Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bachelor Arai
Bachelor Arai
Bachelor Arai
Ebook185 pages1 hour

Bachelor Arai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580127104726
Bachelor Arai

Read more from Pa. Vijay

Related to Bachelor Arai

Related ebooks

Reviews for Bachelor Arai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bachelor Arai - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    பேச்சுலர் அறை

    Bachelor Arai

    Author:

    பா. விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பூமியே போ...! போ...!

    அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

    வாட்ச்மேன் தாத்தா

    தீர்ப்பு திருத்தப்படுகிறது

    அழுகை

    புளிய மரம்

    சிவகாமி

    நடுசாமத்தில் நட்சத்திரம்

    ஓய்வு

    வெளிதேசத்து வெண்ணிலா

    இப்படியும் ஒரு மனிதன்

    கிரக வாசல்

    முதல் மரியாதை

    தவம்

    பேச்சுலர் ரூம்

    பூமியே போ...! போ...!

    மனிதா! ஏ.. மனிதா நில்லப்பா! தாவரங்களின் தலைகளில் என்ன செய்கிறாய் நீ! ஏ... மனிதனே! உன் முகம் காட்டு, உன் முகவரி கூறு! என் தோட்டத்தில் உலவ உனக்கென்ன வேலை?

    ஜீவாவின் குரல் அந்த மனிதனின் செவியில் சென்று விழுந்தது. அவன் பின்புற உருவமைப்பு மட்டும்தான் பார்வைக்குப் புலப்பட்டது. கறுத்த தோல் ஆடை! நல்ல குள்ளமான உருவம்! கட்டையான உடல்! ஜீவாவின் குரல் மீண்டும் ஒலித்தது.

    அட மனிதனே! நீயென்ன செவிடா? நான் அழைப்பது உன் காதுகளில் விழவில்லையா? என்ன செய்கிறாய்? எதற்காக செடிகளைப் பிடுங்கித் தினிக்கிறாய்? திருடுகிறாயா? என்ன மனிதனே உடையிது? எங்கு தைத்தாய்? இது மனிதன் தைத்தது மாதிரி தெரியவில்லையே! ஏதாவது எந்திரம் தைத்ததோ?

    இந்த முறையும் ஜீவாவின் குரல் அவனை அசைக்கவில்லை! கொஞ்சமாய் கோபம் வந்து மனசிலே கொலுவைக்க, அந்தக் குள்ள மனிதனை நோக்கி நடந்தான்.

    பத்தடி நடந்து பக்கம் வந்தான். அந்த மனிதன் அசைந்தபாடில்லை. நட்டு வைத்த மரத்தைப் போல் அசையாமல் நின்றான். அவனின் முதுகுப்புறம் வந்த ஜீவாவின் கண்கள் அதை கவனித்தது. அவன் தலையை ஒரு இரும்பு கவசம் மூடியிருந்தது.

    இவன் என்ன ஏதாவது வாகன ஓட்டியா? இடம் தெரியாமல் இங்கே வந்துவிட்டானா? ஜீவா அவனை சம்பித்தான். தோள் தொடும் தூரத்தில் நின்றான்.

    ஏனப்பா! கேட்பது உனக்குப் புரியவில்லையா? என் இடத்தில் வந்து என்னப்பா செய்கிறாய்? இந்த பக்கமாய் திரும்பு! உன் உருவம் வித்தியாசமாய் இருக்கிறதே!

    ஜீவா தைரியத்தை விரல்களுக்கு வழங்கினான். மெதுவாக அந்தக் குள்ள மனிதனின் தோளைத் தொட்டான். சற்றே கரத்தால் அழுத்தம் கொடுத்தான். சட்டென்று அந்த மனிதன் உணர்வு பாய்ந்து திரும்பினான். அவன் முகம் இவன் விழிப்படலத்தில் விழுந்த நொடியில் ரத்தம் ஸ்தம்பித்தது. இதயம் வேலை நிறுத்தம் செய்தது. இரண்டடி பின்னால் நகர்ந்தான். கண்கள் இமைக்கவில்லை.

    இல்லை! இவன் மனிதன் இல்லை! இவன் மனிதன் இல்லை. ஜீவாவின் மனம் அறிவிப்பு செய்து அபாயச் சங்கு ஊதிற்று. பேயோ? இல்லை அதில் எனக்கு நம்பிக்கையில்லை. முகம் முழுக்க ஏன் கண்ணாடியில் மூடப்பட்டுள்ளது. அது என்ன? விழிகளுக்கு பதில் இரண்டு விளக்குகள், என்ன இது? அவன் நெற்றியருகில் ஒரு சதுர வடிவு சாமான் இவனுக்கு நாசியில்லையே பிறகெப்படி சுவாசிப்பான்? இவன் உட்கொள்ளுவது எப்படி, இவன் மனிதனில்லை! யார்? இவன் யார்? இந்த வித்தியாச மனிதப்பிறவி யார்? பயத்தை உதறிக் கொண்டான்.

