Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sowbarnika
Sowbarnika
Sowbarnika
Ebook359 pages5 hours

Sowbarnika

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செளபர்னிகா காவியத்தின் தண்ணீர் படுகைக்குள் ஒளிந்து கொண்டிருந்த தவமிகு காதலை, எங்கோ ஓர் பயணத்தில் ஒரு அறிவுசால் ஞானியின் வாக்கில் உணரப்பட்ட நான், வெகுநீண்ட காலமாய் இக்கருவை சுமந்து வந்தேன். தக்கதோர் தருணம் வரும் வரையில் மனிதமும் மந்தமும் மர்மங்களும் அழகியலும் அறிவியலும் கலந்ததோர் புதினமாய் செம்மையாய் பதிவு செய்தல் வேண்டுமென குறிப்புகளை எடுத்துக் கோர்த்திருந்தேன். அதற்கானவொரு தருணம் வாய்க்கப் பெற்றது.
மீண்டும் ஒரு நற்பொழுதில், எழுத்து வடிவில் ஒரு மகா முயற்சியோடு உங்களை சந்திக்கிறேன்.
என்றும் நட்புடன்
பா.விஜய்
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580127104948
Sowbarnika

Read more from Pa. Vijay

Related to Sowbarnika

Related ebooks

Reviews for Sowbarnika

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sowbarnika - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    செளபர்னிகா

    Sowbarnika

    Author:

    பா. விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மழையின் கால்தடம்

    2. தங்கத் தாரகை

    3. மலை மர்மம்

    4. சுரதா காபி கப்

    5. சித்த நர்த்தனம்

    6. புனித்-2

    7. பகல் இரவு மோதல்

    8. விண்கல விந்தை

    9. இரவில் சூரியகாந்தி

    10. ரயிலடியில் ஒரு ரசிகன்

    11. ஆலிங்க வேர்

    12. நீல நிற ஓவியன்

    13. காட்டு முத்தம்

    14. 0° சக்தி

    15. உதிர நர்த்தனம்

    16. பால்வீதிப் பயணம்

    17. சிங்கம் பயணம்

    18. வலம் வந்தது வானவெளி ஓடம்

    19. மோக மோகினி

    20. தரை இறங்குமா தேவதை கனவு

    21. உச்சி மலை உஷ்ணம்

    22. காற்றின் காதல்

    23. உயிர் தந்த முத்தம்

    24. காதல் சுழல்

    25. அதிர்ச்சி வளையம்

    26. மழையில் நனைந்த மனங்கள்

    27. வெந்நீரில் ஒரு வெண்ணிலா

    28. நீலமலைச் சாரல்

    29. வழிகாட்டும் ஒளி

    30. மழையும் எந்திரப் பறவையும்

    31. இரண்டு ஜீவன்களின் சங்கமம்

    32. தேடல் முடிகிறது

    33. நதியாகவே மாறினாள்

    34. பழைய நதியில் புதிய துளிகள்

    35. நதியின் கதை

    முன்னுரை

    செளபர்னிகா காவியத்தின் தண்ணீர் படுகைக்குள் ஒளிந்து கொண்டிருந்த தவமிகு காதலை, எங்கோ ஓர் பயணத்தில் ஒரு அறிவுசால் ஞானியின் வாக்கில் உணரப்பட்ட நான், வெகுநீண்ட காலமாய் இக்கருவை சுமந்து வந்தேன். தக்கதோர் தருணம் வரும் வரையில் மனிதமும் மந்தமும் மர்மங்களும் அழகியலும் அறிவியலும் கலந்ததோர் புதினமாய் செம்மையாய் பதிவு செய்தல் வேண்டுமென குறிப்புகளை எடுத்துக் கோர்த்திருந்தேன். அதற்கானவொரு தருணம் குங்குமம் வார இதழிலே வாய்க்கப் பெற்றது.

    மீண்டும் ஒரு நற்பொழுதில், எழுத்து வடிவில் ஒரு மகா முயற்சியோடு உங்களை சந்திக்கிறேன்.

