Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannan Ennum Mannan!
Kannan Ennum Mannan!
Kannan Ennum Mannan!
Ebook149 pages1 hour

Kannan Ennum Mannan!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கவித்துவமான தலைப்பு கொண்ட இந்த நூல் ஒரு புராண நாவல்! புராண நாவலா? இது என்ன விந்தை.... என்று உங்களிடம் பலருக்கு எண்ணத் தோன்றும். ஆனால் அதுவே உண்மை. நம் புராணங்களில் எவ்வளவோ சுவாரஸ்யமான விஷயங்கள் புதைந்துள்ளன. அவைகளில் ஸ்ரீகிருஷ்ணனின் பெருமைகளை எடுத்துக் கூறிடும் ஸ்ரீ பாகவதம் ஒன்று. அந்த பாகவதத்துக்குள் நான் கண்டு வியந்த ஒரு விஷயம்தான் இந்த புராண நாவலுக்கு அடித்தளம்!

இதன் ஹீரோ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்! கதாநாயகியோ ஒருவர் மாத்திரமல்ல. பாமா, ருக்மிணி, ஜாம்பவதி என்று ஒருவருக்கு மூன்று பேர். இக்கதைக்குள் பிள்ளையாரும் ஒரு முக்கிய பாத்திரம்! எல்லாவற்றுக்கும் மேலாக சமந்தகமணி என்னும் ஒரு அதிசய மாலைக்கு இதில் பிரதான பாங்கு. இந்த சமந்தகமணிதான் சகலத்துக்கும் காரணம்.

நம் மனித வாழ்வில் பொறாமை, காதல், கோபம், சூது, கலிவு என்கிற குணங்களுக்கெல்லாம் எப்படி கணிசமான இடம் உள்ளதோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல. நாம் தேவர்கள் என்றும் தெய்விக புருஷர்கள் என்றும் போற்றும் புராண காலத்து மனிதர்கள்!

இந்த நாவல் காலத்தையும் பிரதிபலிக்கிறது. பல அரிய உண்மைகளையும் இது நமக்கு உணர்த்துகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை ஏன் எல்லோருக்கும் மிக பிடிக்கிறது என்பதை இந்த நாவலை வாசித்து முடிக்கையில், உணரலாம். ஆழ்வார்களின் பாசுரக் கருத்துகள் தலைமை தாங்கி வர ஒவ்வொரு அத்தியாயமும் பரபரப்பாக செல்லும்.

அன்புடன், இந்திரா சௌந்தர்ராஜன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703841
Kannan Ennum Mannan!

Read more from Indira Soundarajan

Related to Kannan Ennum Mannan!

Related ebooks

Reviews for Kannan Ennum Mannan!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannan Ennum Mannan! - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    கண்ணன் என்னும் மன்னன்!

    Kannan Ennum Mannan!

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    என்னுரை

    கவித்துவமான தலைப்பு கொண்ட இந்த நூல் ஒரு புராண நாவல்! புராண நாவலா? இது என்ன விந்தை.... என்று உங்களிடம் பலருக்கு எண்ணத் தோன்றும். ஆனால் அதுவே உண்மை. நம் புராணங்களில் எவ்வளவோ சுவாரஸ்யமான விஷயங்கள் புதைந்துள்ளன. அவைகளில் ஸ்ரீகிருஷ்ணனின் பெருமைகளை எடுத்துக் கூறிடும் ஸ்ரீ பாகவதம் ஒன்று. அந்த பாகவதத்துக்குள் நான் கண்டு வியந்த ஒரு விஷயம்தான் இந்த புராண நாவலுக்கு அடித்தளம்!

    இதன் ஹீரோ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்! கதாநாயகியோ ஒருவர் மாத்திரமல்ல. பாமா, ருக்மிணி, ஜாம்பவதி என்று ஒருவருக்கு மூன்று பேர். இக்கதைக்குள் பிள்ளையாரும் ஒரு முக்கிய பாத்திரம்! எல்லாவற்றுக்கும் மேலாக சமந்தகமணி என்னும் ஒரு அதிசய மாலைக்கு இதில் பிரதான பாங்கு. இந்த சமந்தகமணிதான் சகலத்துக்கும் காரணம்.

    நம் மனித வாழ்வில் பொறாமை, காதல், கோபம், சூது, கலிவு என்கிற குணங்களுக்கெல்லாம் எப்படி கணிசமான இடம் உள்ளதோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல. நாம் தேவர்கள் என்றும் தெய்விக புருஷர்கள் என்றும் போற்றும் புராண காலத்து மனிதர்கள்!

