

    அவர்களைத் தண்டிக்கலாம்

    ஆனாலும்

    வரலாறு அவர்களைப்

    புறக்கணிக்க முடியாது.

    காந்தி அடிகள்

    காலத்தைக் கடந்த

    சமூகத் தொடர்பு!

    யாரும் அவரைத்

    தொடர்பு எல்லைகளுக்கு அப்பால்–

    தூரத்தில் வைக்க முடியாது!

    தொடர்புகளைத் துண்டிக்காதீர்கள்!

    அண்ணா பல்கலைப்

    பொறியியல் பாடத் திட்டத்தில்

    பகவத் கீதையை வைத்தாயிற்று

    கீழடியில் இந்திய நாகரிகம்

    தொல்லியல் அமைச்சர் சொல்லிவிட்டார்

    இந்திய மக்கள் தொடர்பு கொள்ள

    இந்தி பொதுமொழி

    உள்துறை அமைச்சர் சொல்லிவிட்டார்

    மூன்றாவது மொழியாக

    இந்தியா? என்று

    தமிழகம் நிமிர்ந்த போது

    மூன்றாவது மொழி இல்லை

    இரண்டாவது மொழி என்று

    உள்துறை அமைச்சர் அமித்ஷா

    இந்திக்குப்

    பதவி உயர்வு தந்திருக்கிறார்.

    இந்தி இரண்டாம் மொழியாம்.

    அப்படியென்றால்

    ஆங்கிலம் இருக்கும் இடத்தில்

    இந்தியாம்.

    எனவே எப்படியும் இந்தி உண்டு.

    இருக்கிற நிலைமை இதுதான்.

    தொடர்புகொள்ள

    பல மொழி வேண்டும் என்பது

    கடந்த காலம்.

    இப்போதெல்லாம் தொடர்புகொள்ள

    கருவிகள் போதும்.

    தொழில் நுட்பம் என்பதே

    தொடர்பு நுட்பம்தான்.

    இனி, தொடர்புக்கு எல்லை இல்லை:

    மொழிகளும் கூட தடைகள் இல்லை.

    எனவே

    தொடர்புகொள்ளப் பொதுமொழி என்று

    தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் நின்று

    மக்கள் மனதில்

    தொடர்புகளைத் துண்டிக்க வேண்டாமே!

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - விவேக் கனநாதன்

    கவிதை - அய்யாவு பிரமநாதன்

    சிறுகதை - மணி எம்.கே. மணி

    குறுநாவல் - சிவகுமார் முத்தய்யா

    கட்டுரை - பாரதிராஜா

    சிறுகதை - நவநீதன் சுந்தர்ராஜன்

    கவிதை - அனாமிகா

    கட்டுரை - கிருஷ்ணமூர்த்தி

    கவிதை - இரா.கவியரசு

    சிறுகதை - ஆட்டனத்தி

    கவிதை - காரைக்குடி சாதிக்

    கட்டுரை - சீராளன் ஜெயந்தன்

    கவிதை - மாராணி

    சிறுகதை - பொ. பிரசன்னா தேவி

    கவிதை - தே. தமிழரசி

    கட்டுரை - வ.ந. கிரிதரன்

    கட்டுரை - மறைமலையடிகள்

    ***

    கட்டுரை – விவேக் கனநாதன்

    காந்தி வை-பையும், 5ஜி தலைமுறையும்!

    காந்தியைக் கைவிடல் என்பது, அவரைத் தன்னுடைமை செய்துகொள்ள முடியாமையின் தோல்வியிலிருந்து பிறக்கிறது. காந்தியைத் தன்னுடைமை செய்துகொள்ள இந்தியாவின் அனைத்து தரப்புகளுமே முயன்றிருக்கின்றன. ஆனால், அவர் எந்தவொரு தரப்பின் ஆளாகவும் தன் அரசியலை நடத்தவில்லை. மாறாக தன் அரசியலின் பொருட்டு, எல்லா தரப்புகளையும் ஈடுசெய்பவராக அவர் இருந்தார். காந்தியின் தந்தைமையே அதில்தான் இருக்கிறது.

    காந்தியைத் தன்னுடைமை செய்யும் தோல்வியே காந்தி நிராகரிப்பு மற்றும் வெறுப்பாக மாறுகிறது. இதனால், இன்றைக்கு காந்தியைக் குறித்த விவாதத்தின் தொடக்கம் என்பது காந்தி வெறுப்பிலிருந்தே தொடங்குகிறது. காந்தி இன்று நடைமுறைப் பயனற்ற புராணப் பண்டத்தைப் போல பார்க்கப்படுகிறார். காரைக்குடியில் இருக்கும் பிரம்மாண்டமான, வியக்கத்தக்க, பேரழகான வளமனைகள் இன்றைக்கு நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படாத பழங்காலத்தின் செல்வ எச்சமாக நிற்கின்றன. காந்தியின் புனித உருவம் இந்திய மனதில் இன்றைக்கு அப்படித்தான் இருக்கிறது.

