Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanandha Thaandavam
Aanandha Thaandavam
Aanandha Thaandavam
Ebook372 pages4 hours

Aanandha Thaandavam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஆனந்த தாண்டவம் என்ற உடனேயே எல்லோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம் தான் ஞாபகத்திற்கு வரும். வேறு எதுவும் வராது என்பதும் ஒரு பேருண்மை. ஆனந்தம் ஏற்படப்போய் அவர் ஆடுகிற படியால் அப்படி ஒரு பெயரா இல்லை அதைப் பார்ப்பவர்க்கு ஆனந்தம் வரும் என்பதால் அப்படி ஒரு பெயரா என்று நாம் ஆனந்ததாண்டவம் குறித்து நிறையவே விவாதிக்கலாம்.அந்த தாண்டவம் விவாகத்துக்கு உரியது மட்டுமல்ல. பெரும் ஆராய்ச்சிக்கும் உரியது. அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்தபடியே இருக்கின்றன.

ஒரு ரகசியம் எழுத்தில் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. அது தோற்றத்திலும் இருக்கலாம்.

இந்த சிந்தனைகளை எல்லாம் உள்ளடக்கியே இந்த தொடர் நாவலை எழுதினேன். வெகுஜன இதழ்களில் எழுதும்போது விறுவிறுப்புக்கு குந்தகம் வந்துவிடக்கூடாது என்று எதிர்பார்ப்பு இருக்கும். அப்படிப்பட்ட விறுவிறுப்போடு என் ஆன்மிக எண்ணங்களையும் குழைத்தே இதை எழுதினேன். இப்படி நான் எழுதுவது ஒன்றும் புதிதல்ல. சிவமயம், சிவம், ருத்ரவீணை, கிருஷ்ணதந்திரம், எங்கே என் கண்ணன் என்று என் பல படைப்புகள் இந்த ரகமே!

என் வாசகர்கள் வழக்கம் போல இந்த தாண்டவத்தில் திளைப்பார்கள் என்று நம்புகிறேன்.

- இந்திரா செளந்தர்ராஜன்

Languageதமிழ்
Release dateOct 4, 2016
ISBN6580100701542
Aanandha Thaandavam

Read more from Indira Soundarajan

Related to Aanandha Thaandavam

Related ebooks

Related categories

Reviews for Aanandha Thaandavam

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanandha Thaandavam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    ஆனந்த தாண்டவம்

    Aanandha Thaandavam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    என்னுரை

    ஆனந்த தாண்டவம் என்ற உடனேயே எலலோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம் தான் ஞாபகத்திற்கு வரும். வேறு எதுவும் வராது என்பதும் ஒரு பேருண்மை. ஆனந்தம் ஏற்படப்போய் அவர் ஆடுகிற படியால் அப்படி ஒரு பெயரா இல்லை அதைப் பார்ப்பவர்க்கு ஆனந்தம் வரும் என்பதால் அப்படி ஒரு பெயரா என்று நாம் ஆனந்ததாண்டவம் குறித்து நிறையவே விவாதிக்கலாம்.

    அந்த தாண்டவம் விவாகத்துக்கு உரியது மட்டுமல்ல. பெரும் ஆராய்ச்சிக்கும் உரியது. அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்தபடியே இருக்கின்றன. குறிப்பாக மேல் நாட்டு விஞ்ஞானிகள் ஆத்திக நாத்திக சிந்தனைக்கெல்லாம் இடம் தராமல் நடுவுநிலையோடு இந்த தாண்டவ கோலம் குறித்து வியப்பு தெரிவிக்கிறார்கள். இது பல ரகசியங்களின் குறியீடு என்கிறார்கள்.

    ஒரு ரகசியம் எழுத்தில் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. அது தோற்றத்திலும் இருக்கலாம். நிறையவே இருக்கவும் செய்கின்றன.

    இந்த சிந்தனைகளை எல்லாம் உள்ளடக்கியே இந்த தொடர் நாவலை எழுதினேன். வெகுஜன இதழ்களில் எழுதும்போது விறுவிறுப்புக்கு குந்தகம் வந்துவிடக்கூடாது என்று எதிர்பார்ப்பு இருக்கும். அப்படிப்பட்ட விறுவிறுப்போடு என் ஆன்மிக எண்ணங்களையும் குழைத்தே இதை எழுதினேன். இப்படி நான் எழுதுவது ஒன்றும் புதிதல்ல. சிவமயம், சிவம், ருத்ரவீணை, கிருஷ்ணதந்திரம், எங்கே என் கண்ணன் என்று என் பல படைப்புகள் இந்த ரகமே!

