Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maayamaai Silar
Maayamaai Silar
Maayamaai Silar
Ebook262 pages2 hours

Maayamaai Silar

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

உலகில் கடவுள் நம்பிக்கையும் சரி நம்பிக்கையின்மையும் சரி, இரண்டுமே மாயை சார்ந்தவை. மாயையை வெற்றி கொள்வதே வாழ்வு என்பது என் கருத்து. அந்த வெற்றிக்கு நம்பிக்கை என்னும் மாயை துணை நிற்கிறது. நம்பிக்கையின்மையோ தேக்கி நிறுத்தி விடுகிறது.

எனவே நான் நம்பிக்கையை மாயை சார்ந்து சிந்திப்பதும், பேசுவதுமாக இருக்கிறேன். ஒரு படகில் பயணிப்பவன் அந்த படகை தன் பயண இடமாக மட்டுமே கருதுவான். அந்த படகையே வீடாக, உலகமாக எப்படி கருதமாட்டானோ அப்படியே நானும் கடவுள் நம்பிக்கையையும் கருதுகிறேன்.

இந்த மாயமாய் சிலரிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.

இறப்புக்கு பிறகும் மனித வாழ்வின் ஆசாபாசங்கள் தொடர்வதையும், விதிவழிச் செல்லும் வாழ்வில் அந்த விதியின் போக்கினுக்கு ஏற்ப புறத்தில் உள்ள அவ்வளவும் அசைந்து கொடுப்பதையும் இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.

‘மாயமாய் சிலர்’ நாவலும் ஒரு ஆன்மீக மர்மப்படைப்பே! இதை நான் வேகமாய் முடித்துவிட்டதாக பலர் கூறினார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. இதுதான் இந்த நாவலுக்கான சரியான நீளம்.

வாசியுங்கள் - யோசியுங்கள் - விவாதிக்கவும் முன்வாருங்கள் - எல்லாமே ஆரோக்கியம்.

-இந்திரா சௌந்தர்ராஜன்

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100700284
Maayamaai Silar

Read more from Indira Soundarajan

Related to Maayamaai Silar

Related ebooks

Related categories

Reviews for Maayamaai Silar

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maayamaai Silar - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    மாயமாய் சிலர்

    Maayamaai Silar

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    என்னுரை

    ந்த நாவல் தினமலர் வாரமலரில் தொடர்கதையாக வந்தது... ஒரு ஜனரஞ்சகமான இதழில் தொடர்கதையாக எழுதும்போது அதில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் வந்துவிடக்கூடாது. கூடவே அதில் இலக்கியத் தரத்தையே அல்லது வேறுவிதமான உன்னதங்களையோ கலந்து ஒரு நாவலை உருவாக்குவது என்பது எழுதும் எழுத்தாளர்களின் தனித்தன்மையையும் திண்மையையும் பொறுத்த விஷயமாகும்.

    வெறும் விறுவிறுப்பும் பரபரப்பும் படிக்கச் செய்த வேகத்தில் மறக்கவும் வைத்துவிடும். சில மர்மமான திகில் உணர்ச்சிகள் அடிப்படையிலேயே விறுவிறுப்பாய் இருக்கும். மனதையும் பாதிக்கும். ஆனால் இப்படிப்பட்ட பாதிப்புகளை யாரும் பிறரிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். எனது பாதிப்பு என்னோடு போகட்டும் என்பது போல நினைத்து இருந்துவிடுவார்கள்.

    மனதை நெகிழ்த்துகின்ற விஷயங்களையும் இன்பமான பாதிப்புகளையும் மட்டும் எவரும் வெளிக்காட்டாமல் இருக்கவே மாட்டார்கள். இதை எல்லாம் புரிந்து வைத்துக்கொண்டு ஒரு நல்ல கருப்பொருளை எடுத்துக்கொண்டு அதற்கு ரத்தமும் சதையும் கொடுத்து உருவாக்குவதில்தான் எழுத்தாளரின் வெற்றியே இருக்கிறது.

