Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanuda Thaagam
Maanuda Thaagam
Maanuda Thaagam
Ebook236 pages1 hour

Maanuda Thaagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“புத்தகம் மனிதர்களை தூண்ட உதவும் கருவி, அறிவை விரிவு செய்யும் ஆயுதம்” என்கிறார் கவிஞர் ஆண்டனி. ஆம், 35 முத்தான தலைப்புகளில் கவிதை நடையில் அமைந்த அவரது ‘மானுடத் தாகம்’ என்ற இந்த நூல் படிப்பவர்களின் மனதில் மாற்றத்தையும், வாழ்வில் ஏற்றத்தையும் உருவாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மனதிற்குள் நுழையும் வார்த்தைப் பிரயோகம் கவிதை நடையுடன் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வரிகள்; எழுச்சிமிக்க எழுத்தாற்றல்; இதயத்தை ஊடுருவும் கருத்துகள். அன்றாடம் தனிமனித ஆளுமையை வெளிக்கொணரும் ஆற்றல்மிகு படைப்பு இது.

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580175910725
Maanuda Thaagam

Related to Maanuda Thaagam

Related ebooks

Reviews for Maanuda Thaagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanuda Thaagam - Kavingar P. Antony

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மானுடத்தாகம்

    Maanuda Thaagam

    Author:

    கவிஞர் பி. ஆண்டனி

    Kavingar P. Antony

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavingar-p-antony

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    1. சற்று சிந்திப்போம்!

    2. அடிவாங்கும் அகங்காரம்

    3. தீயவை தீய பயக்கும்

    4. இதயத்தால் சிந்திப்பவர்கள்

    5. மண்பெற்ற வரம்

    6. பரிணாமப் பீடம்

    7. நீ, நீயாக இரு!

    8. அறிவின் ஆன்மா

    9. உயிர்ச்சத்து

    10. வெற்றிக்கான முதலீடு

    11. சமூக ஊடகங்கள்

    12. புறக்கணிக்கப்படாமல் இருக்க புதுப்பித்துக்கொள்!

    13. உயர்ந்த உறவு

    14. எதிர்காலம் குறித்த எச்சரிக்கை!

    15. சாமானியனின் சமூகம்

    16. தற்காலிகப் பைத்தியம்

    17. அறிமுகப்படுத்தி அழகுபடுத்துபவர்கள்.

    18. அறிவுச் சாளரம்

    19. வழிகாட்டும் தலைவன்

    20. அடையாளப்படுத்தும் ஆளுமை

    21. உயர்வினைக் கொண்டாடும் உயர்திணை

    22. செய்யாதன செய்வோம்!

