Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nallana Ellam Arulum Naradar Puranam!
Nallana Ellam Arulum Naradar Puranam!
Nallana Ellam Arulum Naradar Puranam!
Ebook262 pages1 hour

Nallana Ellam Arulum Naradar Puranam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பதினெட்டுப் புராணங்கள் பிரம்ம புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சிவபுராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், ஆக்னேய புராணம், கந்த புராணம், பௌஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரமாண்ட புராணம் எனப்படும்.

இவற்றோடு, பதினெட்டு உப புராணங்களும் உள்ளன. அவை: சனத் குமாரியம், நரசிம்மம், நந்தியம், சிவரகசியம், தௌர்வாசம், நாரதீயம், கபிலம், மானவம், வருணம், தேவி பாகவதம், வசிஷ்டம், கல்வி, காணபதம், ஹம்சம், சாம்பம், ஸௌரம், பராசரம், பார்க்கவசம் என்பனவாகும்.

பதினெண் புராணத்தில் சிவ புராணத்திற்கு பதில் வாயு புராணத்தைச் சேர்த்துக் கொள்வதும் வழக்கத்தில் உண்டு.

புராணம் என்பது என்ன? அது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகும். வேதத்தில் சொல்லப்படுபவை, கட்டளையாக, ஏவலாக, ‘இது, இப்படித்தான்’ என்ற வகையில் சொல்லப்பட்டிருக்கும். புராணங்களோ இலகுவான முறையில் சுலபமாகப் புரியும் வகையில் எளிய கதைகள் மூலம் கருத்துகளை விளக்குகின்றன. புராணங்களை பாமரருக்குச் சொல்லப்பட்ட ஞானக் கருவூலங்கள் என்றே சொல்லலாம். சத்தியத்தையே பேசவேண்டும் என்று அரிச்சந்திர புராணம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. இதை, ‘சத்யம் வத' என்கிறது வேதம்.

ராமாயண காவியத்தில், ‘பித்ரு தேவோபவ’' என்பதில் ஆரம்பித்து - அதாவது தந்தையையே தெய்வமாகக் கொள், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை - எத்தனை எத்தனையோ அரிய கருத்துகளை எளிதாகப் புரிந்து கொண்டு, அந்த நற்பண்புகளைப் பின்பற்றவும் முடிகிறது.

அதனால்தான் வேதங்கள் சொல்லும் தத்துவங்களை புராணங்கள் நமக்கு எளிமையாகப் புரிய வைக்கின்றன எனலாம்.

ஏதேனும் பிரச்னை காரணமாக மனக்கலக்கம் கொண்டவர்களை ‘சுந்தர காண்டம்’ படிக்குமாறு பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். ராமாயண இதிகாசத்தில், அனுமன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவே திகழும் சுந்தர காண்டம், படிப்போருக்கு மனோதைரியம், உறுதியான புத்தி, பயமற்ற தன்மை, வாக்கு மேன்மை போன்ற பல நற்குணங்களை அருளவல்லது. அதைப் போன்றதுதான் நாரத புராணமும். நல்லொழுக்கம், வாய்மை, தூய்மையான பக்தி என்று நன்னெறி வாழ்வியலை அருளக்கூடியது.

பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான நாரதர் புராணம், எளிமையாக, சம்பவக் கோர்வையாக, உங்கள் மேலான சிந்தனைக்கும், பாதுகாத்தலுக்கும் இங்கே வழங்கப்படுகிறது.

