Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yen?
Yen?
Yen?
Ebook344 pages2 hours

Yen?

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ரகு, சாந்தி, ப்ரியா என்ற மூவரையும்அதாவது ஒரு கணவன், ஒரு மனைவி, அவர்களின் குழந்தை- இவர்களை மூன்று முக்கியக் கதா பாத்திரங்களாகக் கொண்டதாக நம் "ஏன்?" கதை இருந்தாலும், இக்கதைக்கு ஆணிவேர் ரகுதான். கதை என்பதற்காக, கதைக்குச் சுவை கூட்ட வேண்டும் என்பதற்காக, அடிப்படையான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் இக் கதையை எழுதவில்லை. மனிதனின் குண அமைப்பு, அதில் உண்டாகும் மாறுபாடுகள், தெரிந்து அவனாகவே உண்டாக்கிக்கொள்ளும் மாற்றங்கள், அவனையும் மீறி சந்தர்ப்பம் அவனுள் செய்யும் வினோதங்கள். இவற்றிற்குத்தான் நம் கதையில் முக்கியத்துவம்.

இதையும் தவிர, மனநிலைக்கு ஒப்ப, நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதன், தன்னைத் தானே உணராத ஒருசில சமயங்களில் 'கிரகிக்கப்பட்ட" பழக்கங்களுக்கும் வெகுவாக அடிமையாகிறான். Accquired habits- எனப்படும் இந்தப் பழக்கங்கள் சமுதாயத்தின்படி நல்லவையாகவும் இருக்கலாம் இல்லை, தீயவையாகவும் இருக்கலாம்.

தூசு படிந்துபோன கண்ணாடியைத் துடைத் தால் "பளிச்சென்று ஆகிவிடுகிறது. எண்ணெய் இறங்கின வைரக்கல்லைப் பிரித்துக் கட்டினால் மீண்டும் ஒளிருகிறது. இதுபோலத்தான் கிரகிக்கப் பட்ட பழக்கங்களும். எந்த ஒரு மனிதனை வேண்டாத, கிரகிக்கப்பட்ட பழக்கங்கள் ஆட் கொண்டிருக்கின்றனவோ, அவற்றை அகற்றிவிட்டு, அந்த மனிதன் மட்டும் கரையேறுகையில், அவன் பழைய மனிதனாகவே ஆகிறான். இது உண்மை. நம் கதாநாயகன் ரகுவும், எப்படியோ வளர எண்ணி எப்படியோ வளர்ந்து, எப்படியோ வாழ எண்ணி எப்படியோ வாழ்ந்து, சந்தர்ப்பவசத்தால் கிரகிக்கப்பட்ட பழக்கங்களுக்கும் ஆளாகித் தவிப்பதைத்தான் 'ஏன்?' என்ற கதை சொல்லப் போகிறது.

இதற்கு 'ஏன்?' என்று பெயர் வைக்காமல் ஒரு மனிதனின் கதை' என்றே பெயர் வைக்க முதலில் எண்ணினேன். ஆனால் 'இக்கதையில் நாங்களும் சரிசமமாகப் பங்குகொண்டிருக்கிறோமே” என்று சாந்தியும், ப்ரியாவும் எண்ணியதால், இதனை 'ஏன்?' என்று மாற்றினேன்.

“ஏன்?" கதாபாத்திரங்களுக்கு. அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வாசகர்கள் தேவை.

“சாந்தி ஏன் இப்படி இருக்கிறாள்? எப்படி இருந்த ரகு இப்படி மாறிவிட்டானே! ஒரு குழந்தை மனசில் இவ்வளவு வேகமான உணர்ச்சிகளா?'என்ற கேள்விகளெல்லாம் எழுந்தாலும், எந்தச் சூழ்நிலையில் எதனால் இந்தப் பாத்திரங்கள், இப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்க்கும் வாசகர்கள்தான் 'ஏன்?' கதாபாத்திரங் களுக்குத் தேவை.

அன்புடன், சிவசங்கரி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803651
Yen?

Read more from Sivasankari

Related to Yen?

Related ebooks

Reviews for Yen?

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yen? - Sivasankari

    http://www.pustaka.co.in

    ஏன்?

