Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

108 Divya Desa Ulaa – Part 2
108 Divya Desa Ulaa – Part 2
108 Divya Desa Ulaa – Part 2
Ebook538 pages2 hours

108 Divya Desa Ulaa – Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முதல் பாகத்தில் கடல்மல்லை முதல் திருச்சித்திரக்கூடம் வரையிலான 26 திவ்ய தேசங்களை நாம் தரிசித்தோம்.

இப்போது இந்த இரண்டாம் பாகத்தில் திருநெல்வேலி, தூத்துகுடி, திருச்சி, மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் 24 திவ்ய தேசங்களை தரிசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580130606079
108 Divya Desa Ulaa – Part 2

Read more from Prabhu Shankar

Related to 108 Divya Desa Ulaa – Part 2

Related ebooks

Reviews for 108 Divya Desa Ulaa – Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    108 Divya Desa Ulaa – Part 2 - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    108 திவ்ய தேச உலா - பாகம் 2

    108 Divya Desa Ulaa - Part 2

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    26. ஸ்ரீவைகுண்டம்

    27. நத்தம்

    28. திருப்புளிங்குடி

    29. திருகுளந்தை

    30.1. இரட்டைத் திருப்பதிகள்

    30.2. இரட்டைத் திருப்பதிகள்

    31. தென்திருப்பேரை

    32. திருக்கோளூர்

    33.1. ஆழ்வார் திருநகரி

    33.2. ஆழ்வார் திருநகரி

    34. நான்குநேரி

    35.1. திருக்குறுங்குடி

    35.2. திருக்குறுங்குடி

    36.1. ஸ்ரீரங்கம்

    36.2. ஸ்ரீரங்கம்

    36.3 ஸ்ரீரங்கம்

    36.4. ஸ்ரீரங்கம்

    36.5. ஸ்ரீரங்கம்

    36.6. ஸ்ரீரங்கம்

    36.7. ஸ்ரீரங்கம்

    36.8. ஸ்ரீரங்கம்

    37. உறையூர்

    38. திருவெள்ளறை

    39. அன்பில்

    40.1. திருக்கரம்பனூர்

    40.2. திருக்கரம்பனூர்

    41. கோவிலடி

    42. திருக்கூடல்

    43.1. திருமாலிருஞ்சோலை

    43.2. திருமாலிருஞ்சோலை

    43.3. திருமாலிருஞ்சோலை

    44.1. திருக்கோஷ்டியூர்

    44.2. திருக்கோஷ்டியூர்

    45. திருகூர்

    46. திருமய்யம்

    47. திருப்புல்லாணி

    48. திருத்தங்கல்

    49.1. ஸ்ரீவில்லிப்புத்தூர்

    49.2. ஸ்ரீவில்லிப்புத்தூர்

    49.3. ஸ்ரீவில்லிப்புத்தூர்

    *****

    26. ஸ்ரீவைகுண்டம்

    வையத்தை வாழ்விக்க வந்த வைகுண்டநாதன்

    காஞ்சிபுரத்தைப் போலவே திருநெல்வேலி மாவட்டத்திலும் ஒரே கொத்தாக மொத்தம் பதினொறு திவ்ய தேசங்கள் அமைந்திருக்கின்றன. காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை மொத்தமே 12 கிலோமீட்டர் பரப்பளவுக்குள் 15 திவ்ய தேசங்களை தரிசித்துவிட முடியும். ஆனால் நெல்லையில், ஒவ்வொரு திவ்ய தேசமும் ஒன்றுக்கொன்று சில கி.மீ. தொலைவில் தள்ளித் தள்ளி இருக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தும்படியாக பேருந்து வசதிகள் இல்லை. சொந்தக் கார் வசதி உள்ளவர்கள் அல்லது ஒரு குழுவாக வேன் அல்லது பேருந்து அமர்த்திக் கொண்டு வருபவர்கள், இரண்டு நாட்களில் இந்த ஒன்பது ப்ளஸ் இரண்டு கோயில்களை அவசர அவசரமாக தரிசிக்கலாம். வாடகைக் காரை திருநெல்வேலியிலிருந்து அமர்த்திக் கொள்ளலாம். நவதிருப்பதிகளில் முதலாவதாக தரிசிக்கக் கூடிய ஸ்ரீவைகுண்டத்திலிருந்தும் ஆட்டோ அமர்த்திக் கொண்டு பிற எட்டு திருப்பதிகளை தரிசிக்கலாம். நாங்குநேரி, திருக்குறுங்குடி தலங்களை தனித்தனியே அப்புறமாக தரிசித்துக் கொள்ளலாம். கொஞ்சம் விச்ராந்தியாக தரிசிக்க நினைப்பவர்கள், மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

