Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arutperunjothi Agaval
Arutperunjothi Agaval
Arutperunjothi Agaval
Ebook245 pages3 hours

Arutperunjothi Agaval

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வள்ளல் பெருமான் தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சுமார் 6000 பாடல்களிலும் அளவற்ற உரைநடை வரிகளிலும் எடுத்தியம்பியுள்ளார். அவற்றின் சாரத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த எண்ணிய பெருமான் ஒரே இரவில் எழுதியருளியது இவ் அருட்பெருஞ்ஜோதி அகவலாகும்.

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580123007863
Arutperunjothi Agaval

Read more from C. Seganathan

Related to Arutperunjothi Agaval

Related ebooks

Reviews for Arutperunjothi Agaval

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arutperunjothi Agaval - C. Seganathan

    https://www.pustaka.co.in

    அருட்பெருஞ்ஜோதி அகவல்

    (எளிய இனிய உரை)

    Arutperunjothi Agaval

    (Eliya Iniya Urai)

    Author:

    சி. செகநாதன்

    C. Seganathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/c-seganathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    திருவருட்பிரகாச வள்ளலார்

    திருச்சிற்றம்பலம்

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    எல்லாமுடையானுக்கு விண்ணப்பம்

    எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

    எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!!

    திருச்சிற்றம்பலம்

    புனைந்துரை

    இன்றைய உலகம் போரும் பூசலும் ஆகிய புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. அணுகுண்டு அச்சத்தில் மனிதன் நித்திய கண்டம் பூரண ஆயுசாக வாழ வேண்டியுள்ளது. அன்பைச் சுமக்க வேண்டிய மதங்கள் ஆயுதங்களை ஏந்துகின்றன. மதத் தீவிரவாதிகள் நினைத்த நேரத்தில் நினைத்த அழிவைச் செய்து விடுகின்றனர். ஒரு முறை இப்பூப்பந்து பொசுங்கிச் சாம்பலாகி... அதன் பின் மீண்டும் உயிர்கள் பரிணாமம் பெறும்போது மட்டுமே இனி மனிதநேயம் மலர வாய்ப்புண்டு என்று சிலர் கூறுகின்றனர். அந்த அளவுக்குச் சாதிகளாலும், இனங்களாலும், சமயங்களாலும் மனித குலம் சீரழிந்து வருகிறது.

    இச்சீரழிவிலிருந்து விடுபட ஒரே வழி வள்ளலார் வகுத்த சன்மார்க்கமேயாகும். மனித நேயமே கேள்விக்குறியாயிருந்த கால கட்டங்களில் உயர்நேயம் கண்ட உத்தமர் அவர். சமய நல்லிணக்கம் என்பதே பகற்கனவாயிருந்த சூழலில் சமயங்களை விட்டொழித்து விடுதலை பெற வேண்டும் என்ற உச்சத்தைத் தொட்ட மகான் அவர். மதங்களும் சமயங்களும் இனி எப்போதும் மனிதகுல ஒற்றுமைக்கு உதவாது என்பது அவர்தம் துணிவாகும். சமய விடுதலையே உண்மையான விடுதலையும், வீடுபேறும் என்பது அவர்தம் முடிந்த முடிவாகும். மனிதன், குறிப்பாக இந்தியன் ஒருவன் சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆச்சார அநுட்டானங்கள் என்னும் இவற்றிலிருந்து விடுபட்டால் எவ்வளவு சுமைகள் அவன் தலையிலிருந்து இறக்கி வைக்கப்படுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணற்ற கடவுளர்கள். அவை தொடர்பான சடங்குகள் என நம்மை அழுத்திக் கொண்டிருக்கும் அனைத்துச் சுமைகளையும் எடுத்தெறிந்து விட்டு நம்மை விடுதலை பெறச் செய்த பெருமை வள்ளல் பெருமானுக்கே உரியதாகும்.

    கருணையே வடிவான பெருஞ்சுடராக இறைவனைக் கண்டார் பெருமான். அருட் பெருஞ்ஜோதி என்பதன் பொருள் இதுவே, அவ் இறை, ஒப்பற்ற பெருங்கருணையைப் பொழிந்து கொண்டுள்ளது என்பதை உணர்த்தவே 'தனிப்பெருங்கருணை’ என்றும் கூறுகிறார். ‘அருட் பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’ என்பது இறையை எளிமையாகச் சுட்டிய மகாமந்திரமாகும். அப்பெருஞ்சுடரே, நம் உயிருள்ளும் ஒளிர்ந்து கொண்டுள்ளது. அது பூரணமாய் பொலிந்து ஒளிர நாமும் இறையைப் போல கருணை வடிவாக மாற வேண்டும்.