    Yen?

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ரகு

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    2. சாந்தி

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    3.ரகு-சாந்தி

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    4. ரகு-சாந்தி-ப்ரியா

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    5. ரகு-ப்ரியா

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    என்னுரை

    ரகு, சாந்தி, ப்ரியா என்ற மூவரையும்அதாவது ஒரு கணவன், ஒரு மனைவி, அவர்களின் குழந்தை- இவர்களை மூன்று முக்கியக் கதா பாத்திரங்களாகக் கொண்டதாக நம் ஏன்? கதை இருந்தாலும், இக்கதைக்கு ஆணிவேர் ரகுதான்.

    கதை என்பதற்காக, கதைக்குச் சுவை கூட்ட வேண்டும் என்பதற்காக, அடிப்படையான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் இக் கதையை எழுதவில்லை. மனிதனின் குண அமைப்பு, அதில் உண்டாகும் மாறுபாடுகள், தெரிந்து அவனாகவே உண்டாக்கிக்கொள்ளும் மாற்றங்கள், அவனையும் மீறி சந்தர்ப்பம் அவனுள் செய்யும் வினோதங்கள். இவற்றிற்குத்தான் நம் கதையில் முக்கியத்துவம்.

    இதையும் தவிர, மனநிலைக்கு ஒப்ப, நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதன், தன்னைத் தானே உணராத ஒருசில சமயங்களில் 'கிரகிக்கப்பட்ட" பழக்கங்களுக்கும் வெகுவாக அடிமையாகிறான். Accquired habits- எனப்படும் இந்தப் பழக்கங்கள் சமுதாயத்தின்படி நல்லவையாகவும் இருக்கலாம் இல்லை, தீயவையாகவும் இருக்கலாம்.

    தூசு படிந்துபோன கண்ணாடியைத் துடைத் தால் "பளிச்சென்று ஆகிவிடுகிறது. எண்ணெய் இறங்கின வைரக்கல்லைப் பிரித்துக் கட்டினால் மீண்டும் ஒளிருகிறது. இதுபோலத்தான் கிரகிக்கப் பட்ட பழக்கங்களும். எந்த ஒரு மனிதனை வேண்டாத, கிரகிக்கப்பட்ட பழக்கங்கள் ஆட் கொண்டிருக்கின்றனவோ, அவற்றை அகற்றிவிட்டு, அந்த மனிதன் மட்டும் கரையேறுகையில், அவன் பழைய மனிதனாகவே ஆகிறான். இது உண்மை.

    நம் கதாநாயகன் ரகுவும், எப்படியோ வளர எண்ணி எப்படியோ வளர்ந்து, எப்படியோ வாழ எண்ணி எப்படியோ வாழ்ந்து, சந்தர்ப்பவசத்தால் கிரகிக்கப்பட்ட பழக்கங்களுக்கும் ஆளாகித் தவிப்பதைத்தான் 'ஏன்?' என்ற கதை சொல்லப் போகிறது.

    இதற்கு 'ஏன்?' என்று பெயர் வைக்காமல் ஒரு மனிதனின் கதை' என்றே பெயர் வைக்க முதலில் எண்ணினேன். ஆனால் 'இக்கதையில் நாங்களும் சரிசமமாகப் பங்குகொண்டிருக்கிறோமே" என்று சாந்தியும், ப்ரியாவும் எண்ணியதால், இதனை 'ஏன்?' என்று மாற்றினேன்.

    ஏன்? கதாபாத்திரங்களுக்கு. அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வாசகர்கள் தேவை.

    "சாந்தி ஏன் இப்படி இருக்கிறாள்? எப்படி இருந்த ரகு இப்படி மாறிவிட்டானே! ஒரு குழந்தை மனசில் இவ்வளவு வேகமான உணர்ச்சிகளா?'என்ற கேள்விகளெல்லாம் எழுந்தாலும், எந்தச் சூழ்நிலையில் எதனால் இந்தப் பாத்திரங்கள்.

    இப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்க்கும் வாசகர்கள்தான் 'ஏன்?' கதாபாத்திரங் களுக்குத் தேவை.

