Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sriman Sudarsanam
Sriman Sudarsanam
Sriman Sudarsanam
Ebook390 pages3 hours

Sriman Sudarsanam

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

வாழ்க்கையின் சிக்கலான தருணங்களைக்கூட நகைச்சுவையாகச் சொல்லும் தேவனின் முக்கியமான படைப்புகளுள் ஒன்று ஸ்ரீமான் சுதர்சனம்.

குடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் -இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது? குமாஸ்தா சுதர்சனம் எப்படி ஸ்ரீமான் சுதர்சனமாகிறான்?

ஸ்ரீமான் சுதர்சனமாக அவன் படும் கஷ்டங்களும், குடும்பத்தினரிடம் மாட்டிக் கொண்டுபடும் அவஸ்தைகளும் தேவனின் நடையில் ஹாஸ்யமாக வந்து விழுகின்றன.

பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்.

Languageதமிழ்
Release dateJul 21, 2019
Sriman Sudarsanam

Read more from Devan

Related to Sriman Sudarsanam

Related ebooks

Reviews for Sriman Sudarsanam

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sriman Sudarsanam - Devan

    http://www.pustaka.co.in

    ஸ்ரீமான் சுதர்சனம்

    Sriman Sudarsanam

    Author:

    தேவன்

    Devan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. முதல் படி

    2. இரண்டாம் படி

    3. எதிர்பாராத சம்பவங்கள்

    4. மூன்றாம் படி

    5. தவிர்க்க முடியாத சில சம்பவங்கள்

    6. நாலாம் படி

    7. ஒதுக்க முடியாத நிர்பந்தங்கள்

    8. ஐந்தாம் படி

    9. கேட்க முடியாத சில வார்த்தைகள்

    10. சகிக்க முடியாத சில சந்தர்ப்பங்கள்

    11. ஆறாம் படி

    12. அடக்க முடியாத சில உணர்ச்சிகள்

    13. ஏழாம் படி

    14. நிறுத்த முடியாத சில காரியங்கள்

    15. காணக் கிடைக்காத இரு காட்சிகள்

    16. எட்டாம் படி

    17. எடுக்க முடியாத இரு நடவடிக்கைகள்

    18. கடைசிப் படி

    தேவனுடன் ஏழு நாள்

    தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

    முன்னம் நின் அன்னை அமுதூட்டி,

    மையிட்டு முத்தமிட்டுக்

    கன்னமும் கிள்ளிய நாளல்லவே

    என்னைக் காத்தளிக்க,

    அன்னமும் மஞ்ஞையும்போல இரு

    பெண்கொண்ட ஆண்பிள்ளை நீ!

    இன்னமும் சின்னவன் தானோ?

    செந்தூரில் இருப்பவனே

    என்று ஒரு பாட்டு. ஆம். அந்தத் திருச்செந்தூர் அலைவாய்க் கரையிலே இருக்கும் அந்த ஷண்முக நாதனைக் காணச் சென்ற பக்தன் ஒருவன் பாடிய பாட்டுத்தான். இந்தப் பாட்டைச் சென்னையில் சில வருஷங்களுக்கு முன், ஒரு கூட்டத்தில் சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு.

    துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கிறான் ஒரு பக்தன். அவன் நல்ல கவிஞன். முருகன், குருபரன என்றால் அழகன், இளைஞன் என்று அறிவான். ஆதலால் தன் குறைகளை எல்லாம் அந்த முருகனிடம் சொல்ல ஆசைப் பட்டாலும், அவன் மிகவும் இளைஞன் ஆயிற்றே! இப்போதெல்லாம் தன் தாயின் மடியில் இருந்து கொஞ்சி மகிழ்கின்ற பருவந்தானே, இன்னும் கொஞ்சம் பெரியவனாக வளரட்டுமே என்று காத்தே இருக்கிறான். இப்படி நினைத்துக் கொண்டிருக்கிற பக்தன், அன்பர் ஒருவருடன் அவர் அழைப்பிற்கு இணங்கி திருச்செந்தூர் செல்கிறான். ஷண்முக விலாசத்திற்குள்ளேயே நுழைகிறான். அங்கே, ஒன்றுக்கு இரண்டாக வள்ளி தெய்வயானை என்னும் துணைவியர் சமேதராக, விலை உயர்ந்த நகைகள், ஆடைகள் எல்லாம் அணிந்து மிக்க அலங்காரத்துடன் நின்று கொண்டிருக்கும் அந்த ஷண்முகநாதனையே காண்கின்றான். அப்போது கவிஞன் உள்ளத்தில் ஒரு ஆங்காரமே பிறக்கிறது. 'நம் குறைகளை எல்லாம் அறியமாட்டான் இவன்; அறிகின்ற பருவம் இல்லை என்று ஏமாந்து போய் விட்டோமே, ஆசாமி பெரிய அமுத்தலான ஆசாமியாக இருப்பான் போலிருக்கிறதே' என்று எண்ணுகிறான். அவனையே கேட்கிறான் ஒரு கேள்வி, 'இன்னமும் நீ சின்னவன் தானா?' என்று.