    என்றும் நட்புடன்

    பா.விஜய்

    1. மழையின் கால்தடம்

    கி.மு.110

    'சல் சல்' என்று முகில் புனைந்து கொண்டிருந்த அடர்த்தியான சாரல், மண்ணைக் கிளறி உள்ளே கை நுழைத்து 'குப் குப்' என்ற வாசத்தை ஈரக்காற்றில் தடவுகின்ற பொழுது!

    செளபர்னிகா குளிக்கும் காட்சி!

    (முதலிலேயே முன்மொழிந்து விடுகிறேன்.. செளபர்னிகா கன்னி)

    கன்னி... கனிகளால் ஆன கன்னி!

    ஏகாந்த காடு! எங்கும் சூழ் மரங்கள்! மூங்கில் முரட்டுத்தனத்தோடு முதிர்ந்த தேக்கு இலைகள்! துளசிச் செடிகள் நிரம்பிய கானகம்! மலைப்பாம்புகள் ஊர்ந்து ஊர்ந்து சென்ற தடங்களை பிரதிபலித்தது ஈரமான சதுப்பு நிலம்! செஞ்சிவப்பு கப்பிய சேறு!

    அதை இன்னும் கிளப்பியது சாரல்! சுளீரென குளிரூட்டும் காற்று! காற்றின் முதுகில் ஏறிக்கொண்ட நெடிய பனைமரங்களின் கீற்றுகள்!

    சூரிய அடுப்பில் நிலாவை தூள்தூளாய் உடைத்து சாம்பிராணி போட்டது மாதிரி, அந்த மந்தார மலையின் கனுவாயில் இருந்த பழைய வாசமடிக்கும் பச்சைப் பகுதி எங்கும் ஒரே வெண்பனி மூட்டம்!

    ஆதவ ஒளியாலும் உள்புக முடியா நெருக்கமான புகை! நெருக்கம் அதிகரித்துவிட்டால் நடுவே ஒளி-வெளி எதுவும் புகாதோ?

    அப்பனி பிரதேசத்தை ரம்மிய குடிலாக்க இன்னும் கருவறை விட்டு கண் விழித்து மலரா மலர்கள்!

    மலர்கள் என்றால் அசாராதண மலர்ப்பிறவிகள்!

    ஆம்! ஆம்பல், செங்கோடு, வேலி, மணிச்சிகை, வெட்சி, உந்தூள், கூவிளம், பைநீ, வாணி, பசும்பிடி, ரோஜா, குறிஞ்சி, களிமா, பல்லிளம், பிண்டி, அரளி, மல்லிகை, நாகம், நந்தி, தும்பை, பிடவம், முல்லை என -

    அதிரூப மலர்க் குவியலும், மலர்களுக்குத் தேவையான கொடிகளும் செடிகளும், அவைகளுக்கு ஆஸ்தியான வேர்களும் விதைகளும், அதுகளுக்கு அமையாததுமான மண்ணுண்ணி புழுக்களும் உயிரணுக்களும்

    இன்னும் படலம் படலமாய் படிந்து படிந்து ருதுவான பூமியின் சமத்கார மடியில் குடிகொண்ட ரசாயன கற்களும் திரவியங்களுமாய் -

    ஒரே ஆபத்தான அழகுமயம் அங்கே குடிகொண்டு இருந்தது!

    மந்தார மலை என்பது மிகப்பழமையான மலை அல்ல. இறுதி ஒரு படிவப் பாறையின் மேல் படிந்து படிந்து பல பாறைகளில் அழுந்தி உட்கார அது புதியதோர் மலைதான்!

    தோன்றியே இருபதாயிரம் ஆண்டுகளுக்குள்தான் ஆயிருக்கும்! ஆனால் மந்தார மலையின் வேர் மிக ஆழமானது!

    சொன்னால், அதன் தலைதான் வெளியே காட்டிக்கொண்டு இருக்கிறது. உடம்பு மொத்தமும் சயன நிலையில் உலக உருண்டைக்குள்ளே!

    ஆறு அடுக்கு நிலங்கள் கொண்ட மத்தியஸ்த கோபுரம் மாதிரிதான் மந்தார மலையும்!

    பூமியைப் பொறுத்தமட்டிலும், அது புதிய மலைத் தொடர் என்பதால் அதீத தாவர வகைகளும் அதிசய மூலிகை வாசங்களுமாய் சதா கமகமத்தது மந்தார மலை!