    இத்தொடர்கதை பிரபல வாரப்பத்திரிகை 'தினமணி கதிரில் வெளியானபோது. பல்லாயிரக் கணக்கானவர்களிடமிருந்து வந்த அனுதாப, பாராட்டுக் கடிதங்கள், என் கதாபாத்திரங்களுக்கு நான் எதிர்பார்த்த அளவிற்கும் மேலேயே வாசகர்களிடமிருந்து ஆதரவு கிடைத்ததை உணர்த்தியதால், நான் பூரித்துப்போனேன்.

    'தினமணி கதிர்' ஆசிரியர் திரு. சாவி எனக்கு அளித்த உற்சாகத்தை, நான் என்றும் மறக்க மாட்டேன். அவருக்கும், கதிர் ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றி.

    ஐந்தாம் பதிப்பாக இதை வெளிக் கொணரும் என் இனிய நண்பர், திரு ராமநாதன் அவர்களுக்கு, நான் பெரிதும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக் கிறேன்.

    அன்புடன்

    சிவசங்கரி

    ஏன்?

    அந்தப் பெரிய அழகான, மிகவும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்திருந்த வாலிபனுக்கு, பத்தொன்பது. அல்லது இருபது வயசிருக்கலாமா? இருக்கலாம். நல்ல சிவப்பாக இருந்தான் அவன்; அந்த சிவப்புக்கு ஒளிகூட்டுவது போல் கறுத்த நீண்ட தலைமுடி. அதே கறுப்பைக் கொண்ட புருவங்கள், அகன்ற நெற்றி. பெண்கள் ஆசைப்படும் அளவுக்கு நீண்ட இமைகள், சற்றே மேல் தூக்கின் மூக்கும் அவன் அணிந்திருந்த உடைகள் சிறிது பழையதாக இருந்தாலும் குற்றமாகத் தெரியவில்லை. கைகளில் நகங்கள் சுத்தமாக வெட்டிவிடப்பட்டு இருந்தன. கால்களில்? தெரியவில்லை - பளபளத்த ஷூ ஒன்று விரல்களை மறைத்துக் கொண்டிருந்தது. ஷூ மாத்திரம் புதிதோ?

    ஆண் அழகனாக, ஆணுக்கு ஆணே ஆசை கொள்ளும் விதத்தில் கம்பீரமாக இருந்த அவனின் உடல் மாத்திரம் சற்று மெலிந்து இருப்பது புரிகிறது. அவன் உயரமா, இல்லை குள்ளமா என்பது அவன் இருக்கையில் அமர்ந்திருந்ததால் தெளிவாகவில்லை.

    மடித்து மடிமேல் வைத்திருந்த கைகளில் ஒரு பைல்... அதனுள் பல நற்சான்றிதழ்கள்-

    அவன் அந்த அமெரிக்க பாங்கிற்கு வேலை தேடி வந்திருந்தான். ஏற்கனவே உதவி மானேஜர்களுடன் இரண்டு பேட்டிகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அவன் கடைசிப் பேட்டிக்கு - மானேஜருடன் பேட்டிக்குஅழைக்கப்பட்டு வந்திருந்தான்.

    இங்குமங்குமாக அலைந்துகொண்டிருந்த அவன் கண்களில், ஏதோ ஒரு ஆர்வம் இருப்பது நன்றாகத் தெரிந்தது. நினைத்து நினைத்து காலமெல்லாம் தவம் செய்து வந்ததைச் சாதிக்க வேண்டுமே- என்ற வெறியாக அந்த ஆர்வம் சில சமயங்களில் பளீரிட்டது.

    ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறையிலும் அவனுக்கு வியர்த்தது. ஐந்து நிமிடத்திற்கொரு முறை, கைகளை, அதில் கசிந்திருக்கும் வியர்வையைத் துடைத்துக்கொண்டான்.

    லப் டப் லப் டப் என்று இதயம் அடித்துக்கொள்ளும் சமயத்திலேயே, அதனூடே 'அம்மா… அம்மா... உன் வாக்கை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யம்மா..." என்றும் தன் மனம் இறைஞ்சுவது அவனுக்கு மாத்திரம் கேட்டது.

    இன்னும் எத்தனை நாழிகை காக்க வேண்டும்?