    பயம் என்பது தோல்வியின் முதல் பிரதி. பயம் என்பது இயலாமையின் சொந்தக்காரன். பயம் விலகினான் பார்வை சமநிலைக்கு வந்து சூழ்நிலையோடு சங்கமித்துக் கொண்டது.

    யார் நீ? எங்கிருந்து வருகிறாய்? முதலில் நடுங்கினாலும் பிறகு குரலில் பிசிறு இல்லை.

    நீ மனிதன் தானா.. இல்லை.. வேறு பிறவியா? எதற்காக இங்கே வந்திருக்கிறாய் ஜீவா அந்த விந்தை மனிதனிடம் வினவினான்.

    அந்த மனிதனின் முகத்தில் பொறுத்தியிருந்த கண்ணாடி, திடீரென்று ஒளிக்கோலமானது. தலை உச்சியில் இருந்த ஒரு சாதனம் ஒலிக்கத் துவங்கியது. அந்த ஒளி மங்கிப்போய் அந்தக் கண்ணாடியில் தெளிவற்ற ரேகைகளாய் ஓடின. சட்டென்று தெளிவான தமிழ் எழுத்துக்கள் வார்த்தை வடிவில் வந்தது! வாசித்தான் ஜீவா!

    வணக்கம்! நான் வேற்றுகிரக மனிதன்! இங்கே தங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்ய வந்துள்ளேன்! உங்களால் உதவ முடியுமா?

    அழகான நடையில் வாக்கியங்கள் அந்த முகத்திரையில் ஓடி முற்றுப் பெற்றது. ஜீவாவிற்கு மயிற்கால்கள் கூச்செறிந்து போனது. நாக்கும் தொண்டை நோக்கி வழுக்கியது. வார்த்தைகள் மறக்கத் துவங்கியது! மெல்ல மெல்ல சுயநினைவு வந்து சுதாரித்தான். இவனுக்கு வாய் இந்த முகக் கண்ணாடியோ! இந்த மனிதன் வேற்று கிரக மனிதனோ! நிஜம்தானா? இது சாத்தியம்தானா? அவன் மனம் சந்தேகத்தில் மருகியது.

    மீண்டும் அந்தக் கண்ணாடித் திரை உயிர்பெற்று ஒலிக்கத் துவங்கிய பிறகு எழுத்துக்கள் ஓடியது.

    தாங்கள் பேசுவது எனக்குப் புரியும்! சற்றே உரக்க சம்பாஷிக்க வேண்டும். உங்களால், நான் உலகை சுற்றிப் பார்ப்பதற்கு உதவ முடியுமா என்பதை உடன் தெரியப்படுத்தவும்.

    ஜீவாவிற்கு அதன் அவசரம் புரிந்தது! உடனே மனசுக்குள் ஒரு விசாரனை கமிஷன் அமைத்தான். விசாரனையின் முடிவில் தீர்ப்பு வந்தது. இந்த மனிதனுக்கு உதவலாம் என்று! சட்டென்று சந்தோஷம் பாய அந்த மனிதனை நெருங்கினான். பிறகு அவனோடு கைகுலுக்குவதற்காக கரம் நீட்டினான்.

    என்னோடு கைகுலுக்கினால் நீங்கள் எறிந்து போவீர்கள் கண்ணாடி வழியே ஜீவாவிற்கு எச்சரிக்கை வந்தது.

    அந்த வாசகத்தை படித்தவுடன் நீட்டிய காரத்தை குறுக்கிக் கொண்டான். நல்ல மனிதன் நீ! ஆபத்தை அறிவிப்பு செய்கிறாயே! நல்ல மனிதன் நீ! இந்த பூலோகத்து மனிதர்களுக்கு இப்படி ஒரு சக்தியிருந்தால் பாதி ஜனங்களை பஸ்பமாக்கியே குறைத்திருப்பார்கள். நல்ல மனிதன் நீ! ஜீவாவின் மனம் அந்த அதிசய மனிதனுக்கு ஆலவட்டம் சூட்டியது.

    அவனுக்கு அந்த எந்திர மனிதனின் மீது நம்பிக்கை பிறந்தது. ஒரு தோழமை உணர்வோடு அவனை நோக்கினான். அவனும் ஜீவாவை ஆழமாய் பார்த்தான். அவனுடைய பதிலுக்காக அது காத்திருந்தது. ஜீவா மேலும் நெருங்கினான். அந்த எந்திர மனிதனின் முக்கோண முகத்தை ஏறிட்டான். மனிதர்களுக்குத்தான் உதவுவது ஆபத்தே தவிர, உன்னை போன்றதுக்கு உதவுவதில் ஆபத்தில்லை.

