Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Seenupayal
Seenupayal
Seenupayal
Ebook241 pages2 hours

Seenupayal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Seenupayal, Devan, Tamil, Humour, Short Stories, ebook
Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580126604383
Seenupayal

Read more from Devan

Related to Seenupayal

Related ebooks

Related categories

Reviews for Seenupayal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Seenupayal - Devan

    http://www.pustaka.co.in

    சீனுப்பயல்

    Seenupayal

    Author:

    தேவன்

    Devan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சீனுப்பயல்

    2. பேஷான வீடு

    3. வரும்படி எங்கே?

    4. அதோ நட்சத்திரம்!

    5. பொழுது விடிந்தால்!

    6. நிருபர் எழுதிய கடிதம்

    7. புரிகிறதா, பாருங்கள்!

    8. ஞாபகம் இருக்குமா?

    9. மானேஜரின் மூக்கு

    10. வக்கிரசாமியின் கொலை

    11. ஒரு நல்ல யோசனை

    12. அறியாமல் பிடித்த மோகம்

    13. ஊசி வெடி சமாசாரம்

    14. செப்பிடு வித்தை

    15. படகோட்டி சொன்ன கதை

    16. செக்கு சமாசாரம்

    17. வீரபத்திரன் பஸ் சர்வீஸ்

    18. எதிர்பாராத பலன்

    19. மிஸ் கோகிலா

    20. கோபம் வருகிறது

    21. நானும் இருக்கிறேனே!

    22. என்ன அவசரம்?

    23. யோசித்துப் பாருங்கள்!

    24. வேகம் வேண்டுமா?

    25. என்ன வயசு?

    26. இது ஒரு வழக்கம்

    27. போனதும் வந்ததும்

    28. ஒரு யுத்த ஜோஸ்யம்

    29. இந்த மழையும் வெயிலும்

    30. கை கொட்ட வேண்டாம்?

    31. நிருபர் செய்த வேலை

    32. ஸ்பெயின் யுத்தம்

    33. என்ன ஐயா சொல்கிறீர்?

    34. குழந்தைகள்

    5.5.2002 அன்று தேவன் அறக்கட்டளையினரால் கொண்டாடப்பட்ட - தேவன் நினைவு விழாவில் - கெளரவிக்கப்பட்ட

    ஓவியர் ஸாரதி

    அமரர் தேவன் அறக்கட்டளை

    தேவன் நினைவு விழா

    ஆனந்த விகடனில் தேவன் அவர்கள் பொறுப்பாசிரியராக இருந்த சமயம் - 1951இல் நான் ஓவியனாக விகடனில் சேர்ந்தேன். எனக்கு பல சந்தர்ப்பங்களைத் தந்து நான் ஒரு சிறந்த ஓவியனாக வருவதற்கு மிகவும் உதவினார். விகடனில் சிறுவர் மலர் பகுதியில் தொடர் கதை, சிறுவர் கதைகளுக்கு படங்கள் வரைந்தேன். தேவன் அவர்கள் எழுதிய சிறுவர் கதைகளுக்கும் படங்கள் வரையும் வாய்ப்பு கிடைத்தது.

    நான் எழுதும் ஜோக்குகளில் நன்றாக இருப்பதைப் பாராட்டுவார். ஆசிரியர் என்ற பெரிய பதவியில் தலை சிறந்த எழுத்தாளராக இருப்பர் என்றாலும் மிக எளிமையாகப் பழகுவார். மிக இளகிய மனம் உடையவர். ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியர் பதவியை கடமையுடனும், கண்ணியத்துடனும் கட்டிக் காத்த உயர்ந்த பண்பாளர்.

    ஒரு சமயம் தீபாவளி மலருக்காக அவசரமாக படம் தேவைப்பட்டது. அந்தப் படத்தை நான் வீட்டில் வரைந்தேன். மறுநாள் காலை என் வீட்டிற்கு வந்து படத்தை வாங்கிக் கொண்டு காரியாலயத்துக்குச் சென்றார். ஆசிரியர் பணியில் அயராது உழைப்பவர். பொறுப்பாசிரியர் பதவியை அவரைப் போல பொறுப்புடன் யாராலும் வகித்திருக்க முடியாது.

