Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagin Oppattra Nool Yoga Vasishtam!
Ulagin Oppattra Nool Yoga Vasishtam!
Ulagin Oppattra Nool Yoga Vasishtam!
Ebook110 pages4 hours

Ulagin Oppattra Nool Yoga Vasishtam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹிந்து மதத்தின் ஆணி வேராக அமையும் வேதங்கள், இதிஹாஸங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றில் உள்ள மர்மங்களை விளக்கும் அற்புத நூல் யோக வாசிஷ்டம்!

விதியா, மதியா என்ற கேள்விக்கு இந்த நூல் தரும் விடை நம்மை வாழ்வியலில் முன்னேற வைக்கும். உலகின் ஆகப் பெரும் நூற்றுக் கணக்கான அறிஞர்கள் இன்று அறிவியல் பூர்வமாகக் கூறுவதை அன்றே கூறி இருக்கும் உலகின் ஒப்பற்ற ஒரு நூல் யோக வாசிஷ்டம்.

வாழ்க்கையில் நாம் அறிய வேண்டிய அனைத்தின் சாரமும் இதில் உள்ளது; அத்துடன் இன்றைய நவீன அறிவியல் கூறும் உளம் சார்ந்த உண்மைகளும், அதீத உளவியல் பற்றிய வியத்தகு செய்திகளும் அன்றே இந்த நூலில் கூறப்பட்டிருப்பது நம்மை பிரமிக்க வைக்கும். இதைப் பற்றிய அதிசய விவரங்களையும் முக்கிய கதைகளையும் இந்த நூல் 24 அத்தியாயங்களில் தருகிறது. யோகவாசிஷ்டத்தைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகளே!

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580151008989
Ulagin Oppattra Nool Yoga Vasishtam!

Read more from S. Nagarajan

Related to Ulagin Oppattra Nool Yoga Vasishtam!

Related ebooks

Related categories

Reviews for Ulagin Oppattra Nool Yoga Vasishtam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagin Oppattra Nool Yoga Vasishtam! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உலகின் ஒப்பற்ற நூல் யோக வாசிஷ்டம்!

    (கதைகளும் கருத்துக்களும்!)

    Ulagin Oppattra Nool Yoga Vasishtam!

    (Kadhaikalum Karuthukalum)

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    என்னுரை

    1. உயர்வுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற ஒரு நூல்!

    2. ஆன்ம ஞானம் பெற அதி சுலபமான அதிசய வழி!

    3.  உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம்! - 1

    4.  உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம்! - 2

    5. உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம்! – 3

    6. உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம்! – 4

    7. உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 5

    8. யோக வாசிஷ்டம் - 6 பிரகரணங்களும் 55 கதைகளும்!

    9. வசிஷ்டர் தரும் காலத்தை வென்ற இரகசியம்!

    10. யோக வாசிஷ்டத்தில் வரும் பகீரதன் கதை!

    11. மனம் பற்றிய யோக வாசிஷ்ட கதை!

    12. மாறுகின்ற மனம் பற்றிய இரகசியம்!

    13. யோக வாசிஷ்டம் கூறும் வேதாளத்தின் கதை!

    14. மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன் கதை!

    15. மரணம் என்னும் மாயை! உலகத்திற்குள் உலகங்கள்!! அற்புதமான லீலா கதை!

    16. சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி: காதியின் கதை!

    17. மனமும் உலக அனுபவங்களும் - மலரும் அதன் மணமும் போல!

    18. விதியா மதியா! மதியையே விதியாக்கு, வெல்வாய்!

    19. அத்யாத்ம விசாரம் என்னும் அதி அற்புத ரகசியம்!

    20. ஆத்மாவே உண்மையான பந்து!

    21. மோக்ஷம் அடைவது எப்படி? வஸிஷ்டர் கூறிய விதஹவ்யன் கதை!

    22. சித் பூஜையும் மூர்த்தி பூஜையும்: சிவபிரானின் அருளுரை!

    23. கல்லுக்குள் இருக்கும் வடிவங்களை சிற்பியே அறிவார்!

    24. யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்!

    சமர்ப்பணம்

    திரு வெ.சந்தானம்

    (தோற்றம் 4-9-1911 மறைவு 15-8-1998)

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

    ஆன்மீகத்தை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.