    இந்த நாவல் காலத்தையும் பிரதிபலிக்கிறது. பல அரிய உண்மைகளையும் இது நமக்கு உணர்த்துகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை ஏன் எல்லோருக்கும் மிக பிடிக்கிறது என்பதை இந்த நாவலை வாசித்து முடிக்கையில், உணரலாம். ஆழ்வார்களின் பாசுரக் கருத்துகள் தலைமை தாங்கி வர ஒவ்வொரு அத்தியாயமும் பரபரப்பாக செல்லும்.

    அன்புடன் இந்திரா சௌந்தர்ராஜன்

    1

    ஆதி ஆதி ஆதி நீர் ஓர் அண்டமாதி ஆதலால் சோதியாத சோதிநீஅது உண்மையில் விளங்கினாய் வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய் ஆதியாகி ஆயனாய மாயமென்ன மாயமே!

    - திருமழிசை ஆழ்வார்

    இந்த பூ உலகில் மோட்சம் தரவல்ல புனித க்ஷேத்திரங்கள் ஏழு!

    'அயோத்தி, மதுரா, ஹரித்துவார், உஜ்ஜயினி, காசி, காஞ்சிபுரம், துவாரகை'. இந்த ஏழில் துவாரகைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இங்கேதான், நம் கண்ணுக்கு கண்ணான கண்ணன், அண்ணன் பலராமனோடு கூடி ஆட்சி புரிந்தான். இதனால் 'துவாரகாதிபதி' என்கிற ஒரு பெயரும் கண்ணனுக்கு ஏற்பட்டது.

    கண்ணன் பிறந்தது ஓரிடம்.... வளர்ந்தது ஓரிடம்.... அவன் மன்னனாய் நல்லாட்சி செலுத்தியதும் ஓரிடம்தான்.......! தேவகிக்கும், வசுதேவருக்கும் மகனாய் சிறைக்குள் பிறந்தவன். யசோதையின் மகனாகி மதுரா நகரில் குறும்புகளின் சிகரங்களில் ஏறுகிறான். பின், அங்கிருந்து துவாரகை வந்ததும், அங்கே அவன் மனிதர்களுக்கே உண்டான காம்யார்த்தங்களோடு வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் பலப்பல! ருக்மிணி, பாமா, ஜாம்பவதி என்று மூன்று ரத்தினப் பெண்களை மணந்ததெல்லாம் துவாரகாதிபதியாக இருந்த போது தான்!

    இதில் ஜாம்பவதியை அடையக் காரணமான சமந்தகமணி என்னும் அதிசய ரத்தினக்கல் ஒன்றால் ஏற்பட்ட அனுபவங்கள் மிக ரசமானவை.

    அதற்கு முன், துவாரகைக்கு அப்படி என்ன சிறப்பு என்று பார்த்து விடுவோமே....?

    ஸர்யாதி என்று ஒரு மன்னன்...

    இந்த உலகம் அவ்வளவையும், தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆள வேண்டும் என்பது அவன் விருப்பம். இதனால் அகந்தை, பேராசை, கோபம், பொறாமை என்று வேண்டாத குணங்கள் இவனிடம் மண்டிக் கிடந்தன.

    இவனுக்குப் பல புதல்வர்கள். அவர்களில், ஆனர்தன் என்பவன் மிகவும் மாறுபட்டவன். எப்படி இரண்யனுக்கு மகனாக பிரகலாதன் வந்து பிறந்தானோ, அப்படி இந்த ஸர்யாதிக்கு மகனாக, ஆனர்தன் வந்து பிறந்து விட்டான் எனலாம். இந்த உலகம் எனக்கு சொந்தம் என்று கூறினால் தவறப்பா.... இந்த உலகம் பூதேவிக்கு சொந்தம். பூதேவி அந்த ஹரிக்கு சொந்தம். அந்த ஹரிக்கே நாமெல்லாம் சொந்தம், என்பான்.

    ஸர்யாதிக்கு மகனின் ஹரிபக்தியும் சரி.... தன்னை மீறிப் பேசும் தன்மையும் சரி.... சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதே சமயம், ஆனந்தன் கூறுவதே சத்யமான உண்மை என்கிற ஞானமும் இல்லை.

    ஒருநாள் பார்த்தான். அடேய் ஆனர்தா.... நீ இனி என் புதல்வனில்லை. என் ராஜ்யத்தில் உனக்கு இடமுமில்லை. பரந்த இந்த உலகின் அவ்வளவு நிலப்பரப்புமே என் ஆளுகைக்கு உட்பட்டதாகும். எனவே, இந்த மண்ணில் எங்கும் உனக்கு இடமில்லை. உனக்கொரு இடம் வேண்டுமானால், நீ சதா போற்றும் ஹரியிடமே கேட்டு வாங்கிக்கொள். அவனும், உனக்கான இடத்தை எப்படித் தருகிறான் என்று பார்க்கிறேன் என்று கூறி ஆனந்தனைத் துரத்தினான்.

