Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thelivu Peru Om
Thelivu Peru Om
Thelivu Peru Om
Ebook382 pages2 hours

Thelivu Peru Om

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆன்மிக சந்தேகங்களுக்கு ஓர் அரிய தீர்வு

சந்தேகம் எழுவது என்பது ஞானத்தின் அறிகுறி. அதாவது ஒரு சந்தேகம்தான் ஒரு விஷயத்தைப் பற்றி முற்றிலுமாக அறிந்துகொள்ள பயணிக்கும் பாதையின் சாவி. 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்ற திருக்குறள் அதைத்தான் சொல்கிறது.

கல்வி நாட்களில் ஆசானிடம் கேட்கப்படும் கேள்விகள்தான், எழுப்பப்படும் சந்தேகங்கள்தான். தேர்வில் அதிக மதிப்பெண்களுக்கும், அதற்கும் மேலாக அறிவுத்திறன் வளர்வதற்கும் ஆதாரமாகும். சில சந்தேகங்களுக்குக் கிடைக்கும் தெளிவுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இருக்காது. இன்னும் கூடுதல் விளக்கங்களை நம் அறிவு கேட்கும். அப்போது மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பதில்களைத் தேடிப்போகும் போது, ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகளைக் கேட்கும் வாய்ப்பும். அந்தக் கருத்துகளை அளிப்பவரின் அறிமுகமும் கூடுதல் ஆதாயமாக அமையும். ஆகவே சந்தேகம் எழுவது என்பது பலவிதமான நன்மைகளை அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது.

இந்தத் தொடரில் பல வாசகர்கள் பங்குகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதில்களை சேகரித்துத் தரும் வகையில் எங்களைப் பணித்ததற்கு நன்றி.

-

பிரபுசங்கர்

பரணிகுமார்

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580130606377
Thelivu Peru Om

Read more from Prabhu Shankar

Related to Thelivu Peru Om

Related ebooks

Reviews for Thelivu Peru Om

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thelivu Peru Om - Prabhu Shankar

    https://www.pustaka.co.in

    தெளிவு பெறுஓம்

    ஆன்மிக சந்தேகங்களுக்கு அற்புத விளக்கங்கள்

    Thelivu Peru Om

    Aanmeega Santhegangalukku Arputha Villagangal

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆன்மிக சந்தேகங்களுக்கு ஓர் அரிய தீர்வு

    சந்தேகம் எழுவது என்பது ஞானத்தின் அறிகுறி. அதாவது ஒரு சந்தேகம்தான் ஒரு விஷயத்தைப் பற்றி முற்றிலுமாக அறிந்துகொள்ள பயணிக்கும் பாதையின் சாவி. 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்ற திருக்குறள் அதைத்தான் சொல்கிறது.

    கல்வி நாட்களில் ஆசானிடம் கேட்கப்படும் கேள்விகள்தான், எழுப்பப்படும் சந்தேகங்கள்தான். தேர்வில் அதிக மதிப்பெண்களுக்கும், அதற்கும் மேலாக அறிவுத்திறன் வளர்வதற்கும் ஆதாரமாகும்.

    சில சந்தேகங்களுக்குக் கிடைக்கும் தெளிவுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இருக்காது. இன்னும் கூடுதல் விளக்கங்களை நம் அறிவு கேட்கும். அப்போது மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பதில்களைத் தேடிப்போகும் போது, ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகளைக் கேட்கும் வாய்ப்பும். அந்தக் கருத்துகளை அளிப்பவரின் அறிமுகமும் கூடுதல் ஆதாயமாக அமையும். ஆகவே சந்தேகம் எழுவது என்பது பலவிதமான நன்மைகளை அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது.

    இங்கு சந்தேகம் என்று குறிப்பிடுவது, ஒரு விஷயத்தைக் குறித்த தேடலை, மேன்மேலும் அறிந்துகொள்ளுதலை, அறிவை மெருகூட்டுதலை செழுமையாக்கும் கருவி. இது பொதுவாக கல்வி சார்ந்தாந்தகவோ, நடைமுறைப் பழக்கங்கள் சார்ந்ததாகவோ, அல்லது முன்னோர் விட்டுச்சென்ற சில குறிப்புகள் குறித்த தேடலாகவோ அமையும்.