    நானும் அப்படி முயல்கின்ற ஒருவனே...! வழக்கமான நாவல்களில் இருந்து மிகவே வேறுபட்டு நான் பல படைப்புகளையும் உருவாக்கியும் வருகிறேன். எனது பாணி என்றே ஒன்று உருவாகிவிட்டது. எனது பாணிக்கு உதாரணம் காட்ட நேற்றைய மற்றும் இன்றைய எழுத்துலகில் எவரும் இல்லை என்பதே உண்மை.

    எழுதத் தொடங்கி 32 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதில் பத்திரிக்கை தொடர்களின் எண்ணிக்கை நூறைத் தொடப்போகிறது. இது வேகமான வளர்ச்சியா, இல்லை சீரான வளர்ச்சியா, அதுவுமில்லை சுமாரான வளர்ச்சியா என்பதெல்லாம் என்னை யாரோடு ஒப்பிடப்போகிறார்கள் என்பதை பொறுத்து மாறுபடும்.

    எண்ணிக்கையில் பெரிது சிறிதுகள் இல்லை என்பதே நான் உணர்ந்திருக்கும் உண்மை. நம் எழுத்து வாசகனை எந்த அளவு சிந்திக்க வைத்தது - நேசிக்க வைத்தது - பாதித்தது மனதில் அழியாதபடி நின்றுகொண்டது என்பதில்தான் ஒரு எழுத்தாளனின் சாதனை இருக்கிறது.

    அப்படிப் பார்த்தால் நான் நிறையவே சாதித்திருப்பதாக படுகிறது. ஆனாலும் ஆன்மீகச் சார்புடைய ஒரு எழுத்தாளனாக நான் இருப்பதால் சிந்தனையாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சிலர் என்னைச் சற்று வித்தியாசமாக பார்ப்பதை நான் அறிவேன்.

    எழுத்தாளன் என்பவன் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவனிடம் மூடங்களும், பிற்போக்கும் இருக்கும் என்று தங்களை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்வோர் கருதுவதையும் அறிவேன். இதனாலேயே பல எழுத்தாளர்கள் தங்கள் கடவுள் நம்பிக்கையைத் தங்கள் படைப்புகளில் காட்டாமல் விட்டதையும் அறிவேன்.

    நான் இப்படிச் சிந்திப்பவர்களால் பாதிப்புக்குள்ளாக தயாரில்லை.

    இந்த உலகில் கடவுள் நம்பிக்கையும் சரி நம்பிக்கையின்மையும் சரி, இரண்டுமே மாயை சார்ந்தவை. மாயையை வெற்றி கொள்வதே வாழ்வு என்பது என் கருத்து. அந்த வெற்றிக்கு நம்பிக்கை என்னும் மாயை துணை நிற்கிறது. நம்பிக்கையின்மையோ தேக்கி நிறுத்தி விடுகிறது.

    எனவே நான் நம்பிக்கையை மாயை சார்ந்து சிந்திப்பதும், பேசுவதுமாக இருக்கிறேன். ஒரு படகில் பயணிப்பவன் அந்த படகை தன் பயண இடமாக மட்டுமே கருதுவான். அந்த படகையே வீடாக, உலகமாக எப்படி கருதமாட்டானோ அப்படியே நானும் கடவுள் நம்பிக்கையையும் கருதுகிறேன்.

    எனது கருத்துகள்தான் கதைகளில் பாத்திரங்களின் வாயிலாகவும் வெளிப்படுகின்றன.

    இந்த மாயமாய் சிலரிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.

    இறப்புக்கு பிறகும் மனித வாழ்வின் ஆசாபாசங்கள் தொடர்வதையும், விதிவழிச் செல்லும் வாழ்வில் அந்த விதியின் போக்கினுக்கு ஏற்ப புறத்தில் உள்ள அவ்வளவும் அசைந்து கொடுப்பதையும் இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.