    இந்தப் பாட்டை அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்த எத்தனையோ பேர் கேட்டார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரே ஒருவரை மட்டும் இந்தப் பாட்டு ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது. கூட்டத்தை விட்டுத் தன் வீட்டிற்கு, ஆம், ஷண்முக விலாஸம் என்று விலாசமிட்ட வீட்டிற்குச் செல்வதற்குள் குறைந்தது இருபது தடவை சொல்லிச் சொல்லி மனனம் பண்ணியிருப்பார்; மகிழ்ந்திருப்பார். அத்துடன் நிற்கவில்லை அவர். சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் பாட்டைத் தன் கதைகளில் நுழைத்தார்; கட்டுரைகளில் நுழைத்தார். பேச்சுக்களில் நுழைத்தார். அப்படிப் பாட்டோடு பாட்டாக, ஷண்முக நாதனோடு ஷண்முக நாதனாக, தேவனோடு தேவனாக இணைந்து போனவர்தான் அமரர் மகாதேவன்.

    அதற்கு முன், ஏனோ தானோ என்று இலக்கிய உலகில் நண்பராக இருந்த நாங்கள் இருவரும், அந்த நாள் முதல் அத்தியந்த நண்பர்கள் ஆனோம். அது காரணமாகவே அவர் தஞ்சைக்கு வந்து என்னோடு ஒருவாரம் தங்கி, என்னோடு ஊர் ஊராக கோயில் கோயிலாகச் சுற்றினார். அவரது அந்தரங்கங்களை எல்லாம் சொன்னார். இந்த ஒரு வாரமும் எவ்வளவோ இன்பமாகக் கழிந்தது இருவருக்கும்.

    நண்பர் தேவன் நல்ல கதை எழுதுபவர் என்று பல வருஷங்களாகத் தெரியும். ஆனால் அவர் எவ்வளவு குழந்தை உள்ளம் படைத்தவர், பண்பாடு நிறைந்தவர், சிறந்த நண்பர் என்பதை அந்த ஒரு வாரம் என்னுடன் அவர் தங்கி இருந்த போதுதான் தெரிந்து கொண்டேன். அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரை மகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம் சொன்னபோது, அவர் சொன்னார்: 'ஆம் அந்த மாஸ்டர் ராஜாமணிதான் ஸார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான் அவன் தான் என்னை ஆசிரியர் 'கல்கி'யிடமும் திரு. வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்' என்றார்.

    மேலும் சொன்னார்: 'அந்த கட்டுரையைப் படித்த கல்கிக்கு ஒரு சந்தேகம், அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அவர் அருகிலேயே உட்கார்ந்து எழுதும்படி சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார்: என்றார்.

    இப்படி, தான் ஆனந்த விகடனில் வேலை ஏற்று, கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி எழுதித் தள்ளி, நல்ல எழுத்தாளனாக ஆசிரியர் கல்கியிடம் பயிற்சி பெற்றதை எல்லாம் கதை கதையாகச் சொன்னார்.

    அவர் எழுதியதில் அவருக்கு மிகவும் பிடித்தமானது 'அதிசயத் தம்பதிகள்' தான். அதற்குக் காரணம் அந்த அதிசயத் தம்பதிகள் வாழ்வோடு அவருடைய வாழ்வும் பின்னிக் கிடந்ததுதான். ஆனால் அதிசயத் தம்பதிகளைச் சிருஷ்டி செய்ய அவருக்கு உறுதுணையாக இருந்த அவர் அருமை மனைவி ராஜி, அவரை ஆறாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்தாள். அந்த ராஜியை நினைந்து நினைந்து பத்து வருஷ காலம் உருகியிருக்கிறார்.