    அந்த வகையில் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் எழும் சந்தேகங்களுக்குக் கிடைக்கும் தெளிவுகள், முன்னோர்கள் வகுத்துத் தந்த இறைவழிபாட்டு நடைமுறைகளை மேலும் புது நம்பிக்கையுடனும் மேற்கொள்ள உதவும். தீர்மானமாகக் கிடைக்கும் ஒரு பதிலால் எது சரி, எது தவறு என்ற விவாதத்துக்கு முற்றுப்புள்ளியும் வைக்க முடியும்.

    அந்த வகையில் 'தினகரன்' குழுமத்தின் 'ஆன்மிகம் பலன்' மாத இதழில் வெளியான ஆன்மிகக் கேள்வி-பதில்களைத் தொகுத்து உருவானதே இந்த நூல், திரு. பிரபுசங்கர் மற்றும் திரு. பரணிகுமார் இருவரும் பல்வேறு அறிஞர்கள், மகான்களைச் சந்தித்தும் அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் அந்தப் பதில்களைத் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம் ஓர் ஆன்மிகப் பொக்கிஷம் என்றால் மிகையாகாது.

    - ஆசிரியர்

    சந்தேகப்பட்டால்தான் தெளிவு கிடைக்கும்!

    வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள்:

    ஒரு மகான் உலக நன்மைக்காக அடிக்கடி யாகம் வளர்த்து இறைப்பணியில் ஈடுபடுவார். யாகத்திற்குப் பயன்படக்கூடிய நெய், அரிசி, பருப்பு முதலான பொருட்களை கிடங்கில் சேமித்து வைத்திருந்தார். அந்தப் பொருட்களை சுவைக்க ஒரு எலிக்கூட்டம் புறப்பட்டது. உணவுப் பொருட்கள் மட்டும் என்றில்லாமல், யாகத்தீயில் போடுவதற்காக வைத்திருந்த பட்டுத்துணிகளையும் அந்த எலிகள் கடித்து நாசம் செய்தன

    இதைப் பார்த்த மகான் அவற்றின் தொல்லையை ஒழிக்க ஒரு பூனையைப் பிடித்து வந்தார். அவரது ஆசிரமத்துக்குள் பூனை வந்ததுமே எலிகளின் கொட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, முற்றிலும் ஒழிந்தே போனது.

    மகான் நிம்மதி அடைந்தார். இனி எந்தப் பொருட்சேதமும் இல்லாமல் யாகதிரவியங்கள் காக்கப்படும் என்று நம்பினார். ஆனால் கொஞ்ச நாளிலேயே பூனையின் அட்டகாசம் அதிகரித்தது. அது மிகுந்த உரிமையுடன் யாக நடவடிக்கைகளுக்கு இடையூறாகக் குறுக்கே, குறுக்கே பாய்ந்தது! எலிகளை விரட்டியது. தொடர்ந்து பூனையின் இத்தகைய சேவை தமக்குத் தேவை; ஆனால் இப்படி குறுக்கீடு செய்கிறதே என்று யோசித்த மகான், ஒரு கம்பு நட்டு அந்தப் பூனையை அதில் கட்டிவைத்தார். பிறகு யாகத்தைத் தொடங்கினார். யாகம் முடிந்ததும் அவிழ்த்துவிட்டார். இனி எந்தப் பிரச்னையும் இல்லை.

    இந்த சமயத்தில் ஒரு சீடன் வந்து சேர்ந்தான். மகான் யாகம் ஆரம்பிக்கும் முன்னால் பூனையைக் கட்டி வைப்பதைப் பார்த்தான். சில வருடங்கள் கழித்து மகான் மோட்சம் ஏகியதும் அவர் இடத்திற்கு வந்த சிடன், அவர் வழிப்படியே இறை வழிபாடுகளை மேற்கொண்டான். ஆனால் ஏதேனும் ஒரு பூனையைப் பிடித்து வந்து கம்பில் கட்டிவைத்து பிறகுதான் யாகம் செய்ய ஆரம்பித்தான் அவன்!

    பூனையை எதற்காகக் கட்டிவைத்தீர்கள் என்று இவனும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை. ஆனால் அதுதான் சம்பிரதாயம் என்று நினைத்த சீடன். யாகம் ஆரம்பிக்குமுன் பூனையைக் கட்டிவைப்பதை முதல் வேலையாகச் செய்தான்!