    இந்த நாவல்கள் எல்லாம் மிக தனித்தன்மை கொண்டவை. அனேகமாக என் நாவல்கள் போல நாவல்களை யாரும் எம்மொழியிலும் எழுதியிருக்க வாய்ப்பில்லை. இந்நாவல்களில் கிருஷ்ண தந்திரம் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்து நல்ல பெயர் கிடைத்தது. ஒரு நாவல் தெலுங்கிலும் மொழிபெயர்ப்பானது. ஏற்கனவே பல நாவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டன.

    இதெல்லாம் நான் பரவிவருவதற்கு சாட்சி. ஆனந்தத் தாண்டவமும் ஏதோ ஒருவிதத்தில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் Proof ஐ திருத்தும்போது இன்னமும் சிரத்தை எடுத்து மேலும் எழுதியிருக்கலாமோ என்கிற ஒரு எண்ணம் ஏற்பட்டது.

    திருப்தி என்பது அவ்வளவு சுலபத்தில் ஏற்பட்டு விடுமா என்ன? என் வாசகர்கள் வழக்கம் போல இந்த தாண்டவத்தில் திளைப்பார்கள் என்று நம்புகிறேன்.

    நன்றி!

    27.7.15 மதுரை.

    பணிவன்புடன்

    இந்திரா செளந்தர்ராஜன்

    ஆனந்த தாண்டவம்

    1

    'தஞ்சையை தலைநகராகக் கொண்டு சோழ மண்டலத்தில் சரித்திரச் சிறப்பு வாய்ந்த ஊர்கள் பல உள்ளன. ஆனால் எதுவுமே மகாதேவ புரத்துக்கு இணையாகாது. தாசிகளைப் பற்றியும், ஆலய ஆகமங்கள் பற்றியும், தாசிகளுக்கும் ஆலயத்துக்குமான பிணைப்பு பற்றியும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நான் ஆய்வு செய்ய எண்ணிய போது முன்னதாக ஒரு தேடலில் இறங்கினேன். அப்போது தான் மகா தேவபுரம் பற்றியும் அந்த ஊரின் பசு நடராஜர் கோவில் பற்றியும் எனக்கு தெரியவந்தது. பசு நடராஜர் என்கிற பதமே எனக்கு புதியதாக தோன்றியது. நடராஜருக்கும் பசுவுக்கும் என்ன சம்மந்தம்?.நடராஜராகிய சிவ பெருமானின் வாகனம் ரிஷபமாகிய காளை தானே? என என்னுள் பல கேள்விகள். பிறகு தான் பசு என்றால் தங்கம் என்று ஒரு பொருள் உண்டு என்பதும் தங்கத்தால் வார்க்கப்பட்ட நடராஜரை உடைய கோவில் என்பதே பசு நடராஜர் என்றும் என்னல் உணர முடிந்தது. அப்படியே அந்த பசு நடராஜ பொன் விக்கிரகத்தை பார்க்கும் ஆவலும், மகாதேவபுரத்தின் மற்ற சிறப்புகளை அறியும் ஆவலும் எனக்குள் ஏற்பட்டது. புறப்பட்டு விட்டேன்!

    பேராசிரியர் அருள் சிவசேகரனின் கட்டுரையிலிருந்து…

    காவிரியின் புதிய வெள்ளம் அதன் கிளை வாய்க்கால்களிலும் பாயப்போய் மகாதேவபுரம் திருமஞ்சனக் காவேரியில் நீர் புகுந்து கொண்டிருந்தது.

    நாற்பதடி அகலமான வாய்க்கால்!

    இருபுறத்திலும் புசுபுசுவென்று வளர்ந்து நிற்கும் கோரைப் புதர்கள். பல வருடங்களாக மழை அவ்வளவாக இல்லாமல் போனதால் அந்த புதர்கள் காய்ந்து வைக்கோல் போல ஆகிவிட்டிருந்தன. புதிய நீர் வரவும் அந்த புதர்ச் செடிகளிடம் ஒரு குதூகலம்...

    அங்கங்கே வாய்க்கால் ஓரமாக மாமரங்கள், விளா மரங்கள், நாவல் மரங்கள் என்று மரங்களும் நிமிர்ந்து வளர்ந்திருந்தன. அவைகளும் திபுதிபு என்று ஓடிவரும் புதிய நீரைப் பார்த்து 'அப்பாடா தப்பித்தோம்’ என்பது போல கிளைக்கைகளை அசைத்து மகிழஆரம்பித்தன.