    23. இதயத்தின் நறுமணம்

    24. அருந் தமிழின் அக்கினிக் குஞ்சு

    25. பிரபஞ்சப் பரிசு

    26. உடல், உள்ளம் ஆகியவற்றின் ரகசியம்

    27. மனதின் வாசனை

    28. பயனுள்ள பயணம்

    29. குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

    30. சகிப்புத்தன்மையும் சத்தியமும்

    31. இரண்டாவது தந்தை

    32. ஏவுகணை நாயகன்

    33. படிக்காத மேதை

    34. கருப்பு வைரம்

    35. மிரளவைக்கும் மெல்லினம்

    சமர்ப்பணம்

    Rev Fr G Arul Irudham

    Founder, Jesus Sisters Home

    வாழ்த்துரை

    புத்தகம் மனிதர்களை தூண்ட உதவும் கருவி, அறிவை விரிவு செய்யும் ஆயுதம் என்கிறார் கவிஞர் ஆண்டனி. ஆம், 35 முத்தான தலைப்புகளில் கவிதை நடையில் அமைந்த அவரது ‘மானுடத் தாகம்’ என்ற இந்த நூல் படிப்பவர்களின் மனதில் மாற்றத்தையும், வாழ்வில் ஏற்றத்தையும் உருவாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மனதிற்குள் நுழையும் வார்த்தைப் பிரயோகம் கவிதை நடையுடன் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வரிகள்; எழுச்சிமிக்க எழுத்தாற்றல்; இதயத்தை ஊடுருவும் கருத்துகள். அன்றாடம் தனிமனித ஆளுமையை வெளிக்கொணரும் ஆற்றல்மிகு படைப்பு இது. நண்பர் ஆண்டணி ஆசிரியப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவது மட்டுமல்ல புத்தக வாசிப்பின் மூலம் தன்னை மேம்படுத்திட தன் இயல்பை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் என்பதற்கு அவரின் ‘மானுடத் தாகம்’ என்ற இந்த படைப்பே சான்றாகும். அரசுப் பள்ளிக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் இவர். பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும், ஊக்கமூட்டும் பேச்சாளர். அவரின் தன்னம்பிக்கை தரும் எழுத்து வரிகளில் என்னை கவர்ந்தது, இதோ, நல்ல புத்தகங்களை வாசிப்பவர்கள் நல்ல இதயங்களை நேசிப்பவர்கள்; உறவுகளில் ஒருவராகவே ஒட்டிக் கொண்டவர்கள்; ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களோடுதான் உண்மையான உறவு அமையும் நட்பும் அப்படியே என்கிறார், உண்மைதான்.

    தவறுகளைத் தூசி தட்டாமல் துடைத்தெறிபவனும், நல்லதை நாடி நரம்புகளில் பாய்ச்சி இதயம் வரை ஓட விடுபவனுமே நல்ல மனிதன் என்கிறார். சாதிய உணர்வால் சரிந்து போகாமல், மத உணர்வால் மலிந்து போகாமல், மொழி உணர்வால் வெறிப்பிடித்து அலையாமல், இன உணர்வால் இழிநிலை கொள்ளாமல், நட்பால், நம்பிக்கையால் விரிந்திருக்கும் ஆலமரம்போல் இருப்பதுதான் தூய உறவுக்கான அடையாளம் என்கிற வரிகளில் ஆசிரியரின் சமுதாய அக்கறை வெளிப்படுகிறது. மரம் பற்றிய நண்பரின் கவின்மிகு வரிகள் இதோ,

    மரம் தன்னலம் இல்லாத தாவரம்; மண்ணுக்கும், மனிதனுக்கும் கிடைத்த மாவரம். வளர்ச்சி என்ற பெயரில் முதலில் பலியாவது மரங்களே. இது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு ஆக்சிஜனும் கிடைக்காது; அன்றாட வாழ்க்கையும் இருக்காது என்று கவலை கொள்கிறார். மண்ணில் மனிதர்களை விட்டு வைக்க விரும்பினால் மரக்கன்றுகள் நட்டு வைக்க வேண்டும் என்கிறார். வனம், பறவைகள், விலங்குகளுக்கான வாசமண்டலம் என்றால் அது மனிதர்களுக்கான சுவாசம் மண்டலம். மாசில்லாத காற்றை மனிதன் சுவாசிக்க, மன நிம்மதியைப்பெற மனிதன் நினைக்கும் மதங்களை விட மரங்களே அவசியம். மனிதன் இல்லாமல் மரங்கள் இருக்கும்; மரங்கள் இல்லாமல் மனிதன் இருக்கவே முடியாது. மரங்களைக் காக்க தொலைநோக்குப் பார்வையும், தொண்டுள்ளமும், தொடர் நடவடிக்கையும் தேவை. இது அரசின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனின் கடமையும்கூட என்பதை கண்டிப்புடன் கூறியுள்ளார்.

