Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chiranjeevi
Chiranjeevi
Chiranjeevi
Ebook227 pages1 hour

Chiranjeevi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனுமன் இலக்கணம்

அமைதி, நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை, தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல், சரணாகதி பக்தி என்று பல குணநலன்களைக் கொண்டவன் அனுமன். ‘தன்னைக் காத்துக் கொள்பவன் உண்மையான பலசாலி அல்ல, பிறரையும் காக்க முன்வருபவனே சரியான, உண்மையான பலசாலி’ என்ற இலக்கணத்துக்கு விளக்கமாகத் திகழ்ந்தவன்.

ராமாயணக் கதாபாத்திரங்களிலேயே ராமனுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படுபவர் என்றால், அனுமனைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் ராமாயணக் காதையில் அனாவசியமாக, அதிகமாகப் பேசாத கதாபாத்திரமும் அனுமன்தான். அதனாலேயே கம்பர் அனுமனை ‘சொல்லின் செல்வன்’ என்று புகழ்கிறார். பேசாமலிருப்பதும் ஒரு நற்பண்பு என்றால், பேசும் ஒவ்வொரு சொல்லும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்று சிந்தித்துப் பேசுவதும் ஒரு கலைதான். இந்தவகையில் அனுமனைப் போற்றலாம். உடன் இயங்கும் கதாபாத்திரங்களின் மனோநிலையை உணர்ந்து, அதற்கேற்ப வார்த்தைகளை உச்சரிப்பதில் வல்லவன் அனுமன்.

அசோகவனத்தில் சீதையைக் கண்டபோது, ‘ராம், ராம், ஸ்ரீராம்’ என்று சொல்லித்தான் அவள் முன் அவன் தோன்றினான். சீதையைக் கண்டு, அவளுக்கு ஆறுதல் அளித்துவிட்டு, ராமனை வந்தடைந்த அவன், ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லித்தான் அதுவரை பதைபதைப்புடன் தவித்துக் கொண்டிருந்த ராமனின் மனதுக்கு உடனடி மருந்திட்டுத் தேற்றினான்.

சுக்ரீவனிடம் ராமனைப் பற்றிச் சொல்லும்போதும் சரி, சரணாகதியென வந்த விபீஷணனைப் பற்றி ராமனிடம் எடுத்துச் சொல்லும்போதும் சரி, நல்ல பேச்சின் இலக்கணத்தை மிகச் சரியாக அனுசரித்தவன் அனுமன். அமைதியான மனதில் நிதானமான எண்ணம் தோன்றும், தீர்க்கமான சொல் பிறக்கும், ஆக்கபூர்வமான செயல் நிகழும். – இந்த உண்மைக்குச் சரியான உதாரணம், அனுமன்.

அதேசமயம் நியாயமான தருணங்களில், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில், தன் முழு ஆற்றலைக் காட்ட அனுமன் தயங்கியதேயில்லை. அப்போது அவன் ஆக்ரோஷம் கொண்டான் என்றாலும், அதன் விளைவுகளாகத் தீயன மட்டுமே அழிவதாகவும், அங்கே நிலவக்கூடிய நல்லவை காக்கப்படுவதாகவும் மட்டுமே இருந்திருக்கின்றன.

தற்போதைய மனித வாழ்க்கைக்கு ‘அனுமன்’ என்ற வாழ்க்கை இலக்கணம், ஓர் அத்தியாவசியத் தேவை!

-பிரபுசங்கர்

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130604938
Chiranjeevi

Read more from Prabhu Shankar

Related to Chiranjeevi

Related ebooks

Reviews for Chiranjeevi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chiranjeevi - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    சிரஞ்சீவி

    Chiranjeevi

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சுவையான சூரிய பழம்

    2. ஆஞ்சநேயன் ஓர் அமைச்சன்

    3. வாலி வதம்

    4. கடல் தாண்டினான்

    5. கண்டான் சீதையை!

    6. அசோகவனத்தின் அழிவு!

    7. வாலினால் அமைத்த அரியாசனம்!

    8. இலங்கை எரிந்தது!

    9. சோர்வு நீக்கிய சூடாமணி!

    10. குற்றம் சொன்ன கும்பகர்ணன்

    11. விபீஷணனுக்கு அடைக்கலம்!

    12. கடலில் கட்டிய பலம்!