    மலையின் இரண்டாம் தொடரின் கனுவாயினுள் பனிப் பொசிவெல்லாம் கலந்து கலந்து துளித்துளியாய் சேர்ந்த பேரருவி ஒன்று அனுபவ ஞானிபோல் வெள்ளைவெளேர் என்று உயரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தது.

    அந்த அருவிக்கும் பெயருண்டு! பெயரில்லாதது இவ்வுலகில் ஏது? பெயரில்லாதது ஒன்று உண்டெனில் அதற்கும் பெயர் வைப்பார்கள் பெயர் உள்ளவர்கள்!

    ஒன்றுமில்லாத இடம் வெற்றிடம் எனலாம். ஆனால் அவ்வெற்றிடத்தின் உள்ளிலும் உள்ளதெல்லாம் வெறுமை என்னும் ஒன்று!

    மந்தார மலையின் பச்சையைக் கிழித்தபடி தாய்ப்பாலின் தடிமனில் பொழிந்து கொண்டிருந்த அருவி குமுகியருவி!

    குமுகியில்தான் குளித்துக் கொண்டிருக்கிறாள் செளபர்னிகா!

    செளபர்னிகா என்பவள் செளந்தர்யங்களின் மொத்தமான தவம்!

    குளியலில் சிறந்த குளியல் நிர்வாணக் குளியலே! நிர்வாணமே நிஜத்தின் கரு என்பதால், நிர்வாணமே தெளிவின் ஆதர்ஸனம் என்பதால் யோகிகளின், 18 சித்தர்களின் ஆடையே நிர்வாணம்தான்!

    நிர்வாணமாய் தன்னைத்தானே காண தைரியம் உடைய மனம் அஞ்ஞானத்தை அடையாளம் காணும்!

    குண்டலினி அடிவயிறை விட்டு உம்பி மேல் எழும்பி சிறகு சக்கரத்தில் நிலைவரும்போது, ஆடையை ஆத்மா உதறி விடுகிறதல்லவா அந்த முக்தி நிலை பத்தாவது அடுக்கெனில் ஒன்பதாவது நிலைதான் நிர்வாணக் குளியல்!

    செளபர்னிகா எப்பொழுதுமே அப்படித்தான்! தன் மீது சுற்றியிருந்த நிறம் தோய்ந்த துணியை சரசரவென உருவி அருகே கைநீட்டிக் கொண்டிருந்த ஆலங்கிளையில் விசிறினாள்.

    அத்துணி மிகச் சரியாக கிளையின் மீது தொற்றியதோடு கீழே ஈரம்சுட்டி தளைக்கும் வேப்பங்கொழுந்துகளின் மீதும் படிந்தது. வேப்பங்கொழுந்துகள் தமது கசப்புத் தன்மையை சிறிது சிறிதாய் இழக்க ஆரம்பித்தன.

    இரு கைகளாலும் ஒடுங்கி தன் உடலை மறைத்த வண்ணம் சட்டென்று பேரிறைச்சலின் மொழியாய் பேசிக் கொட்டும் அருவியினுள் குடியேறினாள் செளபர்னிகா!

    சற்று உயரத்திலிருந்து ஊற்று நீர் வருமென்பதால் வேகத்தின் வீச்சை ஒவ்வொரு துளியும் தாங்கி வந்தது.

    மட்.. மட்.. என்று மண்டையில் தெறித்து படபடவென்று தேகத்தைத் துவைத்தது.

    அப்படியே இருவிழிகளை மூடிக்கொண்டாள். அருவி நீருக்குள் தியான நிலை!

    திவ்வியமான மனோநிலையினுள் இதயம் உருண்டு ஓடிக் கொண்டே இருந்தது.

    கருங்கூந்தல் பிய்த்துக் கொண்டு ஓடும்படி அதிர்ந்து முதுகுப் பகுதிய எங்கும் அருவியாய் வழிந்தது.

    பேரருவிகள் எப்போதும் மலையை ஒட்டி வழிந்து விழுவதில்லை. உயரத்தில் இருந்து ஓர் எடுப்பு மேலே எடுத்து துள்ளி விழுவதால் அருவிக்கும் மலை சுவருக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி ஏற்படும்.