    பொதுவாகவே ஒரு சம்பிரதாயத்தை அப்படி மேற்கொள்ளலாமா, இப்படி மேற்கொள்ளலாமா என்ற குழப்பமே சந்தேகமாக உருவாகிறது. சிலர் ஒரு பாணியில் சில பழக்கவழக்கங்களை முன்னோர் அடிச்சுவட்டில் பின்பற்றி வருவார்கள். வேறுசிலர் அதே பழக்க வழக்கங்களைச் சற்று முறைமாற்றிப் பின்பற்றுவார்கள். இந்த இரண்டில் எது சரி என்ற சந்தேகம் மூன்றாம் நபருக்கு வரக்கூடும். அதை அவர் நாலு பேரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். இரண்டில் ஒன்று அல்லது இரண்டுமே அல்லாத மூன்றாவது முறைதான் சரி என்ற பதில் அவருக்குக் கிடைக்கும்.

    ஆனால், இப்படிக் கிடைக்கும் பதில்தான் சரியானது என்று எப்படி எடுத்துக்கொள்வது? சில மேற்கோள்கள் காட்டியும், சில உதாரணங்களை எடுத்துச் சொல்லியும், சில சம்பவங்களைக் குறிப்பிட்டும், தாம் சொல்லும் பதிலுக்கு ஆதாரங்களைக் காட்டி நிரூபிப்பார்கள் ஞானிகள். அதோடு சந்தேகம் எழுப்பியவர் தமக்கு பதிலளிப்பவர் எத்தகையவர் என்பதை அறிந்தாலே அந்த பதிலில் தொடர்ந்து எந்த சந்தேகமும் கொள்ளாமல் அதை அப்படியே பின்பற்றுவார்.

    இந்த வகையில், பல மகான்களிடம் நேரடியாகச் சென்று பல சந்தேகங்களை அவர்கள் முன்வைத்து அவர்கள் சொன்ன ஆதாரபூர்வமான பதில்களைத் தொகுத்து இந்தப் புத்தகத்தில் வழங்கியிருக்கிறோம்.

    ஆன்மிக பலன் மாத இதழில் இந்தப்பகுதி ஒரு தொடராக வெளிவந்தபோது (இப்போதும் வந்து கொண்டிருக்கிறது) பல வாசகர்கள் பல கேள்விகளைக் கேட்டு அவற்றுக்குத் தக்க பதில்களைப் பெற்றார்கள். தம் சந்தேகங்களுக்கு நிறைவான தீர்வு கிடைத்ததாக அவர்கள் பின்னாளில் எங்களிடம் தொடர்புகொண்டு தெரிவித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் கோரியபடி உடனே பதிலளித்து அந்த வாசகர்களை மேம்படுத்திய பல மகான்களுக்கு எங்கள் வந்தனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அன்றும், இன்றும், என்றென்றும் எங்கள் நன்றிகள் அவர்களுக்கு உரித்தாகும்.

    இந்தத் தொடரில் பல வாசகர்கள் பங்குகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதில்களை சேகரித்துத் தரும் வகையில் எங்களைப் பணித்ததற்கு நன்றி.

    - பிரபுசங்கர்

    பரணிகுமார்

    சமர்ப்பணம்

    எல்லா சந்தேகங்களுக்கும் சற்றும் மனம் கோணாது

    விடையளித்து உதவிய அத்தனை சான்றோர்களுக்கும்

    இறைவனை பிள்ளையார், முருகன், விஷ்ணு, சிவன், தேவி என பல வடிவங்களில் வழிபடுவது ஏன்?

    பாலு, திருப்பூர்.

    உங்களுக்கு மட்டுமில்லை... இந்தியாவுக்கு வரும் வெளி நாட்டவர்களுக்கும் ஆச்சரியம் தரும் விஷயமாக இது இருக்கிறது. ஆனால், ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். இப்படி இறைவனை பல்வேறு வடிவங்களில் வழிபடுவது பல நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது. ஏன்? அமெரிக்க பழங்குடி இனத்தவர்கள் மத்தியில் கூட சிறு தெய்வ வழிபாடு இருக்கிறது. மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் ரோமாபுரிப் பேரரசு காலத்தில் ஒவ்வொரு குடும்பமும், வீட்டின் ஒரு பகுதியில் ஒரு கோயிலை நிறுவி, அங்கு இறைவன் சிலையை பிரதிஷ்டை செய்து வணங்கியதாக வரலாறு.

    மனித மனம் வெரைட்டி தேடுவதாக இருக்கிறது. வீட்டில் ஒரு நாள் சாம்பார் வைத்தால், அடுத்த நாளும் சாம்பார் என்றால் அலுத்துக்கொள்கிறோம். 'இன்றைக்கு வத்தக் குழம்பு வைக்கக்கூடாதா?' என்று கேட்கிறோம். குழந்தைகளுக்கு கூட முதல் நாள் விளையாடிய விளையாட்டு அடுத்த நாள் போரடித்துவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும் ருசியும் வெவ்வேறாக இருக்கிறது. புதுமையைத் தேடி எப்போதும்அலைபாய்கிறவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள்.

