Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - December 2021
Kanaiyazhi - December 2021
Kanaiyazhi - December 2021
Ebook180 pages55 minutes

Kanaiyazhi - December 2021

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109507911
Kanaiyazhi - December 2021

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - December 2021

Related ebooks

Reviews for Kanaiyazhi - December 2021

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - December 2021 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி டிசம்பர் 2021

    மலர்: 56 இதழ்: 09 டிசம்பர் 2021

    Kanaiyazhi December 2021

    Malar: 56 Idhazh: 09 December 2021

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வாழும் காலத்தையும் வாழ வைக்கிறார்!

    உரு மாறி வருகிறது

    கொரோனா என்று

    உலகம் மீண்டும்

    கடந்த காலக் கசப்புகளைக்

    கவலையோடு நினைக்கிறது!

    எதிர்ப்புச் சக்தியை இழக்க வைத்து

    உறுதியைக் குலைக்க

    உருமாறி வருகிறது ஓமைக்ரான்!

    எச்சரிக்கையாக இருக்க

    ஒன்றிய மாநில அரசுகள் வற்புறுத்துகின்றன.

    எதிர்ப்புச் சக்தி குறையாமல்

    உறுதி குலையாமல்

    வேளாண் சட்டங்களைத்

    திரும்பப் பெற வைத்திருக்கிறது

    மக்கள் உறுதி.

    காலத்தில் நடந்திருந்தால்

    இறந்து போன

    700-க்கும் மேற்பட்டவர்கள்

    இப்போது வரும் ஓமைக்ரானுக்கும்

    எதிர்ப்புச் சக்தியைக் காட்டி இருப்பார்கள்!

    ஆனால்

    காலம் அவர்களைக் கடத்திப் போய்விட்டது!

    வாழ்ந்த காலத்தை அவர்கள்

    வரலாறாக மாற்றி இருக்கிறார்கள்!

    நடந்து முடிந்த தேர்தல்களும்

    நடக்க இருக்கிற தேர்தல்களும்

    வானளாவிய அதிகாரம் கொண்ட

    ஒன்றிய அரசையே உருமாறச் செய்திருக்கிறது!

    அதிகாரத்தில் இருப்பவர்கள்

    பணத்தை மதிப்பிழக்கச் செய்யலாம்

    ஆனால் போராட்டத்தால்

    மக்கள்

    காலத்தின் மதிப்பைக் கூட்டி இருக்கிறார்கள்!

    காலத்தைப் பொன் ஆக்கலாம்

    ஆனால் பொன்னால்

    காலத்தை ஆக்க முடியாது!

    காலத்தை ஒருவருக்கு

    நல்ல காலம் ஆக்கவும்

    கெட்ட காலம் ஆக்கவும்

    ஒரு சிலரால் முடியலாம்!

    ஆனால்

    ஒருவருக்குக் காலத்தையே உருவாக்க

    ஒருவராலும் முடிவதில்லை!

    காலத்தைச் செலவு செய்யலாம்!

    வீணாக்கலாம்!

    ஆனால் யாராலும் காலத்தைச்

    சம்பாதிக்க முடிவதில்லை!

    காலத்தைக் கொல்ல முடியும்

    இன்று வாழ்வதன் மூலம்

    நேற்று கொல்லப்பட்டிருக்கிறது

    இறந்த காலம் ஆகி இருக்கிறது!

    எனவே

    வாழ்கிற எல்லோராலும்

    காலத்தைக் கொல்ல முடியும்

    ஆனால் சிலர் மட்டுமே

    காலத்தை வாழவைக்கிறார்கள்.

    காலம் நிகழ்வுகளில் கடக்கிறது!

    அதுவே

    நினைவாகிற போது கட்டுண்டு கிடக்கிறது.

    தஞ்சை பெரிய கோயிலில்

    தாஜ்மகாலில்

    கட்டி எழுப்பியவர்களின் காலங்களும்

    திருக்குறளில்

    திருவள்ளுவரின் காலமும்

    கட்டப்பட்டுக் கிடக்கின்றன.

    அவர்கள்

    வாழ்ந்த காலத்தை அவை

    வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.

    அந்தக் காலத்தின் ஆயுட் காலம்

    அவர்களால்

    நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

    அவர்கள் இல்லாத காலத்திலும்

    அவர்களின் காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது

    அதனால்

    அவர்களும் அவற்றில்

    வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

    தன்னை வாழ வைப்பவர்களைக்

    காலமும் வாழவைக்கும்!