    இந்த வரிசையில் சம்பிரதாயப்படி முதலில் ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தை தரிசிக்கலாம்.

    கோயிலுக்குள் முதலில் மண்டபம் வழியாகத்தான் செல்ல வேண்டும். பந்தல் மண்டபம், மணி மண்டபம் என்று அடுத்தடுத்து மண்டபங்கள். அந்தக் கால பக்தர்கள், நெடுந்தொலைவிலிருந்து நடந்து வந்திருப்பார்கள்; அவர்கள் வந்த களைப்பு தீர முதலில் அமர்ந்து, இளைப்பாறுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட அந்த மண்டபங்களைக் கடந்து ராஜகோபுரம் வழியாக, பெருமாளை தரிசிக்கச் செல்லலாம். கோபுரத்தின் உட்புறத்தில், மேல்பகுதியில், இருபுறமும் குரங்கு சிலைகள் கீழே பார்த்தபடி நம்மை வரவேற்கின்றன. கூடவே கருட வாகனத்தில் பெருமாளும் காட்சி தருகிறார்.

    உள்மண்டபத்தில் வலது பக்கம் ஆன்மிக நூலகம், ஆன்மிகத் தெளிவு தர, கதவு திறந்து காத்திருக்கிறது. பக்கத்தில் அனுமன், வாலைத் தலைக்கு மேல் சுழற்றி நிறுத்திய தோரணையில் தரிசனம் தருகிறார். இடது பக்கத்தில் ராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் தனி சந்நதி கொண்டிருக்கிறார். அர்த்த மண்டபத்தில் லட்சுமி நரசிம்மர் வரவேற்று ஆசி வழங்குகிறார். திருவேங்கடமுடையானுக்கும் தனி சந்நதி உள்ளது. மிக அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் பிரமிக்க வைக்கின்றன. அங்கே விளக்கு நாச்சியார் என்று ஒரு சிற்பம். சராசரி ஆளுயரம் கொண்ட அந்த சிற்பம், இரு உள்ளங்கைகளையும் இணைத்து மார்பளவில் நீட்டினாற்போல அமைந்திருக்கிறது. அந்தக் கரங்களில் எண்ணெய் இட்டு விளக்கேற்றியிருக்கிறார்கள். வெறும் விளக்குதானே என்று அலட்சியப்படுத்தாமல், அதிலும் கலை நயம் தோய்ந்திருப்பது வியக்க வைக்கிறது.

    மூலவருக்கு வலது பக்கம் கருடாழ்வார், வித்தியாசமான தோற்றமாக, மஞ்சள் வண்ணத்தில் காட்சி தருகிறார். சுமார் இரண்டாயிரம் வருடங்களாக இப்படித்தான் இவர் கோலம் கொண்டிருக்கிறாராம். அதாவது நிரந்தர சந்தனக் காப்பு கொண்டவர் இவர்!

    மூலவர் கள்ளப்பிரான், ஆதிசேஷன் குடை பிடிக்க விஷமமாக சிரித்தபடி, நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார். இந்தப் பெயர் இவருக்கு எப்படி வந்தது?

    வைகுண்டநாதன்

    ஒரு கள்வனுக்குத் துணை போனதால்! அது என்ன புராணம்?

