Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

108 Divya Desa Ulaa – Part 1
108 Divya Desa Ulaa – Part 1
108 Divya Desa Ulaa – Part 1
Ebook470 pages1 hour

108 Divya Desa Ulaa – Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் பங்கிற்கும் 108 திவ்ய தேசங்களை தரிசித்து என் அனுபவங்களை, என் அனுமானத்தில், என் கோணத்தில் வித்தியாசமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். வெறுமே என் அனுபவங்களை மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டு விடாமல், இதனைப் படித்து தாமும் அந்தந்த தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொள்பவர்களின் வசதிக்காக, சம்பிரதாய வரைமுறையிலிருந்து சற்றே விலகிச் செல்கிறேன். இதனை ஆன்றோர்கள் பொருத்தருள்வார்கள் என்று நம்புகிறேன்.

அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்திருக்கும் திருத்தலங்கள் பற்றிய கட்டுரைகளை, மேலே பட்டியலிட்டபடி, மாவட்ட ரீதியாகவே அளிக்கவிருக்கிறேன். இதனால், குறிப்பிட்ட மாவட்டத்துக்குப் போகக் கூடிய அன்பர்கள் ஒரே மூச்சில் அங்கே இருக்கக்கூடிய திவ்ய தேசங்களை தரிசித்துவிட்டு வரலாம்.

அந்த வகையில் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள திவ்ய தேசங்களை முதலில் வலம் வருவோம்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580130606078
108 Divya Desa Ulaa – Part 1

Read more from Prabhu Shankar

Related to 108 Divya Desa Ulaa – Part 1

Related ebooks

Reviews for 108 Divya Desa Ulaa – Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    108 Divya Desa Ulaa – Part 1 - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    108 திவ்ய தேச உலா - பாகம் 1

    108 Divya Desa Ulaa - Part 1

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மாமல்லபுரம்

    2. திருவிடந்தை

    3. திருநீர்மலை

    4.1 திருவல்லிக்கேணி

    4.2 திருவல்லிக்கேணி

    5.1 திருநின்றவூர்

    5.2 திருநின்றவூர்

    6.1 திருவள்ளூர்

    6.2 திருவள்ளூர்

    7. காஞ்சிபுரம்

    7.1. வரதராஜப் பெருமாள்

    7.2. வரதராஜப் பெருமாள்

    8. அட்டபுயக்கரம்

    9. திருத்தண்கா

    10. திருவேளுக்கை

    11. திருநீரகம்

    12. திருஊரகம்

    13. திருக்காரகம்

    14. திருக்கார்வானம்

    15. திருபரமேச்சுர விண்ணகரம்

    16. திருவெஃகா

    17. திருநிலாத்திங்கள் துண்டம்

    18. திருப்பாடகம்

    19. திருப்பவளவண்ணம்

    20. திருக்கள்வனூர்

    21.1 திருப்புட்குழி

    21.2 திருப்புட்குழி

    22.1 சோளிங்கர்

    22.2 சோளிங்கர்

    22.3 சோளிங்கர்

    23.1 திருவஹீந்திரபுரம்

    23.2 திருவஹீந்திரபுரம்

    24.1 திருக்கோவலூர்

    24.2 திருக்கோவலூர்

    25. திருசித்ரகூடம்

    *****

    முன்னுரை

    திருமால் பெருமைக்கு நிகரேது! அச்சுதா, அனந்தா, கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஹ்ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா..... எத்தனையெத்தனை நாமங்கள்! இந்த ஒற்றைச் சொல் மந்திரத்தால் திருப்தியடையாத முன்னோர்கள் திருமால் மீது அஷ்டோத்திரங்களையும், ஸஹஸ்ரநாமங்களையும் இயற்றி, நெஞ்சம் விம்ம துதித்து வந்தார்கள்; நமக்கும் அவற்றை அருளிச் சென்றிருக்கிறார்கள்.

    வெறும் நாமங்கள் தவிர, பாசுரங்களும், பிரபந்தங்களும் இயற்றி, தம் கற்பனை எல்லாம் கொட்டி திருமாலைப் போற்றிப் பரவசப்பட்டிருக்கிறார்கள்.