    ஆனர்தன் ஒன்றும் அதைக் கேட்டு அசரவில்லை.

    அப்பா...... மண் மீது தான் உங்கள் நாட்டாமை. நீர் மீதல்ல. என் ஞானப்பிதா பள்ளி கொண்டிருப்பது பாற்கடல் நீர்மிசை தானே? நாரமாகிய நீரை அணைந்து கிடப்பவன் என்பதால் தானே, அவனை 'நாரணன்' என்றே அழைக்கிறோம்? எனவே, அவன் பள்ளி கிடந்தருளும் அந்த கடல் நீர் மிசை நான், அதன் கரையை எனக்கு இடமாகக் கொள்வேன். இனி அவன்பாடு என்பாடு என்று கூறிவிட்டு அலைகள் வந்து தழுவிச் செல்லும் கரையில் வந்து நின்றான்.

    அப்பனே அடித்துத் துரத்தி விட்டானே என்கிற கவலை கொஞ்சமும் இன்றி அப்பனுக்கு அப்பனான அந்த ஹரியை எண்ணித் தவம் செய்யலானான்.

    இந்த உலகில் காரணமில்லாமல் காரியம் எது?

    எந்த ஆணவம் படைத்தவன் சாதித்திருக்கிறான்? அவர்கள் செயலின் எதிர்வினைகளால் சாகசங்களும், சாதனைகளும் வேண்டுமானால் நிகழ்ந்ததுண்டு.

    நானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டான் இரண்யன். அவனாலேயே நமக்கெல்லாம் நரசிம்மம் கிடைத்தது. இங்கேயும் ஸர்யாதியின் ஆணவம் அவன் மகனையே துரத்தப் போய், ஒரு அதிசயம் நிகழ ஆரம்பித்தது. அந்த ஹரியும், தன் சதுர்புஜங்களோடு சங்கு சக்கரதாரியாய் அவனுக்கு காட்சித் தந்தார்.

    'ஆனர்தா.... உனக்கான இடத்தை இங்கேயே நான் தருகிறேன். உன் காலடி பட்டு கடல் அலைகளால் கழுவப்பட்ட இந்த பூமி இனி உன்னுடையது. என்னுடைய இருப்பிடமான வைகுண்டத்தின் ஒரு பாகம் இது என்றும் கூட, நீ எடுத்துக் கொள்ளலாம் என்று கருணை செய்தார்.

    அந்தக் கடல் பரப்பில் நூறு யோசனை அளவுக்கு நிலப் பரப்பு எழும்பி நின்றது. ஸ்ரீ ஹரி அத்தோடு நின்றாரில்லை.

    ஆனர்தா.... உன்னைத் தொட்டுத் துலங்கும் இம்மண்ணில் நானே ஒரு காலம் அவதாரம் எடுத்து வந்து வாழ்வேன். இங்கே என்னை ஐந்து தினங்கள் இடையறாது தியானிப்பவர்கள் என்னை அடைவார்கள். அவர்களின் எலும்புகள், நான் முழங்கும் திருச்சங்கம் என்னும் சங்காகி, இக்கடலில் விளையும் என்றும் திருவாய் மலர்ந்தார். தம்!

    அதனால்தான் அந்த புண்ணியத்தலம், பத்தோடு ஒன்று பதினொன்று என்று ஆகிவிடாமல், 'துவாரகை' என்றானது. கடலுக்கு நடுவில் அமைந்த ஒரு நாடாக கூர்ஜரத்துக்கு (குஜராத்) மேற்கில் இது அமைந்தது.

    கடல் மாநகரம் என்பதால் இதன் மாளிகைகளும் சரி, தோட்டங்களும் சரி கண்களைக் கவர்ந்திழுத்தன. இது போக, பாலங்கள், தேர் செல்லத் தனியாய்.... யானை செல்லத் தனியாய் என்று அதில் பல பிரிவுகள்!

    அது எல்லாம் ஸ்ரீ ஹரியின் கட்டளையால் விஸ்வகர்மா செய்த வேலைப்பாடு. ஊரே ஜெகஜ் ஜோதியாக ஜொலித்தது. வைகுண்ட பாகம் என்றால் சும்மாவா?

    அன்று

    Enjoying the preview?
    Page 1 of 1