Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aranmanai Ragasiyam Part -2
Aranmanai Ragasiyam Part -2
Aranmanai Ragasiyam Part -2
Ebook356 pages3 hours

Aranmanai Ragasiyam Part -2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம் வாசகர்களே!
கிட்டத்தட்ட 1590-ஆம் ஆண்டு காலகட்டத்து தமிழக வரலாற்றை Show less
முழுக்க முழுக்க நிஜமான சம்பவங்களோடு சரித்திரப் பின்னணியோடு சொல்ல வருகிறேன்.

"அரண்மனை ரகசியம்'' என்ற பெயரில் ஆரம்பமாகும் இந்த வரலாற்றுத் தொடர் நிச்சயம் பல உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டும். செய்யப்படுவதல்ல சரித்திரத் தொடர்கதை; சொல்லப் படுவதே சரித்திரத் தொடர்கதை.
நம்முடைய தமிழ்மன்னன் ராஜராஜ சோழனும், பர்மா வரை புகழ்க்கொடி ஏற்றிய ராஜேந்திர சோழனும் வாழ்ந்து விட்டுப் போனபின் அந்த வீரத்தமிழினப் பரம்பரை முடிவுக்கு வந்தபின், நம் தமிழகத்தின் நிலை என்ன? அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் வந்து நுழையும் வரைக்கும் தமிழகத்தின் முக்கிய அரசியல் நிலவரம் எப்படி இருந்தது? யார் வசம் கிடைத்தது? எப்படித் திரிந்தது? என்ன ஆயிற்று? எங்கே எழுந்தது? விழுந்தது? என்பன போன்ற பல கேள்விகள் மனதைக்குடைய இந்த உண்மையிலும் உண்மையான காலகட்டம் என் கண்களுக்குப் புலனானது.
12-ஆம் நூற்றாண்டு வரை சோழவம்சம் பெரும் செல்வாக்கோடு பவனி வந்தது என்றாலும் அதன்பின் உள்உறவுகளில் துரோகங்கள், காட்டிக் கொடுத்தல், அரசியல் சூழ்ச்சி காரணமாய் மெல்ல மெல்ல தமிழின மன்னர்கள் புகழ் ஒடுங்கி, பராக்கிரமம் அற்றவர்களாய் சிதறிப் போகிறார்கள். ஒரு படையெடுப்பில் ஜெயிக்கும் மன்னன் எதிரி மன்னனது குடும்பத்தை கூண்டோடு அழித்தலும், அவனது கோட்டை கொத்தளம்-வாழ்க்கை-வாரிசு ஆகிய சுவடுகள் மிச்சமின்றி தீக்கிரையாக்கலும்தான் இந்த வம்சா வழி மன்னர் வாழ்வுக்கான முடிவுரையாகி இருக்கிறது.
சிதறிய மன்னர்களின் குறுநில ஆட்சி பலவீனத்தைப் பயன்படுத்தி, அக்கால கட்டத்தில் தமிழகத்தில் எல்லையில்லாக் கொள்ளைகளை வடநாட்டு மன்னர்களும், பிற மொகலாய புருஷர்களும் நிகழ்த்த, தென்னாடு மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. அந்த சமயத்தில்தான் விஜயநகர சாம்ராஜ்யத்தின் விஸ்வரூப எழுச்சி நிகழ்கிறது. விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ணதேவராயரின் பெரும் வருகைக்குப் பிறகு தமிழக சரித்திரம் மாறுகிறது. புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்படுகிறது. இவற்றை விரிவாகவும் இத்தொடரில் சொல்ல இருக்கிறேன். அப்போது தென்னாட்டில் நடந்த அரசியல் சதுரங்கம் "இன்றை'' விட சுவாரஸ்யமாகவும், பயமுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
இவ்வளவு காலம் எப்படி இந்தக் கதைக்களம் சரித்திர ஆசிரியர்கள் பார்வையில் விடுபட்டது என்று தெரியவில்லை. அதை நல்ல வாய்ப்பாக இங்கே பயன்படுத்திக் கொள்கிறேன். இதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களின் உருவங்களை பல சிற்ப ஆய்வுகள் மற்றும் அழிந்த ஓவியங்கள் வாயிலாக கண்டறிந்து அந்த உருவங்களை உங்கள் கண்முன் சமர்ப்பிக்கிறோம். தொடரை வாசிக்கையில் அந்த உண்மை மனிதர்களே உள்ளத்துக்குள் வந்து போவார்கள் என்ற வாசிப்பு ருசிக்காக...!
இந்தத் தொடர் எழுத முக்கிய காரணம் பல சரித்திர கல்வெட்டுகளை, பல வரலாற்றுச் சுவடிகளை தன் நுண்ணறிவால் கற்றறிந்த தஞ்சை சரஸ்வதி நூலகத்தின் அறிவுப் பொக்கிஷமான திரு. குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள்தான். அவர்மூலம் கிட்டிய பல அரிய தகவல்களை அடித்தளமாகக் கொண்டு பல உண்மைச் சம்பவங்களை இணைத்துதான் இந்த தொடர் எழுதும் உத்வேகம் பிறந்தது. தஞ்சையில் ஆய்வுகள் செய்ய, குறிப்புகள் எடுக்க, பல உதவிகள் செய்தவர் தஞ்சை செழியன்.
போர்-அரசியல்-முத்தம்-கட்டில்-அரசவை-கவிதை-ராஜதந்திரம்-அழகிகள்-கொலை-மதிநுட்பம்-ரத்தம்-ஆன்மீகம்-தமிழகம்-கத்தி-பக்தி-கற்பனை-மோதல்-வஞ்சம்-பழி-காதல்-சிற்றின்பம்-உக்கிரம் என இவ்வளவு கலவையுடன் இந்தத் தொடரை உங்கள் வாசிப்பு வளர்க்கும் என்ற நம்பிக்கையில் துவங்குகிறேன்.
உயிர்த்துடிப்புள்ள வரலாற்றை வாசியுங்கள்-வாழ்த்துங்கள்-விமர்சியுங்கள்.
துவக்கத்துடன்,
பா.விஜய்
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580127104907
Aranmanai Ragasiyam Part -2