    முந்தைய யுகங்களின் அனுபவப் படிமங்கள் கலியுகத்திலும் கவிந்ததால், இறைத் துதி என்பதும் தொடர்ந்து வருகிறது. நேரடியாக தெய்வத் திருவுருவத்தை அந்த யுக ஜீவன்களாக நாம் தரிசித்துப் பெரும்பேறு எய்தினோம் என்றாலும், கலியுகத்தில் அர்ச்சாவதாரமாக அந்த இறை உருவங்கள் இந்த பூவுலகில் நாம் தரிசனம் காண்பதற்காக பல கோயில்களில் காத்திருக்கின்றன. இந்த அர்ச்சாவதார தரிசன வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதென்றால், போன ஜென்மத்தில் அல்லது போன யுகத்தில் நாம் கிருஷ்ணரை நேராக தரிசித்திருப்போம்; ராமரை நேரில் கண்டு வணங்கியிருப்போம்; பலராமரை, பரசுராமரை, வாமனரை, நரசிம்மரை, வராஹரை, கூர்மத்தை, மச்சத்தையும்கூட தரிசித்திருப்போம். தேவர்களாக அவர்களை போற்றியிருப்போம்; முனிவர்களாக, ரிஷிகளாக துதித்திருப்போம்; ஏன், அரக்கர்களாக இறைவன் கையால் வதைபடும் 'சுகத்'தையும்கூட அனுபவித்து மகிழ்ந்திருப்போம். அதன் எச்சம்தான், அதன் தொடர்ச்சிதான் இப்போதைய அர்ச்சாவதார தரிசனம்: யுகம் யுகமாக நாம் போட்டு வைத்திருக்கும் பக்தி என்ற ஃபிக்ஸட் டெபாஸிட்டிலிருந்து நாம் துய்க்கும் வட்டி!

    துவாபரயுகத்தில் ஒரே கிருஷ்ணன், பல இடங்களில் ஒரே சமயத்தில் நாரதருக்குக் காட்சியளித்திருக்கிறார். அதேபோல இந்த கலியுகத்தில் திருமால் பல கோயில்களில் தரிசனம் தருகிறார்.

    திருமால் நாமங்களை அஷ்டோத்திரமாகத் தொகுப்பதுபோல, தன் தலங்களிலும் நூற்றியெட்டைத் தேர்ந்தெடுத்து அவற்றில் திருமால் கோயில் கொண்டு, அந்தத் தலங்களை திவ்ய தேசங்களாக மேன்மைபடுத்தியிருக்கிறார்.

    வைணவ சம்பிரதாயத்தில் திவ்ய தேசங்கள் எனப்படும், அஷ்டோத்திர எண்ணிக்கையிலான அந்த 108 திருத்தலங்களை, திருமாலின் அம்சங்களான ஆழ்வார்கள் தரிசித்து, அந்தந்த தலத்து நாயகனை போற்றி மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் ஸஹஸ்ரநாம எண்ணிக்கையான 1008 தலங்களுக்குச் செல்ல இயலாமல் போனதாலேயே நூற்றியெட்டோடு நிறுத்திக்கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது!

    திருக்கோளூர்

    இந்தத் திருத்தலங்கள் எங்கெங்கே எல்லாம் இருக்கின்றன?

    இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு அந்த வகையில் பெரும் பாக்கியம் செய்திருக்கிறது. ஆமாம், இங்கு மட்டும் 82 திவ்ய தலங்கள் அருள் பரப்புகின்றன. நூற்றியெட்டு திருப்பதி அந்தாதி இயற்றிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், எந்தெந்தப் பகுதிகளில் எத்தனை கோயில்கள் உள்ளன என்று ஒட்டு மொத்தக் கணக்காக ஒரு பாடல் இயற்றியிருக்கிறார். அதன்படி,

    ஈரிருபதாஞ் சோழம் ஈரொன்பதாம் பாண்டி

    ஓர்பதின் மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் - சீர்நடுநாடு

    ஆறோடீரெட்டுத் தொண்டை அவ்வட

    நாடாறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாக்கொள்

    -என்பது அந்தக் கணக்கு.

    அதாவது, தற்போதைய இந்திய பூகோள அமைப்புப்படி, திருச்சி மாவட்டத்தில் 6; தஞ்சையில் 6; கும்பகோணத்தில் 8; நாகையில் 2; மாயவரத்தில் 4, சீர்காழியில் 13; சிதம்பரத்தில் 1; கடலூரில் 2; திருநெல்வேலி மாவட்டத்தில் 10; மதுரை மாவட்டத்தில் 8; காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டாரத்தில் 15; சென்னை அதன் சுற்றுவட்டாரத்தில் 6; வேலூரில் 1; ஆந்திர மாநிலத்தில் 2; கேரள மாநிலத்தில் 13; வட இந்தியப் பகுதிகளில் 9 ஆக மொத்தம் 106 திவ்ய தலங்கள்.