    பத்திரிகை துறையில் ஒரு புது நெறியைக் காட்டியவர்.

    1998 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, கொடி ஏற்றியாச்சா? என்று கேட்டு ‘ஆம்" என்ற பதிலைக் கேட்ட பின்னர் உயிர் துறந்த தேசபக்தர்.

    எனது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.

    ச. நாகராஜன்

    என்னுரை

    ஹிந்து மதத்தின் ஆணி வேராக அமைபவை வேதங்கள், இதிஹாஸங்கள், உபநிடதங்கள் மற்றும் சாஸ்திரங்கள்.

    இவை விளக்கும் மர்மங்கள் கணக்கிலடங்கா.

    இவற்றை முற்றிலுமாகப் படித்து உணர ஒரு ஆயுள் போதாது.

    இவற்றின் சாரத்தை எங்கே படிக்கலாம்? இந்த சிக்கலான கேள்விக்கு சிறந்த விடையாக அமைவது யோக வாசிஷ்டம் என்ற நூல்!

    வாழ்க்கையில் நாம் அறிய வேண்டிய அனைத்தின் சாரமும் இதில் உள்ளது; அத்துடன் இன்றைய நவீன அறிவியல் கூறும் உளம் சார்ந்த உண்மைகளும், அதீத உளவியல் பற்றிய வியத்தகு செய்திகளும் அன்றே இந்த நூலில் கூறப்பட்டிருப்பது நம்மை பிரமிக்க வைக்கும்.

    விதியா, மதியா என்ற கேள்விக்கு இந்த நூல் தரும் விடை நம்மை வாழ்வியலில் முன்னேற வைக்கும்.

    பல காலமாக ஆர்வத்துடன் இந்த நூலைப் பயின்று வருபவன் நான்.

    ஆகவே இது பற்றிய கட்டுரைகளை ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் இதழிலும், www.tamilandvedas.com ப்ளாக்கிலும் எழுதி வந்தேன். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

    இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் லண்டன் திரு சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி.

    இந்த நூலை அழகுற அமைத்து வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

    கட்டுரைகளாக வெளி வந்த போது இவற்றைப் படித்து என்னை மேலும் எழுத ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி!

    சான்பிரான்ஸிஸ்கோ

    15-8-2022

    ச. நாகராஜன்

    1. உயர்வுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற ஒரு நூல்!

    அனைத்து துக்கங்களையும் அழித்தொழிப்பது!

    (சர்வ துக்க க்ஷயகரம்!)

    இதயத்திற்குப் பெரும் ஆறுதல் அளிப்பது!

    (பரம ஆஸ்வாஸனம் தியஹ!)

    சுகம், துக்கம் இரண்டையும் முடிவிற்குக் கொண்டு வருவது!

    (சுக துக்க க்ஷயகரம்!)

    மஹா ஆனந்தத்திற்கு ஒரே காரணம் ஆவது!

    (மஹா ஆனந்தைக காரணம்!)

    இப்படி துக்கத்தை ஒழித்து சுகம், துக்கம் இரண்டையும் முடிவிற்குக் கொண்டு வந்து மஹா ஆனந்தத்திற்கு ஒரே காரணமாக ஆகும் ஒரு நூல் உள்ளது என்றால் அனைவரும் அதை நாடி ஓடுதல் இயல்பு தானே!

    அயோத்தி அரசனாக நாடாளாக வந்தது பரம்பொருள் - ராமன் என்ற பெயர் கொண்டு! அந்த ராமனுக்கே ஏற்பட்ட சந்தேகங்களை அகற்றி உண்மைத் தத்துவத்தை குல குருவான வசிஷ்டர் அவனுக்கு உரைப்பது யோக வாசிஷ்டம் என்ற பெயரைப் பெறும் அற்புத நூலாகும்.

    மிக மிக ரகசியமான வெற்றி உத்திகளை மோட்சம் அடைவதற்காக இது உபதேசிக்கிறது. ஆனால் இந்த வெற்றிக்கான வழிகள் சாதாரண நடைமுறையில் வாழ்க்கையில் சிறிதளவே கடைப்பிடிக்கப்பட்டாலும் அது பெரும்

    Enjoying the preview?
    Page 1 of 1