Read more from Pa. Vijay

Related to Aranmanai Ragasiyam Part -2

Related ebooks

Related categories

Reviews for Aranmanai Ragasiyam Part -2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aranmanai Ragasiyam Part -2 - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    அரண்மனை ரகசியம்

    பாகம் - 2

    Aranmanai Ragasiyam

    Part - 2

    Author:

    பா. விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    அத்தியாயம் 89

    அத்தியாயம் 90

    அத்தியாயம் 91

    அத்தியாயம் 92

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 94

    அத்தியாயம் 95

    அத்தியாயம் 96

    அத்தியாயம் 97

    அத்தியாயம் 98

    அத்தியாயம் 99

    அத்தியாயம் 100

    அத்தியாயம் 101

    அத்தியாயம் 102

    அத்தியாயம் 103

    அத்தியாயம் 104

    அத்தியாயம் 105

    அத்தியாயம் 106

    அத்தியாயம் 107

    அத்தியாயம் 108

    அத்தியாயம் 109

    அத்தியாயம் 110

    அத்தியாயம் 111

    அத்தியாயம் 112

    73

    யசம நாயக்கரை நோக்கி ஒரு வீரசபதத்தைத் தெரிவித்த தஞ்சை இளவரசன் ரகுநாதன், தன்னுடைய வெள்ளைப் புரவியின் மீது விஜயநகர சாம்ராஜ்யத்தின் நம்பிக்கை வாரிசான ஸ்ரீராமனை ஏற்றிக்கொண்டு காற்றையும் கடுகி தஞ்சை நோக்கிப் புறப்பட்டான். யாசம நாயக்கரும் அவனைப் பின்தொடர ஆரம்பித்தார். ஆக, இரு குதிரைகளும் நான்குகால் பாய்ச்சல்களில் தஞ்சையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த நேரத்திலே, தஞ்சையின் கட்டுக்கோப்பான கோட்டை மாளிகைக்குள் ஒருவனுடைய இதயத்துக்குள் மோகக்குதிரை நூறுகால் பாய்ச்சலில் பாய்ந்துகொண்டிருந்தது. அவன்தான், ஏற்கனவே விஜயநகர அந்தப்புர உல்லாசியாய், ராணி சக்குபாயின் கடைக்கண்ணில் விழுந்த காமத் தேனீயாய் சுற்றித் திரிந்துகொண்டிருந்த தீட்சிதரின் மகனான யக்ஞன்.