    இப்படி அலைபாயும் மனதுக்கு ஆறுதல் தரும் விதமாகத்தான், புராணங்கள் இறைவனுக்கு பலவிதமான வடிவங்களைக் கொடுத்தன. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு இறைவன் தீர்வு தருவான் என்கிற மாதிரி சாஸ்திரங்கள் உருவாகின. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் எந்த வடிவத்திலும் இருப்பான் என்பதைத்தான் இது உணர்த்துகிறது. வடிவங்கள் மாறினும் இறைவன் ஒருவன்தான்!

    இப்படி பல வடிவங்களில் இறைவனை வழிபடுவது குறையல்ல; நிறை. எல்லாவிதமான சிந்தனைகளுக்கும் வளைந்து கொடுக்கக்கூடியதாக இந்து மதம் மட்டுமே இருக்கிறது என்பது பெருமைதானே!

    பிரச்னைகளோடு இறைவனிடம் போய் மனமுருக வழிபட்டாலும், பல சந்தர்ப்பங்களில் அந்த பிரச்னை தீர்வதாக எனக்குத் தெரியவில்லை. என் வழிபாட்டில் ஏதாவது குறை இருக்குமா?

    வாசு, காயக்காடு.

    கோயிலுக்கு போய் வழிபட்டு திரும்புகிற வழியில் ஒருவர் சாலையில் கல் தடுக்கி விழுகிறார். கால் சுண்டு விரலிலிருந்து ரத்தம் வழிகிறது. 'உன்னைக் கும்பிடத்தானே வந்தேன். ஏன் இப்படி செய்தே?' என்று கோயில் பக்கம் திரும்பி கோபமாக கத்துகிறார் அவர்.

    இன்னொருவர் கோயிலுக்கு போகிறார். கோயில் வாசலிலேயே அவர் மீது சைக்கிள் மோதுகிறது. கீழே விழுந்து, லேசான சிராய்ப்புடன் எழுந்துவிடுகிறார். தெரியாம மோதிட்டேன் சார்! என சைக்கிளில் வந்தவர் பதைபதைக்க, 'பரவாயில்லை… போங்க' என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, இவர் சொல்கிறார். இன்னைக்கு என் ராசிப்படி ஏதோ விபத்து நடந்திருக்கணும் போலிருக்கு. நல்லவேளை... லாரி, கார் எதுவும் மோதாம சைக்கிளோட முடிஞ்சதே. கடவுளே... உனக்கு நன்றி!' என தொழுகிறார் அவர்.

    எதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் பிரச்னைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் இருக்கின்றன. மலையேறிக் கொண்டிருந்தான் ஒருவன். இருட்டும் நேரம். மலை உச்சியில் ஒரு இடத்தில் கூடாரம் அடித்து தங்கலாமா என அவன் ஆராயும் போது, தடுமாறி கீழே விழுகிறான். 'இன்றோடு கதை முடிந்தது' என நினைத்து, அவன் அலறினான். 'மலை உச்சியிலிருந்து தலைகீழாக தரையை நோக்கி விழுகிறோம்' என்று நினைக்கும் போதே அவனுக்கு மயக்கம் வந்தது. அதிர்ஷ்ட வசமாக அவனது இடுப்பில் கட்டியிருந்த கயிறு ஒரு மரக்கிளையில் சிக்க, அங்கேயே அந்தரத்தில் தொங்குகிறான் அவன்.

    கும்மிருட்டில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மரக்கிளை வலுவாக இருக்கிறதா... அதுவும் உடைந்து கீழே விழாமல் இருப்போமா... பக்கத்தில் பற்றிக்கொள்ள பாறைகள் ஏதாவது இருக்கிறதா... எதுவுமே தெரியவில்லை. கதறியபடியே கடவுளை துணைக்கு அழைத்தான். அவன் வேண்டிக்கொண்ட சற்று நேரத்தில் வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது. 'உன் இடுப்பில் இருக்கும் கயிற்றை அறுத்து எறி. நீ காப்பாற்றப்படுவாய்' என்றது அந்தக் குரல்.