    அந்த மலைக்கும் அருவிக்கும் உள்ள இடைவெளியினுள் உடல் ஊன்றி நின்று சிதறி வரும் சிலுசிலு துளியை உணர்வது, அருவியின் பின்பக்கமாய் இருந்து அருவியின் முதுகைக் காண்கிற தருணம் அது!

    தன் பின்பகுதியை நன்கு அழுத்தி பாசி கோர்த்து வழவழப்புக் காட்டிய மலைச்சுவரில் பதித்துக்கொண்டு கொட்டும் நீர்த்தாண்டவத்தை ரசித்தாள்.

    பிறகு விளையாட்டாய் தலையை மட்டும் அருவியினுள் நீட்ட தடதடவென யாரோ கல் கூடையைக் கொட்டி அடிப்பது மாதிரி வலி தோன்றியது.

    வெள்ளை வெளேர் என்று மயிர்கால்களே இல்லாத கால்களில் கெண்டைக்கால் வரை அருவியினுள் நீட்ட பெரிதாய் நோகவில்லை.

    கொஞ்சநேரம் குளித்து விளையாடிவள், பின்புறம் இருந்த மலைப்பாறையின் மீது விரல்வைத்து தேய்த்தாள்.

    பாசி உறித்துக் கொண்டு வந்தது! உறித்துக் கொண்டு வந்த பாசியை நன்கு குதப்பி உடம்பு முழுக்க தடவிக் கொண்டாள். மீண்டும் அருவியினுள் நிற்க, சுத்தமான சுகந்தமானாள்!

    ஏற்கெனவே சந்திரக்கல் மாதிரி இருக்கும் வதனம் இன்னும் வெளிப்பேறி சிவந்திருந்தது.

    அருவிக்குள் நின்றவாரே தன் உடம்பை தண்ணீர் ஆடைக்குள் மறைத்துக் கொண்டவள், அருகே கிளை நீட்டிய காட்டுமரத்தில் விசிறிய மேலாடை காற்றின் கையில் பட்டு புரண்டு இன்னும் மேலே பறந்து நடுமையக் கிளையில் மாட்டிக் கொண்டு இருந்தது.

    க்ளுக்கென்று சிரித்தாள்!

    குமுகி அருவி சிலிர்த்தது!

    பச்சைப்பசேலென்ற அந்த அத்வானக்காட்டுக்குள் வெள்ளைவெளேரென்ற அருவியை விட்டு வெளியே வந்து நின்றாள்.

    மஞ்சக்கடம்பா மரத்தின் கிளையிடையே சிக்கிய துணி படக் படக்கென அடித்துக் கொண்டது.

    துணியை உற்றுப் பார்த்தவள் சட்டென வெட்கப்பட்டு வெள்ளரிப்பழமாய் மாறினாள்!

    இமைகள் கீழே இறங்கியது.

    ஒரு தூக்கணாங்குருவி விர்ரென்று கிளம்பும் சத்தம்! சிறகடித்த குருவி பலமாய் துணிமீது மோத பிடிமானம் கழன்று காற்றின் சாலையில் நடந்து செளபர்னிகாவின் கைக்கருகே வந்து விழுந்தது துணி! அதை அப்படியே ஒற்றி சுற்றிக் கொண்டாள்!

    கழுத்தில் சுற்றிவிட்டு-இடுப்பில் இறுக்கி-தொடைகள் மறைய-மார்பகம் மறைய ஒரே சுற்றில் தன்னை சுழலவிட்டு இரண்டு துணிகளையும் இழுத்து முதுகுப்பக்கமாய் முடிச்சு போட்டாள்.

    எச்சிப்பூ மாதிரி நுனித்த நாசியில், சாதிக்காய் மரங்களில் இருந்து வரும் நறுமணத்தை சுகமாய் நுகர்ந்துகொண்டே அருவிக்கரை பாறைகளில் தாவி ஏறியவள், மண் தரைக்கு வந்தாள்.

    இடுக்கு விழாமல் இருந்த முற்றிய சோளச்செடிகளை விலக்கி விலக்கி உட்புக, அகண்ட பப்பாளி மரமொன்று இருக்க, ஆஹா.. பப்பாளி புதிதாய் என்றவள், விருட்டென்று கைநீட்டினாள்.