    13. அங்கதன் தூது

    14. ராம ரதம்!

    15. இன்று போய் நாளை வா!

    16. சஞ்சீவி மலை சுமந்து வந்தான்!

    17. பரதனைக் காப்பாற்ற பறந்து போனான்!

    18. பட்டாபிஷேகப் பரிசு!

    19. விடுபட்டுப் போன பணி!

    20. ராமனை எதிர்த்த சிறுவர்கள்!

    21. அனுமன் - அர்ஜுனன் - பீமன்

    22. ஒரு கல், மூன்று மாங்காய்!

    23. கலிகால சேவை!

    முன்னுரை

    அனுமன் இலக்கணம்

    அமைதி, நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை, தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல், சரணாகதி பக்தி என்று பல குணநலன்களைக் கொண்டவன் அனுமன். ‘தன்னைக் காத்துக் கொள்பவன் உண்மையான பலசாலி அல்ல, பிறரையும் காக்க முன்வருபவனே சரியான, உண்மையான பலசாலி’ என்ற இலக்கணத்துக்கு விளக்கமாகத் திகழ்ந்தவன்.

    ராமாயணக் கதாபாத்திரங்களிலேயே ராமனுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படுபவர் என்றால், அனுமனைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் ராமாயணக் காதையில் அனாவசியமாக, அதிகமாகப் பேசாத கதாபாத்திரமும் அனுமன்தான். அதனாலேயே கம்பர் அனுமனை ‘சொல்லின் செல்வன்’ என்று புகழ்கிறார். பேசாமலிருப்பதும் ஒரு நற்பண்பு என்றால், பேசும் ஒவ்வொரு சொல்லும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்று சிந்தித்துப் பேசுவதும் ஒரு கலைதான். இந்தவகையில் அனுமனைப் போற்றலாம். உடன் இயங்கும் கதாபாத்திரங்களின் மனோநிலையை உணர்ந்து, அதற்கேற்ப வார்த்தைகளை உச்சரிப்பதில் வல்லவன் அனுமன்.

    அசோகவனத்தில் சீதையைக் கண்டபோது, ‘ராம், ராம், ஸ்ரீராம்’ என்று சொல்லித்தான் அவள் முன் அவன் தோன்றினான். சீதையைக் கண்டு, அவளுக்கு ஆறுதல் அளித்துவிட்டு, ராமனை வந்தடைந்த அவன், ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லித்தான் அதுவரை பதைபதைப்புடன் தவித்துக் கொண்டிருந்த ராமனின் மனதுக்கு உடனடி மருந்திட்டுத் தேற்றினான்.

    சுக்ரீவனிடம் ராமனைப் பற்றிச் சொல்லும்போதும் சரி, சரணாகதியென வந்த விபீஷணனைப் பற்றி ராமனிடம் எடுத்துச் சொல்லும்போதும் சரி, நல்ல பேச்சின் இலக்கணத்தை மிகச் சரியாக அனுசரித்தவன் அனுமன். அமைதியான மனதில் நிதானமான எண்ணம் தோன்றும், தீர்க்கமான சொல் பிறக்கும், ஆக்கபூர்வமான செயல் நிகழும். - இந்த உண்மைக்குச் சரியான உதாரணம், அனுமன்.

    அதேசமயம் நியாயமான தருணங்களில், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில், தன் முழு ஆற்றலைக் காட்ட அனுமன் தயங்கியதேயில்லை. அப்போது அவன் ஆக்ரோஷம் கொண்டான் என்றாலும், அதன் விளைவுகளாகத் தீயன மட்டுமே அழிவதாகவும், அங்கே நிலவக்கூடிய நல்லவை காக்கப்படுவதாகவும் மட்டுமே இருந்திருக்கின்றன.

    தற்போதைய மனித வாழ்க்கைக்கு ‘அனுமன்’ என்ற வாழ்க்கை இலக்கணம், ஓர் அத்தியாவசியத் தேவை!

    -பிரபுசங்கர்

    1. சுவையான சூரிய பழம்

    குழந்தைத்தனமே இல்லாத குழந்தை அவன்.

    உடன் இருக்கும் நண்பர்கள் பிரமிக்கவும் பெரியவர்கள் சந்தோஷப்படவும், ஏன் முனிவர்கள் கோபம் கொண்டு சாபமே கொடுக்குமளவிற்கும், அசுர பலசாலியாக விளங்கியவன்.