    விதி பெரிதா? மதி பெரிதா? என்னும் கேள்வியில் மதியே பெரிது என்பதே முன்பு என் கருத்து. அது பெரிதாய் இருக்கப் போய்தான் விதியை பற்றியே சிந்திக்க முடிகிறது. விதியே பெரிதாய் இருந்திருந்தால் அது மதியை சிந்திக்கவே விடாமல் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பது என் அனுமானமாக இருந்தது. ஆனால் ஒரு சித்த புருஷர் உண்மையில் விதிதான் மதி - மதிதான் விதி என்று சொன்ன கருத்தை நான் அப்போது பெரிதாக கருதவில்லை. ஆனால், இப்போது அதுதான் உண்மை என்று என் உள்ளம் கருதத் தொடங்கியுள்ளது. இந்த உலகில் நாம் வியந்தும் நெகிழ்ந்தும் சிந்திக்க நிறைய விஷயங்கள் உள்ளன. கடவுள் சார்புடைய விஷயங்கள் அதில் ஒரு அங்கம். அவ்வளவே!

    நான் நிறையவே சமுதாய கீழ்மைகள் குறித்தும் மாற்றங்கள் குறித்தும் எழுதியுள்ளேன். நாவல் போட்டிகளில் நான் பரிசுகளை வென்றெடுத்த படைப்புகள் எல்லாமே சமுதாய கோபத்தோடு நான் எழுதியவையே...

    யாகப்பசுக்கள், ஒன்றின் நிறம் இரண்டு, ஆசை, நெசவு, அனலாய் காயும் அம்புலிகள் என்று அந்தப் பட்டியலும் பெரியது. ஆனாலும் அவற்றில் நான் வெளித்தெரிந்ததைவிட ஆன்மீக மர்மங்களை அலசும்போது நான் வெளித்தெரிவது பிரகாசமாகவும் பெரிதாகவும் இருக்கிறது.

    இந்த ‘மாயமாய் சிலர்’ நாவலும் ஒரு ஆன்மீக மர்மப்படைப்பே! இதை நான் வேகமாய் முடித்துவிட்டதாக பலர் கூறினார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. இதுதான் இந்த நாவலுக்கான சரியான நீளம்.

    வாசியுங்கள் - யோசியுங்கள் - விவாதிக்கவும் முன்வாருங்கள் - எல்லாமே ஆரோக்கியம்.

    -இந்திரா சௌந்தர்ராஜன்

    1

    உலகில் எவ்வளவோ உயிரினங்கள்! இந்த உயிரினங்களில் சப்தங்களின் தொகுப்பான மனதைக் கொண்டவன்தான் மனிதன்! மனிதன் தான் மனிதன் என்றாகியிருக்க வேண்டும். மனம் என்ற ஒன்று வந்த உடனேயே நேற்று, இன்று, நாளை என்கிற கால அடையாளங்களும் தோன்றிவிட்டன.

    எந்த ஒரு மிருகத்துக்கும் அல்லது பூச்சிக்கும் அதுவுமில்லாது பறவைக்கும் தன்னைப் பற்றியே தெரியாது. தெரிந்துகொள்ள அதற்கு சிந்தனை என்று ஒன்று வேண்டும். சிந்திக்க ஆரம்பிக்கும் போதுதான் எல்லாவித புரிதல்களும் அல்லது குழப்பங்களும் ஆரம்பிக்கின்றன. இந்தப் புரிதலும், குழப்பமும் இல்லாமல் உணர்வாலேயே தனது பிறப்பு, வளர்வு, முடிவு என்கிற மூன்று நிலைப்பாடுகளையும் ஏனைய உயிரினங்கள் முடித்துக் கொண்டுவிட மனிதன் மட்டுமே மனம் காரணமாக இன்ப துன்பங்களிடம் சிக்கிக் கொள்கிறான். ஒன்பது விதமான உணர்வு நிலைகளை உருவாக்கிக் கொண்டு அதில் ஏதாவது ஒன்றில் எப்போதும் மனதை வைத்திருக்கிறான்.

    இந்த மனதை இந்த உணர்வு நிலைகளில் இருந்து மீட்டு, அமைதிக்கு, அதாவது தான் யார் என்பதே தெரியாத அல்லது மறந்து போகும் ஒரு நிலைக்கு மனதைக் கொண்டு செல்வதையே தியானம் அல்லது யோகம் என்கிறது மானுட உச்சம். இந்த அமைதி நிலையின் சக்தி ஒரு அணுகுண்டை விட அதிகமானது என்கிறது அது. அப்படியே ஒரு படி மேலே போய் சப்தங்களின் தொகுப்பான மனதை ஒருவர் சர்க்கஸ் மிருகம் போல அடக்கியாள கற்றுக்கொண்டு விட்டால் அவரால் இந்த பூமியின் விசைப்பாட்டிலேயே வேகத்தை அல்லது ஒரு செயலற்ற தன்மையை உருவாக்கி விடமுடியுமாம்.