    பப்பாளி மரம் பளாரென்று முதுகு வளைந்து, ஒரு உலுக்கு உலுக்கி அவள் குறிபார்த்த கனியை கீழே பிதுக்கித் தள்ளியது.

    காட்டு சாரை ஒன்று அவள் கால்கள் மேல் ஏறி வால்படாமல் நகர்ந்து சென்றது. அது போகும் வரை பொறுத்து நின்றவள், மரம் தள்ளிய கனியை லபக்கென்று எடுத்து இரண்டாய் பிளந்தாள்.

    கறுகறு மணிகளாய் பொங்கிய விதைகளை மரத்தின் அடியிலேயே விரல்களால் வழித்துவிட்டாள். வழித்த தன் கைகளில் ஒழுகிய சாற்றை நாவில் மெல்ல நனையவிட்டுக் கொண்டவள், அப்படியே மேல்நோக்கி தன் நீலவிழிகளால் ஆகாயத்தை அளந்து திரும்பினாள்.

    தூரத்தே, குமுகி கரையோரம் ஓடிய பாதையில் முதுகில் கூடையாய் ஒட்டிக்கிடந்த தேன்கூடு ஞாபகத்திரையுள் ஓடியது.

    மீண்டும் கரைக்கு ஓடிவந்தாள்! ஒரு சிறுகல்லை எடுத்து தேன்கூட்டின்மீது வீச, நிறைந்த தொப்பை தேன்கூடு பொலபொலவென உடைந்து பிளவுண்டாக்கியது.

    பிளவில் கசிந்து மலைக்காற்றின் வழி வழிந்த தேனை பப்பாளியின் நடுவே ஏந்திக் கொண்டாள்.

    பப்பாளியின் இரண்டு பாகங்களும் மலைத்தேனால் நிரம்பி வழிந்தது. ஈரஈரமாய் கதகதவென்று தயார்நிலையில் காட்டுத்தேன் பாயாசம் மாதிரி இருந்தது.

    தூய தேனை பப்பாளியையே பாத்திரமாக்கி ஏந்திக் கொண்டவள் நிறுத்தி நிதானமாய் அதைச் சுற்றிச் சுற்றி கடித்துக் கொண்டே வந்தாள்.

    மலைத்தேனானது அவளது ஒவ்வொரு கடிக்கும் பப்பாளி சதையோடு கலந்து கலந்து சிறுகச்சிறுக அவள் இதழின் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது.

    சுற்றிலும் கடித்துக் கொண்டே வந்தவள், நடுவே கிண்ணம்போல் தேங்கியிருந்த தேனை அப்படியே முகம் முங்கி குடிக்க ஆரம்பித்தாள்.

    தேனும் பப்பாளி பழமும் கலந்து செளபர்னிகாவின் சந்தன நிற முகத்தில் பழத்தேன் அபிஷேகம் பண்ணியது மாதிரி திப்பித் திப்பியாய் ஒட்டிக் கிடந்தது.

    புறங்கையால் இமையுள் ஒட்டிய பழத்துகள்களை தட்டி, அதையும் நாவால் உள்ளிழுத்துக் கொண்டாள்.

    ஓட்டமும் நடையுமாய் காட்டினுள் இறங்கினாள்.

    ஒருகையில் பாதி பப்பாளியும் தேனுமாய் ஆடிக்கொண்டே வந்தது ஏற்றமும் இறக்கமுமான மந்தாரமலையில் ஓடியும் படுத்து சறுக்கியும் இறங்கியவள், சற்று தூரத்திலே தேடிவந்த ஜீவனை கண்டுகொண்டாள்.

    ஏய்.. கிழவா.. இந்தா நன்கு ருசி என்று தனக்கு முதுகு காட்டி நின்ற ஒரு வயோதிக ஆத்மாவை அழைத்தாள்.

    ஒடிசலான தேகமும் கறுப்பை அப்பிய நிறமுமாய் முதுகுத்தண்டு துருத்திக் கொண்டு வெளியே தெரியும் வண்ணம் நின்ற கொண்டிருந்த அவ்வுருவம் திரும்பியது.