    குழந்தைகளை செல்லிடப்பேசியிடமிருந்து பிரித்து செடிகளோடு பேச விட்டால் செடிகளும் சீக்கிரம் பூக்குமாமே? என்ற வினாவுக்குள்தான் எத்தனை விடைகள். மரக்கன்றுகள் நடுவதற்கு மதிப்பெண்கள் என்றால் மாணவ கண்மணிகள் பசுமைப் புரட்சியையே நடத்தி விடுவார்கள். அவர்கள் நடுவது மரக்கன்று மட்டுமல்ல நாளைய நம்பிக்கையும் என்கிறார். வெட்டப்படும் மரங்களை நினைத்து வெட்கப்படவில்லை என்றால் மண்ணில் காணப்படும் கழிவுகளில் மனிதன் மோசமான கழிவாக இருப்பான் எனச் சாடுகிறார். காலத்திற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொள்ளும் முதியவரும் புதியவரே என்கிறார். ‘ஆறுவது சினம்’ என்ற அவ்வை மொழியை கோபம் அமிலத்திற்குச் சமம் அது எறியப்படும் இடத்தை எத்தனை நாசம் செய்கிறது என்றால் வைத்திருக்கும் இடத்தை எத்தனை நாசம் செய்யும். வாழத் தகுதி இல்லாதவன் அள்ளி வீசும் வார்த்தைகள் தான் கோபம் என்று அழகாக விளக்குகிறார். மூளையின் ‘அமிட்டலா’ என்கிற பகுதியில் இருந்து கோபம், வெறுப்பு, ஆத்திரம், தூக்கம், கனிவு, அன்பு ஆகிய உணர்வுகள் உற்பத்தியாகிறது. மகிழ்ச்சி தரும் விஷயங்களில் மனதை திருப்பும்போது இவற்றை தவிர்க்கலாம் என்கிறார். ஒருவனை உயிர்ப்போடு வைத்திருந்தால் அதுதான் அவனுக்கு தைத்திருநாள் என்கிறார். அன்னையும் பிதாவும் நன்னெறி காட்டும் முன்னறி தெய்வம்; பிறந்த குழந்தை தாயின் முகத்தை முதல் புத்தகமாகவே வாசிக்கிறது; அன்னை அரவணைப்பில் வளராத குழந்தை அரண்மனையில் வளர்ந்தாலும் அது அரக்கத்தனமாகவே உருவெடுக்கும் என்கிறார். சுவாசமும், ரத்த ஓட்டமும், இதயத்துடிப்பும் யாரையும் கேட்டு இயங்குவதில்லை; எவர் கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. அதுபோன்று தன்முனைப்போடு உள்ளார்ந்த புத்தக வாசிப்பும் அப்படி இருக்க வேண்டும் என்கிறார். உங்களிடம் இருப்பதற்கு நன்றி கூறுங்கள், உங்களிடம் இல்லாததற்காக கடினமாக ஊழையுங்கள் இதுபோன்ற உன்னதமான வரிகளால் நிரம்பி வழிகிறது ‘மானுடத் தாகம்’. நீங்கள் படித்துப் பயன்பெறுவதற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் வாங்கிப் பரிசளிக்க வேண்டிய சிறந்த புத்தகம் இது. போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய இவரது எழுத்துப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்.

    கி கருணாகரன்

    துணை ஆட்சியர்,

    புதுக்கோட்டை மாவட்டம்.

    1. சற்று சிந்திப்போம்!

    வாழ்க்கையில் போராட்டத்தை சந்தித்த சிறிய மனிதர்களைவிட போராட்டத்திலேயே வாழ்க்கையைத் தொலைத்த பெரிய மனிதர்கள் வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் நினைவு கூறப்படுகிறார்கள். அவர்கள் தனக்காக சிந்திக்காமல் தலைமுறைக்காக சிந்தித்தவர்கள். பாதச் சுவடுகளை பதித்து விட்டுச் செல்லும் பாரம்பரியத்திற்கு உரியவர்கள். இந்த பூகோளத்தில் புரட்சியும், போராட்டங்களும் வெடித்து வரலாற்றைப் புரட்டி போட்ட சம்பவங்கள் எத்தனையோ உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய போராட்ட வரலாறு.

    1947 ஆகஸ்ட் 15 சுத்திகரிக்கப்பட்ட சுதந்திரக்காற்றை இந்தியர்கள் சுவாசிக்க தொடங்கிய நாள். வாழ்நாள் முழுவதும் முயன்றாலும் வாசிக்க முடியாத வரலாற்றை வருடிக்கொடுத்தே வாழ்க்கையை முடித்துக் கொண்டு நாளை நகர்த்தும் அளவுக்கு பரந்து விரிந்தது தாய் திருநாட்டின் தியாக வரலாறு.

    நெஞ்சிருக்கும் வரை நேரு இருப்பார், நேதாஜி இருப்பார், காலம் இருக்கும் வரை காந்தி இருப்பார், அறிவுலகம் உள்ளவரை அம்பேத்கர் இருப்பார். இந்தப் பிரபஞ்சத்தில் கடைசி உயிர் இருக்கும் வரை மண்ணுக்காக தியாகம் செய்த மட்டற்ற தலைவர்களின் புகழ் கல்லோடும், மண்ணோடும், ஊனோடும், உயிரோடும் விரவிக்கிடக்கும்.

