Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal
Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal
Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal
Ebook188 pages2 hours

Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உடல் ஆரோக்கியம் என்றால் என்ன, என்னென்ன காரணங்களினால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது என்பதை விளக்கி முடித்த பிறகு உடலையும் மனதையும் ஆரோக்கியமாக நாம் வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இந்நூல் மூலம் விளக்குகிறார், ஆசிரியர்...

‘நோயில்லா வாழ்வு பெற சில இரகசியங்கள்’ என்ற இந்த ஆரோக்கிய வழிகாட்டி ஒன்று இருந்தாலே போதும், சிறப்பான முறையில் வாழலாம் என்பது உறுதி!

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580151007997
Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal

Read more from S. Nagarajan

Related to Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal

Related ebooks

Reviews for Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    நோயில்லா வாழ்வு பெற சில இரகசியங்கள்

    Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொறுப்புத் துறப்பு (Disclaimer)

    இந்த நூலில் உள்ள அனைத்துத் தகவல்களும் உடல்நலம் சார்ந்த விஷயம் பற்றி நல்லெண்ணத்துடன் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொருவரின் உடலும் தனிப்பட்ட தன்மை கொண்டிருக்கும் என்பதால் இதில் உள்ளவற்றைக் கடைப்பிடிக்க எண்ணுவோர் தங்கள் குடும்ப மருத்துவருடன் கலந்தாலோசித்து அவர் கூறும் அறிவுரைப் படியே நடந்து கொள்ள வேண்டும்.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. ஆரோக்கியம் பெற அருமையான வழி!

    2. ஆரோக்கியம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது?!

    3. 100 இரகசியங்கள் - நல்ல வாழ்க்கையைக் கவர்ந்து இழுத்து அமைத்துக் கொள்ள!

    4. நூறு ஆண்டு ஆயுளை ஆரோக்கியத்துடன் தரும் அதர்வ நிதி!

    5. ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம்!

    6. ஒரு கிராம் வைரஸ் : 750 கோடி மக்களின் பயத்திற்குக் காரணம்!

    7. பலாப்பழம் சாப்பிடலாம், டயபடீஸ் இருந்தாலும்!

    8. கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்!

    9. ஆசார்ய சரகர்: ஆயுர்வேத நூல் அருளிய மஹான்!

    10. கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் சில!

    11. பதார்த்த குண சிந்தாமணி!

    12. மூளைக்கு வல்லாரை, முடி வளர நீலிநெல்லி : அருமையான மூலிகைப் பாட்டு!

    13. ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!

    14. சைவ உணவு சாப்பிடுவது தப்பா?

    15. நீடித்த ஆயுளைத் தரும் கார்போஹைட்ரேட்!

    16. பேரீச்சம்பழங்கள் தரும் அற்புத ஆரோக்கியம்!

    17. நோய்களைத் தீர்க்கும் நவரத்தினங்கள் : பதார்த்த குண சிந்தாமணி

    18. ஆரோக்கியமான மனம்! ஆரோக்கியமான உடல்!! – 1

    19. ஆரோக்கியமான மனம்!

    ஆரோக்கியமான உடல்!! – 2

    20. அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 1

    21. அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 2

    22. 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ... அறிவியல் உரசிப் பார்த்து அதிசயிக்கும் யோகா!

    23. நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 1

    24. நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2

    25. உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? - 1

    26. உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? - 2

    27. உங்களுக்கு குளூட்டன் ஒவ்வாமையா? இதோ நிவாரணம்!

    28. மலர் மருத்துவம் பற்றிய சில உண்மைகள்!

    29. மலர் மருத்துவம்!

    30. நல்ல வாழ்க்கையின் அடிப்படை இரகசியம்!

    31. காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பதால் ஏற்படும் நற்பலன்கள்!

    அணிந்துரை

    C:\Users\INTEL\3D Objects\picture\Kanaiyazhi\Aiyar.JPG

    திரு. ச. நாகராஜன் எழுதிய ‘நோயில்லா வாழ்வு பெற சில இரகசியங்கள்’ என்ற இந்த நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற மூன்று பாகங்களைத் தொடர்ந்து இது நான்காவது பாகமாக அமைகிறது.

