Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Samskirutha Subhashitham 200!
Samskirutha Subhashitham 200!
Samskirutha Subhashitham 200!
Ebook178 pages57 minutes

Samskirutha Subhashitham 200!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குமரி முதல் இமயம் வரை உள்ள பாரத தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஏராளமான கவிஞர்கள் இயற்றியுள்ள சுபாஷிதங்கள் லக்ஷக்கணக்கில் உள்ளன. இவற்றைத் தொகுப்பதில் ஆர்வம் ஏற்பட்டு சுமார் 30000 சுபாஷிதங்களைத் தொகுத்தேன்.

சிறந்த சம்ஸ்கிருத சுபாஷிதங்களுக்கான தமிழ் அர்த்தம் கொண்ட தொகுப்பே இந்நூல்.

Languageதமிழ்
Release dateApr 23, 2022
ISBN6580151008362
Samskirutha Subhashitham 200!

Read more from S. Nagarajan

Related to Samskirutha Subhashitham 200!

Related ebooks

Reviews for Samskirutha Subhashitham 200!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Samskirutha Subhashitham 200! - S. Nagarajan

    http://www.pustaka.co.in

    ஸம்ஸ்கிருத சுபாஷிதம் 200!

    (தமிழ் அர்த்தத்துடன்)

    Samskirutha Subhashitham 200!

    Tamil Arththathudan

    Author :

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயங்கள்

    1. ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு; அதில் சுபாஷிதத்தின் பெருமை!

    2. தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம்!

    3. நிகழ்காலத்தில் வாழ்க!

    4. சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்...!

    5. அன்னமும் வெள்ளை நிறம், கொக்கும் வெள்ளை நிறமே, இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

    6. பதினெட்டு புராணங்களின் சாரம் இரண்டே வரிகளில்!

    7. சந்தோஷம் அடைவது எப்படி?

    8. என்னே விதியின் கொடுமை!

    9. நுண்ணறிவு நான்கு வழிகளில் கிடைக்கிறது!

    10. ஆன்ம முன்னேற்றத்திற்காக உலகையே தியாகம் செய்க!

    11.நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்க! நாளை என்ன நடக்குமோ, யார் அறிவார்!

    12. நாக்கே செல்வத்தைத் தரும் அல்லது சிறைக்கும் இட்டுச் செல்லும்!

    13. எப்போதும் சந்தோஷமாக இல்லாத இருவர்; எப்போதும் ஸ்வர்க்க புகழை விட அதிகம் கொள்ளும் இருவர்!

    14. நரகத்திற்குச் செல்பவன் யார்? ஸ்வர்க்கமும் போற்றுபவன் யார்?

    15. காட்டிலே அனாதையாக கை விடப்பட்டாலும் விதி இருப்பின் அது குழந்தையைக் காக்கும்!

    16. கோடி விஷயங்களை விட்டு விட்டு ஹரி பஜனைக்குச் செல்!

    17. கிடைத்தற்கரிய ‘பஞ்ச ஜகாரம்’, நல்ல வாழ்க்கைக்கு வழி!

    18. உயர்ந்தவர்களின் உள்ளம்!

    19. எவனால் உலகம் ஜெயிக்கபடுகிறது?

    20. தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர்!

    21. உருவத்தைக் கண்டு எடை போடாதே!

    22. நிலத்திற்கு அழகு விவசாயம்! பெண்ணுக்கு அழகு நல்ல கணவன்!!

    23. வாழும் வழி காட்டும் சுபாஷிதம்!

    24. பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்பவன் அரிதே தான்!

    25.தோட்டத்தில் நுழைந்தாலும் கள்ளிச் செடியையே தான் தேடும் ஒட்டகம்!

    26. எவன் உண்மையான சாது?

    27. முயற்சியே வெற்றி தரும்!

    28. ஒழுக்கமே எல்லா இடத்திலும் செல்வமாகும்!

    29. நல்ல ஒரு நண்பனின் குணங்கள் யாவை?

    30. சுபாஷிதங்களின் பெருமை!

