Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rig Veda Karuthukkal
Rig Veda Karuthukkal
Rig Veda Karuthukkal
Ebook100 pages40 minutes

Rig Veda Karuthukkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்து வடிவில் இந்த உலகத்துக்குக் கிடைத்த முதல் நூல் “ரிக் வேதம்”. அவ்வளவு பழமை வாய்ந்ததாக இருந்தும் அதன் ஸ்லோக மந்திரங்களில் உள்ள கருத்துக்கள் இன்றும் பொருத்தமாக இருப்பதன் காரணம் அவை அனைத்துமே இயற்கையில் நடப்பதைக் கவனித்து எழுதப்பட்டவை என்பதாகும். உயிர்களின் தோற்றம் என்பதை உடல், உயிர், உள்ளம், புத்தி, சத், சித், ஆனந்தம் என்ற ஏழு நிலைகளில் நிறுத்தி, அதை எவ்வாறு புத்தியின் மூலம் அறியலாம் என்று அது விவரிக்கிறது. அதை வெளியுலகில் நாம் காணும் அக்னி, சூரியன் போன்றவை மூலமாகவும், நமக்கு இருக்கும் பஞ்ச இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியும் உணரலாம் என்கிறது. வேதம் உருவகப்படுத்தும் தெய்வங்களும் நம் இயற்கையை ஒட்டியே அமைந்துள்ளன.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580130405956
Rig Veda Karuthukkal

Read more from S. Raman

Related to Rig Veda Karuthukkal

Related ebooks

Related categories

Reviews for Rig Veda Karuthukkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rig Veda Karuthukkal - S. Raman

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ரிக் வேதக் கருத்துக்கள்

    Rig Veda Karuthukkal

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

    2. உலகம் பிறந்தது

    3. நம்மைப் பற்றிய உண்மை

    4. உடல் – உயிர் - உள்ளம்

    5. நான்முகன்

    6. அக்னி

    7. இந்திரன்

    8. சூரியன்

    9. சோமன்

    10. சக்தி

    1. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

    மேலைநாடுகள் ஒன்றில், ஓர் ஆஸ்பத்திரிக்குள் சென்று கிட்டத்தட்ட தங்களது வாழ்நாள் முடிவை எட்டிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குத் தரிசனம் தந்து, அவர்கள் அருகில் சிறிது நேரம் நின்றுவிட்டுச் செல்லும் ஒரு குதிரை பற்றிய வாட்ஸ்-அப் தரவை ஒரு முறை நான் காண நேர்ந்தது. அந்தத் தரவை நான் பலருக்கும் அனுப்பிவைத்தேன். அதைப் பெற்ற சிலர், ஆறறிவுள்ள நமக்கு ஐந்தறிவுள்ள ஜீவன்களைக் காட்டிலும் மேலான பரிவு வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    அப்போது, எனக்கு இராமாயணக் காலத்தில் இருந்தே ஒரு குதிரையைக் கொண்டு செய்யப்பட்டு வரும் அசுவமேத யாகம் பற்றிப் படித்த ஞாபகம் வந்தது. அதனால் உந்தப்பட்ட எனக்கு, இயற்கையில் நடப்பதைக் கவனித்து அதன் வழியில் ரிக் வேதம் நமக்கு எடுத்துரைப்பது பற்றி எழுதலாம் என்று தோன்றியது. இவ்வாறாக ஒரு குதிரையைப் பற்றித் தொடர்ந்த சில பதிவுகளுக்குப் பின் எழுதப்பட்ட நூல்தான் இது.

    ***

    ஒருவர்:

    பரிவு காட்டுவதில் பசு, பூனை, குதிரை, யானை போன்ற விலங்குகளும் இவற்றிலடக்கம். தமது எஜமானர்கள் மரித்த காலங்களில் துக்கம் தாளாமல் சாப்பிடக்கூட மறுப்பவை அவை.

    மகரந்தச் சேர்க்கைக்குப் பல வழிகளில் துணை செய்யும் வேலைக்காரத் தேனீக்கள் அந்த வேலை செய்யும்போதே இறந்துவிடுகின்றனவாம்.

    அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்…?? நம்மூர் ஆறறிவு ஜீவிகள் சிலரது அழுக்கேறிய இதயங்களை முதலில் கழுவவாவது அவை பயன்படட்டும்.