    அகிம்சையால் ஆங்கிலேயனை அதிர வைத்தவர், அகிலத்தையே ஆச்சரியப்பட வைத்தவர், தூய திரு தொண்டன் தேசப்பிதா காந்தியடிகள். ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் காந்திதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். எதிரிகள் எல்லா வகையான ஆயுதங்களையும் ஏந்திய போது ‘அமைதியால் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என்று எண்ணி சளைக்காமல், சத்தியத்தின் பாதையில் இருந்து சற்றும் விலகாமல், இயன்றவரையிலும், இருந்த வரையிலும், ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ என்று வாழ்ந்து காட்டியவர். பத்தோடு பதினொன்றாகச் செத்துத் தொலைக்காமல், ஒத்துழையாமை இயக்கத்தில் ஒத்து உழைக்காமல், போராட்டப் போக்கையே திசை மாற்றி விட்ட அரையாடை கட்டிய மகாத்மா, அண்ணல் தேசப்பிதா காந்தியடிகள். சுதந்திரத் தீயில் எண்ணெய் வார்க்காமல் தன்னையே வார்த்த தன்னிகரில்லா தலைமகன்.

    தேசத்தின் எல்லாப் புறங்களிலும் ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என அந்நியர்கள் நம்மை ஆக்கிரமிக்க நாள்தோறும் நலிந்து கொண்டிருந்தது நம்தேசம். காரணம், வந்தாரை வாழ வைத்தது நம் பாரதம். தேசம் கடந்து சிந்தித்த பெருமக்கள் நிறைந்த பாரதமாக இருந்ததால்தான் வந்தாரை எல்லாம் வாழவும் வைத்தது, அது நம்மை ஆளவும் வைத்தது.

    அன்பில் நிறைந்து இருக்கும் போது தெருப்பற்று தொடங்கி, தேசப்பற்று வரை நம்மில் அது பொங்கி வழியும். அப்படி தேசத்தின் மீது அளவற்ற அன்பைக் கொட்டியவர்களில் நேருவும் ஒருவர். கோடீஸ்வரனாகவே வாழ்ந்து இருக்கலாம் ஆனால் கொள்ளையர்களை, நிறத்தில் வெள்ளையர்களை விரட்டியடிக்க, காந்தியோடு கொள்கையால் கூட்டணி வைத்து, மண்ணில் ஒரு பாதியாகவும், மக்கள் மனதில் மறுபாதியாகவும் வாழும் ஆசிய ஜோதி நேரு, கடைசிவரை தேசப்பிதாவோடு தோள் கொடுத்து நின்றவர் பல்லாண்டுகள் சிறையில் இருந்தவர்.

    அகிம்சையைத் தாண்டி, ஆயுதங்களால் அந்நியனை விரட்டி அடிப்பதில் தவறு ஒன்றுமில்லை என்று தனிப் பாதையில் பயணித்து, தனி ராணுவத்தை உருவாக்கி தேசத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பணி, ஒவ்வொரு இந்தியனும் வியக்கத்தக்கது. இரும்பு மனிதர் பட்டேல் போராட்டங்களுக்குப் பிறகு சமஸ்தானங்களை ஒன்றிணைத்து தேசத்தை கட்டி எழுப்பிய பணி அளவிடற்கரிய அற்புதப் பணியாகும். கொள்கையை விட்டுக் கொடுக்காமல் தேசத்திற்கு வாழ்க்கையை முட்டுக்கொடுத்து மூச்சை நிறுத்திக் கொண்டவர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு. சுதந்திரத்திற்காகப் பாடிய பாரதியையும், சுத்தானந்த பாரதியையும், செக்கிழுத்த செம்மல் வ. உ. சி யையும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. நம் உயரங்கள் இவர்கள் சிந்திய உதிரத்தால் தான் வந்தது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ‘சுதந்திரம்’ தனிச்சொல் அல்ல. அது தூயவர்களின் துணிச்சல் நிறைந்த போராட்ட பிரசவத்தில் பிறந்த குழந்தை. கூனிக்குறுகி கும்பிடுபோட்ட காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த வரலாறு சுதந்திரதினம். வணிகம் செய்ய வந்தவர்களை விரட்டியடித்த மகத்தான நன்னாள் தான் இந்திய வரலாற்றில் பொன்னாள்.