    அது அவனுக்கு தெளிவாகக் கேட்டது. ஆனாலும், அவனால் நம்பமுடியவில்லை. 'மரணத்தின் வாயிலிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொண்டிருப்பது இந்த கயிறு மட்டும்தான். இதையும் அறுத்துவிட்டால் நாம் தரையில் மோதி செத்துவிடுவோமே. ஏன் கடவுள் இப்படி அபத்தமாக உளறுகிறார்' என்று நினைத்தான். அந்தக் கயிறை அறுப்பதில்லை என உறுதி கொண்டான்.

    மறுநாள் அந்த மலைப்பக்கமாக போனவர்கள், ஏதோ காட்டுவிலங்கு கடித்துக் குதறிய நிலையில், கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த அவன் உடலைக் கண்டார்கள். அவன் தொங்கிய இடத்துக்கும் தரைக்கும் இரண்டடி தூரம்தான் இடைவெளி இருந்தது. கயிற்றை அறுத்திருந்தால் தரையில் குதித்து அவன் தப்பியிருக்க முடியும்.

    நிறைய பேர் இப்படித்தான். தங்கள் பிரச்னைக்கு மூலமாக இருக்கும் காரணங்களை சரிசெய்யாமலே கடவுளை துணைக்கு அழைப்பார்கள். எந்த முயற்சியும் செய்யாமல் கடவுள் உதவமாட்டார்.

    என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் வேலைக்கு போகிறேன். ஆனால், என் வீட்டில் யாரும் என்னை உற்சாகப்படுத்துவதும் இல்லை, உதவிக்கு வருவதும் இல்லை. மனம் வெறுத்துவிடுகிறது. இவர்களுக்காக நான் ஏன் உழைக்க வேண்டும்?

    அனிருத்ரன், திண்டுக்கல்.

    உங்களுக்கு ஒரு தவளையின் கதை சொல்கிறேன் கேளுங்கள்.

    ஒரு மழைநாளில் சில தவளைகள் கூட்டமாக போய்க் கொண்டிருந்தன. திடீரென அவற்றில் இரண்டு தவளைகள் தடுமாறி ஒரு சேற்றுக்குழிக்குள் விழுந்துவிட்டன. ஆழமான குழி. இரண்டும் குதித்து மேலே வர முயன்றன. ஆனால், குழியின் பாதி உயரத்துக்கு மேல் அவற்றால் எம்பிக் குதிக்க முடியவில்லை.

    மற்ற தவளைகள் கரையில் இருந்தபடி அதை கவனித்தன. 'எதற்கு குதிக்கிறீர்கள்? சும்மா குதித்து, குதித்து களைத்துப் போய்விடுவீர்கள். உங்களால் மேலே எம்பி வரமுடியாது. இதுதான் விதி என்று நினைத்து, அப்படியே கிடந்து மரணத்தை சந்தோஷமாக எதிர்கொள்ளுங்கள். வேறு வழியில்லை' என கரையில் இருந்த தவளைகள் கத்தின.

    இந்த ஆலோசனையை ஏற்ற ஒரு தவளை, குதிப்பதை நிறுத்திவிட்டு, அப்படியே குழிக்குள் அசைவற்று உட்கார்ந்து கொண்டது. இன்னும் சற்று நேரத்தில் மரணம் நெருங்குவதாக கற்பனை செய்து கொண்டது. அந்த நினைப்பே அதை கொஞ்ச நேரத்தில் சாகடித்துவிட்டது.

    இன்னொரு தவளை குதிப்பதை நிறுத்தவே இல்லை. கரையில் இருக்கும் தவளைகள், 'சும்மா இரு!' என்று அதட்டியும் அது கேட்பதாக இல்லை. திரும்பத்திரும்ப அது எம்பிக் குதித்தபடி இருந்தது. ஒரு கட்டத்தில் ரொம்ப உயரமாக எம்பிக் குதித்து, அது கரைக்கும் வந்துவிட்டது.

    மற்ற தவளைகள் வாயடைத்து நின்றபோது அது சொன்னது... 'சாரி! எனக்கு காது கேட்காது. அதனால் நீங்கள் பேசிய எதுவுமே காதில் விழவில்லை. ஆனால், உங்கள் சைகைகளைப் பார்த்தபோது, நான் எப்படியாவது மேலே வரவேண்டும் என நீங்கள் உற்சாகப்படுத்தியது புரிந்தது. அந்த நினைப்புதான் என்னை அடுத்தடுத்து முயற்சி செய்ய வைத்தது. என்னை ஊக்கப்படுத்தி, காப்பாற்றியதற்கு நன்றி' என்றது. அது செவிடாக இல்லாமல் இருந்திருந்தால் செத்துப்போயிருக்கும்.