    இருப்புக் கொள்ளாமல் தவித்த அவன், தன் நினைவை மாற்ற, அடுத்த கூடத்தில் நடப்பவற்றை அறையின் கண்ணாடிச் சுவர் வழியாக நோக்கி கவனத்தைத் திருப்பினான்.

    அமெரிக்கர்களுடைய பண பலத்தையும் உயர்ந்த ரசனையையும் ஒருங்கே கொண்டு அமைந்திருந்த அந்தக் கூட்டத்தில், ஒரு பக்கமாக கெளண்டர்களில் அமர்ந்து பணம் கொடுத்துக் கொண்டிருந்த டெல்லர்கள்… காஷியர்கள்… முன்னால் சிறு மனிதக் கூட்டம் நின்றிருந்தது.

    கூட்டத்தின் இந்தக் கோடியில் தனித்தனியான மேஜைகளில் அமர்ந்து மெல்லிய குரலில் பேசிக்கொண்டு, வியாபாரத்தையும், அதன் விளைவுகளையும் கவனித்துக் கொண்டிருந்தவர்களில் இருவர், அவனை ஏற்கனவே பேட்டி கண்டவர்கள்.

    அவனால் அந்த இரு தினங்களை கண்டிப்பாக மறக்க முடியாது. பேட்டி போலவே இல்லாமல் சரளமாகப் பேசி, அவனைப் பதட்டத்திற்குள்ளாக்காமல், புத்திசாலித்தனமாகப் பேச சந்தர்ப்பம் கொடுத்த அவ்விரு துணை மானேஜர்களையும், அவர்கள் பேட்டிகண்ட தினங்களையும் அவன் கண்டிப்பாக மறக்கமாட்டான்.

    இன்று எப்படி இருக்கும்?

    அவன் வாழ்க்கையில் இதுநாள்வரை ஒரு சமயம்கூட அவனை அணைத்து ஆதரவு தராத அதிர்ஷ்டம், இன்றாவது அவனை நெருங்குமா?

    எக்ஸ்க்யூஸ் மீ... ஐ ஆம் நாராயணன், மானேஜர் ஹியர்.

    அவன் திடுக்கிட்டுத் திரும்பினான். அவன் கவனத்தைச் சற்றும் ஈர்க்காமல், மெதுவாக இன்னொரு பக்கம் இருந்த கதவின் மூலம் அவ்வறைக்குள் வந்துவிட்ட நாராயணன்அந்தக் கிளை பாங்கின் முதல் இந்திய மானேஜர்- ப்யூன்களை அனுப்பி வேலை வாங்கும் பழக்கம் இல்லாதவராய், தானே அந்த வரவேற்பறைக்கு வந்துவிட்டு, அங்கு சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் வாலிபனை ஊன்றிக் கவனித்தவாறு ஒரு சிலகணங்கள் நின்றார்.

    முதல் பார்வையிலேயே அவனை அவருக்குப் பிடித்துப் போயிற்று. சென்ற வாரம் உதவி மானேஜர்கள் கொடுத்திருந்த ரிப்போர்ட்டில் இருந்த ஒரே வார்த்தை ‘எக்ஸ்லெண்ட்'- நினைவுக்கு வர, ஓரடி முள் சென்று அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

    குட்மார்னிங் சார்.

    அவன் எழுந்து நின்ற விதமும், மரியாதையுடன் விஷ் செய்த விதமும்கூட அவருக்குப் பிடித்தது.

    ஷால் வீ கோ டு மை ரூம் அண்ட் டாக் மிஸ்டர் ரகு…?

    மிஸ்டர் ரகு… மிஸ்டர் ரகு…யா மிஸ்டர் ரகு....

    ரகு

    1

    ரகு..ஊ...டேய்..ரகு..ஊ...

    புழுதி படிந்த கால்களும், அதன் மேல் சற்றே கிழிந்திருந்த அரை நிக்கரும், மேல் உடம்பை நிர்வாணமாகவும் கொண்டிருந்த அந்த எட்டு வயதுப் பையன், தலை தெறிக்க ஓடிவந்துகொண்டே மீண்டும் அலறினான்… ரகு..டேய்... ரகு...ஊ...