    திருமலை திருப்பதி

    மனித முயற்சியால் இப்பூவுலகிலுள்ள 106 திவ்ய தேசங்களை நாம் தரிசித்தால், திருப்பாற்கடல், திருபரமபதம் எனும் நிறைவான இரு தலங்களை நம் ஜீவன் தரிசிக்கும். மனிதர்கள் வழிகாட்டலில் 106 தலங்களை நாம் தரிசனம் செய்தால், மிச்சம் இரண்டு தலங்களுக்கு திருமாலே வழிநடத்திச் செல்வார்.

    நூற்றியெட்டு திருப்பதிகள் பற்றிய பல நூல்கள், பல ஆசாரியர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. அடிப்படை நோக்கம் மாறாமல், அவர்கள் தத்தமது கோணத்தில் அந்தப் புத்தகங்களை எழுதியிருப்பதைக் காண முடிகிறது. ஒன்றில் விடுபட்டிருக்கும் தகவல் அடுத்ததில் காணப்படுகிறது. வேறொரு புத்தகத்திலோ கூடுதலாக தகவல்கள். இப்படி, அந்தப் புத்தகங்களின் நோக்கம், அவற்றைப் படிக்கக் கூடியவர்கள் தாமும் அந்தத் தலங்களை தரிசிக்க ஆவல் கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஏற்கெனவே எழுதப்பட்ட புத்தகத்தின் நகலாக இன்னொரு புத்தகம் இல்லாததை படித்தவர்கள் உணர்வார்கள். காரணம், அவ்வாறு புத்தகங்கள் எழுதியவர்கள் தாமே நேரில் அந்தந்தத் தலங்களுக்குச் சென்று பெருமாளை தரிசித்து, அவ்வாறு எழுத அவருடைய அனுமதியைப் பெற்று வந்ததுதான்.

    ராமாயணமும், மகாபாரதமும் இன்றும் பலராலும் சொல்லப்பட்டு வருகின்றன. தெரிந்த கதைதான், தெரிந்த கதாபாத்திரங்கள்தான். ஆனாலும் ஒவ்வொருவரும் சொல்லும்போதும் அந்தக் கதை புது மெருகு பெறுவதும், அந்தக் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் புதுமையாக வர்ணிக்கப்படுவதும், கேட்பவர்கள் அனுபவிக்கும் சுகம். பக்தி பாவங்களில் 'சிரவணம்' பிரதானமானது. 'ராமனின் புகழையும், பெருமையையும் நீங்களெல்லாம் சொல்லுங்கள்; நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்' என்ற ஆஞ்சநேய மனோபாவம் அவ்வாறு செவிமடுப்போரிடம் காண முடியும். 'அடடே, ராமனை இந்தக் கோணத்தில் நான் பார்க்கவே இல்லையே, கிருஷ்ணனுடைய நோக்கத்திற்கு இப்படியும் ஒரு வர்ணனை சொல்ல முடியுமா!' என்று கேட்பவர்கள் பரவசப்படுவதில்தான் ராமாயண, மகாபாரத உபந்யாசகர்களின் அரிய சேவையும், பலருக்கும் கொண்டு செல்லும் வெற்றியும் அமைந்திருக்கிறது. ஆகவே நாம் எல்லோரும் சொல்லின் செல்வர்கள்தான். அதாவது சொல்லப்படுவதில் உள்ள செல்வத்தை அனுபவிக்கும்ஆத்மாக்கள்.

    திருவல்லிக்கேணி

    என் பங்கிற்கும் 108 திவ்ய தேசங்களை தரிசித்து என் அனுபவங்களை, என் அனுமானத்தில், என் கோணத்தில் வித்தியாசமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். வெறுமே என் அனுபவங்களை மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டு விடாமல், இதனைப் படித்து தாமும் அந்தந்த தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொள்பவர்களின் வசதிக்காக, சம்பிரதாய வரைமுறையிலிருந்து சற்றே விலகிச் செல்கிறேன். இதனை ஆன்றோர்கள் பொருத்தருள்வார்கள் என்று நம்புகிறேன்.

    அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்திருக்கும் திருத்தலங்கள் பற்றிய கட்டுரைகளை, மேலே பட்டியலிட்டபடி, மாவட்ட ரீதியாகவே அளிக்கவிருக்கிறேன். இதனால், குறிப்பிட்ட மாவட்டத்துக்குப் போகக் கூடிய அன்பர்கள் ஒரே மூச்சில் அங்கே இருக்கக்கூடிய திவ்ய தேசங்களை தரிசித்துவிட்டு வரலாம்.