    பதினைந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் ராஜ மகேந்திரபுரத்தில் இருக்கிறது வாய்க்கால் மதகு, அங்கே மதகைத் திறந்து விட்ட உடனேயே மகாதேவபுரம் பஞ்சாயத்து தலைவரும் கோயில் டிரஸ்டியுமான கல்யாண சுந்தரம் பிள்ளைக்கு போன் போட்டு சொல்லிவிட்டான் அவர் பிள்ளையான நடராஜன்.

    செய்தி காதில் விழுந்த மாத்திரத்தில் உதிரிப்பூக்களுடன் தயாராக உள்ள கூடையுடன் அவர் வாய்க்கால் பகுதிக்கு கிளம்பி விட்டார். வாசலிலேயே தாரை தப்பட்டையுடன் சேரிக்காரர்கள் காத்திருந்தனர். கல்யாண சுந்தரம் புறப்படவும் தாரைதப் பட்டைகள் சப்தமிடத் தொடங்கிவிட்டன.

    தாரை தப்பட்டைக்கு எப்போதுமே கேட்பவர்களை ஆட வைக்கும் ஒரு சக்தி உண்டு. ஆட்டம் என்றால் என்ன வென்றே தெரியாதவன் கூட அதன் சப்தம் கேட்டமாத்திரத்தில் கால்களை ஆட்டத் தொடங்கிவிடுவான். அதன் தாளக் கட்டுக்கு அப்படி ஒரு சக்தி.

    கல்யாண சுந்தரத்தோடு நடப்பவர்களில் பலரும் ஆடத்தொடங்கி விட்டார்கள். சப்தம் கேட்டு தெருவில் இருக்கும் வீட்டுப் பெண்கள் எல்லாம் வெளியே வந்து ஆவலாக பார்த்தார்கள்

    'வாய்க்கால்ல தண்ணி வருதாம்! எட்டு வருஷம் கழிச்சு இப்பதான் வருது. அதான் ஊர் எல்லைல தண்ணிக்கு பூசை செய்ய பிரசிடென்டய்யா கிளம்பிட்டார்’ என்று அவர்களில் ஒருத்தி ஆரம்பித்தாள்.

    'அப்ப இந்த தடவை விவசாயம் நடக்கும்னு சொல்...'

    'ஆமாம். இந்த நூறு நாள் வேலை திட்டத்துக்கு போய் அம்பதும் நூறும் கூலியா வாங்கறதுக்கு வயல் வேலைக்கு போனா கைநிறைய கூலி கிடைக்கும். மனசுக்கும் நிறைவா இருக்கும்...'

    'நீ விவசாயம் வரைக்கும் போயிட்டியா? நான் இனி வாய்க்காலுக்கு போய் குளிச்சிட்டு அப்படியே துணியை துவைச்சி எடுத்துகிட்டு வரப்போறதை நினைச்சேன். இனி என் வீட்டு வாஷிங் மெஷினுக்கு விடுதலைதான்...' என்றாள் ஒருத்தி.

    'வந்துருக்கற தண்ணி வத்தாம நிரந்தரமா ஓடணும். இது எத்தனை நாள் ஓடுமோ தெரியாது...'

    'அதுவும் சரிதான். ஏதோ கர்நாடகால பெருசாமழை பெய்யப்போய் வெள்ளம் வரவும் நம்ம ஊருக்கும் தண்ணி வந்துருக்கு அங்க மழை இல்லைன்னா இங்கயும் தண்ணி கிடையாது இது நிரந்தரமில்லை. இதை நம்பி நாம எதையும் செய்ய முடியாது...'

    'இப்படி தெருவுக்குள் பல விதமான பேச்சுக்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் முல்லைக் கொடி படர்ந்து கொத்துக் கொத்தாக முல்லையும் பூக்கும். சிலர் அவரைக் கொடி போட்டிருப்பார்கள். சிலர் பசலைக் கொடி வளர்த்திருப்பார்கள். மொத்தத்தில் தெருவில் பசுமை பூத்து செழிப்பாக கண்ணுக்கு தெரியும். இதில் காலை மாலை என்று இரண்டு வேளையும் வாசலில் தண்ணி தெளித்து கோலம் வேறு போடுவார்கள். அப்படி கோலம் போடுவதில் யார் அதிக புள்ளி வைத்து அழகாய் போடுகிறார்கள் என்பதில் போட்டி எல்லாம் உருவாகும்.