    சில நேரங்களில் அந்த செவிட்டுத் தவளை போலத்தான் வாழ்க்கையை அணுக வேண்டியிருக்கிறது. புரிந்துகொள்ளுங்கள்.

    சாமியே கும்பிடாதவர்கள் சுகபோகமாய் வாழ்கிறார்கள்... கடவுளே கதி என்று கும்பிட்டு வருபவர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வருகின்றனரே... ஏன் இந்த முரண்பாடு?

    ப. ராமகிருஷ்ணன், காயக்காடு.

    இறைவனிடம் பண்டமாற்றுக் கோரிக்கைகள் வைக்கக்கூடாது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆலயம் இறைத்தன்மை கொண்டதாகத் தெரியாது. அவர்கள் பார்வையில் அது ஒரு மிகப்பெரிய வியாபாரத்தலம். கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதைப் போல, இங்கு சென்று இறைவனிடம் பட்டியல் வாசிக்கிறார்கள்.

    'எனக்கு இந்த விஷயத்தை முடித்துக்கொடு. நான் 108 தேங்காய் உடைக்கிறேன்' என்று கேட்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் எப்போதும், தாங்கள் வேண்டியது நிறைவேறவில்லையே என்ற விரக்தியில், "ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்?' என்று இறைவனிடம் சண்டை போடுகிறார்கள். கோயிலுக்கே வராதவர்கள், வரிசையில் காத்திருந்து சாமியே கும்பிடாதவர்கள் பலரும் சுகபோகமாய் வாழ்வதாக இவர்கள் மனதுக்குபடுகிறது.

    இவர்களுக்கு ஒரு விஷயம் புரிவதில்லை. எப்போது எதை யாருக்கு தரவேண்டும் என்பதை இறைவன் அறிவார். முயற்சியே செய்யாதவர்களுக்கு அவர் எதையும் தருவதில்லை.

    சாமியே கும்பிடாதவர்கள் என யாரும் இல்லை. 'கடவுள் இல்லை' என்று சொல்பவர்கள், தீவிர பக்தி மான்களை விட அதிக நேரம் கடவுளின் நாமாவை உச்சரிக்கிறார்கள். பகவான் கிருஷ்ணரின் தாய், தந்தையரை கடும் சித்திரவதைக்கு ஆளாக்கியவன் கம்சன். கிருஷ்ணர்தான் அவன் வாழ்வை முடிக்க அவதரிக்கப் போகிறார் என்ற விஷயம் அவனுக்கு பயம் தந்திருந்தது. ஆனாலும், அவனை ஆட்கொண்டார் பகவான். ஏன்? 'எப்போது கிருஷ்ணன் வந்து என்னைக் கொல்வானோ!' என்ற பயம் எந்த நேரத்திலும் அவன் மனதில் இருந்தது. பகவானின் பரம அடிமைகளை விட அதிக நேரம் அவரை நினைத்தான் கம்சன். அதனால் மோட்சம் பெற்றான்.

    ஒருவன் விருப்பப்பட்டு கடவுளின் நாமாவைச் சொல்கிறான். இன்னொருவன் வெறுப்போடு சொல்கிறான் என்பதைத் தவிர, இருவரின் அணுகுமுறையிலும் பெரிய வித்தியாசத்தை இறைவன் பார்ப்பதில்லை. எல்லோர் மீதும் இறைவன் பரிவு காட்டுகிறார்.

    திருஷ்டி கழித்த எலுமிச்சைப் பழத்தை சிலர் ரோட்டில் போடுகிறார்கள். பூசணிக்காயால் திருஷ்டி சுற்றி, அதையும் ரோட்டில் போட்டு உடைக்கிறார்கள் சிலர். இவற்றை மிதித்தால், அதை போட்டவர்களின் திருஷ்டி நம் வீட்டுக்கு வந்துவிடுமா?

    ஜெ. மகாலட்சுமி, சித்தோடு.

    திருஷ்டி கழித்த பொருட்களை ரோட்டில் போடவேண்டும் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லவில்லை. நியாயமாக இவற்றை யாருக்கும் தொந்தரவில்லாதபடி, ஏதாவது குப்பைத் தொட்டியில்தான் போட வேண்டும்.