    சரி போகலாமா ஜீவா சிறிதே சப்தம் கூட்டிப் பேசினான். ஒரு நிமிடம் தாமதித்த அது, கண்ணாடித் திரைவழியே நன்றி என்று உச்சரித்தது. ஜீவா முன்னே நடந்தான். அதிசய மனிதன் பின்னே நடந்தான். அந்த ஒற்றையடிப் பாதை விலகி, மரம் சூழ்ந்த பிரதேசத்திற்குள் இருவரும் வந்தார்கள். அந்த அடர்ந்த காடு சூரிய வெளிச்சத்தைக்கூட உள்ளே நுழைய விடாமல் இலைகளால் திரை நெய்திருந்தது. பறவைகள் பேசிக் கொண்டன. காற்று மட்டும் அந்தக் காட்டில் சுதந்திரமாய் சுற்றியது.

    யார் நீங்கள்?.. அந்த கரகரப்பான குரல் இந்த இருவரையும் நிறுத்தித் திரும்பிப் பார்க்க வைத்தது! அதிசய மனிதன் சப்தம் வந்த திசையினை யூகித்தான்! அவனின் கண்ணாடித் திரையில் கோடுகள் தோன்றி காணாமல் போயின! ஜீவாவும் அவனைத் தொடர்ந்து பார்வையை அந்த அடர்த்தியான மரம் நிறைந்த பிரதேசத்திற்குள் பாயவிட்டான். கிளைகள் அதிர, இலைகள் சப்தமிட, ஒரு கரிய உருவம் மரத்தின் உயரத்திலிருந்த மண்ணில் குதித்து எம்பி நின்றது.

    இடுப்பில் மட்டும் இலை ஆடை புனைந்திருந்தது. அதன் கண்கள் நெருப்புத் துண்டைப் போல் சிவந்திருந்தது! தலையெங்கும் கோரமுடி ஜடை போட்டிருந்தது. சவரம் காணாத அவலட்சனம் அடங்கிய மூர்க்கமான முகம். அந்த அதிசய மனிதன் முதலில் வினா எழுப்பினான்.

    நீங்கள் யார்? கண்ணாடித் திரையினை அந்த மனிதன் கவனிக்கவில்லை. அவன் ஒரு உறுமல் சப்தத்தோடு மீண்டும் பழைய கேள்வியையே கேட்டான். அதற்கு அதிசய மனிதன் மீண்டும் பதில் காட்டினான். ஆனால் மூர்க்க மனிதன் மீண்டும் முனகினான். ஜீவாவிற்கு புரிந்தது. இவனுக்குப் படிக்கத் தெரியாது. இப்போது ஜீவாவே பேசினான்.

    "இவர் வேற்று கிரகத்து மனிதர். இவரும் நானும் பூமி சுற்றப் போகிறோம். இந்த மிருகங்கள் வசிக்கும் காட்டில் மனிதர்களாகிய நீங்கள் வசிக்கிறீர்களே! ஏன்?

    ஜீவாவின் கேள்வி அந்த மனிதனை அசைத்தது! அவன் மெல்ல அருகில் வந்தான். அருகில் வந்தவன் அந்த இருவரின் முகத்தையும் உற்றுப் பார்த்தான். பார்த்தவன் சற்று பின்வாங்கினான். பிறகு பேசினான்.

    "நானொரு ஆதிவாசி! இந்தக் காட்டுக்குள் வசிக்கும் காட்டுவாசி! எனக்கும் உங்கள் உலகத்துக்கும் தொடர்பு கிடையாது! உங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒன்று கேட்கலாமா நண்பரே! நட்போடு அழைத்தான் காட்டுவாசி! ஜீவா ஆதிவாசியின் முகத்தை நோக்கி தலையசைத்தான்.

    உங்களோடு ஊர் பார்க்க நானும் வரலாமா? தற்போது உறுமல் குரல் உறவுக் குரலாய் இறங்கி வந்திருந்தது. கொஞ்சமாய் அது தாழ்ந்து ஒலித்தது! ஜீவாவின் முகத்தையும், அதிசய மனிதனின் முகத்தையும் அவன் மாறிமாறிப் பார்த்தான். நீண்டநேரம் பார்த்தான். அவர்களுடைய பதிலுக்காக அவன் செவிகள் துடிதுடித்தன! கால் மாற்றி நின்றான். ஜீவா வாய்திறக்காததால் அவனுக்கு எதுவுமே புரியவில்லை! அதிசய மனிதனின் கண்ணாடித் திரைவழியே வாக்கியம் காட்டினான்.

    நண்பரே! பாவம் அந்த ஆதிவாசி! அவனை என்ன நாமா சுமக்கப் போகிறோம்! அழைத்துப் போவோம் இந்த வாசகம் ஜீவாவை வியப்பில் ஆழ்த்தியது. அடடா! இரும்பு மனிதனே! உனக்குள் இதயமும் இருக்கிறதா? இங்கே பலர் இல்லாதது மாதிரி நடக்கிறார்களே! அவர்களுக்கு நீ உயர்ந்தவனா? அவன் முடிவெடுத்தான்.

    "சரி மூவரும் போவோம்! முதலில் ஒன்று உங்களுக்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும். அதுவும் உங்களுக்கு ஏற்ற பெயராக இருக்க வேண்டும்.

    சொன்னவனே யோசிக்க

    Enjoying the preview?
    Page 1 of 1