    அதெல்லாம் இப்போது ஒரு காலம் என்றாகிவிட்டது. மழை செத்த பூமியாக மகாதேவபுரம் மாறிவிட்டதால் இந்த வீட்டு வாசல் கொடிகள் எல்லாம் பட்டுப்போய் மறைந்து விட்டன. கிணறுகளில் தண்ணீர் வற்றியதால் பூமியைக் குடைந்து தண்ணீரை உறிஞ்சித் திருடும் நிலை.

    தண்ணிரை மட்டும் அது எந்த இடத்தில் இருந்தாலும் அதை வணங்கிவிட்டு தான் தன் முயற்சியால் எடுக்க வேண்டும் என்பது தான் சாஸ்திரம் சொல்லும் விஷயம். ஆனால் இப்போது மோட்டார் போட்டு உறிஞ்சுவது தான் நடைமுறை. சாஸ்திரம் பார்த்தால் குடிக்கக் கூட தண்ணீ கிடைக்காது என்பது தானே இப்போதைய யதார்த்தம்?

    இப்படி ஒரு யதார்த்த நடைமுறைக்கு நடுவில்தான் இன்று தண்ணீர் ஊருக்குள் நுழையப் போகிறது. வயதானவர்கள தங்கள் இளம் வயதில் பாலத்தின் மேல் நின்று கொண்டு வாய்க்காலுக்குள் குதித்து விளையாடியதை எல்லாம் அசைபோட ஆரம்பித்தார்கள்.

    கல்யாண சுந்தரமும் ஊர் ஆரம்பத்தில் உள்ள வாய்க்கால் பாலத்தினை அடைத்தார். இருபுறமும் ஊரேதிரண்டு வறண்ட வாய்க்காலை பார்க்கத் தொடங்கியது தண்ணீரோ அப்போது தான் ஐந்தாறு மைல்களைக் கடந்திருந்தது. இங்கே வந்து சேர இரண்டு மூன்று மணி நேரமாகலாம் என்பது தான் யதார்த்தம்.

    கல்யாண சுந்தரம் பூக்களோடு காத்திருக்கத் தொடங்கினார். வானில் துணுக்களவு மேகம் கூட இல்லை. கழுவிவிட்ட நீல வண்ணத் தரைப்பரப்பு போல அவ்வளவு சுத்தமாக இருந்து சூரியனும் தன் கோடி கோடி கிரணங்களால் மகா தேவ புரத்தைத் தொட்டு சூடேற்றிக் கொண்டிருந்தான்.

    ஊரின் பிரதான கோவிலான பசு நடராஜர் கோவிலில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. பெரிதாக கூட்டம் இல்லை. சிதம்பர நாத குருக்கள் என்பவர்… பூஜையில் ஈடுபட்டிருந்தார்.

    பூஜையின் போது பிரகாரங்களில் குங்கிலியம் எனப்படும் சாம்பிராணிப் புகை போடுவது அந்த கோவிலின் வழக்கம். அப்படியே கோவிலுக்கு தென்மேற்கு மூலையான நைருதியில் ஒரு சபா மண்டபம் இருக்கிறது. கருங்கற்களால் ஆனா பெரிய மண்டபம்.

    மண்டபத்தின் மேலே நிறையவே வேலைப்பாடுகள். புருஷா மிருகங்கள் நான்கு முனைகளிலும் முன்னிரண்டு கால்களைத்துக்கியபடி நின்றிருக்கும். அற்புதமான வேலைப்பாடு கொண்ட மண்டபம். அந்த மண்டபத்தில் தான் அந்த நாளில் கோவில் தாசிகளின் நாட்டியம் நடக்கும்.

    அவ்வளவு ஏன்? கோவில் தாசி வந்து மல்லாரி பாடியபடியும் ஆடியபடியும் சன்னதிக்கு சென்ற பின் தான் கோவில் குருக்களே தனக்கான பூஜையை ஆரம்பிப்பார். முதல் உரிமை கோவில் தாசிக்கு தான். கோவில் வரையில் அவள் நடராஜ பத்தினி! ஆகையால் அவள் தான் அம்பாள்.

    அதாவது மானுட வடிவில் நடமாடும் அம்பிகை.