    அவருக்கு ஒரு குறை, தனக்குக் குழந்தை இல்லையே என்று. நாகப்பட்டினம் செளந்தரராஜப் பெருமாள் கோயிலுக்குப் போயிருந்த போது அங்குள்ள சந்தான கோபாலனை மடிமீது கிடத்தி, மகப்பேறு வாய்ப்பதற்காக அந்தப் பெருமானை அவர் வேண்டிக் கொண்ட காட்சி என் உள்ளத்தைவிட்டு என்றுமே அகலுவதில்லை. எத்தனையோ பாத்திரங்களின் உள்ளங்களுக்குள் எல்லாம் நுழைந்து, அந்தப் பாத்திரங்களின் ஆசாபாசங்களை எல்லாம் சாங்கோ பாங்கமாக வாசகர்களுக்குக் கூறும் எழுத்தாளர் இத்தனை குழந்தை உள்ளம் படைத்தவராக இருக்கிறாரே என்று எண்ணி எண்ணி நான் மகிழ்வதுண்டு. பல வருஷங்களுக்கு முன் ராஜியின் பிள்ளை என்று ஒரு தொடர் எழுதினார். 'இதை எப்படி எழுதினீர்' என்று கேட்டேன். சொன்னார்: என் மனைவி ராஜி இருந்து, அவள் பிள்ளையைப் பெற்றெடுத்து என் கைகளில் கொடுத்திருந்தால் அந்தப் பிள்ளை எப்படி இருந்திருப்பான், அந்தப் பிள்ளையை எப்படி நான் கொஞ்சியிருப்பேன் என்ற என் கற்பனையில் பிறந்தவன்தான் 'ராஜியின் பிள்ளை' என்றார்.

    இதைக் கேட்க, ஐயோ பாவம் ராஜி மறைந்து பத்து வருஷங்கள் கடந்தபின் திரும்பவும் மணம் முடித்து மகப் பேறு விரும்பி நின்ற இந்தத் தேவன், அந்தத் தாபம் தீராமலேயே மறைந்தாரே" என்று எண்ணுகிறபோது, அவர் முழுக்க முழுக்க நம்பிய அந்த ஷண்முகநாதன் பேரில் எனக்கு எவ்வளவு கோபம்.

    ஆனால், நண்பர் தேவன் அந்த ஷண்முகநாதனிடம் கொண்டிருந்த நம்பிக்கையைக் கடைசிவரை இழக்கவில்லை என்பதைப் பார்க்கிறோம். அவருடைய லட்சுமி கடாட்சம் என்ற கதையிலே. கதாநாயகி காந்தாமணி கொழுத்த பணக்காரனும் தூர்த்தனுமான வேணு கோபாலன் கையில் சிக்கிக் கொள்கிறாள். அப்போது அவள் கையிலிருந்து தப்பிக்க அவள் உபயோகிக்கும் ஆயுதம், அந்த கந்தசஷ்டி கவசமே.

    பெண்களைத் தொடரும் பிரமாட்சதரும்

    அடியனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய்

    என்று உருப்போட, உருப்போட வேணுகோபாலனது நண்பர் சிங்காரம் வந்து இடை நின்று காந்தாமணியை மீட்கிறார் என்று கதையை நடத்தும் முறையை அறிந்தால், தேவனது முருக பக்தி எத்தனை அழுத்தமானது என்று தெரியும். அது காரணமாகவே தன் கதைகளில் எல்லாம், திருச்செந்தூர் ஷண்முகனையும் திருத்தணி முருகனையும், வடபழனி ஆண்டவனையும் நம்பிக்கைக்கு உரிய பாத்திரங்களாகக் கொண்டு வந்து நிறுத்தினார்.

    அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது லட்சுமி கடாட்சம், அவர் எழுதியதில் எனக்குப் பிடிக்காதது சி. ஐ. டி. சந்துரு, இதை அப்பட்டமாகவே சொன்னேன் அவரிடம், ஆனால் அவரோ, 'ஆம், அது உங்களுக்குப் பிடிக்காதுதான். அது உங்களுக்கு எழுதப் பட்டதல்வே! அதையும் படிப்பதற்கு என்று ஒரு சாரார் இருக்கிறார்களே! அவர்களுக்காக நான் எழுத வேண்டாமா?' என்று சொல்லி என்னை மடக்கினார். அவர் எழுதிய எத்தனையோ கதைகள் அமரத்துவம் வாய்ந்தவை. அந்தக் கதைகளை, அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களை, எப்படிக் கற்பனை பண்ணுகிறார் என்பதை என்னுடனிருந்த போது அறிந்தேன்.

