Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Swami Vivekanandar – 150: En Pangalippu
Swami Vivekanandar – 150: En Pangalippu
Swami Vivekanandar – 150: En Pangalippu
Ebook119 pages48 minutes

Swami Vivekanandar – 150: En Pangalippu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பால கங்காதர திலகர், P. பரமேஸ்வரன், ஜக் மோகன் ரெட்டி, கோபால கிருஷ்ண காந்தி, S. குருமூர்த்தி போன்றவர்களைத் தவிர வேறு சிலர் சுவாமி விவேகானந்தர் பற்றியும், அவருடன் இருந்த அனுபவங்கள் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து தரும் வாய்ப்பை நான் பெற்றேன். அந்தக் கட்டுரையையும் இத்தொகுப்பில் காணலாம்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580130405936
Swami Vivekanandar – 150: En Pangalippu

Read more from S. Raman

Related to Swami Vivekanandar – 150

Related ebooks

Reviews for Swami Vivekanandar – 150

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Swami Vivekanandar – 150 - S. Raman

    http://www.pustaka.co.in

    சுவாமி விவேகானந்தர் - 150: என் பங்களிப்பு

    Swami Vivekanandar - 150: En Pangalippu

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. சுவாமி விவேகானந்தருடன் எனது அனுபவங்கள் - பால கங்காதர திலகர்

    2. விவேகானந்தரை மீண்டும் நினைவில் இருத்துவோம் - கோபாலகிருஷ்ண காந்தி

    3. விவேகானந்தரும் காந்தியும் – ஜக்மோகன்

    4. காலம், தேசம் கடந்து நிற்கும் விவேகானந்தரின் அறைகூவல் - P. பரமேஸ்வரன்

    5. நூற்றைம்பதிலும் இளமை குன்றாத விவேகானந்தர் - எஸ். குருமூர்த்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ் 12/1/2013)

    6. J.D. செலிங்கர், லியோ டால்ஸ்டாய் மற்றும் சுவாமி விவேகானந்தர்

    7. ரமண மஹரிஷியும் சுவாமி விவேகானந்தரும்

    முன்னுரை

    தினமணி உதவி ஆசிரியரான திரு. வ.மு. முரளி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரது விவேகானந்தம் 150 என்ற இணைய தளத்திற்கு நான் ஆற்றிய சில எழுத்துப் பணிகளைத்தான் இங்கு கோர்த்து அளித்திருக்கிறேன். இந்திய வரலாற்றின் மாபெரும் தலைவர்களான திருவாளர்கள். பால கங்காதர திலகர், P. பரமேஸ்வரன், ஜக் மோகன் ரெட்டி, கோபால கிருஷ்ண காந்தி, S. குருமூர்த்தி போன்றவர்களைத் தவிர வேறு சிலர் சுவாமி விவேகானந்தர் பற்றியும், அவருடன் இருந்த அனுபவங்கள் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து தரும் வாய்ப்பை அவர் மூலம் நான் பெற்றேன். அந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருந்த சமயம், அவர் என்னிடம் தாங்கள் எங்களுக்குத் தற்போது மொழியாக்கம் மட்டும் செய்துகொண்டு இருக்கிறீர்களே, கட்டுரையும் எழுதலாமே என்றார். அதற்கு எனக்கு ரமண மகரிஷியின் படைப்புகள் பற்றித் தெரிந்த அளவிற்கு சுவாமி விவேகானந்தரது பற்றித் தெரியாதே என்றேன். அதற்கென்ன! அதற்கும் ஒரு காலம் வரும் என்று சொன்ன அவர் மூலமே அதுவும் ஒருநாள் வந்து சேர்ந்தது. அந்தக் கட்டுரையையும் இத்தொகுப்பில் காணலாம்.

    1. சுவாமி விவேகானந்தருடன் எனது அனுபவங்கள் - பால கங்காதர திலகர்

    தமிழாக்கம்: எஸ். ராமன்

    சிகாகோவின் உலக அரங்கில் நடந்த மதங்களின் பாராளுமன்றம் நிகழ்வுக்கு முன்னால், 1892-ம் ஆண்டு வாக்கில், ஒரு முறை நான் பம்பாய் நகரத்தில் இருந்து பூனாவிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். விக்டோரியா ரயில் நிலையத்தில் நான் அமர்ந்திருந்த ரயில் பெட்டிக்குள் ஒரு துறவி ஏறி உள்ளே வந்தார். அவரை வழியனுப்புவதற்காக அவருடன் சில குஜராத்தி அன்பர்கள் வந்திருந்தனர். அவர்கள் அந்தத் துறவியையும் என்னையும் அறிமுகப்படுத்திவிட்டு, பூனாவில் எனது வீட்டில் அவர் தங்கலாம் என்று அவரிடம் சொன்னார்கள். நாங்கள் பூனா போய்ச் சேர்ந்ததும், அவரும் அவ்வாறே சுமார் 8 அல்லது 10 நாட்கள் என்னுடன் தங்கியிருந்தார். அவரது பெயரைக் கேட்டபோது அவர் தான் ஒரு துறவி என்பதை மட்டுமே சொன்னார். பூனாவில் அவர் பொதுக்கூட்டங்கள் எதிலும் பேசவில்லை. வீட்டில் பேசும்போது அவர் எப்போதும் அத்வைதத் தத்துவத்தையும், வேதாந்தத்தையும் பற்றி மட்டுமே பேசுவார். அவர் தன்னைச் சுற்றிலும் உள்ள சமூகத்துடன் உறவாடுவதைத் தவிர்த்தார். அவரிடம் பணம் என்பது அறவே கிடையாது. ஒரு மான்தோல் விரிப்பு, ஒன்றிரண்டு ஆடைகள், மற்றும் ஒரு கமண்டலம் அவ்வளவே அவர் வசம் இருந்த உடமைகள். அவர் எங்காவது பயணித்தால் அவர் சேருமிடம் சென்று அடைவதற்கு வேண்டிய ரயில் டிக்கட்டை யாரோ ஒருவர் வாங்கிக் கொடுப்பார்.