    கருணை வடிவான கடவுளை கருனை ஒன்றினால் மட்டுமே அடைய முடியும். இதுவே சன்மார்க்கமாகும். அதனால் தான் உயிரிரக்க கோட்பாட்டையே (ஜீவ காருண்யம்) தமது சன்மார்க்க நெறியின் மூல ஆதாரமாகக் கொண்டார் பெருமான். இரக்கம் இல்லாதவன் வேறு எவ்வழியிலும் (பக்தி, யோகம், ஞானம், தவம், மந்திரம், தந்திரம், யாகம்) இறையருளைப் பெற முடியாது என்பது பெருமானது துணிவு.

    வள்ளல் பெருமான் தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சுமார் 6000 பாடல்களிலும் அளவற்ற உரைநடை வரிகளிலும் எடுத்தியம்பியுள்ளார். அவற்றின் சாரத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த எண்ணிய பெருமான் ஒரே இரவில் எழுதியருளியது இவ் அருட்பெருஞ்ஜோதி அகவலாகும்.

    செறிவும் நுட்பமும் சேர்ந்த அகவல் அடிகளை ஒன்றுவிடாமல் ஓதுவது சன்மார்க்கிகளின் அன்றாடக் கடமையாகும். ஆனால் அனைவரும் பொருளுணர்ந்து ஓதுகிறார்களா என்பது ஐயமே. ஐயம் நீக்கி அனைவரும் பொருள் உணர்ந்து ஓதவேண்டும் என்ற அவாவின் வெளிப்பாடே இவ் எளிய உரை நூலாகும். அண்மையில் வெளிவந்த சரவணானந்தா அவர்களின் உரை உட்பட அகவலுக்கு ஆறுக்கு மேற்பட்ட உரைகள் வந்துள்ளன. அவை அனைத்தும் ஆழ்ந்த படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் உரிய சிறப்புடையன.

    இது எளிய உரை பாராயணம் செய்பவர்கள் உடனுக்குடன் தங்கள் ஐயங்களை நீக்கிக் கொண்டு, பொருள் புரிந்து ஓத இந்நூல் உதவிடும். அகவலைப் புனித நூலாகக் கருதும் அனைவரது கரங்களிலும், தவழ வேண்டும் என்ற பெருவிருப்போடு இந்நூல் வெளிவருகிறது.

    இத்தகைய உயரிய கருணை உள்ளத்தோடு, உரை வரைந்தவர் அருட்பா அவதானி என்று போற்றப்படுகின்ற சி. செகநாதன் ஆவார். அருட்பா முழுவதையும் ஓதி உணர்ந்தும், அவ்வப்போது பிறர்க்குரைத்தும் அத்துடன் அமையாது அருட்பாவையே வாழ்வியல் நெறியாகவும் வகுத்துக் கொண்டவர் அவர். அகவலுக்கு உரைகாண வேண்டி கடுந்தவம் மேற்கொண்டவர்.

    இவ்வுரை எழுதி முற்றுப்பெறும் வரை தொடர்ந்து பலநாட்கள் சொற்ப அளவு ஒருவேளை மட்டுமே உண்டு, ஆன்ம பசியுடனிருந்து, பெருமான் அருளுக்குப் பாத்திரமாகி முடித்திருக்கிறார்.

    ஒருவகையில் பேருரை எழுதுவது எளிது என்று கூடக் கூறலாம். சிற்றுரை எழுதுவது என்பது திட்ப நுட்பம் நிறைந்த செறிவான பணியாகும். அப்பணியினைப் பெருமான் அருளால் நேரிய முறையில் நிறைவாகச் செய்திருக்கிறார் அவதானி அவர்கள். எழுதி முடித்து ஏட்டளவில் உள்ள உரை அச்சேறி நூலாக வேண்டுமே என்ற கவலையினை அவதானி அவர்களிடம் கண்டேன். அவரிடம் அன்பு கொண்ட நண்பர்கள் ஒன்றுகூடிச் சிந்தித்து... வெளியீட்டுச் செலவினைப் பகிர்ந்து கொண்டோம். புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் சார்பில் இந்நூல் வெளிவரவேண்டும் என்ற கோரிக்கையைத் தலைவர் ந. முத்துக்கிருட்டிணன். அவர்கள் பரிவுடன் ஏற்றுக் கொண்டு தம் நிர்வாகிகளுடன் சேர்ந்து உதவி செய்தார்கள்.