    எனவே குருக்களும் சரி, ஊராரும் சரி அவளை வணங்குவதைச் அம்பிகையை வணங்குவதாகவே கருதினார்கள். எல்லா நல்லது கெட்டதும் அவளுக்கு தெரிந்தே நடக்க வேண்டும். அவளும் நடராஜபெருமானை மனதில் தியானித்து அந்த நல்லது கெட்டதற்கு தன்னால் ஆனதைச் செய்வாள். அவள் சொல்வதைத் தான் ஊர் பிரசிடென்ட் முதல் எல்லாரும் கேட்க வேண்டும். ஏன் என்றால் அவள் தன்னையே ஆடல் வல்லானாகிய அந்த நடராஜமூர்த்திக்கு அர்ப்பணித்துக் கொண்டு நடராஜமூர்த்தி காட்டியதாக ஒரு தாலத்தை (தாலி) எடுத்து தன் கழுத்தில் கட்டிக் கொண்டள்.

    ஊருக்கு நடராஜ மூர்த்தி சிலையாக இருக்கிறது இவள் உயிரோடு இருக்கிறாள். இது தான் வித்தியாசம் அப்படி இருந்த கோவில் தாசிகள் இன்று இல்லை. அன்று அவர்கள் ஆடிய மல்லாரி நாட்டியமும் இன்று இல்லை. ஆனால் அந்த மண்டபம் மட்டும் தன் பழமையான வடிவத்தை துளியும் மாற்றிக் கொள்ளாமல் அந்த கம்பிரம் குறையாதபடி அப்படியே இருக்கிறது. அது பதினாறு கால்களை உடைய மண்டபம்.

    அதன் நடுவில் இன்றும் நடராஜர் நின்றபடி அருள்பாலிப்பதாக கருதுவதால அந்த மண்டபத்துக்குள் யாரும் நுழையமாட்டார்கள். குருக்கள் மட்டும் பூஜை சமயம் குங்கிலியம் போட மண்டபத்துக்குள் நுழைந்து மையத்துக்கு சற்று முன் நின்று மையத்தில் நடராஜ மூர்த்தி இருப்பதாக பாவித்து குங்கிலியம் பூஜை போடுவார். கூடவே மணி அடித்தபடி அவர் உதவியாளன் பிச்சுமணியும், தொம் தொம் என்று முரசறைந்தபடி கோவில் ஊழியன் கோவிந்தனும் உடன் வருவார்கள்.

    இதெல்லாம் வாடிக்கை.

    அன்றும் வந்தார்கள்! கோவிலே வெறிச்சோடி காணப்பட்டது. குருக்களுக்கு கண்ணைக் கரித்தது. உடன் மணி அடித்தபடி வரும் பிச்சு மணியுடன் பேசத் தொடங்கினார்.

    'ஏண்டா பிச்சை... என்னடா இன்று ஒருத்தரைக் கூட காணலை. வரவர நம்ப நடராஜரை உள்ளூர் காராகூட தரிசனம் பண்ண வரமாட்ங்கறாங்களே...'

    'அட நீங்க ஒண்ணு சாமி. இன்னிக்கு திருமங்களக்காவேரி வாய்க்கால்ல தண்ணி திறந்து விட்றாங்கல்ல...?'

    அட ஆமால்ல. அதான் எல்லாரும் வாய்க்கால் பக்கம் போய்ட்டாங்களா?’

    'பின்ன... எட்டு வருஷம் கழிச்சு தண்ணி வருது. ஊரே காஞ்சு போய் கிடக்குது. தண்ணிய பாக்கறதுல ஒரு சந்தோஷம் தானே சாமி?’

    'நிச்சயமா... அப்ப நம்ம சுவாமிக்கும் அபிஷேகத்துக்கு வாய்க்காலுக்கு போய் காவேரி ஜலம் கொண்டு வரலாம்னு சொல்லு...'

    'கொண்டு வரணும் சாமி. அந்த நாள் வராதான்னு தானே காத்து கிட்டிருக்கோம்…’ - பிச்சுமணி இசைவாக கேட்டபோது கோவில் வாசலில் ஒரு குதிரை வண்டி வந்து தேங்கி நின்றது. உள்ளே இருந்து ஒரு கிழட்டு பெண்மணி இறங்குவது தெரிந்தது. சபா மண்டபத்தில் இருந்தபடியே பார்த்த குருக்களுக்கு முகம் மேலும் மலரத் தொடங்கியது.

    'பிச்சை அங்க யார் வரான்னு பார்...'