நாரதர் என்றாலே கலகத்தை மூட்டி விடுபவர் என்றும், ஆனாலும் அவர் கலகமாக ஆரம்பிப்பதெல்லாம் நன்மையாகத்தான் முடியும் என்றும் பரவலாக அறியப்பட்ட விஷயங்கள். நன்மையாக முடியவேண்டியவற்றை ஏன் கலகமாக ஆரம்பிக்க வேண்டும்? அதுவும் ஒரு சுவாரஸ்யத்துக்காகத்தான். அப்போதுதான் கலகத்தில் சம்பந்தப்பட்டவர்கள், நன்மையான முடிவை தெளிவாக, மனதில் ஆழமாகப் பதியுமாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காகத்தான். இப்படி நாரதரை இப்போதைய மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதை ஊர்ஜிதப்படுத்தவும் செய்த பெருமை ஆன்மிக எழுத்தாளர்களையும், பத்திரிகைகள், நாடகம், சினிமா போன்ற ஊடகங்களையுமே சாரும்.

-பிரபுசங்கர்

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580130605199
Nallana Ellam Arulum Naradar Puranam!

Read more from Prabhu Shankar

Related to Nallana Ellam Arulum Naradar Puranam!

Related ebooks

Reviews for Nallana Ellam Arulum Naradar Puranam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nallana Ellam Arulum Naradar Puranam! - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    நல்லன எல்லாம் அருளும் நாரதர் புராணம்!

    Nallana Ellam Arulum Naradar Puranam!

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. நாரதர் அவதாரம்

    2. தட்சனின் தந்திரம்

    3. முப்புரம் எரித்த முதல்வன்

    4. தத்தாத்ரேயர் என்ற புதியதோர் அவதாரம்

    5. நாரதரின் வீணாகானம்

    6. சுருதி பிழன்றது, சோகம் சூழ்ந்தது!

    7. நட்சத்திரமான துருவன்

    8. ஏக்கத்தைப் போக்கியவர்

    9. எது உண்மையான பக்தி?

    10. சனியின் பார்வை

    11. 'ராம' கிருஷ்ணன்

    12. தியாகச் சுடர் கன்னியாகுமரி

    13. ராவணனுக்குப் படிப்பினை!

    14. பாணன் கற்ற பாடம்!

    15. ஹரி முகம் கொண்டதால் அவமானம்!

    16. சுந்தன் - உபசுந்தன்

    17. சத்சங்கத்தால் என்ன பயன்?

    18. எடுப்பதும் அவனே, கொடுப்பதும் அவனே!

    19. கொள்ளையன் படைத்த காவியம்

    20. இந்திரனைக் காத்த நாரதர்

    21. சரணாகதிதான் உண்மையான பக்தி!

    22. கற்புத் திறத்தால் கணவனை மீட்டவள்!

    23. நாரதர் இட்ட சாபம்!

    24. பீஷ்மர் - பரசுராமர்

    25. பெண்களின் விளையாட்டுப் பொருளான ராவணன்!

    26. இங்கே மரம், அங்கே மலர்!

    27. தன் கையாலேயே தனக்கு தகனம்!

    முன்னுரை

    பிறருக்கு ஒரு முன்னுதாரணமாக அமையவேண்டியதே ஒருவருடைய சுயசரிதம் அல்லது சரிதம். சம்பந்தப்பட்டவர் தாமே தன் வாழ்க்கையை எழுதுவது சுயசரிதை; அவருடைய வாழ்க்கையை இன்னொருவர் எழுதினால் அது சரிதை. சுயசரிதையோ, சரிதையோ அது குறிப்பிட்ட நபரின் வாழ்க்கைச் சம்பவங்களை முழுமையாகக் கொண்டிருக்க வேண்டும். அதைவிட அந்த சம்பவங்கள் உண்மையாக இருத்தல் வேண்டும். மிகைப்படுத்துதல் இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும். இத்தகைய சரிதைதான் அதைப் படிப்பவர்களுக்கு சரியான வழிகாட்டியாக அமைய முடியும். ஏனென்றால் அந்த சரிதை அவருடைய உண்மையான குணத்தை விவரிப்பதாக இருக்கும்; அவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் படிப்பவர்களுக்குப் படிப்பினையாக இருக்கும்.

