Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siddha Ragasiyam
Siddha Ragasiyam
Siddha Ragasiyam
Ebook134 pages44 minutes

Siddha Ragasiyam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

வள்ளுவரின் கூற்றுப்போல சொல்வது யாவர்க்கும் எளிது; ஆனால் சொன்ன வண்ணம் செய்வது என்பது அரிது. ஆனால் சித்தர்கள் சொன்னதைச் செய்து புகழுடம்பு எய்தியவர்கள். மனித சமூகத்திற்கு நல்லன பயக்கும் நல்ல அறவழிகளை எழுதி, இயம்பிச் சென்றார்கள்.

சித்த ரகசியம் என்னும் இந்த நூல் சித்தர்கள் நெடுநாள் வாழ்ந்ததற்கான ரகசியம் என்ன என்பதை வாசிக்கும் போது உணர்வீர்கள்.

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580140409396
Siddha Ragasiyam

Read more from K.S.Ramanaa

Related to Siddha Ragasiyam

Related ebooks

Reviews for Siddha Ragasiyam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siddha Ragasiyam - K.S.Ramanaa

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சித்த ரகசியம்

    Siddha Ragasiyam

    Author:

    கே. எஸ். ரமணா

    K.S.Ramanaa
    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-ramanaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தலைவாசல்

    2. உயிர் நிலையானதா?

    3. மெய் அழியாததா?

    4. உயிர்மெய் ஒரு திருக்கோயில்

    5. உயிர்மூச்சு கட்டுப்படுமா?

    6. பிறவி வினையை

    7. ஆதிசித்தர் சிவனே!

    8. அட்டாங்க யோகமே அறவழியாய்!

    9. உள்ளம் பெருங்கோயில்

    10. அட்டமா சித்தி

    11. பரகாயப் பிரவேசம்

    12. சித்த ரகசியம்

    13. நோய் நாடி

    என்னுரை

    வள்ளுவரின் கூற்றுப்போல சொல்வது யாவர்க்கும் எளிது; ஆனால் சொன்ன வண்ணம் செய்வது என்பது அரிது.

    ஆனால் சித்தர்கள் சொன்னதைச் செய்து புகழுடம்பு எய்தியவர்கள்.

    மனித சமூகத்திற்கு நல்லன பயக்கும் நல்ல அறவழிகளை எழுதி, இயம்பிச் சென்றார்கள்.

    சித்த ரகசியம் என்னும் இந்த நூல் சித்தர்கள் நெடுநாள் வாழ்ந்ததற்கான ரகசியம் என்ன என்பதை வாசிக்கும் போது உணர்வீர்கள்.

    என்றும் அன்புடன்

    கே.எஸ்.ரமணா

    சென்னை-83

    1. தலைவாசல்

    அனைத்து உயிர்களிலும் மேம்பட்டது மனித உயிர். நம் உடலில் உயிர் இருக்கும் வரை தான் மாலை, மரியாதை எல்லாமே! உடலை விட்டு பிரிந்தால்? இற்றுப்போன கட்டையாகிறது உடல்.

    அந்த உயிரை நாம் எப்படிப் பேணிப் பாதுகாக்க வேண்டும்? கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என அலைந்துவிட்டு இறுதியில் ’சங்கரா... சங்கரா... என்றால் முக்தி கிடைக்குமா?

    உயிரை துச்சமாக நினைக்க முடியாது. இயற்கையின் படைப்பே அதனதன் உயிரை அதுவே காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டும் என்பதே! இதற்கு ஒரு கதை கூறுவார்கள்.

    ஒரு மானை புலி அடிக்கத் துரத்தும்போது, மான் தன்னால் முடிந்தவரை வேகமாக ஓடி, உயிரைக் காப்பற்றிக் கொள்ள முயலும். ஆனால் புலியோ ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடி, தன்னால் முடியாதபோது நின்றுவிடும். காரணமென்ன? புலிக்கு மான் கிடைத்தால் ஒருவேளை உணவுதான்; ஆனால் மானிற்கோ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உயிர் பயம் தான்!