    வெடுக் வெடுக்கென்று துடுக்காகப் பேசும் கோபிநாத் என்று ஒரு நண்பர். வீட்டுக்கு வரும் நண்பர்களை அன்போடு உபசரிக்கும் இந்திரா என்று ஒரு பெண்மணி. பெரியவர்கள் பேசும்போது இடையிலேயே விழுந்து பேசும் தம்பி என்று ஒரு பையன். இத்தனை பேரையும் தன் கதைகளுக்கு உரிய கதாபாத்திரமாக ஆக்கிவிடுகிறார் சுடச்சுட. அவர்கள் நினைவு தன் உள்ளத்திலிருந்து மறையும் முன்பே ஏன், கும்பகோணத்தை அடுத்த கோட்டூரிலே காவிரி உத்தரவாகினியாக ஓடுகிறது என்று அங்கு ஒரு முழுக்குப் போட்டால், அந்தச் சம்பவத்தையும் ஒரு கதையில் நிகழும் நிகழ்ச்சியாகவே சித்தரித்து விடுகிறார். தன் முன் நடமாடும் பாத்திரங்கள், நடக்கும் நிகழ்ச்சிகள்

    எல்லாவற்றையும் தத்ரூபமாகக் காட்டும் ஆற்றல் அவரிடம் நிறைந்திருந்தது. இல்லாவிட்டால் ஐந்து நாடுகளில் அறுபது நாள் சுற்றிவிட்டு அதைப்பற்றிப் பன்னிரண்டு மாதம் அழகு அழகாக எழுத முடியுமா?

    எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் எல்லாம் எனது நண்பர்கள். எத்தனையோ பெரிய கதாசிரியர்கள் எல்லாம் எனக்கு வேண்டியவர்கள். இத்தகைய பெருமக்களில் பலர், பழகுவதற்கு உரிய மனிதப் பண்பு உடையவர்களாக இருந்ததில்லை. கதாசிரியனாக, பிரபல பத்திரிகையின் நிர்வாக ஆசிரியனாக இருந்த நண்பர் ஒருவர் நல்ல பண்புகள் நிறைந்தவராகவும், குழந்தை உள்ளம் படைத்தவராகவும் இருக்கிறாரே என்பதைத்தான் அவர் என்னுடன் தங்கிய ஏழு நாட்களில் கண்டேன். அவர்தான் அருமை நண்பர் தேவன்.

    சென்ற நான்கைந்து மாதமாக, அவர் படுக்கையில் இருக்கும்போதெல்லாம் மாதமொரு முறை சென்னை செல்ல வேண்டியிருந்தது. சென்ற போதெல்லாம் அவரைப் போய்ப் பார்த்தேன். கடைசியாக நான் அவரைப் பார்த்தது 26-4-57ல். அன்று அவரது முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. படுக்கையிலே கிடந்தாலும் உடல் நலம் பெற்று வருவதாக அறிந்தேன். எவ்வளவோ பேசினோம். சில மாதங்களுக்கு முன் நான் அனுப்பிய விநாயக ஸ்தோத்திரங்கள் என்ற சம்ஸ்கிருத நூலைப் படித்துவிட்டதாகவும், அதிலுள்ள விஷயங்களை வைத்து ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். மிக்க சந்தோஷம் அடைந்தேன்.

    நான் அவரிடம் விடைபெற்றுப் புறப்படும்போது என்னிடம் இருந்த காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் படத்தின் ஒரு பிரதி வேண்டும் என்றார். அனுப்புகிறேன் என்று சொல்லி வந்தேன். உடனே அனுப்ப முடியவில்லை. இனி நான் அந்தப் படத்தை எப்படி, எங்கு அனுப்புவது என்று ஏங்குகின்றேன். வேறு என்ன செய்ய?

    *****

    1. முதல் படி

    சுதர்சனம் ஒரு முக்கியமான விஷயத்தில் தன் அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டு விட்டான். அதற்குப் பிறகு நாள் ஆக ஆக இந்த மாற்றம் மிகவும் அவசியமானது என்ற எண்ணம் வளர்ந்து வரவே, தன் ஜாகையை மாற்றிவிட வேண்டியதுதான் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

    ஆபீஸுக்கு அருகில் ஜாகை வைத்துக் கொள்வதனால் பஸ் சார்ஜ், காலவிரயம் இரண்டும் ஆகாதென்றும், தன் குறுகிய ரூ. 125 வருமானத்தில் கோமளமும் தானும் பாங்காகக் குடித்தனம் செய்துவிடலாமென்றும் அவன் நினைத்தான். அதன்படி ஆறு மாதங்களுக்கு முன்பு சிந்தாதிரிப்பேட்டையில் இருபத்திரண்டு ரூபாய் வாடகையில் - இருநூற்றைம்பது ரூபாய் அட்வான்ஸுடன் பதினான்கு இதரக் குடித்தனங்களுக்கு இடையே ஒண்டுக் குடித்தனம் புகுந்தான். அதற்குமுன் சென்ற நாட்கள் எல்லாம் வீண் என்று அப்போது தோன்றியது அவனுக்கு.