    சாதாரண மனிதருக்கே இப்படி என்றால், பலப்பல யுகங்களுக்கு முந்தைய காலத்தில் இறைத்தன்மை கொண்டவர்களின் சரிதை எத்தனை மேம்பட்டதாக இருக்கும்; அந்தச் சம்பவங்கள்தான் எத்தகையதொரு படிப்பினையாக இருக்கும்!

    இக்காலத்திய தனிமனிதரின் கதையில் சில சம்பவங்கள் மிகைப்படுத்தியதாக இருக்கலாம். காரணம், அந்த சரிதையை எழுதுபவர் அந்த சம்பவத்தை பார்த்திருந்திருக்கமாட்டார்; ஆனால் கேட்டிருப்பார். அவருக்குச் சொல்லப்பட்ட சம்பவங்களில் இருக்கக்கூடிய உண்மைத்தன்மை, நம்பகத்தன்மையை ஆராயாமல் அந்த சம்பவத்தால் பிறர் ஏதாவது கற்க முடியுமா என்று கவனிப்பதுதான் சிறந்தது.

    இந்த வகையில் ஆன்மிகத் துறையில் விளங்கிவரும் பதினெண் புராணங்களும் கேட்டு அல்லது படித்து அறிந்துகொள்ளவும், நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும்தானே தவிர, இது எப்படி நடந்திருக்க முடியும் என்ற சந்தேகப்படவோ, கேள்விகேட்கவோ அல்ல. இதில் வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், 'ஸ்காந்த புராணம்' என்ற எத்தனையோ பல்லாயிரம் வருடங்களுக்கு முன் இயற்றப்பட்ட புராணத்தில் இப்போது நாம் காணும் பழம்பெரும் கோயில்களைப் பற்றிய வர்ணனைகள் அப்படியே உள்ளதுதான். அப்படியென்றால் குறிப்பிட்ட கோயில் ஸ்காந்த புராணம் இயற்றப்பட்ட காலத்திலேயே இருந்திருக்க வேண்டும்; அல்லது இப்படி ஒரு கோயில் உருவாகப் போகிறது என்ற அனுமானத்தை அந்தப் புராணம் வெளியிட்டிருக்க வேண்டும்.

    அதனால் ஆன்மிகப் புராணங்களை, குறிப்பிட்ட அந்த யுகத்தின் சரித்திரமாகவே கொள்ளலாம்.

    பதினெட்டுப் புராணங்கள் பிரம்ம புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சிவபுராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், ஆக்னேய புராணம், கந்த புராணம், பௌஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரமாண்ட புராணம் எனப்படும்.

    இவற்றோடு, பதினெட்டு உப புராணங்களும் உள்ளன. அவை: சனத் குமாரியம், நரசிம்மம், நந்தியம், சிவரகசியம், தௌர்வாசம், நாரதீயம், கபிலம், மானவம், வருணம், தேவி பாகவதம், வசிஷ்டம், கல்வி, காணபதம், ஹம்சம், சாம்பம், ஸௌரம், பராசரம், பார்க்கவசம் என்பனவாகும்.

    பதினெண் புராணத்தில் சிவ புராணத்திற்கு பதில் வாயு புராணத்தைச் சேர்த்துக் கொள்வதும் வழக்கத்தில் உண்டு.

    புராணம் என்பது என்ன? அது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகும். வேதத்தில் சொல்லப்படுபவை, கட்டளையாக, ஏவலாக, 'இது, இப்படித்தான்' என்ற வகையில் சொல்லப்பட்டிருக்கும். புராணங்களோ இலகுவான முறையில் சுலபமாகப் புரியும் வகையில் எளிய கதைகள் மூலம் கருத்துகளை விளக்குகின்றன. புராணங்களை பாமரருக்குச் சொல்லப்பட்ட ஞானக் கருவூலங்கள் என்றே சொல்லலாம். சத்தியத்தையே பேசவேண்டும் என்று அரிச்சந்திர புராணம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. இதை, 'சத்யம் வத' என்கிறது வேதம்.