    மீப்படுத்தலால் நடைமுறையிலிருந்து அந்நியமாக்கப்பட்டவர் காந்தி. புனிதர், மகாத்மா, தேசப்பிதா, அற்புதமானவர், அகிம்சா மூர்த்தி, சத்திய சீலர், உத்தமர் என்பதாக காந்தியை இந்திய பாடப்புத்தகங்கள் பள்ளிகளில் கொண்டு சேர்க்கின்றன. முற்போக்கு கருத்தியல் வாழ்க்கைக்குள் நுழையும் போதும், நடைமுறை வாழ்க்கையின் சிக்கலுக்குள் நுழையும்போதும் இந்த ஆலாபணைகள் எரிச்சலூட்டுபவையாகவும், வெற்று அலங்காகரங்களாகவும் தெரிகின்றன. அறிவுத்தரப்பின் ஒருபக்கம் புனிதராக்கப்படும் காந்தி இன்னொருபுறத்தில் அந்நிய கைகூலியாக, முதலாளித்துவத்தின் தூதுவராக, தொழிலாளர் வர்க்கத்தின் எதிரியாக, சாதியின் ஆதரவாளராக, பிற்போக்குவாதியாக, வெற்றுவீம்பாலும் தன்னுடைய சுயநலத்தாலும் இந்தியா அடைந்திருக்க வேண்டிய நன்மைகளைக் கெடுத்தவர் என்று தூற்றவும், விமர்சிக்கவும்படுகிறார்.

    இந்தியாவின் மூன்று முக்கியமான முற்போக்கு சக்திகள் கம்யூனிஸ்ட்கள், சீர்திருத்த அரசியலை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள், தலித்திய அமைப்புகள். இவை மூன்றுமே காந்தியை மிகப்பெரும்பாலும் நிராகரிக்கின்றன. இதனால், முற்போக்கு சிந்தனை மரபுக்குள் இயங்கத் துவங்கும்பொழுது எந்தவொரு இயக்கவாதியும் தன் தரப்பின்பொருட்டு காந்தியைக் கைவிட்டுவிடும் வழக்கம் இயல்பானதாக இன்று மாறியிருக்கிறது. இவ்வமைப்புகள் பெரும்மக்கள் சக்திகளாகவும் இருப்பதால் காந்தி வெறுப்பு களத்திலும் எதிரொலிக்கிறது.

    தமிழ்நாட்டில் காந்தி வெறுப்பு:

    தமிழ்நாட்டில் காந்தி நிராகரிப்பு மற்றும் வெறுப்பின் இரண்டு முக்கியமான தரப்புகள் இரட்டை வாக்குரிமையை ஆதரிக்கும் அம்பேத்கரியவாதிகளும், நேதாஜி ஆதரவாளர்களும். இதில் அம்பேத்கரியவாதிகள் காந்தியை நிராகரிக்கும் இடம் புரிந்துகொள்ளத்தக்கது. கோட்பாட்டு ரீதியிலான முரணிலிருந்து எழும் நிராகரிப்பு அது. இரட்டை வாக்குரிமையும், தனி வாக்காளர் தொகுதியும் தலித்துகள் அதிகாரம் பெற உதவியிருக்கும் என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடே அந்நிராகரிப்பு.

    1932 செப்டம்பர் பூனா ஒப்பந்தத்தின் மூலம் தலித்களுக்கு இரட்டை வாக்குரிமைக்குப் பதிலாக, தனித்தொகுதிகள் என்கிற முடிவு எட்டப்பட்டது. தலித்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் மாகாணங்களில் 148 தனிவாக்காளர் தொகுதிகள் என முடிவுசெய்யப்பட்டது. ஒப்பந்தம் நிறைவேற்றபட்ட பிறகு உரையாற்றிய அம்பேத்கர், மிகவும் இக்கட்டான கட்டத்திலிருந்து என்னைவிடுவித்த மகாத்மாவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றும், காந்தியுடன் ஒரு தீர்மானத்திற்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். மேலும், இரட்டை வாக்குரிமையோடு 78 தொகுதிகள் என்பதற்கு பதில், ஒற்றை வாக்குரிமையோடு 148 தனித்தொகுதிகள் என்பது இந்து சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரை ஈர்த்துக் கொள்ளும் பிரச்னைக்கு இறுதியான தீர்வாக இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. பரந்த சமுதாயப் பிரச்னைக்கு எந்தத் தேர்தல் ஏற்பாடும் ஒரு தீர்வாக இருக்க முடியாது என நான் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

