Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Buddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum
Buddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum
Buddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum
Ebook138 pages49 minutes

Buddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனது ‘ஜென் காட்டும் வாழ்க்கை நெறி’ என்ற புத்தகத்தைப் படித்தவர்கள் ஜென் பிரிவின் பால் ஒரு ஈர்ப்பைக் கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

ஜென் பிரிவில் உள்ள குருமார்கள் ஏராளமான பேர்கள்! அவர்களது உபதேச உரைகளும், ஜென் பிரிவில் உள்ள குட்டிக் கதைகளும் இன்னும் ஏராளம் உள்ளன.

வாழ்க்கையில் மாபெரும் வெற்றிக்கு வழி காட்டும் இந்த போதனைகளும் குட்டிக் கதைகளும் மேலை நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிலும் முனைப்புடன் படிக்கப்படுகின்றன. ஜென் தியான முறையைப் பயிற்றுவிக்கும் பல மையங்கள் உலகெங்கும் பரவி உள்ளன.

இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு புத்தரின் போதனைகளையும் ஜென் பிரிவு தரும் குட்டிக் கதைகள் பலவற்றையும் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த நூல் மலர்கிறது.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580151008010
Buddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum

Read more from S. Nagarajan

Related to Buddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum

Related ebooks

Reviews for Buddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Buddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum - S. Nagarajan

    http://www.pustaka.co.in

    புத்தரின் போதனைகளும் ஜென் குட்டிக் கதைகளும்

    Buddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum

    Author :

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. நிகழ்காலத்தில் வாழ்க!

    2. பிக்‌ஷுவே, அப்போது என்ன செய்வாய்?

    3. கர்ம பலன்: அந்த மாங்காய் இது அல்லவே!

    4. மன்னனின் பிரச்சனையும் ஆனந்தரின் தீர்வும்!

    5. சுவர்க்கமும் நரகமும்!

    6. ஜென் குருமார்களும் சீடர்களும் - சுவையான சம்பவங்கள்!

    7. ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை!

    8. இதோ, இதோ இங்கேயே இருக்கிறது ஜென்!

    9. ப்ரக்ருதியின் ஆசையும், புத்தரின் கேள்விகளும்!

    10. மஹராஜா புக்குசாதியின் ஆசை!

    11. நான் புத்தர்!

    12. புத்தரும் அற்புதங்களும்!

    13. எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்

    14. அடிமைக்கு அருளிய புத்தர்!

    15. புத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு!

    16. நான் கொன்று விடுவேன்! - புத்தரின் பதில்!!

    17. ஷாலின் ஆலயமும் போதி தர்மர் மர்மமும்!

    18. அதிசயமான கும்-பம் மரம்!

    19. மனதிற்கு மனம் மூலமாக அனுப்பப்பட்ட புத்தரின் முதல் உபதேசம்!

    20. புத்தரின் போதனை: சேற்றில் மலரும் செந்தாமரை மலர் போல இரு!

    21. துறவி தந்த உபதேசம்!

    22. காட்டு வாத்துக்கள் பறக்கின்றன, குருவே!

    23. அமர்ந்தவாறே தியானம் செய்தால் புத்தராகி விட முடியுமா?

    24. புத்தர் வழியில்!

    25. போதிசத்வர்! - நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!

    26. கர்மா என்றால் என்ன? புத்தரின் விளக்கம்!

    27. புத்தபிரானே! எனக்கு அந்த லட்டைக் கொடுங்கள்!: கர்ம சதகம்!

    28. புத்தரின் உருவ வழிபாடு!

    29. இந்தப் பழம் பழுத்து விட்டது!

    30. ஞானம் பெற்று விட்டேனா, குருவே!

    31. வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள்!

    32. ஜென் வாழ்க்கை முறை சுலபம் தான்!

    என்னுரை

    எனது ‘ஜென் காட்டும் வாழ்க்கை நெறி’ என்ற புத்தகத்தைப் படித்தவர்கள் ஜென் பிரிவின் பால் ஒரு ஈர்ப்பைக் கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

    ஜென் பிரிவில் உள்ள குருமார்கள் ஏராளமான பேர்கள்! அவர்களது உபதேச உரைகளும், ஜென் பிரிவில் உள்ள குட்டிக் கதைகளும் இன்னும் ஏராளம் உள்ளன.

    வாழ்க்கையில் மாபெரும் வெற்றிக்கு வழி காட்டும் இந்த போதனைகளும் குட்டிக் கதைகளும் மேலை நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிலும் முனைப்புடன் படிக்கப்படுகின்றன. ஜென் தியான முறையைப் பயிற்றுவிக்கும் பல மையங்கள் உலகெங்கும் பரவி உள்ளன.

    இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு புத்தரின் போதனைகளையும் ஜென் பிரிவு தரும் குட்டிக் கதைகள் பலவற்றையும் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த நூல் மலர்கிறது.