    முகமெங்கும் வெள்ளை கறுப்பு கலந்த நீண்ட முடி, சடைபோட்டு தொங்கிய தாடியும் மீசையும் ஒன்றிக் கிடந்தன.

    சடையெங்கும் சிக்கு வழிந்தது. இறுகிக்கிடந்த கேசமும் சடையும் அழுக்கு படிந்து கழுத்தில் புரள, ஒடுங்கிய முகமும் இடுங்கிய வழியும், ஆனால் சககோடி பிரகாசம் கொண்ட கண்களுமாய் அந்த உருவம் திரும்பி செளபர்னிகாவைப் பார்த்தது!

    முக்காலும் அறிந்த முனிவன் அவன்!

    ஆம்.. பெயர் விடாச முனிபுங்கன்!

    ஏதோவொன்றை கீழே தள்ளி என்னமோ செய்து கொண்டிருந்தது அந்த கிழம்!

    என்ன செய்கிறாய்? என்றபடி விடாச முனியின் அருகே சென்றாள் செளபர்னிகா.

    ஒரு முழு மனித உடம்பை போட்டு முக்கால் வாசிக்கு மேல் அந்த உடம்பின் தோலை உறித்துக் கொண்டிருந்தான் அம்முனிவன்.

    தோல் உறித்த உடம்பு சொரணை மறந்துபோய் சிவப்பாய் வெளிரிக் கிடந்தது.

    கிழவன் உளறினான்.

    செளபர்னிகா நீராடும்போது, இந்த ஜந்து பார்த்து வந்தது சில நாளாய்.. என்றபடி இறுகிய முகத்துடன் தொடர்ந்து அந்த வேலையை முடிக்க எத்தனித்தது கீழே குனிந்தது அக்கறு முனி உருவம்!

    2. தங்கத் தாரகை

    கி.பி. 2010

    இஸ்ரோ!

    இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வைரக் கிரீடம்!

    இந்திய தேசியக்கொடியின் நீளம் வான்வெளியில் ஊடுருவிக் கொண்டிருப்பதை சீனாவின் கண்கள் ட்ராகன் நெருப்போடு பார்க்கக் காரணமான ஓரிடம்!

    இஸ்ரோவின் பிரஸ்மீட் அரங்கில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் என்பதைவிட, ஆயிரக்கணக்கான ஊடக மனிதர்கள்.

    சி.என்.என், என்.டி.டி-யில் ஆரம்பித்து லண்டன் டைம்ஸ் வரை அனைத்து உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொலைக்காட்சி, பத்திரிக்கைத்துறை பிரமுகர்கள், நிருபர்கள் என இஸ்ரோவில் அன்று குவிந்திருக்க, இஸ்ரோவின் தலைவர் டாக்டர் சின்னையா எனும் தமிழ்க்காரர் மெல்லிய கதர்ச்சட்டைக்குள் தன்னை இணைத்துக் கொண்டவராய், அறுபது வயதை தொட்டவராய் இருந்தாலும், முப்பத்தைந்து வயது அக்மார்க் இளைஞராய் வலம் வந்து கொண்டிருந்தார்.

    சமீபத்திய அவரது சாதனையான மார்ஸ்-1 எனும் செயற்கைக்கோள் செவ்வாய்கிரக விண்வெளி ஆய்வுக்காக புறப்பட்டது மட்டுமல்லாமல், பூமியின் புவியீர்ப்புக்கோடு தாண்டி, நிலாவின் மடியில் ஒரு ஏவுதளம் அமைத்து, அந்த ஏவுதளத்திலிருந்து மார்க்ஸ்-1 என்ற ராக்கெட்டை ஏவி சாதித்ததன் காரணமும், இன்று மாபியா முதல் அல்கொய்தா மற்றும் ஃபிரான்சின் அமெரிக்காவின் சி.என்.என் என அத்தனை கூட்டமைப்புகளின் தீவிரவாத மற்றும் ரகசிய ஏஜெண்டுகள் சமீபத்திய ஹாட் டாப்பிக்காக பேசியது டாக்டர் சின்னைய்யாவைப் பற்றிதான்!