    அந்தக் காலத்து எழுத்தாளர்களான ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார் - போன்றவர்கள் எழுதிய துப்பறியும் கதைகளுக்குப் பிறகு, தேவன் அவர்கள் துப்பறியும் கதைகளை, அவரின் தனி பாணியில் எழுதினார். துப்பறியும் சாம்பு, CID சந்துரு, ஜஸ்டிஸ் ஜகந்நாதன் என்று பல கதைகளை எழுதினார். வாசகர்களால் மிகவும் பாராட்டப்பட்ட பிரபலமான கதைகள் இவை. மற்றும் லக்ஷ்மி கடாட்சம், கோமதியின் காதலன், மைதிலி, மிஸ். ஜானகி, ராஜத்தின் மனோரதம் என்று எத்தனையோ கதைகளையும் சொல்லலாம்.

    துப்பறியும் சாம்புவில் சுமார் 50 கதைகளை எழுதி வாசகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். துப்பறியும் சாம்பு என்ற நாடகம் அப்போது பிரபலமாக இருந்தது, அனைவரையும் கவர்ந்தது. அவர் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கக் கூடியவர்களாகவே நமக்குத் தோன்றும். அவரின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை கதைகளுக்குத் தகுந்தாற் போல, தத்ரூபமாக ஓவியங்கள் வரைந்தார் எனது அருமை நண்பர் கோபுலு. அந்த ஓவியங்களும், கதைகளும் நம் மனதைவிட்டு என்றும் அகலாதவை.

    தேவன் அவர்கள் - ஆர்.எம், செல்லம், ஜடாயு, சம்வாதி - என்ற பல புனை பெயர்களிலும் எழுதி வந்தார். அவர் கதைகளில் திருச்செந்தூர் முருகனைப் பற்றி குறிப்பிடுவார். தெய்வ பக்தி மிக்க மனத்தை உருக்கும் இடங்களை மிக நன்றாக எழுதுவார். அவர் கட்டிய வீட்டிற்குக்கூட சண்முக விலாசம் என்று பெயர் வைத்திருந்தார். கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்கு சோதனைகள் இருக்கும், ஆனால் கடைசியில் மங்களகரமாக கதையை முடிப்பார்.

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மலேயா, சிங்கப்பூர் போன்ற கிழக்கு நாடுகளுக்கு சென்று வந்தார். அதுபற்றி தமது பிரயாண அனுபவத்தை ஐந்து நாடுகளில் அறுபது நாள் என்று பயணக்கட்டுரையில் மிகத் தெளிவாக எழுதினார். அப்போது வெளிநாடு செல்பவர்கள் முன்கூட்டியே என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக எழுதினார். வெளிநாடு செல்பவர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தது. அதே போல ராஜத்தின் மனோரதம் என்ற கட்டுரையில் புது வீடு கட்டுவதில் உள்ள பிரச்னைகள் அதில் உள்ள நுணுக்கங்களை எல்லாம் புரிந்துகொள்ளும்படி விவரமாக எழுதினார்.

    அவர் ஆனந்த விகடனில் பணியாற்றிய காலம் தேவன் அவர்களின் சகாப்தம் என்றே சொல்லலாம். பல எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்து அவர் வழிகாட்டியாகவும் இருந்தார். அவருடைய எழுத்தாற்றலில் முத்திரை பதித்தார். இந்தக் காலத்திலும் அவரின் கதைகளை நாம் படிக்கும்போது நம்மிடையே அவர் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.