    31. பிரம்மாவினால் கூட ரகசியம் கேட்கப்பட மாட்டாது! எப்போது?!

    32. ஒருவனுக்குப் பிடித்திருந்தால் அதுவே அவனுக்கு அழகு!

    33. காக்கைகள் கூவும் போது குயில் ஓசை எடுபடுமா?

    34. ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருக்கும் இருவர் யார்?

    35. மலையின் உயரம், கடலின் ஆழம் ஆகிய இரண்டும் ஒரு புத்திசாலியிடம் உள்ளது!

    36. பிறப்பினால் அடைவதல்ல உயர்நிலை! குணங்களினால் அடையப்படுவது அது!

    37. யானையே சிங்கத்தின் பலத்தை அறிய முடியும்: ஒரு பலசாலியே இன்னொரு பலசாலியை அறிய முடியும்!

    38. கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் ஆறு தடைகள் யாவை?

    39. ஈனர்களை ஒரு போதும் அண்டாதே!

    40.குவித்த கரங்களில் இருக்கும் மலர்களின் வாசனை!

    41. ஹரியோ, ஹரனோ யாரானாலும் நெற்றியில் எழுதியதை அழிக்க முடியாது!

    42. கள் குடித்த குரங்கைத் தேள் கொட்ட, பேயும் பிடித்தால் அது போடும் ஆட்டம், அடடா!

    43. சுபாஷித நூல்களின் பட்டியல்! – 1

    44. சுபாஷித நூல்களின் பட்டியல்! – 2

    45. முடிவுரை

    சுபாஷித ஸ்லோகங்களின் முதல் குறிப்பு அகராதி

    என்னுரை

    குமரி முதல் இமயம் வரை உள்ள பாரத தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஏராளமான கவிஞர்கள் இயற்றியுள்ள சுபாஷிதங்கள் லக்ஷக்கணக்கில் உள்ளன.

    இவற்றைத் தொகுப்பதில் ஆர்வம் ஏற்பட்டு சுமார் 30000 சுபாஷிதங்களைத் தொகுத்தேன்.

    சிறந்த சம்ஸ்கிருத சுபாஷிதங்களுக்கான தமிழ் அர்த்தம் கொண்ட நூல்கள் பெரிய அளவில் இல்லை.

    இந்தக் குறையை நீக்க அவ்வப்பொழுது சுபாஷிதங்களின் அர்த்தத்தை தமிழில் சிறு கட்டுரைகளாக www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் எழுதி வந்தேன்.

    இதை வெளியிட்டு ஊக்கம் தந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    சுபாஷிதங்களை சேகரித்து அச்சிட தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த லுட்விக் ஸ்டெர்ன்பாக் (Ludwik Sternbach – Hon Professor of Dharmasastra, College of France, Paris) அவர்களின் வாழ்க்கை ஆச்சரியகரமானது. அவரை இங்கு பணிவுடன் வணங்கி நினைவு கூர்கிறேன்.

    அவருக்கு உறுதுணையாக இருந்து மஹாசுபாஷித சங்க்ரஹா என்ற எட்டு தொகுதிகள் அடங்கிய நூலை திரு எஸ். பாஸ்கரன் நாயர் அவர்கள் ஹோஷியார்பூர் விஸ்வேஸ்வரானந்த் வேதிக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் சார்பாக வெளியிட்டுள்ளார். சுபாஷிதங்களை ஆங்கிலத்தில் திரு A.A.R உள்ளிட்ட அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர்.

    இது உலகளாவிய விதத்தில் சுபாஷிதங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. இவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.

    இது தவிர சிறு சிறு புத்தகங்களாக அவ்வப்பொழுது பல ஆண்டுகளாக ஆங்காங்கே சுபாஷிதங்கள் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியாகி வந்துள்ளன.