    அடுத்தவர் வாழ்க்கைக்குத்

    தமது காலத்தைச்

    செலவு செய்கிறவர்களின்

    ஆயுட் காலம்

    மற்றவர் நினைவுகளிலும் சேமிக்கப்படுகிறது.

    தலைநகர் சென்னை மட்டுமின்றித்

    தமிழகமே வெள்ளக்காடாக

    உருமாறி இருக்கிறது.

    புயல் மழை வெள்ளம்

    புதிதில்லை நமக்கு

    ஆனால்

    வழக்கத்திற்கு மாறாக

    மிக அதிகம்

    ஆனால்

    வழக்கம் போல்

    கோட்டைக்குள்ளும்

    கோட்டை போன்ற வீட்டுக்குள்ளும்

    தொலைக்காட்சியில் மட்டும்

    வெள்ளத்தைப் பாக்கும்

    கடந்த கால

    முதலமைச்சராக இல்லாமல்

    முன்களப் பணியாளராக

    ஒரு முதலமைச்சர் மழை வெள்ளத்தில்

    முழங்கால் நனையத் தண்ணீரில் நடக்கிறார்.

    துயர வெள்ளத்திலிருந்து

    மக்களை மீட்பதோடு

    அரசு இருக்கிறது கவலை வேண்டாம் என்று

    தெருவோரக் கடையில் உட்கார்ந்து

    தேநீர் அருந்தி மக்களிடம்

    நம்பிக்கை விதைக்கிறார்.

    இப்படித்தான் முதலமைச்சர்

    இருக்க வேண்டும் என்று

    இந்தியாவுக்கே அடைமழை அடையாளம்

    காட்டியிருக்கிறது!

    சுனாமி வந்தபோது கூடத்

    தூக்கம் கலைக்காத

    முதலமைச்சரை -

    தொலைக்காட்சியில் மட்டுமே

    காட்சிக்கு எளியராய்

    மக்களுக்குக்

    காட்சி தந்த முதலமைச்சரைக்

    காலம் கடந்து வந்திருக்கிறது.

    சிலர்

    வாழ்ந்த காலத்தை

    வரலாறு பதிவு செய்யும்!

    சிலர் வாழ்ந்த காலம்

    அவர்களுக்குப் பின்

    வரலாறு ஆகலாம்.

    ஆனால்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்

    மக்கள் தொண்டில்

    வாழும் காலத்தையும் வாழ வைக்கிறார்.

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கவிதை - வலங்கைமான் நூர்தீன்

    சிறுகதை - லட்சுமிஹர்

    கவிதை - எஃபே பால் அஸினோ,

    தமிழில்: வ. ஜெயதேவன்

    கட்டுரை - தமிழில் எச்.முஜீப் ரஹ்மான்

    கவிதை - தங்கேஸ்

    சிறுகதை - சத்ய ஜித்ரே,

    தமிழில் : எஸ். அற்புதராஜ்

    கவிதை - நட்சத்திரா

    கவிதை - இனியவன் காளிதாஸ்

    கட்டுரை - எஸ். சண்முகம்

    சிறுகதை - பலராம் செந்தில்நாதன்

    கவிதை - தசாமி

    கட்டுரை - ப.சகதேவன்

    சிறுகதை - வாசுதேவன் அருணாசலம்

    கவிதை - கனகா பாலன்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை - மு. இராமசுவாமி

    மு ராமசாமி.jpg

    ‘ஜெய்பீம்’- திரைப்படம்

    சமூக நீதி பேசுகிற- சமூகக் கட்டுமான மாற்றத்திற்கு உதவுகிற-

    இன்னொரு ஆரோக்கியச் செங்கல்!