    இந்த ஆண்டுக்கான தேவன் நினைவுப்பதக்கம் பெற என்னைத் தேர்ந்தெடுத்து விழாவை சிறப்பாக நடத்திய அமரர் தேவன் அறக்கட்டளையினருக்கும், குறிப்பாக எஸ். விசுவநாதன் (சாருகேசி) அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனக்கு சுமார் 14-15 ஆண்டுகள் துக்ளக்கில் கார்ட்டூன்கள் வரைய வாய்ப்பளித்து முரளி என்ற புனைபெயரையும் சூட்டி என்னை ஆதரித்த துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். அவருக்கு இருக்கும் பல முக்கியமான வேலைகளுக்கிடையே எனக்காக அவர் இந்த விழாவில் கலந்து கொண்டதை எனது பாக்கியமாகவே கருதுகிறேன்,

    நிறைவாக, விழாவுக்கு வந்து சிறப்பித்த நண்பர்கள், எழுத்தாளர்கள் மற்றும் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வணக்கம்

    ஸாரதி

    *****

    1. சீனுப்பயல்

    கவனித்துப் பார்த்ததில் சீனுப் பயலுக்கும் அவனுடைய தாயாருக்கும் ஏதோ வாக்கு வாதம் நடந்திருக்க வேண்டுமென்றே தோன்றிற்று. சீனுவின் அப்பா, ஆபீசிலிருந்து அப்போதுதான் திரும்பி வந்தவர், குல்லாவைக் கழற்றி வைத்துவிட்டுத் தம் இளவரசையும் பட்ட மகிஷியையும் மாறி மாறிப் பார்த்தார்.

    ஏன், என்ன விசேஷம்? என்று கேட்டார்.

    சீனுப் பயலோட உண்டிதான்! என்றாள் மனைவி.

    அதற்கென்ன வந்தது?

    நீங்கள் தான் பாருங்களேன்!

    சுந்தரமய்யர் அதைப் பார்த்தார். அந்தத் தகர உண்டியின் வாய் நன்றாகத் திறக்கப்பட்டுக் கீழே கிடந்தது. உள்ளே காலி.

    ஏன் இப்படிப் போச்சு இது? என்று கேட்டார் சுந்தரம்.

    எல்லாம் 'ஸ்குரு டிரைவர்' செய்த வேலைதான்.

    எங்கே, இப்படி எடு, நான் பார்க்கிறேன்!

    தாயார் உண்டியையும் ஸ்குரு டிரைவர் ஒன்றையும் புருஷன் பக்கத்தில் நகர்த்தி வைத்தாள். அவர் அதை விறைக்கப் பார்த்தார்.

    யார் செய்த காரியம் இது?

    சீனப் பயல் தனக்குத் தெரியாதென்று தலையை ஆட்டினான்.

    உன் சிநேகிதன் யாராவது இங்கே வந்தானாடா?

    முத்துவும் பாலுவும்தான் வந்திருந்தார்கள். அவர்களெல்லாம் எடுக்க மாட்டார்கள் என்று தாயார் சொன்னாள்.

    ஊம் ஹும்! என்றார் அய்யர். சீனுவைப் பார்த்து முறைத்து, அவர்களைத் தனியாக விட்டிருந்தாயாடா இங்கே? என்று அதட்டிக் கேட்டார்.

    சித்தே நாழி விட்டிருந்தேன், அப்பா! என்றான் சீனு.

    கேட்டதற்குப் பதில்! தனியாக இருந்தார்களா?

    ஒரே ஒரு நிமிஷம் இருந்தார்கள் என்றான் சீனு.

    சுந்தரம் வெளியில் கிளம்புவதுபோல் திரும்பினார்.

    எங்கேயாவது போகிறீர்களா? என்ன? என்று கேட்டாள் மனைவி.

    ஆமாம்.

    எங்கே?

    தன்னாலே தெரியும். - வாசற் கதவைத் திறந்து கொண்டு, அந்த உண்டியில் எவ்வளவு இருந்தது? என்று கேட்டார்.

    ஏழு தம்பிடி.

    சுந்தரம் வேகமாக நடந்து, அடுத்த தெருவை அடைந்து, முனையிலிருந்த மிட்டாய்க் கடைக்கு வந்தார். மிட்டாய்க் கடை நடேச அய்யர் சௌக்கியமா ஐயர்வாள்? என்று கேட்டார்.

    இங்கே முத்துப்பயல் இன்றைக்குப் பட்சணம் வாங்கினானா?

    இல்லை. இரண்டு நாளாய் ஒன்றும் வாங்கவில்லை.