    அந்தக் கள்வன் பெயர் காலதூஷகன். இவனுக்கு செய்யும் தொழிலே தெய்வம்! ஆமாம், ஸ்ரீவைகுண்டப் பெருமாளை வழிபட்ட பிறகுதான் தினமும் கூட்டாளிகளுடன் தன் தொழிலைத் தொடங்குவான் இவன். அது மட்டுமல்ல; தான் திருடி வரும் சொத்தில் பாதியை இந்தப் பெருமாளுக்கே அர்ப்பணித்துவிடுவான். நாணயஸ்தன்! சமுதாயம் புறக்கணித்த கெடுவினையைத்தான் இவன் மேற்கொள்கிறான் என்றாலும் அதிலும் தெய்வ நம்பிக்கையோடு ஈடுபடுவது, அந்த நம்பிக்கை தரும் வெற்றிக்கு, நன்றி காணிக்கை செலுத்துவது என்று 'நாணயத்தோடே' நடந்து கொண்டான்!

    ஒருமுறை இந்த அதீத நம்பிக்கையில் அவன் அரசனின் அரண்மனையிலேயே கை வைத்து விட்டான். விழித்துக் கொண்ட காவலர்கள், அவனது கூட்டாளிகளைத் தாவிப் பிடித்தனர். காலதூஷகன் தப்பிவிட்டான். விசாரணையின்போது, கூட்டாளிகள், தாங்கள் காலதூஷகனைச் சார்ந்தவர்கள் என்றும் தங்களுடன் வந்தால் அவனைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்கள். இதைக் கேள்விப்பட்ட கால தூஷகன் உடனே போய் பெருமாளைச் சரணடைந்தான். அவனைக் காக்கும் முயற்சியாக, பெருமாளே அவன் உருவில் போய் நிற்க, அவரைக் கைது செய்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.

    வந்த கொள்ளை கும்பல் தலைவன் சற்று வித்தியாசமாக அரசனுக்குத் தோன்றினான். அவனை உற்றுப் பார்த்தபோது, அங்கே அழகன், கள்வனாக நின்றிருந்தார். அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், அவர் இப்படிச் செய்ய என்ன காரணம் என்று வினவினான்.

    ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் செல்வத்திலிருந்து ஒரு சிறு பகுதியாவது தர்ம காரியங்களுக்குப் பயன்படாவிட்டால், அங்கே அந்த செல்வம் நீடித்திருப்பது தகாது. என் பக்தன் காலதூஷகன் கொள்ளையடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது உண்மை தான் என்றாலும் அவன் தர்மத்துக்குப் பயன்படாத பொருட்களைத்தான் திருடினான். அதோடு தர்மத்துக்குச் சேர வேண்டிய தொகையை என்னிடம் கொடுத்து, என் மூலம் சில தர்ம விஷயங்கள் நடைபெறச் செய்தான். உன்னிடமிருந்த செல்வத்தில் பெரும்பகுதி, மக்கள் வரியாக செலுத்திய தொகைதான்; ஆனால் நீயோ அதே மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர மறந்துவிட்டாய். ஆகவே அந்தப் பங்கை உன்னிடமிருந்து திருடி, என்னிடம் சேர்த்து, நீ செய்ய வேண்டிய கடமையை என்னை ஆற்றும்படி என் பக்தனான காலதூஷகன் கேட்டுக் கொண்டான். இதுதான் நடந்தது என்று விளக்கம் கொடுத்தார், பெருமாள்.