    சடு குடு, சடு குடு... மாமியார் வீட்டுக்கு வந்தியா, மாமனார் வீட்டுக்கு வந்தியா... மாப்பிள்ளைப் பயலே, மாப்பிள்ளைப் பயலே.. சடு குடு, சடு குடு..

    அழைப்பது காதில் விழாமல், ஆறு வயது நிரம்பிய சிறுவன் ரகு. பெரிய நண்பர்கள் விளையாட்டில் தன்னை மறந்து நின்றிருந்தான்.

    ஓடி வந்த பையனுக்கு இரைத்த இரைப்பில், வார்த்தைகளே ஒழுங்காக வரவில்லை.

    ரகு… டாய்... ராஸ்கோல்... நான் கத்திண்டே வரேன்காது கேக்கலை? ரகு, உங்காத்திலே பெரிய கூட்டம் சேர்ந்திருக்குடா... உங்கம்மா அழறாடா... உன்னைத் தேடறா... உங்கப்பா, உங்கப்பா செத்துப்போயிட்டாராம்...

    பையன் உரக்கச் சொன்னது எல்லோர் காதிலும் விழ, ஒரு கணத்திற்குள் மைதானத்தில் அமைதி நிலவிவிட்டது. அந்த அமைதியும் ஒருசில கணங்களுக்குத்தான்.

    ஆறே வயதுதான் ஆனாலும், ஒண்டுக் குடித்தனக்காரர்களுடன், மிகுந்த ஏழ்மையில், பல வேண்டிய வேண்டாத நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்திருந்த ரகுவுக்கு, சாவு என்றால் 'சாமி கூப்பிண்டுட்டார்' என்ற அர்த்தம் நன்கு புரிந்த விஷயமே.

    மைதானத்தைக் கடந்து ஓடி, வீதிகளைக் கடந்து, சந்து போன்ற அந்த அகலமில்லாத மண்தெருவில் நுழைந்து, அவள் வீட்டை அடையும்போது, மைதானத்திலிருந்த கூட்டம் அத்தனையும் அவன் பின்னால் ஓடி வந்தது.

    தூணைக் கட்டிக்கொண்டு, சுற்றி நின்றிருந்த பெண்கள் கூட்டம் எவ்வளவு தடுத்தும் துளியும் கேட்காதவளாய் மீனாட்சி- அவன் தாய்- மீண்டும் தூனை முட்டிக் கொண்டு, என் தெய்வமே... நா நம்பியிருந்த தெய்வமே.. என்னெ விட்டுட்டுப் போயிட்டேளா? என்று உரக்க அழுத போது, அம்மாவின் இதயத்துடிப்பை உணராத ரகுவுக்கு அம்மா அழுவது ஒன்றுதான் புரிந்தது.

    அம்மா....

    ரகுக்கண்ணா... டேய் அம்பி… உங்கப்பா நம்பளை விட்டுட்டுப் போயிட்டார்டா... குழந்தைக்குத் தான் சொல்வது புரியுமோ, புரியாதோ என்று உணரக்கூடிய நிலையிலான மீனாட்சி இருந்தாள்?

    ரகுவுக்கு அவன் அப்பாவை ரொம்பப் பிடிக்கும். அம்மாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

    பதிமூன்று ஒண்டுக் குடித்தனங்கள் இருந்த அந்த வீட்டில், வடக்கு மூலையில் தாழ்வாரத்தை ஒட்டியிருந்த ஒரு படுக்கையறையும், கரிப் பொந்தாய் இருந்த சமையல் அறையும்தான் அவர்களின் அரண்மனை. இந்த அரண்மனையில், அவன் தாயும் தந்தையும் எந்நேரமும் சிரித்துப் பேசி, ஆசையாய் உறவாடி மகிழ்ந்திருப்பதை ஆயிரமாயிரம் முறை ரகு பார்த்திருக்கிறான்.

    சுப்பையா-மீனாட்சியின் ஒரே புதல்வன், ரகு என்கிற ரகுராமன்.

    எப்படியெல்லாமோ பையனை வளர்க்க ஆசையிருந்தாலும் தங்கள் பண வசதி அதற்கு இடம் கொடுக்காததால், தங்களால் இயன்றவரையில் பையனை நன்றாகத்தான் வளர்த்துவந்தார்கள் சுப்பையா தம்பதி.