    அந்த பாலுப் பயல்?

    அதுவா! ஒரு மாசமாச்சு அவன் தம்படியைப் பார்த்து!

    சரி, நம்ம வீட்டுப் பயலாவது வந்தானா இங்கே?

    வந்தாப்போல இருக்கே, சாயந்திரம்? நம்ம கடைக் 'கரம் பக்கவடாம்'னால் அவனுக்கு உசிருன்னா! வாயிலே போட்டால் தண்ணியாய்க் கரையும். ஒரு பொட்டலம் கட்டித் தரட்டுமா?

    சுந்தரம் பதில் சொல்லாமல் அங்கிருந்து திரும்பினார்.

    வாசல் கதவைக் காலாலேயே உதைத்துத் திறந்தார். பிறகு காலாலேயே உதைத்து மூடிவிட்டு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டார். ஒரு உறுமல் உறுமினார். வேடிக்கையாக இருக்கிறது! என்றார்.

    எது? என்று கேட்டாள் மனைவி.

    சுந்தரம் பதில் சொல்லாமலேயே உடைந்துபோன உண்டியையும், உளியையும் எடுத்து, விளக்கடியில் கூர்ந்து கவனித்தார். சற்று நேரம் நிசப்தம். உளியின் முனையில் சிகப்பாய், குண்டூசி பரிமாணத்துக்கு ஒரு கறை தெரிந்தது. இன்னும் கவனித்தார். அது ரத்தம்தான், சந்தேகமில்லை. அடே சீனு! இங்கே வா! என்று கூப்பிட்டார்.

    சீனுப் பயல் வந்து நின்றான்.

    உன் கையை இப்படி நிட்டு!

    ஓஹோ! கையில் காயம் பட்டதோ, ஓஹோ! என்று கேட்டார் சுந்தரம். சீனுப் பயல் திருதிருவென்று விழித்தான்.

    எலே! நீதானே உண்டியை உடைத்தது? என்று அதட்டினார் சுந்தரம். சீனுப் பயல் இன்னும் அதிகமாகவே விழித்தான்.

    அடே! நான் என்ன முட்டாளாடா, முத்துவின் மேலும் பாலுவின் மேலும் சந்தேகப்படுவதற்கு! - என் பயல், என் பிள்ளையே இப்படிப் பண்ணியிருக்கிற போது-

    சுந்தரம் எழுந்தார். சட்டையை முழுக் கைக்கு மேல் மடக்கி விட்டுக் கொண்டார்.

    சீனு! மாடிக்குப் போய் பிரம்பை எடுத்துக் கொண்டு வா!

    மாடியிலே போய்ப் பிரயோசனம் இல்லை. அங்கே பிரம்பு இல்லை, அப்பா! என்றான் சீனுப் பயல் அங்கிருந்து நகராமல்.

    ஓஹோ...! அது ஏன் அங்கே இல்லை

    நான் தான் அதை இன்னிக்குக் காலம்பர உடைச்சேன் என்றான் சீனு.

    அவன் தகப்பனார் குனிந்து யோசனையில் ஆழ்ந்திருக்கும் சமயம், அவர் கண்ணில் படாமல் ஒரு புன்னகை செய்தான் அந்தப் போக்கிரி.

    அதற்காகத்தான் அப்பா, இந்த உண்டியை உடைத்தேன்.

    எதற்காக?

    ஒடிச்ச பிரம்புக்கு காசை உன்னிடம் கொடுத்து விடலாமென்றுதான். இதோ அஞ்சு தம்பிடி இருக்கு, எடுத்துக்கோ! அடுத்த மாசம் இன்னும் ரெண்டு தம்பிடியும் சேர்த்துக் கொடுத்துடறேன் - நீ அப்புறம் வேறு பிரம்பு வாங்கிக் கொள்ளலாம்.

    இப்போது சீனுப் பயல் குடு குடுவென்று மாடிக்கு ஓடினான்.

