Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theerarum Karma Veerarum
Theerarum Karma Veerarum
Theerarum Karma Veerarum
Ebook127 pages47 minutes

Theerarum Karma Veerarum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூல் கே.வி. ராமநாதன் தொகுத்து தமிழில் சாருகேசி மொழிமாற்றம் செய்து வெளியிட்ட ‘சத்தியமூர்த்தியின் கடிதங்கள்’ என்ற நூலையும், சத்தியமூர்த்தி தனது மகளுக்கு சிறையிலிருந்தும், பொது மருத்துவமனையிலிருந்தும் ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்களைத் தமிழாக்கம் செய்து நீலமேகம் அவர்கள் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வெளியிட்ட ‘அருமைப் புதல்விக்கு’ என்ற நூலையும், தேர்தல் ஆணையம் 1919-ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்ட தேர்தல் முடிவு அறிக்கைகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று சம்பவங்கள். புனைவு அல்ல. என் மனதில் விழுந்த விதை புத்தகமாகி இப்போது உங்கள் கைககளுக்கு வந்திருக்கிறது. தொடரவேண்டியது தானே!

Languageதமிழ்
Release dateFeb 25, 2023
ISBN6580140409538
Theerarum Karma Veerarum

Read more from K.S.Ramanaa

Related to Theerarum Karma Veerarum

Related ebooks

Reviews for Theerarum Karma Veerarum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theerarum Karma Veerarum - K.S.Ramanaa

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    தீரரும் கர்ம வீரரும்

    Theerarum Karma Veerarum

    Author:

    கே. எஸ். ரமணா

    K.S.Ramanaa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-ramanaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. தீரர் சத்தியமூர்த்தி

    2. விளையும் பயிர் முளையிலே!

    3. கற்ற கல்வியும் செய்த தொழிலும்

    4. அரசியல் அரங்கில் அழைப்பு

    5. இங்கிலாந்தில் சத்தியமூர்த்தியின் பணி

    6. தேர்தல் களத்தில் செய்த யுக்தி

    7. சட்டமன்றத்தில் தீரர்

    8. தீரரின் வெற்றி முகம்

    9. மாகாண காங்கிரஸ் தலைவராக சத்தியமூர்த்தி

    10. உள்ளாட்சி நிர்வாகத்தில் நற்பணி

    11. கவின் கலைப் பிரியர் சத்தியமூர்த்தி

    12. எண்ணிய முடிதல் வேண்டும்...

    13. விடுதலை இயக்கத்தில் ஒரு விடிவெள்ளி

    14. காந்தியடிகளும் சத்தியமூர்த்தியும்

    15. தீரர் விதைத்துவிட்டுச் சென்ற வீரிய விதை

    16. அரசியல் வாழ்வில் ஏறுமுகம்

    17. கல்விக் கண் திறந்த பெருந்தலைவர்

    என்னுரை

    நெற்றிக்கு திலகமிடுவதைப்போல இப்பகுதி அவசியமாகிறது. திருமயம் வட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் எனது பெரிய தந்தையுடன் திருமயம் தாலூகா அலுவலகம் சென்றபோது கோர்ட் வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த ஒரு உருவச் சிலையைப் பார்த்து யார் பெரியப்பா இவர்? என்ற வினாவினேன்.

    இவரா...? இவர் இந்த ஊரில் பிறந்து வக்கீலாகி தேசப்பிதா காந்தியுடன் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். இவர் சிஷ்யரான விருதுநகர்காரர்தான் இப்போது முதலமைச்சராயிருக்கிறார் என்று அவரைப் பற்றியும், சில நிகழ்ச்சிகளையும் சொன்னார். அவர் சொன்ன செய்திகள் ஒரு சிறு விதை போல் என் மனத்தில் அன்று விழுந்தது.

    நாளாக நாளாக அவரைப் பற்றிய செய்திகளும் புதுக்கோட்டை கல்லூரியில் நான் படிக்கும்போது அவரைப்பற்றிய நிகழ்ச்சிகளும் காதில் விழுந்தன. அவற்றை உள்வாங்கி மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.

    வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் பற்றிய நூல்கள் கிடைக்காதா எனத் தேடினேன். என் தேடல் வீணாகவில்லை. அவரைப்பற்றிய நூல்களைப் படித்து அவரை உள்வாங்கினேன். அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் இந்நூல் எழுதப்பட்டது.

    பெருந்தலைவர் முதலமைச்சராய் பொறுப்பேற்று பள்ளிக் கல்விக் கட்டணத்தை ரத்து செய்து கல்வியை இலவசமாக்கியதால் தான், என் குடும்பத்தார் என்னை உயர்நிலைப் படிப்பிற்கு அனுப்பினர். அதனால் படித்து பட்டம் பெற்று இந்நூலை எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த இரு தலைவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி.

    இந்நூல் கே.வி. ராமநாதன் தொகுத்து தமிழில் சாருகேசி மொழிமாற்றம் செய்து வெளியிட்ட ‘சத்தியமூர்த்தியின் கடிதங்கள்’ என்ற நூலையும், சத்தியமூர்த்தி தனது மகளுக்கு சிறையிலிருந்தும், பொது மருத்துவமனையிலிருந்தும் ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்களைத் தமிழாக்கம் செய்து நீலமேகம் அவர்கள் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வெளியிட்ட ‘அருமைப் புதல்விக்கு’ என்ற நூலையும், தேர்தல் ஆணையம் 1919ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்ட தேர்தல் முடிவு அறிக்கைகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று சம்பவங்கள். புனைவு அல்ல.