    ராமாயண காவியத்தில், 'பித்ரு தேவோபவ" என்பதில் ஆரம்பித்து - அதாவது தந்தையையே தெய்வமாகக் கொள், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை - எத்தனை எத்தனையோ அரிய கருத்துகளை எளிதாகப் புரிந்து கொண்டு, அந்த நற்பண்புகளைப் பின்பற்றவும் முடிகிறது.

    அதனால்தான் வேதங்கள் சொல்லும் தத்துவங்களை புராணங்கள் நமக்கு எளிமையாகப் புரிய வைக்கின்றன எனலாம்.

    ஏதேனும் பிரச்னை காரணமாக மனக்கலக்கம் கொண்டவர்களை 'சுந்தர காண்டம்' படிக்குமாறு பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். ராமாயண இதிகாசத்தில், அனுமன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவே திகழும் சுந்தர காண்டம், படிப்போருக்கு மனோதைரியம், உறுதியான புத்தி, பயமற்ற தன்மை, வாக்கு மேன்மை போன்ற பல நற்குணங்களை அருளவல்லது. அதைப் போன்றதுதான் நாரத புராணமும். நல்லொழுக்கம், வாய்மை, தூய்மையான பக்தி என்று நன்னெறி வாழ்வியலை அருளக்கூடியது.

    பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான நாரதர் புராணம், எளிமையாக, சம்பவக் கோர்வையாக, உங்கள் மேலான சிந்தனைக்கும், பாதுகாத்தலுக்கும் இங்கே வழங்கப்படுகிறது.

    நாரதர் என்றாலே கலகத்தை மூட்டி விடுபவர் என்றும், ஆனாலும் அவர் கலகமாக ஆரம்பிப்பதெல்லாம் நன்மையாகத்தான் முடியும் என்றும் பரவலாக அறியப்பட்ட விஷயங்கள். நன்மையாக முடியவேண்டியவற்றை ஏன் கலகமாக ஆரம்பிக்க வேண்டும்? அதுவும் ஒரு சுவாரஸ்யத்துக்காகத்தான். அப்போதுதான் கலகத்தில் சம்பந்தப்பட்டவர்கள், நன்மையான முடிவை தெளிவாக, மனதில் ஆழமாகப் பதியுமாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காகத்தான். இப்படி நாரதரை இப்போதைய மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதை ஊர்ஜிதப்படுத்தவும் செய்த பெருமை ஆன்மிக எழுத்தாளர்களையும், பத்திரிகைகள், நாடகம், சினிமா போன்ற ஊடகங்களையுமே சாரும்.

    -பிரபுசங்கர்

    தொலைபேசி: 7299968695

    மின்னஞ்சல்: prabhuaanmigam@gmail.com

    *****************

    1. நாரதர் அவதாரம்

    நாரதர் ஒரு சிரஞ்சீவி. அவருக்கு காலம் ஒரு கணக்கே இல்லை. அவர் சஞ்சரிக்காத உலகம் இல்லை. அனுமனாவது ராமாவதாரத்தின்போது தோன்றி, இன்றுவரை சிரஞ்சீவியாக நம்முடன் 'வாழ்ந்து' வருகிறார். ஆனால் நாரதர் அவருக்கும் மூத்தவர். சிரஞ்சீவி என்பதால், அவருக்கு வயதாகவேண்டிய அவசியமும் இல்லை. அதனால் நாரதர் இளமைக் கோலத்தினராகவே எப்போதும், எங்கும் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்.