    வைகுண்டநாயகி

    அதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்தான் மன்னன். அந்தக் கணமே தன் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டான். அதோடு, தனக்கு இவ்வாறு அறிவுக் கண்ணைத் திறந்த இறைவன் அதே கோலத்திலேயே உலகோர் அனைவருக்கும் தரிசனம் தருமாறும் கேட்டுக் கொண்டான். அன்று முதல் வைகுண்டநாதன், சோரநாதன் அதாவது கள்ளப்பிரான் (வடமொழியில் சோர் என்றால் கள்ளன்) என்றழைக்கப்பட்டார். அதே வடமொழியில் இயற்றப்பட்ட ஸ்ரீசோரநாத சுப்ரபாதம் என்ற சோரநாதசுவாமி திருப்பள்ளியெழுச்சி ஸ்லோகம், மிகவும் பிரசித்தி பெற்றது. பொதுவாக ஆதிசேஷ படுக்கையில் சயனித்திருக்கும் பெருமாள், இந்தக் கோயிலில், அதே ஆதிசேஷன் குடை பிடிக்க நின்றபடி சேவை சாதிக்கிறார். இவர் கன்னத்தில் சிறு வடு ஒன்றைக் காணலாம். இது, தான் உருவாக்கிய இந்தச் சிலையின் பேரழகைக் கண்டு வியந்த சிற்பி, உயிரோட்டம் கொண்ட அதன் செழுமையான கன்னத்தைக் கிள்ளியதாகவும், அதுவே வடுவாகி நிலைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

    ஆதியில் பெருமாள் வைகுண்டநாதனாக இங்கே கோயில் கொண்டதற்கு பிரம்மன்தான் காரணம். அது என்ன புராணம்?

    ஒரு பிரளயத்துக்குப் பிறகு, புத்துலகமும் புது யுகமும் படைக்கும் பொறுப்பை பிரம்மன் மேற்கொண்டபோது, அதை முறியடிப்பதற்காகவே காத்திருந்த கோமுகாசுரன், அவரிடமிருந்த வேதங்களை அபகரித்துச் சென்றுவிட்டான். அவற்றை மீட்கவேண்டுமானால், நாராயணனின் உதவி வேண்டும் என்று உணர்ந்திருந்த பிரம்மன், தாமிரபரணி நதிக்கரையைத் தேர்ந்தெடுத்து அங்கே கடுந்தவம் மேற்கொண்டான். நாராயணன் வைகுண்டவாசனாகவே அவர் முன் தோன்றி, அவர் கோரிக்கையைக் கேட்டறிந்து, பிறகு அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டுத் தந்தார். தன் பணி இடையூறின்றி காக்கப்பட்ட நன்றியுணர்வில், பிரம்மன், பெருமாளை அங்கேயே அர்ச்சாவதாரம் கொண்டு அனைவரையும் வாழ்விக்குமாறு இறைஞ்சினார். அப்படி நிலை கொண்டவர்தான் இந்த வைகுண்டநாதன். இவருக்குத் தன் கமண்டல நீரால் பிரம்மன் திருமஞ்சனம் செய்வித்ததால், இங்குள்ள தீர்த்தம், கலச தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

    கள்ளப்பிரான்

    இப்படி உருவான கோயில், நாளாவட்டத்தில், தானே முழுமையாக உரிமை கொண்டாட வேண்டும் என்ற பூமிதேவியின் ஆசையால் அப்படியே நிலத்துக்குள் புதைந்து விட்டது. பின்னொரு நாளில் ஒரு பாண்டிய மன்னன் காலத்தில், ஒரு பசு, பால் சொறிந்து அடையாளம் காட்ட, இந்த வைகுண்டநாதன் மீண்டும் மேலே வந்து புதிதாய்க் கோயில் கொண்டார் என்கிறார்கள்.

    வைகுண்டநாயகி என்றும் கணவன் சோரநாதனாதலால் தானும் சோரநாயகி என்றும் தாயார் அழைக்கப்படுகிறார். தாயாருக்கு தினமும் பால் அபிஷேகம் நடைபெறுகிறது. தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கும் வயிற்றில் பால் வார்த்தது போன்ற நற்பலன்களை இந்த அன்னை அருள்கிறார்.