    உரை செப்பமாகவும் திருத்தமாகவும் அமைய யானும் உரையாசிரியரும் புலவர் நா. சண்முகனாருடன் அமர்ந்து பலகாலும் கலந்துரையாடி வடிவமைத்தோம். அவ்வகையில் அவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    திருக்குறள் கையடக்கப் பதிப்புக்கள் பல்கிப் பெருகியது போல் அருட்பா அகவல் கையடக்க உரை நூலும் எதிர்காலத்தில் பெருக வேண்டும் என்பது எம் அவா பல்வேறு அரியஞானம் விளைக்கும் பணிகளுக்கிடையேயும் ஆசிஉரை வழங்கிச் சிறப்பித்த தவத்திரு ஊரன் அடிகளார் அவர்களுக்கும், அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த அருட்செல்வர் திரு. நா. மகாலிங்கம் அவர்கட்கும், வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்த ஔவை. து. நடராஜனார் அவர்கட்கும் எம் நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

    வள்ளலார் வழிநின்று

    வையகத்தை வாழ்விப்போம்

    அன்பன்

    பேராசிரியர். தா. மணி, எம்.ஏ.எம்.பில், பி.எட்.,

    OORAN ADIGAL தொலைபேசி: (04142) 359382 தவத்திரு ஊரன் அடிகள்

    POST BOX No. 2, VADALUR - 607 303

    Date: 03.05.2002

    ஆசியுரை

    திருச்சிற்றம்பலம்

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே!

    ஒளிநெறிப்பிழம்பு தவத்திரு. ஊரன் அடிகளார், வடலூர்.

    திருஅருட்பா ஆறு திருமுறைகளில் ஆறாம் திருமுறை சிறந்தது. ஆறாம் திருமுறையிலும் அருட்பெருஞ்ஜோதி அகவல் மிகவும் சிறந்தது. வள்ளற்பெருமான் தம் அகத்தேயும் புறத்தேயும் அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தைக் கண்டு, வடலூர் சத்தியஞான சபையை நிறுவி அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தைக் காட்டத் தொடங்கிய காலத்தில் பாடப்பெற்றது அருட்பெருஞ்ஜோதி அகவல். சிறந்த பாராயண நூல். அறம் பொருள் இன்பம் வீடு இந்நான்கையுமே அகவற்பாராயணம் தரும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்மீது தோத்திரமாகப் பாடியது என்றாலும் சாத்திரக் கருத்துகள் அனுபவ உண்மைகள் மிகப்பல அதிற் கூறப்பெறுகின்றன. அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓர் ஞான அனுபவக் களஞ்சியம். அகவலுக்கு உரை செய்தல் எளிய பணியன்று. மிக அரிய பணி. அப்பணியை அருட்கவி அரசு அருட்பா அவதானி, சொல்லேருழவர் சி. செகநாதன் அவர்கள் நன்கு செய்திருக்கிறார். சுருக்கமாக எழுதியிருப்பினும் தெளிவாக எழுதியிருக்கிறார். பலகாலம் ஓதி உணர்ந்த அனுபவம் தெரிகிறது. அன்பர்கள் இவ்வுரை நூலைப் பயின்று பொருள் புரிந்து அகவற்பாராயணம் செய்து பயன்பெறுவார்களாக. உரையாசிரியருக்கும் வாசகர்களுக்கும் எமது அன்பான வாழ்த்துகள்.

    வாழ்க! வாழ்க!!

    (ஊரன் அடிகள்)

    அருட்செல்வர்

    பொள்ளாச்சி. நா. மகாலிங்கம்

    தலைவர். சக்தி நிறுவனங்கள்

    சென்னை – 32

    அணிந்துரை

    ஜோதி மயம்

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    உலகுயிர்த் திரளெலாம் ஒளிநெறி பெற்றிட

    திருவருட்பிரகாச வள்ளற்பெருமான் அவர்கள் உலகுக்கு அளித்த அருட்கொடைதான் மேலே உள்ள மகாமந்திரம். நம் தெய்வத்தமிழ் மொழியில் அ.இ.உ எ.ஒ. இவ்வைந்தும் உயிர் எழுத்துக்கள். இதேபோல் ஆங்கிலத்திலும் A.E.I.O.U. என்பவைதான் வவ்வல்ஸ் என்று கூறுவார்கள். மேலே உள்ள மகாமந்திரத்தில் இவ்வைந்து உயிர் எழுத்துக்களும் இருப்பதை நாம் சிந்தித்து வந்தித்து உய்யலாம்.