    அந்த வகையில் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள திவ்ய தேசங்களை முதலில் வலம் வருவோம்.

    திருமாலின் திருப்பாற்கடலை நினைவு கொள்ளும் வகையில் முதலில் கடல் மல்லையி(மாமல்லபுரத்தி)லிருந்து நம் உலாவைத் தொடங்குவோம். மல்லை முதல் (திரு)வள்ளூர்வரையிலான ஆறு திவ்ய தேசங்களை தரிசிக்கலாம்.

    முதலில் மாமல்லபுரத்தில் சந்திப்போம்.

    வாருங்கள்...

    *****

    1. மாமல்லபுரம்

    பக்தனுக்குப் பிரத்யேக தரிசனம்

    ஆயிரம் இதழ்கள் கொண்ட அபூர்வ, அழகிய தாமரை அது. ஆதவனின் ஒளிபட்டு மிளிர்ந்து, தன் செவ்வண்ணப் பூச்சால் அனைவரையும் கவர்ந்திழுத்தது. அந்த ஈர்ப்புக்கு ஆட்பட்டவர்களில் முற்றும் துறந்த முனிவர் புண்டரீக மகரிஷியும் ஒருவர். 'ஊண் வேண்டேன், உறக்கம் வேண்டேன், நான் வேண்டும் நல்லன எல்லாம் நாராயணன் திருவருளே' என்ற பற்றற்ற பரம புருஷர் அவர். இப்படி வேண்டுவன, வேண்டாதன இல்லாத அவருக்குள்ளும் ஓர் ஆசை துளிர்விட்டது.

    கோயில் கோபுரத் தோற்றம்

    அது, அந்த ஆயிரம் இதழ் தாமரையை... அந்த தாமரையைப் போன்ற பரந்தாமனின் சிவந்த பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான். பரந்தாமன் எங்கிருப்பான்? ஆதிசேஷன் மீது சயனித்தபடி பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பான். அவனை எப்படி அணுகுவது? கடல் வழியே சென்றால் பாற்கடலை அடைந்துவிட முடியாதா? பக்தி மேலீட்டால் அவர் பாமரத்தனமாகக் கருதினார்.

    பூதத்தாழ்வார்

    அதோடு அதை செயல்படுத்தவும் முனைந்தார். அலைவீசும் கடற்கரைக்கு வந்தார். அலைகள் அவரை 'வா, வா'வென அழைத்தனவே தவிர, அவர் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவோ, அவருக்கு உதவவோ சிறிதும் முன்வரவில்லை. பற்று கொள்வதுதான் எத்தகைய வைராக்கியத்தை வளர்த்து விடுகிறது! புண்டரீகர் சட்டென கடலில் இறங்கினார். கைகளால் கடல்நீரை கரை நோக்கி இறைத்தார். இந்தக் கடல் இதோ விரைவில் வற்றிவிடும். அல்லது என் இறைப்பு வேகத்துக்கு பயந்து வழி விடும்....

    கைகள் சோர்ந்தன, கால்கள் தளர்ந்தன, உடல் நலிந்தது. ஆனால் மனம் மட்டும் 'இன்னும், இன்னும்...' என்று ஆர்ப்பரித்தது. 'உன்னால் முடியும்' என்று சலிக்காமல், ஓர் பிசாசு போல அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டது.

    ஞானப்பிரான்

    அப்போது அங்கே ஒரு முதியவர் வந்தார். அப்பா...நான் ரொம்பவும் பசியோடு இருக்கிறேன். எனக்கு எங்கிருந்தாவது உணவு கொண்டு வந்து கொடுப்பாயா? என்று பரிதாபமாகக் கேட்டார்.

    மகரிஷி மனம் இளகினார். இப்போதைக்கு இவருக்கு உணவுக்கு ஏற்பாடு செய்வோம்; பிறகு நீரிறைப்பைத் தொடருவோம். ஒரே மாதிரியான வேலையிலிருந்து சற்றே மாறுதலாகவும் இருக்கும்; சிறிது நேரம் ஓய்வு கிடைத்தது போலவும் ஆகும்.