    முழுக்க முழுக்க பக்தி லேகியமாகவே இருந்த பெரியபுராணத்தில் யக்ஞன் தேடிய சிற்றின்ப கூற்றுகள் குறைவாகவே காணப்படவே எரிச்சலடைந்த யக்ஞன், பிறகு கம்பராமாயணத்தில் நுழைந்து, அதன் நுனி முதல் அடிவரை அலசி சப்ரமஞ்சப் பாடல்கள் சிலவற்றைத் தொகுத்தெடுத்துக் கொண்டான். அத்தோடு கைக்குள் எதற்கும் இருக்கட்டும் என்று சில குளிகை மாத்திரைகளையும் மறைத்து வைத்துக்கொண்டான்.

    இப்படியான வாலிப வஸ்து தயாரிப்புகளோடு முதற்கட்ட நடவடிக்கையாய் தலைமைக் கோட்டைக்குள் இருந்த இளவரசன் ரகுநாதனின் அந்தப்புரப் பகுதிக்குள் செல்ல ஆயத்தமானான்.

    உடம்பு முழுக்க நன்றாக புனுகு பூசிக்கொண்டு, மேலே திருநீற்றையும் அப்பியவாறு பக்தி தோல் போர்த்திய பாவை விரும்பியாய் பவனிவர ஆரம்பித்தான். நேராக அவன் கால்கள் இளவரசியார் கலாவதி இருக்குமிடத்தை சமீபித்தது. ஆனால் இதற்கு முன்னால் அவன் சென்றபோது கிடைத்த வரவேற்பும் உபசரிப்பும் இப்போது இல்லாது கண்டு ஒரு சின்ன அதிர்ச்சி யக்ஞனுக்குள் ஏற்படத்தான் செய்தது. உள்ளே நுழைந்த யக்ஞனை அங்கே இருந்த பிற தோழிகள் எவரும் கண்டும் காணாமலும் வேண்டா வெறுப்புடனும் பார்த்துக்கொண்டே செல்ல, அந்த உறுத்தல்கள் எல்லாம் அவனுடைய ஆசைக்காற்றுக்கு முன் அநாயாசமாகப் போனது. அந்தப்புரத்திற்குள் அனுமதியின்றி நுழைவதற்கு அதிகாரத்தைப் பெற்றிருந்த யக்ஞன் நேராக இடப்புறமாக குறுகி செல்கின்ற நந்தவனப் பகுதிக்குள் நுழைந்து, பூஜை புனஸ்காரங்கள் நடந்துகொண்டிருக்கக்கூடிய மண்டபப் பகுதியினுள் சென்று, அங்கே நிறுவப்பட்ட பளிங்கு மேடையின் மீது அமர்ந்துகொண்டான்.

    சிறிது நேரத்திலெல்லாம் உப்பரிகையில் இருந்து மண்டபத்தின் முன்புறம் பளிங்கு மேடையில் அமர்ந்திருந்த யக்ஞனை சாளரம் வழியே பார்த்தார் ராணி மூர்த்திபாம்மா. பிறகு சில பணிப்பெண்களிடம் ஏதோ செய்தியைச் சொல்லி அனுப்ப, அவர்களும் அங்கே வந்து சேர்ந்து கலாவதியாருக்கு இன்று உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவர்கள் ஆண்கள் இருக்கும் பகுதிக்கு வரமாட்டார்கள். ஆதலால் தங்களை பௌர்ணமிக்குப் பிறகு அந்தப்புரம் வந்து பெரியபுராணத்தைப் பற்றிய வகுப்பெடுக்கலாம் என்று பெரிய ராணியார் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று பவ்வியமாய் பணிப்பெண்கள் பேசியதைக் கேட்டதும் மனதிற்குள் சுரத்தின்றிப் போனது யக்ஞனுக்கு.