    'அட... தாசி கமலாம்பா...'

    'கோவில் பக்கமே வரமாட்டேன்னு சொன்னவங்க வராங்கட… வா போய் வரவேற்போம்...'

    கையில் குங்கிலியத்தோடு குருக்கள் வெளி கோபுர வாயில் நோக்கி வேகமாக நடந்தார். அவர் குறிப்பிட்ட தாசி கமலாம்பாளும் இறங்கி நடந்து வர ஆரம்பித்தாள். ஜல் ஜல் என்று அவள் நடக்கும் போது சப்தம் ஒலித்தது. காலில் அவள் சதங்கை கட்டியிருப்பது தெரிந்தது. கூடவே அவளது உதவியாளன் குருமூர்த்தியும் வந்தான் அவன் வசம் ஜதிப்பெட்டி இருந்தது.

    குருக்களும் ஓடிவந்து கமலாம்பாளை வணங்கினார்.

    'நமஸ்காரம்மா... நமஸ்காரம்...'

    'யாரு குருக்களா?’

    ஆமாம்மா... நீங்க கோவிலுக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம்...'

    'நான் எங்க வந்தேன்... என்னை காலம் வர வெச்சிடிச்சு.'

    'எப்படியோ நீங்க வந்தீங்களே... அந்த மட்டுல சந்தோஷம்மா... எனக்கு நினைவு தெரிஞ்சு நாற்பது வருஷத்துக்கு முந்தி உங்க மகளோட நாட்டியாஞ்சலிக்கு நீங்க இந்த கோவிலுக்கு வந்தீங்க. அப்புறம் இப்பதா வந்திருக்கீங்க...'

    'பரவா இல்லையே எல்லாத்தையும் நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களே...'

    'எப்படி மறக்க முடியும் அது ஒரு காலம் அந்த மாதிரி இப்ப வருமா?

    'நிச்சயம் வராது அதான் எல்லாம் மாறிப்போச்சே. மாறாத மாற்றம் இப்படி ஒரு மாற்றமா இருக்கும்னு மட்டும் நான் நினைக்கல. ஆமா கோவில் கிணறு கூட வறண்டு போச்சாமே?

    ஆமாம்மா... போர் போட்டு அந்த ஜலத்துல தான் சுவாமிக்கே கைங்கர்யங்கள் நடக்கறது.'

    'கொடுமை... அஞ்சு பூதத்துல ஜலத்துக்கு தான் மண் மேல முதல் இடம். அதுக்கே இடமில்லாம போனா அப்புறம் மத்தது எப்படி வலிமையா இருக்கும்?

    'வாங்கோ. தரிசனம் பண்ணிட்டு உக்காந்து பேசலாம். பூஜை நடந்துண்டு இருக்கு...'

    'நீங்கள் போய் பூஜையை பாருங்க. நான் தரிசனம் பண்ண இந்த கோவிலுக்கு வரலை...'

    கமலாம்பாளின் பதில் அதிர்ச்சியளித்தது. தரிசனம் பண்ண வரவில்லை என்றால் வேறு எதற்கு? அவர் முகத்தில் கேள்வியின் ரேகைகள் உருவாயின. அவளோ அவருக்கு பதில் சொல்வது போல சபாமண்டபம் நோக்கி நடக்கத் தொடங்கினாள். கால் சதங்கை சப்தம் சீராக ஒலிக்கத் தொடங்கியது!

    அதே சமயம் ஊர் எல்லையில் பிரசிடென்ட் கல்யாண சுந்தரத்திடம் ஜீப்பில் இருந்து இறங்கி வந்த ஒரு பொதுப் பணித்துறை அதகாரி ஐயா... தண்ணி இந்த ஊர் வர்றது சந் தேகங்க... அதைச் சொல்லத்தான் வந்தேன் என்றார். அவர் முகம் இருளத்தொடங்கியது.

    2.

    மகா தேவபுரத்தின் நடராஜர் ஆலயம் எல்லா வகையிலும் எனக்கு பிரமிப்பை அளிக்கிறது. மகா தேவபுரம் என்னும் ஊரின் வடகிழக்கு பாகத்தில் இந்த கோவில் அமைந்திருந்தது. வடக்கில் காவிரி நதியின் வாய்க்கால் திருமஞ்சனக் காவிரி எனும் பெயரில் ஓடியபடி உள்ளது.