    மவுண்ட்ரோடில் இருந்தது அவனுடைய கம்பெனி. அதில் வியாபாரம் நடத்தாத பண்டம் இல்லை. அவ்வளவுக்கும் 'ஏஜென்ஸி' வைத்திருந்தார்கள். ஏகப்பட்ட பேர் வேலை செய்தார்கள். சுதர்சனம் 'அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்’டில் ஒரு குமாஸ்தா: முக்கிய கணக்கர்

    'அக்கௌண்ட்டண்ட்' கங்காதரம் பிள்ளையின் 'வலது கை'. சம்பளம் நூற்றிருபத்தைந்துதான் என்றாலும் எடுத்தற்கெல்லாம் கங்காதரம், என்னப்பா, சுதர்சனம்? என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பார். வந்துட்டேன், ஸார்! என்று சுதர்சனம் ஓட்டமாக ஓடிக்கொண்டிருப்பான்.

    சரியான காக்காய்! என்று சக குமாஸ்தாக்கள் அவன் காது கேட்கச் சொன்னார்கள். அதைச் சகித்துக் கொண்டு, சுதர்சனம் சிரித்துவிட்டுப் போனான்.

    சுதர்சனம், நீ சிந்தாதிரிப்பேட்டையில் தானே இருக்கிறாய்? நாளைக்குக் காலையில் ஓர் அரை மணி முக்கால் மணி முன்னாடி வந்து, 'டிம்பர் லெட்ஜ’ரைப் பார்த்து வையேன்! என்பார் கங்காதரம்.

    வருகிறேன், ஸார்! என்பான் சுதர்சனம், சுமுகமாக.

    சாயந்தரம் ஐந்தடித்தவுடன் எல்லாரும் வீட்டுக்குக் கிளம்புவார்கள். கிருஷ்ணமூர்த்தி வண்ணாரப் பேட்டைக்குப் போக வேண்டும்; சுந்தரராமன் ராயபுரம் போக வேண்டும்; ஜகதீசன் கீழ்ப்பாக்கம் போக வேண்டும்; ஐயாசாமிக்கு அடையாற்றில் ஜாகை. எல்லாருக்கும் அவசரம். கங்காதரம் பிள்ளைக்கும் தம் மனைவியுடன் ஊர் சுற்றப் போக வேண்டும். ஆகவே, அப்போது மிஸ்டர் சுதர்சனம்!' என்று மரியாதையாகவே கூப்பிடுவார் அவர்.

    ஸார்!

    நீ ஓர் அரைமணி இருந்தது, 'கோபால் அண் கோ'வின் பில்களைச் 'செக்' செய்து வைத்துவிட்டுப் போ... உனக்குப் பக்கத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் தானே அப்பா வீடு?

    பார்க்கிறேன், ஸார்!

    கங்காதரம் பிள்ளை எது சொன்னாலும் சுதர்சனம் கேட்டான்; அவருக்கும் அபார நம்பிக்கை அவனிடம். அவன் வைத்த காகிதத்தில் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் போடப் பழகிவிட்டார் கங்காதரம்.

    'அதிகமாக உழைத்தால் அதிகமான பலன் கிடைக்கும்; யோக்கியனாக இருந்தால் எல்லார் நம்பிக்கையும் நம்மேல் விழும்; தகுந்த வெகுமதி வராமல் போகாது' என்று சுதர்சனம் நினைத்தான். வீடு சமீபத்தில் இருப்பதனால் தனக்கு அதிக உழைப்புச் செய்து காட்டவும், புத்திசாலித் தனமாக நடந்து கொள்ளவதால் 'பிரமோஷ’னுக்கு அஸ்திவாரம் போடவும் முடியும் என்று எதிர்பார்த்தான். கோட்டைகள் கட்டினான். ஆனால், சிந்தாரிப்பேட்டைக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் இதெல்லாம் பாடப் புத்தகங்களில் பிள்ளைகளுக்காக எழுதப்பட்ட கட்டுக்கதைகளாக இருக்குமோ என்று எண்ணும் நிலைக்கு அவன் வந்து விட்டான்.

    சுதர்சனம் நன்றாக உழைத்தான்; குடும்பத்தை மறந்து வேலை செய்தான். புதிய புதிய யோசனைகளைச் சொன்னான். ஆனால், அதன் மூலம் பலன் அடைந்தவர் கங்காரம் பிள்ளைதான்!