    அவன்தான் ஆஞ்சநேயன்! அஞ்சனை புத்திரன்! வாயு மைந்தன்!

    'சுந்தரா' என்று தாயார் அஞ்சனாதேவி, குழந்தையின் அழகைப் பார்த்துப் பார்த்து, வியந்து, உச்சிமுகந்து மெய் மறந்து, அனுமனுடைய சுட்டித்தனமான விளையாட்டுகளைப் பெருமையுடன் ரசித்து கொண்டிருந்தாள். ஆஞ்சநேயன் ஒரு அழகன். மாருதி என்ற செல்லப் பெயரில் போற்றப்படுபவன்.

    மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது என்பார்களே. அது ஆஞ்சநேயனுக்கு மிகவும் பொருந்தும். சிறுபிள்ளையிலேயே அவனுடைய உடல்வலு அபரிமிதமாயிருந்தது. உருவம் சிறிதானாலும், செயலின் ஆற்றல் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. உடன் பழகிய நண்பர்களுக்கு அவனுடைய செயல்கள் ஆச்சரியமான பொழுதுபோக்கு மட்டுமல்ல, திகிலூட்டும் விளையாட்டும்கூட!

    அனுமனிடம் ஓட்டம் என்பதே கிடையாது. அதையும் மிஞ்சிய வாயு வேகத்தில் தாவிப் பறந்து பார்ப்போரைப் பரவசப்படுத்துவான் அவன். மலைச் சிகரத்திலிருந்து அவன் தாவிக் குதிக்கும்போது அன்னை அஞ்சனாவும் மற்றவர்களும் பதறித் தவிப்பார்கள். ஆனால் எந்தச் சிறு சிராய்ப்பும் இன்றிக் காற்றில் தவழும் இலையாக அவன் தரையில் வந்து இறங்கும் அழகு எல்லோர் மனசையும் கொள்ளை கொள்ளும்.

    அனுமனின் நண்பர்கள், அவனுடைய வல்லமையை நிரூபிக்க அவனுக்கு அடிக்கடி பல வாய்ப்புகள் கொடுப்பார்கள். 'மாருதி, இந்தச் செடியில் வேர் மிக ஆழமாக ஊன்றியிருக்கிறது. இதை வேரோடு பிடுங்கி எறி, பார்க்கலாம்!'

    மாருதி, அவர்கள் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான். ஆமாம்; செடியைப் பிடுங்கும் முயற்சியில் ஈடுபடும்போது ஒரு பெரிய மரம், பக்கத்தில் இடையூறாக இருக்கும். உடனே அந்த மரத்தை முன்னுக்கும் பின்னுக்குமாக அசைத்துப் பிறகு ஒரே பிடுங்காகப் பிடுங்கித் தூக்கியெறிந்து விட்டு, அதன் பிறகே செடியருகே போவான் அவன்.

    நண்பர்களின் கரகோஷம் கானகமெங்கும் எதிரொலிக்கும். ஒரு பெரிய மரத்தையே வேரோடு கில்லி எறியும் ஆற்றல்மிக்க இவனிடம் போய் ஒரு செடியைப் பிடுங்கச் சொல்லிச் சவால் விட்டோமே என்று அவர்கள் வெட்கப்பட்டுக் கொள்வார்கள்.

    ஒருநாள் அதிகாலையிலேலே விழித்து எழுந்துவிட்ட சிறுவன் மாருதி, தற்செயலாகக் கிழக்குப் பக்கம் நோக்கினான். அங்கே சிவப்பான பந்து உருண்டை ஒன்று வானில் தோன்றியிருப்பதைக் கண்டான். இலையோ, கிளையோ இல்லாத வானமரத்தில் தனியாக ஓர் பெரும்பழம் கனிந்து காட்சியளிப்பதை அவன் புதுமையாகப் பார்த்தான். நாவில் எச்சில் ஊறியது. அந்தப் பழம் அழகாக இருக்கிறது. மிகச் சுவையாகவும் இருக்கும்போல் தெரிகிறது! சாப்பிட்டுப் பார்த்தால் என்ன! முதலில் அதைப் பறிக்க வேண்டும்!

    எப்படிப் பறிப்பது?

    ஏறிப் பறிக்க, கிளை இல்லையே!

    உயரமெல்லாம் ஒரு பொருட்டா அனுமனுக்கு?