    ஸ்ரீவைகுண்டம், கயிலாயம், பிரம்மலோகம், தேவருலகம், பூலோகம் என்று எல்லா இடங்களுக்கும் செல்ல நிபந்தனையற்ற பாஸ்போர்ட்டும், சுதந்திரமான விசாவும் வைத்திருப்பவர்! அவர் இறைச் சபைகளோடு, மன்னர் சபைகளுக்கும் செல்வார்; அந்தப்புரத்திற்குள்ளும் புகும் உரிமை பெற்றவர். இவருக்கு மன்னர், மங்கையர், சாதாரண மக்கள் எல்லோரும் ஒன்றே. தேவர் அவை இவருக்கு மரியாதை தந்தது என்றால், அசுரர் சபை இவரை வணங்கத் தயங்கியதில்லை. போர்க்களத்திலும் தற்காலத்திய ஊடக நிருபர் போல எந்த பாதிப்பும் இல்லாமல் சென்று வரக்கூடியவர். இவருடைய யோசனைகளையோ, அறிவுரைகளையோ யாருமே புறக்கணித்ததில்லை. விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டது நாரதரின் வாழ்க்கை. பிறர் வாழ்க்கையில் வலிய தம் மூக்கை நுழைத்து ஏற்படுத்திய திருப்புமுனை சம்பவங்கள் மற்றும் தன்னுடைய சொந்த அனுபவங்கள் இவற்றால் மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அவர் அறிவுக் கரண்டியால் அனைவருக்கும் பரிமாறுகிறார்.

    நாரதரின் ஜன்மம் மூன்று பிறவிகளை சம்பந்தப்படுத்தியது. அதாவது பிறக்கும்போதே பிறவிகளைக் கடந்தவர் என்பதை நிரூபித்தவர், அவர்.

    ***************

    பிரளயத்துக்குப் பிறகு புதியதோர் பிரபஞ்சம் சமைக்கும் பணி பிரம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கொஞ்சம் மலைத்துதான் போனார் பிரம்மா. தான் தனியனாக முழு பிரபஞ்சத்தையும் உருவாக்க முடியுமா என்ற தயக்கம் அவருக்குள் எழுந்தது. ஆகவே தனக்கு உதவியாக சிலர் இருந்தால் தன் பணி சுலபமாக முடியும் என்று கருதினார். ஆகவே முதலில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரை தன் மகன்களாக அவர் தோற்றுவித்தார். ஆனால் மஹேஸ்வரனின் சித்தம் வேறு மாதிரியாக இருந்தது. அதனால் அவர்கள் பிரம்மனுக்கு உதவுவதற்குத் தங்களுக்குப் போதிய தகுதி வரவில்லை என்றே கருதினார்கள். தாங்கள் ஞானமடைய வேண்டும்; அதற்குப் பிறகுதான் படைப்புத் தொழிலில் தந்தைக்கு உதவுவதில் அர்த்தம் இருக்கும் என்று உண்மையாக சிந்தித்தார்கள். ஆகவே கயிலைநாதனை நோக்கி அவர்கள் கடுந்தவம் மேற்கொண்டார்கள். முக்கண்ணன் அவர்கள் முன் புன்முறுவலுடன் தோன்றினார். அவர்களுடைய வேண்டுகோள் என்னவென்று பரிவுடன் கேட்டார்.

    ஐயனே, எங்களுக்கு மெய்ப்பொருளை உபதேசித்து நாங்கள் ஞானம் அடைய தாங்கள் அருள் புரிய வேண்டும் என்று மனமுருக வேண்டினார்கள்.

    மகாதேவனும் அவர்களுக்கு அந்த வரம் தந்தருளினார். அதன் பயனாகவே அவர் தட்சிணாமூர்த்தியாக, ஞான சொரூபமாக உருக்கொண்டார். ஞானத்தின் சின்னமான கல்லால மரத்தடியில் அமர்ந்தார். ஆலமரத்தின் விழுதுகளே தனித்தனி ஆல மரமாகும் அற்புதத் தன்மையால், அதனைத் தேர்ந்தெடுத்தார் ஞானகுரு. கல்வியை போதிக்கும் அந்த கல்+ஆல மரத்தடியில் சனத் குமாரர்களை அமர்த்தி ஞானோபதேசம் செய்தார். 

