Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Minnuvathellam Vairamalla!
Minnuvathellam Vairamalla!
Minnuvathellam Vairamalla!
Ebook209 pages1 hour

Minnuvathellam Vairamalla!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அவ்வப்போது அரங்கேறி கொண்டிருக்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார நிகழ்வுகளை எளிமையாக விளக்கி, அவை சார்ந்த தற்காப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய என்னுடைய கட்டுரைகள், அவ்வப்போது, தினமணி நாளிதழில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அனைவருக்கும் எந்த சமயத்திலும் பயன் படக்கூடிய அது போன்ற கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தொகுப்பாக அளித்துள்ளேன். பொருளாதார கட்டுரைகள் தவிர, தனி மனித முன்னேற்றம் மற்றும் மனித உறவுகள் சார்ந்த கட்டுரைகளும் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அனைத்து தரப்பினரும், இந்த கட்டுரை தொகுப்பை படித்து பயனடைவார்கள் என்ற நம்பிக்கையுடன், இந்த நூலை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJun 17, 2023
ISBN6580164009862
Minnuvathellam Vairamalla!

Read more from S. Raman

Related to Minnuvathellam Vairamalla!

Related ebooks

Reviews for Minnuvathellam Vairamalla!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Minnuvathellam Vairamalla! - S. Raman

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மின்னுவதெல்லாம் வைரமல்ல!

    (சமூக மற்றும் பொருளாதார கட்டுரை தொகுப்பு)

    Minnuvathellam Vairamalla!

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    சேமிப்பும், முதலீடும்!

    வங்கி கடன் பெறுவதற்கான வழிமுறைகள்

    காசோலை எனும் சாதனம்

    சிறுதொழில் எனும் பெரும்பொறி

    திருமணங்களும், தனி மனித பொருளாதாரமும்!

    லஞ்ச பொருளாதாரம்

    தங்கம்

    விஜய் மல்லையா வங்கிகளுக்கு கற்றுத் தந்த பாடம்!

    மேலதிகாரி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

    கனவுகளை நனவாக்கும் ஒரு நிதி ஆதாரம்

    முதுமையை இனிமையாக்கலாம்!

    கிராமிய வங்கிகளின் செயல்பாடுகள்

    முள்ளும், மலரும்!

    பெண்களும், பொருளாதார சுதந்திரமும்

    தேர்தல் திருவிழாவின் பொருளாதார தாக்கங்கள்

    பிரச்னைகளும், தீர்வுகளும்

    காண்போமோ ஒரு கனவு?

    தேவை... தேர்தல் சீர்திருத்தங்கள்

    யோசி, கவனி, பேசு…

    மின்னுவதெல்லாம் வைரமல்ல!

    நம் பணம் நம் கையில்!

    வாராக்கடன் எனும் விஷச் செடிகள்

    திகைத்து நிற்கும் அமெரிக்கா!

    உறவுக்கு கை கொடுப்போம்!

    வட்டி சக்கரத்தின் வேக கட்டுப்பாடு தேவை!

    முன்னுரை

    சர்வதேச பொருளாதாரம், உள்நாட்டு பொருளாதாரம் போன்ற சொற்கள், நம்மில் பலருக்கு அன்னியமாக இருந்தாலும், அவற்றின் சிறு அசைவுகள் கூட, நம் சேமிப்பையும், செலவுகளையும் அசைத்துப் பார்க்கும் வல்லமை படைத்தவகளாகும்.

    தனி மனித பொருளாதாரத்தில், அது போன்ற அசைவுகள் நிகழும் போது, அதற்கான காரணங்களை ஓரளவாவது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

    சிற்றலைகளாக நம்மை தொடும் பாதகமான நிகழ்வுகளின் காரணங்களை தெரிந்து கொள்வது, சீறிப் பாயப் போகும் அலைகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும்.

    அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதார நிகழ்வுகளை எளிமையாக விளக்கி, அவை சார்ந்த தற்காப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய என்னுடைய கட்டுரைகள், அவ்வப்போது, தினமணி நாளிதழில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    அனைவருக்கும் எந்த சமயத்திலும் பயன்படக்கூடிய அது போன்ற கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தொகுப்பாக வெளியிட்டுள்ளேன்.