    ஆர்வத்துடன் அப்படியே ஜிவ்வென்று விண்ணில் ஏறிப்பாய்ந்தான். இரு கைகளையும் நீட்டியபடி, கண்களில் சூர்யப் பழமே குறியாக, ஆதவனை நெருங்கினான்.

    அன்று சூரிய கிரகணநாள். இயற்கையின் நியதிக்கு உட்பட்டு, சூரியனைக் கவ்விப் படிக்க ராகு என்ற பாம்பு விரைந்து வந்து கொண்டிருந்தது. தன் பொறுப்பை நிறைவேற்றும் தருணத்தில் தனக்குப் போட்டியாக யார் அது? தன்னை விட வேகமாகச் சூரியனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அந்த உருவம். அதுவும் ஒரு குழந்தை! இது எப்படி சாத்தியம். பிரமித்தான் ராகுதேவன்! அடுத்து பயத்துக்குள்ளானான். ஐயோ, தன்னுடைய பொறுப்பு நிறைவேறாமல் செய்துவிடுவான் போலிருக்கிறதே இந்தக் குழந்தை! ஓடோடிப் போய் இந்திரனிடம் முறையிட்டான்.

    சூரிய கிரகணம் நிகழாவிட்டால், பூமியில் இயற்கை மாற்றங்கள் முறையாக நடைபெறாது போய்விடுமே! இந்திரனும் வெகுண்டான்.

    யோசிக்க நேரமில்லை. அது தெய்வக் குழந்தையாகவே இருந்தாலும் சரி, தடுத்து நிறுத்தியாக வேண்டும். சக்திவாய்ந்த தன் வஜ்ராயுதத்தை எடுத்தான் இந்திரன். மாருதியை நோக்கி வீசினான்.

    பாவம்... ஆஞ்சநேயன். எதிர்பாராத தாக்குதல் அது. தன் தாடையைச் சந்தித்த வஜ்ராயுதத்தால் குருதி கொட்ட வலிபெருக, பெருங்குரலெடுத்து அலறி, மூர்ச்சித்துக் கீழே விழுந்தான் குழந்தை.

    வானிலிருந்து பொத்தென விழுந்த தன் மகனை நோக்கி ஓடோடி வந்தாள் அஞ்சனா தேவி. அவனைத் தன் மடியில் அள்ளிக் கிடத்தி அழுது அரற்றினாள். வேதனை கோபமாக மாற, மகனைத் தாக்கியது யாரென்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.

    அப்போது அவள் முன்னால் இந்திரனும் பிற தேவர்களும் தோன்றினார்கள்.

    'அம்மா, உங்கள் மகனைத் தாக்கியது நான்தான். என்னை மன்னித்துவிடுங்கள். அறியாப்பிள்ளை இவன். வானில் பறந்து, சூரியப் பழத்தைப் பறிக்க முயன்றான். ஆனால், இன்று சூரியகிரகணம். நியாயமாக ராகுதான் சூரியனைப் பிடித்து அதன் ஒளி, பூமியில் சிறிது நேரம் படாதபடி மறைக்க வேண்டும். அதற்கு இடையூறாக உங்கள் மகன் வந்ததால், அதை நான் தடுக்க வேண்டியதாகிவிட்டது' என்று விளக்கினான் இந்திரன்.

    அந்த விளக்கத்தை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டாள் என்றாலும், தாடை சுருங்கி, வாய் வீங்கி, முகத்தோற்றம் மாறிவிட்டிருந்த தன் மகனை வேதனையுடன் பார்த்தாள் அஞ்சனா தேவி.

    ஆனால் அழகன் அனுமனின் தந்தை வாயுதேவன் சமாதானத்தை ஏற்க மறுத்தான். மயக்கமும், திகைப்புமாய் இருந்த மகனை வாரி எடுத்தான். மலைக்குகைக்குள் மறைவாக அமர்ந்தான். காற்றை இழந்த உலகு ஸ்தம்பித்து நின்றது. இந்திரன் உள்ளிட்டோர் குகைக்குள் ஓடினர். மன்னிப்பு வேண்டினர். வாயுபகவான் ஒரு நிபந்தனை விதித்தான். தன் மகனுக்கு ஞானகுருவாகக் கதிரவன் விளங்க வேண்டும் என்றான்.