    பிரம்மா ஏமாற்றமடைந்தார். இப்போதும் தன் தனியொருவனால் பிரபஞ்சத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படவில்லை. உடனே அடுத்த உதவியாளர் குழுவைத் தோற்றுவித்தார். அவர்கள்: நாரதர், தட்சன், வசிஷ்டர், பிருகு, கிருது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி மற்றும் மரீசி. இந்தமுறை ஒருவரைத் தவிர மற்ற மகன்கள் எல்லோரும் பிரம்மனுக்கு உறுதுணையாக படைப்புத் தொழிலில் உதவ முன்வந்தார்கள். ஆனால் நாரதர் அவர்களிடமிருந்து விலகி நின்றார்.

    பிரம்மா இதை எதிர்பார்க்கவில்லை. நாரதரிடம் சற்று கடுமையாகவே பேசினார். பிற பிள்ளைகளைப் போல அவரும் தனக்கு உதவ வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் நாரதர் மென்மையாகத் தன் எதிர்ப்பை எடுத்துரைத்தார். தந்தையே என்னை மன்னித்தருளுங்கள். தாங்கள் என்னைப் படைத்ததன் நோக்கத்தை என்னால் நிறைவேற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய முந்தையவர்களான சனத் சகோதரர்களைப் போல நானும் ஞானவழியை மேற்கொண்டு, பிரம்மசார்ய விரதத்தை முழுமையாக அனுஷ்டித்து, மோட்சத்தை அடைய விரும்புகிறேன். என்னை ஆசிர்வதித்து அனுமதிக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டார்.

    ஆனால் பிரம்மா மிகுந்த துயரமும், கோபமும் கொண்டார். தனக்கு மகனாக வந்தவன் தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் இல்லை என்பதை உணராமல் தன் விருப்பப்படி நடந்துகொள்வது, தனக்கு நேர்ந்த மரியாதைக் குறைவாகவே பட்டது. அது அவருடைய கோபத்தை அதிகரிக்க, உடனே சாபமிட்டார்: நாரதா, என் எண்ணத்தை நீ உதாசீனப்படுத்திவிட்டாய். ஏற்கெனவே சனத் சகோதரர்களின் துரோகத்தால் நான் நொந்து போயிருக்கிறேன். இப்போது உன்னுடன் தோன்றிய உன் சகோதரர்கள் எனக்கு உதவத் தயாராக இருக்கும்போது நீ மட்டும் தனியனாய் என்னை மதிக்கத் தவறிவிட்டாய். அதனால் நீ மேற்கொள்ள விரும்பும் பிரம்மச்சர்ய விரதம் உனக்குக் கைகூடாது.

    இதைக்கேட்ட நாரதர் பெரிதும் வருத்தமடைந்தார். தாங்கள் இப்படி சபிக்கும் வகையிலா நான் குற்றம் செய்துவிட்டேன்? என்று மனம் வெதும்பிக் கேட்டார்.

    என் எண்ணத்திற்கு மாறாக சிந்திப்பதும், அந்த சிந்தனையை செயல்படுத்த முயற்சிப்பதுமே குற்றம்தான். ஆகவே நான் சாபமிட்டது இட்டதுதான். நீ கந்தர்வ குலத்தில் பிறப்பாய். பெண் மோகம் கொண்டு பலராலும் அவமானப்படுத்தப்படுவாய், போ என்று தன் மன எரிச்சலை வார்த்தைத் தணல்களாக வீசினார்.

    தந்தை தன் மீது சிறிதளவு வருத்தப்பட்டாலே அது பல தீய விளைவுகளைத் தரும். அவரே சபித்தாரென்றால்.... நினைக்கவே நடுக்கமாக இருந்தது நாரதருக்கு. அதற்குப் பிறகாவது எனக்கு சாப விமோசனம் கிடைக்குமா தந்தையே? என்று துக்கத்துடன் கேட்டார்.