    அப்பா என்றால் ரகுவிற்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் அம்மாவுக்கும் நடுவில்தான் அவன் தினமும் படுப்பான். அப்பா மேல் ஒரு கால், அம்மா மேல் ஒரு கால் போட்டுக்கொண்டு உறங்கும் நேரத்தில், அவனுக்குச் சந்தோஷம் தாளாது.

    படிடா கண்ணா... நன்னா படிச்சு ஓஹோனு முன்னுக்கு வரணும்... சரியா? என்று சதா அப்பா சொல்லிச் சொல்லி, தான் நன்றாகப் படித்து முன்னுக்கு வருவதுதான் அப்பாவின் ஆசை என்பது அவனுக்கு அந்த வயசிலேயே புரிந்த விஷயம்.

    காலேயில் அலுவலகம் போவதற்கு முன்னால், ரகுவை அவர்தான் பள்ளியில் விட்டுவிட்டுப் போவார்.

    மாலையில் அவர் வீடு திரும்ப நாழியாகும். ரகு பள்ளி விட்டு வந்து தன் பாடங்களை முடித்துவிட்டு, முகம் கழுவி, விபூதி இட்டுக்கொண்டு காத்திருப்பான். மகனுக்கு என்று ஆசையாய் வாங்கிவந்த பலகாரத்தை அவனிடம் கொடுத்து விட்டு, படிச்சியா, ராஜா?- என்பார் அவர்.

    கலெக்டர் படிப்பு படிக்கிற பையன் போல ஒண்ணரை கிளாஸ் படிப்பை விசாரிக்கறேளே? என்று மீனாட்சி வியந்தால், நாளைக்கு என் பையன் கலெக்டர் படிப்புத்தாண்டி படிக்கப்போறான்! என்பார் பெருமையுடன்.

    ஆபிசில் வேலை பாக்கிற சுப்பையாவை இன்னிக்கு யமன் வா வா'னு அழைச்சுட்டானே! சிநேகிதனைப் பாக்க பாக்டரிக்குள் போன இவன் மேலே, கிரேனில் தொங்கிண்டு இருந்த இரும்பு கர்டர் அறுந்து விழுந்து... சிவ... சிவ. டேய். சுப்பு.. உனக்காடா இந்த கதி...? தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டு சுப்பையா எப்படி இறந்தார் என்று ஆபீசிலிருந்து தகவல் வந்ததைக் கேட்ட வீட்டுக் குடித்தனக்காரர் சொல்ல, மற்றவர்கள் சொச்..சொச்..." என்று அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.

    திடீரென்று, வாயிற்பக்கம் ஒரே பரபரப்பு... வெள்ளை ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று வாசலுக்கு நேராக வந்து நின்றது.

    பெண்கள் கூட்டம் ஹோ என்று கதற, நா பாக்க மாட்டேன். அவரை இப்படிப் பாக்க மாட்டேன்! என்று அலரியவாறே மகனையும் இறுக அணைத்துக்கொண்டு மீண்டும் தூணில் மோதினாள் மீனாட்சி.

    ஆம்புலன்சிலிருந்து கம்பெனியின் மானேஜர், இன்னும் சிலர் இறங்கினார்கள்.

    அவர்களுக்குப் பின்னால்..

    வெள்ளை ஸ்ட்ரெச்சரில், உடலோ முகமோ தெரியாத படி. சுப்பையாவின் போர்த்தப்பட்ட உடல் வீட்டுக்குள் எடுத்துவரப்பட்டது.

    ஓரக்கண்ணால், தாயின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு தந்தையைப் பார்க்கும் ரகுவிற்குத் தூக்கிவாரிப்போட்டது.

    உயரமும், பருமனுமான அப்பா எங்கே? சிரிக்கும் முகம் எங்கே? ஒன்றுமே தெரியவில்லையே? அந்த வெள்ளைப் போர்வையின் மேலே திட்டாய், சிவப்பாய் தெரிவது என்ன?

    வீட்டிலுள்ள மற்ற ஆண்கள் தைரியத்துடன் குனிந்து சுப்பையாவின் முகத்தை மறைக்கும் துணியை எடுத்தார்கள்.