    எல்லாமே நம் மனம் எப்படிப்பட்டது என்பதில்தான் உள்ளது. ஆம்... இதனுள்தான் பிசாசும் உள்ளது. தேவனும் இருக்கிறான்!.

    ஸ்

    கூல் யூனிபார்மில் சஞ்ஜய் பார்ப்பதற்கு வெகு அழகாக இருந்தான். ஏழாம் வகுப்பில்தான் படிக்கிறான். ஆனால், இன்றைய ஏழாம் வகுப்பு அன்றைய எண்பதுகளின் பட்ட வகுப்புப் பாடங்களை கொண்டிருப்பதால், அன்று நாம் பின் தங்கியிருந்தோமா இல்லை இவர்கள்தான் முந்திக்கொண்டு ஓடுகிறார்களா என்பது தெரியவில்லை.

    பேரனை அனுசரணையோடு பார்த்தபடி அமர்ந்து கொண்டிருந்தார் பெரியவர் சங்கரலிங்கம். அவர் மடியில் மடங்கிக் கிடந்தது அன்றைய தினசரி... ஹாட்பேக்கில் அவனுக்கு மிகவும் பிடித்த கத்தரிக்கா சாதத்தை வைத்து புடவை முந்தியால் புறத்தை துடைத்தப்படியே நீட்டினாள் விஜயா.

    சஞ்ஜய்யின் தாய்.

    அப்படியே வாட்டர் பாட்டிலையும் உடன் தந்தாள். இதெல்லாம் அன்றாடம். வாசலில் கார் காத்துக் கொண்டிருந்தது. டிரைவருக்கு அதை பளபளப்பாக்குவது தான் வேலை. சும்மா இருந்தாலோ இல்லை பீடி, சிகரெட் என்று ஒதுங்கினாலோ அந்த பங்களாவில் வேலை பார்க்க முடியாது.

    தொழிலதிபர் கஸ்தூரிரங்கன் என்றால் மிகப் பிரசித்தம். கஸ்தூரிரங்கன் ஒரு ஒயிட் அண்ட் ஒயிட் மேன், கால் செருப்புகூட வெள்ளை.

    இவைகளிலாவது துளி அழுக்கிருக்கும். மனதில் துளிகூட அதற்கு இடமில்லை. எண்பதுகளில் தொழில் தொடங்கி தொண்ணூறுகளில் ஒரு நிலைத்த இடத்தைப் பிடித்து இந்த இரண்டாயிரத்து ஒன்பதில் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்யும் ஒரு வார்த்தக சிங்கமாக திகழ்பவர்.

    இவர்களுக்கு மிக நாள்பட்ட செல்வமாக வாராது வந்த மாமணியாக 1997-ல் வந்து பிறந்தவன்தான் சஞ்ஜய். அந்த பிள்ளைதான் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அந்த பிரமாண்டமான பங்களாவில் பளிங்கினாலேயே இழைக்கப்பட்ட ஒரு பூஜை அறையும், அதன் நடுவில் ஸ்படிக லிங்கமும் இருந்தது. அறை முழுக்க மெல்லிய ஜவ்வாது வாசம்.

    சஞ்ஜய் நேராக அங்கே சென்று ஸ்படிக லிங்கத்தை வணங்கி நின்றான். பிறகு ஹால் ஊஞ்சலில் தினசரியோடு அமர்ந்திருந்த தாத்தாவிடம் வந்து, 'தாத்தா நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு வாரேன்..." என்றபடி புறப்பட்டான். விஜயாவும் டாட்டா காட்டினாள். அவனை ஏற்றிக் கொண்டு காரும் புறப்பட்டது. கஸ்தூரிரங்கன் ஊரில் இல்லை!

    வார்த்த விஷயமாக பாங்காக் வரை போயிருந்தார். இன்று வர வேண்டும்.