    பத்திரிக்கைக்காரர்கள் பறந்தாடிக்கொண்டு, அவரையொரு நடிகை மாதிரி பாவித்து புகைப்படங்களால் சுட்டுத்தள்ள, ஒருவித வங்கோஜத்துடன் மனிதர் நடந்து வந்த சீப் செகரட்டரி திரு.லோகாத் பண்டாரியா மற்றும் அறிவியல்துறை அமைச்சர் திருமதி.ரோஷ்மா செளத்ரி ஆகியோர் சூழ மேஜையில் அமர்ந்து, ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்து முடித்தார்.

    ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அதன் தமிழ் மொழியாக்கம் இது!

    "பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களே! இந்த ஆண்டு இஸ்ரோ செய்திருக்கும் சாதனை உலகத்தில் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான்! பூமியைவிட பத்தில் ஒருபங்கு புவியீர்ப்பு சக்தி கொண்ட சந்திரனில் கிட்டத்தட்ட ஆறாண்டு காலமாக பெரும் விஞ்ஞான முயற்சியால் நிறுவப்பட்ட செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து மார்ஸ்-1 எனும் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியிருக்கிறோம். இந்த சாதனை இனிப்பிலிருந்து நாம் மீள்வதற்குள் அடுத்த கட்டமாக ஒரு பயணம்.

    நமது இந்திய செயற்கைக்கோள் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, வரும் புதன்கிழமை அன்று அதிகாலை இந்திய நேரப்படி 4.50க்கு ஏவப்படவுள்ள புனித்-3 எனும் ராக்கெட்தான் அந்த சாதனை!

    சாதனை என்னவென்றால், இந்த புனித்-3 என்பது முதல்முறையாக விண்வெளி ஆய்வாளர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அனுப்பப்படுகிறது. இதில் இரண்டு விஞ்ஞானிகள் டாக்டர் வின்சென்ட் யூசூப் என்பவரும், டாக்டர் என்.சி.மோகன்தாஸ் என்பவரும் பயணப்படவுள்ளனர்.

    அதாவது பால்வெளி எனப்படும் Millky Way குறித்த ஆய்வுதான் இந்தப் பயணம். அதுவும் இந்தப் பயணத்தில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், உலகத்திலேயே முதல்முறையாக ஒரு ஸ்டூடண்ட், ஒரு மாணவர் இந்த ராக்கெட்டில் பயணம் செய்யப்போகிறார்!" என்றதும் மொத்த அரங்கமும் கைதட்டலால் நிரம்பி வழிந்தது.

    பத்திரிக்கையாளர்கள் அதற்குள் படபடவென கேள்விகளை வீச ஆரம்பித்தனர்.

    சார்.. சார்.. இந்த பயணத்தால் என்ன புதுசாக கண்டுபிடிப்பு நிகழப் போகுது?

    இதில் பயணமாகிற அந்த ஸ்டூடண்ட் தேர்வாகிட்டாங்களா..?

    இப்ப இந்த ராக்கெட் ஏவுறதால இந்தியாவினுடைய விஞ்ஞான வளர்ச்சி எந்த உயரத்திற்குப் போகும்..?

    இந்த சேட்டிலைட்டுக்கு இந்தாண்டே பட்ஜெட்ல பணம் ஒதுக்கீடானது எப்படி?

    - என்பன போன்ற பல்வேறு கேள்விக் கனைகள் பல்வேறு பத்திரிக்கையாளர்களிடமிருந்து உதிர ஆரம்பிக்க, ஒவ்வொன்றுக்கும் நிதானமாய் அவரவர் முகங்களைப் பார்த்து பதில் கூறிக் கொண்டிருந்தார் இஸ்ரோவின் தலைவரான டாக்டர் சின்னையா.

    அதேநேரம், பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஒரு தனியார் விமானம் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் சல்லென்ற மழைத்துறலோடு பெரிய மழையாய் இறங்கிக் கொண்டிருந்தது.

    விமானத்திலிருந்து வெளியே வந்த பயணிகள் பலர் டாக்ஸிகளில் வெளியே விரைந்து கொண்டிருக்க, அழைக்க வந்தவர்கள் பகுதியில் பலர் பெயர்ப்பலகைகள் தாங்கி நின்று கொண்டிருந்தனர்.