    பொருளாதார கட்டுரைகள் தவிர, தனி மனித முன்னேற்றம் மற்றும் மனித உறவுகள் சார்ந்த கட்டுரைகளும் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

    அனைத்து தரப்பினரும், இந்த கட்டுரை தொகுப்பை படித்து பயனடைவார்கள் என்ற நம்பிக்கையுடன், இந்த நூலை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    இந்த கட்டுரைகளை வெளியிட்ட தினமணி நாளிதழின் ஆசிரியர் குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எஸ். ராமன்

    சென்னை

    தொடர்பு எண்: 9840077902

    சேமிப்பும், முதலீடும்!

    முதலீடு (Investment) என்ற செயல்பாடு, சேமிப்பு என்ற நல்ல பழக்கத்திற்கு நெருக்கமான தொடர்புடையதாகும். ஏனென்றால், திட்டமிட்ட சேமிப்புகள்தான் முதலீடுகளுக்கு அடித்தளமாக அமைகின்றன.

    நிகழ்கால சௌகரியங்கள் சிலவற்றை தியாகம் செய்து, கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற எதிர்கால அவசிய செலவுகளுக்காக, தற்கால வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்குவதுதான் சேமிப்பு என்றழைக்கப்படுகிறது.

    செலவிற்கு மிஞ்சிய வருமானம்தான் சேமிப்பு என்று பலராலும் கணிக்கப்படுகிறது. ஆனால், வருமானத்தில் ஒரு சிறிய தொகையையாவது கட்டாயமாக சேமிப்புக்கு ஒதுக்கிவிட்டு, மீதியை செலவு செய்யும் செயல்பாட்டைதான், உண்மையான சேமிப்பு பழக்கம் என்று கருதவேண்டும்.

    சேமிப்பு பழக்கத்தை எப்படி வளர்த்துக்கொள்வது என்ற கேள்வி பலரின் மனதில் எழலாம். அன்றாட அவசிய தேவைகளைத் தவிர, மற்ற பொருள்களின் மீது ஏற்படும் மோகம், சேமிப்புக்கு தடை கல்லாக அமைகிறது. இந்த மோகத்தை ஓரளவு குறைத்தாலே, சேமிப்பு என்ற செடிக்கான விதை முளைக்க ஆரம்பிக்கும்.

    கடன் பெற்று, வட்டி செலுத்தி, ஒரு பொருளை வாங்கும்போது, அதனால், நமக்கு எவ்வளவு சேமிப்பு என்று கணக்கிட வேண்டும். வட்டி தொகையைவிட, அந்த பொருள் மூலம் ஈட்டப்படும் வருமானம் அதிகமாக இருந்தால், அதை ஒரு விவேகமான செயல்பாடாக கருதலாம். நமக்கு அவசியம் தேவையில்லாத சௌகரியத்தை மட்டும் அதிகரித்து, நிகழ்கால மற்றும் எதிர்கால வருமானத்தை குறைக்கும் செலவுகளை தவிர்த்தால், சேமிப்புக்கான வாய்ப்பு உருவாகும்.

    பொருளாதார பலம் இல்லாமல், மற்றவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறைகளை காப்பியடித்து வாழ எண்ணுபவர்கள், கடன் என்னும் புதை குழிக்குள் விழுந்து, மீண்டு எழ முடியாமல், சிக்கித் தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவசர தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படவேண்டிய கிரெடிட் கார்டுகளை, ஆடம்பர வாழ்க்கை செலவுகளுக்கு பயன்படுத்தி, அசலையும், வட்டியையும் திருப்ப செலுத்த முடியாமல், சொந்த வீட்டை விற்றவர்களின் சோக கதையை நான் கேட்டிருக்கிறேன். சேமிப்பு பழக்கத்தை விட்டு இவர்கள் வெகு தூரம் நகர்ந்து விட்டதுதான் இம்மாதிரி அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

    சேமிப்பு பழக்கம் என்பது முற்றிலும் பரம்பரை பழக்கம் இல்லை. அந்த பழக்கத்தை ஒவ்வொருவரும், நாளடைவில் கற்றுக்கொள்ளலாம். சேமித்து பழக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் அருமையும், பெருமையும் புரியும். சிறு வயது முதல், சேமிப்பு பழக்கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும். இப்பொழுது, குழந்தைகளுக்கு அன்றாடம் ‘பாக்கெட் மணி’ கொடுப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. கொடுக்கப்பட்ட தொகையில், எவ்வளவு சேமித்தாய்...? என்று குழந்தைகளை கேட்கும் பழக்கத்தை பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். இதனால், செலவோடு, சேமிப்பும் அவசியம் என்பது குழந்தைகளின் மனதில் பதிய வாய்ப்பிருக்கிறது.