    சஞ்ஜய் அகன்ற நிலையில் ஹாலில் போன் ஒலித்தது. காதைக் கொடுத்தாள் விஜயா.

    மறுபக்கத்தில் கஸ்தூரிரங்கன்தான்...

    'என்னம்மா சஞ்ஜய் ஸ்கூலுக்குப் போயிட்டானா?"

    'இப்பதாங்க போறான்... நீங்க ஒரு நிமிஷம் முந்தி பண்ணியிருந்தாலும் பிடிச்சிருக்கலாம்..."

    'பரவால்ல விடு... நான் டிரைவர் செல்போன் மூலமா பேசிக்கிறேன்..."

    'நீங்க இன்னிக்கு வந்துடுறீங்கதானே?"

    'கட்டாயமா... மதியம் லஞ்சுக்கு வீட்ல இருப்பேன். ஆனா, இப்ப நான் சிங்கப்பூர் ஏர்போர்ட்ல இருக்கேன் விஜி..."

    'வந்துடுங்க... இன்னிக்கு உங்க புதன்கிழமை ஆர்டர்படி கத்தரிக்கா சாதமும், அவியலும் ஸ்பெஷல் மெனு."

    'அதுக்காகவே ஃப்ளைட்லகூட நான் கை நனைக்கப்போறதில்லை."

    கணவனின் பேச்சு விஜயாவிடம் ஒரு பெருமிதச் சிரிப்பாய் விரிந்தது.

    'பை த பை... ஏர்போர்ட்டுக்கு நானே டிரைவரை வரச் சொல்லிடுறேன். சரியா ஒன்றரைக்கு ஃப்ளைட் லேண்ட் ஆயிடும். நான் இரண்டரைக்கு வீட்ல இருப்பேன். இன்றைக்கு ஈவினிங் ஃபேக்டரில குவாலிட்டி மன்த் செலப்ரேஷன் வேற இருக்கே. சாப்பிட்ட உடனேயே ஃபேக்டரிக்கு புறப்படணும்."

    'இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கக் கூடாதா?"

    'விஜி என் மாதரி முதலாளிகளுக்கு மாறுபட்ட வேலைகள்தான் ரெஸ்ட்."

    'சுவர் இருந்தா தான் சித்திரம் தீட்ட முடியும்... உடம்பை கவனமா வெச்சுக்கலேன்னா கஷ்டங்க..."

    'எனக்கு இப்ப என்ன குறை? எப்பவும் ஏ.ஸி.லதானே இருக்கு இந்த உடம்பு. பழச்சாறு, கிச்சடி, அரிசி, பாதாம், முந்திரின்னு எதுல குறை?

    என் மாதிரி கோடிகளை கட்டி ஆள்ற நபர்களுக்கு, உடம்பு ஒரு விஷயமே கிடையாது விஜயா. மனசுதான்...."

    'உடம்புக்கு ஒண்ணு வரும்போது மனசும்தானே கஷ்டப்படும்?"

    'அது உடம்புக்கு எதாவது வந்தாதானே....? அநாவசியமா கவலைப்படாதே... என் மனசு அப்பவும் உற்சாகமாக கலகலன்னு இருக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்கோ.

    நான்லாம் ரொம்ப ரொம்ப சின்னதா ஒரு தப்பான முடிவெடுத்தாலும் போச்சு... அது கஸ்தூரி இண்டஸ்ட்ரீயின் நாலாயிரம் தொழிலாளர்களோட குடும்பங்கள்ல சில ஆயிரம் நஷ்டங்களா எதிரொலிக்கும்.

    உன் நம்பிக்கையின்படி கடவுள் எங்களை கோடீஸ்வரனாக்கியிருக்கிறதே பல ஆயிரம் குடும்பங்களை எங்க மூலமா ரட்சிக்கத்தான். ஊருக்குத்தான் நான் பணக்காரன். உண்மையில நான் உன் கடவுளோட காஸ்ட்லியான வேலைக்காரன்."