    தைவானில் உள்ள ‘The Corporate Body of the Buddha Educational Foundation’ நிறுவனம் விலை மதிக்கவே முடியாத புத்தரைப் பற்றிய ஏராளமான புத்தகங்களை எனக்கு இலவசமாக அனுப்பி உதவியது. அருமையான இந்தப் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவுடன் மேலும் பல கட்டுரைகளை எழுதலானேன்.

    அவ்வப்பொழுது பல்வேறு இதழ்களிலும், இணையதள ப்ளாக்கிலும் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட அனைத்து தமிழ் பத்திரிகைகளுக்கும் எனது நன்றி. குறிப்பாக லண்டன் திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றி.

    இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறிவு பூர்வமான வெற்றிக்கான உத்திகளை ஜென் பிரிவு தருகிறது! அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி உறுதி! இதைப் படிக்கும் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பங்களூர்

    13-1-2022

    ச. நாகராஜன்

    1. நிகழ்காலத்தில் வாழ்க!

    ஜென் காட்டும் வாழ்க்கை நெறி – நிகழ்காலத்தில் வாழ்க!

    அமைதியான வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜென் காட்டும் வாழ்க்கை நெறிகளில் மிக முக்கியமான ஒன்று – நிகழ்காலத்தில் வாழ்க என்பது தான்!

    ரமண மஹரிஷியிடம் ஒரு கேள்வி!

    இதே நெறியைத் தான் இந்து மதமும் வலியுறுத்தி வருகிறது. பகவான் ரமண மஹரிஷியை தரிசிக்க அவரது அணுக்கத் தொண்டர்களுள் ஒருவரான கிரிதாரிலால் என்பவர் (18-3-1946 அன்று) வந்தார். இந்த யுகம் எப்போது முடியும் என்ற கேள்வியை அவர் பகவானிடம் கேட்டார்.

    உடனே ரமண மஹரிஷி நான் காலத்தை உண்மையெனக் கருதுவதில்லை இறந்த காலத்தைப் பற்றியும் முன்பிருந்த யுகங்களைப் பற்றியும் நமக்குத் தெரியாது. எதிர்காலத்தைப் பற்றியும் நமக்குத் தெரியாது ஆனால் நிகழ்காலம் இருக்கிறதென்பது தெரியும் அதை முதலில் தெரிந்து கொள்வோம். அப்போது எல்லா சந்தேகங்களும் தீரும். தூக்கத்தில் இந்த உலகமும் இறந்த காலம் அல்லது எதிர்காலம் ஆகிய ஒன்றுமே நமக்கு இருப்பதில்லை. ஆனால் நாம் இருக்கிறோம்! மாற்றமில்லாததும் சாஸ்வதமுமானதையும் முதலில் தெரிந்து கொள்வோம் என்றார்.

    கிரிதாரிலால் புராணங்களில் ஒவ்வொரு யுகத்திலும் இத்தனை வருடங்கள் எனத் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்று மேலும் வினவினார்.

    அதற்கு பகவான், அப்படிக் குறிப்பிடப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கக் கூடும். அல்லது உலகத்தின் பிரமிப்பூட்டும் காலத்திற்கு முன்னர் மனிதனின் முழு ஆயுளான நூறு வருடங்கள் கூட எவ்வளவு அற்பமானது என்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு உத்தியாகவும் அது இருக்கக் கூடும் என்று அருளினார்.

    பிரபஞ்ச வயதின் முன்னர் மனிதனின் வாழ்வு எவ்வளவு அற்பமானது! நான்கு யுகங்கள் கொண்ட சுற்று வரிசை எத்தனை வந்தனவோ! நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொண்டால், தூக்கத்தில் உள்ளதைப் போல காலம் என்பதே இல்லையென்றால் இந்தக் கேள்விகளால் நம்மை நாமே தொந்தரவு செய்து கொள்வதால் என்ன பயன்!

    ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து அமைதியாக வாழக் கற்றுக் கொண்டால் நாளடைவில் அனைத்தும் புரிய ஆரம்பிக்கும் என்பதே ரமண மஹரிஷியின் அருளுரையின் சாராம்சம்.

    காலிப் படகு மோதிய கதை

    ஜென் பிரிவில் புத்த துறவிகளும் எல்லையற்ற கால வெள்ளத்தின் முன்னர் இறந்த காலத்தையோ எதிர் காலத்தையோ பற்றி எண்ணாமல் நிகழ் காலத்தில் வாழ்வதையே வாழ்க்கை நெறியாகக் கொண்டுள்ளனர்.

    ஜென் பிரிவில் அடிக்கடி கூறப்படும் ஒரு போதனை, காலியான படகு பற்றிய ஒரு சம்பவம். பெரிய ஜீவ நதியில் நீங்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென காலியான படகு ஒன்று உங்கள் படகின் மீது மோதி விடுகிறது என வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள். கோபப் பட மாட்டீர்கள். ஆனால் அதிலேயே படகோட்டி ஒருவன் இருந்தால் அவன் மீது எவ்வளவு கோபம் வரும்!

    Enjoying the preview?
    Page 1 of 1