    ஆண்களைவிட, பெண்கள், சேமிக்கும் பழக்கத்தில் முன்னிலை வகிக்கின்றனர். பெண்களால் நிர்வகிக்கப்படும் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட குடும்பங்களில் சேமிப்புக்கு முக்கிய பங்கு அளிக்கப்படுவதாக சமீபத்திய ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களில் சேமிப்பு விகிதம் அதிகம் காணப்படுகிறது.

    உலக நாடுகளில் இந்தியாவில்தான், தனி மனித சேமிப்பு அதிக அளவில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிக பணவீக்கம் போன்ற பொருளாதார நிகழ்வுகளால், இதன் வளர்ச்சி சமீப காலங்களில் தொய்வு அடைந்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.4 சதவிகித அளவில் நிலவிய சேமிப்பு தொகை, தற்போது 12 சதவிகிதத்திற்கும் கீழ் வீழ்ச்சி கண்டிருப்பதாக தெரிகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தொய்வு நீங்கி, வேகப்பாதையில் செல்ல ஆரம்பித்தவுடன், தனி மனித சேமிப்பும் அதற்கு தகுந்தாற்போல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன் ஆகிய வளர்ந்த நாடுகளில் தனி மனித சேமிப்பு, கடந்த சில வருடங்களில், 10 முதல் 13 சதவிகிதம் வரை வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை, 2005ம் ஆண்டில் வெற்று நிலையிலிருந்த தனி மனித சேமிப்பு, 5 சதவீத வளர்ச்சியை கண்டது. 2008ம் ஆண்டில், அமெரிக்கா சந்தித்த பொருளாதார சரிவின் ஒரு முக்கிய காரணம், தனி மனித சேமிப்பு ஒரு சதவீத அளவுக்கு சரிந்திருந்தது என்பதாகும். இந்தியர்களின் சேமிப்பு பழக்கம், மற்ற நாடுகள் சந்தித்த பெரும் பொருளாதார சரிவிலிருந்து நாட்டை காப்பாற்றியது என்று நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம்.

    இந்திய வங்கிகளின் மொத்த டெபாஸிட்டுகளில் 58 சதவீதம் தனிமனித சேமிப்பாகும் (Household savings). இதில் 55 சதவீதம் வரை நிரந்தர வைப்பு தொகையிலும், 30 சதவீதம் சேமிப்பு கணக்குகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றன.

    ஒரு நாட்டு மக்களின் சேமிப்பு பழக்கம், அந்த நாட்டின் கலாச்சாரம், கல்வி, பணவீக்க அளவு, மத கோட்பாடுகள், திருமண சடங்கு முறைகள் ஆகியவைகள பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. பெண்ணின் திருமணத்தின்போது சீர்வரிசை, வரதட்சணை போன்ற கட்டாய சம்பிரதாயங்கள் நிறைந்த நம் நாட்டில், அந்த செலவுகளை சமாளிக்க சேமிப்பு அவசியமாகிறது.

    புகையிலை, சிகரெட், மது, சூதாட்டம் போன்ற தீய பழக்கங்கள், சேமிப்புக்கு எதிரியாகும். சாதாரண சிறிய நிகழ்வுகளுக்கு கூட, அதிக செலவில் பார்ட்டி கொடுக்கும் கலாசாரம் நம்மிடையே இப்பொழுது பரவி வருகிறது. இம்மாதிரி பழக்கங்கள், சேமிப்பை தடுத்து, கடனை தோற்றுவிக்கின்றன.

    கடைக்கு போவதற்கு முன்பு, தேவையான பொருள்களை பட்டியலிட்டு, அவைகளை மட்டும் வாங்குவதுதான் நல்ல பழக்கமாகும். அதற்கு பதிலாக, கண்ணில் பட்ட பொருள்களை வாங்குவதால், மாதாந்திர குடும்ப பட்ஜெட்டும், அதனால் சேமிப்பும் பாதிக்கப்படும். இலவச இணைப்புகளுக்காக சில பொருள்களை வாங்கும் பழக்கம் நம்மிடையே வளர்ந்து வருகிறது. ஐந்து ரூபாய் இலவச இணைப்பிற்காக, தேவையற்ற 80 ரூபாய் பொருளை வாங்கவேண்டுமா என்று யோசிப்பதால், அனாவசிய செலவு மிச்சமாகும். திட்டமிடப்பட்ட செலவுகள் சேமிப்புக்கு வழி வகுக்கும்.