    திறக்கப்படாத ஜன்னல்களோடும், தீர்க்கப்படாத இன்னல்களோடும், காயங்களை ஆற விடாமல் கதறவிட்ட கொடியவர்களோடும், பொதுப் பணியில் தங்களை பொருத்திக் கொண்டும், வரும் தலைமுறைக்காக தங்களை வருத்திக்கொண்டும், மண்ணோடு மண்ணாகிக் கிடக்கும் மாமனிதர்களின் இந்தப் புனிதப் பூமியை மூச்சிருக்கும் வரை முத்தமிட்டுக் காப்போம். சுதந்திரத்தை எவரும் கட்டிக் கொடுக்க வில்லை, செந்நீரைக் கொட்டிக் கொடுத்ததினால்தான் இது சாத்தியமாயிற்று. கொடிப்பிடித்துக் கோஷம் போடுவதால் மட்டும் வரவில்லை, கொண்ட கொள்கையில் கடைசி வரையில் கொலைக்களத்துக்குப் போனாலும் பரவாயில்லை என்றவர்களால் வந்த சுதந்திரம் இது.

    அப்பழுக்கு இல்லாத தியாகச் சுடர்களின் உழைப்பும், உண்மையும், உத்வேகமும், உயரிய சிந்தனையும், நரம்பில் ஊறவேண்டும், எப்பொழுதும் அதை நாம் நினைவு கூற வேண்டும். ஆயிரக்கணக்கான ஆன்மாக்கள் ஆசீர்வதித்த பூமி இது. தங்களது இரத்தத்தால், வாழ்க்கையால், இந்தப் பூமியை புனிதப் படுத்திவிட்டுச் சென்றவர்கள் வாழ்ந்த இடம். தேசத்தைத் தாங்கி நிற்பது மட்டுமல்ல ஆன்மிகத்தில் அற்புதம் நிகழ்த்தி விட்டு அடிச்சுவடு கூட தெரியாமல் போனவர்களின் தூய சிந்தனைகளை மனதில் வாங்கியும் வைப்போம்.

    வரும் தலைமுறைக்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் வரலாற்றை புரட்டிப் பார்ப்போம். ஆண்டுதோறும் கொண்டாடித் தீர்ப்பது மட்டுமல்லாது நாமும் நம் தலைமுறைக்காக எதையாவது கொடுத்துவிட்டுச் செல்வோம். வேறுபாடுகளைக் களைந்து வீரத்துறவி விவேகானந்தர் சிக்காகோவில் சகோதரிகளே, சகோதரர்களே என்று வினவியது போல், மனிதர்களாய் தேசத்தையும் பேணிக்காப்போம். போராட்டக் களத்தில் நின்றவர்களைப் போற்ற வேண்டும் என்றால், அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர முடியாவிட்டாலும் பரவாயில்லை தொடர விரும்புபவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்போம்.

    ஊகானில் தொடங்கி உள்ளூர் வரை உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தீநுண்மியின் தீவிரத்தை உணர்ந்து செத்து விழுந்து கொண்டிருக்கும் சகோதர சொந்தங்களை கோரப் பிடியிலிருந்து விடுவிக்க நம்மால் ஆன தேசியக் கடமை ஆற்றுவோம். அதுதான் நாம் தேசத்திற்கு செய்யும் மிகப்பெரிய தொண்டு.

    அன்பில் ஆழமாகவும் நட்பில் பல நாடுகளுக்குப் பாலமாகவும் இருந்தது பாரத நாடு. பாருக்குள்ளே நல்ல நாடு தான் ஆனால் ஊருக்குள்ளே உதவாக்கரையாக இருந்து என்ன பயன்? சிந்திப்போம், வாழ்க்கையை மனிதனாக வாழ்ந்து காட்டி அர்த்தப்படுத்துவோம். அதற்கு இப்பொழுதே நம்மை ஆயத்தப்படுத்துவோம், வாழ்க

    Enjoying the preview?
    Page 1 of 1