    ஆஹா மாங்கனிகள் கைகளில் மாட்டாமல் போனால் என்ன? இதோ கிடக்கிறதே பரந்து விரிந்த பலாக்கனிக்காடு. இதற்குள் நுழைந்துவிடலாமே என்று எண்ணியவாறு டென்மார்க் ராணியான ரெஜினா தங்கியிருந்த விருந்தினர் மாளிகை பக்கமாய் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான் யக்ஞன்.

    தாகமெடுத்துவிட்ட நரி அது தீர்த்தமென்றுதான் பார்க்குமா? இல்லை தேங்கிய தண்ணீர் குட்டையென்று பார்க்குமா? எல்லாமே ஒன்றுதானே. அந்த வகையில் தாகத்தைத் தணித்துக்கொள்ள தண்ணீர் கிடைத்தால் போதுமென்ற ஒரே குறிக்கோளோடு ரெஜினா தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குள்ளே பையப்பைய நுழைந்து, இருகண்களால் வேவு பார்த்தவாறே வரவேற்பு மண்டபத்தை சமீபித்தான்.

    அங்கேயும் அவன் அறிமுகமாகியிருந்தபடியால் ஓரளவு உபசரணை நடந்தது. அவனுடைய வருகையின் காரணத்தை அறிந்துகொண்டு சிறிதுநேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, உப்பரிகைக்குச் சென்ற சில பணிப்பெண்கள் கொஞ்ச நேரம் கழித்து திரும்பிவந்து அவனை அழைத்துச் சென்றனர். உப்பரிகைக்குச் சென்ற யக்ஞனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. எங்கு பார்த்தாலும் ஏகாந்த மணம் பரப்ப சில்லென்ற பூங்காற்று அந்த மாலை நேரத்தில் தழுவிக் கொண்டிருந்த சூழ்நிலையில், கமகமவென்று அயல்நாட்டு வஸ்துக்கள் சாம்பிராணி புகை வழியாய் புகைந்து புகைந்து நாசிக்கமலங்களில் ஏறி, ஒரு மாதிரியான கிறங்கடிக்கும் உணர்வினை அவனுக்குள் ஏற்படுத்திக்கொள்ள, எப்படி ரெஜினாவினுடைய பேரழகை தன்னுடைய கண்களுக்குள் உள்வாங்கிக் கொள்வது என்பது மாதிரியான சிந்தனைகளிலேயே அவனுடைய வாலிப ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

    அதேநேரத்தில் அவன் எதிர்பார்த்தபடியே ஒரு பேரழகுப் பெட்டகமாக தன்னுடைய மேற்கத்திய பாணியான இறுக்கமான உடைகளிலேயே அசைந்து அசைந்து, அந்த உப்பரிகை மண்டபத்திற்கு வந்துகொண்டிருந்த ரெஜினாவை தூரத்திலிருந்தே துய்த்தெறிந்துவிட துடியாய் துடித்துக் கொண்டிருந்தான் யக்ஞன்.

    காமம் என்பது இப்படித்தான். கட்டுக்குள் இருக்கும்வரை அது தீபம். கட்டுக்களை அறுத்தெறிந்து வெளியேறிவிட்டால் அது தீப்பந்தம். யக்ஞனுக்குள் இருந்த காமம் இப்போது தீப்பந்தமாக அவனுடைய தலைக்கு நேராகவே பிடிக்கப்பட்டிருந்தது.

    மெல்ல மெல்ல அசைந்து வந்து, இடை ஒடிய எதிரே இருந்த ஒரு மர ஆசனத்தில் அமர்ந்துகொண்ட ரெஜினா தன் கால் மேல் காலைத் தூக்கிப்போட்டுக்கொள்ள அப்போது ஒருக்களித்து நின்ற அவளின் இடைப்பாகமும் அப்படியே ஒருபுறமாக ஏறிக்கொண்டிருந்த அவளின் பின்னழகின் திரட்சியும் யக்ஞனைப் பாடாய் படுத்த ஆரம்பித்தது. அதுமட்டுமில்லாமல் மர நாற்காலியின் மீது கைகளை அணைத்தவாறு அவள் சாய்ந்தகொண்டிருந்த கோலத்தைப் பார்க்கும்போது, ஒரு பேரழகான சிற்பம் வளைந்து நெளிந்து தன் முன்னால் சரிந்து கிடப்பதைப் போன்ற சந்தோஷ உணர்வை யக்ஞனால் அனுபவிக்க முடிந்தது.