    அன்றொரு நாள் திருப்புங்கூரில் சந்நிதியை மறைத்துக் கொண்டு நின்ற நந்திபோல் இங்கே எஜமானரின் முகதரிசனம் கிடைக்கவொட்டாமல் கங்காதரம் உட்கார்ந்திருந்தார். சுதர்சனம் எஜமானருடன் நேரில் பேச முடியாது; எதைக் கேட்பதானாலும் கங்காதரம் மூலமாகத் தான் கேட்க வேண்டும். இவன் சொல்வதையெல்லாம் கங்காதரம் புரிந்துகொண்டு, தம்முடைய யோசனையாக மாற்றி எஜமானரிடம் சொன்னார். இவன் பென்ஸிலால் போட்ட கோடுகள் மீது அவர் மசியினால் போட்டுக் கொண்டு போய்க்காட்டி, தாமே செய்த வேலை என்று நல்ல பெயர் வாங்கிக் கொண்டார். ஏதாவது பிசகு நடந்து விட்டால் மட்டும் அதைக் குமாஸ்தாக்கள் தலையில் வைத்துவிட்டு, 'தாட்' 'பூட்'டென்று ஏகப்பட்ட சத்தம் போட்டுக் கத்திவிட்டுப் போவார்.

    கங்காதரமும் கெட்டிக்காரர்தான். சில சமயம், எஜமான் ரொம்பக் கோபமாயிருக்கிறார் என்று பயங் காட்டி வேலை வாங்குவார். இன்று எஜமானரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். ரொம்ப சந்தோஷப் பட்டுக் கொண்டார் என்று உற்சாகப்படுத்தி வேலை வாங்குவார். சரியான சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; உன்னைப் பற்றி ஒரு வார்த்தை அவர் காதில் போட்டுவிட வேண்டும் என்று ஆசை காட்டி வேலை வாங்குவார். கங்காதரம் எங்கே சென்றாலும் மோட்டாரில் போய்விட்டும். மோட்டாரில் வந்து கொண்டிருந்தார். அடிக்கடி ஆபீஸுக்கு லேட்டாக வந்துவிட்டு என் மனைவிக்குப் பாருங்கள், நேற்றிலிருந்து ஜுரம், என் பயல் சறுக்கி விழுந்து சிராய்த்துக் கொண்டான். எனக்கு ஏனோ இருமுகிறது. காரணம் தெரியவில்லை; டாக்டர் ராமச்சந்திரனைப் பார்த்துவிட்டு வந்தேன்" என்று ஏதாவது 'கதை' சொல்லி எல்லாரையும் ரசிக்கும் படிக் கட்டாயப்படுத்துவார்.

    சுதர்சனம் பொறுத்துக் கொண்டிருந்தான். தன் வருமானம் சற்று உயராதா என்று காத்துக் காத்துப் பார்த்தான். கங்காதரம் தேனொழுகப் பேசினார். ஆனால், அவர் பேச்சு எஜமானர் காதுக்கு எட்டினதேயில்லை. நூற்றிருபத்தைந்து ரூபாயில் இரு ஜீவன்கள் வயிற்றைக் கழுவிக் கொள்ளலாம் என்றாலும், வேறு பல காரணங்கள் அதன் குறுக்கே நின்றன. ஒரு தீபாவளியும் சங்கராந்தியும் மற்றப் பண்டிகைகளும் இல்லையா? விருந்துகள் இல்லையா? துணிமணிகள் வாங்க வேண்டாமா? மற்றப் பேர்கள் நடுவில் சும்மா இருந்துவிட முடிகிறதா? என்ன ஜாக்கிரதையாக இருந்தாலும் ஒரு டாக்டர் 'பில்' என்று கொடுக்க வேண்டியிராதா? கடன் வாங்குவதில் சுதர்சனத்துக்கு நம்பிக்கை இல்லை. கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க வேண்டுமே! ஓரொரு சமயம் தன் பணக் கஷ்டத்தையெல்லாம் அவன் மறந்தால்கூட, தன் மனைவி கோமளத்தைப் பார்க்கும்போது மனம் பெரும்பாடு பட்டது.