    அந்த பலகைகளின் மேலே பார்வையோட்டியபடியே நகர்ந்தது இரு பளிங்கு நிற பண்கள்.

    ஏய்.. ப்ப்பி.. அங்க பாரு..! என்றொரு குரல்.

    எங்கம்மா...? என்று பப்பி என்ற பெயருக்குரியவள் கேட்க,

    அங்கடி..! என்று ஒரு நடுத்தர பெண்மணி காட்டிய திக்கில் பப்பி எனும் அந்த பாபிடால் பொம்மை திரும்பிப் பார்த்தது.

    'ப்ரம் இஸ்ரோ..' என்ற வாசகம் ஒரு பெயர்ப் பலகையில் தெரிய, அதை பார்த்துவிட்ட புதிய பரவசம், அந்த இளம்பெண்ணின் முகத்தில் மலர்ந்து ஒரு பூங்காவாய் தவழ்ந்தது.

    ஏங்க.. அங்க பாருங்க.. இஸ்ரோ போர்டு என குதூகலமாய் அந்த நடுத்தரவயது பெண்மணி கனமான பெட்டியுடன் தள்ள முடியாமல் தள்ளும் தன் அருகே வந்து கொண்டிருந்த கணவரை அழைக்க,

    அவரும் மூக்குக்கண்ணாடியை சரிசெய்தபடி ய்யா.. யய்யா.. என்றார்.

    அந்த யாய்யாவும்.. எதைப் பார்த்தாலும் ஆச்சர்யப்படும் அம்மாவும் அவர்களுக்கே அவர்களுக்காய் பிறந்த ஒரு குட்டி சைபர்தீன் மாதிரி குளுகுளுவென ஏசி காரில் உட்கார்ந்து ஜன்னல் கண்ணாடி வழியாய் மழையை ரசிக்கும் பப்பி பாப்பாவுமாய், இஸ்ரோ கார் டெல்லி சாலையில் வழுக்கிக் கொண்டு சிறிய பயணத்தின் பிறகு தாஜ்ஹோட்டலின் வரவேற்பு அறை அருகே மெல்ல கீச்சிட்டு நின்றது.

    தாஜ்ஹோட்டலின் வாசலில் ரோஜாப்பூ மாலையை அணிவித்து ஆரத்திப் பொட்டு வைத்து, இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாய் அவர்களை வரவேற்க, மெல்லிய ஆங்கில புன்னகையோடு அனைவரும் திரிந்து கொண்டிருந்தனர்.

    தாஜீன் பெரிய சூட் ரூம்! அறை முழுக்க சில்லென்ற வாசம்! அகல அகலமான திரைச்சீலைகளோடு சகலவிதமான மதுவகைகளும் அந்த அறையை மேலும் பொலிவு பெருக்கிக் கொண்டிருந்தது.

    அந்த யாய்யாவின் பெயர் தன்வந்திரி! பெங்களூர் தமிழ்காரர். அந்தம்மா சிதம்பரம் நடராஜர் கோயிலின் அடுத்துள்ள தீட்சிதர் தெருவை ஒட்டிய வீட்டுக்காரம்மா..! இருவரும் சென்னை மிஷின் கல்லூரியில் பி.எஸ்.சி படிக்கையில் நட்பாகி காதலாகி ஏகத்துக்கு கசிந்துருகி பெங்களூர் நண்பன் வீட்டில் தடபுடல் விருந்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமண ஆல்பத்துடன்தான் தன்னுடைய பெற்றோர்களையே சந்தித்து ஆசிபெற்று அருள்பெற்று, அவர்களின் சாபங்களைப் பெற்று கடைசியாக ஒரேயொரு பப்பியை பெற்று, பப்பியால் பல பிரச்சினைகளை பெற்று, பலப்பல பாராட்டுக்களைப் பெற்று, இத்தனையும் பெற்று பெற்றவர்களானவர்கள்.

    பப்பி..! அந்த சூட்ரூமின் திரைகளையும் ஓடியோடி ஒரு குட்டி தேவதைபோல் திறந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட ஒன்பதாவது மாடியிலிருந்து அறை முழுக்க

    Enjoying the preview?
    Page 1 of 1