    ஒரு ஊருக்குள் அதன் வடபுறத்தில் ஆறு ஓடுவது என்பது மிகச் சிறந்த நில அமைப்பை அந்த ஊர் கொண்டிருப்பதற்கு சான்றாகும். ஆனால் நான் சென்ற சமயத்தில் காவிரியில் தண்ணீர் இல்லை.

    வாய்க்கால் காய்ந்து இரு புறமும் புதர்கள் முளைத்து அவைகளும் காய்ந்து விட்டிருந்தன. அடுத்த ஊரின் தென்புறம். இந்த தென்புறத்தில் ஒரு சிறிய குன்று.

    இதன் மேல் பாலமுருகனுக்கு ஒரு கோவில். இதுவும் ஒரு மிகச் சிறந்த அமைப்பு. வடக்கில் ஆறு, தெற்கில் மலை கிழக்கு மேற்கில் வயல் வெளிகள்! இதனால் குரிய உதயமும் அஸ்த மனமும் இங்கே பார்க்க முடியும்.

    வீடுகளில் சூரிய வெளிச்சமும் நன்கு ஊடுருவும். இப்படி ஒரு நிலப்பரப்பு கிடைப்பது என்பதே அபூர்வம். மிக திட்டமிட்டு இந்த ஊரை தேர்வு செய்து இந்த ஊரின் ஈசான்யத்தில் கோவிலை கட்டிய அரசன் உண்மையில் இன்றைய மேலான விஞ்ஞானிகளுக்கெல்லாம மேலானவன் என்பது என் கருத்து.

    அந்த கோவிலுக்குள்ளேயும் நான் சிற்ப சாத்திரத்தின் பல நுட்பங்களை கவனித்தேன். குறிப்பாக கோவிலின் சபா மண்டபத்தின் அருகில் உள்ள சுவற்றில் உள்ள கல்வெட்டுகளில் நிறையவே செய்திகள்!"

    பேராசிரியர் அருள் சிவசேகரனின் கட்டுரையிலிருந்து…

    அந்த அதிகாரி சொல்லி விட்டுப் போய் விட்டார். கல்யாண சுந்தரம் முகம் வாட்டமுடன் காய்ந்த வாய்க்காலைப் பார்த்தது. அவரோடு நம்பிக்கையாக வந்த ஊர்க்காரர்களும் அதிகாரி சொன்ன செய்தியால் வாடிப்போயினர்.

    "ஹூம். விடியப் போகுதுன்னு நினைச்சேன். கடைசில அந்த ஆபீசர் வந்தா தான் வரும்னு சொல்றான். அப்படி ஒரு வேளை தண்ணி வந்தாலும் என்ன புண்ணியம்? ஓரம் சாரமா இருக்கற செடி கொடிகளுக்கே அது போதாதே...?’ என்று வாய்விட்டு புலம்பத் தொடங்கினார் ஒருவர்.

    'இனி இந்த வாய்க்காலை நம்பறதுல ஒரு புண்ணியமுமில்லை கண்ணாயிரம். இது விவசாயத்துக்கான காலமில்லை. பேசாம வந்த விலைக்கு இடத்தை வித்துட்டு பட்டணம் பக்கம் போய் அங்க மூட்டை தூக்கியாவது பொழச்சிக்க வேண்டியது தான்... கர்நாடகா காரன் நம்பளை எல்லாம் வாழ விடப் போறதில்லை...’ என்றார் இன்னொருவர்.

    மக்களிடம் ஏமாற்றம் இப்படி புலம்பலாக வெளிப்படத் தொடங்கிய வேளை ஊருக்குள் நுழையும் இருபதடி அகலதார்ச் சாலை மேல் காவி வேட்டியும் தோளில் காவித் துண்டுமாக சபரிமலைக்கு மாலை போட்டவரைப் போல ஒருவர் நுழைந்து கொண்டிருந்தார். அவர் தோளில் ஒரு துணிப்பை தொங்கிய படி இருந்தது. நெற்றியில் விபூதியும் குங்குமமும்! காலில் செருப்பு கூட அணியாமல் நடந்து வந்த அவரை எல்லோருமே ஆச்சரியமாக பார்த்தனர். 'யார் வீட்டிற்கு இவர் வந்திருப்பார்?’ என்று ஒவ்வொருவர் முகத்திலும் கேள்வி. அவரும் அவ்வளவு பேரையும் ஏறிட்டார். பின் வியர்வையை துடைத்துக் கொண்டே பேசத் தொடங்கினார்.