    திக்கித் திணறி சொல்லவந்த விஷயத்தைச் சொல்லி முடித்தான்.

    கம்பராமாயணத்திலே தான் கரைகண்டு தேர்ச்சி பெற்று அற்புதமான கவிதைக் கனிகளைக் கொய்து கொண்டு வந்திருப்பதாகவும், அவற்றை இப்போதே தோல் உரித்து அற்புதமாய் ரசம் பிழிந்து தருவதற்கு காத்திருப்பதாகவும், கண்களிலே எச்சில் வழிய ரெஜினாவைப் பார்த்துக்கொண்டே பேசினான் யக்ஞன். ஆனால் அந்த அயல்நாட்டுப் பறவைக்குக் கம்பரசத்தில் மூழ்கிக் கிடக்கின்ற கவிச்சுளைகளை ருசித்துப் பார்க்கவேண்டிய ஆவல் ஏற்பட்டதேயொழிய, எதிரே அமர்ந்து கொண்டிருக்கிற ஒரு வாலிப பருவமுள்ள இளைஞன், தன்னுடைய அழகினை அங்குலம் அங்குலமாய் ரசித்துக்கொண்டிருப்பதையும்; புசிக்கத் துடித்துக் கொண்டிருப்பதையும் அறிய முடியாமல் போனது.

    ரெஜினாவே முதலில் பேச்சை ஆரம்பித்தாள். இலக்கியங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த இலக்கியம் வர்ணனை இலக்கியம்தான். அதிலும் கம்பராமாயணத்தில் வருகின்ற காட்சிகளினுடைய வர்ணனைகளும், அவற்றிலே கம்பர் கையாண்டிருக்கிற நுட்பமான கவிதைத் திறனை நோக்கும்போது உலகெங்கும் இருக்கக்கூடிய வர்ணனைகள் கூட தோற்றுப் போகும்படியாகத்தான் உள்ளது யக்ஞனே என்று யக்ஞனைப் பார்த்து ஒருமையில் விளித்துப் பேச ஆரம்பித்ததும், யக்ஞனால் உட்கார்ந்திருக்கவே முடியாமல் உல்லாசபுரியில் அவனுடைய இதயம் பறக்க ஆரம்பித்திருந்தது.

    அந்தச் சந்தர்ப்பத்தில், விருந்தினர் மாளிகையின் பணிப்பெண்கள் இரண்டு குடுவைகளில் நல்ல இளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துவிட்டுப் போனார்கள். பழச்சாற்றைப் பருகுகிற நோக்கமெல்லாம் யக்ஞனுக்கு ஏது? எதிரே பழத்தோட்டமே இருக்கும்போது அதனால் மெல்ல தன்னுடைய அஸ்திரங்களில் ஒன்றிரண்டை இறக்குமதி செய்வதற்காக ஆயத்தமானான்.

    ஆனால் ரெஜினா அவனையும் முந்திக்கொண்டு "யக்ஞனே நான் கப்பலில் வரும்போது சில தமிழ் இலக்கியங்களைப் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதிலே கம்பருடைய கைவண்ணத்திலே சீராப்பிராட்டியார் அவைக்கு வருகின்ற அந்தக் காட்சியை மிக அற்புதமாக வர்ணித்திருப்பார். நீ படித்திருக்கிறாயா?

    பொன்னினொளி பூவின்வெறி சாந்துபொதி சீதம்

    மின்னினெழில் அன்னவள்தன் மேனியொளிமான

    அன்னமும் அரம்பையரும் ஆரமிழ்தம் நாண

    மன்னவை யிருந்தமணி மண்டபம் அடைந்தாள்!