    இந்திரனும் ஒப்புக் கொண்டான். ஆதவன் முன் வந்தான். பிறகென்ன! உலகம் உயிர்ப்பு பெற்றது. சுந்தரன் அனுமன் சொல்லின் செல்வனாக - சிந்தனைச் சுரங்கமாக - மற்றவரை மிகச் சரியாக எடை போடும் நுண்ணுணர்வு மிக்கவனாக வளரத் தொடங்கினான். யாரையும், எதையும் அருகே நெருங்க விடாத ஆதித்தன் வாயுபத்திரனைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றான். அனுமனும் பயிலத் தொடங்கினான்.

    அன்று முதல் புதுமுகத்தோற்றம் கொண்ட அனுமன் தன் பழைய விளையாட்டுகளை மட்டும் விடவேயில்லை.

    ஒருநாள், தன் தோழர்களுடன் சேர்ந்து கொண்டு மிக அதிக தூரத்திற்குக் கல்லை எறிவது, எவ்வளவு பெரிய மரங்களையும் வேரொடு பிடுங்கிச் சாய்ப்பது, தன் தோளின் மேல் நண்பர்கள் ஏழெட்டு பேரைத் தூக்கிக் கொண்டு அனாயசமாக, தடுமாறாமல் நடப்பது என்று பல வழிகளில் அசகாசய சூரத்தனம் செய்து கொண்டிருந்தான் அனுமன்.

    எல்லாமே பால்ய பருவத்துக்குரிய விளையாட்டுகள்தாம். குறும்புகள்தாம். குற்றமற்றவைகள்தாம்.

    ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். பக்கத்து வனத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு தவம் இயற்றி வந்த முனிவர்கள்தாம் அவர்கள்.

    ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மரம், மட்டைகள், கற்கள் என்று தாம் தவமிருக்கும் இடத்தில் அன்னியப் பொருள்கள் வந்து விழுவதை அவர்கள் பொருட்படுத்தவில்லைதான். ஆனால், மிகப்பெரிய மரமே வானிலிருந்து மழை பொழிவது போல பொத், பொத்தென்று வந்து விழுகிறதென்றால், அதை எப்படிப் பொறுத்துக்கொள்வது? யாருடைய துஷ்டத்தனமான வேலை இது? கொதித்துப் போனார்கள் ரிஷிகள். அந்த துஷ்டன் அனுமன்தான் என்பது முனிவர்களுக்கு எளிதாகத் தெரிய வந்தது. அவனைப் பார்த்ததும் அவர்களும், அசந்துதான் போனார்கள். யாரோ பிரமாண்டமான அசுரன்தான் இதற்குக் காரணமாக இருப்பான் என்று கருதியிருந்த அவர்களுக்கு, ஒரு சிறுவனை அடையாளம் கண்டபோது அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.

    'இந்த வயதிலேயே இப்படி ஒரு பராக்கிரமமா! இவன் மேலும் பெரியவனாக வளர்ந்தால் இந்தப் பலமும் கூடவே வளர்ந்து கொண்டே போகுமே. அந்தப் பலத்தை இவன் ஆக்கபூர்வமாகத்தான் பயன்படுத்துவானா அல்லது அக்கிரம வழியில் இறங்குவானா? எப்படியானாலும் சரி, இவனுடைய அபரிமிதமான ஆற்றல், எந்தவித அழிவுக்கும் துணை போகக்கூடாது.

    'அதற்கு என்ன செய்யலாம்?'

    'தன் ஆற்றலைத்தானே உணராதபடி இவனைச் செய்ய வேண்டும்.'

    'சரி... அப்படியானால் சாபம் இட்டு விடலாம்'.

    'அனுமனே... உன் பலத்தை நீயே உணராமல் போவாய்' சாபம் அளித்தே விட்டார்கள்!

    அனுமன் அச்சம் கொள்ளவில்லை. கோபப்படவும் இல்லை. சாபம் பெற்ற அந்த நிமிடமே தன் மனம் அமைதியாவதை ஆஞ்சநேயன் உணர்ந்தான்.

    இது நடந்த பிறகு, நண்பர்கள் உற்சாகப்படுத்தினாலும், ஊக்குவித்தாலும், சவால் விட்டாலும் அதையெல்லாம் அடக்கமாக ஒதுக்கிக் தள்ளினானே தவிர, தன் பலத்தைக் காட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1