    சூர்யா-ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அமேசான் பிரைமில், 02-11-2021 இல் வெளிவந்திருக்கிற ‘ஜெய் பீம்’ திரைப்படம் வழக்கமாக வரிசைகட்டி வந்துபோகிற, வழக்கொழிந்த ஒரு படம் அல்ல; மண்டைக்குள் குடைச்சலை ஏற்படுத்துகிற, சமூக நீதிக்கான கரிசனத் திரை வரிசையில், கம்பீரமாக நிற்கப் போகிற ஒரு படம் என்பதைப் பெரும்பான்மைத் திரை விமர்சகர்கள், சமூகநீதியின் பக்கம் நிற்கும் சமூக, அரசியல் அமைப்புகள், மாந்த நேயமிக்கத் திரையுறவுகள், தமிழ் உணர் வாளர்கள் என்று பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துவிட்ட நிலையில், படத்தைப் பற்றிக் கூடுதலாய் இங்குப் புதிதாய் முழம்போட்டு, எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். மனுநீதியால் சமநீதி மறுக்கப்பட்டிருக்கிற-ஆதிக்கச் சாதிகளால் ஒடுக்கப்பட்டிருக்கிற-பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுமேல் ஆதிக்கச் சாதியின் காவல்துறை, பொய் வழக்குப் போட்டு சித்திரவதை செய்து உயிர் பறித்த கொடூரத்திற்கு, புதிய கண்ணகியாய், அவரின் மனைவி ‘செங்’கேணி, மனுநீதியைத் தலைமுழுகிய வழக்கறிஞர் சந்துருவுடன் இணைந்து நிகழ்த்திய, நெடிய சட்டப் போராட்டத்தில், தீத்திறத்தாருக்குத் தாமதப்பட்டாகியும் தண்டனை வாங்கிக் கொடுத்து மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் சந்துருவின்(சட்டத்தின்)மீதான நம்பிக்கையுடன், கொட்டுகிற மழையில் நனைகிற / அந்தச் சமூகத்தின் இளைய தளிர் ஒன்று, நாளிதழை வாசிக்கிற தோரணையில் கால்மீது கால் போட்டு, மேட்டிமைக்குச் சமமாக அதை அமர வைத்து, அதன்வழி, பார்ப்பவரைப் புளகிப்புக் கொள்ளத் தூண்டுகிற-சமூகநீதியை, அழகு ததும்பப் பேசும்-படமாயிருக்கிறது இது! மனுதருமச் சிந்தனைகள், வாய்ப்பிருக்கும் இடங்களிலெல்லாம் தலைதூக்கி அரசியல் செய்யப் பார்க்கிற, இற்றை அதிகாரச் சூழலில், எதற்கும் அஞ்சாமல், நியாயவாதிகளான மக்களை மட்டுமே நம்பி, சமூகநீதியைப் பேசும் இதைத் தயாரித்திருக்கிற 2D எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தார், நடிகர்கள், தொழில் நுணுக்கர்கள், பாடல் வரிகளைப் பிரசவித்தவர்கள், அதற்கு உயிர் கொடுத்த இசைஞர்கள், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், நெறியாளுநர், படத்தைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற உலகத் திரை இரசிகர்கள் என்று அத்தனைப்பேருமே நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள்!

    வாழ்க சனநாயகம்! வாழ்க சமூகநீதி!!-என்பதன் வாழும் சான்றாக இருந்து கொண்டிருக்கக்கூடிய, குரலற்றவர்களின் குரலாக, நீதிமன்றப் படிக்கட்டுகளே பாடம் நடத்திக் கொண்டிருக்கும், நீதி நாயகம் திரு சந்துரு அவர்களின் வழக்கறிஞர் தொழிலின் அறத்தை-அதிகாரத்தாலுறிஞ்சி எறியப்பட்ட இருளர் பழங்குடி மக்களின் வலிநிறைந்த ஒரு சம்பவத்தின்வழி-எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறது ‘ஜெய்பீம்’! அதற்குள்ளே, இங்கு நிலவிவரும் சாதியப் படிநிலைகளின் இறுக்கங்கள், அவை உருவாக்குகிற சமூக அவலங்கள், அவற்றிற்கான சமூக இயக்கங்களின் போராட்டங்கள், விசாரணை என்ற பெயரிலான அதிகார அத்துமீறல்கள் என்று அத்தனையையும், மனித உரிமைகளை- சமூக நீதியை-நேசிக்கிறவர்களின் நாடி நரம்புகள் சூடேற, இப்படியுமா நடக்கும் என்கிற ஐயத்தை நமக் குள்ளே விதைத்தபடி, இப்படித்தான், இதனினும் கொடுமையாகத்தான் நடந்திருக்கிறது என்பதாகச் சமூக விமரிசனங்களின் மூலம் விவாதித்திருக்க வைத்திருக்கும்படி, திரைக்கதையின்மூலம் நம்முள்ளே நகர்த்துகிறது ‘ஜெய் பீம்’ திரைப்படம்! 2014-இல் ‘கோர்ட்’ என்கிற மராத்தியத் திரைப்படத்தைப் பார்த்து, நெகிழ்ந்து, இதுபோன்றதொரு திரைப்படம் தமிழில் வந்துவிடாதா என்கிற திரை ஏக்கத்திற்கான அழகிய, அழுத்தமான விடையாக வந்துசேர்ந்திருக்கிறது ‘ஜெய் பீம்’!

    இது ஒருவகையில் இன்னமும்

    Enjoying the preview?
    Page 1 of 1