    நம்மை செலவழிக்க தூண்டி, தூண்டில் போட்டு இழுக்கும் சில விற்பனை விளம்பரங்களுக்கு பலியாகாமல் இருந்தால், அது நம் சேமிப்புக்கு துணை நிற்கும். பக்கத்தில் வீட்டில் இருக்கிறது… எதிர்த்த வீட்டில் இருக்கிறது... உங்கள் வீட்டில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, ‘அது நம் வீட்டிற்கு தேவையான பொருளா?’ என்று சிந்தித்து பார்த்து முடிவு எடுக்கவேண்டும்.

    பருவத்திற்கு தக்கபடி, விலை குறைந்து காணப்படும் வீட்டு பயன்பாட்டு பொருள்களை அந்தந்த பருவங்களில் வாங்கி சேமித்தால், செலவு குறைந்து, சேமிப்பு அதிகமாகும். சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் பதுக்கல் போன்ற அசாதாரண காரணங்களால் திடீரென்று விலை உயரும் பொருள்களை, நம் அன்றாட உபயோகத்திலிருந்து ஒதுக்கி வைக்க பழகிக் கொள்ளவேண்டும். கிலோ நூறு ரூபாய்க்கு மேல் விற்ற வெங்காயம், தக்காளி போன்ற அன்றாட பயன்பாட்டு பொருள்களின் விலை, நாளடைவில் நாம் வாங்கும் நிலைக்கு வந்ததை அனைவரும் அறிவோம்.

    நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பண்டங்களையும், காய்கறிகளையும் தேவையான அளவு மட்டும் சமைத்து, வீணடிக்காமல் உண்டால், அதுவும் ஒரு சேமிப்பாகும். அதேபோல், தேவையற்ற நேரங்களில் வீட்டில் விளக்கு, டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை சுவிட்ச் ஆஃப் செய்வதும் சேமிப்புக்கு வழி வகுக்கும்.

    சேமிப்பு ஒரு கலை என்றால், அதை பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பது மற்றொரு கலையாகும். சில வருடங்களுக்கு முன்பு வரை, வங்கி டெபாஸிட்டுகள் மற்றும் தங்கம் ஆகியவைகள் மட்டும்தான் பாதுகாப்பான முதலீடுகளாக கருதப்பட்டன. ஆனால், தற்போது, பரஸ்பர நிதி (Mutual funds), பங்கு சந்தை போன்ற மாற்று முதலீட்டு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. பரஸ்பர நிதி துறை, செபியின் (Securities and Exchange Board of India) கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் வளரும் துறையாகும். சிறு முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் ஏற்ற துறையாகும்.

    இந்தியர்களின் சேமிப்பில் பத்து சதவிகிதம் வரைதான் இந்த துறைகளில் தற்போது முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. சரியான வழிகாட்டுதலுடன் செயல்பட்டால், இந்த துறைகளில் முதலீடுகள், வரும் காலங்களில் நல்ல வருமானத்தை கொடுக்கும். மொத்தமாக முதலீடு செய்யமுடியாத சிறு முதலீட்டாளர்கள், மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் (SIP) முதலீடு செய்யலாம். பங்கு சந்தை துறையில், தினசரி வாங்கி, விற்பதைவிட (Trading), நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீடுகள் நல்ல பலனை தரும். ஒருவருடைய வயது, வருமானம், சேமிப்பு தொகை ஆகியவைகளை பொறுத்து மூலதனங்கள் திட்டமிடப்படவேண்டும். மூலதனங்கள் எப்பொழுதும் ஒரே துறையை சார்ந்திருக்காமல், எளிதாக பணமாக மாற்றக்கூடிய பல துறைகளில் பரவி இருக்கவேண்டும்.

    நம் சேமிப்பை மட்டும்தான் முதலீடு செய்யவேண்டுமே தவிர, கடன் வாங்கி இந்த துறைகளில் முதலீடு செய்வது விவேகம் அல்ல. நல்ல முதலீடு என்பது நமக்கு நிம்மதியான தூக்கத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1