Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jothidam Unmaiya?
Jothidam Unmaiya?
Jothidam Unmaiya?
Ebook99 pages36 minutes

Jothidam Unmaiya?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம்மில் பலருக்கும் எழும் ஒரு நியாயமான கேள்வி ஜோதிடம் உண்மையா? என்பதே. ஜோதிடத்தை நம்பாதவர்கள் அது பற்றிக் கவலைப்படப் போவதில்லை. நம்புபவர்களுக்கோ ஆதாரமே தேவை இல்லை. ஆனால் ஆதாரங்கள் தந்தால் அதை நுணுகி ஆராய்ந்து தக்க நிலையை மேற்கொள்ள விரும்புவோருக்கும் ஜோதிடத்தைப் பற்றிய பல தகவல்களைப் படித்து இன்னும் அதிகமதிகம் அதைப் பயன்படுத்த முன் வருவோருக்கும் இந்த நூல் பெரிதும் உதவியாக இருக்கும். ஜோதிடம் என்பது அற்புதமான ஒரு கலை. இதைப் பற்றி இந்த நூலில் பல சுவையான விஷயங்களைக் காணலாம். இந்தக் கலையை நன்கு கற்றுத் தேர்ந்து உள்ளுணர்வுடனும் இறை அருளுடனும் பலனைக் கூறுவோரை நாடினால் நல்ல வாழ்க்கை அமையும் என்பது உறுதி. இந்த நூலில் ஜோதிடத்தை நம்பாதே என்ற விஞ்ஞானிகளின் அறிக்கையையும் அதை ஏன் நம்ப வேண்டும் என்பதற்கான விஞ்ஞான விளக்கங்களையும் காணலாம். ஆரூட ராணி லெனார்மனா, ஜீன் டிக்ஸன், விஞ்ஞானி ஜங், நேருஜியின் கடிதம், விவேகானந்தரின் அனுபவங்கள், தமிழ் இலக்கியத்தில் உள்ள ஜோதிடக் குறிப்புகள், ஒன்பது எழுத்துக்களில் தமிழனின் பஞ்சாங்கம், ஜோதிடம் பற்றிய விஞ்ஞானி நியூட்டனின் பதில் உள்ளிட்ட பல சுவையான அத்தியாயங்களைப் படித்து மகிழலாம்.

இதைப் படித்தோர் ‘ஜோதிட மேதைகளின் வரலாறு’ மற்றும் ‘ஜோதிடம் பார்க்கும் முன் தெரிந்து கொள்ளுங்கள்’ ஆகிய நூல்களையும் படிக்க விரும்புவர்.

Languageதமிழ்
Release dateMay 2, 2023
ISBN6580151009593
Jothidam Unmaiya?

Read more from S. Nagarajan

Related to Jothidam Unmaiya?

Related ebooks

Reviews for Jothidam Unmaiya?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jothidam Unmaiya? - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜோதிடம் உண்மையா?

    Jothidam Unmaiya?

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

    2. ஆரூட ராணி லெனார்மனா

    3. ஜீன் டிக்ஸனின் பிரசித்தி பெற்ற ஜோதிடக் கணிப்புகள்!

    4. ஜங்கும் சிக்மண்ட் ப்ராய்டும்

    5. ஜோதிடம் பொய்யே என நிரூபிக்கத் துடித்தவர்!

    6. அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட மாயக்கலை ஜோதிடம்!

    7. வானில் உள்ள கிரகங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

    8. வியாழ கிரக ஈர்ப்பும் நர்ஸ் குழந்தை மீது ஏற்படுத்தும் ஈர்ப்பும்!

    9. நான்கே நான்கு பிரபஞ்ச விசைகள்!

    10. நேருஜியின் கடிதம்

    11. லண்டனில் விவேகானந்தரை எதிர்நோக்கிய கேள்வி

    12. சுவாமிஜி பஞ்சாங்கம் பார்த்துத் தேர்ந்தெடுத்த ‘நாள்’!

    13. சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோதிடக் குறிப்புகள்! - 1

    14. சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோதிடக் குறிப்புகள்! - 2

    15. சனி தப்பினாலும் செங்கோல் மழை தரத் தப்பாது!

    16. ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்

    17. இரும்புத்திரை நாட்டில் மெடிகல் அஸ்ட்ராலஜி!

    18. நியூட்டனின் பதில்!

    19. உயிர்காக்கும் கலையே ஜோதிடம்!