    என் மனதில் விழுந்த விதை புத்தகமாகி இப்போது உங்கள் கைககளுக்கு வந்திருக்கிறது. தொடரவேண்டியது தானே!

    என்றும் அன்புடன்

    கே.எஸ். ரமணா

    1. தீரர் சத்தியமூர்த்தி

    இந்திய நாடு வல்லரசாகுமா என்று வினா எழுப்பிக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு, இந்த நாட்டுக்கு விடுதலை கிடைக்க உழைத்த பலரின் வரலாறு மறக்கப்பட்டிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வாய்ப்பில்லை. தங்கள் இளமையைச் சிறையில் கழித்தவர் பல பேர். ஏகாதிபத்திய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டு அடிபட்டு உதைபட்டு ஊனமானோர் பலர். துணைவியையும் மக்களையும் வெகுகாலம் பிரிந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தியோர் பலர். சிலர் தேச விடுதலைப் பாடல்களையும் நாடகங்களையும் பாடியும், நடித்தும் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்து ஒத்துழையாமைப் போக்கை கடைப்பிடிக்கச் செய்தனர். சிலர் நெடுநாள் சிறையில் இருந்து திருமண வாழ்வில் ஈடுபடாமல் போனவர்களும் உண்டு. சிலர் நா வன்மையால் கேள்விகளை எழுப்பியும் பேசியும் மக்களிடையே விடுதலையுணர்வை எழுப்பியவர்களும் உண்டு. இவ்வாறு பலர் பலவாறான இன்னல்களைப் பொறுத்துக்கொண்டதால்தான் நாம் சுதந்திரமாக மூச்சுவிட்டு பேச்சு சுதந்திரத்தையும், எழுத்து சுதந்திரத்தையும் பெற்றுள்ளோம் என்ற உண்மை நிலைகூட உணரப்படாத ஒரு இளைஞர் கூட்டம் நம் நாட்டில் பெருகி வருகிறது.

    அவ்வப்போது விடுதலைக்கு வித்திட்ட தீரர்களை நம் மனதால் நினைக்க வேண்டும் இன்றும் பலரால் அறியப்படாத நிலையில் உள்ள தீரர்களின் வரிசையில் நம் கண்முன் நிற்பவர் தீரர் சத்தியமூர்த்தி அவர்கள்தான்.

    இவர் புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்து தற்போது மாவட்டமாகியுள்ள திருமயம் என்ற ஊரில் பிறந்தவர். தமது நா வன்மையால் நாட்டு மக்களிடையே விடுதலைக் கனலை எரியவிட்டவர். இளமையிலேயே கற்று பட்டம் பெற்று வழக்குரைஞராக இருந்து அரசியலுக்கு வந்தவர்.

    இந்திய நாடு பழமையானது மட்டுமல்ல நீண்ட நாட்களாக செந்நெறியோடு ஆன்மிக வலிமையால் உலகை ஈர்த்த நந்நாடு.

    எந்த ஒரு பின்புலமுமின்றி அரசியல் அரங்கில் நுழைந்து மாநிலம் முதல் மத்திய ஆட்சிவரை ஆங்கிலேய ஆதிக்கத்தில் மிளிர்ந்து, அண்ணல் காந்தியடிகளின் அன்புக்குப் பாத்திரமாகி வாழ்ந்த தீரரின் வரலாறு தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றே!

    சுதந்திரம் நமக்கு சும்மா கிடைத்ததில்லை. அன்னிய ஏகாதிபத்தியத்தின் முன், அடிபட்டு, உதைபட்டு, சிறைப்பட்டு பல தியாகிகளின் வாழ்க்கையைப் பணயம் வைத்துப் பெற்றோம். கத்தியின்றி, இரத்தமின்றி, அஹிம்சை என்ற ஆயுதத்தைக்கொண்டே அண்ணல் காந்தியடிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க. லட்சோப லட்ச மக்கள், தங்கள் இரத்தத்தைச் சிந்தினார்களே தவிர எதிரியின் இரத்தம் மண்ணில் விழவில்லை. அது ஒரு சாத்வீகப் போர்.

    அண்ணல் காந்தியடிகளின் நோக்கம் அன்னிய சக்தியிடமிருந்து தேசத்தை மீட்க வேண்டும் என்பதே! அந்த லட்சியத்தை நாடெங்கும் விதைத்து லட்சோப லட்ச. லட்சியவாதிகளை உருவாக்கிய பின்னரே, ஆங்கிலேயர் நமது ஒற்றுமையின் பலம் கண்டு, சிறிது சிறிதாக மனமிறங்கி அரசியல் களத்தில் புக விட்டார்கள்.

    அப்படிப்பட்ட லட்சியவாதிகளில் ஒருவர் தான் தீரர் சத்தியமூர்த்தி. தனது லட்சியத்தில் வெற்றி பெற தன் இன்னுயிரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராயிருந்தார். பொன்னோ, பொருளோ, பட்டமோ ஆங்கிலேயர் கொடுத்து அவரைக் கவர நினைத்தாலும் அவர் மயங்காது, கொண்ட லட்சியமே பெரிதென காந்தியடிகள் காட்டிய வழியில் பயணித்தார். குடும்பம் குழந்தையைப் பற்றி அவர் கவலைப்படவேயில்லை.

    விடுதலை என்ற லட்சியத்தை அடைய அவர் தன் பேச்சாற்றலால் எல்லா தரப்பு மக்களிடையேயும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நிறைய போராட்டங்களில் கலந்து கொண்டார். காந்தியடிகள்

    Enjoying the preview?
    Page 1 of 1