Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sindhikka Oru Nodi
Sindhikka Oru Nodi
Sindhikka Oru Nodi
Ebook169 pages1 hour

Sindhikka Oru Nodi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மக்களின் மனதில் கிடந்து அலைமோதும் சமூகப் பிரச்சனைகளைப் பற்றிய எதிரொலியே இக்கட்டுரை. அன்றாட சமூக - அரசியல் நிகழ்வுகள் எவ்வாறு அமைய வேண்டும்? இதில் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள், மந்திரிகள், சமூக முக்கியஸ்தர்களின் சிந்தனையில் ஒரு சுடரை ஏற்றினால் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். நாமும் சில பிரச்சனைகளை இவர்களுடன் இணைந்து சிந்திப்போம்...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580125407560
Sindhikka Oru Nodi

Read more from Vaasanthi

Related to Sindhikka Oru Nodi

Related ebooks

Reviews for Sindhikka Oru Nodi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sindhikka Oru Nodi - Vaasanthi

    https://www.pustaka.co.in

    சிந்திக்க ஒரு நொடி

    Sindhikka Oru Nodi

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நாடகங்களும் நடிகர்களும்

    சட்டமும் பாதுகாப்பும்

    நண்பர்களும் எதிரிகளும்

    போரும் சமாதானமும்

    காமராஜர் யாருக்கு சொந்தம்?

    தேசியமும் துரோகங்களும்

    உரிமைகளும் அராஜகமும்

    பிம்பங்களும் பிரமைகளும்

    மக்களும் மஹேசன்களும்

    சுதந்திரமும் ஃபாசிசமும்

    யாகாவாராயினும் நாகாக்க

    சற்றே விலகியிரும்

    ஜனநாயகம் என்ற பித்தலாட்டம்

    போராட்டங்களும் அத்துமீறல்களும்

    நடந்தாய் வாழி காவேரி!

    மூத்த பொய்மைகள் அழிப்போம்

    இருப்பதும் இல்லாததும்

    தேவை ஒரு சுயபரிசோதனை

    நாகரீகமும் மனோபாவங்களும்

    கையேந்தும் கலாச்சாரம்

    நசிகேதனும் கொடும்பாவிகளும்

    விமர்சனமும் சகிப்புத்தன்மையும்

    தரமும் மெத்தனமும்

    கொசுவும் ஜெயில் உடைப்புகளும்

    சிலைகளும் அவமானங்களும்

    ஐந்தும் ஐம்பதும்

    பொம்மை ராணிகள்

    கமலா தாஸும் ரஜினிகாந்தும்

    எல்லைகளின் விளிம்பில்

    தவளையும் இராமபாணமும்

    டெண்டுல்கரும் பெப்ஸி கோக்கும்

    எமதர்மராஜனின் கண்ணீர்

    கலாச்சாரமும் காவலர்களும்

    விரோதிகளும் துரோகிகளும்

    யாதுமாகி நின்றாய் - காளி!

    ஜனநாயகம் என்ற கேலிக்கூத்து

    முட்டாளாக்கிய மூலிகை

    அடிமையின் மோகம்

    காக்கைச் சிறகினிலே

    ஜனநாயக அடிமைகள்

    மந்திரங்களும் தந்திரங்களும்

    முன்னேற்றமும் மதிப்பீடுகளும்

    நிழல்கள் நிஜமாகும் போது

    ஒரு துளி விஷம்

    உரிமைகளும் போராட்டங்களும்

    அச்சமும் பேடிமையும்

    அபாயச் சங்கு

    கௌரவர் சபை

    பேடிகளின் பயமுறுத்தல்

    சாவடிச் சண்டைகள்

    கதாநாயகனான கதை

    அணிந்துரை

    சிந்திக்க ஒரு நொடி முதல் பாகம் ஒன்று ஏற்கெனவே வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகம் இது. இதற்கு நான் ஒரு முன்னுரை எழுத வேண்டும் என்று திருமதி வாஸந்தி கேட்டுக் கொண்டபோது மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்.

    இந்தியா டுடே இதழ்தோறும் எழுதிவந்த இந்தக் கட்டுரைகளை அவ்வப்போது படித்திருக்கிறேன். அவரது கருத்துக்களையும் வயிற்றெரிச்சலையும் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

    இந்தக் கட்டுரைகளில் அவர் எடுத்துக்கொண்டுள்ள பிரச்சனைகளையும், தொடுக்கும் கேள்விக்கணைகளையும் எதிர்கொள்வதற்கு ஒரு நொடி போதாதுதான். எனினும் இவரது சிந்தனைப் பொறிகள் வாசகர்களின் நெஞ்சில் படர்ந்து பரவ ஒரு நொடி போதும். அறிவும் உணர்ச்சியும் உடைய வாசகர்களின் - மக்களின் மனத்தில்கிடந்து அலைமோதும் சமூகப்பிரச்சனைகளின் எதிரொலியே இக்கட்டுரைகள். இவை சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள், மந்திரிகள், சமூக நிர்வாக முக்கியஸ்தர்களின் சிந்தனையில் ஒரு சுடரை ஏற்றினால் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். அந்த நம்பிக்கையில்தான் இவை எழுதப்பட்டன என்று நான் புரிந்துகொள்கிறேன்.