    நமது வழக்கப் பிரகாரம் பெரியோர்களை நாம் வணங்கும் போது எல்லோரும் எப்படி ஆசீர்வாதம் பண்ணுவார்கள்? தீர்க்காயுஷ்யமான் பவ - நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக;

    தீர்க்க சுமங்கலி பவ - நீங்கள் கணவனுடன் நீடித்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று இப்படி ஆசீர்வதிப்பர்.

    ஆனால் தற்காலத்தில், இந்த வாழ்த்துக்கள் எல்லாம் பயன் பெறாது; நடைமுறையில் ஒத்து வராது. ‘ஆரோக்யவான் பவ’ - ‘ஆரோக்கியத்துடன் வாழ்வாயாக’ என்ற ஆசீர்வாதமே தற்சமயம் நமக்குத் தேவைப்படுகிறது.

    நூற்றுக்கு 95 பேர்கள் இன்று மாத்திரை மூலமாகவே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் நமது உடலும் மனமும் தான். இதனைப் பல்வேறு விதமான ஆங்கில ஆசிரியர்களின் கட்டுரைகள் மூலமாக விளக்குகிறார் ஆசிரியர்.

    உடல் ஆரோக்கியம் என்றால் என்ன, என்னென்ன காரணங்களினால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது என்பதை விளக்கி முடித்த பிறகு உடலையும் மனதையும் ஆரோக்கியமாக நாம் வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார்.

    இதையும் மீறி நமக்கு வியாதிகள் வந்து விட்டால் நாம் என்ன செய்வது?

    முதலில் ஆயுர்வேதத்தை விளக்கிய பின் அந்த ஆயுர்வேத முறைப்படி வியாதிகளை எப்படி எல்லாம் தீர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

    எனக்கு ஆயுர்வேதம் பிடிக்காது; சித்த வைத்தியம் தான் பிடிக்கும் என்றால் அப்படி சித்த வைத்தியம் மூலமாக நோய்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்பதை ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்ற புத்தகத்தை முதலில் விளக்கி விட்டு,  எந்த வியாதி வந்தாலும் சரி, அதன் மூலமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்று சித்த வைத்தியத்தின் படி சொல்கிறார்.

    ஆயுர்வேதமும் வேண்டாம்; சித்த வைத்தியமும் வேண்டாம்; மருந்து முறைகளே வேண்டாம் என்றாலும் வர்ம முறையின் படி - அகுபிரஷர் மூலமாகவும் வியாதியைத் தீர்த்துக் கொள்ளலாம் என மிக அருமையாக விளக்குகிறார்.

    இதைவிட அருமையாக வேறு யாராலும் சொல்ல முடியாது.

    இது போக, ஆங்கில (BACH)  பாச் மலர் மருந்து என்று ஒன்று இருக்கிறது. அந்த மலர் மருந்துகளை உபயோகித்து நமது வியாதிகளை மட்டுமல்ல; மனம் மட்டுமல்ல; ஆரோக்கியம் மட்டுமல்ல; நமது வாழ்க்கை முறை எப்படி சிறப்பாகச் செயல் பட அந்த மருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

    அதில் மிக முக்கியமான ஒன்று ரெஸ்க்யூ ரெமடி (RESCUE REMEDY) அது ஒன்று இருந்தாலே போதும்; அது எப்படிப்பட்ட வியாதியையும் தீர்க்கும் கை கண்ட மருந்து. இதில் ஆபரேஷன் இல்லை; பின் விளைவு இல்லை. அப்படிப்பட்ட மலர் மருந்தை வைத்துக் கொண்டால் போதும்; நாம் சுகமாக வாழலாம் என்பதும் கூறப்பட்டிருக்கிறது.

    ஆரோக்கியத்திற்கான இந்த வேத புத்தகம் நம் கையில் இருந்தால் நமக்கு எந்த விதமான வியாதியும் வராது; வந்தாலும் அதை உரிய  முறையில் போக்கிக் கொள்ள வழிகள் உண்டு; இதை நாம் கடைப்பிடிப்பதோடு நமது நண்பர்களிடமும் கூறினால் இந்த சமுதாயமே சிறப்பாக வாழ முடியும் என்ற குறிக்கோளுடன் இதை ஆசிரியர் எழுதி இருக்கிறார்

    ஆகவே, ‘நோயில்லா வாழ்வு பெற சில இரகசியங்கள்’ என்ற இந்த ஆரோக்கிய வழிகாட்டி ஒன்று இருந்தாலே போதும், சிறப்பான முறையில் வாழலாம் என்பது உறுதி!

    ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தைத் தம்மிடம் வைத்திருப்பதோடு, தங்கள் நண்பர்களிடமும் சிபாரிசு செய்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எனது நல்லெண்ணத்தை நானும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

    வாழ்க வளமுடன்!

    சென்னை

    7-1-2022

    ச. சீனிவாசன்

    என்னுரை

    ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுவே வேத நெறி!

    ‘ஜீவேம சரத சதம்’ - நூறு ஆண்டு வாழ்வோமாக என்பதோடு நலமுடன் வாழ்வோமாக என்ற வேத பிரார்த்தனையை விரும்பாதோர் இல்லை.

    இந்த வகையில் நமது அற நூல்களும் வைத்திய நூல்களும், சுட்டிக் காட்டும் வழிகளுடன் மேலை நாட்டு ஆசிரியர்களின் நவீன வழி முறைகளும் இன்றைய நிலையில் நலமுடன் வாழ நமக்குத் தேவைப்படுகின்றன.

    நோயற்ற வாழ்க்கைக்கான சில அடிப்படை உண்மைகளை பல ஆண்டுகளாக கட்டுரைகளாக பல பத்திரிகைகளிலும் இணையதள இதழ்களிலும் எழுதி வருகிறேன். ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற முதல் மூன்று பாகங்களைத் தொடர்ந்து இந்த நூல் வெளியாகிறது.

    இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு என்னை கௌரவித்த தினத்தந்தி அதிபர் திரு S.பாலசுப்ரமணியன் ஆதித்தன் அவர்களுக்கும், www.tamilandvedas. Com திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களுக்கும், ஹெல்த்கேர் ஆசிரியர் திரு R.C. ராஜா அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு எனது நன்றி.

    இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரையை நல்கி என்னைக் கௌரவித்திருக்கும் திரு ச. சீனிவாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

    தொழில் துறையில் அவர் ஒரு டெக்ஸ்டைல் எஞ்ஜினியர்; தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரும் நூற்பாலையில் மனித வள மேம்பாட்டிற்கான பயிற்சியாளராகத் திகழ்ந்து ஓய்வு பெற்றார்.

    கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் அவர் பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கும் மேலாக, உயர் நிறுவனங்களின் மேலாளர்களிலிருந்து சாமானிய தொழிலாளர் வரை, அவர்கள் மேம்படுவதற்கான பயிற்சி தந்து அவர்களை உயர்த்திக் காட்டிய வழி காட்டி. பல்லாயிரக் கணக்கில் ஜோக்குகளைத் தொகுத்து வைத்திருப்பவர். நூற்றுக் கணக்கில் நகைச்சுவை நூல்களைச் சேகரித்திருப்பதோடு அவற்றை அவ்வப்பொழுது உரிய முறையில் பயன்படுத்தும் நகைச்சுவை நிபுணர். சித்த வைத்தியம் உள்ளிட்ட பல கலைகளைக் கற்ற பன்முகப் பரிமாணம் கொண்ட வித்தகர். பண்பாளர். சித்த மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர். மூலிகைகளையும் மருந்து வகைகளையும் ஆராய்ந்தவர்.

    அத்துடன் மட்டுமின்றி ஒருவரை நேரில் பார்த்தவுடன் அவருடைய ஜாதகம் உள்ளிட்ட எதையும்  கேட்காமலேயே face reading  என்னும் முகம் பார்த்து அனைத்தும் அறியும் சாஸ்திரப் படி, அவருடைய குறை என்ன, பிரச்சினை என்ன என்பதை உள்ளுணர்வாற்றலால் கண்டு அதைச் சொல்லி அதை தீர்க்கும் வழிகளையும் பரிந்துரைப்பவர். அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியின் அனுக்ரஹத்தைப் பெற்றதோடு அவர் உபதேசத்தின் படி அறுபது ஆண்டுகளாக தினமும்

    Enjoying the preview?
    Page 1 of 1