    வைகுண்டநாதர் உற்சவர்

    மாமரத்தை தல விருட்சமாகக் கொண்ட இந்தக் கோயில் சூரிய தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை 6, ஐப்பசி 6 இரண்டு நாட்களிலும் அதிகாலையில் இளஞ் சூரியனின் மென்கிரணங்கள், கோபுர வாசல் வழியாக நுழைந்து மூலவர் மீது படிந்து பணிவது இக்கோயிலின் தனிச் சிறப்பு. அதனாலேயே இது சூரிய தோஷப் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. அது மட்டுமல்ல, ஸ்ரீவைகுண்டம் என்ற நாராயணனின் இருப்பிடத்தையே தன் பெயராகக் கொண்ட திருத்தலம் இதுவன்றி வேறில்லை.

    காலை 7 முதல் 12; மாலை 5 முதல் 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும். தொடர்புக்கு: 9865628681.

    ஸ்ரீவைகுண்டம் சென்று பெருமாளை தரிசிக்கும்வரை ஸ்ரீவைகுண்டநாதன் மீதான த்யான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்:

    ஸ்ரீவைகுண்ட புரே ஹரிர் விஹரதே வைகுண்ட வல்யாந்வித

    தத்தோ யஸ்ஸுரநாயகஸ்ய வரத ஸ்ரீதாம்ர பர்ணீதடே

    தத்ரைவேந்து விமாந பூஷணமணிர் திவ்யைஸ் ஸதா ஸூரிபி

    ஸேவ்யஸ் வான்க்ரி ஸரோரு ஹாச்ரித பவப்ரத்வம்ஸ நைகவ்ரத

    பொதுப்பொருள்: ஸ்ரீவைகுண்டபுரம் எனும் இந்த திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, ஸ்ரீவைகுண்ட நாதா, நமஸ்காரம். வைகுண்ட நாச்சியாருடன், சந்திர விமான நிழலில், தாமிரபரணி தீர்த்தக் கரையில், எப்போதும் நித்ய சூரிகளால் சேவிக்கப்படுபவரே, நமஸ்காரம். இந்திரனுக்குக் காட்சியளித்தவரே நமஸ்காரம்.

    ***

    எப்படிப் போவது?

    திருநெல்வேலி-திருச்செந்தூர் ரயில் பாதையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இறங்கிக்கொண்டால், அங்கிருந்து 3 கி.மீ. தொலைவு. திருநெல்வேலியிலிருந்து பேருந்து மார்க்கமாக 30 கி.மீ. தூரம் வரவேண்டும். பேருந்து ஆட்டோ வசதிகள் உண்டு.

    எங்கே தங்குவது?

    ஸ்ரீவைகுண்டத்திலேயே தங்கிக்கொள்ளலாம். அவரவர் தேவைக்கேற்ப தங்கும் விடுதிகள் உள்ளன. உணவு வழங்கவும் உணவு விடுதிகள் நிறைய உண்டு. இங்கிருந்தே ஆட்டோ அமர்த்திக்கொண்டு நவ திருப்பதிகளில் பிற எட்டிற்கும் சென்று வரலாம்.

    கோயில் திறந்திருக்கும் நேரம்?

    காலை 6.30 முதல் 11.30 மணிவரையிலும், மாலை 4.30 முதல் 8.30 மணிவரையிலும்.

    முகவரி:

    அருள்மிகு வைகுண்டநாதப் பெருமாள் திருக்கோயில், திருவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம் - 628 601

    கோயில் தொடர்புக்கு:

    98656 28681

    *****

    27. நத்தம்

    வெற்றிக்கு வழிகாட்டும் விஜயாசனர்

    இந்த நவதிருப்பதிகள் அனைத்தையுமே நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். திருமங்கையாழ்வார், திவ்ய தேசத் தலங்கள் 108ல், எண்பத்தெட்டு தலங்களுக்கு நேரே சென்று, பெருமாளின் திரு தரிசனம் கண்டு அவர் மீது பாடல் இயற்றித் தன் பக்தியையும் வைணவத்தையும் பரப்பியவர். நம்மாழ்வார் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த நவ திருப்பதிகள் மட்டுமல்லாமல், நாங்குநேரி என்ற தலத்தையும் மங்களாசாசனம் செய்திருக்கிறார். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்-திருநகரியில் அவதரித்தவர் இவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், 88 திவ்ய தேசங்களை, குதிரைப் பயணமாக மேற்கொண்டு, தரிசித்து வந்தவர் திருமங்கையாழ்வார் என்றால், நம்மாழ்வார் இருந்த இடத்திலிருந்தே நவ திருப்பதிகளையும் பாடி மகிழ்ந்தவர். இத்தனைக்கும் இவர் பிறவியிலேயே அசைவற்றவராக, பேச்சற்றவராக, பசிக்குக்கூட அழத் தெரியாதவராக, ஏன் விழியே திறக்காதவராக வித்தியாச தோற்றம் கொண்டிருந்தார். பன்னெடுங்காலமாக மழலைப்பேறே இல்லாதிருந்த இவரது பெற்றோர், ஆழ்வார்-திருநகரி தலத்து ஆதிநாதப் பெருமாளிடம் வருந்திக் கேட்டுப் பெற்ற அதிசயப் பிறவி இது! ஆனாலும் மனதைத் தேற்றிக் கொண்ட பெற்றோர், 'இது இறைவன் கொடுத்த வரம்; அவரே ஆட்கொள்ளட்டும்' என்று கருதி ஆதிநாதப் பெருமாள் கோயிலின் தல விருட்சமான புளியமரத்தடியில் இட்டுவிட்டுச் சென்றனர்.

    ஆனால் அனைவரையும் திகைக்க வைக்கும்படி அசைவற்றுக் கிடந்த அந்தக் குழந்தை மெல்ல தவழ்ந்து அந்தப் புளிய மரத்தில் இருந்த ஒரு பொந்துக்குள் போய் அமர்ந்து கொண்டது. சரி, இனியாவது எல்லாம் இயல்பாக நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள், அப்படியே பதினாறு வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று! அப்போதும் வடநாட்டிலிருந்து வந்த மதுரகவி ஆழ்வார் என்ற வைணவத் திருத்தோன்றலால்தான் நம்மாழ்வாரைப் பேசவே வைக்க முடிந்தது! தன்னை ஒரு ஒளி வழிநடத்தியதாகவும் அதைப் பின்பற்றி தான் இத்தலத்துக்கு வந்ததாகவும் அந்த ஒளி, இந்த புளியமரப் பொந்துக்குள் புகுந்து மறைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அதோடு, அங்கே பதினாறு வருடங்களாகியும், அந்த வயதுக்கான வளர்ச்சி இல்லாமல் ஒரு 'குழந்தை' முடங்கிக் கிடப்பதைக் கண்டார். அதனிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தார். உடனே, அதை நோக்கி, 'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?' என்று கேட்க, உடனே அந்தக் குழந்தை பதில் சொன்னது: 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!'

    விஜயாசனப் பெருமாள் மூலவர்

    சிறியது என்று மதுரகவி ஆழ்வார் குறிப்பிட்டது ஆன்மாவை. செத்தது என்றால் நிலையில்லாத, எப்போதாவது அழிந்துவிடக் கூடிய உடல். பதிலாக, 'உடல் மூலமாக இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கும் ஆன்மா, தன் நிலை உணர்ந்து, பரந்தாமன் மீதான பக்தியை மட்டுமே உட்கொண்டு, இன்று இந்த உடல், மறுபிறவியில் இன்னொரு உடல் என்று உடலுக்குள்ளேயே கிடக்கும்' என்று பதிலளித்தார் நம்மாழ்வார்.

    அப்படியே அவன் முன் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார் மதுரகவி ஆழ்வார். என் குருவே, எனக்குத் தெளிவைத் தந்தீர்கள். பிறவியால் உழலும் எனக்கு தக்க வழிகாட்டியாக அமைவீர்களா? என்று கண்களில் நீர் சொரியக் கேட்டார்.