    ஆஹா, யாருக்கும் இல்லாததொரு பாக்கியம் அவனுக்குக் கிட்டியிருந்தது! பலவிதங்களில் அவள் அழகு ராணியாக விளங்கினாள். இருபத்திரண்டு வயதில் அவள் ஒரு தந்தப் பதுமைதான்; செக்கச் செவேலென்ற மேனி; நீண்ட பெரிய நயனங்கள்; அழகிய அதரங்கள்; கரணை கரணையாக இரு புஜங்களும் இரு கால்களும், பாதாதி கேசம் அவளைப் பார்க்கும்போதெல்லாம், ஏ சிருஷ்டி கர்த்தாவே! இந்த அழகியை நீ நாலு தலை மட்டும் வைத்துக் கொண்டு எப்படியப்பா படைத்தாய்? என்று சுதர்சனம் வியந்து கொண்டான். முன்னொரு காலத்தில் அருணகிரி நாதர், 'மாலோன் மருமகனை, மன்றாடி மைந்தனை, வானோர்க்கும் மேலான தேவனைச் சென்று கண்டு தொழுவதற்கு, நாலாயிரம் கண்கள் தந்திலனே அந்த நான் முகனே!' என்று ஏங்கினார் அல்லவா? கிட்டத்தட்ட அத்தனை ஏக்கத்துடனே சுதர்சனம் சௌந்தரியவதியான தன் மனைவி கோமளத்தைப் பார்த்தான். அந்த ஏக்கத்துடன்கூட ஒரு சோகமும் இருந்தது.

    இத்தனை பேரழகியைப் பரம் தரித்திரனான எனக்குக் கொண்டுவந்து கட்டி, வைத்தானே! இவள் ஒரு பிரபுவுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தால், அவன் எத்தனை பூரித்துப் போவான்! ஒரு கோவில் கட்டி வைத்திருக்க மாட்டானா? சதா மெத்தையிலும் மோட்டாரிலும் உட்கார்த்தி வைத்து, பட்டணத்திலிருக்கும் அத்தனை பட்டு ஜவுளிகளையும் உடுத்தி அழகு பார்க்க மாட்டானா? கமலங்களாகவே அவள் உடல் முழுதும் சொரிந்து ஜ்வலிக்க வைக்க மாட்டானா? கிழிசல் ரவிக்கையும் நூல் புடவையும் கட்டி, இந்தச் சிந்தாதிரிப் பேட்டை மண் வீட்டில் வாசுதேவ ஐயங்காரின் ஒன்பது பிரஜைகளும் போடும் ஓலத்தைக் கேட்டுக் கொண்டும், கிணற்றடியில் சமையல்கார வராகச்சாரியின் மனைவிக்குச் சரி சமமாக நின்று கொண்டும், 'மழை பெய்தால் ஒழுகுமே, வெயில் காய்ந்தால் வறுக்குமே' என்று சதா பயந்து கொண்டும், காலத்தை ஓட்ட வேண்டியிருக்குமா? இதையெல்லாம் கோமளம் நினைத்துப் பார்த்திருப்பாளோ? ஏங்கிப் போயிருப்பாளோ? என்ற பயம் சுதர்சனத்துக்கு உண்டு. அவள் முகக்குறியிலே எதுவும் தெரியவில்லை. அன்பான மனைவி தான்; இல்லறத்தின் சுகத்தை அநுபவிக்கிறான் தான். அவள் கடமையைச் சரிவரச் செலுத்துகிறாள்; ஆனால் அவன் கடமை போதுமா?

    ஆரம்பத்தில் சொன்னபடி சுதர்சனம் முதலில் தன் ஜாகையை மாற்றுவதுபற்றி ஒரு முடிவு செய்து கொண்டு அன்று காலை உட்கார்ந்திருந்தான்.

    நல்ல சினிமாவாக வந்திருக்கிறதாம். இங்கே எல்லாரும் போகிறார்கள். ஏன்னா, நானும் அவாளோடு போய்விட்டு வரட்டுமா? என்று கேட்டுக்கொண்டு வந்தாள் கோமளம்.

    போகலாம், கோமு! ஆனால் நீ நாலணா டிக்கெட்டில் போய் உட்கார எனக்குப் பிடிக்கவில்லையே!

    ஆமாம்! நீங்கள் என்றைக்கு வந்து என்னை இரண்டு ரூபாய் டிக்கெட்டில் அழைத்துக் கொண்டுபோகப் போகிறீர்கள்! நாலு வருஷம் குடித்தனம் செய்ததில் ஒரு சூர்யாஸ்தமனத்தை நீங்கள் கண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை.

    ஆமாம், கோமு! நீ சொல்கிறது எனக்குத் தெரிகிறது; என் மனத்தில் இருக்கிற வேதனைதான் உனக்குத் தெரியவில்லை. நீ இந்தப் புடவை கட்டிக்கொண்டிருப்பது-

    இது எனக்கு நிரந்தரமாகக் கிடைக்கட்டும், போதும்! என்றாள் கோமு.