    மராட்டிய மாநிலத்தில் உள்ள பெண்கள் தங்கள் முகத்தை துணியால் மூடும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இல்லை என்பதால் அந்தச் சமூகத்தின் உயர் மட்டத்தில் உள்ள கைம்பெண்களில் சிலராவது ஆன்மிக உணர்வைப் பரப்புவதிலும், நமது மதத்திற்குத் தொண்டாற்றுவதிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பதற்கு புத்த பிக்ஷுணி போல விருப்பம் கொண்டு விளங்கலாம் என்று சுவாமிஜி தனது ஆழ்ந்த நம்பிக்கையைத் தெரிவித்தார். உலகத்தைத் துறக்க வேண்டும் என்று ஒருவனுக்கு ஸ்ரீமத் பகவத் கீதை அறிவுறுத்தவில்லை; மாறாகச் செயலின் விளைவுகளில் பற்று வைக்காமல் செயலாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரையும் தூண்டுகிறது என்று என்னைப் போலவே சுவாமியும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

    ஹீராபாக்கில் வாராவாரம் கூடும் டெக்கான் கிளப்பில் நான் அப்போது ஓர் உறுப்பினராக இருந்தேன். ஒரு முறை நான் அங்கு சென்றிருந்தபோது என்னுடன் சுவாமியும் வந்திருந்தார். அன்று காலம் சென்ற காசிநாத் கோவிந்த் நாத் அவர்கள் ‘தத்துவம்’ பற்றிய உரை ஒன்றை மிகவும் நேர்த்தியாக நிகழ்த்தினார். அது பற்றி விளக்கம் எதுவும் கேட்பதற்கு அங்கு எவரும் இல்லை. ஆனால் சுவாமியோ எழுந்து நின்று, அன்று பேசிய பொருளின் மற்றைய அம்சங்களைப் பற்றி சரளமான ஆங்கிலத்தில் மிகவும் அழகான விளக்கங்கள் கொடுத்துப் பேசினார். அங்கு அவரது பேச்சைக் கேட்ட அனைவரும் அவரது மேதமையைப் பற்றிச் சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி நடந்த சில நாட்கள் கழிந்த பின் சுவாமி பூனாவில் இருந்து புறப்பட்டுப் போனார்.

    சுமார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து, மதங்களின் பாராளுமன்றக் கூட்டத்தில் அவருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியினால் அடைந்த உலகப் புகழுடன் சுவாமி இந்தியாவிற்குத் திரும்பினார். அதன் பின் அதே போன்று இங்கிலாந்து, மற்றும் அமெரிக்காவிற்குச் சென்று மேலும் கூடிய புகழுடன் வந்தார். அவர் எங்கு சென்றாலும் அவரைப் போற்றி வரவேற்றார்கள். அதற்கு அவரும் தகுந்த முறையில் பதில் உரைகள் தந்து, தன்னை வரவேற்றவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். அவரது புகைப்படங்கள் தினசரிப் பத்திரிகைகளில் வெளியாயின. அவைகளைப் பார்த்ததும் எனக்கு என் வீட்டில் தங்கிய அதே சுவாமிதான் அவர் என்று அந்த உருவ ஒற்றுமைகளில் இருந்து தெரியவந்தன. எனது ஊகம் சரிதானா என்று அறிய விரும்பி அவருக்கு நான் கடிதம் ஒன்றை எழுதி, அவர் கல்கத்தாவிற்குத் திரும்பிப்போகும் வழியில் பூனாவிற்கும் வரவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டேன். அதற்கு சுவாமியிடம் இருந்து என் வீட்டில் தங்கியது அவர்தான் என்று ஆர்வத்துடன் பதில் வந்தது. ஆனாலும் தன்னால் அப்போது பூனாவிற்கு வர இயலவில்லை என்றும் தனது கடிதத்தில் அவர் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். அந்தக் கடிதம் தற்போது கிடைக்கவில்லை. 1897-ம் ஆண்டில் கேசரி நீதிமன்ற விசாரணை நடந்து முடிந்ததும், தேவையற்றது என்று எறியப்பட்ட பல தனியார் மற்றும் பொதுமக்களுடன் தொடர்புகொண்டு எழுதப்பட்ட பல கடிதங்களுடன் அதுவும் அழிந்து போயிருக்கலாம்.

    அதன் பின், ஒரு முறை கல்கத்தாவில் நடந்த

    Enjoying the preview?
    Page 1 of 1