    என்று கம்பர் தன்னுடைய கவிதை ஆற்றலை, ஒரு ராஜகுமாரி முதல்முறையாக தன்னுடைய கனவுகளைத் தேக்கி வைத்துக்கொண்டு அரசவைக்கு வருகின்ற அந்த அற்புதக் காட்சியை விளக்கியிருப்பார். இதுபோன்ற வர்ணனைகளில்தான் உங்களுடைய தமிழ் கலாச்சாரத்தினுடைய பெண்மையின் எழிலும் கற்பின் மேன்மையும் விளங்குகிறது" என்று சொல்லி பூரித்துக் கொண்டிருந்தாள் ரெஜினா.

    ஆனால், யக்ஞனுடைய அஸ்திரமோ வேறுவிதமாகப் பாய ஆரம்பித்தது. டென்மார்க் ராணி அவர்களே! இவ்வளவு தூரம் தாங்கள் நுட்பமாக வர்ணனைகளை ரசிப்பது கண்டு ஆச்சரியமாக இருக்கிறது. அதைவிட கம்பர் வர்ணித்திருப்பதில் மிக சுவாரஸ்யமானதொரு கட்டம் உண்டு. அதாவது உங்களைப் பார்த்தால்கூட அப்படித்தான் கம்பர் வர்ணித்ததில் ஒப்பிடத் தோன்றுகிறது. கம்பர் பெண்களைப் பலவாறாகப் பார்க்கிறார் என்று சொல்லி நிறுத்தினான்.

    எப்படிப் பார்க்கிறார் என்று கேட்டாள் ரெஜினா.

    ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வடிவான வளைவு நெளிவுகளைக் கொண்டவர்கள். அவர்களுடைய இளமை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான இளமை மாற்றங்கள் உண்டாகின்றன என்று சொல்கிறார் கம்பர் என்று யக்ஞன் கூற...

    ஆச்சரியப் பார்வையோடு யக்ஞனையே பார்த்துக்கொண்டிருந்த ரெஜினா கேட்டாள். அது எப்படி? பருவமெய்துகிற எல்லாப் பெண்களுக்குமே இளமை மாற்றமென்பது ஒரே மாதிரியாகத்தானே இருக்கும். அதிலென்ன பெரிய வித்தியாசங்கள் இருக்க முடியும்? என்றவாறு யக்ஞன் போட்டத் தூண்டிலுக்குள் தானாகவே வந்து சிக்கிக்கொள்ள...

    இந்த இடத்தைத்தான் எதிர்பார்த்திருந்த யக்ஞன், தன்னுடைய ஒட்டுமொத்த மோக அஸ்திரங்களையும் அந்த இடத்தில் எறிய ஆரம்பித்திருந்தான். "அல்ல ராணியார் அவர்களே! இதோ படியுங்கள் ஒரு பாடலை...

    பெரும்பகல் வருந்தினர்

    பிறங்கு முலை தெங்கின்

    குரும்கைகள் பொருஞ்செவிலி

    மங்கையர் குறங்கி

    லரும்பனைய கொங்கையயிலம்

    பனையவுண்கட்

    கரும்பனைய செஞ்சொனவில்

    கன்னியர் துயின்றார்

    -என்று ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

    அதாவது பகல் முழுக்க ஸ்ரீராமன் காடு சென்ற சோகத்திலே அழுது புலம்பிக்கொண்டிருந்த இளம்பெண்கள் எல்லோரும் தங்களுடைய செவிலித் தாய்மார்களின் தொடையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்திலே கரும்புபோல் பேசக்கூடிய கன்னி இளம்பெண்களின் இளமை மாற்றங்களை கம்பர் சொல்லுகிறார்.

    அதாவது, ஒரு பெண்ணுக்கு பன நுங்கைப் போன்றதும், இன்னொரு பெண்ணுக்கு தென்னங்குரும்பைப் போன்றதும், வேறொரு பெண்ணுக்கு தாமரை மலரின் அரும்பு போன்றும் தனங்கள் இருந்ததாக கம்பர் எழுதுகிறார்" என்று கிறக்கமான ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டு, ரெஜினாவினுடைய கூர்ந்த கண்களையே கவனித்தான் யக்ஞன்.