    பொதுவாக, படைப்பாளிகள் என்று தம்மைக் கருதிக்கொள்கிற எழுத்தாளர்கள் - சமூகம் சார்ந்த ஒரு நோக்கம் உடைய எழுத்தாளர்கள்கூட அன்றாட சமூக - அரசியல் நிகழ்வுகள் குறித்து அக்கறை காட்டுவதில்லை. காட்டினாலும் அவர்களது எழுத்துக்களோடு அவற்றைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளுவதில்லை.

    ஆனால் ஒரு பத்திரிகையில் பொறுப்பும் தொடர்பும் ஏற்பட்டுவிட்டால் அதே எழுத்தாளருக்குத் தமது சமுதாயப் பார்வைக்கேற்ப சமூக நிகழ்வுகள் குறித்துத் தமது கருத்துக்களை முன்நிறுத்தும் கடமையும் ஏற்பட்டுவிடுகிறது.

    அந்தப் பத்திரிகை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு கட்சியைச் சார்ந்ததாக இருப்பின், அந்தக் கட்சியின் கொள்கைக்கேற்பத்தான் அந்தக் கட்டுரைகளை எழுத வேண்டியிருக்கும்.

    பொதுவான சமூக - இலக்கிய - ஆன்மிக நோக்கமுடையப் பத்திரிகைகளில் வெளிவரும் இத்தகைய சிந்தனையைக் கிளர்த்தும் கட்டுரைகள் பரந்துபட்ட சகல மக்களின் நலனை நோக்கமாகக் கொண்டு ஜனநாயக தர்மத்தின் அடிப்படையில் எழுதப்பட்டால்தான் எழுதியவரின் நோக்கம் இலக்கை எய்தும்.

    அத்தகு பெருநோக்குடன், ஜனநாயக தர்மத்துடன், சமூக தர்ம ஆவேசத்துடன் அவ்வப்போது ஏற்படும் சமூக நிகழ்வுகள் பற்றிய தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்திய சிதறல்களே, அவற்றின் இன்னுமொரு தொகுப்பே ‘சிந்திக்க ஒரு நொடி’

    வாசகர்களின் சிந்தனைக்கு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட பெருமக்களையும் இத்தொகுப்பு சிந்திக்கத் தூண்டும் என்று நம்புகிறேன்.

    நல்வாழ்த்துகளுடன்

    த. ஜெயகாந்தன்

    நவ; 1.2000

    சென்னை - 78

    நாடகங்களும் நடிகர்களும்

    தமிழ் வளர்ச்சி என்ற பெயரில் அரசியல் கூத்து நடக்கிறது

    உலகெலாம் ஒரு நாடக மேடை என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர். அதில் தற்காலிக வேஷம் போட்டு நடிக்க வந்த நடிகர்கள் நாம் என்றார். அவர் பேசியது தத்துவம். நம் தமிழ்த் திருநாட்டில் நாடகத்தில் நாடகம் போடுவதில் நாம் வல்லவர்கள். நடிப்பது என்பது அரசியல் வியூகம். தமிழ் என்ற பெயரிலும் வளர்ச்சி என்ற பெயரிலும் நடத்தப்படும் நாடகங்களுக்கு கை கொடுக்கும் வியூகம். ஏனென்றால் இதனால் தமிழ் வளராமல் போனாலும் தனி நபர் சேதம் ஏதுமில்லை. மாறாக கோஷம் எழுப்புபவர்கள் ஹீரோக்களாகும் வாய்ப்பு இருக்கிறது. அப்படித்தான் சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழைக் காப்பாற்ற வேண்டி நூறு தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று அறிவித்த மாத்திரத்தில் கதாநாயக புருஷர்களானார்கள்.

    கவனிப்பாரற்று கிடக்கும் நமது நூலகங்களில் தூசு படிந்து கிடக்கும் தமிழ் நூல்களை வேற்று மொழிக்குக் கொண்டு செல்வது எப்படி என்று பிரயோஜனமில்லாத ஒரு வேலையில் அவர்கள் ஆழ்ந்திருப்பார்களேயானால், அவர்களால் கதாநாயகர்கள் ஆகியிருக்க முடியாது. அல்லது மறுபதிப்பு காணவே காணாத, பல்கலைக்கழக நூலகங்களில்கூட கிடைக்காத தமிழ் காப்பியங்களின் மறுபதிப்புக்கான வேலையில் ஈடுபட்டிருந்தால், யார் பார்வையிலும் பட்டிருக்க மாட்டார்கள். இருக்கும் பழம் தமிழ் இலக்கிய படைப்பு எல்லாம் நிரந்தரமாக அழிந்து விடாமல் இருக்க, அதையெல்லாம் கணினியில் ஏற்றும் வகையைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு இருந்திருந்தால், பாவம் வெய்யிலில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் யோசனை அவர்களுக்கு வந்திருக்காது. அவர்களுக்கு இருந்த கவலையை நாம் சந்தேகிக்கக்கூடாது.