    குறிப்பிடத்தகுந்தவையாக அமைந்துள்ளவை கீழ்க்கண்ட நூல்கள்:

    Gems of Speech – Manohar Jai (1998)

    Subhasita Collection Anthology - N.V.Nayudu (1992)

    Subhasita Shatakam – Saroja Bhate (1991)

    Subhasitas - RSS வெளியீடு

    மேலும் ஆங்கில மாத இதழான கல்யாண் கல்பதரு அவ்வப்பொழுது சுபாஷிதம் ஒன்றை தன் இதழில் முகப்புத் தொடராக வெளியிட்டு வந்தது.

    இப்படி பல நூல்களிலிருந்தும் தொகுக்கப்பட்ட சுமார் 200 சுபாஷிதங்களை இந்த நூலில் காணலாம்.

    திரு T.S. கௌரிபதி திரிபாதி, திரு K.P. உன்னி ஆகியோரும் ஆங்கில மொழியாக்கத்துடன் சுபாஷிதங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    இந்த சுபாஷிதங்களை அறிமுகப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றி.

    துரதிர்ஷ்டவசமாக இவர்களைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் அனுப்பியும் (ஆண்டுகள் பல கடந்ததாலோ, என்னவோ) அவர்களிடமிருந்து பதில் பெற முடியவில்லை.

    சுபாஷிதங்களின் தொகுப்புகளை ஏராளமான கவிஞர்கள் அவ்வப்பொழுது செய்துள்ளனர்.

    இதை விரிப்பின் பல நூறு பக்கங்கள் கொண்ட ஆய்வு நூலாக அது மலரும்.

    இந்த சுபாஷித நூல்கள் அனைத்தையும் வாங்கி இதை வெளியிடுவோரை ஆதரித்தல் நமது கடமை.

    43 மற்றும் 44ஆம் அத்தியாயங்களில் இணையதள வாயிலாக இவற்றைப் பெறுவதற்கான தொடுப்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இவற்றையெல்லாம் படித்து அவ்வப்பொழுது தமது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நண்பர்களுக்கும் கூறி இவற்றைப் பரப்பினால் சுபாஷிதங்களின் பெருமையை நாடே நன்கு அறியும்.

    இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த Pustaka Digital Media வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதைப் படித்து அவ்வப்பொழுது பாராட்டி என்னை ஊக்குவித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

    பங்களூரு ச.நாகராஜன்

    29-3-2022

    1. ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு; அதில் சுபாஷிதத்தின் பெருமை!

    ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு பற்றியும் சுபாஷிதங்களின் பெருமை பற்றியும் ஏராளமான சுபாஷிதங்கள் உள்ளன.

    அவற்றில் சில:-

    பாஷாஷு மதுரா முக்யா திவ்யா கீர்வாணபாரதி |

    தஸ்மாத் ஹி மதுரம் காவியம் தஸ்மாத் அபி சுபாஷிதம் ||

    (மனித குலத்தில் உள்ள) மொழிகளில் எல்லாம் பாரதத்தில் உள்ள

    ஸம்ஸ்க்ருத மொழி இனிமையானது, மிக முக்கியமானது, தெய்வீகமானது

    மதுரமானது. அதிலும் அதில் உள்ள காவியங்கள் இனிமையானவை;

    அதிலும் இனிமையானவை அதில் உள்ள சுபாஷிதம்!

    Among all the language (of mankind) Sanskruta the language of Bharat i.e India is the sweetest, the most distinct and truly divine. Sanskrutas poetic verses are so very melodious, and amonst them again the most delightful are her Subhasitas.

    (Translation by Manhar Jai)

    ***

    கீர்வாண வாணீஷு விசிஷ்ட புத்திம்

    தஸ்மாபி பாஷாந்தரலோலுபோஹம் |

    யதா சுராணமம்ருதே ஸ்திதேபி

    ஸ்வர்காங்கநாநாமமதராஸாவே ருசி ||

    அனைத்து மொழிகளின் மீதும் எனக்கு ஆசை உண்டு என்றாலும், எனக்கு கடவுளரின் மொழியில் – ஸம்ஸ்கிருதத்தின் மீது – ஒரு விசேஷமான ஆர்வம் உண்டு. ஏனெனில் எப்போதுமே அம்ருதம் கடவுளர்

    Enjoying the preview?
    Page 1 of 1