    உருத்தெரியாமல், கூழாகிக்கிடந்த அந்த சதைப் பிண்டத்தைப் பார்த்துப் பயந்து 'அப்பா' என்று அலறினான் ரகு.

    2

    மாமீ. அப்பளம் கொண்டுவந்திருக்கேன்..

    நான்காவது முறையாக பத்து நிமிஷத்தில் மீண்டும் ஒருமுறை சற்று உரக்க அழைத்தான் ரகு. அந்தப் பெரிய பங்களாவிற்கு மாதமிருமுறை வரும் பழக்கம் உடையவன் அவன். ஒவ்வொரு முறை வரும்பொழுதும், கேவலம் ஐம்பது அப்பளங்களை விற்பதற்காக அரைமணிக்கும் மேலேயே காத்திருந்தது கூட உண்டு.

    வாசல் போர்ட்டிக்கோவில், தரைக்கும் விட்டத்திற்கும் உயர்ந்து நின்ற தூண்களைத் தாண்டி, அவன் உள்ளே போனது கிடையாது. தெரியாமல் ஒரு தடவை வாசல் அறைக்குள் நுழைந்துவிட்ட பின், என்னடா, திறந்த வீட்டுல நாய் நுழையறது போல நுழையறே? வாசல்ல நின்னு கூப்பிட்டா எங்களுக்குக் காது கேக்காதோ? அப்பளம் விக்கறேன்னு வரது... கிடைச்சதையும் சுருட்டிக்கிறது... சேச்சே.. இந்த மாதிரி பசங்களாலதான் தேசம் உருப்பட மாட்டேங்கறது... என்று மூச்சு விடாமல் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரி பொரிந்து கொட்டியதும், ரகு விக்கித்துப் போய்விட்டான்.

    இல்லை, மாமீ... நா... அவனை ஒரு வாக்கியம் முழுதாகப் பேசக்கூட விடவில்லை அந்தப் புண்ணியவதி.. செய்யறதையும் செஞ்சுட்டு வாயை வேறு காட்டினியோ நா பொல்லாதவளாயிடுவேன்... ஆமா… வெளியே போய் நில்லு முதல்லே...

    ஏழையாகப் பிறந்தவனுக்கு மானம், வெட்கம், ரோஷம் போன்ற உணர்வுகளுடன் வாயும் அறவே இருக்கக்கூடாது என்பதைப் பன்னிரண்டு வயதுச் சிறுவன் ரகு உணர்ந்ததும் அன்றுதான்.

    என்னவெல்லாமோ பேச எண்ணியவன், 'நீ ஏழை, நீ ஏழை' என்ற வார்த்தைகள் மனதில் அதிர. இனிமே இப்படிச் செய்யமாட்டேன், மாமீ.. என்று மட்டும் சொல்லி விட்டு, வெளியே வந்தான்.

    மாமீ… அப்பளம் கொண்டுவந்திருக்கேன்…

    கூட்டத்தில் மாட்டியிருந்த சுவர்க்கடிகாரத்தில் மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. அவனுக்குப் பள்ளிக்கு நாழியாகிவிட்டது.

    மாமீ...

    அவன் செய்த புண்ணியம், ஹாலுக்குள் வந்த அந்த வீட்டுப் பெண்ணின் காதில் அவன் குரல் விழ, அம்மா! அப்பளக்காரப் பையன் வந்திருக்கான்... என்று உள்புறம் நோக்கிக் குரல் கொடுத்தாள்.

    'அப்பளக்காரப் பையன்... அப்பளக்காரப் பையன்…"

    ஒவ்வொரு முறையும் இந்தப் பட்டத்தைக் கேட்கும் பொழுது ரகுவின் உடல் தூக்கிவாரிப் போடும். அவனுக்கு என்று பேர் இல்லையா? ஒருவித கேலிக் குரலில் அப்பளக் காரப் பையன் என்று சொல்லும்போது, ஏன் அவன் உள்ளம் பதறிப்போகிறது?

    'நான் படிச்சு, முன்னுக்கு வந்து,

    Enjoying the preview?
    Page 1 of 1