    அப்படிச் சொல்லாதே! நானே யோசனை செய்து கொண்டிருக்கிறேன், வேறு உத்தியோகத்திற்கு முயற்சி செய்யலாமென்று. நாலு 'அப்ளிகேஷன்’கள் வேறு போட்டிருக்கிறேன்; ஒன்றுக்கும் பதில் வந்த பாடில்ல.

    இந்தச் சமயம் வாசுதேவ ஐயங்காரின் ஆறு, எட்டு, ஒன்பதாவது பிரஜைகள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே வந்து நின்று ஏக காலத்தில், மாமி! நீங்கள் சினிமாவுக்கு வரப்போறேளா இல்லையான்னு அம்மா கேட்கிறாள்! என்று இரைச்சல் போட்டார்கள்.

    மாமாவைக் கேட்டுச் சொல்கிறேன் என்றாள் கோமளம். அவர்களை வெறுப்புடன் சுதர்சனம் பார்த்தான்.

    மாமாவைக் கேட்டுச் சொல்றாளாம்! என்று ஒரே கூச்சல் போட்டுக்கொண்டு அந்த மூன்று பிரஜைகளும் அங்கிருந்து திரும்பி வெளியே ஓட்டமாக ஓடினார்கள்.

    முன்னாடி இந்த ஜாகையைக் காலி செய்யுங்கள்... பிடாரிகள்! வயிற்றுக்குச் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு நாளாவது இந்தப் பேயிரைச்சலைக் கேட்காமல் நிம்மதியாக இருப்போமா என்றிருக்கிறது... என்றாள் கோமளம்.

    நானே நினைத்துக் கொண்டிருக்கிறேன், கோமு. இங்கே வந்ததிலிருந்து எனக்கும் வேலை அதிகமாக இருக்கிறதே ஒழிய-

    தைரியமாக ஜாகை மாறுகிறதானால் சொல்லுங்கள், 'ஹைதர் காலனி' என்று புதிதாக வீடுகள் கட்டியிருக்கிறார்களாம். அங்கே இடம் காலி இருக்கிறதாம் - எல்லாம் புது வீடுகளாம். விளக்கு, ஜலம் எல்லா வசதிகளும் இருக்கின்றனவாம்... பார்க்கிறீர்களா?

    பார்த்து விடுகிறது!

    உங்களுக்கு ஆபீஸிலிருந்து தூரமாகும்! அது ஒரு செலவு, முன்னாடி யோசித்துக் கொள்ள வேண்டும்.

    இருக்கட்டும், கோமளம்! எத்தனை நாள்தான் கஷ்டப் படுகிறது! இன்று நான் ஆபீஸில் எதற்கும் ஒரு வார்த்தை கேட்டுவிடுகிறேன்! சாயந்தரம் நாம் போய் வீட்டைப் பார்த்துவிட்டு வரலாம் என்றான் சுதர்சனம்.

    ஆபீஸிற்கே அன்று கால் மணி தாமதமாகத்தான் சுதர்சனம் சென்றான். ஒரு வேளை கங்காதரம் வந்திருப்பாரோ என்று உள்ளூறச் சிறிது அச்சத்துடன் நுழைந்தான். அவர் வரவில்லை. 'டைபிஸ்ட்' மணி சுதர்சனத்தைக் குறும்பாகப் பார்த்து, என்ன இன்னிக்கு ஆசாமி ஒரு மாதிரி வருகிறார்! என்றான்.

    அவருக்கென்னடா! நினைச்சபோது வருவார், நினைச்சபோது போவார். ஆபீஸே அவர், அவரே ஆபீஸ்! என்றான் குமாஸ்தா கிருஷ்ணமூர்த்தி பதிலுக்குக் கிண்டலாக.

    சுந்தரராமன், "ஏய்! ஜாக்கிரதையாகப் பேசு! அவர் கோபித்துக் கொள்ளப் போகிறார்-ஐயங்கார்!' என்று எச்சரித்தான்.

    அதற்குள் ஐயாசாமி, காலையில் ஒரு நடை வந்து போயிருக்கலாம்... இல்லையா, சுதர்சனம்? என்றான்.

    சுதர்சனம் பதில் சொல்லவில்லை, 'உர்ர்' என்று நேரே இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். 'இன்று எப்படியும் கங்காதரம் பிள்ளையைக் கேட்டுவிட வேண்டியது! என்ன ஆனாலும் சரி!' என்று தன் மனத்தைக் கல்லாக்கிக்

    Enjoying the preview?
    Page 1 of 1