    கஸ்தூரிரங்கனின் விளக்கத்தைக் கேட்டு சிரித்தபடியே, போனை முடக்கினாள் விஜயா. 'என்னம்மா... கஸ்தூரி இப்ப எங்க இருந்து பேசினான்..." வீட்டுப் பெரியவரும் கஸ்தூரிரங்கனின் தந்தையுமான சங்கரலிங்கம் கேட்டார்.

    'சிங்கப்பூர்ல இருந்து மாமா... வந்துகிட்டே இருக்காராம். மதியம் சாப்பிட வந்துடுவாராம்..."

    நீ சமையல்காரம்மாவை தள்ளி நிறுத்திக்கிட்டு சமைக்கும்போதே நினைச்சேன்... என்று அவரும் சிரித்தார்.

    அந்த மெட்ரிகுலேஷன் பள்ளி முகப்பில் கார் நிற்கவும் சஞ்ஜய் இறங்கிக் கொண்டான். உள்ளே சென்று மறையும் வரை பார்த்துவிட்டுத்தான் டிரைவர் கிளம்பினான்.

    பள்ளிக்கு வெளியே ஒரு டைனோசர் சோம்பல் முறிப்பது போல வாதநாராயண மரங்கள்... அவைகளின் பருத்த அடிமரம் பின்னால் இருந்து இருவர் மெல்ல வெளிப்பட்டனர். பாபு, ரகு என்கிற அந்த இருவரும் ஒருவரோடொருவர் பேச ஆரம்பித்தனர்.

    பார்த்துகிட்டேல்ல பாபு, இவன்தான் உன்னை டிஸ்மிஸ் பண்ணிய உன் அருமை முதலாளியோட தவப்புதல்வன்.

    எப்பவும் கார்ல தான் வருவானோ?

    கேனயன் மாதிரி கேக்கறியே... இந்த காலத்துல குப்பன் சுப்பன்லாமே தன் பிள்ளைங்கள கார்லதான் அனுப்பறாங்க. பார்த்தேல்ல ட்ராபிக்கை...?

    அதுக்கில்லை ரகு... இப்படி டிரைவர் பாதுகாப்போட டெய்லி கார்ல வர்ற ஒருத்தனை நாம எப்படிக் கடத்தப்போறோம்? அதுக்காகத்தான் கேட்டேன்.

    அதெல்லாம் நீ கவலைப்படாதே. பன்னெண்டு மணிக்கு ஸ்கூலுக்குப் போன் வரும். அந்த போன்ல உன் அருமை முதலாளியோட அப்பா சங்கரலிங்கம் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்கற தகவலும், கார் அனுப்பியிருக்கோம், சஞ்ஜயை அனுப்பி வைங்கன்னு ஒரு தகவலும் போகும். நீ ஒரு சின்ஸியரான கார் டிரைவரா லட்சணமா ஸ்கூல் வாசல்ல நின்று வெளியே அந்த சஞ்ஜய் வரும்போது தூக்கிப்போட்டுக்கிட்டு வந்துடற...

    அந்தப்பய என் கார்ல ஏறணுமே?

    வாழப்பழத்தை உரிச்சுத்தான் தரலாம். உனக்காக நானே சாப்பிடல்லாம் முடியாது. முட்டாப்பயலே... அந்த நேரத்துல‘நான் ஆபீஸ் டிரைவர்... வழக்கமா உனக்காக வர்ற டிரைவர் ஆஸ்பத்திரியில இருக்கார்’னோ இல்லை வேற ஏதாவது சொல்லியோ சமாளி... அஞ்சு கோடி ரூபாய் வேணும். காலம்பூரா காலாட்டிகிட்டே சாப்பிடணும்னா கொஞ்சம் தைரியமா செயல்பட்டுத்தான் தீரணும்.

    'சரி... சரி... அந்தப் பய முரண்டுப்பிடிச்சா மயக்கம் வரவழைக்கற ஸ்பிரே இருக்கு. அதை அடிச்சு அள்ளிக்கிட்டு வந்துடறேன்."

    'உஹ_ம்... நீ சரிப்படமாட்ட. நீ போன் பண்ணி விஷயத்த சொல். நான் பையனை தூக்கிட்டு வந்துடறேன். சினிமா,

    Enjoying the preview?
    Page 1 of 1