    ***

    நான்:

    அஞ்சு அறிவு என்று நாம் பொதுவாகக் கூறினாலும், அது சரியா என்பது பற்றி எனக்குச் சந்தேகம் நிறையவே உண்டு. 1950-க்கு முன்னால், ரமண மகரிஷி காலத்தில் அணிலில் இருந்து சிறுத்தை வரை பல மிருகங்கள் அவர் முன்னால் சகஜமாக வந்து போனது பற்றியும், ஒருவர் கடிந்து கொண்டதால் நாய் ஒன்று அருகாமையில் இருந்த குளத்தில் தற்கொலை செய்து கொண்டது பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. அதேபோல, ரமணாஸ்ரமத்தில் சுமார் பத்து வருடங்கள் முன்னால் நடந்த ஒரு நிகழ்வு நம்மை நெகிழ வைக்கும். நீண்ட கால ரமண பக்தரான இராமசாமிப் பிள்ளை என்பவர் காலமானவுடன் எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று அவர் சடலத்தின் அருகே வந்து உட்கார்ந்தது. தன் முகத்தைத் தொங்கப்போட்டு உட்கார்ந்த அது எவரையும் துன்புறுத்தவில்லை. எவர் விரட்டியும் அங்கிருந்து நகரவும் இல்லை. சடலத்தைத் தூக்கும் முன்னால் அங்கிருந்தவர்கள் ரமணர் இயற்றிய அருணாசல சிவ பாடல் முழுமையும் பாடி முடித்ததும், தானே அங்கிருந்து வெளியேறி மலைப் பக்கம் சென்று மறைந்தது. இவ்வாறான வெளிப்பாடுகள் நமது அறிவுக்கு எட்டாதவைகளாகவே இருக்கின்றன.

    ***

    ஒருவர்:

    செஞ்சிக்குப் போகும் வழியில், மதிய உணவுக்காகக் காரை நிறுத்தியபோதுதான், அவரைக் கண்டேன், அந்தப் பெரியவருக்கு அறுபது வயதிருக்கும். கையில் சிக்னல் ஸ்டிக் லைட்டும், வாயில் விசிலுமாய், ஹைவேஸில் போகின்ற வண்டிகளை அந்தக் கடைக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார்…

    வயோதிகம் காரணமாகவோ, நின்றுகொண்டே இருப்பதன் காரணமாகவோ, கால் வலி தாளாமல், கால் மாற்றி மாற்றித் தவித்துக் கொண்டே இருந்தார்… உணவுண்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. நாச்சியாவோடு சில செல்பிகள் எடுத்துக் கொண்டே மீண்டும் கவனித்தபோதும், அவர் அமரவே இல்லை.

    இது போன்ற எளிய மனிதர்களைக் கண்டால், என்னால் இயன்றதைத் தருவது என் வழக்கம். அவர் அருகே சென்று, அவரது தோள் தொட்டுத் திருப்பி, பெரும் மதிப்புள்ள ஒற்றைத் தாளாய் பண நோட்டு ஒன்றை நீட்டினேன். பணத்தைக் கவனித்தவர், மெல்ல புன்னகைத்து, வேணாம் சார் என மறுத்தார்.

    அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஏனெனில், நான் கொடுத்த பணத்தின் மதிப்பு அப்படி. எப்படியும் அது, அவரது ஒருநாள் சம்பள மதிப்பிருக்கும்.

    ஏன் எனக் கேட்டேன்.

    அவங்க கொடுத்திட்டாங்க

    யாரு

    திரும்பி, கார் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியைக் காண்பித்தார். நிச்சயமாய் நான் கொடுத்ததைப் போல, அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை. பணம் கண்டு பேராசைப்படாத அவரின் உண்மையும், உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், எனக்குப் பிடித்திருந்தது… மெல்ல பேச்சு கொடுத்தேன்.

    பேரென்னங்க ஐயா

    முருகேசனுங்க

    ஊருல என்ன வேல

    விவசாயமுங்க

    எத்தன வருசமா இந்த வேல செய்றீங்க

    நாலு வருசமா செய்றேங்க

    ஏன் விவசாயத்த விட்டீங்க

    மெல்ல மௌனமானார். தொண்டை அடைத்த துக்கத்தை, மெல்ல முழுங்கினார்.

    கம்மிய குரலோடு பேசத் துவங்கினார். ஆனால் என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும்,

    அவரின் முழுகவனமும், சாலையில் செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே இருந்தது.

    எனக்குத் தஞ்சாவூர் பக்கம் கிராமமுங்க; ஒரு பொண்ணு, ஒரு பையன். விவசாயந்தான் பொழப்பே நமக்கு. ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். கடன உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணும் விளங்கலே, கடவுள் கண்ணே தொறக்கல.

    Enjoying the preview?
    Page 1 of 1