    "நமஸ்காரம்

    என்பேர் ராமசுந்தரம். நானொரு தீட்சதர் குடும்பத்துல இருந்து வந்தவன். என் அப்பாதாத்தா வெல்லாம் கதா காலட்சேபம் பண்றதுல பெரிய கெட்டிக்காரா... இப்ப அவாள்ளாம் இல்லை. நான் மட்டும் தான் இருக்கேன். வடக்க யாத்திரை போன இடத்துல சன்யாசமும் வாங்கிட்டேன்.

    என் பூர்வீகம் திருநெல்வேலி பக்கம். அப்படிப்பட்ட எனக்கு இமயமலை பக்கம் நான் சந்திச்ச சன்யாசி ஒருத்தர் இந்த மகா தேவபுரம் பத்தி சொன்னார். இந்த ஊர் நடராஜர் ரொம்ப வரசித்தியா னவர்னும் அவரை முத்திரை போட்டு வணங்கினா நினைச்சது நிறைவேறும்னு சொன்னார். அதான் வந்துருக்கேன்." என்று ஒரே மூச்சில் தான் சொல்ல நினைத்த அவ்வளவையும் சொல்லி முடித்தார்.

    பிரசிடென்ட் கல்யாண சுந்தரம் அவரை ஏற இறங்க பார்த்தார். எதுவும் பேசத் தோன்றவில்லை.

    ஆமா ஏன் யாரும் எதுவும் பேச மாட்டேங்கறீங்க... எதுக்காக இங்க கூட்டமாககூடியிருக்கீங்க?

    'அட நீங்க வேற சாமி. இப்படியே நேரா ஊருக்குள்ள போங்க... கோவில்வரும். போய் நல்லா அந்த நடராஜரை கும்பிட்டுக்குங்க. நாங்கள்ளாம் பாவப்பட்டவங்க. இந்த வாய்க் கால்ல தண்ணி வரும்னு கண்ணு பூத்துப்போக காத்துருக்கோம். அந்த நடராஜருக்கே குளத்துல தண்ணியில்லை. போர்வெல் தண்ணியில தான் அபிஷேகம் நடக்கிறது கொஞ்சநாள்ள அதுவும் இல்லாம போகப் போகுது... நீங்க போங்க..."

    ஒருவர் அவருக்கு நீண்ட பதிலைச் சொன்னார். அவருக்குப் புரிந்துவிட்டது.

    உங்க வருத்தம் புரியறதுத. தமிழ் நாடே மழை இல்லாம போய் கஷ்டப்பட்றது எனக்கு தெரியும். தண்ணி நமக்கு மட்டுமில்ல... உலகத்துக்கே அது இப்ப பெரிய பிரச்சினை. அடுத்த உலக யுத்தம் தண்ணியால தான்னு தானே பேச்சா இருக்கு…

    போதும் சாமி... எரியற நெருப்புல எண்ணையை ஊத்தாம நீங்கவந்த வேலையை பாருங்க... சலிப்புடன் அவரிடம் இருந்து விலகினார் இன்னொருவர் அப்போது கோவிலில் இருந்த கோவிந்தன் அவர்களை நோக்கி வந்தபடி இருந்தான்.

    என்ன கோவிந்தன் வரான்… இவனுக்கும் ஆத்துல தண்ணி வரதை பாக்கற ஆசையா? என்று ஒருவர் சொல்ல அருகில் தவன் மூச்சிறைத்தான்.

    'என்னடா... கோவில்ல குருக்களை தனியா விட்டுட்டு வந்துட்டியா?’

    இல்லய்யா... குருக்கள் தான் அனுப்பினாரு.

    என்ன விஷயம்?

    கோவிலுக்கு தாசி கமலாம்பா வந்துருக்காங்க. வந்தவங்க ஆடவும் ஆரம்பிச்சிட்டாங்க...

    கோவிந்தன் கூறவும் பிரசிடென்ட் கல்யாணசுந்தரம் முகம் மாற ஆரம்பித்தது. அந்த கூட்டத்தில் மிக வயதான சிலர் மட்டும் கமலாம்பாள் என்கிற பெயரை கேட்டு வேகமாக முன் வந்தனர்.

    எலேய்... கமலாம்பாளா வந்துருக்காங்க. நல்லா பாத்தியா? என்றார் அவர்களில் ஒருவர்.

    "அட நீங்க வேற... அவங்க சபா மண்டபத்துல

    Enjoying the preview?
    Page 1 of 1