    திருஷ்டி கழித்த எலுமிச்சைப் பழத்தை மிதிப்பதால் எந்த தீவினைகளும் வராது. மாறாக, 'இதை மிதித்துவிட்டோமே! நமக்கு என்ன ஆகப்போகிறதோ' என்று சஞ்சலப்பட்டால், அந்த நினைப்புதான் ஏதாவது கெடுபலன்களைத் தரும். இதாவது பரவாயில்லை... பூசணிக்காய்களை ரோட்டில் போட்டு உடைப்பதால், அதன் மீது வாகனங்களை ஏற்றி, தடுமாறி விழுந்து அடிபடுகிறவர்கள் அதிகம். அவர்கள் விடும் சாபம், திருஷ்டி கழித்தவர்கள் மீதுதான் படிகிறது. அப்புறம் எந்த திருஷ்டியைக் கழித்து என்ன புண்ணியம்!

    சிலர் எந்த நேரமும் கோயிலே கதியென்று கிடக்கிறார்கள்... இறைவன் பெயரை சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் சாப்பாடு கிடைத்துவிடுமா?

    ஆர். ராஜசேகரன், திருக்கோயிலூர்.

    கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. பக்தி பரவசத்தில் எல்லோரும் இறைவன் புகழ்பாடும் பாமாலை ஒன்றை பாடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக பக்கத்து ஊர் இளைஞன் ஒருவன் வந்தான். அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

    'ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள்?' என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டான். ஒரு பெரியவர் அன்பாக சொன்னார். 'தம்பி! இறைவனைப் பழிக்காதே. அவனை விட, அவன் நாமாவுக்கு பெருமை அதிகம். அவன் நாமாவை ஜெபித்தால் எல்லா நலனும் கிடைக்கும்' என்றார்.

    'அவர் நாமாவை ஜெபித்தால் சாப்பாடு கிடைக்குமா?' என்று கேலியாக கேட்டான் இளைஞன். 'நிச்சயமாக. இறைவன் உன் வாயில் உணவை ஊட்டுவார்' என்றார் பெரியவர்.

    அவனுக்கு சோதித்துப் பார்க்க ஆசை. அருகிலிருந்த காட்டுக்கு சென்றான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், ஒரு பெரிய மரத்தை தேர்ந்தெடுத்து, அதன் உச்சாணிக் கிளையில் அமர்ந்து கொண்டான். இறைவன் நாமத்தை விடாமல் ஜெபிக்க ஆரம்பித்தான். ‘இறைவன் எப்படி வந்து ஊட்டுவார் பார்ப்போம்' என்று கேலியாக சொல்லிக்கொண்டான்.

    கொஞ்ச நேரத்தில் ஒரு வழிப்போக்கன் அந்த மரத்தடியில் வந்து அமர்ந்தான். தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டு மூட்டையைப் பிரித்து சாப்பிட்டான். மீதியை திரும்பவும் கட்டி, தலைக்கடியில் வைத்து தூங்கினான். நீண்டநேரம் கழித்து எழுந்த அவன், அவசரமாக கிளம்பும் போது சாப்பாட்டு மூட்டையை அங்கேயே மறந்து வைத்துவிட்டு போயேவிட்டான்.

    இருட்டும் நேரத்தில் ஒரு கொள்ளையர் கூட்டம் வந்தது. தாங்கள் கொள்ளையிட்ட நகை மூட்டைகளை பிரிக்கும் நேரத்தில், ஒரு கொள்ளையன் சாப்பாட்டு மூட்டையைப் பார்த்து பிரித்தான். சாப்பிடலாமா என யோசிக்கும் நேரத்தில் கொள்ளையர் தலைவனுக்கு சந்தேகம். 'தங்களைக் கொல்ல யாராவது விஷம் கலந்த சாப்பாட்டை இங்கே போட்டிருப்பார்களா?' என்ற யோசனையோடு சுற்றும் முற்றும் பார்த்த அவன் கண்ணில் மரத்தின் மீது ஒளிந்திருந்த இளைஞன் பட்டான்.

    அவனை அதட்டி கீழே இறக்கிய தலைவன், 'பொடிப்பயலே! சாப்பாட்டில் விஷம் வைத்து எங்களையா கொல்லப் பார்க்கிறாய்? இந்த விஷத்தை நீயே சாப்பிடு' என அவனை பேசவே விடாமல் சாப்பாட்டை வாயில் திணித்தான்.

    இறைவன் எப்படி ஊட்டுவார் என்பது அவனுக்கு புரிந்தது. அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

    எல்லோருக்கும் எல்லாமும் தருபவன் இறைவன். ஆனால், அவனது உண்டியலில் பணத்தை இட்டு நிரப்புவதில் சிலர் போட்டா போட்டி போடுகிறார்களே? இது சரியா? இறைவன் காணிக்கைகளை கேட்டானா?