    முடிவுரை

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் இதழில் ஆன்மீக சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வந்தேன். ஆலயம் குழுமத்தின் சார்பில் ஆலயம் ஶ்ரீ ஜோசியம் பத்திரிகை தொடங்கப்பட்டது. அதில் ஜோதிடம் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

    28-12-2010 இதழ் தொடங்கி ஜோதிடம் உண்மையா என்ற தொடர் வெளிவர ஆரம்பித்தது. வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதே இதழில் ஜோதிட மஹரிஷிகள் பற்றியும் பிரபலமான ஜோதிட மேதைகளைப் பற்றியும் இன்னொரு தொடரும் வெளிவந்தது.

    அனைவரது வேண்டுகோளுக்கும் இணங்க இவை மின்னணு - டிஜிட்டல் புத்தகங்களாக வெளிவந்தன.

    முதல் பதிப்பு வெளியாகி ஆண்டுகள் பல கடந்துவிட்ட நிலையில் இப்போது பலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் புத்தகங்கள் மின்னணு நூலாகவும் அச்சுப் பதிப்பாகவும் வெளிவருகிறது.

    டிஜிட்டல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் இதை மறுபதிப்பாகக் கொண்டுவர முன்வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜோதிடம் என்பது அற்புதமான ஒரு கலை. இதைப் பற்றி இந்த நூலில் பல சுவையான விஷயங்களைக் காணலாம். இந்தக் கலையை நன்கு கற்றுத்தேர்ந்து உள்ளுணர்வுடனும் இறை அருளுடனும் பலனைக் கூறுவோரை நாடினால் நல்ல வாழ்க்கை அமையும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொண்டு உங்களை இந்த நூலைச் சுவைக்க அழைக்கிறேன்.

    ஜோதிடம் உண்மையா என்ற இந்த நூலைப் படிப்பவர்கள் நான் எழுதியுள்ள ஜோதிட மேதைகளின் வரலாறு மற்றும் ஜோதிடம் பார்க்கும் முன் தெரிந்துகொள்ளுங்கள் ஆகிய நூல்களையும் படித்தால் ஜோதிடக் கலை பற்றி இன்னும் கூடுதல் விவரங்களைப் படித்து மகிழலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நன்றி

    ச. நாகராஜன்,

    பங்களூர்

    15-2-2023

    1. ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

    நோபல் பரிசு பெற்ற 18 பேர் உள்ளிட்ட 186 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு உலக மக்களுக்கு வெளியிட்ட ‘ஜோதிடத்தை நம்பாதீர்கள்’ என்ற அறிக்கை உலகில் வெகுவாக பேசப்பட்ட அறிக்கை. இந்த விஞ்ஞானிகள் பல்துறைகளைச் சார்ந்தவர்கள். இவர்களில் வானவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் உலகெங்கும் மிக வேகமாகப் பரவி வரும் ஜோதிடக் கலை பற்றிக் கவலை தெரிவித்தனர். இதை நம்புபவர்களுக்கு இதில் விஞ்ஞான அடிப்படை இல்லவே இல்லை என்று அடித்துக்கூற இவர்கள் முனைந்தனர்.

    அறிக்கையின் சாரம்

    இவர்கள் அறிக்கையின் சாரம் சுருக்கமாக இதுதான்:- "பழைய காலத்தில் ஜோதிடர்களின் கூற்றை நம்புவது வழக்கமாக இருந்தது. அதில் மாயாஜாலம் கலந்திருந்தது. வானில் உள்ள கிரகங்கள் மனித வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நக்ஷத்திரங்கள் நமது வாழ்வில் நிகழும் சம்பவங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்றும் அவர்கள் நமது முன்னோரை நம்ப வைத்தனர். இப்போதோ விஞ்ஞான முன்னேற்றத்தால் துல்லியமாகக் கணிக்கப்பட்ட தூரங்களின் படி அவை எங்கோ இருக்கின்றன; ஆகவே அவற்றால் பூமியில் இருக்கும் நமக்கு ஒரு பாதிப்பும் நிச்சயமாக ஏற்படாது.

    ஏன் ஜோதிடத்தை மக்கள் நம்புகின்றனர்? சில முக்கிய முடிவுகளை எடுக்குமுன் ஜோதிடம் பார்ப்பதன் மூலம் அவர்கள் ஆறுதல் பெறுகிறார்கள். வானில் உள்ள கிரகங்கள் மூலம் தங்களின் விதி முன்பே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்றும் அதை மாற்ற முடியாது என்றும் அவர்கள் நம்புகின்றனர். ஆனால் நம்முடைய எதிர்காலம் நம்மிடம்தான் இருக்கிறது. அதை வகுப்பதே

    Enjoying the preview?
    Page 1 of 1