    உடனே ஊருக்குள் சென்று யாசித்து உணவு பெற்று வந்தார். 'பாவம் அந்த முதியவர். எங்கிருந்து வருகிறாரோ, எவ்வளவு தொலைவு நடந்தாரோ! இதற்கு முன் எப்போது சாப்பிட்டாரோ? அவரது சுருண்ட வயிறும், வற்றிய முகமும் அவர் பலநாள் பட்டினி என்று தெரிவிக்கின்றனவே. பாவம்!' என்று மனசுக்குள் அவருக்காக வருந்தினார். உணவு சேகரித்துக் கொண்டு கடற்கரைக்கு வந்தார்.

    தலசயனப் பெருமாள் புண்டரீக மகரிஷியுடன்

    அங்கே முதியவரைக் காணோம். ஆனால், கடல் நடுவே பிளந்து மகரிஷி நடந்து செல்வதற்கு பாதை வகுத்துத் தந்திருந்தது! திடுக்கிட்டார் புண்டரீகர். யார் செய்த மாயம் இது! என் முயற்சிக்கு கடலரசன் கொடுத்த அங்கீகாரமா? என் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாமல் கடலே வழி கொடுத்ததா? ஒன்றும் புரியாமல் அவர் திகைத்து நின்றிருந்தபோது, முனிவரே, இங்கே வாருங்கள் என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிய அவர், சற்றுத் தொலைவில் அந்த முதியவர் கரையில் படுத்தபடி இடது கையால் சைகை செய்தும், குரல் கொடுத்தும் அழைத்தார். அவர் காலடியில் அந்த அபூர்வத் தாமரை!

    பளிச்சென்று பொறி தட்டியது புண்டரீகருக்கு. கடலுக்குள் வழி செய்தவர் இவர்தான். இவரால் இப்படி செய்ய முடியுமானால், இவர் நிச்சயம் புயலடிக்கும் வாழ்க்கைக் கடலில் தத்தளிக்கும் மக்களைத் தாங்கிச் சென்று கரை சேர்க்கும் கருணாகரனாகத்தான் இருப்பார்....

    மென்சிரிப்புடன் அவரது மனவோட்டத்தைப் படித்த பாற்கடல் பரந்தாமன் அவரை அப்படியே ஆட்கொண்டார்.

    இடது கையை மடக்கி 'வா'வென அழைக்கும் பாணியில் வைத்துக் கொண்டு, ஒரு கரத்தை உடலோடு ஒட்டி வைத்து, மேலிரு கரங்களை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு, கீழ் வலது கையை உடலோடு சேர்த்து வைத்துக் கொண்டு, அனந்த சயனனாகக் காட்சியளித்தார்.

    நிலமங்கைத் தாயாருடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத தலசயனப் பெருமாள்

    புல்லரித்துப் போனது புண்டரீகருக்கு. என்ன அதிசயம் இது! பரந்தாமா, இது நீதானா? ஏன் தனித்து வந்திருக்கிறாய், என் தெய்வமே! உன் ஆதிசேஷன் எங்கே, சங்கு-சக்கரம் எங்கே, நாபிக் கமல பிரம்மன் எங்கே, உன் காலடியில் அமர்ந்திருக்கும் மஹாலக்ஷ்மி எங்கே? வியப்பால் விழி விரியக் கேட்டார் மகரிஷி.

    அவர்களுக்குத் தெரியாமல்தான் வந்தேன் என்றார் மாதவன். என்னை பாற்கடலில் தரிசிக்கும் பொருட்டு கை நோக கடலிலிருந்து நீரிறைத்தாயே, அந்த உன் பக்திக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்! அதனால்தான் நான் தனித்தே வந்து உனக்காக நீரிறைத்தேன். அவர்களுக்கு விஷயம் தெரிந்ததானால், நான் சிரமப்படக் கூடாது என்பதற்காக அவர்களும் வந்து கடலை இறைக்க ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் என் இனிய பக்தனான உனக்கு, பிரத்யேகமாக நானே உதவ விரும்பினேன் என்று பாற்கடல் நாதன் பதிலுரைத்தபோது அப்படியே நெகிழ்ந்து போனார் மகரிஷி.

    அந்தப் பரம்பொருளைத்தான் நாம் இங்கே தரிசித்து மகிழ்கிறோம். திருமாலே கடலில் வழி அமைத்ததால் இத்தலம் அர்த்த சேது என்றும் அழைக்கப்பட்டது.