    அத்தகைய உயிரை எப்படி பேணிக் காக்க வேண்டும் என்று நமக்கு ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டுச் சென்றவர்கள் தான் சித்தர்கள்.

    எளிமையாகவும் இயற்கையோடும் இணைந்து வாழ்ந்து, மானுடர்கள் ஆரோக்ய வாழ்வு வாழ சிந்தித்தவர்கள் தான் அவர்கள்.

    சாதி, சமயம், இனம், மொழி என்று தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளாது, மானுடம் உயர வழி செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

    இந்நூலை வாசிக்க நுழையும் முன்பு, நீங்கள் ஒரு இன, மொழி, மதமற்ற மனதோடு திறந்து வாசியுங்கள்.

    அவர்கள் விட்டுப்போன நற்செயல்களில் ஒன்றையோ அல்லது இரண்டையோ நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பயின்று பாருங்கள். பலனளிக்கின்றதா என்பதை நீங்களே உய்த்துணர்ந்து வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் நோய்களின் தாக்கமின்றி நீண்ட நாள் பூமியில் வாழலாம். உயிரும் முக்கியம். மெய்யும் முக்கியம்!

    சித்தர்கள் என்றாலே ஒரு பொதுவான சமுதாயச் சிந்தனையோடு சமுதாயம் உயரப் பாடுபட்டவர்கள்;மனித குலத்தை சீர் கெடாது வைக்க சீர்திருத்தவாதிகளாக

    இருந்தவர்கள் என்ற ஒரு பொதுவான விளக்கம் தரலாம். அவர்கள் எம்மதத்திற்கும், எவ்வினத்திற்கும் பொதுவானவர்கள், வாழ்வியலில் மனித இனத்திற்கு நெறி காட்டுவதற்காக தோன்றிய வழிகாட்டிகள்.

    சமயங்கள் மறைந்து மதங்களாக மாறிய போது மனித இனத்தில் இனப்பூசலும், போராட்டத்தில் மனித இனம் சிக்கிஅழிந்துவிடக்கூடாதே என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள்,

    ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது கரைகள் உடைந்து வேளாண்மை பாழ்பட்டு வீணாகக்கூடாதே என்றஎண்ணத்தில் கரையைப் பலப்படுத்தும் நல்லுறவில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களே சித்தர் பெருமக்கள்.

    பொதுவாகச் சித்தர்கள் சமயத்திற்கு பொதுவானர்கள் என்றாலும், ஒவ்வொரு சமயத்திலும் அந்தத்த மொழிக்கேற்ப சித்தர் குறிக்கும் சொற்கள் கிடைக்கப் பெறுகின்றன.

    தமிழ்மொழியை எடுத்துக்கொண்டால் அறிவர் என்றும், வடமொழியை எடுத்துக்கொண்டால் ஞானியர் என்றும், ஆங்கிலத்தில் அவர்களை மெய்யுணர்வாளர், முகமதிய மதத்தில் சூரியர், மறை மெய்ஞானியர் என்றும் (ளுநநச) சீனத்தில் தாவோ, (இயற்கைவாணர்) என்றும் மக்களால் குறிக்கப்படுகின்றன.

    தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கனியன் பூங்குன்றனாரின் கருத்துப்போல சமயங்களில் மத இனத்தை கூறு போட்டு பகைமையை வளர்த்து விடுமோ என்று அஞ்சியே சித்தர்கள் தோன்றி சின்னா பின்னமடைய இருந்த மனித இனத்தைப் பக்குவப்படுத்தினர்.

    அதற்காகவே திருமூலர் என்ற சித்தர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்; நமனில்லை; நானமே என்று மக்கட்திரளைப் பார்த்து அன்பென்னும் தனையால்அகப்படும் பொருளாய் இறைவனை நினையுங்கள் என்றார்.

    மனித மனங்களில் அன்பெனும் பயிரை வளர்த்துஆசையென்னும் தீயை அணைக்க" நினைத்தனர் சித்தர்கள். உடலைப் பேண வழிமுறைகளைத் தெரிவித்தனர்.