    நம்மாழ்வார், என் மூலம் ஸ்ரீமந் நாராயணனுக்குத் தொண்டு செய்யும் பேறு உனக்குக் கிடைத்தால் அது எனக்கும் பேறுதான் என்று பெருந்தன்மையாக அவரை ஏற்றுக் கொண்டார். அந்த குரு-சிஷ்ய உறவைப் பாராட்டும் வகையில் நாராயணன், மஹாலக்ஷ்மியுடன் கருட வாகனத்தில் அங்கே, அவர்களுக்குக் காட்சியளித்தார்.

    'எம் இடர் களைவான்'

    உடனே,

    'ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்

    பாடியாடிப் பணிந்து பல்படிகால் வழியேறிக் கண்டீர்

    கூடி வானவரேத்த நின்ற திருக்குருகூரதனுள்

    ஆடுபுட்கொடி யதி மூர்த்திக்கு அடிமை புகுவதே'

    என்று அந்தத் தல ஆதிநாதப் பெருமாளைப் போற்றி பாசுரம் பாடினார் நம்மாழ்வார்.

    அவ்வளவுதான், அந்தப் பகுதியில் இருந்த பிற திவ்ய தேசப் பெருமாள்களும் அவர் முன் வரிசையாக வந்து நின்று, நம்மாழ்வார் மூலம் தம்மைப் பற்றி தனித்தனியே மங்களாசாசனம் செய்து கொண்டார்கள்!

    யாருக்குக் கிடைக்கும் இந்தப் பெருமை!

    சென்ற பகுதியில் பார்த்த ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தையும் இப்போது படித்துக் கொண்டிருக்கும் திருவரகுணமங்கை தலத்தையும் பொதுவாக ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்திருக்கிறார் நம்மாழ்வார். அந்தப் பாடல்:

    புளிங்குடி கிடந்து வரகுணமங்கை

    யிருந்து வைகுந்தத்துள் நின்று

    தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே

    என்னையாள்வாய் எனக்கருளி

    நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப

    நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப

    பனிங்கு நீர் முகிலின் பவளம் போல

    கனிவாய் சிவப்ப நீ காண வாராயே

    நம்மாழ்வார்

    சரி, இனி நத்தம் என்ற இந்தத் திருவரகுணமங்கை தலத்தின் புராணத்தைப் பார்ப்போம்.

    ரோமச முனிவரின் சீடனான சத்யவான் ஒரு வியத்தகு காட்சி கண்டான். அப்போது அவன் அகநாச தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அதன் கரையில் அமர்ந்தபடி ஒரு மீனவன் வலைவீசி நிறைய மீன்களைப் பிடித்தான். அவற்றைக் கரையில் உதறி, உயிரிழக்கச் செய்து மீண்டும் வலைவீசினான். எத்தனை மீன்களைப் பிடித்தாலும் அவனுக்குத் திருப்தியாகாது போலிருந்தது. அப்போது, கரையோரமிருந்த ஒரு நாகம் பளிச்சென்று அவனைக் கொத்திவிட்டு மறைந்தது. அந்தக் கணமே அவன் விழுந்து இறந்தான். ஆனால் அதே சமயம் வானிலிருந்து ஓர் ஒளி அந்தப் பகுதியை நோக்கி வர, அதிலிருந்து புஷ்பக விமானம் இறங்கி, மீனவனை சுமந்து கொண்டு மோட்ச உலகுக்கு விரைந்தது.

    இது என்ன அநியாயம்! பேராசை காரணமாக எத்தனையோ மீன்களின் உயிரைப் பறித்த இந்த மீனவனுக்கு இப்படி ஒரு பாக்கியமா என்று பதறிய அவன் குருவிடம் சென்று சந்தேகம் கேட்டான். அவரோ, முற்பிறவிப் பயனாகத்தான் அவன் இப்படி ஒரு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவன் அதிர்ஷ்டம், அவன் இந்தத் தலத்தில் பிறந்தது! ஆமாம், இங்கே பிறந்த யாருக்கும், அவர் எப்படிப்பட்டவரானாலும், மோட்ச பதவி உறுதி. அதைத்தான் அவன் அனுபவித்தான் என்று விளக்கம் சொன்னார் ரோமச முனிவர்.