    ஐயனுடன் உறையும் தாயார், நிலமங்கைத் தாயார். என்ன பொருத்தம்! நாயகன் கடற்கரை மணலில் சயனித்திருக்க, தாயாரும் நிலமங்கையாகத் திகழ்கிறாள். இங்கே. நிலம், வீடு சம்பந்தமான எந்தப் பிரச்னையையும் அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்வதன் மூலம் எளிதாக, சாதகமாக நிவர்த்தி செய்துவிட முடியும் என்கிறார்கள். பொதுவாகவே வராகரை வழிபட்டால், பூமித்தாயை இரண்யாட்சகனிடமிருந்து காத்த அவர், பக்தர்களின் பூமி சிக்கல்களையும் அவிழ்த்து நலம் பயப்பார் என்பார்கள்.

    லக்ஷ்மி நரசிம்மர்

    ஐந்து நிலை ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைய, நெடிதுயர்ந்த தீபஸ்தம்பமும், துவஜஸ்தம்பமும் நல்லாசி கூறி வரவேற்கின்றன. கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், ராமர் சந்நதிகளுடன் பூதத்தாழ்வாரையும் இங்கே தனி சந்நதியில் தரிசிக்கலாம். இவருக்கு ஏன் இந்த சிறப்பு மரியாதை? ஆழ்வாரின் அவதாரத் தலமே கடல்மல்லைதான். கோபுர வாசலுக்கு எதிரே அவரது அவதார மண்டபம் உள்ளது. அதனருகே உள்ள பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தவர் பூதத்தாழ்வார். தான் பிறந்த தலம் பரமனின் திவ்ய தேசமாகத் திகழ, இது குறித்து ஒரு பாடலில் மங்களாசாசனம் செய்திருக்கிறார்:

    தமருள்ளம் தஞ்சை

    தலையரங்கம் தண்கால்

    தமருள்ளம் தண்பொருப்பு

    வேலை - தமருள்ளும்

    மாமல்லை கோவல்

    மதிட்குடந்தை யென்பரே

    ஏவல்ல எந்தைக் கிடம்

    (இரண்டாம் திருவந்தாதி - 70)

    அதாவது, தஞ்சை மாமணிக்கோயில், திருவரங்கம், திருத்தங்கால், திருவேங்கடமலை, திருப்பாற்கடல் ஆகிய தலங்கள், அடியார்களின் உள்ளத்தில் உறைபவை; அடியார்களின் சிந்தனையில் துளிர்ப்பவை மாமல்லை, திருக்கோயிலூர், திருக்குடந்தை ஆகியவை. இவற்றுள் பரந்தாமன் வசிப்பது அடியவர் உள்ளத்திலும், கடல்மல்லையிலும்தான் என்கிறார் பூதத்தாழ்வார்.

    கோயிலின் மூலவர், தலசயனத் துறைவர் என்றும் போற்றப்படுகிறார்; உற்சவர், உலகு உய்ய நின்றான் எனப்படுகிறார். இந்த உற்சவரை ஹரிகேசவர்மன் என்ற மன்னன் 14ம் நூற்றாண்டில் ஒரு புற்றில் கண்டெடுத்து, பிறகு கோயிலினுள் பிரதிஷ்டை செய்தான் என்கிறது சரித்திரம். உற்சவர் கரத்தில் ஒரு தாமரை மொக்கு. இவரே மூலவர் பாதத்தில் அந்த மலரை சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

    தலசயனப் பெருமாளை ஞானப்பிரான் என்று திருமங்கையாழ்வார் வர்ணிக்கிறார். ஏன்? இந்தப் பெருமாள்தான், பத்தாவது அவதாரமான கல்கியாக அவதரிக்கப் போகிறார் என்பதைத் தனக்கு உணர்த்தியதாகச் சொல்கிறார் ஆழ்வார்.

    'உடம்புருவில்....' என்று துவங்கும் பெரிய திருமொழி 2(5), 3ம் பாடலில்

    கடும்பரிமேல் கற்கியைநான் கண்டுகொண்டேன்

    கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே என்கிறார்.

    கல்கி அவதாரம், இந்த தலசயனப் பெருமாளால் நிகழ்த்தப்படவிருக்கிறது என்ற திருமங்கையாழ்வாரின் ஊகத்திலும் ஒரு நயம் இருக்கிறது. மொத்தம் தசாவதாரங்கள். முதலாவது, கடலுக்குள் மச்சாவதாரம்; பத்தாவது கடற்கரையில் கல்கி அவதாரம்!

    பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்தத் தலம் ஆதி வராஹபுரி என்றழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரமாக பழைய கலங்கரை விளக்கத்துக்கு அருகே உள்ள ஒரு குகைக் கோயிலில்

    Enjoying the preview?
    Page 1 of 1