    ஆனால், பிரம்மாவின் கோபம் தணியவே இல்லை. நீ கந்தர்வனாக இருக்கும் பொழுது ஒரு பெண்மீது கொள்ளும் மோகத்தால் ஒரு முனிவரின் சாபத்தைப் பெறுவாய். அதன் விளைவாக தாழ்குலத்தில் மானிடனாகப் பிறப்பாய். அதன் பிறகுதான் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்றும் கூறினார்.

    பிரம்மாவின் சாபப்படி நாரதர் கந்தர்வர்களில் சிறந்த இசை மேதையாகத் திகழ்ந்த உபன் என்பவரின் மகனாக, உபபர்ஹணன் என்ற பெயரோடு பிறந்தார். இந்த உபபர்ஹணன், மகதி என்னும் யாழ் கொண்டு பாடும் பேராற்றல் பெற்றவன். பெரிய இசை மேதையாகத் திகழ்ந்தவன். அவனுடைய இசைத் திறமையைக் கேட்டறிந்த பல முனிவர்கள் உபபர்ஹணனைத் தங்கள் ஆசிரமங்களுக்கும், யாக சாலைகளுக்கும் அழைத்து, சாமகானம் இசைத்தும், பாடவும் சொல்லிக் கேட்டு ஆனந்தப்படுவதும் உண்டு.

    கந்தர்வ உலகம் சோகத்தை அறியாதது. அங்கே எல்லாமே இன்ப மயம்தான். இசை, நாட்டியம், விருந்து, கொண்டாட்டம் என்று எந்நேரமும் சந்தோஷத்தின் சாயல் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், அந்த சலுகைகள் ஒரு எல்லையை மீறும்போதுதான், அதாவது சலுகையே உரிமையாகக் கருதப்படும்போதுதான் அந்த உலகத்தில் பிரச்னை உருவாகும். அப்படிப்பட்ட அபூர்வமான பிரச்னை ஒன்றில் சிக்கிக்கொண்டார் நாரதர்.

    மனதை உருக்கும் இசையை அடிமைப்படுத்தியவன் உபபர்ஹணன் இல்லையா, அதனால் அவனுடைய அந்த இசைக்கு அடிமையானவர்கள் தேவர்கள், முனிவர்கள் மட்டுமல்ல, மஹாவிஷ்ணுவும்கூடதான்! ஆகவே எங்கெங்கெல்லாம் வேள்வி, ஹோமம் என்றெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கேல்லாம் உபபர்ஹணனுக்கு விசேட அழைப்பு உண்டு.

    அப்படி ஒரு வேள்விக்கு அவன் போனபோதுதான் அவனையும் விதி பிடித்துக் கொண்டது. பிரம்ம சிரேஷ்டர் என்ற அந்தணர் ஒருவர் இயற்றிய யாகம் அது. அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உபபர்ஹணன் தன் மகதி யாழை மீட்டி தேவகானம் பொழிந்தான். ஒரு பக்கம் யாகம் சிறப்புற நடந்து கொண்டிருக்க மறுபுறம் இவனுடைய இன்னிசை, யாகத்துக்கு அருள்புரியத் தயாராக இருந்த கடவுளரை வெகு வேகமாக அங்கே ஈர்த்தது.

    இசையில் அனைவரும் மகிழ்ந்து, உருகி நெகிழ்ந்து தம் வயம் இழந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் இளம் பெண்ணும் ஒருத்தி. அவனுடைய இசையை மோகித்த அவள், அவன்மீதும் மோகம் கொண்டாள். இசை மேடைமீது ஏறினாள். அரங்கத்தையும், அரங்கத்திலுள்ளவர்களையும் மறந்தாள். உபபர்ஹணனை அப்படியே ஆரத் தழுவினாள். அவனும் தன் நிலை மறந்தான். சபை நாகரிகத்தை மறந்தான். மோகத்தில் மூழ்கினான்.

    அவ்வளவுதான். யாகத்தில் ஈடுபட்டிருந்த முனிவர்களுக்கும், வேத சான்றோர்களுக்கும் புத்தி தடுமாறியது. அவர்கள் பார்வை, யாக குண்டத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1