    - ஆர். முத்து சுந்தரம், புதுக்கோட்டை.

    ஒரு விதை விதைக்கிறோம். ஆனால், அதிலிருந்து முளைக்கும் விருட்சம் ஏராளமான கனிகளைத் தருகிறது. ஒரு விதை போட்டவனுக்கு ஒரே ஒரு கனி மட்டும் தந்தால் போதும் என நிலம் நினைப்பதில்லை. அதனால்தான் நிலத்தை தாயாகக் கருதி வணங்குகிறோம்.

    உண்டியலில் போடும் பணத்தை ஆண்டவன் நேரடியாக வந்து கணக்கு பார்த்து, எடுத்துக்கொள்வதில்லை. அது பலவித சமூக காரியங்களுக்கு பயன்படுகிறது. 'நாம் எவ்வளவு போடுகிறோம் என்று இறைவன் கணக்கிட்டா பார்க்கப்போகிறான்?' என்று கேள்வி எழுப்ப வேண்டாம். கொடுக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்பதற்கு அடிப்படைதான் உண்டியல். தங்களிடம் இருக்கும் செல்வத்தை, உணவை, இன்னபிற பொருட்களை, பகிர்ந்து கொள்ளுதல்தான் மனித மாண்பு.

    சிலருக்கு எதையும் கொடுக்க மனம் வராது. குப்பைகளைக் கூட பொக்கிஷம் போல் பாதுகாப்பார்கள். தங்களுக்குப் போக எஞ்சியிருக்கும் உணவையும் யாருக்கும் தர இவர்களுக்கு மனம் வராது. அழுகினாலும் பரவாயில்லை என்று வைத்திருந்து குப்பையில் போடுவார்கள். இவர்கள் பிறரிடமிருந்து எதையாவது பெறுவதை மட்டுமே அறிவார்கள். யார் எப்போது எதைத் தருவார்கள் என்பதிலேயே இவர்கள் குறியாக இருப்பார்கள். இவர்கள் கைகள் எப்போதும் யாசகம் பெறுவதைப் போல தாழ்ந்தே இருக்கும். இறைவனிடம் வேண்டும் போது கூட, 'இதைக் கொடு', 'அதைக் கொடு' என்று பட்டியலிடுவார்கள்.

    ஒரு கிராமத்தில் மிகப்பெரிய தனவந்தர் வசித்து வந்தார். உதவி கேட்டு வருபவர்களுக்காக அவரது வீட்டுக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால், அவரிடம் ஒரு கெட்ட பழக்கம். வருகிறவர்கள் அவருக்கு எதையாவது தர வேண்டும். அப்போதுதான் அவர் முகம் மலர உதவி செய்வார். வாழைப்பழம், இளநீர்... எதுவானாலும் பரவாயில்லை. வாங்கி ருசித்து. ‘ஆஹா! பிரமாதமான சுவை' என்று சப்புக் கொட்டுவார்.

    ஆனால், அவருக்கே சொந்தமாக தென்னந்தோப்புகள், வாழைத் தோட்டங்கள் ஏராளமாக உண்டு. அப்படியிருக்க, ஏன் இப்படி வருகிறவர்களிடம் வசூலிக்கிறார் என்று அவரது நெருங்கிய நண்பர் ஒரு நாள் வாய் விட்டே கேட்டுவிட்டார். சந்தேகத்தை. தனவந்தர் சொன்னார். அவர்கள் கொடுப்பதை நானும் வாங்கிக் கொண்டால்தான், நான் அவர்களுக்கு தரும் செல்வத்தை அவர்கள் பிச்சை என்று நினைக்கமாட்டார்கள்.

    கண்ணனுக்கு கிடைக்காத பொருளா? அவன் ஏன் குசேலர் தந்த அவலை ஆர்வமாக வாங்கிருசித்தான்? காரணம் இதுதான். நண்பனுக்கு பிச்சை தருவதில் அவனுக்கு விருப்பம் இல்லை.

    எல்லோரிடமும் இருக்கும் எல்லா செல்வங்களும் இறைவன் கொடுத்தவை. அதில் ஒரு பங்கை உண்டியலில் போடுவது சிலருக்கு கேலியாகத் தெரியலாம். ஆனால், இறைவன் தன் பக்தர்களுக்கு பிச்சை போடுவதில் விருப்பமில்லாதவனாக இருக்கிறானே!

    'எதன் மீதும் பற்று வைக்காமல் இருக்க

    Enjoying the preview?
    Page 1 of 1