    சித்தர் சிவத்தைக் கண்டவர் என்றே மக்கள் நம்பினர்; அவர்தம் வழி நடந்தனர். ஆரம்ப நிலையிலிருந்தே பதினென் சித்தர்கள் என்றே எல்லா நூலிலும் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் ’பதினென் சித்தர்களை வகைப்படுத்துவோர் தான் ஒவ்வொரு விதமான தகவல்களைத் தருகின்றனர்.

    காரணம் சித்தர் தம் செயல்கள் மனித இனம் மேம்பட அன்றி அவர்தம் செயல்கள் யாவும் அவர்கள்விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்பு (நுபடி) யாரிடமுமில்லை. அவர்கள்தான் சித்தர்கள் என்று யாருக்கும் தெரியாது. செயற்கரிய செயலொன்றினை அவர்கள் செய்யும்போது அவரது வழித்தோன்றல்களான சீடர்கள் தெரிவிக்கும்போதுதான் வெளியுலகிற்கே தெரிய வருகிறது. அதுவரை, அது ரகசியம்தான். அது மறைத்து வைப்பதற்காக அல்ல. சுயவிளம்பரம் தேவையில்லை என்பதற்காகத்தான்.

    ஏன் மனித வாழ்வில் கேலி பேசுபவர்கள் தான் அதிகம்! அவர்கள் சித்தர்கள் பித்தர்கள் என்றே உளருவர். ஆனால் உண்மையிலேயே சித்தர்கள் மானுட வாழ்வை மேன்மையுறச் செய்ய வந்த வித்தகர்கள் என்பது அவர்களின்அறியாமையே தவிர ஆழ்ந்தறிந்த உண்மையல்ல.

    கற்றாரை கற்றோரே காமுறுவர் என்பதைப் போல்சித்தரையுணர்ந்து அவர்தம்

    வழித்தோன்றல்கள்கூட சித்தர்கள் தான். எனவே பதினெட்டு சித்தர்களின் வகைப்படுத்திய பட்டியலைக் காண்பவர்கள், பெயர் மாற்றத்தைப் பார்த்து விட்டு உண்மையில்லையோ என்று அஞ்சவில்லை.

    காரணம் தன் பெயர் விளம்பரப்படுத்துவதை விரும்பாதசித்தர், தன் வழித்தோன்றல் (சீடர்) மூலம் பிரபலமடையும்போது, வழித்தோன்றலே ஒரு பூர்ணபக்குவம் பெற்ற சித்தராயிருப்பார். எனவே வழித்தோன்றலின் பெயர் கூடபட்டியலில் காணப்படும்.

    எது எவ்வாறு இருப்பினும் நமக்கு சித்தர்கள் எத்தனை பேர் என்பதை விட, இவர் சித்தராயிருந்தாரா இல்லையா என்பதை ஆராய்வதை விட்டு விட்டு, அவர்கள் விட்டுச் சென்ற பாடல்கள் மூலம் நன்னெறி வழிகளைக்கடைப்பிடித்து நோயற்ற வாழ்வை தர்ம வழியில் வாழ்ந்து, சிவ பாதம் அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டும்நம் மனதுள் எழவேண்டும். அதுதான் நாம் சித்தர்கள் கண்ட அறநெறியைக்கடைப்பிடிக்கிறோமா என்பதை முடிவு செய்யும்.

    மூடப்பழக்க வழக்கங்களை கை விட்டு, நால்வகை வர்ணங்களும், நாலாயிரம் சாதிகளும், சாதி குல ஆச்சாரங்களும் எழாதவாறு பின்னுக்குத் தள்ளி, சித்தர்கள் கண்ட அறநெறியை வாழ்வில் கடைப் பிடிப்பவர்களால்தான் மனித சமூகம் முன்னேற முடியும்.

    சித்தர்களைப்

    Enjoying the preview?
    Page 1 of 1