    ஆனால் எந்த இடத்திற்கு அவன் தன் பேச்சை திருப்பிக்கொண்டு வருகிறான் என்பதை இன்னமும் புரியாத ரெஜினா, ஒரு மாதிரி பெண்மையின் சுயஉணர்வு தட்டியெழுப்ப, தன் ஆடைகளை சரிசெய்தவாறு சற்று நிமிர்ந்து உட்கார்ந்து ஓஹோ... இப்படிப்பட்ட பாடல்களெல்லாம் கூட கம்பருடைய கவிதைகளில் இடம்பெற்றிருக்கிறதா? என்று கேட்டாள்.

    74

    ரெஜினாவின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிலின் புழுவாய் பயன்படுத்திக் கொண்ட யக்ஞன், இது மட்டுமல்ல ராணி அவர்களே! இதைவிட பிரமாதமான கருத்தாழமிக்க காதல் சர்ச்சைகளெல்லாம் கூட கம்பராமாயணத்தில் உண்டு என்று நீட்டி முழக்கினான்.

    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

    நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல்இணை

    ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன

    வீக்கிய கனைகழல் வீரன் செங்கணுந்

    தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே!

    என்று முடிக்கிறார் கம்பர்.

    ராணியார் அவர்களே! உங்களுக்குப் புரிகிறதா இந்த இளமை இலக்கியத்தினுடைய மாண்பு. அதாவது, ஸ்ரீராமனும் சீதாபிராட்டியும் தங்கள் கண்களும் கண்களும் சந்தித்துக் கொண்ட பிறகு, நேர்கிற அந்த உணர்ச்சி மாற்றத்தைத்தான் கம்பர் இவ்வளவு அழகாக வெளிப் படுத்தியிருக்கிறார். உங்களுக்கு விளக்கமாகவும் சொல்கிறேன்...

    இருவரும் பார்த்துக் கொண்ட அந்த அற்புதமான பார்வையானதில் சீதாபிராட்டியினுடைய கண்கள் அதற்கு மேலே அந்தப் பார்வையிலேயே நிலைபெற்று நிற்கமுடியாமல் ஸ்ரீராமனது அற்புதமான வீரம் செறிந்த தோள்களில் சென்று ஆழ்ந்தன. அதே போல் சீதாபிராட்டியினுடைய கண்களிலேயே மூழ்கிக்கிடந்த ராமபிரானுடைய கண்கள் சட்டென்று அங்கிருந்து அதைவிட மிகப்பெரிய அழகான இடமான அந்தப் பெண்ணின் தனங்களில் சென்று தைத்து நின்றதாக கம்பர் எழுதி முடிக்கிறார் என்று சொல்லிவிட்டு சொன்ன வாசகத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்துவதைப் போல தன்னுடைய கண்களையும் அதே வேலையைச் செய்யச் செய்தான்.

    சற்று பாதுகாப்பு உணர்வு ரெஜினாவிற்குள் உந்திவிட அந்த இடத்திலேயே அதற்கு மேலும் அமர்ந்திருக்க பிடிக்காமல் சட்டென்று எழுந்து ஓஹோ... மாலை நேரம் கூடிக்கொண்டே வருகிறதே... என்று பேசியவாறு மெல்ல அசைந்து உப்பரிகையில் இருந்த ஓங்கிய சாளரத்தின் அருகே சென்று நின்றாள்.

    அப்படி அவள் செல்வதற்காக எழுந்த நிமிர்விலும், நடந்து சென்ற அசைவிலும் மேலும் தாக்குண்டு கிடந்த யக்ஞன், அதற்கு மேல் தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், அவள் சாளரம் பக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஏற்கனவே தயாராகக் கொண்டு வந்திருந்த மயக்கக் குளிகையின் பொடியை எடுத்து, மெதுவாக எதிரே குடுவைகளில் வைக்கப்பட்டிருந்த பழச்சாற்றில் மெல்ல கலந்து விட்டான்.

    கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் மௌனித்தவாறே நின்று கொண்டிருந்த டென்மார்க் ராணி ரெஜினா திரும்பவும் மெல்ல அசைந்து நடந்துவந்து, இன்றைக்கு இவ்வளவு அற்புதமான கவிதைகள் போதும் யக்ஞனே. மீண்டும் நான் சொல்லியனுப்புகையில் வந்தால் போதும் என்று சொன்னவாறு அருகே இருந்த பழச்சாற்றை கவனித்துவிட்டு, பழச்சாற்றை அருந்திவிட்டு செல்லுங்கள் என்றவாறு, தானும் ஒரு குடுவை பழச்சாற்றை எடுத்து மளமளவென குடிக்க ஆரம்பித்தாள்.

    யக்ஞன் குடிப்பதற்காக சிறிது கால அவகாசத்தை கொடுத்தவாறு மீண்டும் சாளரத்தின் அருகே சென்று, வெளியே பறந்து கொண்டிருந்த அற்புதமான புறாக் கூட்டங்களின் அழகிலே மூழ்கிக் கிடந்தவள் ஏதோ ஒரு மயக்க உணர்வு உந்திவிட மெதுவாக சாளரத்தின் அருகே இருந்த அகலமான ஆசனமொன்றில் அமர்ந்து கொண்டாள்.

    நிச்சயம் மருந்து குளிகையானது மயக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கொண்டிருந்த யக்ஞனுக்கு, அந்த எண்ணம் பலிக்கவே செய்தது. பழச்சாற்றை பருகுவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தவன், பழக்குடுவையை எடுப்பதற்காக அங்கே உள்ளே வந்த பனிப்பெண்களைப் பார்த்து முதலில் சற்றே அதிர்ச்சி அடைந்தாலும், பிறகு சுதாரித்துக் கொண்டு, ராணியார் அவர்கள் இன்னும் சிறிது நேரம் இலக்கியத்தைப் பற்றி சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் யாரும் மேலே வந்து தொல்லை செய்ய வேண்டாம் என்பது மாதிரியும் கிசுகிசுத்தான்.

    தேடி வந்த சந்தர்ப்பம் இதோ, அற்புதமாக வாய்க்கப் போகிறது என்ற ஆரவாரக் குரல் உள்மனசுக்குள் இருந்து கிளம்ப, அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த அழகுப் பொக்கிஷத்தின் முன்பு நிற்க முடியாத யக்ஞன் மளமளவென்று நகர்ந்து, வாயிலருகே சற்று ஒருக்களித்து சாத்தி வைக்கப்பட்டிருந்த கதவினை முழுவதுமாக சாத்தினான். பிறகு மெல்ல சாளரத்தின் அருகே வந்தபோது, ஏறக்குறைய சயனித்த நிலையிலேயே ரெஜினா கிடந்தாள். தன்னையும் அறியாமல் சயனித்த நிலை ஆதலால் மேலும் அவளுடைய பருவ எழுச்சிகள் பீறிட்டுக் கொண்டு உடைகளை விட்டு வெளியேறிவிடத் துடிக்கின்ற கட்டத்தில் இருக்கின்ற பருவ திரட்சியைப் பார்த்து, மெய்சிலிர்த்துப் போன யக்ஞன் அதற்கு மேலும் தன்னுடைய ஆவேசத்தைக் கட்டுப்படுத்த இயலாதவனாய் அந்த அகலமான ஆசனத்தின் ஓரமாக அமர்ந்துகொண்டான்.

    சற்று சாய்ந்தபடியாக கிடந்த ரெஜினாவின் பின்னழகும், அவளுடைய ஏற்ற இறக்கமாய் கிடந்த கைகளின் வாயிலாக வெளிப்பட்ட முன்னழகின் இளமை திரட்சியும், சற்றே சாய்ந்தே கிடந்த காரணத்தால் அவளுடைய கழுத்துப் பகுதியில் தெரிந்த பளீர் என்ற வெண்மையும், ஏறக்குறைய மயக்க நிலை என்பதால், அங்கே வேர்த்து நின்ற வேர்வையினுடைய ஈரப்பதமுமாய் யக்ஞனுக்குள் மெல்ல மெல்ல நெருப்பை மூட்டி ஊதியது.

    மெதுவாக தன்னுடைய உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டவன், ஒட்டுமொத்தமாக அந்த டென்மார்க் ரோஜா தோட்டத்தை கசக்கி

    Enjoying the preview?
    Page 1 of 1