    கிராமத்துக் குழந்தைகள் எல்லாம் அம்மா என்ற புனித வார்த்தையை மறந்துவிட்டன. மம்மி என்கின்றன. 5-ம் வகுப்புவரை தமிழ் மொழியே அனைத்துப் பாட மொழியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அம்மா என்ற சொல் நாவில் வரும். தமிழ்நாட்டில் தமிழில் கல்வி வேண்டும் என்று யாசிப்பது எத்தனை கேவலம்! உணர்வுபூர்வமான இந்த விஷயத்திற்கு அரசு உணர்ச்சியற்று இருப்பதாலேயே உண்ணாவிரதம் - சாகும்வரை - என்றார்கள். ‘உயிரைத் தருகிறோம், தமிழைத் தா’ என்றார்கள். பாலும் தெளிதேனும் தருகிறேன் நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று விநாயகரை வேண்டிக்கொள்வது போல. இருப்பாய் தமிழா நெருப்பாய், இருந்தது போதும் செருப்பாய் என்றார்கள் டி. ராஜேந்தர் ஸ்டைலில். ஆறாயிரம் பேர் அதைக்கண்டு ஆரவாரித்தார்கள். நல்லவேளையாக அவர்களது மிரட்டலை தமிழக அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டது. அவர்களது கோரிக்கைகளை ஒரு ஆலோசனைக் குழு அமைத்து பரிசீலிப்பதாகச் சொன்னது. ஆலோசனைக் குழு என்றால் கதை அதோடு முடிந்தது என்று அறிஞர்கள் அறிவார்கள். இருந்தும் நன்றியுடன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள்.

    கோஷம் எழுப்பி லாபமில்லை, அரசு விதிமுறைகளைப் பின்பற்றிதான் நடக்கும் என்பது அறிஞர்கள் அறியாததல்ல. ஏனென்றால் இது மொழி சம்பந்தப்பட்டதல்ல. விதிமுறைகள் சம்பந்தப்பட்டது. அரசிடமிருந்து நயா பைசா வாங்காத தனியார் மழலையர் பள்ளியில் தமிழே பாட மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்ல அரசுக்கு உரிமை இருக்கிறதா? முதல் மொழி தாய் மொழி இரண்டாம் மொழி ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை இருக்கிறவரை தமிழைக் கட்டாயமாக்க முடியாது.

    40,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1008 பள்ளிகளில் மட்டுமே தமிழ் பாடமாக இல்லை என்று தெரிகிறது. இதனால் தமிழுக்குக் கேடு காலம் வந்துவிடுமா? 39,000 பள்ளிகளில் பணி செய்யும் தமிழ் ஆசிரியர்கள் தமிழை வளர்க்க என்ன செய்கிறார்கள்? அவர்களில் வியாபாரம் செய்பவர்கள், வட்டிக்கடை வைத்திருப்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் எத்தனை பேர்?

    உலகம் ஒரு நாடக மேடைதான். ஆனால் எல்லாரும் ஹீரோ வேஷம் போட்டுவிட முடியாது.

    சட்டமும் பாதுகாப்பும்

    குற்றம் புரிந்தவர்களுக்கு சட்டத்துறையே பாதுகாப்பு

    ‘நாணல் போல் வளைப்பது சட்டமாகுமா? அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?"

    என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளை வெள்ளித் திரையில் எம்.ஜி.ஆர். பாடியபோது, நியாயத்தின் உறைவிடமாக தங்களது ஹீரோவை நினைத்து தமிழ் ரசிக பெருமக்கள் ஆரவாரித்தார்கள். திரையில் தெரிவது ஒரு பிம்பம் என்பது மறந்து, செல்வாக்குள்ள யாரும் சட்டச்சிக்கலில் மாட்டிக் கொண்டால் சட்டம் நாணல் போல் வளையும் என்பதை தமிழக மக்கள் இப்போது நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் கவிஞரைப் போல ஆயாசப்படுவார்களா என்பது நிச்சயமில்லை.

    சட்டத்துக்கு டிமிக்கி கொடுப்பவர்கள் சாமர்த்தியசாலிகள் என்று கருதப்படும் பாமரத்தனம் இங்கு உண்டு. சட்டத்தை வைத்தே சட்டத்தை ஏமாற்றும் வழிகளை அறிந்திருக்கும் அதிபுத்திசாலி வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளும் செல்வாக்கு உள்ளவர்களைக் கண்டு ஒரு அப்பாவித்தனமான பிரமிப்பு இங்கு உண்டு. மக்களின் அப்பாவித்தனத்தையும் சட்டத்தின் பலவீனங்களையும் தமக்கு சாதகமாக்கி எப்படி நிரந்தரமாக செல்வாக்குடன் இருப்பது என்பதை ஒரு புத்தகமாக எழுத வேண்டுமானால் அதற்கு ஜெயலலிதாவைவிட ஒரு சிறந்த நபர் இருக்க முடியாது.

    Enjoying the preview?
    Page 1 of 1