    1935 இல் இந்திய அரசுச்சட்டத்தின்படி தேர்தல் நடக்கும்போது இரட்டை வாக்குரிமையால் கிடைக்கும் அதிகாரம், ஒடுக்கப்பட்ட மக்கள் கல்விபெறவும், விழிப்புணர்வு பெறவும் உதவும் என்று அம்பேத்கர் கருதினார். அதனால்தான், பூனா ஒப்பந்த நிறைவுரையில் ஒடுக்கப்பட்டவர்கள் அறியாமையைவிட்டு, கல்வி அறிவும், சுயமரியாதையும் பெறவேண்டும். அதுவரையில் இச்சட்டம் அவர்களுக்கு சாத்தியமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரம் தனிவாக்காளர் தொகுதி முறையில் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டதால், இம்முறை இரட்டை வாக்குரிமையின் சிறப்புத்தன்மையைப் பெற்றுவிட்டதாக தான் கருவதவில்லை என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

    ஆனால் 1935-சட்டத்தின்படி அமைக்கப்பட்ட மாகாண ஆட்சிகள், 1937 ஏப்ரலில் நடைமுறைக்கு வந்து, இரண்டாம் உலகப்போர் காரணமாக 1939 அக்டோபரிலேயே காங்கிரஸால் கலைக்கப்பட்டுவிட்டன. இரண்டாம் உலகப்போர் காலத்தில் 1919 மாண்டேகு செம்ஸ் சட்டத்தின்படி, இந்திய மாகாணங்களில் கவர்னர் ஆட்சியே நடந்தது. மேலும், பாகிஸ்தான் கோரிக்கையின் பொருட்டு எழுந்த புதிய சூழல் முஸ்லீம்களுக்கான தனிவாக்காளர் தொகுதிகளின் மீதே கடும் வெறுப்பை சாதி இந்துக்களுக்கு வளர்த்துவிட்டிருந்தது. அவ்வெறுப்போடு சேர்த்து பிரிவினையால் ஊட்டப்பட்ட விஷம், வன்முறையாக வெடித்தது.

    இரண்டாம் உலகப்போர், இந்து-முஸ்லீம் கலவரம் என எதிர்பாராத நிலைமைகளால் உருவான இந்தப்பின்னணியிலிருந்து பார்க்கும்போது இரட்டை வாக்குரிமை அம்பேத்கர் எதிர்பார்த்த நலன்களைவிட, மோசமான உடனடி விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கும் என எளிதாக யூகிக்கலாம். காந்தி எச்சரித்தபடி தலித்துக்களை சாதி இந்துக்களின் நிரந்தர எதிரியாக மாற்றியிருக்கும். தலித்களுக்கு இன்றுவரை நீடிக்கும் பொது நீரோட்டத்தில் கலப்பதற்கான கூடுதல்தடையாக, விஷமப்பிரச்சாரத்திற்கான மற்றொமொரு வாகனமாக மாறியிருக்கும்.

    இன்னொருவகையில், சுதந்திரத்தை ஒட்டிய கலவரங்களின் போக்கு மற்றும் பின்னணியைப் பார்க்கும்போது, இந்து - முஸ்லீம் கலவரத்தைப் போலவே, தலித்துகள் மீதும் கொடூரமான தாக்குதல்களுக்கும் துண்டாடல்களுக்குமே இட்டுச் சென்றிருக்கும் என்றே மதிப்பிட வேண்டியிருக்கிறது. அம்பேத்கர் கணித்தபடி தனிவாக்காளர் தொகுதி இந்துக்களுடன் கலப்பதை அதிகரிக்கவில்லை என்றாலும், அது சாதி இந்துக்களை தலித்களிடமிருந்து அந்நியப்படுத்துவதைக் குறைத்தது. மாறாக, இரட்டைவாக்குரிமை தலித் மக்களை அந்நியப்படுத்துவதற்கான கூடுதல் காரணியாகவே இருந்திருக்கும். இவற்றில், தலித் செயற்பாட்டாளர்களுக்கும், சமூக சிந்தனையாளர்களுக்கும் மாறுபட்ட கருத்திருக்கலாம். என்றாலும், காந்தி-அம்பேத்கர் முரணை மையமாக வைத்து எழும் வெறுப்பு என்பதுகூட உரையாடலுக்கு வழியுள்ள விஷயமாகவே இருக்கிறது.

    ஆனால், காந்திக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1