    அப்படிப்பட்ட புண்ணிய க்ஷேத்ரம் இது. அதுமட்டுமல்ல, இங்கே தவமிருக்கும் எந்த பக்தனுக்கும் ஸ்ரீமந் நாராயணன் திருக்காட்சி வழங்குகிறான்; அதற்கு வழியும் காட்டுகிறான். ஓர் உதாரணம், வேதவித் என்ற பக்தன். தன் பெற்றோர் மற்றும் குருவிற்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் முடித்துவிட்டு, இனி திருமாலை அடையும் பொருட்டு தவமியற்ற ஆரம்பித்தான் வேதவித். அப்போது அவன்முன் ஒரு முதியவராகத் தோன்றிய மஹாவிஷ்ணு, அவன் தவமியற்றச் சிறந்த இடம் வரகுணமங்கை என்றும், அங்கே அவனது நோக்கம் நிறைவேறும் என்றும் அறிவுறுத்தினார். அதன்படியே தவமேற்கொண்ட அவனுக்கு ஆதிசேஷன் குடைபிடிக்க, அமர்ந்த கோலத்தில் காட்சி அருளினார், நாராயணன். இன்றும் அதே கோலத்தில் அவர் நமக்கும் தரிசனமளிக்கிறார்.

    கருட வாகனத்தில் பெருமாள்

    இந்த கோலத்தில் இவர் விஜயாசனர் என்றழைக்கப்படுகிறார். அதாவது வெற்றி ஆசனமிட்டு அமர்ந்திருப்பவர். இவரது பார்வை நம்மீது பட்டாலேயே நம் மனக் குழப்பங்கள் எல்லாம் தெளிவடையும். ஆமாம், சந்திரன் என்ற மனோகாரகனின் தோஷத்தால் ஏற்படக்கூடிய மன பாதிப்புகள் எல்லாம் நீங்கும். இதனாலேயே இது சந்திர தோஷப் பரிகாரத் தலமாகவும் கருதப்படுகிறது. இதற்காகவே இந்தப் பெருமாள் உற்சவரை 'எம் இடர் களைவான்' என்று உண்மைக் காரணத்தை ஒட்டி போற்றுகிறார்கள்.

    தாயார் வரகுணமங்கை என்ற வரகுணவல்லி. பூரணப் பொலிவோடு, தன் தலைவனின் பக்தர் நேயத்துக்கு உறுதுணையாக இருந்து உலகையே பரிபாலிக்கிறாள்.

    ஐந்துநிலை கோபுரம் கொண்ட, கிழக்கு நோக்கிய இந்த கோயில் சம்பிரதாயமான பலிபீடம், கொடிமரம், கருடன் சந்நதியைக் கொண்டிருக்கிறது. இங்கே நரசிம்மர், தனி சந்நதியில் யோக நரசிம்மராக வழிபடப்படுகிறார். இவரை வேண்டுவோருக்கு தடைபட்ட திருமணம் இனிதே நடக்கும். கொடிய நோய்களும் தீரும். இவருக்கு செவ்வரளி சமர்ப்பித்து வணங்குவது பக்தர்களின் வழக்கம்.

    தொழில் தடை நீங்க, கிரகதோஷம் தீர, கடன் தொல்லை விலக, விஜயாசனப் பெருமாள் பேரருள் புரிகிறார்.

    ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருவரகுணமங்கை என்ற நத்தம் திருக்கோயில் காலை 9 முதல் 12; மதியம் 1 முதல் 6 மணிவரை திறந்திருக்கும். 04630-256476 என்ற எண்ணில் கோயிலைத் தொடர்பு கொள்ளலாம்.

    திருவரகுணமங்கை சென்று

    Enjoying the preview?
    Page 1 of 1