    இரண்டு நிமிஷம் கழித்துப் பார்த்தால், சுந்தரம் அய்யர் தம் நாற்காலியில் உட்கார்ந்து இதையெல்லாம் பற்றி யோசனை செய்து கொண்டிருக்கும் போதே, மாடியில் சீனுப் பயல். அவசர அவசரமாய் அவனுடைய அப்பாவுடைய பிரம்பைத் துண்டு துண்டாய் ஒடித்துக் கொண்டிருந்தான்.

    *****

    2. பேஷான வீடு

    இன்று வரையில் வீட்டைப் பற்றி வெளியாகியிருக்கும் கட்டுரைகளையெல்லாம் படித்துப் பார்த்தேன். வீடு மாறுவதில் ஹாஸ்யங்கள், வீட்டுக்காரரின் அட்டூழியங்கள், பூனை எலி உபத்திரவங்கள் இவற்றைப் பற்றி அந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றனவே யன்றி, நீங்கள் சௌக்கியமாக இருப்பதற்கு உங்கள் வீடு எப்படி இருக்க வேண்டுமென்று ஒரு கட்டுரைகூட இல்லை என்று சொல்லுவேன். அந்தக் கட்டுரையை நானே எழுதிவிடுகிறேனே! என்று நீங்கள் முன் வருவதற்குள் நான் அதை இதோ எழுதியே விட்டேன். படித்துப் பார்த்து, எல்லாம் நீங்கள் நினைத்தபடியே தத்ரூபமாக வெளியாகியிருப்பதைக் கண்டு மகிழுங்கள்.

    வீட்டைப் பற்றி எழுதுவதற்கு நீங்கள் என்ன இன்ஜினீரிங் பாஸ் செய்திருக்கிறீர்களோ? என்று கேட்கிறாள் என் மனைவி. அதற்கு நான், சரிதான் போ! உங்கப்பா கொடுக்கிறேன். கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வந்த வீட்டைக் கொடுத்தபாடில்லை. அதற்குள் வீட்டு விஷயமாகப் பேச வந்துட்டாயாக்கும்! என்று மிரட்டித் துரத்தி விட்டேன். இனி தொந்தரவு எதுவுமின்றி கட்டுரையைத் தொடங்குகிறேன்.

    இப்போது இருக்கும் வீடுகள் ஒன்றாவது சரியாகக் கட்டப்படவில்லை. சகலவிதமான அசெளகர்யங்களும் குவிந்து கிடக்கின்றன. பாருங்களேன், முதலில் ஒரு வாசற் படி, அப்புறம் ஒரு கதவு, அந்தக் கதவைத் தட்டித் திறக்க வேண்டும்! அதைத் தாண்டினால் ஒரு ரேழி. ரேழியைத் தாண்டின் அப்புறம் தான் மாடிப்படி. இவ்வளவு உபத்திரவங்கள் இல்லாமல் வீட்டில் நுழைந்து காலை வைத்தவுடன் மாடிப்படியாக இருந்தால் எவ்வளவு சிரமம் குறையும்?

    ஆனால் என்னுடைய பிளான்களே வேறு. நான் இருக்கப் போகிற வீட்டில் மாடிப் படியே இருக்கக் கூடாதென்று தீர்மானித்திருக்கிறேன். ஏனென்றால், வெளியில் போய்விட்டுக் களைப்பாய் வீடு திரும்பினால், அப்பாடா என்று படுத்துக் கொள்ளத் தோன்றுமல்லவா? அப்போது மாடிப்படி ஏறிப்போய்ப் படுக்கையறைக்குள் நுழைவதற்குப் பதிலாக, நேராகப் படுக்கையறைக்குள்ளேயே நுழைந்து விட்டால் எவ்வளவு செளகரியமாக இருக்கும்! ஆகவே, படுக்கை அறை, சமையல் அறை இவை இரண்டையும் தவிர மற்ற அறைகளை எல்லாம் மாடிமேல் தூக்கிப் போடுங்கள் - உங்கள் மனைவியின் அறை உள்பட.

    இதில் ஒரு சின்ன அசந்தர்ப்பம் இருக்கிறது. நாள் தவறாமல்

    Enjoying the preview?
    Page 1 of 1