    அருட்பெருஞ்ஜோதி

    அ = அ

    ர் + உ = ரு - உ

    ப் + எ = பெ - எ

    ச் + ஒ = ஜோ - ஒ

    த் + இ = தி - இ

    காணாபத்தியம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம் என்னும் அறுவகை சமயத்தில் உள்ள மந்திரங்களிலும், ஏழு கோடி மந்திரங்கள் என்று சொல்லக்கூடிய ஏழு வார்த்தைகளிலும், நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு என்று விரிந்து கொண்டே செல்லும் மலர்வழிபாட்டுப் போற்றி மந்திரங்களிலும் உயிர் எழுத்து ஐந்தும் அடங்கிய மந்திரம் கிடையவே கிடையாது. உயிர் எழுத்து ஐந்தும் இடம் பெற்றுள்ளதனால் தான் இது மகாமந்திரம் எனத் திகழ்கின்றது. வள்ளற்பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருஅகவல் மகாமந்திரத்தில் ஆரம்பித்து மகாமந்திரத்தில் நிறைவு பெறுகின்றது. திரு அகவலில் இம்மகாமந்திரம் 454 முறை இடம் பெற்றுள்ளது. தினசரி காலை, மாலை பாராயணத்திற்கு ஏற்ற ஒப்பற்ற பிரார்த்தனை நூல் சிவஞானபோதத்திற்கு மாதவச்சிவஞான முனிவர் எழுதிய உரை எப்படி மாபாடியம் ஆகத் திகழ்கின்றதோ. அது போல திரு அகவலுக்கு திண்டுக்கல் தயவுத்திரு சுவாமி சரவணானந்தா அவர்கள் திருவருளால் எழுதிய உரை திருவருட்பா திருஅகவலுக்கு மாபாடியம் எனத் திகழ்கின்றது. இது நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிஞர் பெருமக்களுக்கே உரியது. இந்நூலில் (சி. செகநாதன் அவர்களின் உரைநூலில்) இடம் பெற்றுள்ள உரை திருக்குறளுக்கு மு.வ. உரை போல மிக மிக எளிமையாக அமைந்துள்ளது. சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் நன்னூல் சூத்திரத்திற்கொப்ப இவ்வுரை சிறந்து விளங்குகின்றது. ஆன்ம நேயர்கள் தினமும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க பொருளுணர்ந்து ஓதி உய்வு பெற வேண்டும் என எம் சற்குருநாதர் திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் திருவடிகளை நீள நினைந்து இறைஞ்சுகின்றனம்.

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    வாழ்த்துரை

    டாக்டர் ஔவை நடராஜன்

    தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

    அண்ணா நகர், சென்னை

    வள்ளற்பெருமான் அருளிய அட்பெருஞ்ஜோதி அகவல் 1596 அடிகளைக் கொண்ட நெடிய அகவலாகும். அருட் பெருஞ்ஜோதி அகவலை ஒருமுறை ஓதினால், ஆயிரத்துக்கு மேற்பட்ட அளவுக்குச் ஜோதியை வணங்கிய ஞானப் பயன் விளையும் என்று சன்மார்க்க சான்றோர்கள் கூறுவர். எளிமையாக அமைந்த தொடர்களால் வலிமையான பொருளாழம் உடையதாக அமைந்த திறத்தை அருட்பெருஞ்ஜோதி அவகலில் நாம் கண்டுணரலாம். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் பேரூரைகளைப் பலர் எழுதியுள்ளனர். திருக்குறள் தெளிவுரை போல, அருட்பெருஞ்ஜோதி அகவலுக்குச் சுருக்கவுரையாக இந்த உரை அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். தெளிந்த சுருக்க உரை என்றாலும், அரிய நுணுக்கங்களும் இவ்வுரையில் ஆங்காங்கே மிளிர்வதைக் கண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1